ஈஸ்டர் (Easter) பண்டிகையைக் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் அப்பண்டிகையைப் பற்றி தங்கள் மறைநூற்களில் சொல்லப்பட்டுள்ளதா என்று கவலைப் படுவதில்லை. மக்கள் பொதுவாகத் தாங்கள் முழுமனதோடு நம்பிக்கை வைத்துள்ள விஷயங்களில் எவ்வளவு தவறுகள் நடந்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அதற்கு உதாரணமே இந்த ஈஸ்டர் பண்டிகை.
ஈஸ்டரைப் பற்றி பைபிளில் குறிப்புகள் உள்ளனவா என்றால் ஆம் என்ற் பதிலே வரும். ஏரோது மன்னன் யோவானின் சகோதரனாகிய யாக்கோபைக் கொலை செய்துவிட்டு அது யூதர்களுக்குப் பிடித்திருந்தது என்பதால் பேதுருவையும் பிடித்துச் சிறையிலிட்டான். அது 'புளிப்பில்லாத அப்பப் பண்டிகை'யின் நாட்களாயிருந்ததால் 'பஸ்கா'விற்குப் பிறகு அவனை ஜனங்களிடத்தில் கொண்டுவரலாம் என்று நினைத்திருந்தான்.இந்த விஷயம் தமிழ் பைபிளில் அப்போஸ்தலருடைய நடபடிகள் 12: 1-4 வசனங்களில் இப்படியே மாற்றம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் ஜேம்ஸ் மன்னர் ஆங்கில மொழிபெயர்ப்பில் (KJV Bible) பஸ்கா என்பது 'ஈஸ்டர்' என்று தவறாக வேண்டுமென்றே மொழிமாற்றம் செய்யப்பட்டு (அப்போஸ்தலருடைய நடபடிகள் 12: 4), ஈஸ்டர் பண்டிகை முதல் நூற்றாண்டிலேயே கொண்டாடப்பட்டதற்கு ஆதாரமாக உண்மைக்கு மாறாகக் காட்டப்பட்டுள்ளது. பஸ்கா பண்டிகைக்கும் ஈஸ்டர் பண்டிகைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
பஸ்கா (Pascha) என்ற கிரேக்க வார்த்தை பெசாக் (Pesach) என்ற எபிரேய வார்த்தையிலிருந்து வந்தது. 'கடந்து செல்வது' (Passover) என்ற எபிரேய மொழிப் பொருளுக்கு கிரேக்க மொழியில் வார்த்தை கிடையாது. மேலும் பஸ்கா என்ற வார்த்தைக்கு யூதர்களின் 'கடந்து செல்லும் (Paasover)பண்டிகை'யைத் தவிர வேறு பொருள் கிடையாது. KJV தவிர பிற ஆங்கில மொழித் தொகுப்புகளில் இந்த முரண்பாடு இல்லை. KJV பைபிளில் இந்த இடத்தில் பஸ்காவை வேண்டுமென்றே ஈஸ்டர் என்று மாற்றி மொழிபெயர்த்திருப்பது, இயேசு மறைந்து சில ஆண்டுகளிலேயே கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் என்று நிறுவுவதற்குப் பதிலாகக் கிறிஸ்தவர்கள் யூதர்களின் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினர் என்று நிரூபிக்கவே உதவுகிறது! KJV பைபிளின் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய பதிப்பில் இந்த முரண்பாடு சா¢ செய்யப்பட்டுள்ளது.
யூதர்களின் 'கடந்து செல்லும்' பண்டிகை (Passover/Pascha) அல்லது 'புளிப்பில்லா அப்பப் பண்டிகை'யைப் பற்றி யாத்திராகமம் 12: 1 -20 வரையுள்ள வசனங்களில் வி¡¢வாகச் சொல்லப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் அடிமைபட்டுக் கிடந்த யூதர்களை விடுவிக்கும் முயற்சியில் இறுதியாக என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி மோசே மூலம் அவர்களுக்கு ஜெகோவா அறிவுறுத்துகிறார். அது வருடத்தின் முதல் மாதமாக இருந்தது. பதினாலாம் நாளன்று மாலையில் ஒவ்வொரு இஸ்ரேல் வீட்டாரும் ஒரு ஆட்டுக்குட்டியை அடித்து அதன் இரத்தத்தை வீட்டுவாசல் நிலைக்கால்களிலும் மேற்சட்டத்திலும் தெளித்து, அதன் மாமிசத்தை நெருப்பில் சுட்டு, புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான கீரையோடும் புசிக்கவேண்டும். இரவில் ஜெகோவா ஆகிய நான் இரத்தம் அடையாள்மாகத் தெளிக்கப்பட்ட யூதர்களின் வீடுகளைக் கடந்து சென்று அவர்களை விட்டுவிட்டு, எகிப்தியர்களின் வீடுகளில் மனிதர் முதல் மிருகங்கள் வரை எல்லா ஜீவன்களிலும் முதல் பேறானவற்றை அழிப்பேன், புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாளளவும் நீங்கள் புசிக்கக்கடவீர்கள். இந்த நாட்களில் புளித்த அப்பத்தைப் புசிக்கிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படுவான் என்று கூறுகிறார். மேலும் இதை தலைமுறை தலைமுறையாக அவர்கள் ஆசா¢க்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார். இதுவே யூதர்களின் பஸ்கா அல்லது புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் வரலாறு. இந்த கட்டளை லேவியராகமம் 23: 5 -8; எண்ணாகமம் 9: 2; உபாகமம் 16:1; 2 இராஜாக்கள் 23: 21 ஆகிய இடங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. பரமபிதா கட்டளையிட்ட இந்த பண்டிகையை இன்றைய கிறிஸ்தவர்கள் ஆசா¢ப்பதில்லை. ஏனெனில் யூதர்களுக்கு மட்டுமே இது கட்டளையிடப்பட்டது, நமக்கு அல்ல என்பது அவர்களது எண்ணம். ஆனால் யூதர்களுக்காக மட்டுமே இயேசுவும், அப்போஸ்தலர்களும் சொன்ன பலவிஷயங்களைத் தங்களுக்கும் சேர்த்துச் சொன்னதாகக் கருதிக்கொண்டுப் பின்பற்றுகிறார்கள்.
தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் பஸ்கா பண்டிகையை ஆசா¢த்துவந்தனர் என்பதற்கு ஆதாரம் உள்ளது. பி¡¢த்தானிக்கா கலைக்களஞ்சியம் 8 ஆம் தொகுப்பில் (Encyclopedia Britannica, 11th Edition,Vol 8, p 828 ) பிவருமாறு கூறப்பட்டுள்ளது: "புதிய ஏற்பாட்டிலோ, அப்போஸ்தலர்களின் எழுத்துக்களிலோ ஈஸ்டர் பண்டிகைக்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆதி கிறிஸ்தவர்கள் பஸ்கா பண்டிகையை ஒரு புதிய உத்வேகத்தோடு தொடர்ந்து கொண்டாடிவந்தனர். அதாவது பஸ்கா விருந்துக்காகப் பலியிடப்படும் ஆட்டுக்குட்டியை இயேசு கிறிஸ்துவாகக் (Paschal lamb) கருதி பண்டிகையைப் பாவித்தனர்." புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:1; 12:3; 18:21; 20:6,16; 1 கொ¡¢ந்தியர் 5:7-8; 16: 8 ஆகிய இடங்களில் தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகையையும், பெந்தேகோஸ்தே நாளையும் கொண்டாடிவந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
பழைய ஏற்பாட்டில் இயேசு பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்ட ஜலப்பிரளயத்தின் பின்பு மீதமிருந்த நோவாவின் சந்ததியினர் பெருகினர். நோவாவின் பேரன்மகன் நிம்ரோத் (Nimrod) என்று ஒருவன் இருந்தான் (ஆதியாகமம் 10: 6-10). அவன் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாக இருந்தான். கடவுளுக்கெதிராக மக்களைத் திருப்பி அரசனானதோடு ஒரு மதத்தையும் நிறுவினான். அவன் பாபெல் (Babel), நினெவே (Nineveh), காலாகு (Calah), ரெகோபோத் (Rehoboth) முதலிய நகரங்களைக் கட்டினான். அவனுடைய தாயும் மனைவியான இஷ்டார் (Ishtar or Semiramis) அவன் இறந்தவுடன் அவன் சூ¡¢யக்கடவுளின் அவதாரம் என்று நிறுவி மக்களை நிம்ரோதைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளவைத்தாள். பின்பு அவன் பாகால் (Baal), பாலிம் (Baalim)
என்றபெயர்களின் வழிபடப்பட்டான். இஸ்டாருக்கு செமிராமிஸ் (Semiramis) என்ற பெயரும் உண்டு. அவள் திருட்டுத்தனமாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதற்குத் தம்முஸ் (Tammuz) என்ற் பெயா¢ட்டு, நிம்ரோத் மறுபடியும் உயிர்த்தெழுந்து குழந்தை வடிவில் வந்திருப்பதாக மக்களை நம்பவைத்தாள். மக்கள் குழந்தையோடு சேர்த்து தாயையும் வழிபட ஆரம்பித்தனர். எருசலேம் தேவாலயத்தில் தம்முஸ் (நிம்ரோத்) விக்கிரகத்தை வைத்து யூதர்களும் வணங்கிவந்தனர் (எசேக்கியேல் 8: 14).
இறந்துபோன நிம்ரோத் மறுபடியும் உயிர்த்தெழக் காரணமாயிருந்த இஷ்டா¡¢ன் பெயா¢லேயே பாபிலோனிய மக்கள் நிம்ரோதின் உயிர்த்தெழுதல் பண்டிகையைக் கொண்டாடினர். இஷ்டார் என்ற பாபிலோனியச் சொல் ஹீப்ரூ, அராமைக் போன்ற செமிடிக் மொழிகளில் இயோஸ்டர்
(Eostore) என்று உச்சா¢க்கப்பட்டது. ஆங்கிலத்தில் Easter என்றானது. சூ¡¢யக்கடவுளான நிம்ரோத் உயிர்த்தெழுந்தநாள் ஈஸ்டர் என்று கொண்டாடப்பட்டது. சூ¡¢யன் ஒவ்வொருநாளும் மாலையில் மா¢த்து அதிகாலையில் உயிர்த்தெழுகிறான் என்பதால் சூ¡¢யன் உதிக்கும் கிழக்குத் திசையும் ஈஸ்ட் (East) என்றானது. ஆங்கிலத்திலும் அதுவே நிலைத்தது. கானானிய மற்றும் பாபிலோனிய மதங்களைப் பின்பற்றி இஸ்ரேலியர்கள் பல தெய்வங்களை வழிபட்டுக்கொண்டிருந்த காலத்தில் நிம்ரோதை பாகால் (Baal) என்றும், இஷ்டாரை அஷ்டோரத் (Ashtoreth) என்றும் வணங்கிவந்தனர். அஷ்டோரத் அல்லது இயோஸ்டர் மகப்பேறு மற்றும் அறுவடைக்கான தெய்வமாகவும், வசந்தகாலத்துக்கு¡¢ய தெய்வமாகவும் அவளுடைய கணவனும் மகனுமாகிய நிம்ரோத் சூ¡¢யக்கடவுளாகவும் வணங்கப்பட்டுவந்தனர்.
யூதர்களின் பஸ்கா பண்டிகையைப் போல் ஈஸ்டரும் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாட்களில் வரும். காரணம்; வருடத்தில் இரு நாட்கள் சூ¡¢யன் பூமியின் பூமத்திய ரேகைக்கு நேராக வருகிறது, அதாவது மார்ச் 20/21 லும், செப்டெம்பர் 21/22 லும். அந்நாட்களில் இரவும் பகலும் ஒரே கால அளவுடன் இருக்கும். மார்ச் 21 ஆம் நாள் 'வசந்தகால பூமத்திய நாள்' (Vernal Equinox) என்றும் செப்டெம்பர் 22 ஆம் நாள் 'இலையுதிர்கால பூமத்திய நாள்' (Autumnal Equinox) என்றும் அழைக்கப்படும். வசந்தகால பூமத்திய நாளுக்குப் பின் வரும் பௌர்ணமி கழிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் வரும். இந்த பண்டிகையின் வேர்கள் சூ¡¢யனுக்கும், பூமிக்கும், சந்திரனுக்கும் உள்ள உறவினைச் சார்ந்த சூ¡¢யக் கடவுள் வழிபாட்டில் தொடங்கியதாகும். ஒவ்வொரு நாளும் மாலையில் சூ¡¢யன் மறைந்து (மா¢த்து) மறுநாள் காலையில் உதித்து எழுவதாக (உயிர்த்தெழுவதாக) சூ¡¢யனைப் பிரதான கடவுளாக வணங்கிவந்த ரோமானியப் பேகன் மதத்தினரும் நம்பினர். இந்த நம்பிக்கையே இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகையின் வித்து.
ஈஸ்டர் முயல் (Easter Bunny) என்பது சிறார்களுக்கான கற்பனைக்கதைகளில் (fairy tales) தோன்றிய ஒரு பண்டிகைக்காலப் பிராணி. ஈஸ்டருக்கு முந்தின இரவு கூடை நிறைய வண்ண வண்ண முட்டைகளையும், இனிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களையும் வீட்டில் கொண்டுவந்து வைக்கும் எனறு ஒரு நம்பிக்கை. வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பேகன் மதத்தினர் மகப்பேற்றுக்கும், செழிப்புக்கும் காரணமான இயோஸ்டரை (Eostre) வழிபடும்விதமாக ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடினர். நிம்ரோதின் தாயும் மனைவியுமான அதே இயோஸ்டர்தான் இவள். இயோஸ்டர் தேவதைக்குப் பி¡¢யமான ஒரு பறவை இருந்தது. அவள் அதை முயலாக மாற்றினாள். அந்த முயல்தான் ஈஸ்டர் முயல். பொதுவில் ஈஸ்டர் முயல் பண்டிகைநாளில் சான்டா கிலாஸ் தாத்தாவைப்போல் குழந்தைகளுக்குப் பா¢சுப்பொருட்களைக் கொண்டுவந்து கொடுக்கும் கருவியாகப் பயன்படுகிறது.
ஈஸ்டர் முயலைப்போலவே ஈஸ்டர் முட்டைகளும் பேகன்மதத்தினா¢ன் நம்பிக்கைகளிலிருந்து வந்ததுதான். பாபிலோனியருக்கு முட்டை ஒரு புனிதமான அடையாளம். தேவலோகத்திலிருந்து ஒரு பொ¢ய முட்டை யூ•ப்ரெட்டிஸ் (Euphretes) நதியில் வந்து விழுந்ததாகவும் அதிலிருந்து தோன்றியவள்தான் இஷ்டார் (இயோஸ்டர்) தேவதை என்று அவர்களுடைய புராணக்கதை கூறுகிறது. எனவே முட்டை அவர்களுக்கு ஈஸ்டர் தேவதையை நினைவுபடுத்துவதாகும். மேலும் முட்டை மகப்பேற்றைக் குறிப்பதாகவும் அமைகிறது. அதிலிருந்து ஓர் புதிய உயிர் வெளிப்படுவதால் முட்டை உயிர்த்தெழுதலின் சின்னமாகவும் விள்ங்குகிறது. ஆரம்பத்தில் இயேசு சிலுவையில்சிந்திய இரத்தத்தின் ஞாபகமாக ஈஸ்டர் முட்டைகளுக்கு சிகப்பு வண்ணம் பூசினர். தற்காலத்தில் சிகப்பு, மஞ்சள், ஊதா, நீலம் போன்ற பல வண்ணங்களும் பூசப்படுகின்றன.
கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்திற்கு சம்பந்தமில்லாத ஏதோ ஒரு பேகன் மதத்தின் உயிர்த்தெழுதல் பண்டிகையை இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடவேண்டும் என்ற காரணத்திற்காகத் தங்கள் மதத்தின் பண்டிகையாக மாற்றி, அதுவும் பேகன் மதத்துப் பெண்தெய்வத்தின் பெயராலேயே ஈஸ்டர் என்று கொண்டாடிவருகின்றனர்.