குத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்!
கிருத்துவத்தில் உள்ள விசித்திரமான மதநம்பிக்கைகள் இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றன. இடைக்காலத்திற்குப் பிறகு, குறிப்பாக இஸ்லாம்-கிருத்துவ மோதல்களுக்குப் பிறகு, இரண்டு மதங்களும் அடிப்படைவாதம், பழமைவாதம், என்ற பிடிவாதங்களினால் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற மனித-விரோத சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளார்கள். அவற்றைப் பரப்ப மக்களைக் கொல்வதிலும் தயங்குவதில்லை. காலம் மாறியுள்ளதால், கொல்ல உபயோகிக்கப்படும் ஆயுதங்கள் மாறியுள்ளன. ஆனால், மனப்பாங்கு, கொலைவெறி மாறவில்லை. மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; ரத்தம் கொட்டிக்கொண்டுதான் உள்ளது; உடல்கள் சிதறிக்கொண்டுதான் இருக்கின்றன; இப்பொழுது எலும்புகளை அள்ளமுடியாது; மண்டையோடுகளை எண்ண முடியாது; |
மில்லியன் மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்[1]: செக் நாட்டில், குத்னா ஹோரா என்ற இடம் பிரேக்கின் வெளிப்பகுதியில் உள்ளது [The Ossuary (Bone Church) in Kutna Hora][2]. செட்லெக் என்ற இடத்தில் இருக்கும் இது எல்லா சாமியார்களின் (கப்லே வெஸ்க் ஸவட்யாச் – kaple všech svatých), சர்ச்சிற்குக் கீழேயுள்ளது. எலும்பு-சர்ச் என்றே அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சர்ச்சின் உட்புறம் முழுவதும் எலும்புகள்-மண்டையோடுகள் தாம் காணப்படுகின்றன[3]. சுமார் 70,000ற்கும் மேற்பட்ட மண்டையோடுகள், லட்சத்திற்கும் மேலான எலும்புகள், எலும்புப் பகுதிகளை வைத்து, இச்சர்ச்சின் உட்புறம் அலங்கரிக்கப் பட்டுள்ளது[4]. வருடத்தில் இரண்டு லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.