Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு யார்? கிறிஸ்து யார்? பைபிள் ஓளியில்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
இயேசு யார்? கிறிஸ்து யார்? பைபிள் ஓளியில்
Permalink  
 


முன்னுரை:

21ம் நூற்றாண்டு, விஞ்ஞான வளர்ச்சியும், மின்னணு - தகவல்தொடர்பு புரட்சியும் உலகை ஒரு கிராமமாக சுருக்கியது. பாரத சகோதர்கள் உலகின் பல நாட்டிலும் பணி, தொழில் காரணமாக வசிக்கின்றனர். நம் நாட்டிலும் படையெடுத்து வந்த வந்தேறிகளின் கட்டாயத்தாலும், கோடிக்கணக்கில் செலவு செய்து மதமாற்றம் செய்யப்படுவதாலும் புற சமயத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவரும் இஸ்லாமியரும்.

 

பாலஸ்தீன இஸ்ரேலின் அரேபிய இனத்தின் யூத மதத்தின் எபிரேய மொழி புராணக் கதைகள் கிறிஸ்துவத்தின் பழைய ஏற்பாடு எனவும், யூதப் புராணக் கதைகள் பெரும்பாலனவற்றை குரான் கூறுவதாலும், இவை இரண்டும் தன் குல முதல்வர் என யூதத் தொன்ம கதையின் ஆபிரகாமை சொல்வதால் ஆபிரகாமிய மதங்கள் எனப்படுகிறது. நாம் வரலாற்று நோக்கில், தொல்லியல் புதை பொருள் ஆய்வு உண்மைகள், பைபிளியல் ஆய்வுகள் வெளிப்படுத்திய உண்மைகள் அடிப்படையில் கிறிஸ்துவம் பற்றிய சரித்திரத்தை பார்ப்போம்

உலகின் பெரும்பாலன மொழிகளில் மிக அதிகமான பொருட்செலவில் மொழிபெயர்த்து, ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் செலவிட்டு பரப்பப்படும் கிறிஸ்துவ மதப் புராண நூல் விவிலியத்தின் புதிய ஏற்பாடு கதையின் நாயகர் இயேசு. ஏசு பற்றி நம்மிடம் பரவியுள்ள கதை, செய்திகள் அனைத்திற்கும் ஒரே மூலம் புதிய ஏற்பாடு மட்டுமே. ஏசுவின் சமகாலத்தோர் கூடப் பழகியோர் என எவ்வித ஆதாரமும் கிடையாது.

 



-- Edited by devapriya solomon on Friday 5th of June 2015 08:51:12 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

கிறிஸ்துவர்கள் திருமணம் செய்து கொள்ளவே வேண்டாம்.

 

 1கொரிந்திய 7:1 இப்போது, நீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம். ஆம், பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது.

7 எல்லாரும் என்னைப்போலவே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். எனினும், ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு. இது ஒருவருக்கு ஒருவகையாகவும், வேறொருவருக்கு வேறு வகையாகவும் இருக்கிறது.

8இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவே: அவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது.

மணமாகாதவர்களும் கைம்பெண்களும்

25 இனி, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றி ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடமில்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாயிருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன்.26 மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.

27 மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது:மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.

28 நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

29அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும்.30 அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும்.31 உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் இஸ்ரேலில், பொ.கா. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் ரோமன் ஆட்சிக்கு அடிமைப்பட்டு இருந்த போது வாழ்ந்ததாகவும், தன்னை யூதர்களின் கிறிஸ்து- ராஜா என்பதாக இயக்கம் நடத்திட ரோம் ஆட்சியின் கவர்னர் பிலாத்து கைது செய்திட மரண தண்டனையில் இறந்தார். இவர் பற்றி இவருடைய சம காலத்தவர் யாரும், நேரடியாக பார்த்து பழகியோர் ஏதும் எழுதிவிட்டு செல்லவில்லை. அவர் மரணத்திற்கு 40 வருடம் தொடங்கி அடுத்த அரை நூற்றாண்டில் மதம் பரப்ப புனையப்பட்டவை புதிய ஏற்பாடு. 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

அந்த நூல் எது?

உங்களுக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிடப் பட்ட நூல் எது எனக் கண்டுபிடித்தீர்களா?
* பல்லாயிரம் ஆண்டுக்கால அளவில் எழுதப்பட்ட அந்த நூல் எது?
*முதல் முதலில் தமிழில் அச்சேறிய நூல்தான் அது. அதன் பெயர் அறிவீர்களா?
*ஆசிரியர் ஒருவரே ஆனால் எழுதியவர் பலர்!!! இது எப்படி என அறிய ஆவலா?
* அந்த நூலில் குறிப்பிடப்படும் விசித்திரக் குளம் போலவே ஒன்று சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகிறது!
இந்த விவரம் அறிவீர்களா?....

மேலும் அறிய இங்கே 'கிளிக்குக!'

அந்த நூல் -
புனித விவிலியம், திருமறைநூல், வேதாகமம்... என்றெல்லாம் அழைக்கப்படும் 'Bible' தான்


இந்த நூல் பற்றி இதுவரை நீங்கள் அறியாத செய்திகளைப் படிக்க மேலே தொடருங்கள்.

பல்லாயிரம் ஆண்டுக்கால அளவில் எழுதப்பட்ட நூல் :

ஆம் ஓராண்டு,  ஈராண்டுகள் அல்ல..பல்லாயிரம் ஆண்டுகளாக எழுதப்பட்ட நூல்.
(Sa rédaction remonte à plusieurs milliers d'années 'Les Mystères de la Bible' par Vincent ALLARD & Guy LES BAUX  ed. De Vecchi).

இதற்கு 'பைபிள்' என்ற பெயர் எப்படி வந்தது தெரியமா? இதோ விளக்கம்.

Bible என்னும் சொல்லுக்கு மூலமாகிய கிரேக்கச் சொல் Biblion என்பதாகும். பிப்ளோசு (Biblos) என்பது இன்றைய இலெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். புத்தகம் எழுதப் பயன்படும் "பப்பைரசு" (papyrus) என்னும் ஒரு வகை நாணல் புல் விற்கப்பட்டது அந்த பிப்ளோசு நகரத்தில்தான். Papyrus என்னும் சொல்லிலிருந்தே paper என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது என்பதும் கருதத்தக்கது.

பப்பைரசு விற்கப்பட்ட பிப்ளோசு நகரத்தின் பெயரால் Biblion என்னும் சொல் கிரேக்க மொழியில் நுழைந்து, புத்தகத்தை (Book) குறிப்பதாயிற்று. Biblion என்பது பன்மையில் Biblia என்றாகும். இந்தச் சொல்இலத்தீன் மொழியில் ஒருமையில் வழங்கி, The Book என்னும் பொருள் தருவதாயிற்று. கிறித்தவர்கள் தம் சமய நூலாகிய விவிலியத்தை ஒப்புயர்வற்ற ஒன்றாகக் கருதி, எந்த ஓர் அடைமொழியுமின்றி "நூல்" (The Book) என்றே அழைக்கலாயினர்.

கிறித்தவம் தமிழகத்தில் பரவியபோது, "பைபிள்" என ஆங்கிலத்தில் குறிப்பிடும் நூல் தொகுப்புக்கு இணையான தமிழ்ச் சொல்லை உருவாக்கும் தேவை எழுந்தது. பல கிறித்தவ சபையினர் இணைந்து உருவாக்கி 1995 இல் வெளியான தமிழ் பொது மொழிபெயர்ப்பின் தலைப்பு திருவிவிலியம் என அமைந்துள்ளது.[1]

ஆனால் மேலைநாட்டுக் கிறித்தவம் தமிழ்ப் பண்பாட்டைச் சந்தித்த 16ஆம் நூற்றாண்டில் இருந்தே தமிழ் விவிலியம் பல பெயர்களால் வழங்கப்பட்டது என வரலாற்றிலிருந்து தெரிகிறது. இதிலிருந்து மொழி வள்ர்ச்சியும் மொழி வழக்கு மாறுபாடுகளும் ஏற்பட்டதையும் வரலாறு கூறுகிறது.

(தமிழ் விவிலியம் தமிழ் விக்கிப்பீடியா http://ta.wikipedia.org/s/hu4)

 

இந்திய மொழிகளிலேயே முதல் முதலில் தமிழில் அச்சேறிய நூல் அது தான்.

 

விவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் பெயர்த்து அச்சேற்றியவர் பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க்ஆவார். செருமனியில் 1683இல் பிறந்த சீகன்பால்க் கிறித்தவ மதத்தைப் பரப்ப ஹைன்றிக் புளூட்ஷோ (Heinrich Pluetschau) என்பவரோடு இந்தியா வந்தார். சீகன்பால்க் செருமானியராக இருந்தாலும் டென்மார்க்கு ஆளுநர் 4ஆம் ஃப்ரெடெரிக் என்பவரின் பெயரால் இந்தியா வந்தார். 1620இல் டேனியர்கள்தரங்கம்பாடியில் நிறுவியிருந்த வணிகத் தளத்தை சீகன்பால்க் 1706ஆம் ஆண்டு சென்றடைந்தார். சீகன்பால்க் தரங்கம்பாடிக்கு அச்சுப் பொறி கொணரும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய வற்புறுத்தலின் பேரில் 1712ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு அச்சுப் பொறி வந்துசேர்ந்தது. இங்கிலாந்தில் அமைந்த ஒரு மறைபரப்பு நிறுவனம் அச்சுப் பொறி வருவதற்குத் துணைசெய்தது. சீகன்பால்க் தமிழில் பெயர்த்த புதிய ஏற்பாடு தரங்கம்பாடி அச்சகத்தில் 1715ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பில் சீகன்பால்க் ரூத்து நூல் வரை மட்டுமே முடித்திருந்த வேளையில், 1719இல் காலமானார்.

சீகன்பால்க் இறந்த ஒருசில மாதங்களில் பெஞ்சமின் ஷூல்ஸ் (Benjamin Schultze, பெஞ்சமின் சூல்சு) (1689-1760) என்னும் செருமானிய லூத்தரன்மறைபரப்பாளர் தரங்கம்பாடி வந்துசேர்ந்தார். சீகன்பால்க் தமிழில் பெயர்த்திருந்த பழைய ஏற்பாட்டுப் பகுதியை ஷூல்ஸ் 1723இல் அச்சேற்றினார். தொடர்ந்து 1726, 1727, 1728 ஆண்டுகளில் பழைய ஏற்பாட்டின் எஞ்சிய பகுதிகளை ஷூல்ஸ் அச்சிட்டு வழங்கினார்.

புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பிலும் ஷூல்ஸ் திருத்தங்கள் செய்தார். புதிய ஏற்பாட்டின் திருத்திய இரண்டாம் பதிப்பு தரங்கம்பாடி அச்சகத்திலிருந்து 1724இல் வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் விவிலிய நூல்களின் ஒவ்வொரு அதிகாரத்தின் தொடக்கத்திலும் ஒரு சுருக்கம் தரப்பட்டது புதிய கூறாக அமைந்தது.

மீண்டும் தரங்கம்பாடி அச்சகத்திலிருந்து திருத்திய மூன்றாம் பதிப்பு 1758இல் வெளியிடப்பட்டது. அதைத் திருத்துவதில் பல மறைபரப்பாளர்கள் ஒத்துழைத்தனர்.

 

திருமறைநூல் அச்சே(ற்)றியதில் புதுவையின் பங்கு :

 

”பாரிசு வெளிநாட்டு மறைபரப்பு சங்கம்” (Paris Foreign Missions) என்றொரு அமைப்பு இயேசு சபையினர் ஆற்றிவந்த மறைப்பணியைத் தொடர்ந்தது. இச்சங்கத்தைச் சார்ந்த ஆயர் கிளெமாந்து பொனாந்து (Clément Bonnand, 1796-1861) என்பவரின் தலைமையின்கீழ் புதிய ஏற்பாடு நூல்களாகிய நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் என்னும் நூலும் தமிழில் பெயர்க்கப்பட்டு பாண்டிச்சேரி மிஷன் அச்சகத்தால் 1857இல் வெளியிடப்பட்டன.

 

இயேசு சபை மறைத் தொண்டர் இழான்-பத்தீட்டு திரிங்கால் (Jean-Baptiste Trincal 1815-1892) என்பவர் 1855ஆம் ஆண்டளவில் மதுரையில் மறைப்பணி ஆற்றிக்கொண்டிருந்த வேளையில் புதிய ஏற்பாட்டைத் தமிழில் பெயர்க்கத் தொடங்கினார். அது 1891இல் புதுவையில் அச்சேறியது. மேலும் திரிங்கால் விவிலியச் செய்தியின் சுருக்கம் ஒன்றினையும் சத்தியவேத சரித்திர சங்க்ஷேபம் என்னும் பெயரில் வெளியிட்டார். திரிங்கால் வெளியிட்ட இன்னொரு சிறப்பான விவிலியப் படைப்பு யேசுக் கிறிஸ்துநாதருடைய பரிசுத்த சுவிசேஷப் பொருத்தம் (Concordance of Four Gospels) என்பதாகும். இதில், இயேசு கிறித்துவின் வாழ்க்கையையும் போதனையையும் விவரிக்கின்ற மத்தேயுமாற்குலூக்காயோவான்ஆகிய நான்கு நற்செய்தி நூல்களின் பகுதிகளும் அருகருகே வைக்கப்பட்டு, ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக அமைந்தன.

 

பாரிசு வெளிநாட்டு மறைபரப்பு சங்கத்தைச் (Missions Etrangères de Paris) சேர்ந்த பொத்தேரோ என்பவர் தலைமையில் சத்திய வேத ஆகமம் என்னும் தலைப்பில் 1904ஆம் ஆண்டு பழைய ஏற்பாட்டின் முதல் பாகம் வெளியிடப்பட்டது. இவரே 1910இல் பழைய ஏற்பாட்டின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டார். இந்த விவிலியம் வுல்காத்தா (Vulgata = Vulgate) என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து பெயர்க்கப்பட்டது.

 

 கிரேக்க மூலத்திலிருந்து தமிழ் விவிலியப் பெயர்ப்பு

 

1956இல் பெங்களூரு தூய பேதுரு குருத்துவக் கல்லூரியின் விவிலியப் பேராசிரியரும் பாரிசு வெளிநாட்டு மறைபரப்பு சங்கத்தைச் சேர்ந்தவருமான லூசியேன் லெக்ராந்து (Lucien Legrand) என்பவரின் தலைமையில் புதிய ஏற்பாடு கிரேக்க மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இது 1970ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நல்ல, தெளிவான தமிழில் அமைந்த இந்த மொழிபெயர்ப்பு தமிழ்க் கிறித்தவரிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

 

இதற்கிடையில் 1904இல் மொழிபெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாடு மொழிநடையில் திருத்தம் செய்யப்பட்டது. அது பரிசுத்த வேதாகமம் என்னும் பெயரில் 1973ஆம் ஆண்டு தமிழ் இலக்கியக் கழகத்தினரால் வெளியிடப்பட்டது. 1974ஆம் ஆண்டுமுதல் இந்த விவிலியம் திண்டிவனம் தமிழ்நாடு கத்தோலிக்க மையத்திலிருந்து (TNBCLC) வெளியிடப்பட்டு வந்தது.

 

அனைத்து கிறித்தவ சபைகளுக்கும் பொதுவான தமிழ் மொழிபெயர்ப்பு

 

17ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலும் கத்தோலிக்க திருச்சபையும் சீர்திருத்தசபைகளும் தமக்கென்று தனித்தனி விவிலிய மொழிபெயர்ப்புகளை உருவாக்கியிருந்தன. அச்சபைகளுக்கிடையே அதிக ஒத்துழைப்பும் இருக்கவில்லை. இந்நிலை 1970களிலிருந்து மாறத் தொடங்கியது. கிறித்தவ சபைகள் தமக்குள் உறவுகளை வளர்ப்பதிலும் ஒன்றிணைந்து செயல்படுவதிலும் ஆர்வம் காட்டின.

 

 இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் (1962-1965) அளித்த ஆதரவு

 

கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்த மட்டில் 1962இலிருந்து 1965 வரை நடந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கிறித்தவ ஒன்றிப்புக்கு ஆக்கப்பூர்வமான உந்துதல் அளித்தது. விவிலியத்தை மொழிபெயர்ப்பதில் கத்தோலிக்க சபை பிற கிறித்தவ சபைகளோடு இணைந்து பொது மொழிபெயர்ப்புகளை வெளிக்கொணர்வதற்கு வத்திக்கான் சங்கம் ஊக்கம் தந்தது.

 இதன் அடிப்படையில் தமிழகக் கத்தோலிக்க திருச்சபை விவிலியத்தைப் பிற கிறித்தவ சபைகளின் ஒத்துழைப்போடு மொழிபெயர்ப்பு செய்ய விருப்பம் தெரிவித்தது. தமிழகக் கத்தோலிக்க ஆயர் பேரவையும் (Tamil Nadu Catholic Bishops' Council) இந்திய வேதாகமச் சங்கமும் (Bible Society of India) ஒன்றிணைந்து, விவிலியத்தின் மூல மொழிகளான எபிரேயம், கிரேக்கம் ஆகியவற்றிலிருந்து பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இக்காலத் தமிழ் நடையில் பெயர்க்கும் பணியை 1972இல் தொடங்கின. கத்தோலிக்க கிறித்தவ சபையையும் சீர்திருத்த சபைகளையும் உள்ளடக்கிய மொழிபெயர்ப்புக் குழுவில் 35 விவிலிய அறிஞர்கள் பங்கேற்றனர். மேலும் 84 விவிலிய, மற்றும் தமிழ் அறிஞர்கள் திருத்தப் பணியில் உதவி செய்தனர். முன்னோட்டப் பதிப்புகள் வழியாக ஆயிரக்கணக்கானோரின் கருத்துகள் வரவேற்கப்பட்டு, தரமானவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

 

இருபத்திரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இம்மொழிபெயர்ப்புப் பணியும் அச்சுப்பணியும் 1995இல் நிறைவேறியது. திண்டிவனத்தில் அமைந்துள்ள தமிழக கத்தோலிக்க நடுநிலையமும் (TNBCLC), அனைத்துலக வேதாகம சங்கமும் (United Bible Society - USB) இணைந்து, 1995ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள் மதுரையில் இம்மொழிபெயர்ப்பை வெளியிட்டன. இப்புதிய மொழிபெயர்ப்பு திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) என அழைக்கப்படுகிறது.[1]

 ஆதரங்கள் :

 1 திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு), வெளியீடு: தமிழ்நாடு கத்தோலிக்க நடுநிலையம், திண்டிவனம், 1995.
2. சபாபதி குலேந்திரன், கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு, இந்திய வேதாகமச் சங்கம், பெங்களூரு, 1967.
3. சரோஜினி பாக்கியமுத்து, விவிலியமும் தமிழும், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 1990; 2000 (திருத்திய இரண்டாம் பதிப்பு).
4. அ. பீட்டர் அபீர், ஆ. அலோசியஸ் சேவியர், விவிலியம் ஓர் அறிமுகம் (திருவிவிலிய விளக்கம் 1, கிறித்தவ ஒன்றிப்பு உரை), அருள்வாக்கு மன்றம், திருச்சி; தமிழ் இறையியல் நூலோர் குழு, அரசரடி, மதுரை, 2005.
5. வி. ராஜ்கமல், தமிழ் வேதாகம வரலாறு, 2010 [1]
6. இணையத்தளத்தில் தமிழ் விவிலியம்: விக்கிமூலம்சீர்திருத்த சபை மொழிபெயர்ப்பு; கத்தோலிக்கர் பழைய மொழிபெயர்ப்பு; புதிய திருவிவிலியப் பொது மொழிபெயர்ப்பு

 திருமறைநூலை இணையதளத்தில் காண இங்கே சொடுக்குக :

www.arulvakku.com

திருமறை நூலைப் பற்றிய சில அதிசய செய்திகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.

 தொகுப்பு : 
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

கிறிஸ்துவம் வளர்ந்த வேகம் என்ன?

ரோமன் ஆட்சியின் கீழான பகுதியில் முதல் நூற்றாண்டில் 6 கோடி மக்கள் வாழ்ந்தனர். வரலாற்று ரீதியில், சமூக ரீதியில் அன்றைய சூழ்நிலை, ஆட்சியாளர், சர்ச் குறிப்புகள் எனப் பல்வேறு தரவு கொண்டு மிகவும் நேர்த்தியான ஆய்விற்கு பின் எழுந்த நூல்கள் எழுதப்பட்டு கிறிஸ்துவ சர்ச்சின் விமர்சனமும் வரவேற்பும் பெற்ற நூல்கள் இவை.
முதல் நூற்றாண்டு இறுதியில் 6000 பேருக்கு ஒரு ரோமன் குடிமகன் கூட ஏற்கவில்லை.
Ramsey MacMullen, Christianizing the Roman Empire (MacMullen is a social historian of ancient Rome, a real expert in antiquity)
Rodney Stark, The Rise of Christianity; Stark is a sociologist of modern religion 
இவர்கள் ஆய்வுப்படி ஏசு மரணம் 30 வாக்கில்.
40 வாக்கில் 500 முதல் 1000 பேர் மட்டுமே கிறிஸ்துவர், இது ஆண்டிற்கு 4% என்ற விகிதத்தில், ஏசு மரணத்திற்கு 100 வருடம் பின்பு தான் 10000 கிறிஸ்துவர்கள் என்ற நிலை வந்தது, 
இதே வேகத்தில் சென்று, 310 வாக்கில் 20 லட்சம் என ஆனர், பின் ரோமன் மன்னர் கான்ஸ்டன்டைன் ஆதரவு வர அடுத்த 50- 60 ஆண்டுகளில் 5.5கோடி பேர் கிறிஸ்துவர் ஆனர், கிறிஸ்துவம் வளர ரோமன் ஆட்சிக் கத்தியே காரணம்.

தமிழச்சி அய்யர்'s photo.
தமிழச்சி அய்யர்'s photo.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard