கிறிஸ்து எனில் யூதர்களின் ராஜா- தாவீது பரம்பரையின் மகன் மட்டுமே. இதனை மேலுமாக நீட்டி தெய்வீகர் என புனைந்து யூதரல்லாதோரிடம் சென்று காசு பார்த்தார் பவுல். முதலில் எழுதிய மாற்கு சுவி கதையில் ஏசு பிறப்பு கிடையாது, மாற்கு சுவி அடிப்படையை அப்படியே ஏற்று புனைந்தவை மத்தேயுவும் லூக்காவும், இவைகளில் ஏசு பிறப்பு அதில் அதிசயம், அதாவது திருமணத்திற்கு முன்பே ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரி கன்னியான நிலையில் கர்ப்பமானதாகக் கதை. கடைசியில் சர்ச் பாரம்பரியம்படியே பொ.கா.98ல் டிராஜன் ரோமன் மன்னனாபின் எழுதிய யோவான் சுவியில் கன்னி கருத்தரித்தல் கிடையாது.
சுவிசேஷக் கதாசிரியர்கள் நடந்ததை உண்மையாக எழுதினார்களா?
மாற்கு ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் பெருதலில் தொடங்கிறார். 40 நாள் உபவாசம் எனச்செல்ல, உடனே யோவான் கைதாக கலிலேயா வந்து அங்கே சீடர்களை தேர்ந்தெடுத்து இயக்கம் ஆரம்பிக்கின்றார். சீடர்களோடு கலீலேயாவில் மட்டும் இயங்க, அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு, கதைப்படி எபிரேயர்களின் முதல் குழந்தைகளை மட்டும் கர்த்தர் கொன்றதற்கு நன்றியாக வருடாவருடம் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமான யூதேயாவின் ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை செய்து பலிதர வந்தொபோது கைதாகி மரண தண்டனையில் இறந்தார்.
அதாவது இயேசு சீடர்களோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு, முதல் பஸ்கா பண்டிகைக்கு வந்த பின் பாவமன்னிப்பு திருமுழுக்கு பெற்றிருந்தால் - ஒரு வருடத்திற்கு ஒன்றிரண்டு நாள் குறைவு. அதிலும் க்டைசி வாரம் செவ்வாய்கிழமை தான் யூதேயவிற்குள் நுழைகிறார், வியாழன் இரவு கைதாகி வெள்ளி அன்று மரண தண்டனை என்கிறார். யூதேயா ரோமன் ஆட்சி, கலிலேயா - ஏரோது ஆட்சி.
ஆனால் நான்காம் சுவி- 3 பஸ்கா பண்டிகைகளையும் அதற்கு ஏசு ஜெருசலேம் செல்வதாகவும் கதை சொல்கிறார். அதிலிம் கடைசி ஆண்டில் எபிரேயர்களின் 3 பண்டிகைகளுக்கும், கூடாரம், மறுஅர்ப்பணிப்பு, மற்றும் பஸ்கா அதாவது செப்டெம்பர் மாதம் முதல் ஏப்ரல் வரை கடைசி 8 மாதங்கள் யூதேயாவில் எனத் தெளிவாகச் சொல்கிறார். அதே போலா ஏசுவைக் கைது செய்தது ரோமன் படைத்தலைவர்ம் ரோமன் படைவீரர்களும் என்கிறார்.
மாற்கு வேண்டுமென்றே இவற்றை விட்டுள்ளார். அல்லது யோவன் சுவிசேஷம் பொய். எனவே சுவிசேஷங்களை நம்பிக்கைகு ஏற்றது இல்லை எனலாம். ஆனாலும் சுவிசேஷ அடிப்படையிலேயே ஏசு தெய்வீகமானவரா எனப் பார்க்கலாம்.
-- Edited by devapriyaji on Monday 18th of July 2016 10:53:45 AM