இந்தியா முழுவதும் இறை வழிபாடு கோவில்களும், அதில் முக்கியமாக சிவ பெருமான் வழிபாடு பரவலாக உள்ளது. வேதங்கள் 3500 - 4000 ஆண்டு தொன்மையானவை அவடற்றில் சிவ வழிபாடு உள்ளது. வரலாற்று காலத்தில் எழுந்த சங்க இலக்கியங்களில் சிவன் கோவில்கள், வைதீக வழிபாடு குறிப்பிட்டுள்ளது. இந்த நூலில் நாம் பெருமளவில் தொல்லியல் ஆதாரங்கள் அடிப்படையிலே சிவ வழிபாட்டின் தொடர்ச்சி வரலாறைக் காண்போம்.
வரலாற்று காலத்திற்கு முந்தைய காலத்தில் சிவ வழிபாடை ஆராயும் போது, நமக்கு கிடைத்துள்ள காசுகளில் உள்ளவை தெளிவான ஆதாரங்களாக அமைகிறது. நாம் அவற்றில் சிலவற்றை காண்போம். சிந்து- சரஸ்வதி நாகரீகத்தில் ஹரப்பாவில் கிடைத்து சிவலிங்கம், பசுபதிஸ்வரர் முத்திரைகளை சிவ வழிபாடு இருந்தமைக்கு ஆதாரங்கள் என காட்டப்படுகிறது, ஆயினும் இவற்றினை முழுமையாக சிவ வழிபாடு என ஏற்பதில் சிலபல அறிஞர்களிடம் தயக்கம் உள்ளது, சிந்து- சரஸ்வதி நாகரீகத்தில் ஹரப்பாவில் கிடைத்து சிவலிங்கம், பசுபதிஸ்வரர் முத்திரைகளை சிவ வழிபாடு இருந்தமைக்கு ஆதாரங்கள் எனகாட்டப்படுகிறது, ஆயினும் இவற்றினை முழுமையாக சிவ வழிபாடு என ஏற்பதில் சிலபல அறிஞர்களிடம் தயக்கம் உள்ளது, அதே போல நடனமாடும் ஆண் சிற்பப் (தலை இல்லாமல்) படங்களை விரிவாக ஆராய்ந்த ஜான் மார்ஷல் அது நடராஜ வழிபாட்டின் ஆரம்ப வடிவமாக இருக்கலாம் என்றார். அதே போல மத்தியப் பிரதேசத்தில் உள்ள பீம்பட்கா (பீமன் வாழ்ந்த இடம்) குகைகளில் உள்ள பாறை ஓவியங்களில் உள்ள திரிசூலத்துடன் நடனமாடுபவர் படமும் நடராஜ வழிபாட்டினை குறிப்பதாக அறிஞர்களால் ஏற்கப் பட்டுள்ளது.