Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் புலால் மறுத்தல் - விவாதம்.

Guru

Status: Offline
Posts: 7468
Date:
திருக்குறளில் புலால் மறுத்தல் - விவாதம்.
Permalink  
 
இதை வைத்து எனக்கும் நியாண்டர் செல்வனுக்கும் இடையே அவரது சுவரில் நடந்த ஒரு சுவாரஸ்யமான விவாதத்தைக் கீழே தொகுத்தளிக்கிறேன் (சுருக்கம் கருதி மிகக் கொஞ்சமாக எடிட் செய்திருக்கிறேன்).

இங்கே எனது கட்சி திருவள்ளுவர் புலால் மறுத்தலை துறவியர்க்கு மட்டுமல்ல, எல்லாருக்குமான பொது அறமாக வலியுறுத்துகிறார் என்பது. இது குறளின் கருத்தே அன்றி இந்துப் பண்பாட்டுச் சிந்தனையின் பொதுக்கருத்து அல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்துமதத்தின் சில நூல்களிலும் மரபுகளிலும் புலால் மறுப்பு தீவிரமாக வலியுறுத்தப் படுகிறது, வேறுசில நூல்களிலும் மரபுகளிலும் அது வலியுறுத்தப் படுவதில்லை. இதில், குறள் முதல்வகையைச் சார்ந்ததே என்பதில் ஐயமில்லை.

புலால் உணவை ஏற்பவர்களுக்கு அதற்கான நியாயங்களும் தர்க்கங்களும் இருக்கலாம். தவறில்லை. ஆனால், குறளாசிரியரின் மீதும் அவற்றை ஏற்றுவது சரியல்ல என்பதே நான் கூறவருவது.

நி.செல்வனின் மூலப் பதிவு இங்கே - http://goo.gl/pli9xH . இனி விவாதம்:

// நி.செ: 99% தமிழர்கள் மாமிசம் உண்பவர்கள் எனும் நிலையில், சங்கநூல்கள் அனைத்திலும் மாமிசம் போற்றபடும் நிலையில் வள்ளுவர் எப்படி இப்படி ஒரு கருத்தை சொல்லியிருக்கமுடியும்? //

இந்த வாதம் சரியானதல்ல. நீதிநூல்களை ஆக்கியளித்த பெரியோர்கள் தங்களது சமூகத்தின் சராசரிகள் அல்ல, சராசரிகளை விடப் பலமடங்கு உயர்ந்த அற உணர்வும், நீதியுணர்வும் சிந்தனைத் தெளிவும் கொண்டவர்கள். அவர்கள் நோக்கம், சமூகத்தில் நடப்பதை நியாயப் படுத்துவதல்ல, சமூகத்திற்கு உயர்ந்த விழுமியங்களைக் காண்பிப்பது. இதே தர்க்கத்தை வைத்து, 99% தமிழர்கள் கள்ளுண்டு, சூதாடி வாழ்ந்தவர்கள், 60 % தமிழர்கள் விலைமாதர் வீட்டுக்குப் போய் வாழ்ந்தவர்கள் என்னும் நிலையில், கள்ளுண்ணாமை, சூது, வரைவின் மகளிர் ஆகிய அதிகாரங்களில் உண்மையில் வள்ளுவர் கள்ளையும் சூதையும் பொருட்பெண்டிர்ச் சேர்தலையும் கண்டிக்கவில்லை, அதற்கெல்லாம் அர்த்தம் வேறு என்றும் வியாக்யானம் அளிக்கலாமே.... புலால் மறுத்தல் துறவறவியலில் உள்ளது, எனவே துறவிகளுக்கு மட்டும் தான் என்கிறீர்கள். ஆனால், மேற்சொன்ன அதிகாரங்கள் எல்லாம் பொருட்பாலில் தான் உள்ளன. அதற்கு என்ன சொல்வது? இல்லறத்தார் துறவறத்தார் இருவர்க்குமான நெறிகளும் அறத்தின்பாற்பட்டவையே. அவை அடிப்படையில் முரண்படுபவை அல்ல.

// நி.செ: கள்ளுண்னாமை பொருட்பாலில் வருகிறது. புலால் மறுத்தல் துறவறவியலில் வருகிறது. பெரும்பாலான மனிதர்கள் செய்த கள் எனும் தீமையை பொருட்பாலில் வைத்த வள்ளுவர், துறவிகளுக்கே உரித்தான புலால் மறுத்தலை துறவறவியலில் வைத்தார். கள் குடிப்பதும், சூதாடுவதும், வரைவின் மகளிரை சேர்தலும், இறைச்சி உண்பதும் ஒன்று என்ற மோசமான புரிதலில் இருப்பதால் தான் நீங்கள் இதை எல்லாம் ஒன்றாக கருதுகிறீர்கள். குற்றம் உங்கள் மேல் தான். வள்ளுவர் மேல் அல்ல //

குறள் எழுதப் பட்ட போது அதிகாரங்கள் இருந்தனவே ஒழிய அது இயல்களாகப் பகுக்கப் படவில்லை என்பதே அறிஞர்கள் ஒருமித்து ஏற்கும் கருத்து. இயல் அமைப்பு என்பது பரிமேலழகர் பொருளடைவு கருதித் தாமாகவே செய்து கொண்டது. அதிலும் கூட உரையாசிரியர்களிடையே வேறூபாடு உள்ளது. எனவே, இதை இங்கு வைத்தார் அதை அங்கு வைத்தார் என்பதெல்லாம் உங்கள் கருத்தை நியாயப் படுத்த நீங்கள் கூறும் தர்க்கமே ஒழிய, அது வள்ளுவரின் உள்ளக் கருத்து அல்ல.

// நி.செ: வள்ளுவரின் இதயம் கண்டவர் என பரிமேலகழகரை சொல்வார்கள். ஆக ஆயிரமாண்டுகளுக்கு மேலாக இருக்கும், அறிஞர்களிடம் எந்த விவாதமும் எழாத பகுப்பு முறையை தவறு என கூறித்தான் வள்ளுவர் சைவ நெறியை எல்லார்க்கும் வலியுறுத்தினார் என்ற முரண்பாடான கருத்தாக்கத்தை முன்வைக்க இயல்கிறது //

கள்ளாமை, வாய்மை, இன்னாசெய்யாமை, கொல்லாமை - இதெல்லாமும் துறவறவியலில் தான் புலால் மறுத்தலுக்குப் பிறகு வருகிறது. எனவே, இல்லறத்தான் திருடலாம், பொய்சொல்லலாம், கெட்டது செய்யலாம், கொலை செய்யலாம் என்று வள்ளுவர் கூறவருவதாக சொல்லி விடலாமே.

பரிமேலழகரின் மேதைமையை நான் மிகவும் மதிக்கிறேன். அவரது இயல்பகுப்பு சிறப்பானதே, ஆனால் அதன் பொருள் ஒவ்வொரு இயலும் முற்றிலும் துண்டிக்கப் பட்டு தனித்தனியானது என்றல்ல. அவற்றிற்கிடையே உள்ள உறவையும் ஒத்திசைவையும் அறிவது முக்கியம். கள்ளாமை, வாய்மை எல்லாம் ஏன் துறவறத்திற்குள் வருகிறது என்பதற்கு பரிமேலகழர் சுற்றி வளைத்து ஒரு நியாயம் சொல்கிறார், அது ஏற்கத்தக்கதாக இல்லை (உதா: இல்வாழ்வார்க்காயின் தமரொடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனங் கொள்ளினும் அமையும்; துறந்தார்க்காயின் அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம் ஆகலின், இது துறவறமாயிற்று).

// நி.செ: பரிமேலழகர் சரியாக சொல்லியிருக்கிறார் என்பதே என் கருத்து. ஆக புலால் மறுத்தலுக்கான ஆதாரங்கள் மிக.பலவீனமாக உள்ளன  சின்ன விவாதத்லேயே இது வெளிவருகிறது.. //

இல்லவே இல்லை. "பொய்மையும் வாய்மை இடத்த" "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" "செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்" "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்..." - இப்படி பெருவாரியாக நாம் நடைமுறையில் எப்போதும் பேசும் குறளெல்லாம் துறவறவியலுக்கு உள்ளே தான் உள்ளது. இந்த நெறிகள் எதுவும் இல்லறத்தார்களுக்கு வேண்டாமா என்ன? விஷயம் என்னவென்றால், பரிமேலழகர் இயல்பகுப்பை முதலில் செய்து விட்டு பிறகு அதை எப்பாடுபட்டாவது நிறுவுவதற்காக ஒரு பலகீனமான வாதத்தை துறவறவியலின் அவதாரிகையில் வைத்திருக்கிறார், வியாக்கியானக் காரர்கள் எப்போதும் செய்யும் விஷயம் இது. உண்மையில் உங்கள் வாதம் எவ்வளவு பலவீனமானது என்பதே இதனால் நிறுவப் படுகிறது.

// நி.செ: இல்லறத்தாருக்கும், துறவிக்கும் பொருந்தும் சில குறள்கள் உண்டு....துறவிக்க்கும் அரசனுக்கும் பொருந்தும் குறள்கள் கூட உண்டு. ஆனால் இல்லறவியலில் வாய்மை, பல்லுயிர் ஓம்புதல் எல்லாம் ஆப்ஷனலே..பொய் சொல்லாமல் காதலிக்க முடியாது..தன் பிள்ளை பட்டினி இருக்கையில் பல்லுயிர் ஓம்ப முடியாது....//

பொய் சொல்லாமல் காதலிக்க முடியாது என்பதால் இல்லறத்தானுக்கு வாய்மை என்பது கிடையாதா? அது optional ஆகி விடுமா? உங்கள் வாதம் நகைப்புக்குரியது. நமது இதிகாசங்களிலும், சிலப்பதிகாரம் போன்ற காவியங்களிலும் வரும் எல்லா நாயக, நாயகிகளும் இல்லறத்தார்களே. அவர்கள் இந்த மானுட தர்மங்களை எப்படி வாழ்ந்து காட்டினார்கள் என்பது தான் அவற்றின் மையக் கருத்தே. "தன் பிள்ளை பட்டினி இருக்கையில் பல்லுயிர் ஓம்ப முடியாது" என்பதெல்லாம் சாதாரண பொதுப்புத்தி. இதைத் தெருவில் போகும் பேதை கூட சொல்லுவானே? வள்ளுவர் எதற்கு? இதற்கு மேலே உள்ள அறத்தை, நெறியைச் சொல்லத் தான் குறள் எழுந்து வந்தது. அதுவே அதன் பெருமை. நீங்கள் அதை உங்கள் லெவலுக்கு இழுத்து இஷ்டத்துக்கு விளக்கம் அளிக்கிறீர்கள். இந்த அணுகுமுறையே தவறானது.

// நி.செ: தன் பிள்ளை பட்டினி கிடக்கையில் பல்லூயிர் ஓம்புவதை தாண்டி ஞானிகள் தான் வரமுடியும்....இல்லறத்தார் வரமுடியாது. ஞானிகளின் நெறியை சராசரி பொதுமக்களிடம் திணிக்க முயலகூடாது...நீங்கள் முதலில் அப்படி உங்கள் குழந்தை பட்டினி இருக்க, அதை கவனிக்காமல் பல்லுயிர் ஓம்புவீர்களா என யோசிக்கவும்..இந்த எளிய பொதுபுத்தி கூட இல்லாமல் குறளை எப்படி வள்ளுவர் எழுதியிருக்க முடியும்? //

"தன் பிள்ளை பட்டினி கிடக்கையில்" என்பதை "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்ற குறளோடு நீங்கள் சம்பந்தப் படுத்துவது சரியானதல்ல. அந்தக் குறள் அத்தகைய நிலைபற்றிக் கூறவில்லை. சாமான்ய தர்மம், ஆபத்தர்மம் என்று இரண்டு விதமான தர்மங்களை குறள் உட்பட நமது நீதிநூல்கள் எல்லாமே கூறுகின்றன. ஆபத்துத் தருணத்த்தின் போது சாமான்ய தர்மங்களைக் கூட கைவிடலாம் என்பது தான் நெறி. ஆனால், நீங்கள், ஆபத்துத் தருணத்தில் அதைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால், அது எப்போதுமே இல்லறத்தாறால் கடைப்பிடித்தற்குரியதல்ல என்கிறீர்கள். இது முற்றிலும் பிழையான திரிபுவாதம் எனறி வேறில்லை.

இறுதியாக, புலால்மறுத்தல் குறள்களுக்குள்ளேயே அது இல்லறத்தார்க்கும் உரியது தான் என்பதற்கான அகச்சான்றுகள் உண்டு.

1) தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

துறவியர்க்கான அடிப்படை இலக்கணம் அவர்கள் பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கையை ஏற்றோர் என்பது (வேத, பௌத்த, ஜைன மரபுகள் எல்லாவற்றிலும்). உணவை விலைக்கு வாங்குவது என்பது அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயம். இந்தக் குறளில் தின்பவர்கள் இருப்பதால் தானே கொன்று விற்கிறார்கள் என்று ஊனுணவின் பொருளியல் கோணத்தை வள்ளுவர் பேசுக்கிறார். இது முற்றிலுமாகவே இல்லறத்தார்க்குரிய அறிவுரை.

2) அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

இதில் வேள்வியால் கிடைக்கும் புண்ணியத்தை ஊன் தவிர்த்தலுடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார். பௌத்த, ஜைன மதங்கள் வேதவேள்விகளுக்கே எதிரானவை. வேத, வேதாந்த நெறிகளிலும், துறவு என்பது அக்னியை (வேள்வியை, கர்மங்களை) துறப்பதே. ஆனால், மிக அடிப்படையான கிருஹஸ்த தர்மமாக தெய்வங்களுக்கு செய்யப் படும் வேள்வியான தேவ யக்ஞம் கூறப்பட்டுள்ளது ('தென்புலத்தார் தெய்வம்...' என்ற குறளில் வள்ளுவரும் இல்லறத்தாருக்கான ஐந்து யக்ஞங்களை ஐம்புலத்தாறு என்று கூறுகிறார்). இங்கு இந்த ஒப்பீடை வள்ளுவர் செய்வதற்குக் காரணம், தெய்வங்களுக்கான வேள்வியும் ஊன் தவிர்த்து செய்யப் படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத் தான். எனவே இந்தக் குறள் இல்லறத்தாரை நோக்கியே கூறப்பட்டது என்பது வெள்ளிடை மலை.

(மீள்பதிவு. முதற்பதிவு September 4, 2016. நன்றி Facebook Memories).

முதற்பதிவின் மறுமொழிகளிலும் விவாதங்கள் நடந்தன. இங்கே வாசிக்கலாம் -https://www.facebook.com/jataayu.blore/posts/678992835587252

__________________

Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 
வள்ளூவத்துக்கு முரணானதா பேலியோ உணவுமுறை?

மாமிசம் என்ற ஒரே காரணத்துக்காக பேலியோ டயட் வள்ளுவர் நெறிக்கு புறம்பானது என கருதமுடியாது.

நம் அறநூல்களில் மாமிசத்துக்கான இடம் மிக உயர்ந்தது...வள்ளுவர் மாமிசத்தை நிராகரித்ததாக நான் கருதவில்லை. அவாவறுத்தல் எழுதிய அதே வள்ளுவர் தான் காமத்துப்பாலையும் எழுதினார். அதைவைத்து அவர் காமத்துக்கு எதிரானவர் என கூறுதல் பொருந்தாது. காமம், புலால் அனைத்தும் இல்லறத்தார்க்கு ஏற்றவையே. துறவு நிலையில் அவை ஏற்றவை அல்ல. துறவறவியலில் வரும் அவாவறுத்தலை இல்லறத்தார்க்கு பொருத்திபார்த்து நாம் "காமம் கொள்வது தவறு, வள்ளுவர் தமிழர்களை காம கொள்ளவேண்டாம்" என கட்டளை இட்டார் என நாம் சொல்லதுணிவதில்லை. ஆனால் அதே துறவறவியலில் வரும் புலான்மறுத்தலை மட்டும் எப்படி ஒட்டுமொத்த சமூகத்துக்கமான கட்டளையாக கருதி "வள்ளுவர் யாரையும் புலால் உண்ணகூடாது என்றார்?" என சொல்கிறோம்? 99% தமிழர்கள் மாமிசம் உண்பவர்கள் எனும் நிலையில், சங்கநூல்கள் அனைத்திலும் மாமிசம் போற்றபடும் நிலையில் வள்ளுவர் எப்படி இப்படி ஒரு கருத்தை சொல்லியிருக்கமுடியும்? ஆக புலால் மறுத்தல், அவ்வாவறுத்தல் எல்லாம் துறவிகளுக்கான அறம் என்பதை புரிந்துகொண்டால் குழப்பம் இல்லை. துறவிகளின் அறத்தை பொருமக்களுக்கு கூறுதல் முட்டாள்தனமானது. அதே வள்ளுவர் இன்னொரு குறளில் என்ன சொல்கிறார் என காண்க

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள் :
மற்றவரை அறநெறியில் ஒழுகச் செய்து தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரை விட வல்லமை நிறைந்த வாழ்க்கை ஆகும்.

ஆக துறவிகளை விட இல்வாழ்க்கை வாழ்வானை முக்கியமானவனாக வள்ளுவர் கருதுகிறார். அப்படியாகின் துறவிகள் ஏன்? "நீட்டலும் மழித்தலும் வேண்டாம்" எனவும் வள்ளுவர் இன்னொரு இடத்தில் கூறி துறவிகள் அவசியமில்லை என்கிறார். ஆனால் இல்வாழ்க்கை வெறுத்து சன்யாசம் பூணுகிறவர்கள் உண்டு. அப்படி யாரேனும் சன்யாசம் பூண்டால் அதற்கான அறத்தை பின்பற்றவேண்டும் என்பதற்கே துறவறவியல் எழுதியது. துறவி பெண்ணாசை கொன்டு அலைந்தால் நித்யானந்தா ஆகிவிடுவான். அதனால் தான் அவாவறுத்தல் எழுதினார். துறவி சிக்கன் பிரியாணியும், மட்டன் சுக்காவும் வெளுத்து கட்டினால் அதன்பின் எலியை பிடிக்க பூனை வாங்கி சம்சாரி ஆன கதைதான். அதனால் தான் புலால் மறுத்தல்.

ஆக குறள் மறுவாசிப்பு செய்யபடவேண்டும்....99% மக்களின் உணவு குரள்நெறிக்கு முரணானது என கூறுவது எந்த அடிப்படையில் என்பது விளக்கபடவேண்டும். வள்ளுவரை நேசிக்கும் பலரும் புலால் உண்கையில் குற்றௌனர்வு கொள்வது தவிர்க்கபடவேண்டும். என் பல பதிவுகளில் வள்ளுவரை போற்றுவேன், புலாலையும் பிறபதிவுகளில் போற்றுவேன். அங்கெல்லாம் வந்து "பார் வள்ளுவரே புலால் மறுப்பு சொல்லியிருக்கிறார்" என சிலர் ரொம்ப ஸ்மார்ட் ஆக பின்னூட்டம் போடுவார்கள். அவர்களுக்கு வள்ளுவமும் தெரியாது, புலால் உனவின் மேன்மையும் தெரியாது என்றே புரிந்துகொள்கிறேன்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள்.

இக்குறளில் உள்ள கருத்து "உன் உடல் பெருகும் அளவு ஊன் உண்ணாதே" என்பதே. இதுவும் "ஊனே உண்னாதே" என்பதும் நிச்சயம் மாறுபட்ட கருத்தாக்கங்களே. வள்ளுவர் சொன்னது முன்னது என்கையில் பின்னதாக நாம் ஏன் இக்குறளை திரித்து பொருள் கூறவேண்டும்?

என்னளவில் வள்ளுவன் என் ஒரு கண், இறைச்சியுணவு மறுகண். இரண்டுக்கும் எந்த முரண்பாடும் நான் காணவில்லை. காட்ட முயல்பவர்களை நாம் கேள்விக்குள்ளாக்கவேண்டும்.

__________________

Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 
Jataayu B'luru // 99% தமிழர்கள் மாமிசம் உண்பவர்கள் எனும் நிலையில், சங்கநூல்கள் அனைத்திலும் மாமிசம் போற்றபடும் நிலையில் வள்ளுவர் எப்படி இப்படி ஒரு கருத்தை சொல்லியிருக்கமுடியும்? // இந்த வாதம் முழுக்கவே அபத்தமானது. நீதிநூல்களை ஆக்கியளித்த பெரியோர்கள் தங்களது சமூகத்தின் சராசரிகள் அல்ல, சராசரிகளை விடப் பலமடங்கு உயர்ந்த அற உணர்வும், நீதியுணர்வும் சிந்தனைத் தெளிவும் கொண்டவர்கள். அவர்கள் நோக்கம், சமூகத்தில் நடப்பதை நியாயப் படுத்துவதல்ல, சமூகத்திற்கு உயர்ந்த விழுமியங்களைக் காண்பிப்பது. இதே தர்க்கத்தை வைத்து, 99% தமிழர்கள் கள்ளுண்டு, சூதாடி வாழ்ந்தவர்கள், 60 % தமிழர்கள் விலைமாதர் வீட்டுக்குப் போய் வாழ்ந்தவர்கள் என்னும் நிலையில், கள்ளுண்ணாமை, சூது, வரைவின் மகளிர் ஆகிய அதிகாரங்களில் உண்மையில் வள்ளுவர் கள்ளையும் சூதையும் பொருட்பெண்டிர்ச் சேர்தலையும் கண்டிக்கவில்லை, அதற்கெல்லாம் அர்த்தம் வேறு என்றும் வியாக்யானம் அளிக்கலாமே.... புலால் மறுத்தல் துறவறவியலில் உள்ளது, எனவே துறவிகளுக்கு மட்டும் தான் என்கிறீர்கள். ஆனால், மேற்சொன்ன அதிகாரங்கள் எல்லாம் பொருட்பாலில் தான் உள்ளன. அதற்கு என்ன சொல்வது? இல்லறத்தார் துறவறத்தார் இருவர்க்குமான நெறிகளும் அறத்தின்பாற்பட்டவையே. அவை அடிப்படையில் முரண்படுபவை அல்ல.

Neander Selvan கள்ளுண்னாமை பொருட்பாலில் வருகிறது

புலால் மறுத்தல் துறவறவியலில் வருகிறது

பெரும்பாலான மனிதர்கள் செய்த கள் எனும் தீமையை பொருட்பாலில் வைத்த வள்ளுவர், துறவிகளுக்கே உரித்தான புலால் மறுத்தலை துறவறவியலில் வைத்தார்

கள் குடிப்பதும், சூதாடுவதும், வரைவின் மகளிரை சேர்தலும், இறைச்சி உண்பதும் ஒன்று என்ற மோசமான புரிதலில் இருப்பதால் தான் நீங்கள் இதை எல்லாம் ஒன்றாக கருதுகிறீர்கள். குற்றம் உங்கள் மேல் தான். வள்ளுவர் மேல் அல்ல

Jataayu B'luru குறள் எழுதப் பட்ட போது அதிகாரங்கள் இருந்தனவே ஒழிய அது இயல்களாகப் பகுக்கப் படவில்லை என்பதே அறிஞர்கள் ஒருமித்து ஏற்கும் கருத்து. இயல் அமைப்பு என்பது பரிமேலழகர் பொருளடைவு கருதித் தாமாகவே செய்து கொண்டது. அதிலும் கூட உரையாசிரியர்களிடையே வேறூபாடு உள்ளது. எனவே, இதை இங்கு வைத்தார் அதை அங்கு வைத்தார் என்பதெல்லாம் உங்கள் கருத்தை நியாயப் படுத்த நீங்கள் கூறும் தர்க்கமே ஒழிய, அது வள்ளுவரின் உள்ளக் கருத்து அல்ல.

Neander Selvan வள்ளுவரின் இதயம் கண்டவர் என பரிமேலகழகரை சொல்வார்கள். ஆக ஆயிரமாண்டுகளுக்கு மேலாக இருக்கும், அறிஞர்களிடம் எந்த விவாதமும் எழாத பகுப்பு முறையை தவறு என கூறித்தான் வள்ளுவர் சைவ நெறியை எல்லார்க்கும் வலியுறுத்தினார் என்ற முரண்பாடான கருத்தாக்கத்தை முன்வைக்க இயல்கிறது 

__________________

Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 
Jataayu B'luru அப்படி சொல்ல வரவில்லை, திருக்குறள் புலால் மறுத்தலை வலியுறுத்தும் தன்மையிலான அறநூல் என்கிறேன். // இந்துமதத்தின் சில நூல்களிலும் மரபுகளிலும் புலால் மறுப்பு தீவிரமாக வலியுறுத்தப் படுகிறது, வேறுசில நூல்களிலும் மரபுகளிலும் அது வலியுறுத்தப் படுவதில்லை. இதில், குறள் முதல்வகையைச் சார்ந்ததே என்பதில் ஐயமில்லை. // - எனது சுவரில் உள்ள பதிவில் எழுதியது.Jataayu B'luru கள்ளாமை, வாய்மை, இன்னாசெய்யாமை, கொல்லாமை - இதெல்லாமும் துறவறவியலில் தான் புலால் மறுத்தலுக்குப் பிறகு வருகிறது. எனவே, இல்லறத்தான் திருடலாம், பொய்சொல்லலாம், கெட்டது செய்யலாம், கொலை செய்யலாம் என்று வள்ளுவர் கூறவருவதாக சொல்லி விடலாமே.. :)

Neander Selvan ஆநிரை கவர்தல் - களவு

இன்னா செய்யாமை- துறவியர் அறம்....மக்கள் திருப்பி அடிக்கணும்

வாய்மை- ஒற்றாடலுக்கு ஒத்து வராது.

கொல்லாமை- "பைங்கூழ் களைகட்டலொடு நேர்"உக்கு முரண்

இவை எல்லாம் துறவியர் அறமே

Jataayu B'luru பரிமேலழகரின் மேதைமையை நான் மிகவும் மதிக்கிறேன். அவரது இயல்பகுப்பு சிறப்பானதே, ஆனால் அதன் பொருள் ஒவ்வொரு இயலும் முற்றிலும் துண்டிக்கப் பட்டு தனித்தனியானது என்றல்ல. அவற்றிற்கிடையே உள்ள உறவையும் ஒத்திசைவையும் அறிவது முக்கியம். கள்ளாமை, வாய்மை எல்லாம் ஏன் துறவறத்திற்குள் வருகிறது என்பதற்கு பரிமேலகழர் சுற்றி வளைத்து ஒரு நியாயம் சொல்கிறார், அது ஏற்கத்தக்கதாக இல்லை (உதா: இல்வாழ்வார்க்காயின் வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருளை அங்ஙனம் கொள்ளினும் அமையும்.. துறந்தார்க்காயின் அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம்...).

Neander Selvan கள்ளாமை
பரிமேலழகர் உரை தொகு
அதிகார முன்னுரை

அஃதாவது, பிறர் உடைமையாய் இருப்ப தியாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக்கருதாமை. கருதுதலும் செயதலோடு ஒத்தலின், 'கள்ளாமை' என்றார்.இல்வாழ்வார்க்காயின் தமரொடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனங் கொள்ளினும் அமையும்; துறந்தார்க்காயின் அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம் ஆகலின், இது துறவறமாயிற்று.

Neander Selvan பரிமேலழகர் சரியாக ஒ
சொல்லியிருக்கிறார் என்பதே என் கருத்து..ஆக புலால் மறுத்தலுக்கான ஆதாரங்கள் மிக.பலவீனமாக உள்ளன  சின்ன விவாதத்லேயே இது வெளிவருகிறது

Jataayu B'luru இல்லவே இல்லை. "பொய்மையும் வாய்மை இடத்த" "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" "செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்" "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்..." - இப்படி பெருவாரியாக நாம் நடைமுறையில் எப்போதும் பேசும் குறளெல்லாம் துறவறவியலுக்கு உள்ளே தான் உள்ளது. இந்த நெறிகள் எதுவும் இல்லறத்தார்களுக்கு வேண்டாமா என்ன? விஷயம் என்னவென்றால், பரிமேலழகர் இயல்பகுப்பை முதலில் செய்து விட்டு பிறகு அதை எப்பாடுபட்டாவது நிறுவுவதற்காக ஒரு பலகீனமான வாதத்தை துறவறவியலின் அவதாரிகையில் வைத்திருக்கிறார், வியாக்கியானக் காரர்கள் எப்போதும் செய்யும் விஷயம் இது. உண்மையில் உங்கள் வாதம் எவ்வளவு பலவீனமானது என்பதே இதனால் நிறுவப் படுகிறது.

Neander Selvan இல்லறத்தாருக்கும், துறவிக்கும் பொருந்தும் சில குறள்கள் உண்டு....துறவிக்க்கும் அரசனுக்கும் பொருந்தும் குறள்கள் கூட உண்டு. ஆனால் இல்லறவியலில் வாய்மை, பல்லுயிர் ஓம்புதல் எல்லாம் ஆப்ஷனலே..பொய் சொல்லாமல் காதலிக்க முடியாது..தன் பிள்ளை பட்டினி இருக்கையில் பல்லுயிர் ஓம்ப முடியாது....

Jataayu B'luru பொய் சொல்லாமல் காதலிக்க முடியாது என்பதால் இல்லறத்தானுக்கு வாய்மை என்பது கிடையாதா? அது optional ஆகி விடுமா? உங்கள் வாதம் நகைப்புக்குரியது. நமது இதிகாசங்களிலும், சிலப்பதிகாரம் போன்ற காவியங்களிலும் வரும் எல்லா நாயக, நாயகிகளும் இல்லறத்தார்களே. அவர்கள் இந்த மானுட தர்மங்களை எப்படி வாழ்ந்து காட்டினார்கள் என்பது தான் அவற்றின் மையக் கருத்தே. "தன் பிள்ளை பட்டினி இருக்கையில் பல்லுயிர் ஓம்ப முடியாது" என்பதெல்லாம் சாதாரண பொதுப்புத்தி. இதைத் தெருவில் போகும் பேதை கூட சொல்லுவானே? வள்ளுவர் எதற்கு? இதற்கு மேலே உள்ள அறத்தை, நெறியைச் சொல்லத் தான் குறள் எழுந்து வந்தது. அதுவே அதன் பெருமை. நீங்கள் அதை உங்கள் லெவலுக்கு இழுத்து இஷ்டத்துக்கு விளக்கம் அளிக்கிறீர்கள். இந்த அணுகுமுறையே தவறானது.

Hari Krishnan Jataayu B'luru அதிகார வைப்புமுறையைச் செய்தவர்கள் உரையாசிரியர்கள். மணக்குடவரைப் பெரும்பாலும் பின்பற்றும் பரிமேலழகர் சில இடங்களில் வேறுபடுகிறார். வைப்புமுறையைத் தூக்கி வள்ளுவர் தலையில் வைப்பது நல்ல காமெடி.

Neander Selvan தன் பிள்ளை பட்டினி கிடக்கையில் பல்லூயிர் ஓம்புவதை தாண்டி ஞானிகள் தான் வரமுடியும்....இல்லறத்தார் வரமுடியாது. ஞானிகளின் நெறியை சராசரி பொதுமக்களிடம் திணிக்க முயலகூடாது...நீங்கள் முதலில் அப்படி உங்கள் குழந்தை பட்டினி இருக்க, அதை கவனிக்காமல் பல்லுயிர் ஓம்புவீர்களா என யோசிக்கவும்..இந்த எளிய பொதுபுத்தி கூட இல்லாமல் குறளை எப்படி வள்ளுவர் எழுதியிருக்க முடியும்?

Neander Selvan வைப்புமுறை சரியில்லையெனில் எந்த குறள் யாருக்கானது என்பதில் பெருத்த குழப்பம் வரும். உதா: புணர்ச்சி மகிழ்தல் துறவிக்களுக்கா இல்லையா என்பதை வைப்புமுறயின்றி எப்பட்இ அறிவது?

__________________

Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 
Hari Krishnan Neander Selvan ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. 

அமைச்சியலில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அமைச்சர் பெருமக்கள் மட்டுமே கடைப்பிடிக்கவேண்டிய நெறி. 

அட அந்த இன்னூரு வாழப்பழந்தாங்கணே இது

Neander Selvan பெற்றதாய் பட்டினியா இருந்தாலும் லஞ்சம் வாங்காதே என மந்திரிகளிடம் சொல்கிறார்...பொதுமக்களுக்கு அத்தனை ஸ்ட்ரிக்டா சொல்லலை..."லஞ்சம் தவிர்" என அரசு அலுவலகத்தில் மட்டும் எழுதியிருபது போல் தான்

Hari Krishnan சான்றோர் பழிக்கும் வினைன்னா லிமிடட் டு லஞ்சம் வாங்குதலா? ஸ்ட்ரிக்டா சொல்லப்படாத பொதுமக்கள் வாங்கலாம், பொதுமக்களின் பிரதிநிதி வாங்கக்கூடாதா? லஞ்சம் தவிர் அப்படின்னு அமைச்சியல்லதான சொல்லியிருக்கு? அப்ப it is limited to அமைச்சர்கள்னு அர்த்தம். அது ஏன் அரசு அலுவலகத்தில் "லஞ்சம் தவிர்"னு வாசகம்? அவங்கள்ளாம் அமைச்ர்களா?

Neander Selvan சான்றோர் பழிக்கும் வினை (மந்திரிக்ளுக்கானது): லஞ்சம், அதிகவரி விதித்தல், மன்னனுக்கு துரோகம் செய்தல்நு பல இருக்கே?

லஞ்சம் எல்லா இடத்திலும் இருந்தாலும் பொதுமக்கள் பெற்றதாய் பட்டினி இருந்தாள், ரொட்டி திருடினேன் என்றால் அதை புரிந்து கொள்ள முடியும்... மந்திரி அதை கூட காரணமாக சொல்லி லஞ்சம் வாங்ககூடாது என்கிறார்

Jataayu B'luru "தன் பிள்ளை பட்டினி கிடக்கையில்" என்பதை "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்ற குறளோடு நீங்கள் மீண்டும் மீண்டும் சம்பந்தப் படுத்துவதே அபத்தமானது, அந்தக் குறள் அத்தகைய நிலைபற்றீக் கூறவில்லை. சாமான்ய தர்மம், ஆபத்தர்மம் என்று இரண்டு விதமான தர்மங்கள குறள் உட்பட நமது நீதிநூல்கள் எல்லாமே கூறூகின்றன. ஆபத்துத் தருணத்த்தின் போது சாமான்ய தர்மங்களைக் கூட கைவிடலாம் என்பது தான் நெறி. ஆனால், நீங்கள், ஆபத்துத் தருணத்தில் அதைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால், எது எப்போதுமே இல்லறத்தாறால் கடைப்பிடித்தற்குரியதல்ல என்கிறீர்கள் Neander Selvan இது முற்றிலும் பிழையான திரிபுவாதம் எனறி வேறில்லை. Hari Krishnan Ananda Ganeshஜோதிஜி திருப்பூர்

Jataayu B'luru இறுதியாக, புலால்மறுத்தல் குறள்களுக்குள்ளேயே அது இல்லறத்தார்க்கு உரியது என்பதற்கான அகச்சான்றுகள் உண்டு. யாரேனும் அவற்றை கூறுவார்கள் என்று பார்த்தேன். இதுவரை கூறவில்லை என்பதால், நானே விளக்கி விடுகிறேன். 

1) தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 

துறவியர்க்கான அடிப்படை இலக்கணம் அவர்கள் பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கையை ஏற்றோர் என்பது (வேத, பௌத்த, ஜைன மரபுகள் எல்லாவற்றிலும்). உணவை விலைக்கு வாங்குவது என்பது அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயம். இந்தக் குறளில் தின்பவர்கள் இருப்பதால் தானே கொன்று விற்கிறார்கள் என்று ஊனுணவின் பொருளியல் கோணத்தை வள்ளூவர் பேசுக்கிறார். இது முற்றிலுமாகவே இல்லறத்தார்க்குரிய அறிவுரை. 

2) அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 

இதில் வேள்வியால் கிடைக்கும் புண்ணியத்தை ஊன் தவிர்த்தலுடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார். பௌத்தம, ஜைன மதங்கள் வேதவேள்விகளுக்கே எதிரானவை. வேத, வேதாந்த நெறிகளிலும், துறவு என்பது அக்னியைத் (வேள்வியை, கர்மங்களை) துறப்பதே. ஆனால், மிக அடிப்படையான கிருஹஸ்த தர்மமாக தெய்வங்களுக்கு செய்யப் படும் வேள்வியான தேவ யக்ஞம் கூறப்பட்டுள்ளது (தென்புலத்தார் தெய்வம்... என்ற குறளில் வள்ளுவரும் இல்லறத்தாருக்கான ஐந்து யக்ஞங்களை ஐம்புலத்தாறு என்று கூறுகிறார்). இங்கு இந்த ஒப்பீடை வள்ளுவர் செய்வதற்குக் காரணம், தெய்வங்களுக்கான வேள்வியும் ஊன் தவிர்த்து இல்லறத்தாரால் செய்யப் படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத் தான். இந்தக் குறள் இல்லறத்தாரை நோக்கியே கூறப்பட்டது என்பது வெள்ளிடை மலை. 

Neander Selvan //தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.//

ஒரு உயிரை கொன்று உண்பது குற்றமே. ஆயின் இல்வாழ்க்கையில் இப்படிப்பட்ட சிறுகுற்றங்களை தவிர்க்க இயலாது. துளியும் குற்றமின்றி வாழ்வது ஞானிகளுக்கே சாத்தியம். அதனால் தான் வாய்மை, கள்ளாமை, புலால் மறுத்தலை எல்லாம் பொதுமக்களுக்கான அறமாக ஆக்கவில்லை.

100% வாய்மையுடன் வாழ்வது சாத்தியமா? நீங்கள் வாழ்கிறீர்களா? நான் வாழ்கிறேனா? முடியாது...ஞானிகளால் மட்டுமே முடியும். அதனால் இவை அவர்களுக்கான அறம் மாத்திரமே.

அதனால் தான் படிமநிலையில் "புலால் மறுத்தல், வாய்மை" போன்ற அறங்கள் வலியுறுத்தபட்டன. துவக்கநிலையில் (பிரும்மசர்யம், கிரகஸ்தம்) புலால் உண்ணலாம், காமம் முதலான ஆசைகளை கொண்டிருக்கலாம்

அதன்பின் வெள்ளிகிழமை, செவ்வாய்கிழமை விரதம், ஏகாதசி மாதிரி விரதம் இருந்து அந்நாட்களில் புலால் மறுத்து, சில நாட்களில் மவுனவிரதம் இருந்து மக்கள் வாய்மை, புலால் மறுத்தலை நோக்கி மெதுவாக நகர்கிறர்கள்.

இறுதியில் பிரம்மசர்யம், கிருகஸ்தம் ஆகிய நிலைகளை தான்டி வானபிரஸ்த நிலையில் காடுகளுக்கு சென்று துறவுபூண்டு அந்நிலையில் அவாவறுத்தல், வாய்மை, புலால் மறுத்தல் ஆகியவற்றை கைகொள்லலாம்.

இப்படி படிமநிலையில் தான் புலால்மறுத்தல் துறவு நிலையில் வலியுறுத்தபடுகிறதே ஒழிய, கிருகஸ்தர்களுக்கு காமம், புலால் ஆகிய sins (pleasures) அனுமதிக்கபட்டதே

Jataayu B'luru புலால் உணவும் மதுநுகர்வும் இல்லறத்தாருக்கு "அனுமதிக்கப் பட்டதே' என்பது இந்துமதத்தின் பொதுக்கருத்து. அதைத் தான் நீங்கள் மேலே கூறுகிறீர்கள். ஆனால், திருக்குறள் என்ற நூலின் கருத்தல்ல. திருக்குறள் கூறும் அறப்பார்வை முழுமுற்றாக மற்ற நீதிநூல்களுனுடனும் தர்ம சாஸ்திரங்களுடனும் பொருந்தியிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

Neander Selvan //அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 
//

"அன்னசத்திரம் ஆயிரம்நாட்டல்
ஆலயம் பதினாறாயிரம் நாட்டல் 
அன்னயாவினும் புண்ணியம் கோடி 
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

என்றால் அன்னசத்திரம் கட்டகூடாது, ஆலயம் நாட்டகூடாது என்றா பொருள்?

இது புலால் வலியுறுத்தலை பாராட்டும் உயர்வு நவிற்சியணி என்பதை அறிக

__________________

Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 
Neander Selvan Jataayu B'luru //ஆனால், திருக்குறள் என்ற நூலின் கருத்தல்ல. திருக்குறள் கூறும் அறப்பார்வை முழுமுற்றாக மற்ற நீதிநூல்களுனுடனும் தர்ம சாஸ்திரங்களுடனும் பொருந்தியிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.//

வள்ளுவர் அறநூல் வழி நில்லாது சொந்தமாக அறங்களை எழுதினார் என்பது தவறான கருத்து. அதற்கான ஆதாரங்களை நீங்கள் தரவில்லை

Jataayu B'luru அப்படி சொல்ல வரவில்லை, திருக்குறள் புலால் மறுத்தலை வலியுறுத்தும் தன்மையிலான அறநூல் என்கிறேன். // இந்துமதத்தின் சில நூல்களிலும் மரபுகளிலும் புலால் மறுப்பு தீவிரமாக வலியுறுத்தப் படுகிறது, வேறுசில நூல்களிலும் மரபுகளிலும் அது வலியுறுத்தப் படுவதில்லை. இதில், குறள் முதல்வகையைச் சார்ந்ததே என்பதில் ஐயமில்லை. // - எனது சுவரில் உள்ள பதிவில் எழுதியது.

Neander Selvan //அப்படி சொல்ல வரவில்லை, திருக்குறள் புலால் மறுத்தலை வலியுறுத்தும் தன்மையிலான அறநூல் என்கிறேன்.//

புலால் மறுத்தலை பொதுமக்களுக்கு தருமசாத்திரங்கள் மறுக்காதநிலையில் வள்ளுவர் மட்டும் மறுத்தார் என்பது பொருத்தமற்ற வாதம்

Ananda Ganesh தர்ம சாத்திரங்கள் மறுக்கவில்லை. ஆயுர்வேதம் மறுக்கவில்லை. ஆனால், திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட அனைத்து நீதிநூல்களும் புலாலை எதிர்த்தே கருத்தை வெளியிட்டு உள்ளன.

Mariappan Sarawanan பரிமேலழகர் உரை: 
[அஃதாவது, ஊன் உண்டலை ஒழிதல். கொலைப்பாவத்தைப் பின்னும் 
உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் 

காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. 
ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது.)
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் 
பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் -
எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி 
இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் 
அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.).

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard