Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாயிரம் (திருக்குறள்)


Guru

Status: Offline
Posts: 7602
Date:
பாயிரம் (திருக்குறள்)
Permalink  
 


இறை, மழை, நீத்தார், அறம் என்னும் நான்கினைக் கூறுவது திருக்குறள் பாயிரம். இவற்றைத் -தெரியாமல் ஆட்டிப் படைக்கும் இறை, -தெரிந்து ஆட்டிப் படைக்கும் மழை, -வாழ்ந்து காட்டும் நீத்தார், -வாழவேண்டிய அறநெறி என்று பாகுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாயிரம் என்னும் சொல் சங்க நூல்களில் இல்லை.பழமொழி, பெருங்கதை ஆகிய நூல்களில் காணப்படுபவையே காலத்தால் முந்தியவை. தொல்காப்பியத்தில் பனம்பாரனார் பாடலைப் பாயிரம் என்கிறோம். திருக்குறள் தொகுப்பைப் பிரித்துக் காட்டும் திருவள்ளுவ மாலை முதல் 4 அதிகாரங்களைப் பாயிரம் என்று குறிப்பிடுகிறது.நன்னூல் இலக்கணத்தில் பாயிரம் விரிவாகப் பேசப்படுகிறது. நூலின் தொகுப்பு முன்னுரையைப் பாயிரம் என்கிறோம்.

http://tamiliyam.blogspot.com/2009/01/blog-post_3054.html



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

திருக்குறள் பாயிரம் என்று கூறப்படுவது, திருக்குறளிலுள்ள 133 அதிகாரங்களில் முதல் நான்கு அதிகாரங்கள். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்று முறையே அவற்றிற்கு அதிகாரப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

திருக்குறள் கடவுள் என்னும் சொல்லை எங்கும் கையாளவில்லை. எனவே இச்சொல்லோடு பெயர் சூட்டுதல் தகாது எனக் கருதும் அறிஞர்கள் முதல் 10 குறள்களில் பயின்றுவரும் ‘இறை’. ‘வணங்குதல்’ என்னும் சொற்களைக் கொண்டு ‘இறைவணக்கம்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

அதிகாரத் தலைப்புப் பெயர்கள் திருக்குறளின் ஆசிரியரான திருவள்ளுவரால் சூட்டப்பட்டவை அன்று என்பதை திருக்குறள் பழைய உரைகள் சூட்டியுள்ள பெயர்களால் அறியலாம்.

  1. மனக்கண்ணில் வரும் இறைவன், வள்ளுவர் பார்வை முதல் அதிகாரம்
  2. மன்னுயிரைக் காக்கும் மழையிறைவன் இரண்டாவது அதிகாரம்.
  3. தனிமனிதனை வழிநடத்தும் நீத்தார் மூன்றாவது அதிகாரம்.
  4. ஒட்டுமொத்த மாந்தரை வாழச்செய்யும் அறநெறி நான்காவது அதிகாரம்

இவை நான்கும் ஆற்றொழுக்கு என்னும் அறமாகப் பாய்ந்து. வாழ்க்கை என்னும் பொருளை இன்புறச் செய்யும் என்று கூறுவது திருக்குறள்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 திருக்குறள் நூல் குறிப்புகள்:

திருக்குறள்

  • திருக்குறள் உலகப் புகழ்பெற்ற இலக்கியமாகும்.
  • திருக்குறள் உலகப் பொதுமறை, பொய்யாமொழி, முப்பால், தெய்வநூல், உத்தரவேதம், வாயுறைவாழ்த்து, வான்மறை, தமிழ் மறை, என்றும் அழைக்கப்படுகிறது.
  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  • திருக்குறளில் 133 அதிகாரங்களும் , அதிகாரத்திற்கு பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் 1330 பாடல்கள் உள்ளன.
  • திருக்குறளில் உள்ள பாடல்கள் அனைத்தும் குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சார்ந்தவை.அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
  • திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் வருகிறது.

நூற் பிரிவுகள்:

  • திருக்குறள் மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • அறத்துப்பால் :  38 அதிகாரங்கள்  , 4 இயல்கள்
  • பொருட்பால்    :  70 அதிகாரங்கள்  , 3 இயல்கள்
  • இன்பத்துப்பால் :  25 அதிகாரங்கள்  , 2 இயல்கள்

ஆசிரியர் குறிப்பு:

திருவள்ளுவர்

ஆசிரியர் : திருவள்ளுவர்

    • வாழ்ந்த காலம்: கி.மு 31
    • திருவள்ளுவர் ஆண்டு: கிறிஸ்துவ ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் வரும் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு ஆகும்.

திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்: தேவர்,பொய்யாமொழிப் புலவர்,பொய்யில் புலவர்,மாதானுபங்கி,பெருநாவலர்,செந்நாப்போதர்,தெய்வப்புலவர்,நாயனார்,முதற்பாவலர்

 

திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை:

அறத்துப்பால் (1-38)

 

  • பாயிரம்
1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்
  • இல்லறவியல்
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவுநிலைமை
13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறன் இல் விழையாமை
16. பொறை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்
  • துறவறவியல்
25. அருள் உடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை :
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
  • ஊழியல்
38. ஊழ்
பொருட்பால் (39-108)

 

  • அரசியல்
39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றம் கடிதல்
45. பெரியாரைத் துணைக்கோடல்
46. சிற்றினம் சேராமை
47. தெரிந்து செயல்வகை
48. வலி அறிதல்
49. காலம் அறிதல்
50. இடன் அறிதல்
51. தெரிந்து தெளிதல்
52. தெரிந்து வினையாடல்
53. சுற்றம் தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56. கொடுங்கோன்மை
57. வெருவந்த செய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கம் உடைமை
61. மடி இன்மை
62. ஆள்வினை உடைமை
63. இடுக்கண் அழியாமை
  • அமைச்சியல்
64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத்தூய்மை
67. வினைத்திட்பம்
68. வினை செயல்வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
71. குறிப்பு அறிதல்
72. அவை அறிதல்
73. அவை அஞ்சாமை
  • அரணியல்
74. நாடு
75. அரண்
  • கூழியல்
76. பொருள் செயல்வகை
  • படையியல்
77. படைமாட்சி
78. படைச்செருக்கு
  • நட்பியல்
79. நட்பு
80. நட்பு ஆராய்தல்
81. பழைமை
82. தீ நட்பு
83. கூடா நட்பு
84. பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகை மாட்சி
88. பகைத்திறம் தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை
91. பெண்வழிச் சேறல்
92. வரைவில் மகளிர்
93. கள் உண்ணாமை
94. சூது
95. மருந்து
  • குடியியல்
96. குடிமை
97. மானம்
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாண் உடைமை
103. குடி செயல்வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை

 

காமத்துப்பால் (109-133)

 

  • களவியல்
109. தகையணங்குறுத்தல்
110. குறிப்பறிதல்
111. புணர்ச்சி மகிழ்தல்
112. நலம் புனைந்து உரைத்தல்
113. காதற் சிறப்பு உரைத்தல்
114. நாணுத் துறவு உரைத்தல்
115. அலர் அறிவுறுத்தல்
  • கற்பியல்
116. பிரிவாற்றாமை
117. படர் மெலிந்து இரங்கல்
118. கண் விதுப்பு அழிதல்
119. பசப்பு உறு பருவரல்
120. தனிப்படர் மிகுதி
121. நினைந்தவர் புலம்பல்
122. கனவு நிலை உரைத்தல்
123. பொழுது கண்டு இரங்கல்
124. உறுப்பு நலன் அழிதல்
125. நெஞ்சொடு கிளத்தல்
126. நிறை அழிதல்
127. அவர் வயின் விதும்பல்
128. குறிப்பு அறிவுறுத்தல்
129. புணர்ச்சி விதும்பல்
130. நெஞ்சொடு புலத்தல்
131. புலவி
132. புலவி நுணுக்கம்
133. ஊடல் உவகை

சுவையான தகவல்கள்:

  • திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
  • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
  • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
  • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
  • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி
  • திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது “பற்று” – ஆறு முறை.
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
  • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் – என்பது கடவுளை குறிக்கிறது)
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
  • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
  • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
  • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உலக மொழிகளில் திருக்குறள்:

ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730 இல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார்.
திருக்குறள் கருத்துக்களை (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே.

மொழிபெயர்ப்புகள்:

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மொழிகள்:

டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு,செக்,மொழி, அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், செருமன்,நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆசிய மொழிகள்:

சீனம்,பருமிய மொழி,பிஜியன், இந்தோனேசிய மொழி, கொரிய மொழி,சிங்களம், யப்பானியம்,மலாய்,உருது,அரபி போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகள்:

குஜராத்தி, வங்காள மொழி,இந்தி, கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, கன்னடம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, மணிப்புரியம்,தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

திருக்குறள்
 

தமிழில் உள்ள அறநூல்களுள் காலத்தால் முந்தியதும் தன்மையால் தலைசிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பா, குறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.

 

a04113vl.jpg

 

 

  • நூல் அமைப்பு
     

 

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும்பிரிவிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை இயல்கள் எனப்படும். இயல்களின் உட்பிரிவுகளாக அதிகாரங்கள் அமைகின்றன. ஒவ்வோர் அதிகாரத்தி்லும் பத்துப்பத்துக் குறட்பாக்கள் இடம் பெறுகின்றன. இதில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன. மூன்று அதிகாரங்களிலும் அடங்கும் இயல்கள், அவற்றி்ற்குரிய அதிகாரங்கள் பற்றிய பட்டியலைக் கீழே காணலாம்.

 

பால்கள்இயல்கள்அதிகாரங்கள்
அறத்துப்பால்பாயிர இயல்
இல்லற இயல்
துறவற இயல்
ஊழ் இயல்

1 முதல் 4 = 4
5 முதல் 24 = 20
25 முதல் 37= 13
38 = 1
-----
38
-----

பொருட்பால்அரசியல்
அங்க இயல்
ஒழிபியல்

39 முதல் 63 = 25
64 முதல் 95 = 32
96 முதல் 108 = 13
-----
70
-----

காமத்துப்பால்களவு இயல்
கற்பு இயல்

109 முதல் 115 = 7
116 முதல் 133 = 18
-----
25
-----

  • திருவள்ளுவர் வரலாறு
     

பெரும்புகழ்க்குரிய திருவள்ளுவர் பற்றிய உண்மையான வரலாறு, அறிய முடியாததாக உள்ளது. இவர் மயிலையில் பிறந்தவர் என்று ஒருசாரார் கருதுகின்றனர். அவ்வூரில் அவர்க்குக் கோயில் ஒன்றும் எழுப்பியுள்ளனர். அவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர்.

இவர்க்குரிய இயற்பெயர் யாது என்றும் தெரியவில்லை. பிறந்த குடி பழம் பெருமை மிக்க வள்ளுவக்குடி என்பர். இக்குடியினர் இன்றும் சோதிடம் வல்லவர்களாக அறியப்படுகின்றனர். இவர்கள் பண்டை மன்னர்களுக்கு மிக அணுக்கமாக இருந்தவர்கள் என்று பெருங்கதை முதலிய தமிழ் நூல்கள் அறிவிக்கின்றன. வள்ளுவர் - வாசுகி கதை, வள்ளுவர் - ஏலேல சிங்கன் உறவு, வள்ளுவரின் நூல் அரங்கேற்றம் ஆகியன பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இவற்றை உண்மையெனக் கருத முடியவில்லை.

 

 

  • வள்ளுவர் காலம்
     

 

இவர் வாழ்ந்த காலம் பற்றியும் ஒருமித்த கருத்து இல்லை. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை, பல வேறு காலங்களை அறிஞர் கூறுகின்றனர்.

திருக்குறளில் வெளிப்படும் சில பண்பாட்டு நிலைகள், மொழிக்கூறுகள் ஆகியவை கொண்டு அது, சங்க இலக்கியங்களை அடுத்துத் தோன்றியது என்று பொதுவாகக் கூறலாம்.

 

 

  • திருக்குறள் உரையாசிரியர்கள்
     

 

திருக்குறளுக்குப் பத்துப்பேர் இடைக்காலத்தில் உரையெழுதி உள்ளனர். இவ்வுரையாசிரியர் பெயர்களைப் பின்வரும் வெண்பாவால் அறியலாம்.

 

தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்
பரிமேலழகர், பருதி, திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்கு
எல்லை உரை செய்தார் இவர்

இவர்களுள் மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பரிதியார், பரிமேலழகர் ஆகியோர் உரைகளே இப்பொழுது கிடைக்கின்றன. இவற்றுள் பரிமேலழகர் உரையே பெரியோர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது. இக்காலத்தில் எண்ணற்ற புதிய உரைகள் நாளும் தோன்றிக் கொண்டே உள்ளன.

 

 

  • நூலின் சிறப்பு
     

 

வடமொழியில் உள்ள மனுநீதி முதலிய நீதி நூல்கள் வருணங்களின் அடிப்படையில் அறம் உரைப்பவை. திருக்குறள் ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்தின் அடிப்படையில் மனித குலம் அனைத்திற்கும் பொதுவான அறம் கூறுவது.

வள்ளுவர் காலத்தில் வைதீகம், சமணம், பௌத்தம் முதலான பல சமயங்கள் வழக்கில் இருந்தன. ஆனால் வள்ளுவர் எச்சமயத்தையும் சார்ந்து நின்று அறம் உரைக்கவில்லை. அதனால்தான் ‘சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவர்’ என ஒரு புலவர் பாராட்டினர்.

சங்கத்தமிழர் விரும்பி உண்ட கள்ளையும் ஊனையும் வள்ளுவர் கண்டித்தார்.

 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் (260)

என்றும்,

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எந்நாளும்
நஞ்சுண்பார் கள் உண்பவர் (926)

என்றும் கூறியுள்ளார்.

வேள்விகள் ஆயிரம் செய்வதனைவிட, ஓர் உயிரைக் கொன்று அதன் தசையை உண்ணாதிருத்தல் பெரிய அறம் என்றார்.

சங்கப்புலவர்கள் பரத்தைமை ஒழுக்கத்தை வெளிப்படையாகவே பாடினர். ஊடல் என்ற உரிப்பொருளை விளக்க அவர்களுக்குப் பரத்தையின் துணை தேவைப்பட்டது. வள்ளுவரோ, பரத்தைமை சமூகத்திற்குச் செய்யும் தீமையைக் கருதி, பரத்தையை அகத்திணையில் இருந்து விலக்கிப் புரட்சி செய்தார். மேலும் பொருட்பாலில் ‘வரைவின் மகளிர்’ என் அதிகாரம் அமைத்துப் பரத்தைமையைக் கண்டித்தார்.

ஈன்ற தாயும் பிறரும் துன்பமுறும் பொழுது, அறத்திற்கு மாறான செயல்களைச் செய்தாயினும் அவர்களைக் காக்க வேண்டும் என்று மநு முதலிய வடநூல்கள் கூறின. ஆனால் வள்ளுவரோ,

“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க;
சான்றோர் பழிக்கும் வினை”
 (656)

என்றார்.

இங்ஙனம் வள்ளுவர் கூறும் நெறிகள் உலகப் பொதுமை உடையனவாக விளங்குவதனால் திருக்குறள் உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது பாரதியார் வாக்கு.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 திருவள்ளுவரும் வாத்சாயனரும்

கட்டுரையாக்கம்: கலைமாமணி, கவிஞர் நா. இராசசெல்வம்,

15, எட்டாவது குறுக்குத்தெரு, குறிஞ்சி நகர், புதுச்சேரி – 605008. இந்தியா. கைபேசி: 0099 9486009909.

மின்னஞ்சல்: nrajaselvam@gmail.com

தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதும், அதனை அழியாமல் பாதுகாப்பதும் எல்லா உயிர்களுக்கும் உள்ள பொதுவான குணம். இயற்கையில் ஒவ்வோர் உயிரும் அதற்கான திறன்களுடன் படைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் எல்லா உயிர்களும், அதற்குரிய பருவம் எய்தியதும் அம்முயற்சியில் ஈடுபடுவது இயற்கையில் நடக்கின்ற செயல்களாகும். அம்முறையில் செடி, கொடி, பூச்சி, பறவை மற்றும் விலங்கினங்கள் யாவும் உரிய பருவம் எய்தியதும், பருவ உந்துதலால் உறவில் ஈடுபட்டுத் தன்னினத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான இவ்வினப்பெருக்க முயற்சி, மனித இனத்திற்கும் பொருந்துவதாகும். ஆனால் மனிதஇனம் மட்டும் தன் இனம் அழியாமல் பாதுகாப்பதில் முன்னிற்கிறது. அது பிற உயிரினங்களை அடக்கியும், நசுக்கியும், அழித்தும் தன்னினத்தைப் பெருக்கிக் கொள்வதில் முனைந்து செயல்படுகிறது.

தொன்மைக் காலத்தில் மனிதஇனம், இவ்வினப்பெருக்க முயற்சியில் பெண்களுக்காகத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு மடியத் தொடங்கியது. அதைக் கண்ட ஆன்றோர்கள் சிலர், சிந்திக்கத் தொடங்கிக் குடும்ப முறையை அறிமுகப்படுத்தினர். அப்படிச் சிந்தித்து வாழ்ந்த மக்களுள் தமிழர்கள் சிறந்து விளங்கினர். ஒருவனுக்கு ஒருத்தி எனும் பண்பாட்டு முறையில் உயர்ந்து நின்றனர். அதில் களவு, கற்பு எனும் உயர் பண்பாட்டு நிலையைக் கொண்டனர். இவ்வாறு உயர்ந்த நாகரிகத்தோடு வாழ்ந்த தமிழர்களின் வாழ்விடங்களில் மெல்ல ஆரியர்கள் புகுந்தனர். இதனால் நமது தமிழ்ப் பண்பாட்டோடு ஆரியம் கலந்தது. ஆரியக் கலப்பால் சாதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களுள் பலர் அடிமைப்படுத்தப்பட்டனர். அவ்வாறு அடிமைப்பட்ட மக்கள் நாளடைவில் அறியாமையில் மூழ்கினர். அறவாழ்விலிருந்து நெறிபிறழ்ந்தும் முறை தவறியும் நடக்க ஆரம்பித்தனர். இதனால் மக்களைக் காக்க அறவோர் பலர் முயன்றனர். அவர்களுள் திருவள்ளுவரும் ஒருவர். அவர் தமிழர்தம் ‘அறம் பொருள் இன்பம்’ எனும் முப்பொருள் கோட்பாட்டை மையமாகக் கொண்டு திருக்குறளைப் படைத்தார். அது முப்பால் என வழங்கப்பட்டது. அப்முப்பாலுள் ஒன்றாகிய காமத்துப்பாலையும், வடமொழி நூலாகிய வாத்சாயனரின் காமசூத்திரத்தையும் ஒப்பிட்டு ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திருக்குறளில் முப்பொருள் மரபு: தொன்மைக் காலத்தில் தமிழர்தம் வாழ்க்கை அகம், புறம் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தது. பின்னர் அது மூன்றாக விரிவடைந்தது. இதனைத் தொல்காப்பியர், “இன்பமும் பொருளும் அறனும் என்றாங் கன்பொடு புணர்ந்த ஐந்திணை” (தொல்.பொருள்.கள. 1) என்றும், ”அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப” (தொல்.பொருள்.செய்.102) என்றும் கூறியிருப்பதிலிருந்து உணரலாம். இதனையே, “அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்” எனப் புறநானூறும், (28-15) “அறம் பொருள் இன்பமென் றம்மூன்றின்” எனக் கலித்தொகையும், (141 -3) “ஆற்றல்சால் கேள்வி யறம்பொரு ளின்பம்” எனக் குறிஞ்சிப்பாட்டும், (வெண்பா- 2) “வடுவிலா வையத்து மன்னிய மூன்று” என நாலடியாரும் (114) கூறியுள்ளன. இதனால் பழந்தமிழர்கள் அறம், பொருள், இன்பம் எனும் முப்பொருள் கோட்பாட்டைக் கொண்டு வாழ்ந்திருந்தனர் என்பது தெளிவாம். ஆயினும் பரிமேலழகர், காமத்துப்பால் உரையின் தோற்றுவாயில், “இவர் பொருட் பாகுபாட்டினை அறம், பொருள், இன்பம் என வடநூல் வழக்கு பற்றி ஓதுதலான்” என்று மொழிந்துள்ளதைக் காட்டித் திருக்குறளின் முப்பொருள் கோட்பாடு வடமொழி வழக்கமே என்று சிலர் கூறி வந்த பொழுது, மறைமலையடிகள், “வடமொழி மனுமுதலான மிருதி நூல்கள் எல்லாம் பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்னும் நால்வகை நிலைபற்றி யோதியதல்லது அறம் பொருளின்ப வழக்கு பற்றியோதாமையும்..” (மேற்கோள். க.த. திருநாவுக்கரசு. 1979. பக். 71) என்று கூறியுள்ளமையாலும், க.த.திருநாவுக்கரசு, “இந்த முப்பொருள் மரபு, இந்தியாவிற்கு வெளியே சமசுகிருத மொழியோடு தொடர்புடைய மொழிகளிலும், தொல் பாரசீக மொழியின் வேதமாகிய அவஸ்தாவிலும் காணப் பெறவில்லை. மற்றும் வடமொழியின் வேதங்களிலோ, பழமையான உபநிடதங்களிலோ திரிவருக்கமெனும் முப்பொருள் மரபைக் காண இயலவில்லை……….. வடநாட்டில் தோன்றிய புறச்சமயங்களான பெளத்த, சமண சமய நூல்களில் மும்முதற் பொருள் பற்றிய குறிப்பே கிடையாது. எனவே இதனை வடநாட்டு மரபு எனக் கருத இயலவில்லை. மேலும், திருக்குறளைப் போன்ற அமைப்பில் அறம், பொருள், இன்பம் பற்றிய அறநூல், சமஸ்கிருத மொழியிலோ, பாலி மொழியிலோ, அர்த்தமகதி, அபப்பிரமிசம் போன்ற பிராகிருத மொழியிலோ இன்று வரையில் கிடைக்கவில்லை.” (க.த. திருநாவுக்கரசு. 1978. பக். 10) என்று கூறியுள்ளமையாலும், முப்பொருள் மரபு தமிழர்தம் மரபேயாகும் என்பது உறுதியாம். இம்மரபையொட்டியே திருவள்ளுவரும் தமது நூலை முப்பாலாக வகுத்துத் தந்தார்.

திருவள்ளுவருக்குப் பின், இடைக்காலத்தில் வடமொழி மரபையொட்டி இலக்கணம் வகுத்த புலவர்கள்தாம், “அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே” (நன். பொதுப். 10) என விரித்துக் கொண்டனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. காமம் என்றால் என்ன? இயற்கையில் எல்லா உயிரினங்களிலும் ஆண், பெண் என இருபாலர் படைக்கப்பட்டிருக்கின்றனர். உரிய பருவம் எய்தியதும் இவ்விருவரும் இணைவதற்கு அடிப்படைப் பாலமாகப் பாலுணர்வு படைக்கப்பட்டிருக்கின்றது. அவ்வுயிரினங்கள் அதனைத் துய்க்கும் வகையும் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இவை அத்தனையையும் இயங்கச் செய்வதற்கான இயற்கையின் அற்புத உணர்வே காமமாகும். காமம் என்பது, பசி, தாகம் போல எல்லா உயிர்கட்கும் இயல்பானது. அது ஆணும் பெண்ணும் கூடி மகிழ்ந்துணர்வது. காமம் இல்லையேல் உலகத் தோற்றமில்லை. எனவே காமம் என்பது எல்லா உயிர்களும் பெறும் இயற்கையான இன்ப உணர்வாகும். இதனை உணர்த்தவே தொல்காப்பியர், ”எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது தானமர்ந்து வரூஉ மேவற் றாகும்” (தொல்.பொருள்.பொது. 118) என்றும், ”காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல்.பொருள்.புறத். 23) என்றும் கூறியுள்ளார். அத்தகைய காமத்தின் இனிமையைத் திருவள்ளுவரும், ”எனைத்தொன்று இனிதேகாண் காமம்” (1202) என்று மொழிந்துள்ளார். எல்லாவற்றிலும் இனியது என்ற இப்பொருளிலேயே தொல்காப்பியர் காலந்தொடங்கி காமம் என்ற சொல் பயிலப்பட்டு வந்துள்ளது என்பதைச் சங்க இலக்கியங்கள் முழுமையிலும் காண முடிகிறது.

தொல்காப்பியம்(3:53-1), திருமுருகாற்றுப்படை(134), பட்டினப்பாலை(39), நற்றிணை(23-9), குறுந்தொகை(2-2), ஐங்குறுநூறு(237-1), பதிற்றுப்பத்து(22-1), பரிபாடல்(6-71), கலித்தொகை(12-12), அகநானூறு(28-1), புறநானூறு(212-3) மற்றும் சங்கம் மருவிய காலப் பாடல்களிலும் காமம் என்ற சொல் காதலின்பம் என்ற உயர் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பிற்காலப் புலவர்களுள் பலர், வடமொழி தாக்கத்தால் இத்தகைய உயர்ந்த பொருளுடைய ’காமம்’ என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டனர்.

நாற்றம் என்பதற்கு முற்காலத்தில் மணம் என்ற பொருள் பயன்பாட்டில் இருக்க, வாசம் என்ற வடசொல் புகுந்தவுடன் எதிர்மறைப் பொருளுக்குத் தள்ளப்பட்டது போல, காமம் என்பதைத் திருவள்ளுவர் காதல் எனப் பயன்படுத்தியிருக்க, சரசம் என்ற வடசொல் புகுந்தவுடன் எதிர்மறைப் பொருளுக்குத் தள்ளப்பட்டது. இதனால் பிற்காலத்தில் தூய்மையுடைய காமம் என்ற உயர்நிலைச்சொல் இழிநிலை பொருளுக்குத் தாழ்ந்தது. காமத்துப்பால்: தமிழரின் வாழ்வின் இலக்கணத்தைக் கூறுவது பொருளிலக்கணம். அது அகம், புறம் என இருவகைப்படும். அவற்றுள் அகமென்பது, ஒத்த அன்புடைய தலைவன் தலைவியின் உள்ளத்திற்கு மட்டுமே புலனாகும் இன்ப நிகழ்வாகும். அகப்பொருள் பற்றி நிகழும் ஒழுக்கத்தை ’அகத்திணை’ என்பர். அவ்வகத்திணையைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுத்தனர். அவற்றை ’அன்பின் ஐந்திணை’ என்றனர். அவ்வன்பின் ஐந்திணைக்கோர் இலக்கியமாகத் திகழ்வது திருவள்ளுவரின் காமத்துப்பால். அது தலைவன், தலைவியரின் காதல் உணர்வுகளை நுண்ணிதின் விளக்குவது; உளவியல் நோக்கில் அமைந்தது. இந்நிலையில் தமிழர்தம் கோட்பாடாகிய அறம், பொருள், இன்பம் என்பதைத் திருவள்ளுவர் கொள்ளாது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனப் பெயரிட்டது, “தர்மார்த்த காமேப்யோ நம” (அறம் பொருள் இன்பமே போற்றி) என்று காமசூத்திரம் (முதல் நூற்பா) கூறும் வடமொழி மரபையொட்டியே என ஒருசாராரும், காமத்துப்பால் என்பதே திருவள்ளுவர் இட்ட பெயரன்று என ஒருசாராரும் கூறி வந்தனர். அதுமட்டுமல்லாது காமத்துப்பாலைப் பிற்காலத்தவர் வாத்சாயனரின் காமசூத்திரத்தை நினைவில் கொண்டும், காமம் என்ற சொல்லைத் தவறாகப் புரிந்து கொண்டும் குழப்பமடைந்தனர். மேலும் காமம் என்ற சொல்லைக் கொண்டு, காமசூத்திரத்தின் மொழிபெயர்ப்புதான் காமத்துப்பால் என்றும் சிலர் கூறி வந்தனர். இதற்கு ”ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங் கூடியார் பெற்ற பயன்” (1109) என்ற குறளுக்குப் பழைய உரையாசிரியர் பரிப்பெருமாள் பொருள் கூறுமிடத்து, “இது காமப்பகுதியன்றே, இதனை வடநூலாசிரியர் கூறியவாறுபோல விரித்துக் கூறாதது என்னையெனின், அந்நூலகத்து விரித்துக் கூறியதெல்லாம் அளவும் காலமும் வேகமும் ஒவ்வாதாரை ஒப்பிக்கும் நெறியும், கைக்கிளை, பெருந்திணைப் பாற்பட்ட கன்னியரைக் கூடுந்திறனும், கணிகையர் சீலமும் கூறினார்; ஈண்டு உழுவலன்பினாற் கூடுகின்ற நற்கூட்டம் ஆதலின், இவையெல்லாம் விதியினாலே ஒக்க அமைந்து கிடக்கும் ஆதலான் கூறாராயினார் என்க” (திருக்குறள் உரைக்கொத்து. 1958. பக்.41) என்று கூறியுள்ளமை அவர்கட்குப் பதிலேயாகும். இத்தனை தெளிவுறுத்திய பிறகும், சிலர் ’காமத்துப்பால்’ என்ற பெயரை உச்சரிக்கவும் பயந்து, ‘இன்பத்துப்பால்’ என்று கூறியும் எழுதியும் வரத் தொடங்கினர். இத்தகைய தவறான புரிதலினால் பலர் காமத்துப்பாலைப் படிக்கவும் அஞ்சிப் பலகாலம் தவிர்த்து வந்தனர். இதன் எதிரொலியாக ஐரோப்பியர்களுக்கும் காமத்துப்பாலின் அருமை, பெருமையை உணர்த்தாமல் பலகாலம் இருந்து விட்டனர். அதுமட்டுமல்லாமல் ஐரோப்பியர்கள் ’காமம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘Lust’ என்ற சொல்லிற்குக் கூறப்படும் பொருள்களை (இச்சை, கழிகாமம், அடங்காச் சிற்றின்ப அவா, தகாச் சிற்றின்ப வேட்கை, மட்டில் புலனுகர் ஈடுபாடு – சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகராதி) மனத்தில் கொண்டும் குழப்பமடைந்தனர்.

1886-இல் ஜி.யு.போப் திருக்குறள் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்னரே, காமத்துப்பாலின் தூய்மையை உலகம் அறியத் தொடங்கியது. வாத்சாயனர்: உலகப் பழமையான மொழிகளுள் வடமொழியும் ஒன்று. அம்மொழி வல்லுநர்கள் வடமொழியை இரு பிரிவுகளாக்கிக் காட்டுவர். அவற்றுள் ஒன்று காலத்தினால் மிகவும் பழமையான வைதிக மொழி. மற்றொன்று பாணினி காலத்திற்குப் பிந்தைய, செப்பனிடப்பட்ட சமஸ்கிருத மொழி. இவற்றுள் வைதிக மொழி எனப்படும் பழமையான மொழியில்தான் இருக்கு, யசூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களும் உள்ளன. இந்நான்கு வேதங்களின் பிரிவுகளாகவும், விரிவுகளாகவும் எழுதப்பட்டவையே சமஸ்கிருத மொழியில் உள்ள பல சாஸ்திரங்களும் நூல்களுமாகும். அச்சமஸ்கிருத மொழியில் பல அரிய செய்திகளை எடுத்துக் கூறும் சாஸ்திரங்களின் மூல நூல்கள் யாவும் சூத்திரங்களாகப் பாடப்பட்டவையாகும்.

சூத்திரம் என்பது சுருங்கிய நடையில் அமையும் சிறுசிறு வாக்கியங்களால் பாடப்படுவது. அவ்வாறு சூத்திரங்களாகப் பாடப்பட்டுள்ள நூல்களுள் தனியிடம் பெற்ற நூல் காமசூத்திரம். இது வாத்சாயனரால் எழுதப்பட்டது. காமசூத்திரத்தின் தோற்றம் நந்திதேவரால் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. கையிலாயத்தில் பரமசிவன் பார்வதிக்கு இடையில் காமம் குறித்து நடந்த உரையாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்திதேவர், அதன் அடிப்படையில் 1000 அத்தியாயங்களைக் கொண்டதாக ஒரு நூல் எழுதியதாகவும், பின்னர் கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் ஸ்வேதகேது என்பவர் நந்திதேவரின் நூலைச் சுருக்கி 500 அத்தியாயங்களில் ஒரு நூல் எழுதியதாகவும், அதன் பின்னர் பாப்ரவியர் என்பவரும் அவரது சீடர்களும் ஸ்வேதகேதுவின் நூலைச் சுருக்கிக் காமசாஸ்திரம் எழுதியதாகவும், பின்னர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஒன்றாம் நூற்றாண்டிற்கிடையில் பாப்ரவியரின் நூலை ஆராய்ந்து சாராயனர், சுவர்னாபர், கோதகமுகர், கோனர்தியர், கோனிகபுத்திரர், தத்தகர் முதலிய பலராலும் காமசாஸ்திரம் சுருக்கி எழுதப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்குச் சில நூற்றாண்டுகளூக்குப் பின் வாத்சாயனர், நந்தி தேவரின் மூல நூலிலிருந்து ஒரு சிறு பகுதியை விளக்கிக் காமசூத்திரத்தைப் படைத்தாகவும், அதை அவரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அச்சூத்திரம், ”மஹாதேவானுசரஸ் ச நந்தீ சஹஸ்ரேஹ் யாயானாம் ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச” என்பதாம். இவருக்குப் பின் பலரும் காமசாஸ்திர நூல்களை இயற்றினர். ஆயினும் அவற்றுள் ஒரு சிலவே காமசாஸ்திரம் குறித்துத் தன்னிச்சையாக எழுதப்பட்ட நூல்களாகும். மற்றவை யனைத்தும் வாத்சாயனரின் காமசூத்திரத்தின் உரை நூல்களேயாகும். எனவே காமசாஸ்திர நூல்களிலேயே, வாத்சாயனரின் காமசூத்திரமே மிகச் சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. இது கி.பி. நான்காம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. காமசூத்திரத்தில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ள நூல்கள் யாவும் இப்பொழுது கிடைக்கவில்லை. அவை அனைத்தும் மறைந்துவிட்டன.

காமசூத்திரம்: காமசூத்திரம் என்ற நூல், காம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. காமசூத்திரத்தின் முன்னுரை, மனித வாழ்வில் காமம் இருக்க வேண்டிய பருவத்தைச் சுட்டிப் பேசுகின்றது. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், இந்த பூமிக்கு வரும் பயணிகளாகக் கருதப்படுகின்றார்கள் என்று ரிஷிகளும் ஞானிகளும் மொழிந்துள்ளனர். அதனடிப்படையில் வாத்சாயனரும் மனிதனின் வாழ்க்கையை ஒரு பயணமாகக் கருதி, வடமொழி சாஸ்திரங்கள் கூறும் பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்னும் நால்வகை புருஷார்த்தங்களை, நான்கு கட்டங்களாகக் கூறுகின்றார்.

1. முதல் கட்டம் பிரம்மச்சரியம். இவ்விளம்பருவம் மற்ற ஆசைகளை ஒதுக்கி வைத்துவிட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலமாகும்.

2. இரண்டாவது கட்டம் கிரகஸ்த்தம். இப்பருவம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு இன்பம் அனுபவிப்பது, குடும்பத்தைக் காப்பாற்றுவது என இணைந்து கடமைகளாற்றும் காலமாகும்.

3. மூன்றாவது கட்டம் வானப்பிரஸ்த்தம். இப்பருவம் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கி நின்று அவனுக்கு வழிகாட்ட வேண்டிய காலமாகும். இப்பருவம் எந்த அதிகாரமும் இல்லாமல், ஆனால் அனைத்துமே தன் கண்ணசைவில் நடப்பதைப் பார்த்துப் பெருமிதமாக வாழும் காலமாகும்.

4. நான்காவது கட்டம் சந்நியாசம். இப்பருவம் எல்லா பொறுப்புகளையும் துறந்துவிட்டு, ஓய்வாகக் காட்டிலிருக்கும் ரிஷிகளின் ஆசிரமத்திலோ, வீட்டிலோ பொழுதைக் கழிக்கின்ற காலமாகும். இவ்வாறு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும், அவன் மேற்கொள்ளத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது அரசனின் கடமை என்றும், அவற்றுள் இரண்டாவது கட்டமாகிய கிரகஸ்த்தமே தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டிய பருவம் என்றும் வாத்சாயனர் தம் நூலில் கூறுகின்றார். எனவே அவரின் காமசூத்திரம், அவ்விரண்டாவது கட்டத்தில் மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றி விரிவாகப் பேசுகிறது. அது வெறும் உடலுறவு முறைகளைப் பற்றி மட்டுமே பட்டியலிடாமல், வாழ்க்கைத் தத்துவங்கள் முழுவதையும் தெளிவாகக் கூறுகின்றது.

காமசூத்திரம் 7 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு: 1. சாதாரணம் (முன்னுரை) 2. சாம்பிரயோகிகம் (கலவி) 3. கன்யாசம் பிரயுக்தகம் (மனைவியைத் தேர்ந்தெடுத்தல்) 4. பார்யாதிகாரம் (மனைவி அதிகாரம்) 5. பாராதாரிகம் (பிற மனைவியர்) 6. வைசிகம் (வேசி) 7. ஒளபமிஷாதிகம் (மருத்துவ அதிகாரம்) இவற்றுள் இரண்டாவது அத்தியாயமாகிய சாம்பிரயோகிகம் 10 பகுதிகளைக் கொண்டுள்ளது. இப்பத்துப் பகுதிகளும் உடற்புணர்ச்சியைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. அவையாவன. 1. பிரமாண கால பவேப்யோ ரத அவஸ்ஹாபனம் – கலவி வகைகள் 2. ஆலிங்கன விசார – ஆலிங்கனம் செய்தல் 3. சும்பன விகல்பாஸ் – முத்தமிடுதல் 4. நகார தன ஜாதி - நகங்களைப் பயன்படுத்துதல் 5. தசன சேதவிஹயோ – கடித்தல் மற்றும் பிறதேசத்தாருடன் உறவு கொள்ளுதல் 6. சம்வேஷன பிரகாராஷ் சித்ரரதானி – பல்வேறு பாலுறவு நிலைகள் 7. பிரஹணன பிரயோகாஸ் தத்யுக்தாஷ்ச சித்கிருதகிருமா– உறவின்பொழுது அடித்தல் மற்றும் ஒலி எழுப்புதல் 8. புருஷோ பாசிருப்தானி புருஷாதியம் – ஆண்போல் செயல்படும் பெண்கள் 9. ஒளபரிஷ்டகம் நவமோ – வாய்வழிப் பாலுறவு 10. ரத ஆரம்ப அவசானிகம் விசேஸ்ஹ பிரணயகலஷ் ச – பாலுறவு நிலைகளைத் தொடங்குதல் மற்றும் நிறைவு செய்தல். இவ்வாறு காமசூத்திரம் பாலுறவுக் கல்வியைப் பற்றி விரிவாக அலசி ஆராய்கின்றது. வட நாட்டில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற நூலாக இருந்த வாத்சாயனரின் காமசூத்திரம், மேலைநாட்டவர் சிலரின் தவறான மொழிபெயர்ப்பினாலும், மூல நூலில் இல்லாத பாலியியல் சித்திரங்களைப் பிற்காலத்தில் சிலர் இணைத்ததனாலும், காமத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டம் சமுதாயத்தில் பரவி விட்டதனாலும், கையிற் கொண்டு படிப்பவரையும் பாதிக்கும் அளவிற்கு இந்நூல் இன்று தாழ்நிலை நூலாகி விட்டது.

திருவள்ளுவரின் காமத்துப்பால்: • திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஓர் அறநூல். அதிலுள்ள காமத்துப்பாலும் அறநூலுக்குரிய தன்மையிலிருந்து சிறிதும் வழுவாமலே காமத்தைக் காட்டுகின்றது. • காமத்துப்பால் சங்க இலக்கியத்திலுள்ள அகப்பாடல்களின் கருத்துப் பிழிவாய் இலக்கியச்சுவை ததும்பப் பாடப்பட்ட அகப்பாடல்களாகும். • அகத்திணையைப் பாடுதற்குக் கலியும் பரிபாட்டுமே ஏற்புடைய செய்யுள் வகையெனத் தொல்காப்பியம் (தொல். பொருள். அகத். - 42) கூறியிருக்கத் திருக்குறளின் காமத்துப்பால் குறள் வெண்பாவால் அமைந்த ஒரே அக இலக்கியமாகும். • காமத்துப்பால் அகத்திணை ஏழனுள் கைக்கிளை, பெருந்திணையை நீக்கி அன்பின் ஐந்திணையை மட்டுமே கூறுகின்றது. • காமத்துப்பால் ஒத்த தலைவன் தலைவியரிடையே அல்லது கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் உண்மை அன்பின் வெளிப்பாடாகும்.

• காமத்துப்பால் மலரினும் மெல்லியதான காமத்தை, அதன் செவ்வியறிந்து துய்க்கும் வழியைக் காட்டுகிறது • காமத்துப்பாலில் உள்ள ஒவ்வொரு குறளும் நாடக மாந்தரின் உரையாடல் போல் அமைக்கப்பட்டு இலக்கிய நயம் மிகுந்து காணப்படுகிறது..

• பிறன்மனை நோக்காத பேராண்மையைக் கூறும் திருக்குறளின் காமத்துப்பாலில் ஒருதலைக்காமம், வேசியர்த் தொடர்பு, பிற மகளிர் அல்லது பிறன் மனைவியிடம் கொள்ளும் பொருந்தாக்காமம் போன்ற எவ்விதமான முறையற்ற செயல்களும் குறிப்பிடப்படவில்லை.

• காமத்துப்பாலின் கற்பியலில், தலைவன் பிரிவைப் பற்றிக் கூறும் குறட்பாக்கள் பரத்தையற் பிரிவைப் பற்றிக் கூறவில்லை. கற்பனை நயத்திற்காகக் கூட பரத்தையற் பிரிவைப் பற்றிப் பேசவில்லை. பரத்தையரைத் தொடர்பு படுத்தாமலே ஊடலைச் சுவைபடப் பேசுகிறது.

• காமத்துப்பால் கூறும் புணர்ச்சி பற்றிய குறட்பாக்களில் அறுவறுப்போ, ஆபாசமோ இல்லை. வாத்சாயனரின் காமசூத்திரம்: • காமசூத்திரம் முழுக்க முழுக்க காமத்தைப் பற்றியதான காமசாஸ்திர நூல். • காமசூத்திரத்தின் இரண்டாவது பகுதி முழுவதும் பாலுறவு பற்றியதாகும்.

• காமசூத்திரம் மனைவியோடு துய்க்கும் இன்பம் மட்டுமன்றி, ஆடல், பாடல்களில் தேர்ந்த அழகு மகளிர், வேசியர், பிறர் மனைவியர் ஆகியோரிடம் துய்க்கும் இன்பம் பற்றியும் விரிவாகக் கூறுகிறது. • காமசூத்திரத்தின் ஐந்தாம் பகுதி முழுவதும், ஒருவன் இன்னொருவனுடைய மனைவியைக் கைப்பற்றக் கையாள வேண்டிய உத்திகளையும், வெல்லுவதற்கான வழிகளையும், ஏமாற்றித் தன்வழிக்குக் கொண்டுவரும் முறைகளையும் விளக்கி, முறையல்லாத காம நுகர்ச்சிக்கு வழி காட்டுகிறது.

• தன்னை விரும்பாத பெண்ணை வலியக் கைப்பற்றி இன்பம் பெறுவதை வாத்சாயனர் கண்டித்துக் கூறாததோடு, அதை ஓர் இயல்பான நிகழ்ச்சியாகக் காட்டுகிறார். (ப.மருதநாயகம். 2008. பக்.218) • பதவியில் இருக்கும் ஆண்கள் எவ்வகைப் பெண்களையெல்லாம் தம்வசப்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு பெரிய பட்டியலையே தருகிறார். (மேலது. பக்.218-219) • அந்தப்புரத்தில் வாழும் பெண்கள் எப்படியெல்லாம் கள்ளக் காதலுறவுகளை வைத்துக் கொள்வார்களென்றும், அத்தகைய உறவுக்கு யார் யாரையெல்லாம் பயன்படுத்திக் கொள்வார்களென்றும் ஒரு பெரிய பட்டியலைத் தருகிறார். (மேலது. பக்.217-218) • காமசூத்திரத்தின் ஏழாம் பகுதி மூட நம்பிக்கைகள் நிறைந்த பகுதியாகும்.

• வாத்சாயனரின் காமசூத்திரம் முற்றிலும் ஒரு காம ஆராய்ச்சி நூலாகும். ஒப்பீடு: திருவள்ளுவரின் காமத்துப்பால் ஒருவன் ஒருத்திக்கிடையே உள்ள உயர்ந்த காதலின்பத்தைக் காட்டுகிறது. வாத்சாயனரின் காமசூத்திரம் ஒரு ஆடவன் பல பெண்களுடன் அனுபவிக்கும் காமஇன்பத்தைக் காட்டுகிறது. காமத்துப்பால் உளவியல் பார்வையோடும், அழகியல் நோக்கோடும் உண்மைக் காதலை விரசமில்லாமல் படம் பிடித்துக் காட்டுகிறது. காமசூத்திரம் விரசத்தோடு முறையற்ற இன்பத்தையும் காட்டுகிறது. காமசூத்திரம் பாலியற் கல்வியைக் புகட்டும் பாட விளக்க நூல். ஆனால் திருவள்ளுவரின் காமத்துப்பால் ஒரு காதல் இலக்கியம். மென்மையான காதல் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் ஓர் ஒப்பற்ற காவியம்.

காமத்தினையும் இவ்வளவு தூய்மையாகப் பாடமுடியுமா? என்று உலக அறிஞர்களெல்லாம் வியந்து பாராட்டும் ஓர் உன்னத இலக்கிய எடுத்துக்காட்டு. மலரினும் மெல்லிய காமம்: காமத்துப்பாலையும், காமசூத்திரத்தையும் ஒப்பிட்டுக் காண்பார்க்குத் திருவள்ளுவரின் உயர்ந்த உளவியல் நோக்கும், நுட்பமான முருகியல் பார்வையும் தெள்ளிதின் விளங்கும். அத்தகைய காமத்துப்பாலின் மலரினும் மெல்லிய காமச்சுவையைப் பதச்சோறாகச் சில குறாட்பாக்களைக் கொண்டு காட்டுவாம்.

1. தலைவனும் தலைவியும் சந்திக்கின்றனர். தலைவியின் முகத்தை நேருக்கு நேர் காணத் துடிக்கிறான் தலைவன். ஆனால் அவள் நாணத்தால் நிலத்தை நோக்குவாள் போல் தலை கவிழ்ந்து நிற்கிறாள். அவன் முகத்தை அவள் நேர்கொண்டு பார்க்கவில்லை. அவள் முகத்தைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் தலைவனுக்கு. அவன் அவள் நிலையை உணர்ந்து கொண்டான். நாணத்தைப் புரிந்து கொண்டான். வேறு திசையில் பார்ப்பது போல் தன் தலையைத் திருப்புகிறான். உடனே தலைவி, தலைவனை நிமிர்ந்து பார்க்கிறாள். அவனை நோக்கி மெல்ல நகைக்கிறாள். இதைத் தலைவனும் பாராதது போல் கண்டு மகிழ்கிறான். அவள் பார்வையில் வெளிப்படும் காதலை உணர்கிறான். இதோ அந்தக் குறள்: ”யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்” (1094) என்னே காதலின் நுட்பமான வெளிப்பாடு! நேர்த்தி! அழகு! கவிதை! அத்தனையும் வடித்துக் காட்டும் அற்புதம். விரசம் இல்லாத காமம். இதுதான் வள்ளுவத்தின் பெருமை, உயர்வு, அழகு.

2. தலைவன் தலைவியைப் புணர்ந்து இன்பம் துய்க்கிறான். தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடர்கிறது இன்பம். அது முடிந்தபாடில்லை. காமம் மிகுந்து கொண்டே போகிறது. அவனுக்கு ஏன் என்று புரியவில்லை. அவன் தவிக்கிறான். அதன் காரணத்தைத் தேடுகிறான். அவனுக்குப் பழைய நினைவுகள் வருகின்றன. நூல்களாலும் நுண்ணுணர்வாலும் அறிவு பெருகப் பெருக, தனக்கு முன்னிருந்த அறியாமை புலப்பட்டது போல, தலைவியோடு இன்பம் துய்க்கத் துயக்க அவளோடு உள்ள காதல் அடங்காது பெருகுவதை உணர்கிறான். அக்காட்சியைக் காட்டும் குறள் இதோ: “அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு.” (1110) தலைவனும் தலைவியும் புணர்ந்து இன்பம் காண்கின்றனர். அவர்களின் இன்பநிலையை உணர முடிகிறது. காதல் தவிப்பை அறிய முடிகிறது. புணர்ச்சி பற்றிப் பேசுகிற இக்குறட்பாவில் பாலுறுப்புகள் பற்றிய வர்ணனையோ, காட்சியில் விரசமோ இல்லை. வள்ளுவரின் மலரினும் மெல்லிய காமம்தான் மட்டும்தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் காமத்துப்பால்.

3. காதல்தலைவி தன் காதலனைக் காண விழைகிறாள். அவனுடன் சேர்ந்து இன்பம் காணவும் துடிக்கிறாள். அவனும் வருகிறான். அவளை அணைக்க முற்படுகிறான். ஆனால் அவளால் அவனை நெருங்க முடியவில்லை. நாணம் அவளைத் தடுக்கிறது. அதுவே அவளுக்குப் பகையாகி நிற்கிறது. என்ன செய்வாள் அவள்! பாவம் தவிக்கிறாள். தலைவனுக்குக் கோபம். அவன் திரும்ப எத்தனிக்கிறான். சரி தலைவனைப் போகவிடலாம் என்றால், அதுவும் அவளால் முடியவில்லை. அவளுடைய காமம் அவளை வருத்துகிறது. நாணத்தை விடுவாளா? காமத்தை விடுவாளா? இரண்டையும் விட முடியாமல் தவிக்கிறாள். தன் நெஞ்சத்தை நோக்கிக் கெஞ்சுகிறாள். நெஞ்சே! ஒன்று காமத்தை விடு. இல்லையேல் நாணத்தை விடு. இரண்டையும் ஒரு சேரத் தாங்கும் வலிமை எனக்கில்லையே என்று வருந்துகிறாள். இதோ அக்காட்சியைக் காட்டும் குறட்பா: “காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு” (1247) இதுதான் காமத்துப்பால் காட்டும் மெல்லிய காமம். இதுபோன்றதொரு காட்சியின்பத்தைக் காமசூத்திரத்தில் காட்டலும் அரிது. வேறெங்கும் காணலும் அரிது. முடிவுரை: எல்லா உயிரனங்களும் தன்னினத்தைப் பெருக்கிக் கொள்வதில் முனைப்பாய் இருக்கின்றன. அவற்றுள் மனிதயினம் முந்தி நிற்கின்றது. பிற உயிரினங்கள் தன்னினத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான பாலுறவுச் செயல்பாட்டில், இயற்கை உந்துதலால் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதயினம் மட்டும், இப்பாலுறவுச் செயல்பாட்டை வெறும் இயற்கை உந்துதலாக மட்டும் கொள்ளாமல், இன்ப வேட்கையோடும், அழகியல் நோக்கோடும் ஒரு கலையாகவே கண்டு சுவைத்து வருகின்றது. இதனால் புலவர்களும் அறிஞர்களும் இவ்வியற்கை உந்துதலையும் பல நேரங்களில் இலக்கியக் கண்கொண்டு அணுகி வந்துள்ளனர். அப்பொழுது அவை காமம் பற்றிய இலக்கியங்களாக மலர்ந்துள்ளன. அவ்வாறு எழுந்துள்ள இலக்கியங்களுள், உலகின் தொன்மொழிகளான தமிழில் திருவள்ளுவரின் காமத்துப்பாலும், சமஸ்கிருததில் வாத்சாயனரின் காமச்சூத்திரமும் உலகப் புகழ்பெற்ற படைப்புகளாகும். இவ்விரு படைப்புகளிலும் திருவள்ளுவரின் காமத்துப்பால் தமிழரின் அகவாழ்வைக் காட்டி, மலரினும் மெல்லிது காமம், சிலரே அதன் செவ்வி தலைப்படுவார் (1289) என்ற உண்மையை மெய்ப்பிக்கிறது. அதனால் அறநூட் பகுதியாகிய காமத்துப்பால் ஓர் இலக்கியம்; உலக இலக்கியங்களுள் உயர்ந்த இலக்கியம். தமிழரின் பெருமையை உலகுக்குக் காட்டும் உன்னத இலக்கியம். அதனை அனைவரும் துய்த்து மகிழ்வோமாக! **********

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்:

1. தொல்காப்பியம், திருக்குறள், நன்னூல் மற்றும் சங்க இலக்கியங்கள்

2. கைலாசநாதக் குருக்கள்.கா. 2012. வடமொழி இலக்கிய வரலாறு. சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.

3. பதிப்புக்குழு. 1958. திருக்குறள் உரைக்கொத்து – காமத்துப்பால். திருப்பனந்தாள்: காசிமடம்.

4. திருநாவுக்கரசு,க.த. 1979. சான்றோர் கண்ட திருவள்ளுவர். சென்னை: மணியகம்.

5. திருநாவுக்கரசு,க.த. 1978. திருக்குறளும் இந்திய அறநூல்களும். சென்னை: மணியகம்.

6. மருதநாயகம்,ப.பேரா. 2008. ஒப்பில் வள்ளுவம், சென்னை: சாரதா பதிப்பகம்.

7. இராசசெல்வம்,நா.புதுவை. 2008. திருக்குறள் உரைவளமும் கல்லாடன் உரைத்திறனும் – ஒரு பார்வை. சென்னை: காவியா பதிப்பகம்.

8. Alain Daniélou. 1994. The Complete Kama Sutra. U.S.A.: Inner Tradition India. 9. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகராதி. 10. மற்றும் இணையதளக் கட்டுரைகள். **********

குரு வணக்கம்

கவிஞர்  நா.இராசசெல்வம்,புதுச்சேரி,  இந்தியா.

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 திருக்குறள் - சாமி. சிதம்பரனார்  திருக்குறள் மாண்பு

திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர்; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே தலைசிறந்து விளங்குவது திருக்குறள். இந்நூல் வரிசையால் முப்பால் என்ற பெயரால் திருக்குறள் குறிக்கப்பட்டிருகின்றது; இந்நூல் வரிசையிலே முதலில் தோன்றியது திருக்குறள். பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக் கடிகை, திரிகடுகம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, பழமொழி, நாலடியார் ஆகியவைகள் எல்லாம் திருக்குறளுக்குப் பின் தோன்றிய நூல்களாகத்தான் இருக்க வேண்டும். திருக்குறளின் கருத்துக்கள் பல இந்நூல்களிலே காணப்படுகின்றன.

இன்று தமிழில் உள்ள நூல்களிலேயே திருக்குறள்தான் உலகப் புகழ்பெற்ற நூலாக விளங்குகின்றது. உலக மக்கள் அனைவரும் திருக்குறளைப் போற்றுகின்றனர். அதில் உள்ள உயர்ந்த கருத்துக்களைப் பாராட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருக்குறளில் உள்ள பல அறங்கள் இன்றைக்கும் பொருந்துவனவாயிருப்பது இதற்கொரு காரணம்.

அன்றியும் திருக்குறளின் பெருமைக்கு மற்றொரு சிறந்த காரணம் உண்டு. இந்நூலிலே கூறப்படும் கருத்துக்கள் உலக மக்கள் அனைவரும் ஒத்துக்கொள்ளக் கூடியவை. இந்நூல் குறிப்பிட்ட ஒரு மதத்தினர்க்கோ ஒரு இனத்தினர்க்கோ, ஒரு நாட்டினர்க்கோ, ஒரு மொழியினர்க்கோ என்று செய்யப்படவில்லை. மனித சமூகம் முழுவதற்கும்-உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாகச் செய்யப்பட்டதாகும். இதனாலேயே இன்று திருக்குறள் உலகப் பொதுநூல் என்று கொண்டாடும்படி சிறந்து விளங்குகின்றது. தமிழிலே முதன் முதல் தோன்றிய நீதி நூல் திருக்குறள் தான்.

வடமொழியிலே ஸ்மிருதிகள் பல உண்டு. அவைகள் மக்கள் இன்னின்ன காரியங்களைச் செய்ய வேண்டும்; இன்னின்ன காரியங்களைச் செய்யக்கூடாது; என்று கட்டளையிடுகின்றன. அந்நூல்களிலே, இல்லறத்தான்  கடமை, துறவிகளின் கடமை, அரசியல் அறங்கள், முதலியவைகள் கூறப்படுகின்றன. அவைபோன்ற நூல் தமிழிலே திருக்குறளுக்கு முன் ஒன்றேனும் இல்லை.

திருக்குறளை வடமொழியிலே ஸ்மிருதிகளுக்கு ஒப்பிடலாம். ஆனால் ஒருவகையிலே அவைகளை விட உயர்ந்து நிற்கின்றது திருக்குறள். ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள்அனைத்தும் வருணாஸ்ரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை. சாதிக்கொரு நீதி கூறுவன.

திருக்குறளோ மனித சமுதாயத்தை ஒன்றெனக் கருதி, மக்கள் அனைவர்க்கும் பொதுவான நீதிகளையே கூறுகின்றது. இதுதான் திருக்குறளுக்குள்ள தனிச்சிறப்பு.

திருக்குறளின் மாண்பைக் காட்ட அதற்கு அமைந்திருக்கும் பெயர்களே போதும். திருக்குறளுக்கு ஒன்பது பெயர்கள் அமைந்திருக்கின்றன. வேறு எந்த அறநூல்களுக்கும் இத்தனை பெயர்கள் இல்லை.

1. திருக்குறள். 2. உத்தர வேதம் 3. திருவள்ளுவர், 4. பொய்யாமொழி, 5. வாயுரை வாழ்த்து, 6. தெய்வ நூல், 7. பொதுமறை. 8.முப்பால், 9. தமழ் மறை இவைகளே திருக்குறளைக் குறிக்கும் ஒன்பது பெயர்கள்.

 ‘‘சீரார் திருக்குறள், உத்தர

வேதம், திருவள்ளுவர்,

பேரார் பொய் யாமொழி,

வாயுறை வாழ்த்துப், பெருந் தெய்வநூல்,

ஊரார் பொதுமறை, முப்பால்,

தமிழ் மறை, ஒன்பதும் நல்

காராளர் கற்றுணர் செய்யுட்கு

நாமங்கள் கார்குழலே                           இப்பழம் பாட்டினால் அவ்வொன்பது பெயர்களையும் காணலாம்.

திருக்குறள் அமைப்பு

திருக்குறள், குறள் வெண்பாக்களால் அமைந்தது. இரண்டே அடிகளால் அமைந்த ஒருவகை வெண்பாவுக்குக் குறள் வெண்பா என்று பெயர். பெரிய செய்யுட்களைவிடச் சிறிய செய்யுட்கள் மக்கள் மனத்திலே அப்படியே ஒட்டிக்கொள்ளும். ஆதலால்தான், மக்கள் பின்பற்றி நடக்க வேண்டிய நல்லுரைகளை நவில வந்த வள்ளுவர், சிறிய குறள் வெண்பாக்களால் தமது நூலை இயற்றினார். இதுவே அவரது உயர்ந்த அறிவுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

திருக்குறளிலே ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்கள் அமைந்திருக்கின்றன. இவைகள் பத்துப் பத்துப் பாடல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு அதிகாரம்.

அவைகள் நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்களாகக் காட்சியளிக்கின்றன.

ஒவ்வொரு அதிகாரத்திற்குத் தலைப் பெயர்கள் உண்டு. 1. கடவுள் வாழ்த்து, 2. வான் சிறப்பு. 3. நீத்தார் பெருமை, 4. அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணை நலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை’’ என்று இவ்வாறு 133 அதிகாரங்களுக்கும் தலைப் பெயர்கள் உண்டு.

திருக்குறள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இதனால்தான் இதற்கு முப்பால் என்று பெயர். முதற் பகுதி அறத்துப்பால், இதில் இல்லறம், துறவறம் இரண்டைப் பற்றியும் முப்பத்தெட்டு அதிகாரங்களில் கூறப்படுகின்றன.

இரண்டாவது பகுதி பொருட்பால், இதிலே, அரசாள்வோர்க்கு வேண்டிய தகுதிகள்; அமைச்சருக்கு வேண்டிய தகுதிகள்; அரசாங்கத்திற்கு வேண்டிய அங்கங்கள்; பொருளீட்ட வேண்டிய முறை; அரசாட்சியின் கடமை; குடிமக்களின் கடமை; ஆகிய அனைத்தும் வலியுறுத்தப்படுகின்றன. எழுபது அதிகாரங்களில் இச்செய்திகள் கூறப்படுகின்றன.

மூன்றாவது பகுதி காமத்துப்பால், இதிலே பண்டைத் தமிழர்களின் குடும்ப வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறப்படுகின்றது. ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்ளுவது; அவர்கள் உள்ளம் ஒன்றுபட்டுக் காதலனும், காதலியுமாய் மறைந்து வாழ்வது; பிறகு அவர்கள் எல்லாரும்காண மணம் புரிந்துகொண்டு இல்லறம் நடத்துவது. இதுவே பழந்தமிழர் வாழ்க்கை முறை. இப்பண்பாட்டையே, களவியல், கற்பியல் என்று இரண்டு பகுதியாகப் பிரித்துக் கூறுகின்றது. காமத்துப் பாலில் உள்ள அதிகாரங்கள் இருபத்து ஐந்து.

இவ்வாறு அமைந்துள்ள திருக்குறளிலே, வள்ளுவர் தம் காலத்திலிருந்த எல்லாப் பொருள்களைப் பற்றியும் விளக்கியிருக்கின்றார். இவ்வுண்மையை 

 எல்லாப் பொருளும் இதன் பால் உள இதன் பால்

இல்லாத எப்பொருளும் இல்லையால்                                என்று ஒரு புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார்.

மற்றொரு புலவர் ‘‘ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் படித்தால் போதும்; சிறந்த தமிழ்ப் புலவராகிவிடலாம். மற்றொருவரிடத்திலே வேறொரு நூலையும் பாடங்கேட்க வேண்டியதில்லை’’ என்று திருக்குறளைப் போற்றியிருக்கின்றார்.

திருக்குறளைப் போன்ற அதிகார அமைப்பும், பால் அமைப்பும் கொண்ட நூல் திருக்குறளுக்கு முன் வேறு ஒன்றுமேயில்லை.

 திருவள்ளுவர்

திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். அவர் ஒரு மாபெரும் புலவர்; பல நூல்களையும் கற்றறிந்தவர்; உலகச் செய்திகள் பலவற்றையும் உணர்ந்தவர். அவர் காலத்திலிருந்த சமுதாய நிலை; அரசியல் அமைப்பு; எல்லாவற்றையும் நன்றாக அறிந்தவர். மனித சமுதாயம் நன்றாக வாழ வேண்டும் என்னும் அன்பும் கருணையும் உள்ளவர்; (தனித்தனி) ஆண்கள் பெண்கள் அனைவரும் மனிதத் தன்மையுடன், ஒழுக்கங் குன்றாமல் உயர்ந்த நிலையிலே வாழவேண்டும் என்னும் கருத்துள்ளவர்.

திருவள்ளுவருடைய பிறப்பு வளர்ப்பு வரலாற்றைப் பற்றி உறுதியாக ஒன்றும் கூற முடியவில்லை.

யாளிதத்தன் என்னும் அந்தணன். ஒரு சண்டாளப் பெண்ணை மணந்து திருவள்ளுவர் முதலிய எழுவரைப் பெற்றான் என்பது ஒரு கதை. இது ஞானாமிர்தம் என்னும் நூலில்காணப்படுகின்றது.

பகவன் என்னும் அந்தணன். ஆதி என்னும் புலைச்சியை மணந்தான். அவர்கள் யாத்திரை போகும்போது வழியிலேயே ஆதி ஏழு மக்களைப்  பெற்றாள். ஒவ்வொருபிள்ளையையும் பிறந்தவிடத்திலே அப்படி அப்படியே போட்டுவிட்டு ஆதியும், பகவனும் போய்விட்டனர். அப்பிள்ளைகளைப் பார்த்தவர்கள் எடுத்து வளர்த்தனர்.

இவ்வாறு பிறந்த பிள்ளையே வள்ளுவர். அவர் மயிலாப்பூரில் போடப்பட்டார்; ஒரு வள்ளுவன் அவரை எடுத்து வளர்த்தான். அதனால் வள்ளுவர் என்று பெயர் பெற்றார். இது ஒரு கதை. இதற்குக் கபிலர் அகவல் என்னும் பிற்காலத்துச் சிறு நூலே ஆதாரம்.

திருவள்ளுவர் மதுரையிலிருந்தவர் என்று திருவள்ளுவ மாலையில் ஒரு செய்யுளில் காணப்படுகின்றது.

திருவள்ளுவர், வள்ளுவர் மரபைச் சேர்ந்தவர்தான். வள்ளுவர் மரபைச் சேர்ந்தவர் என்று இகழ்ந்துரைப்பவன் அறிவற்றவன்; அவர் அறிவாளி, ஒழுக்கத்தால் உயர்ந்தவர் ஆதலால் அவரைப்போற்றுவதே அறிஞர் கடமை. என்ற கருத்து திருவள்ளுவ மாலைச் செய்யுள் ஒன்றிலே காணப்படுகின்றது.

இவ்வாறு திருவள்ளுவர் வரலாற்றைப் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. அவருடைய உண்மை வரலாற்றை அறிவதற்கு இடமில்லை.

அவர் பிறப்பு வளர்ப்பு எப்படியாயினும், அவர் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தெய்வப் புலவர் என்ற பெயர் பெற்று வாழ்கின்றார். திருவள்ளுவரை நான்முகன் என்று போற்றியிருக்கின்றனர்.

அவரைப் பொய்யா மொழியார் என்று பாராட்டியிருக்கின்றனர். திருக்குறளைத் தமிழ் வேதம் என்று கொண்டாடி வருகின்றனர். திருக்குறளையும் பொய்யா மொழி என்று பாராட்டினர்; பாராட்டுகின்றனர்.

திருவள்ளுவர் தமிழ் நாட்டிலே பிறந்தவர்; சாதி மத பேதம் பாராட்டாதவர்; மனித சமுதாயத்தையும், உலகையும் ஒன்றாகக் கருதிய ஒரு உத்தமத் தமிழ்ப் பெரியார்; இதுதான் நாம் அவரைப் பற்றி அறியும் உண்மை வரலாறு.

பல நூல்களின் சாரம்

உயர்ந்த அறங்களை யெல்லாம் ஒன்று திரட்டி உரைக்கும் நூல்  திருக்குறள். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் பலர் திருக்குறளின் மாண்பைப் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். திருக்குறளின் பெருமையைத் தெரிந்து கொள்ளுவதற்கு அவர்கள் வாய் மொழிகளே போதுமானவை

 ‘‘சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்

போற்றி உரைத்த பொருள்எல்லாம்-தோற்றவே

முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார்

எப்பா வலரினும் இல்

பல சாத்திரங்களும், வேதங்களும் கூறியிருக்கின்ற பொருள்களை யெல்லாம், எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி மூன்று பகுதியாக வகுத்துக் கூறிய திருவள்ளுவர் முதற்பாவலர் ஆவார். அவரைப் போன்ற கவிஞர் வேறு எம்மொழிக் கவிஞர்களிலும் இல்லை‘‘. (ஆசிரியர் நல்லந்துவனார்)

  ‘‘செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த

பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே

வேதத்திற்கும், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளுக்கும் பொருள்

 ஒன்றதான்’’ (வெள்ளி வீதியார்)

  ‘‘எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்

செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும்-முப்பாற்குப்

பாரதம், சீராம கதை, மனுப் பண்டைமறை

நேர்வன; மற்றில்லை நிகர்.

 எல்லாப் பொருள்களையும் எல்லோரும் அறிந்து கொள்ளும்படி சொல்லியிருக்கின்ற திருவள்ளுவருடைய திருக்குறளுக்குப் பாரதம், இராமாயணம், மனுதர்மம், வேதம் இவைகளையே ஒத்த நூல்களாகக் கூறலாம்; இவைகளைத் தவிர வேறு ஒன்றையும் திருக்குறளுக்குச் சமமாகக் கூறமுடியாது’’ (பாரதம் பாடிய பெருந்தேவனார்)

 ‘‘வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்

ஓத வழுக்கற்றது உலகு

 வேதத்திலே உள்ள உயர்ந்த பொருள்களையெல்லாம், திருவள்ளுவர், திருக்குறளின் மூலம் சொல்லியிருப்பதனால், உலகத்தாரின் ஒழுக்கம் கெடாமல் காப்பாற்றப்பட்டது’’.

                 ‘‘வேதப் பொருளை விரகால் விரித்து உலகோர்

ஓதத் தமிழால் உரை செய்தார்

 வேதத்தில் உள்ள பொருள்களை உலகத்தார் தெரிந்து கொள்ளும்படி திறமையுடன் விரிவாகத் தமிழிலே எழுதினார் திருவள்ளுவர்’’. (மதுரைப் பெருமருதனார்)

  மேலே காட்டியவைகள் அனைத்தும் பழந்தமிழ்ப் பாடல்கள். திருக்குறளை ஆராய்ந்து கற்றறிந்த புலவர்களால் பாடப்பட்டவை. இவைகள் திருவள்ளுவ மாலை என்னும் நூலிலே காணப்படுகின்றன.

  ‘‘தேவர் குறளும் திருநான் மறை முடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர்.

 திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்; வேதங்களின் முடிவுகளைக் கூறும் உபநிடதங்கள்; சம்பந்தர், அப்பர், சுந்தரர் இம்மூவரும் பாடிய தேவாரங்கள்; வேதாந்த சூத்திரம் என்று சொல்லப்படும் வியாச சூத்திரம்; திருக்கோவையார்; திருவாசகம்; திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம் ஆகிய இவைகள் எல்லாம் ஒரே பொருளைப் பற்றிக்கூறும் நூல்கள் என்று தெரிந்து கொள்ளுக’’

 இது அவ்வையார் பாடல். இப்பாடலுக்கு வேறு விதமாகவும் பொருள் கூறுவோர் உண்டு.

 மேலே காட்டியவைகளிலிருந்து ஒரு உண்மையை நாம் காணலாம். திருவள்ளுவர் பல நூல்களையும் கற்றறிந்தவர்; வடமொழி நூல்களையும் கற்றறிந்தவர் என்பதுதான் அவ்வுண்மை.

 வள்ளுவர் பல நூல்களையும், கற்றறிந்தவர். பல நூல்களின் கருத்துக்களையெல்லாம் திரட்டியே திருக்குறளை இயற்றினார். இவ்வுண்மையை அவருடைய வாய் மொழிகளே காட்டுகின்றன.

‘‘ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு

 நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்று, துறந்தவர்களின் பெருமையைச் சிறப்பாகப் புகழ்ந்துரைப்பதே நூல்களின் முடிவாகும்’’.                               (கு.21)

‘‘பகுத்து உண்டு பல்உயிர் ஓம்புதல், நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

 பலருக்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களையும் கொல்லாமல் காப்பாற்றுவதே அறநூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் அனைத்திலும் சிறந்த அறமாகும்’’.              (கு.322)

‘‘மிகினும் குறையினும் நோய் செய்யும், நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. 

மருத்துவ நூலோரால் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று எண்ணப்பட்ட மூன்றும் தம் அளவில் அதிகமானாலும், குறைந்து போனாலும் நோயைத் தரும்’’. (கு.241)

இந்த மூன்று குறள்களுமே, வள்ளுவர் பல நூல்களையும் கற்றறிந்தவர் என்பதற்குச் சான்றாகும். திருவள்ளுவர் எந்த நூல்களையும் படிக்கவில்லை; எந்த நூல் பொருள்களையும் பின்பற்றவில்லை; எல்லாப் பொருள்களைப்பற்றியும் தானே முழுதுணர்ந்து திருக்குறளை இயற்றினார் என்று கூறுவோர்க்குச் சரியான விடையளிக்கின்றன.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 பழந்தமிழ் முறை

 திருவள்ளுவர் தமது நூலைப் பழந்தமிழர் பண்பைப் பின்பற்றியே செய்திருக்கின்றார். முன்னோர் முறைக்கு மாறாக நூலியற்றும் வழக்கம் பழங்காலத்தில் இல்லை. அறம், பொருள், இன்பம் மூன்றும் பொருந்தச் செய்யுள் இயற்றுவர்; இம்மூன்றைப் பற்றியும் நூலியற்றுவர்; இதுவே பழந்தமிழர் முறை,

 திருவள்ளுவர் இந்த முறையைப் பின்பற்றியே திருக்குறளை முப்பாலாக இயற்றினார். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பகுதியாகத் திருக்குறள் அமைந்திருக்கின்றது. இம்மூன்றும் அறம் பொருள் இன்பங்களைப் பற்றிக் கூறுவன.

 பழந்தமிழ் நூல் முறையை அறியாதவர்கள். திருவள்ளுவர் காமத்துப்பாலை ஏன் பாடினார் என்று ஒரு ஐயத்தைக் கிளப்புவர். காமத்துப்பாலில் என்ன இருக்கின்றது? அறமா? அரசியலா? ஒன்றுமில்லையே; பேரறிஞரான வள்ளுவர் காமத்தைப் பற்றி இருபத்தைந்து அதிகாரங்களிலே கூறுகின்றார். இவற்றால் என்ன பயன்? இவ்வாறு கேட்போர் சிலர் உண்டு.  காமத்துப்பாலில் தமிழர்களின் உயர்ந்த பண்பாடு அமைந்து கிடக்கின்றது. ஆணும், பெண்ணும் அன்புடன் இணைந்து வாழ்வதால்தான் உலகம் நிலைத்து நிற்கின்றது; உலக மக்கள் வாழ்கின்றனர்; வளர்கின்றனர்; மக்களிடையிலே அன்பும், கட்டுப்பாடும், சமுதாய நீதிகளும் நிலைத்து வளர்ந்து வருகின்றன.

 ஆண் பெண்களின் ஒன்றுபட்ட உண்மையான உறவினால்தான் தனித்தனிக் குடும்பங்கள் தோன்றின. தனித்தனிக் குடும்ப வாழ்வு மக்களிடையே நிலைத்த பிறகுதான் அறமும் அரசியலும் தோன்றின.மக்களுடைய குடும்ப வாழ்விலே இன்பமும், ஒழுக்கமும் வளர்வதற்கே, அறநெறியும், அரசியலும் வேண்டியிருந்தன. அறநெறியிலே நிற்பதற்கும், இன்பத்துடன் வாழ்வதற்கும் செல்வம் இன்றியமையாதது. இத்தகைய செல்வத்தை ஈட்டுவதற்கும், உண்டாக்குவதற்கும் துணை செய்வது அரசியல்தான். அரசியல் இன்றேல் செல்வம் இல்லை. பொருள் இல்லை.

 அறம், பொருள் அனைத்தும் மக்கள், இன்ப வாழ்வுக்குத்தாம் என்பதே தமிழர் கொள்கை. ஆதலால்தான் தமிழ் நூல்கள் அனைத்தும் அறம் பொருள்இன்பங்களைப்பற்றியே கூறுகின்றன. சங்கநூல்களிலே இன்பத்தைப்பற்றிக் கூறும் நூல்களே ஏராளம்;அகப்பொருளைப்பற்றிக் கூறும் செய்யுட்களே அதிகம்.

 வள்ளுவரும், அறமும் பொருளும் இன்பத்தைப் பெறுவதற்கே என்ற கருத்தில்தான் திருக்குறளை இயற்றினார். அதனால்தான் இன்பத்தைப்பற்றிக் கூறும் காமத்துப்பாலை மூன்றாவது பகுதியாகக் கூறினார்.

 இவ்வுண்மையையும், தமிழ் நூல் மரபையும் அறியாதவர்களே, வள்ளுவர் காமத்துப்பாலை ஏன் இயற்றினார் என்று கேட்பர். இவர்கள் கேள்வி தவறு; தமிழர் பண்பாட்டை அறியாமல் எழுந்தது என்று விட்டுவிடவேண்டும்.

 உலகப்பொது நூல்

 திருக்குறளிலே கூறப்படும் அறங்கள் உலகோர் அனைவருக்கும் பொதுவானவை. எல்லா மக்களும் ஒப்புக் கொள்ளக்கூடியவை. இவ்வுண்மையைக் காட்டும் சில குறட்பாடல்களை மட்டும் பார்ப்போம்.

 ‘‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

  இவ்வுலகில் இல்லறத்திலே இருந்து வாழவேண்டிய முறைப்படி வாழ்கின்றவன் சிறந்தவன்; அவன் வானுலகிலே உள்ள தேவர்களிலே ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்’’. (கு.50)

    ‘‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

 அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தம்முடைய இன்பத்திற்கே உரியதாகக் கொள்ளுவார்கள்; அன்புள்ளவர் தமது எலும்பையும் பிறர் நன்மைக்கு உரிமையாக்குவர்’’. (கு.72)

 ‘‘ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்

பேர்அறி வாளன் திரு

  உலகத்தார் தன்னை விரும்பும்படி நடந்துகொள்ளுகின்ற பெரிய அறிவுள்ளவனுடைய செல்வம், ஊராரால் உண்ணப்படும் குளத்திலே நீர் நிறைந்திருப்பது போலாகும்’’. (கு.215)

 ‘‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன்உடை யான்கண் படின்.

  நல்ல பண்புகளை உடையவனிடத்திலே செல்வம் சேர்ந்திருக்குமாயின், அது பயன்தரும் மரம் ஒன்று ஊர் நடுவிலே பழுத்திருப்பதுபோல ஆகும்’’. (கு.216)

    ‘‘மருந்துஆகித் தப்பா மரத்துஅற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்

சிறந்த குணம் உள்ளவனிடம் செல்வம் தோன்றியிருக்குமாயின், அது எல்லா உறுப்புக்களும் மருந்தாகி நின்று தவறாமல் மக்களுக்குப் பயன்படும் மரம் போன்றதாகும்’’                   (கு.217)

 இல்லற வாழ்க்கை நடத்துவோன், இல்லறத்திலே செய்யவேண்டிய கடமைகளையெல்லாம் தவறாமல் செய்யவேண்டும்; அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும்; அவனுடைய செல்வம் ஊருணிபோல்-நடுவூரில் பழுத்திருக்கும் மரம்போல்- எல்லா உறுப்புக்களும் மருந்துக்குப் பயன்படும் மரம்போல்-அனைவர்க்கும் பயன்படவேண்டும். இவ்வுண்மைகளையே மேற்காட்டிய குறட்பாக்கள் கூறின. இல்லறத்தார்க்கு உரைத்த இவ்வறங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யார்?  

‘‘உற்றநோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை,

அற்றே தவத்திற்கு உரு.

தமக்கு வந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல், மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை; அவ்வளவே தவத்தின் உருவமாகும்’’.         (கு.261)   

‘‘தவமும் தவம்உடையார்க்கு ஆகும்; அவம் அதனை

 அஃதுஇலார் மேற்கொள் வது. 

உண்மையான தவநெறியில் வாழ்வோர்க்கே தவக்கோலம் தகுந்ததாகும்.

தவநெறியைப் பின்பற்றாதவர் தவக்கோலம் பூண்பதால் பயன் இல்லை’’                                                 (கு. 262)

 ‘‘மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்

        பழித்தது ஒழித்து விடின்.

உயர்ந்தவர்களால் வெறுக்கப்பட்ட தீயொழுக்கங்களை விட்டு விட்டால், தலையை மழுங்கச் சிதைத்துக்கொள்ளுவதும், தலைமயிரைச் சடையாக்கி நீட்டி வளர்த்துக்கொள்ளுவதும் ஆகிய வெளி வேடங்கள் வேண்டாம்’’ (கு. 280)

தம்முடைய துன்பத்தைத் தாங்கிக் கொள்வது; ஏனைய உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை; உண்மையான தவம்; வெளி வேடங்கொண்டு மக்களை ஏமாற்றாமல் உண்மை ஒழுக்கமுடன் வாழ்வது; இவைகளே துறவிகளுக்கு வேண்டிய ஒழுக்கங்கள்; என்று மேற்காட்டிய குறள்கள் உரைத்தன. இவைகளை மறுக்கும் அறிஞர் ஒருவரும் இல்லை.

 ‘‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறைஎன்று வைக்கப்படும். 

நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குக் கடவுள் என்று சிறப்பாக வைக்கப்படுவான்’’.         (கு.398)            

‘‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 

காது வெறுக்கும்படி, மக்களால் குறை கூறப்படும் சொற்களையும் பொறுத்துக் கொண்டிருக்கும் வேந்தனுடைய குடை நிழலில்தான உலகம் நிலைத்திருக்கும். குறைகூறுவோர் மீது கடுமையான அடக்குமுறையை ஏவி விடுகின்ற மன்னவன் ஆட்சி நிலைக்காது’’.              

‘‘குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு 

குடிகளின் கருத்தை ஆதரித்து நின்று, செங்கோல் செலுத்தும் பெரிய நாட்டின் மன்னனுடைய அடியை உலகம் ஆதரித்து நிற்கும்’’. (கு.544)

இவைகள் தனிப்பட்ட அரசனுக்குக் கூறப்பட்ட அறங்கள். வள்ளுவர் காலத்திலே குடிமக்கள் அரசாங்கம் இல்லை. மன்னர்களின் தனி அதிகார ஆட்சிதான் நிலவியிருந்தது. ஆதலால் அரசனுக்கு அறவுரைகள் கூறியிருக்கின்றார்.

 அரசன் மக்களிடம் நீதி முறை தவறாமல் நடந்துகொள்ள வேண்டும்; குடிகள் கூறும் குறைகளைக் கண்டு சீறிவிழக்கூடாது; பொறுமையோடு கேட்டு, அக்குறைகளைப் போக்க வேண்டும்; குடிகளின் கருத்தைத் தழுவி ஆட்சி நடத்த வேண்டும்; இக்கருத்துக்களையே மேலே காட்டிய குறள்கள் வலியுறுத்தின. இக்கருத்துக்கள் குடிஅரசுக்கும் ஏற்றவை. எல்லா நாட்டுஅறிஞர்களும் ஒத்துக்கொள்ளக் கூடியவை. இவற்றைத்தவறு என்று மறுக்கும் அரசியல் அறிஞர்கள் ஒருவரும் இல்லை.               

‘‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. 

எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளை அப்படியே ஒப்புக்கொள்ளாமல் அதன் உண்மைப்பொருளை ஆராய்ந்து, உண்மையானால் ஒப்புக்கொள்ளவேண்டும்; பொய்மை யானால் தள்ளிவிட வேண்டும்; இதுதான் சிறந்த அறிவாகும்’’.       (கு.423)               

‘‘எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்பது அறிவு. 

தான் உரைப்பனவற்றை, எளிதாகக் கேட்போர் உள்ளத்திலே பதியும்படி உரைத்து, பிறர் வாயிலிருந்து வரும் அரிய பொருளைத் தான் தெரிந்து கொள்ளுவதே அறிவுடைமையாகும்.’’       (கு.424)

         ‘‘எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு

        அவ்வது உறைவது அறிவு.       (கு.426)

 உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு ஒன்றுபட்டு வாழ்வதே அறிவுடைமை யாகும்.’’

 ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் இவ்வாறு சிறந்த அறிவுடன் விளங்குவார்களானால் ஒருவரை ஒருவர் ஏமாற்ற முடியாது; மக்களை மக்கள் எந்தத் துறையிலும் அடிமைப்படுத்தி ஆள முடியாது. அறிவுடைய மக்கள் ஏமாறமாட்டார்கள்; ஏமாற்றவும் மாட்டார்கள். அறிவைப்பற்றி வள்ளுவர் கூறியிருக்கும் கருத்து உலக மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது.     

‘‘தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு. 

செய்வதற்குரிய காரியத்தைத் தேர்ந்தெடுத்தல், அக்காரியம் வெற்றி பெறுவதற்கான வழிகளை ஆராய்ந்து செய்தல், ஒன்றைப்பற்றி இன்றைக்கொன்று, நாளைக்கொன்று என்று பேசாமல், இன்னதுதான் என்று முடிவாகத் துணிந்து கூறுதல் ஆகிய இவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.’’ (கு.634)  இது அமைச்சர்க்கு வேண்டிய தகுதியைப் பற்றிக் கூறியது.    

‘‘நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஓட்டாரை ஒட்டிக் கொளல். 

நண்பர்க்கு உதவி செய்வதைவிட எதிரிகளோடு சேராதவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளுவது விரைந்து செய்யவேண்டிய காரியமாகும்.’’  (கு.679) இது, சிறந்த அரசியல் தந்திரமாகும். ஆளுவோர்க்கு உரைத்தது. 

        ‘‘உறுபசியும், ஓவாப் பிணியும் செறுபகையும்

        சேராது இயல்வது நாடு.

மிகுந்த பசியும், நீங்காத நோயும், அழிக்கின்ற பகையும் தன்னிடம் சேராமல் காத்துக்கொண்டு வாழும் நாடே சிறந்த நாடாகும்.’’       (கு.734)               

‘‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு. 

பல கருத்துள்ள கூட்டங்களும், உறவாடிக் கெடுக்கும் பகையும், ஆளுவோனைத் துன்புறுத்திக் கொல்லும் சிற்றரசர்களும் இல்லாத நாடே சிறந்த நாடாகும்.’’ (கு.735)               

‘‘பிணியின்மை, செல்வம், விளைவின்பம், ஏமம்

அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து. 

மக்கள் நோயில்லாமல் வாழ்வது, வேண்டிய செல்வப் பொருள், நல்ல உற்பத்தி, எல்லோரும் இன்புற்று வாழ்தல், சரியான பாதுகாப்பு இவ்வைந்தும் நிறைந்திருப்பதே ஒரு நாட்டிற்கு அழகாகும்.‘‘    (கு.738)

 ஒரு நல்ல நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இக்குறள்கள் விளக்கியிருக்கின்றன. செல்வமும், அமைதியும் குடிகொண்ட நாட்டு மக்கள்தாம் இன்பமாக வாழ்வார்கள் என்ற கருத்தை இக்குறள்களிலே காணலாம்.                

‘‘வெண்மை எனப்படுவது யாதுஎனின்; ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு. 

அறியாமை என்று அழைக்கப்படுவது யாதென்றால், ‘‘நாமே சிறந்த அறிவுடையோம்’’ என்று தம்மைத்தாமே பெரிதாக எண்ணிக்கொள்ளும் செருக்காகும்’’. (கு.844)               

‘‘ஏவவும் செய்கலான்; தான்தேறான்; அவ்வுயிர்

போஒம் அளவும்ஓர் நோய். 

பிறர் சொல்வதையும் கேட்டுச் செய்யமாட்டான்; தானே அறிந்தும் செய்யமாட்டான்; அவ்வுயிர் ஒழியும் வரையிலும் இவ்வுலகிற்கு ஓர் நோயாகும்.’’ (கு.848) சொற்புத்தியும், சுயபுத்தியும் இல்லாதவனை மனிதன் என்று குறிப்பிடாமல் அவ்வுயிர் என்று அஃறிணையாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவைகள் அறிவற்றவன் யாவன் என்பதைக் குறித்துரைக்கும் குறள்கள்.இவ்வுண்மையை உலகினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர்.               

‘‘செல்லாமை உண்டேல் எனக்குரை; மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை. 

பிரிந்து செல்லாமல் இருப்பதானால், அதைப்பற்றி என்னிடம் சொல். பிரிந்து போய் விரைந்து வருகிறேன் என்று சொல்வாயானால், நீ வரும் வரையிலும் யார் உயிரோடு வாழ்ந்திருப்பார்களோ அவர்களிடம் அதைப் பற்றிச் சொல்’’. (கு.1151)

இக்குறள் கற்புள்ள ஒரு பெண் தன் காதலனிடம் கொண்டிருக்கும் அன்பைக் காட்டும் குறள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தால் உயிர் வாழ முடியாது என்ற முதிர்ந்த அன்புள்ளவர்கள்தாம் சிறந்த காதலர்கள்; இல்லறத்திலே இன்பம் நுகர்வார்கள்; இல்லறத்தையும் நல்லறமாக இனிது நடத்துவார்கள். இக்கருத்தைக் கொண்டதே மேலே காட்டிய குறள்.  

மேலே காட்டிய அறங்கள் அனைத்தும் உலகத்தார் ஒப்புக் கொள்ளும் பொது நீதிகள் எந்நாட்டினரும், எம்மதத்தினரும், எவ்வினத்தினரும்,  எம்மொழியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே இவ்வறங்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய பொது நீதிகள் நிரம்பியிருப்பதனால்தான் திருக்குறள் உலகப் பொது நூல் என்று பாராட்டப்படுகின்றது; திருவள்ளுவர் உலகப் புலவர் என்று போற்றப்படுகிறார்.  

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

வள்ளுவர் காலத் தமிழ் நாடு 

திருவள்ளுவர் காலத்திலே தமிழ் மக்களிடம் கடவுள் நம்பிக்கை குடிகொண்டிருந்தது. உருவ வணக்கமும் இருந்தது. சாதி வேற்றுமைகள் இருந்தன. தமிழ் நாட்டில் வேத வேள்விகள் நடைபெற்றன. மறுபிறப்பு, நல்வினை, தீவினை, ஊழ்வினை, சுவர்க்கம், நரகம், மோட்சம், முதலியவைகளிலே மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். 

திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தில் உள்ள பத்துக் குறள்களும் கடவுளை வணங்கவேண்டியது மக்கள் கடமை என்று வலியுறுத்துகின்றன.    

‘‘அகர முதல எழுத்தெல்லாம், ஆதி

பகவன் முதற்றே உலகு. 

எழுத்துக்கள் எல்லாம் அ என்ற எழுத்தைத் தலைமையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் முதல்வனாகிய கடவுளைத் தலைமையாகக் கொண்டிருகின்றது’’ என்பது முதற் குறள். இது உலகம் கடவுள் படைப்பால் தோன்றியது; கடவுள் சக்தியாலேயே உலகம் இயங்கி வருகின்றது; என்ற கருத்தைக் கொண்டதாகும்.     

‘‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான். 

இவ்வுலகைப் படைத்த கடவுள், பிச்சை யெடுத்தாவது உயிர் வாழவேண்டும். என்று விரும்பி உயிர்களைப் படைத்திருப்பானாயின், அவனும் அவ்வுயிர்களைப் போலவே அலைந்து அழிக’’.       (கு.1062) இக்குறளும் இவ்வுலகைப் படைத்தவன் கடவுள் தான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றது.

‘‘சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 

மழை பெய்யாவிட்டால் இவ்வுலகிலே தெய்வங்களுக்கும் திருவிழாவும் தினப்பூசையும் நடைபெறாது’’. (கு.18) குறிப்பிட்ட சில நாட்களில் கொண்டாடுவது திருவிழா. இதற்கே சிறப்பு என்று பெயர். நாள்தோறும் நடைபெறுவது பூசனை. திருவிழாவை நைமித்திகம் என்றும், பூசனையை நித்தியம் என்றும் கூறுவர்.  வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் உருவ வணக்கம் இருந்தது என்பதற்கு இக்குறள் ஒன்றே போதுமான சான்றாகும்.     

‘‘மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும், பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். 

வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்றுக்கொள்ளலாம். வேதம் கற்பவன் தன் பிறப்பிற்குரிய ஒழுக்கத்திலே தவறுவானாயின், அவன் குடிப்பெருமை அழியும்.’’(134)

வள்ளுவர் காலத்திலே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், என்ற நால்வகைப் பிரிவுகளும், இன்னும் பல பிரிவுகளும் தமிழர் சமுதாயத்தில் இருந்தன. பிறப்பினால் உயர்வு தாழ்வு வேற்றுமைகளும் இருந்தன. இவ்வுண்மையை இக்குறளால் காணலாம்.   

‘‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

 அந்தணருடைய வேதத்திற்கும், அறத்திற்கும் அடிப்படையாகி நின்று உலகத்தைக் காப்பாற்றுவது அரசனது செங்கோல்தான்.’’          (கு.543)

         ‘‘ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர்;

        காவலன் காவான் எனின்.

அரசன் நீதி முறைப்படி நாட்டைக் காப்பாற்றாவிட்டால் பசுக்களின் பயன்குன்றும்; அந்தணர்கள் அறநூலை மறந்து விடுவர்.’’                          (560)  

தமிழகத்தில் வேதங்களும், வேள்விகளும், வழங்கி வந்தன; அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர்; வேள்விகளையும் வேதியர்களையும் காப்பாற்ற வேண்டியது அரசாட்சியின் கடமை; இக்கருத்தை இவ்விரண்டு குறள்களும் கூறின.             

‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

 நெருப்பில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் யாகம் செய்வதைக் காட்டிலும் ஒரு பிராணியின் உயிரைக் கொன்று தின்னாமலிருத்தல் சிறந்தது.‘‘   (259)

இக்குறளை எடுத்துக்காட்டித் திருவள்ளுவர் யாகத்தைக் கண்டிருக்கிறார் என்று கூறுவோர் உண்டு. புலால் உண்ணாமையின் சிறப்பைக் கூற வந்ததே இக்குறள். யாகம் தீமையானது; அதைச் செய்யக்கூடாது என்று இக்குறள் சொல்லவில்லை. யாகத்தால் வரும் புண்ணியத்தைவிடப் புலால் உண்ணாமயால் வரும் புண்ணியமே சிறந்தது என்றுதான் இக்குறள் உரைக்கின்றது. ஆதலால் இது வேதவேள்வியைக் கண்டிக்கும் குறளாகாது.  

  ‘‘கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றுஈண்டு வாரா நெறி

  கற்க வேண்டிய நூல்களைக் கற்று இவ்வுலகிலே உண்மைப் பொருள்களை உணர்ந்தவர் மீண்டும் இவ்வுலகிலே வந்து பிறக்காத நெறியை உணர்வர்.‘‘   (356)

மறு பிறப்பு உண்டென்பதைத் திருக்குறள் ஒப்புக் கொள்ளுகிறது; இதற்கு இக்குறளே போதுமானதாகும்.

    ‘‘அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 

அறத்தின் பயன் இதுவென்று வாயால் சொல்ல வேண்டாம். பல்லக்கில் ஏறி இருப்பவனோடு அதைத் தூக்கிச் செல்கின்றவன் இடையே உள்ள வேற்றுமையால் தெரிந்துகொள்ளலாம்.’’ (கு.37)

இப்பிறப்பிலே நன்மை செய்தவன், வரும் பிறப்பிலே நன்மையடைவான்; இப்பிறப்பிலேதீவினை செய்தவன் வரும் பிறப்பிலே தீமையடைவான்; சென்ற பிறப்பிலே அறம் புரிந்தவர்களே இப்பிறப்பிலே இன்புற்று வாழ்கின்றனர்; சென்ற பிறப்பிலே பாவம் செய்தவர்கள் தாம் இப்பிறப்பிலே துன்புற்று வாழ்கின்றனர். இக்கொள்கையையே மேலே காட்டிய குறள் வலியுறுத்திற்று. நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனையும் எடுத்துக் காட்டிய குறள் இதுவாகும்

‘‘ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்ற

சூழினும் தான்முந் துறும்.

ஊழ்வினையை விட மிகுந்த வலிமை யுள்ளவை வேறு எவையுண்டு? அதன் வலிமையை அழிக்க வேறு வழியை எண்ணினாலும், அவ்வழியிலும் அவ்வூழ்வினையே முன்வந்து நிற்கும்.’’  (38)

பிதிர்க்கள் தென்றிசையில் வாழ்பவர்கள்; இல்லறத்தில் உள்ளவர்கள் செய்யும் சிரார்த்தங்களின் மூலமே அவர்கள் நன்மையடைவார்கள். இக்கருத்தை இக்குறளால் காணலாம்.               

‘‘அடக்கம் அமரர்உள் உய்க்கும், அடங்காமை

ஆர்இருள் உய்த்து விடும். 

அடக்கம் ஒருவனை இன்பந்தரும் தேவர் உலகத்தில் சேர்க்கும்; அடங்காமை துன்பந்தரும் நிறைந்த இருட்டாகிய நரகத்தில் சேர்த்துவிடும்.’’  (121)

தேவர் உலகம்-சுவர்க்கம்; ஆர் இருள்-நரகம்; சுவர்க்கம், நரகம் என்பவை இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்டவை; தனி உலகங்கள்; இக்கருத்தை அறிவிக்கும் குறள் இது.             

‘‘யான்எனது என்னும் செருக்குஅறுப்பான், வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.  

யான் என்னும் அகப்பற்றையும் எனது என்னும் புறப்பற்றையும் ஒழிப்பவன் தேவர்களாலும் அடையமுடியாத உயர்ந்த வீட்டுலகத்தை அடைவான்.’’ (346)

தேவலோகத்தை விட சுவர்க்கத்தைவிட உயர்ந்தது மோட்ச லோகம். அது அழியாதது. ஆசையற்றவனே அந்த மோட்சத்தை அடையமுடியும். இக்கருத்து இக்குறளில் அடங்கியிருக்கின்றது.

 இவ்வாறு, கடவுள், உருவவழிபாடு, சாதி வேற்றுமை, வேத வேள்விகள், அந்தணர், மறுபிறப்பு, நல்வினை, தீவினை, ஊழ்வினை, சுவர்க்க நரகம் மோட்சம் முதலியவைகளை ஒப்புக்கொள்ளும் குறள் வெண்பாக்கள் பல உள்ளன. திருக்குறளைப் படிப்போர் அவைகளைக் காணலாம். இந்திரன், திருமால், கூற்றுவன், சீதேவி, மூதேவி, வானோர் முதலிய தெய்வங்கள் திருக்குறளிலே காணப்படுகின்றன. பேய் பிசாசுகளும் காணப்படுகின்றன.

 முன்னேற்றத்திற்கு வழி

 வள்ளுவர் காலத்திலே தமிழ் நாட்டில் சாதிகள் இருந்தன; பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்றநம்பிக்கை இருந்தது. ஆயினும் வள்ளுவர் பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்னும் கொள்கையை ஒப்புக் கொள்ளவில்லை.              

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா

  செய்தொழில் வேற்றுமை யான்

 எல்லா மக்களுக்கும் பிறப்பு ஒரு தன்மையாகும்; பிறப்பிலே வேற்றுமையில்லை. ஆனால் அவரவர்கள் செய்யும் தொழில் வேற்றுமைகளால் சிறப்பின் தன்மை ஒத்திராது வெவ்வேறாக இருக்கும்’’. (கு.972)

இக்குறள் மக்களுக்குள் பிறப்பால் உயர்வு தாழ்வில்லை. அவரவர்கள் செய்யும் தொழிலால்தான் உயர்வு தாழ்வுகள் ஏற்படுகின்றன என்று கூறிற்று. மக்கள் அனைவரும் பிறப்பிலே ஒரு தன்மையுள்ளவர்கள் தாம் என்ற உண்மையைக் கூறிற்று.

‘‘ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்

  இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கம் உடைமையே சிறந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கமற்ற செயல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்’’.(கு.133)

ஒருவன் உயர்ந்த குடியிலே பிறந்தவன் ஆயினும் ஒழுக்கமற்றவனாயின் அவன் தாழ்ந்த குடியினன் ஆகிவிடுவான்; ஒருவன் தாழ்ந்த குடியிலே பிறந்தவனாயினும் நல்லொழுக்கம் உடையவனாக இருந்தால் அவன் உயர்ந்த குடியில் பிறந்தவனாகிவிடுவான். இக்கருத்தை இக்குறளில் காணலாம்.

ஒழுக்கத்தினால்தான் உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற பெருமை சிறுமைகள் ஏற்படுகின்றன. ஒழுக்கமுடையவன் உயர்ந்தவன்; ஒழுக்கமற்றவன் தாழ்ந்தவன்; பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டுவதால் பயனில்லை.இதுவே வள்ளுவர் கருத்தாகும்.

 ஊழில் பெருவலி யாஉள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்

என்று ஊழ்வினையின் வலிமையைக் கூறிய வள்ளுவர், அதைமாற்றுவதற்கும் வழி கூறுகின்றார்.

‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர்; உலைவுஇன்றித்

தாழாது உஞற்று பவர்.

எந்தக் காரியத்திலும் சோர்வில்லாமல், காலந்தாழ்த்தாமல், முயற்சி செய்கின்றவர்கள், ஊழ்வினையையும் புறமிட்டு ஓடும்படி செய்வார்கள். (கு.620)

இதனால் ஊழ்வினையை விரட்டியடிக்க வழி கூறினார். முயற்சியினால் ஊழ்வினையை விரட்டியடிக்க முடியும் என்பதே வள்ளுவர் கருத்து.

‘‘ஆள்வினை உடைமை’’ என்னும் அதிகாரத்தில் உள்ளது இக்குறள். ‘‘தலைவிதி என்று எண்ணிக்கொண்டு சோம்பித் திரியாதே; ஊழ்வினையை நினைத்துக்கொண்டு உறங்கிக் கிடக்காதே; முயற்சி செய்! இடைவிடாமல் உழைப்பாய்! சோர்வடையாதே! வெற்றி பெறுவாய்’’ இக்கருத்தையே அவ்வதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களும் கூறுகின்றன.

‘‘யாதானும் நாடாமால்; ஊராமால்; என்ஒருவன்

சாம்துணையும் கல்லாத ஆறு.

கல்வி கற்றவனுக்கு எந்நாடும் தன்னாடு; எவ்வூரும் தன்னூர் இவ்வாறாயின் ஒருவன் தான் சாகும் அளவும் கல்வி கற்காமல் காலங்கடத்துவது ஏன்?’’(கு.397)

உலக மக்கள் அனைவரும் கல்வி கற்றிருப்பார்களாயின் அவர்கள் ஒன்றுபட்டு வாழ முடியும். கற்றவர்கள் சாதிமத வேற்றுமைகளைப் பாராட்டமாட்டார்கள். மொழி, இனம், நிறம், நாடு என்ற வேற்றுமைகளையும் பொருட்படுத்த மாட்டார்கள். மனிதத் தன்மை ஒன்றையே பாராட்டி ஒற்றுமையுடன் வாழ்வார்கள். ஆதலால் உலக ஒற்றுமை தழைத்தோங்க அனைவரும் கல்வி கற்கவேண்டும். இக்கருத்தை எடுத்துரைத்தது இக்குறள். இவ்வாறு மக்கள் முன்னேறுவதற்கான உயர்ந்த கருத்துக்களை வள்ளுவர் கூறியிருக்கின்றார். பலவாறு பிரிவுபட்டுக் கிடக்கும் மனித சமூகம் அன்புடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கான உயர்ந்த கருத்துக்கள் பல வள்ளுவர் வாய்மொழியிலே காணப்படுகின்றன.

வள்ளுவர் காலம்

வள்ளுவர் காலத்தைப் பற்றி-திருக்குறள் தோன்றிய காலத்தைப் பற்றி- பலதிறப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இன்றுள்ள தமிழ் நூல்களில் எல்லாம் காலத்தால் முற்பட்டது திருக்குறள் என்போர் உண்டு. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற சங்க இலக்கியங்கள் எல்லாம் திருக்குறளுக்குப் பின்னே தோன்றியவை என்போர் உண்டு. இவர்கள் கூறுவது உண்மைதானா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இறையனார் அகப்பொருள் முதலிய தமிழ் நூல்களில் முச்சங்க வரலாறுகள் கூறப்படுகின்றன. அவற்றுள் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் இருந்த காலங்களில் இயற்றப்பட்ட நூல்கள் இன்னின்னவை என்று சொல்லப்படுகின்றன; அக்காலத்தில், வழங்கியிருந்த நூல்கள் இவை இவை யென்றும் சொல்லப்படுகின்றன. திருக்குறள் சங்க கால நூலாகவோ, அதற்கு முற்பட்ட நூலாகவோ இருந்தால் சங்க நூல்களின் வரிசையிலே இச்சிறந்த நூலின் பெயரைச் சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். ஆதலால் கடைச்சங்க காலத்துக்குப் பின்னர்தான் திருக்குறள் தோன்றியிருக்க வேண்டும்.

சங்ககால நூல்களில் காணப்படும் கொள்கைகளிலே பல, திருக்குறளிலே ஒப்புக்கொள்ளப்படவில்லை; சங்க காலத்து மக்களைவிடத் திருக்குறள் காலத்து மக்கள் ஆன்மீகத் துறையிலே சிறந்து விளங்கினர். ஆதலால் சங்ககாலத் தமிழர் பழக்கவழக்கங்கள் சிலவற்றை வள்ளுவர் கண்டித்துக் கூறுகின்றார். அவைகளைக் கூடா ஒழுக்கம் என்றும் சொல்லியிருக்கின்றார்.

சங்க இலக்கியங்களிலே புலால் உண்ணுவதைப் பற்றிக் கண்டிக்கப்படவில்லை. மதுபானமும் விலக்கப்படவில்லை. சங்க காலத்துத் தமிழர்கள் பெரும்பாலும் புலால் உணவைப் போற்றி உண்டவர்கள், வள்ளல்கள் எல்லாம் மாமிசம் உண்டவர்கள்; மதுவருந்தியவர்கள்; கபிலர், ஒளவையார் போன்ற புலவர் பெருமக்கள் எல்லோரும், புலாலும் மதுவும் அருந்தினார்கள். புலாலும் மதுவும் சிறந்த உணவுப் பொருளாகக் கருதப்பட்டன. வள்ளல்களும், வசதியுள்ள செல்வர்களும், தம்மிடம் வந்த விருந்தினர்க்குப் புலால் உணவும், மதுவும் கொடுத்து மகிழ்ச்சியூட்டுவார்கள். இந் நிகழ்ச்சிகளைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களிலே காணலாம்.

புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, கொல்லாமை, ஆகிய ஒழுக்கங்கள் சங்க நூல்களில் வலியுறுத்தப்படவில்லை. இவ்வொழுக்கங்கள் திருக்குறளிலே வலியுறுத்திக் கூறப்படுகின்றன. புலால் மறுத்தல் என்பது ஒரு தனி அதிகாரம்; கொல்லாமை என்பது ஒரு தனி அதிகாரம்; கள்ளுண்ணாமை என்பது ஒரு தனி அதிகாரம்.

சங்ககாலத்து நூல்களிலே பலதார மணம் மறுக்கப்படவில்லை. ஆண்கள் விலைமகளிரை நாடித் திரிவதையும் கண்டிக்கவில்லை. மணம் புரிந்துகொண்ட பெண்கள்தாம் ஒருவனைப்பற்றி ஓரகத்தில் இருக்கவேண்டும்; ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற வழக்கத்தைக் கூறுகின்றன.

திருக்குறள், ஏக தார மணமே சிறந்தது என்ற கருத்தை வெளியிடுகின்றது. ‘‘வாழ்க்கைத் துணை நலம்’’ என்ற அதிகாரத்தைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம்.

ஆண்கள் விலைமகளிரை நாடித்திரிவதைத் திருக்குறள் கண்டிக்கின்றது. வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தால் இவ்வுண்மையைக் காணலாம். பெண்களுக்குக் கற்புவேண்டும் என்பதுபோலவே ஆண்களுக்கும் கற்பு வேண்டும் என்னும் கருத்தும் திருக்குறளில் காணப்படுகின்றது. இதனைப் பிறன் இல் விழையாமை என்னும் அதிகாரத்தால் அறியலாம்.

மேலே காட்டிய காரணங்களை ஆராய்ந்தால் திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப் பின்னே தோன்றியதாகத்தான் இருக்க முடியும். சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்களுக்கு முன்னும், பத்துப் பாட்டு எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களுக்குப் பின்னும் உள்ள இடைக்காலத்தில் தான் திருக்குறள் பிறந்திருக்கவேண்டும்; திருவள்ளுவர் வாழ்ந்திருக்கவேண்டும்.

பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று தொகை நூல்களை வரிசையாக வைத்து வழங்கு கின்றனர். இவ்வரிசையிலும் பதினெண் கீழ்க்கணக்கு என்று தொகை நூல்களை வரிசையாக வைத்து வழங்குகின்றனர். இவ்வரிசையிலும் பதினெண்கீழ்க்கணக்கு மூன்றாவதாக-சங்க நூல்களுக்குப்பின் தோன்றியதாக-வழங்கப்படுகின்றது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே ஒன்றுதான் திருக்குறள். ஆதலால் இவ்வழக்கும் திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப்  பின்னே தோன்றியது என்ற கருத்தையே வலியுறுத்துகின்றது.

காலத்தால் முற்பட்டது என்பதால் மட்டும் ஒரு நூலுக்குப் பெருமை வந்துவிடாது. காலத்தால் பிற்பட்டது என்பதால் ஒரு நூலின் பெருமை குறைந்துவிடாது. நூலின் சிறப்பு கருதியே மக்களால் அந்நூல் கொண்டாடப்படும். திருக்குறளுக்கு இணையான நூல் எம்மொழியினும் இல்லை. எந்நாட்டினும் இல்லை. ஆதலால் அந்நூல் உலகமக்களால் போற்றப்படுகின்றது.

திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப் பின் பிறந்த நூல் என்பதனால்,அந்நூலின், மாண்பை யாரும் குறைத்துவிட முடியாது. இவ்வுண்மையை உணர்ந்தவர்கள், வள்ளுவர் காலத்தைச் சங்க இலக்கியங்களுக்கு முன்வைத்துக் கூறுவதில் காலங் கடத்திக்கொண்டிருக்க மாட்டார்கள்.

வயிரமும் பொன்னும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நிலத்திலிருந்து எடுக்கப்பட்டால் என்ன? நேற்றோ அல்லது அதற்கு முன்தினமோ நிலத்திலிருந்து புதிதாக எடுக்கப்பட்டால்தான் என்ன? வயிரம் வயிரந்தான்; தங்கம் தங்கந்தான். ஆதலால் திருக்குறள் எக்காலத்திலே தோன்றிய நூலாயினும் அதற்கு ஒப்பான நூலும் இல்லை; அதைவிட உயர்ந்த நூலும் இல்லை; இது உண்மை. 

உலகம் போற்றும் உத்தமர்

உலக மக்கள் அனைவர்க்கும் பொது நூலாக விளங்கும் திருக்குறளை ஒரு சிலர் சாதிச் சிறைக்குள் அடைக்க விரும்புகின்றனர்; சமயச் சிறைக்குள் அடைக்க முன் வருகின்றனர்; மொழி வெறுப்புக்கும், இன வெறுப்புக்குங்கூட இதைக் கருவியாகக் கொள்ளுகின்றனர்.

திருவள்ளுவர் நாத்திகர்; அவர் ஆரிய நாகரிகத்தை வெறுப்பவர்; திராவிட நாகரிகத்தைப் போற்றுகின்றவர்; திருக்குறளே தமிழர் சமயநூல்; என்று கூறுகின்றனர்.

இவர்கள் திருக்குறளில் உள்ள சில வெண்பாக்கள் தங்கள் கருத்திற்கு முரணாயிருப்பதைக் கண்டு திகைக்கின்றனர். அச்செய்யுட்களுக்குத் தங்கள் மனம் போனவாறு பொருள் பண்ணுகின்றனர். பழந்தமிழர் நாகரிகத்துக்கும், பண்பாட்டுக்கும் முரணாகப் பொருள் பண்ணுகின்றனர்.

இவர்கள், ‘‘திருக்குறள்தான் தமிழர் சமயநூல்; திருவள்ளுவர் கூறுவது தமிழர் பண்பாடு; தமிழர் நாகரிகம்;’’ என்று உண்மையாக நம்புகின்றவர்களாயிருந்தால், யாரையும் வெறுக்க மாட்டார்கள்; எந்த மொழியையும், தூற்ற மாட்டார்கள். திருக்குறளில் உள்ள கருத்துக்களை எல்லா மதத்தினரும் போற்றுகின்றனர். எல்லா இனத்தினரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். வடமொழி நூல்களும், ஏனைய மொழி நூல்களும் ஒப்புக் கொள்ளுகின்றன. இவ்வுண்மையை மறந்துவிட்டு, தமக்குப் பிடிக்காத இனத்தினரையும், மொழியினரையும் திருக்குறளின் பெயரால் எதிர்ப்பதிலே பொருளில்லை.

திருக்குறளையும், திருவள்ளுவரையும், இனவெறுப்புக்கும், மொழி வெறுப்புக்கும், பயன்படுத்துவோர் திருக்குறளுக்குப் பெருமை தருகின்றவர்கள் அல்லர்; திருவள்ளுவரைப் போற்றுகின்றவர்கள் அல்லர். திருக்குறளுக்கும், திருவள்ளுவர்க்கும் மாசு தேடுகின்றவர்களே ஆவார்கள். திருக்குறளுக்கும், திருவள்ளுவர்க்கும் பெருமை தருவதாக நினைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் காரியங்கள் தவறானவை; தமிழுக்கும், தமிழர்க்கும் இழுக்குதரும் செயல்களாகும்.

திருவள்ளுவர் கூறுவதுதான் தமிழர் பண்பாடு; திருக்குறள்தான் தமிழர் சமயநூல் என்பதிலே தவறில்லை. இது உண்மைதான்; மறுக்கமுடியாத கொள்கை. இக்கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவோர் உலக மக்களுடன் ஒன்றுபட்டு வாழத்தான் முயற்சிப்பார்கள். மக்கள் சமுதாயத்திலே வெறுப்பையும், கலகத்தையும் கிளப்பிவிட முயற்சிக்க மாட்டார்கள்.

திருக்குறளை நன்றாக நடுநிலையிலிருந்து படிப்போர் இந்த முடிவுக்குத்தான் வருவார்கள்.

 திருவள்ளுவர் மனித சமுதாயத்திற்குப் பொதுவான நீதிகளையே கூறுகின்றார்; உலக மக்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய அறங்களையே உரைக்கின்றார்; அவர் இன்ன இனத்தினர்க்கு, இன்ன மதத்தினர்க்கு இன்ன நீதி என்று பிரித்துக் கூறவில்லை. இந்த உண்மையைத் திருக்குறளைப் படித்தோர்- படிப்போர், எல்லோரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். இதையும் திருக்குறளைப் படிப்போர் உள்ளத்திலே கொள்ளுவார்களாயின், திருவள்ளுவர் உலக மக்கள் எல்லாருக்கும் பொதுவானவர்; திருவள்ளுவர் உலகம் போற்றும் உத்தமர்; திருக்குறள் உலக மக்களுக்கெல்லாம் பொது நூல்; என்றுதான் உறுதியாக எண்ணுவார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

திருக்குறள் பகுப்பில் வேறுபாடுகள்[தொகு]

அதிகார இடமாற்றம்[தொகு]

சிலரது பதிப்புகளில் அதிகாரங்களின் வரிசைமுறை இடம் மாறுகிறது. இது பதிப்பு செய்யும் ஆசிரியரின் மனப்பாங்கால் அமத்துக்கொள்ளப்பட்ட மாற்றம்.

பால் பாகுபாடு[தொகு]

  • 20 சிறுமேதாவியார் பார்வை (வீடு ஒன்றிய பாயிரம் 4, அறம் 33, ஊழ் 1, பொருள் 70, இன்பம் 25)
  • 37 மதுரைப் பெருமகனார் (அறம் 38, பொருள் 70, இன்பம் 25)

இயல் பாகுபாடு[தொகு]

22 தொடித்தலை விழுத்தண்டினார் பார்வை
  1. அறத்துப்பாலில் 4 இயல் (பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ்)
  2. பொருட்பாலில் 7 இயல் (அரசு, அமைச்சு, அறன், கூழ், படை, நட்பு, ஒழிபு)
  3. காமத்துப் பாலில் 3 இயல் (ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று, இருபால் கூற்று)
25 எறிச்சலூர் மாடலனார்
  • அறத்துப்பால்
  1. பாயிரம் 4
  2. இல்லறம் 20
  3. துறவறம் 13
  4. ஊழ் 1
26 போக்கியார்
  • பொருட்பால்
  1. அரசியல் 25
  2. அமைச்சியல் 10
  3. அரணியல் 2
  4. பொருளியல் 1
  5. படையியல் 2
  6. நட்பியல் 17
  7. ஒழிபியல் 13
27 மோசி கீரனார்
  • காமத்துப் பால்
  1. ஆண்பால் கூற்று 7
  2. பெண்பால் கூற்று 12
  3. இருபால் கூற்று 6

திருக்குறளில் பாயிரம்[தொகு]

திருவள்ளுவ மாலையில் இடம்பெற்றுள்ள நத்தத்தனார் (16) பாடல் 'ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பயின்றபின்' வேறு நூலைக் கேட்க வேண்டியதில்லை என்று கூறுகிறது. இந்தத் தொடரில் பாயிரமாக அமைந்த பாடல் 1330-ல் அடங்கவில்லை. திருக்குறளுக்கு இருந்த பாயிரம் வேறு, 1330 குறட்பாக்கள் வேறு என்பது இத் தொடர் தரும் விளக்கம். இதற்குப் பாயிரத்தினோடு 1330 எனப் பொருளமைதி காண்கின்றனர்.

உரையாசிரியர்களின் பாகுபாடு[1][தொகு]

11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருவள்ளுவமாலை நூலில் காணப்படும் பாகுகாடுகளை மேலே காணலாம். கீழ்க்காணும் உரையாசிரியர்களின் பகுப்பில் அறத்துப்பாலைப் பாயிரம் 4, இல்லறவியல் 20, துறவறவியல் 13, ஊழியல் 1 என 4 இயல்களாகப் பகுத்திருப்பதிலும் எந்த மாறுபாடுகளும் காணப்படவில்லை. பொருள்-பாலையும், காமத்துப்பாலையும் இயல்களாகப் பகுத்திருப்பதில் மாறுபாடுகள் காணப்படுகின்றன.

உரையாசிரியர்பொருள்-பாலில் இயல் எண்ணிக்கைபொருள்-பாலில் இயலின் பெயரும் அதில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையும்காமத்துப்பாலில் இயல் எண்ணிக்கைகாமத்துப்பாலில் இயலின் பெயரும் அதில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையும்
மணக்குடவர் [2]6அரசியல் 25, அமைச்சியல் 10, பொருளியல் 5, நட்பிநல் 5, துன்பவியல் 12, குடியியல் 132களவியல் 7, கற்பியல் 18
காலிங்கர் [3][4]7அரசியல் 25, அமைச்சியல் 10, அரணியல் 2, கூழ் (பொருள்) இயல் 1, படையியல் 2, நட்பியல் 173ஆண்பால் கூற்று 7, பெண்பால் கூற்று 12, இருபால் கூற்று 6
பரிமேலழகர் [3]3அரசியல் 25, அங்கவியல் 32, ஒழிபியல் 132களவியல் 7, கற்பியல் 18

இவற்றையும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1.  மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 102, 103.
  2.  10 ஆம் நூற்றாண்டு
  3. ↑ இங்கு மேலே தாவவும்:3.0 3.1 13 ஆம் நூற்றாண்டு
  4.  திருவள்ளுவ மாலையிலுள்ள பகுப்பினைப் பின்பட்டியுள்ளார்


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

கட்டுரை : பாயிரம் இல்லையேல் அது நூல் இல்லை!
- தமிழநம்பி [thamizhanambi44@gmail.com]
    Printable version|URL|

 
பாயிரம் என்பது முகவுரை. எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்டுமென்பது மரபு. சிறந்த நூல்களுக்கு முகவுரை இன்றியமையாதது. அதனால் நூலை ஆராய்ந்து, அதன் முன்னதாக, அழகிய நுட்ப உரையாக, அணிந்துரையை, எந்த ஒரு நூற்கும் பெரிதும் இயைபுபட நந்தமிழ்ப் பெரியோர் வைத்தனர்.

"ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே” என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது என்பதே இதன் பொருளாகும்.

பாயிரத்தின் தேவை

பாயிரம், நூலிற்குப் புறத்தே உரைக்கப் படுவதால், புறவுரையாகும். கணவனுக்கு நல்ல மனைவி போல இன்றியமையாச் சிறப்பினதாகவும் அழகிய பெரிய நகரத்திற்கு வடிவமைந்த வாயில் மாடம் போல அழகியல் சிறப்பினதாகவும் அமைவது பாயிரம் என்பர்.

மேலும், பாயிரம் யானைக்குப் பாகன் போலவும், வானத்திற்கு விளக்கமாகிய நிலவும் கதிரவனும் போலவும் இன்றியமையாச் சிறப்புடையது என்றும் கூறுவர். பாயிரமின்றி நூல் படிப்பார், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப் படுவராம்.

பாயிரம்

பாய் என்ற சொல் பரந்து கிடப்பது என்ற பொருளுடையது என்றும் இதனை அடியாகக் கொண்டு பிறந்த பாயிரம் என்ற சொல், பரந்து விரிந்து செல்லும் நூலின் தொடக்கப் பகுதி என்று பொருள்படும் என்றும் அறிஞர் கூறுவர்.

பாயிரத்திற்கு மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தரும் விளக்கத்தைக் காண்போம் :    போர் மறவர் போர்க்களத்தில் முதலில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் மறவியல் முகவுரையைப் பாயிரம் குறித்தது.  பின்பு, பொருள் விரிவாக்கமாக நூலின் முகவுரையைக் குறித்தது என்கிறார். பயிர்தல் என்றால் ஊர்கின்றவையும் விலங்குகளும் பறவைகளும் தமக்குள் ஒன்றை ஒன்று அழைத்தல்.

பயிர் > பயிரம் > பாயிரம் = அழைப்பு :  போருக்கு அழைக்கும் முகவுரை,  நூலின் முகவுரை.

பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என்று பாயிரம்  இரண்டு வகையினதாகும்.

பொதுப் பாயிரம்

எல்லா நூல்களின் முன்பும் பொதுவாக உரைக்கப் படுவது பொதுப் பாயிரம்.  நூலுள் சொல்லும் பொருளல்லாத  நூலின் இயல்பு, நூலாசிரியனின் இயல்பு, கூறுகின்ற முறை, படிப்போர் இயல்பு, படிக்கும் முறை ஆகிய ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரமாகும்.

 ( கற்பிக்கப்படும் நூலாயின், நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தினையும் பொதுப் பாயிரம் விளக்கும்)

சிறப்புப் பாயிரம்

பொதுப்பாயிரத்தின் ஐந்து கூறுகளும் எல்லா நூல்களுக்கும் பொதுவாய் கூறப்படுவதாகும். அவையெல்லாம் நூலுள் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறுவன.

அப் பொதுப் பாயிரம் போலன்றி நூலிற் சொல்லப்படுகின்ற பொருள் முதலிய உணர்த்துவது சிறப்புப் பாயிரமாகும்.  இப் பாயிரம், நூலுக்கு இன்றியமையாததாகும். அணியிழை மகளிர்க்கு,  அணிகளில் சிறந்த ஆடை போல நூலுக்குச் சிறப்பானது சிறப்புப் பாயிரம் என்பர்.

சிறப்புப் பாயிரத்தில் கூறுவன

நூலாசிரியர் பெயர்,  நூல் வந்த வழி,  தமிழகம் முதலாக நூல் வழங்கப்படும் நிலப்பரப்பு,  நூலின் பெயர், நூலின் வகை அல்லது கட்டமைப்பு,  நூலிற் கூறப்பட்டுள்ள பொருள்,  நூல் யாருக்காக எழுதப்படுகிறது என்ற குறிப்பு, நூலால் பெறக்கூடிய பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் சிறப்புப் பாயிரம் செப்பமாகக் கூறும்.
இவற்றுடன் நூல் எப்பொழுது, எவ்விடத்தில், எக்காரணம் பற்றி எழுதப்பட்டது என்பனவும் கூறப்படும்.

மேற்கண்ட பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குறைவாகவேனும் கூறி, அந்நூலைச் சிறப்பிப்பதும், மதிப்புரையும் சிறப்புப் பாயிரமே.

சிறப்புப்பாயிரத்தை எழுதத் தகுந்தோர்

நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியரோடு உடன் பயின்றவர், நூலாசிரியரின் மாணவர்,  நூலின் உரை ஆசிரியர் சிறப்புப் பாயிரம் எழுதுதற்கு உரியோர் ஆவர்.

இதுகாறும் தோன்றாத சிறந்த நூல்களைப் படைத்து, பல துறைகளிலும் நிறைவான புலமையைப் பெற்றிருந்தாலும் ஒருவர் தம்மைத்தாமே புகழ்ந்து தம் நூலில் தாமே சிறப்புப் பாயிரம் எழுதிக் கொள்ளுதல் பெருமைக்குரிய தகுதி ஆகாது.

ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம்,  நூற் பொருள்,  நூல் வந்த வழி,  நூற் பெயர் முதலியவற்றை நூலாசிரியர் கூறுவதே பொருத்தம் ஆகையானும் அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந் தராமையானும் அவற்றை நூலாசிரியர் கூறுவது தக்கது என்று கொள்ளப்படும். அவ்வாறு கூறுவது தற் சிறப்புப் பாயிரம் என்று பெயர் பெறும்.

பாயிரத்தின் பெயர்கள்

மேற்கூறிய பொதுப் பாயிரம் சிறப்புப் பாயிரம் இருவகைக்கும் பொதுவாகவும் சிறப்பாகவும் பல பெயர்கள் உள்ளன. அவை, முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்னும் எட்டாம்.  இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு:

முகவுரை :  இது நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பது. பெரும்பாலும் நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது.

பதிகம் :  இது நூலாசிரியனின் பெயர், நூல் வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது.

அணிந்துரை :  நூலுக்கு அணியாக (அழகாக) அமைவது.

நூன்முகம் :  இது நூல் முகத்து உரைக்கப் படுவது.

புறவுரை :  நூலின் கருத்து அல்லாமல் நூலோடு தொடர்புடைய செய்திகளை வரலாற்றை எடுத்துரைப்பது.

தந்துரை : இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர்களின் முன்னுரை பெரும்பாலும்     தந்துரையாக இருக்கும்.

புனைந்துரை : இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது. ( புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல்)

பாயிரம் :  இது முதன்முதல் பொருகளத்துப் போர் முகவுரையாகப் பகைவரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடுமொழியைக் குறித்தது.  பின்பு நூல் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது.

இக் கால நூல் வழக்கில், புறவுரை, பாயிரம் என்னும் இரண்டு பெயர்களும் பொதுப்பாயிரத்திற்கும் சிறப்புப் பாயிரத்திற்கும் பொதுவாக உள்ளன. மற்றவை சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாக உள்ளன்.

உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக்காலத்து எழுந்த புது வழக்குகள்.  இவற்றுள் உரைமுகம், தோற்றுவாய் இரண்டும் தற்சிறப்புப் பாயிரத்தையும் பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும்,  முன்னுரை அவ்விரண்டையும் சாரும்.  சாத்துப்பா என்பது செய்யுள்.  மற்றவை உரைநடை -  என்று மொழிநூற் கதிரவன் பாவாணர் விளக்கிக் கூறுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

தொல்காப்பியம் - பாயிரம்

பாயிரம் என்பது ஒரு நூலினது அறிமுகம் ஆகும். பாயிரம் ’பொது’ ‘சிறப்பு’ என இருவகையில் அமையும். தொல்காப்பியத்திற்கு அமைந்துள்ளது ‘சிறப்புப் பாயிரம்’ ஆகும்.

தொல்காப்பியரோடு ஒரே கல்விச்சாலையில் (அகத்தியரிடம்) பயின்றவர் என்று கருதப்படும் ’பனம்பாரனார்’ என்பவர் இந்தப் பாயிரச் செய்யுளை இயற்றியுள்ளார்.

இப்பாயிரத்தினுள் அவர் நூல் செய்தவரின் பெயர், நூல் வழங்கும் எல்லை, நூலின் இயல்பு, அதன் பயன், நூல் இயற்றப்பட்ட அவை மற்றும் காலம், நூல் யாருக்காக இயற்றப்பட்டது, நூல் இயற்ற உதவிய மூல நூல்கள் போன்ற பல செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளார் (படத்தில் வெவ்வேறு வண்ணங்களில் அவை குறிக்கப்பட்டுள்ளன)

தொல்காப்பியர் வழக்கு மொழியாகிய ‘கொடுந்தமிழை’யும், செய்யுள் மொழியாகிய ‘செந்தமிழை’யும் ஆய்ந்து இரண்டிற்கும் பொருந்தும் வகையிலேயே இலக்கணம் வகுத்துள்ளார் என்று பாயிரம் உரைக்கிறது.

தனக்கு முன்பிருந்த நூல்கள் பலவற்றையும் நன்கு கற்று, ஆய்ந்த பின்னரே தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார் என்கிறது பாயிரம். (நூலினுள் ஆங்காங்கு ‘என்ப’, ‘என்மனார் புலவர்’ என்று தொல்காப்பியரே உரைப்பதில் இருந்தும் இதை உணரலாம்!)

இவ்வாறான ஆழ்ந்த, பரந்த, அகன்ற ஆய்வின் பயனாய் இந்நூல் இயற்றப்பட்டதால் இது ‘போக்கறு பனுவலா’ய் (குற்றம் குறை இல்லாத நூல்) அமைந்தது என்றும் பனம்பரனாரின் பாயிரம் நிலைநாட்டுகிறது.

”நிலந்தரு திருவிற் பாண்டியன் ” என்ற மன்னனது அவையில், ‘அதங்கோட்டாசான்’ என்பவர் கேட்க இந்நூல் அரங்கேறியது என்ற செய்தியும் பாயிரத்தில் உள்ளது.

தொல்காப்பியர் ‘ஐந்திரம்’ என்ற நூலை நன்கு கற்ற புலவர், பல்புகழ் நிறைத்த படிமையாளர் என்றெல்லாம் பனம்பரனார் அவரைப் புகழ்ந்து மகிழ்கிறார்.

பாயிரத்தைப் படிக்காமல் ஒரு மாணவன் நூலைப் படிக்கப் புகுவானாயின் அவன் குன்றில் முட்டி நின்ற குருவியைப் போலவும், காட்டில் புகுந்த மானைப் போலவும் தலைகால் வழி தெரியாது திண்டாடுவான் என்பது உரையாசிரியர் கருத்து,

‘ஆயிரம் முகத்தான் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே’
என்பது நன்னூல் மொழிவது,

எனவே, இந்தப் பாயிரச் செய்யுளை ஆழ்ந்து கற்ற பின்னரே தொல்காப்பியத்தைக் கற்க தொடங்குவோமாக



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard