இயேசு கடைசி இரவு விருந்தின்போது தன் சீடர்களில் ஒருவன் தன்னை காட்டிக் கொடுப்பான் என்பதை மறைமுகமாக அவர்களுக்கு உணர்த்தினார். தன்னைக் காட்டிக் கொடுக்கப்போகும் யூதாஸ் ஸ்கா¡¢யோத் என்ற சீடனிடம் 'சீக்கிரம் உன் வேலையை முடி' என்று கட்டளையிடுகிறார். அவன் பிரதான ஆசா¡¢யா¢டமும், மூப்பா¢டமும் இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக 30 வெள்ளிக்காசுகளை கூலியாகப் பெற்றிருந்தான். அவர் மற்ற சீடர்களுடன் இருந்தபோது யூதாஸ் கூட பிரதான ஆசா¡¢யரும், வேதபாரகரும், மூப்பரும் அனுப்பிய திரளான ஜனங்ககளும், போர்ச்சேகவர்களும் வந்தனர். யூதாஸ் இயேசுவை 'ரபீ, வாழ்க' என்று சொல்லி முத்தமிட்டவுடன் அவர்கள் அவரைக் கைது செய்தார்கள்.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு உபதேசம் செய்துவரும் ஒரு போதகர் இயேசு. ஏராளமான பிணியாளர்களைக் குணப்படுத்தியவர், அநேகா¢டமிருந்து பிசாசுகளை விரட்டியவர், இன்னும் பல அற்புதங்களைச் செய்தவர், தேவாலயத்தில் நின்று ஆசா¡¢யர், பா¢சேயர், வேதபாரகர் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் அடிக்கடி உபதேசம் செய்பவர், மக்களுக்கெல்லாம் பா¢ச்சயமானவர், மேலும் (பைபிளில் சொல்லியபடி) நான்கு தினங்களுக்கு முன்பு தான் எருசலேம் நகரத்துக்குள் திரளான ஜனங்கள் புடைசூழ ஆரவாரத்துடன் நுழைந்தவர், தேவாலயத்தில் புகுந்து அங்கிருந்த வியாபா¡¢களையெல்லாம் தன்னந்தனியாக நின்று விரட்டியடித்தவர், பிரதான ஆசா¡¢யரும், அவருடைய கூட்டத்தாரும் தங்கள் எதி¡¢யாக நினத்து தண்டிக்கவிரும்பும் இப்படிப்பட்ட பிரபலமான ஒரு மனிதரை அவரது சீடன் ஒருவன் இன்னாரென்று பிரதான ஆசா¡¢யர்களுக்கும், சேவகர்களுக்கும் அடையாளம் காட்டினால்தான் அவரைப் பிடிக்கமுடியும் என்பதை நம்ப முடிகிறதா?
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் பின்பு தன் தவறை உணர்ந்து வருந்தி அவன் கூலியாக வாங்கிய முப்பது வெள்ளிக்காசுகளையும் திருப்பிக் கொண்டுபோய் பிரதான ஆசா¡¢யா¢டத்தும், மூப்பா¢டத்தும் கொடுத்தான். அவர்கள் பெற்றுக்கொள்ள மறுத்ததால் அந்த காசுகளைத் தேவாலயத்தில் எறிந்துவிட்டு அவன் சென்று தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டான் (மத்தேயு 27: 5). பிரதான ஆசா¡¢யர், யூதாஸ் பாவத்தினால் சம்பாதித்தஅந்த வெள்ளிக்காசை எடுத்து அதைக் காணிக்கைப்பெட்டியில் போடுவது தகாது என்று கருதி, அதை வைத்து அந்நியர்களை அடக்கம் செய்வதற்கென்று ஒரு நிலம் வாங்குவோம் என்று ஒரு குயவனுடைய நிலத்தைக் கொண்டார்கள் (மத்தேயு 27: 3 -7). இது எரேமியாவின் தீர்க்கதா¢சனம் நிறைவேறும் படியாக நிகழ்ந்தது என்று சுவிசேஷம் சொல்லுகிறது. ஆனால் இதற்கும் எரேமியா 32 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சகா¢யா 11: 12 & 13 ல் இது போன்ற ஒரு செய்தி வருகிறது. ஆனால் அதுவும் இதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத செய்திதான். குறிப்பிடப்பட்டிருக்கும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகளைக் கூர்ந்து வாசிப்பவருக்கு இது விளங்கும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 ஆம் அதிகாரத்தில் 17முதல் 20 வரையுள்ள வசனங்களில் யூதாஸ் தனக்குக் கிடத்த கூலியினால் ஒரு நிலத்தை வாங்கி , அதில் தலைகீழாக விழுந்து வயிறு வெடித்து குடல்களெல்லாம் சா¢ந்து மா¢த்தான் என்று உள்ளது. தங்களுடன் இயேசுவின் இறுதிக்காலம் வரைப் பணியாற்றிய ஒரு சகா, அதுவும் இயேசுவைக் காட்டிக்கொடுத்த முக்கியமான சீடன் எப்படி மா¢த்தான் என்பது சக சீடர்களுக்கேத் தொ¢யவில்லை என்பது புதிராக இருக்கிறது. இப்படி முரண்பாடான தகவல்களுக்கு பைபிளில் பக்கத்திற்குப் பக்கம் பஞ்சமேயில்லை.
ஹன்ஸ் அத்ரோத் (Hans Atrott) போன்ற ஆராய்ச்சியாளர்கள் உண்மையில் சிலுவையில் மாண்டது இயேசு அல்ல, அது யூதாஸ் ஸ்கா¡¢யோத் என்று கருதுகிறார்கள். அதற்குக் காரணம் இயேசுவின் சீடராகக் கருதப்படும் பர்னபாஸின் பெயரால் எழுதப்பட்ட சுவிசேஷம் (Gospel of Barnabas). அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், இயேசு கடைசி இரவு விருந்தில் ரொட்டியைப்பிட்டு இது என் சா£ரமாயிருக்கிறது என்று யூதாசுக்குக் கொடுத்து, பின் கோப்பையில் திராட்சை மதுவை எடுத்து இது என் இரத்தமாக இருக்கிறது என்று அவன் பருகத்தருகிறார் (transubstantiation). அப்போது யூதாஸ் இயேசுவைப்போல் மறுரூபம் (transfiguration) அடைந்தான். இயேசுவைப் போல் மறுரூபம் அடைந்த யூதாஸ், இயேசு என்று யூதர்களால் தவறாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்டு விசரணைக்குப்பின் இயேசுவுக்குப் பதிலாக சிலுவையில் அறையப்பட்டதாகவும், கல்லறையில் வைக்கப்பட்ட யூதாசின் உடலை இயேசுவின் சீடர்கள் கடத்திச் சென்றதாகவும், இயேசு தேவதூதர்களின் உதவியால் தப்பித்துச் சென்று பின்னர் உயிர்த்தெழுந்ததாக சீடர்களுக்குக் காட்சியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பர்னபாஸின் சுவிசேஷம் பைபிளில் சேர்க்கப்படாத பல கிறிஸ்தவ மறைநூற்களில் (Apocrypa) ஒன்று. இயேசுவைத் தெய்வமாக உலகுக்குக் காண்பிப்பதற்கு எதிரான செய்திகள் உள்ள எல்லா கிறிஸ்தவ மறைநூற்களும் 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தலைவர்களின் தூண்டுதலால் ரோமானியப்பேரரசன் கான்டான்டைனின் உத்தரவுப்படி எ¡¢க்கப்பட்டன. ஆனால் 1945 ல் எகிப்துதேசத்தில் நாக் ஹம்மடி (Nag Hummadi) என்ற இடத்தில் பைபிளில் சேர்க்கப்படாமல் புறந்தள்ளப்பட்ட ஏராளமான மறை ஆவணங்கள் கிடைத்தன. அவற்றுள் ஒன்றுதான் இந்த சுவிசேஷம். பர்னபாஸ் பவுலின் கூட்டாளியாக இருந்து அவருடன் பல இடங்களுக்கும் சென்று மக்களுக்குப் போதித்தவரென்று பைபிளில் சொல்லப்படுகிறது.
அதிகாரபூர்வ சுவிசேஷங்களிலும் (Canonical Gospels) கூர்ந்து கவனிக்கும்போது இதற்கான தெளிவுகள் கிடைக்கின்றன. யோவான் 13: 19 & 20 ல் இயேசு சீடர்களிடம் , "அது நடக்கும்போது நானே அவன் என்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்பே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுகொள்கிறான், என்னை ஏற்றுகொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுகொள்ளுகிறான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்கிறார். இங்கு 'நானே அவன்' (I am he) என்பது 'நானே அவர்’ (I am He) என்று தமிழ் பைபிளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. 'அவன் ' என்றால் யூதாஸ்,'அவர்' என்றால் பிதாவாகிய தேவன்.
கடைசி இரவு விருந்தில் பந்தியிருந்தபோது இயேசு சீடர்களை நோக்கி உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று சொன்னார். சீடர்கள் மிகவும் துக்கமடைந்து அவரை நோக்கி ‘அது நானோ, நானோ’ என்று ஒவ்வொருவராய் கேட்கத்தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக, என்னோடு கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிகொடுப்பான் என்றார். அவரைக் காட்டிகொடுத்த யூதாசும் அவரை நோக்கி ரபீ, அது நானோ என்றான்; அத்ற்கு அவர் , ‘நீ சொன்னபடிதான்’ என்றார் ( மத்தேயு 26: 20 - 25). இந்த உரையாடலைக் கூர்ந்து நோக்கினால் ஒரு விஷயம் விளங்கும். தங்கள் தலைவரை தங்களில் ஒருவனே காட்டிக் கொடுப்பான் என்று கேள்விப்படும்போது விசுவாசம் உள்ள தொண்டர்கள் என்ன சொல்லுவார்கள்? ‘எவன் என்று சொல்லுங்கள், அவனைத் தொலைத்துவிடுகிறோம்’ என்றல்லவா பொங்கி எழுவார்கள்! ஆனால், உங்களில் ஒருவன் எனக்காக உயிரைத் தியாகம் செய்யப் போகிறான் என்று ஒரு தலைவர் சொல்லும்போதுதான் மேற்கூறிய உரையாடலில் உள்ளதுபோல தொண்டர்களுக்கு, 'அது நானோ,' 'நானோ' என்று கேட்கத் தோன்றும்.
பைபிளில் உள்ளது போல உண்மையாகவே யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்திருந்தால் கூட, அது அவனுடைய குற்றம் என்று எப்படிச் சொல்லமுடியும், இயேசு கிறிஸ்து என்ற நாயகனின் வாழ்க்கை நாடகத்தில் யூதாசும் ஒரு கதாபாத்திரம்தானே. பைபிளில் சொல்லியபடி இயேசுவின் அவதாரமும், அவர் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளும் கிறிஸ்தவர்கள் நம்புவதுபோல் அவர் பிறப்பதற்கு முன் சுமார் 1000 ஆண்டுகளாக பல தீர்க்கத்தா¢சிகளால் முன் கூட்டியே உரைக்கப்பட்டு நடந்தேறிய ஒரு நாடகம். கிறிஸ்தவர்கள் நம்புவதைபோலத் தோற்றமோ அழிவோ இல்லாத, கடவுளின் குமாரனாகிய இயேசு மனிதனாகப் பிறந்து, மாமிச உடலில் வாழ்ந்து, யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டு, மா¢ப்பது போல் மா¢த்து, மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்து , அதன்பின் நாற்பதுநாள் பூமியில் உலாவி பின் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இதில் யூதாஸ், இயேசுவுக்கு அவர் யூதர்களால் கைது செய்யப்படுவதற்கு உதவி செய்வதற்காக பிறந்த ஒரு கதாபத்திரமே தவிற வேறென்ன? அவன் அவ்வாறு நடந்துகொள்வதற்காகவே படைக்கப்பட்டவன் அல்லவா?அவன் இயேசுவைக் காட்டிகொடுத்துப் பாவம் செய்தவன் என்று கூறுவானேன்? கதை இப்படியிருக்க, மத்தேயு 26: 24 ல் இயேசு சொல்லுகிறார்: " மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் அவர் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" இதில் முதல் பகுதியில் இயேசு தம்மைக்குறித்து சொன்னது சா¢, திட்டமிட்டபடியான நாடகத்தில் அவர் கொலை செய்யப்படவேண்டியதுதான். ஆனால் இரண்டாம் பகுதியில் அவர் யூதாசை சபிக்கவேண்டியதின் அவசியம் என்ன? அவன் அதே நாடகத்தில் ஒரு துணைக்கதாபாத்திரமல்லவா?
சுவிசேஷங்களின்படி யூதாஸ் தன் தலைவராகிய இயேசுவின் போதனைகளைக் கைக்கொண்டு வாழ்ந்த ஒரு சீடனாகவே சித்தா¢க்கபடுகிறான். யோவான் 12: 3 - 6 ல் ஒரு காட்சி: ஒரு நாள் மகதலேனா மா¢யாள் விலையேறப்பெற்ற நளதம் என்னும் பா¢மளதைலத்தில் ஒரு பவுண்ட் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலை மயிரால் துடைத்தாள். இதைப் பார்த்த யூதாஸ் ஸ்கா¡¢யோத்து இந்த தைலத்தை முந்நூறு பணத்திற்கு விற்று ஏழைகளுக்குக் கொடாமல் போனதென்ன என்றான். (அவன் ஏழைகளைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல் , அவன் திருடனான-படியாலும், சீடர்களுடைய குழுவிற்கு பொருளாளனாக இருந்து பணப்பையைச் சுமக்கிறதாலும் இப்படிச் சொன்னான் என்று பின்வரும் குறிப்பு கூறுகிறது.) அப்பொழுது இயேசு அவனை நோக்கி, அவளை விட்டுவிடு, ஏழைகள் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்று சொல்லி அந்த ஆடம்பரத்தை ரசித்தார் (மத்தேயு 26: 6 -11, மாற்கு 14:1 -7). யூதாஸ் ஏற்கனவே எதையாவதைத் திருடிப் பிடிபட்டான் என்று பைபிளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அப்படியிருக்கையில் அவன் பொதுவான பணப்பையை வைத்து நிர்வாகம் செய்தான் என்பதற்காக அவன் மேல் குற்றம் சொல்வது என்ன நியாயம்? மேலும் இதே இயேசு கிறிஸ்துதான் தன்னிடம் உபதேசம் கேட்க வந்த ஒருவனிடம், 'நீ உனக்கு உண்டானவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னை பின்பற்றிவா' என்று கட்டளையிடுகிறார் (மத்தேயு 19: 21, மாற்கு 10: 21 & லூக்கா 18: 22). அப்படியிருக்குங்கால் பணத்தை வாசனைத் தைலத்தில் வீணாக்காமல் ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று யூதாஸ் சொன்னதில் என்ன தவறு? நான்கு சுவிசேஷங்களிலும் யூதாசின் மீது வேண்டுமென்றே களங்கம் சுமத்தப்படுகிறது. அவன் இயேசுவின் போதனைகளை அப்பழுக்கில்லாமல் பின்பற்றிய ஒரு சீடனாக இருந்தான் என்பதே உண்மை. பேதுருவும் யூதாசைப்பற்றிக் குறிப்பிடும்போது, 'அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்கு பெற்றவனாயிருந்தான்' (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:17) என்றுதான் சொல்லுகிறாரே தவிற அவன் ஒரு திருடன், பணத்தாசை பிடித்தவன் என்று சொல்லவில்லை.