Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
வேதம்
Permalink  
 


 வேத்தவையானே (1)
வென்ற தேர் பிறர் வேத்தவையானே - புறம் 382/22

 மேல்
 
    வேத்து (1)
வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் - அகம் 27/15

 மேல்
 
    வேத (4)
வேத முதல்வன் என்ப - நற் 0/6
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து - பரி 5/23
நாஅல் வேத நெறி திரியினும் - புறம் 2/18
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் - புறம் 224/9

 மேல்
 
    வேதத்து (2)
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ - பரி 3/66
நன் பனுவல் நால் வேதத்து/அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை - புறம் 15/17,18

 மேல்
 
    வேதம் (3)
சிறந்த வேதம் விளங்க பாடி - மது 468
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/18

 மேல்
 
    வேதல் (1)
பொறி வரி தட கை வேதல் அஞ்சி - ஐங் 327/1

 மேல்
 
    வேதாளிகரொடு (1)
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப - மது 671

 மேல்
 
    வேதியர் (1)
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர்/நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் - பரி 11/84,85

 மேல்
 
    வேதின் (1)
முலை வேதின் ஒற்றி முயங்கி பொதிவேம் - கலி 106/35

 மேல்
 
    வேதின (1)
வேதின வெரிநின் ஓதி முது போத்து - குறு 140/1

 மேல்
 
    வேது (1)
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது/கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே - கலி 145/25,26


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

வாய்மொழி (23)

இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப - மது 774

வரை போல் யானை வாய்மொழி முடியன் - நற் 390/9

காலை அன்ன சீர் சால் வாய்மொழி/உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/4,5

வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த - பதி 37/2

நகை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் - பதி 55/12

வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதே - பரி 1/68

மாயா வாய்மொழி உரைதர வலந்து - பரி 3/11

வாய்மொழி ஓடை மலர்ந்த - பரி 3/12

வாய்மொழி மகனொடு மலர்ந்த - பரி 3/93

வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது - பரி 9/13

வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் - பரி 13/45

நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி/இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை - பரி 15/63,64

வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே - கலி 26/25

வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று - அகம் 78/16

கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி - அகம் 142/11

மாய பரத்தன் வாய்மொழி நம்பி - அகம் 146/9

நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி/நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய - அகம் 162/16,17

வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை - அகம் 205/8

வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது - அகம் 262/5

வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் - புறம் 221/10

வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன - புறம் 348/5

வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் - புறம் 388/9

வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் - புறம் 398/8

 

 வாய்மொழியால் (1)

 

பொய் அறியா வாய்மொழியால்/புகழ் நிறைந்த நன் மாந்தரொடு - மது 19,20

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 
Permalink Reply Quote 
More indicator.png

தமிழ்ச்சொல்

March 4, 2009

”நான்கு வேதங்களும் பத்து உபநிஷதங்களும்” என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது,வேதம் என்ற நேரடியான வார்த்தையைத் தவிர்த்து,

இதே அர்த்தத்தில் உள்ள பிற சொற்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட,தேடினேன்.சில சொற்கள் அகப்பட்டன. இச்சொற்கள், இச்சொற்களை

உட்கொண்ட சில வரிகள், இவ்வரிகளின் மேலோட்டமான அர்த்தம்,இவற்றைப் பற்றியே இப்பத்தி.

”அந்தணரோத்துடைமை மிகவினிதே” என்று இனியவை நாற்பதில்,அந்தணர் வேதத்தை மறவாமை இனிது எனும் அர்த்தத்திலும்,

 “வாங்கின்னா ஒத்திலாப் பார்ப்பானுரை” என்று இன்னா நாற்பதில், வேதம் ஓதுதல் இல்லாத அந்தணன் சொல் துன்பம் எனும் அர்த்தத்திலும்,

 ”ஒத்தொடு புணர்ந்த காப்புடை ஒழுக்கின்” என்று பெருங்கதையிலும்,ஒத்து என்ற சொல் வேதம் என்ற பொருளில் வருகிறது.

”ஆரணத்தின் சிரம் மீது உறைசோதியை அந்தமிழால்” என்கிறார் கம்பர்.அதாவது,வேதத்தின் உச்சியில் விளங்கும் பரஞ்சோதியான நாராயணன் என்று

சடகோபர் அந்தாதியில் ஆரணம் என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

 ”எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோர் இதுவே” என்ற குறுந்தொகைப்பாடலின் “உன் வேதத்தில்

பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் மருந்து இருந்தால் சொல்” என்று அர்த்தம் தரும் இவ்வரிகளில் எழுதாக்கற்பு எனும் சொல் வேதத்தைக் குறிக்கிறது.

 ”அந்தண்மை பூண்ட வருமறை யந்தத்துச் சிந்தை செயந்தணர்” என்கிறார் திருமூலர், அதாவது, அந்தணர் வேதங்களை அணவுவர் என்ற பொருளிலும்,

“அருமறையின் நெறிகாட்ட,அயன் பயந்த நிலமகளை” என்ற கலிங்கத்துப்பரணியின் வரிகளில், “வேதங்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களை மக்களுக்குத்

தெரிவிப்பதற்காக, நான்முகன் படைத்த நிலமகளைக் கைப்பிடித்தவன்” என்று குலோத்துங்கச்சோழனைப் பாராட்டும் வரிகளிலும், அருமறை என்ற சொல் வேதத்தைக் குறிக்கிறது.

”வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து” என்று சிலப்பதிகாரத்தில் வேதம் என்னும் பொருளில் மறைநூல் என்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது.

ஆக,வேதம் என்ற பொருளில் ஒத்து,ஆரணம்,எழுதாக்கற்பு,அருமறை,மறைநூல் போன்ற சொற்கள் பிரயோகப்பட்டுள்ளன. இதே பொருளில் மேற்கூறிய சொற்களைத் தவிர்த்து,

வேறு சொற்கள் உளவா எனத் தெரிந்துகொள்ள ஆசை. தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 vhttp://www.tamilvu.org/slet/l2800/l2800aru.jsp?song_no=7&book_id=37&head_id=37&sub_id=1015

7அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது.

(ப-ரை.) அந்தணர் - பிராமணர்க்கு, ஓத்து உடைமை - வேதத்தினை, மறவாமை, ஆற்ற மிக இனிது - மிகவினிது; பந்தம் உடையான் -

(மனைவி மக்கண் முதலியோர் மாட்டுப்) பற்றுடையவன், படை ஆண்மை - சேனையை ஆளுந்தன்மை, முன் இனிது - முற்பட வினிது ;

தந்தையே ஆயினும் -(தன்னைப்பெற்ற) தந்தையே யானாலும், தான் அடங்கான் ஆகுமேல அவன் (மனமொழி மெய்கள் தீ நெறிக்கட் சென்று)

அடங்கானெனின், கொண்டு அடையான் ஆதல் - அவன் சொற் கொண்டு அதன்வழி நில்லாதானாதல், இனிது-.

அந்தணர் - அழகிய தன்மை யுடையார் அல்லது வேதாந்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி பொருள். அதனை,

"அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச்
சிந்தைசெ யந்தணர்"

என்னுந் திருமூலநாயனார் திருவாக்கா னறிக. ஓதப்படுதலின் ஓத்தாயிற்று. பார்ப்பார் வேதத்தை மறந்துழி இழிகுலத்தரா மாகலின்,

மறக்கலாகா தென்னுங் கருத்தாற் செந்நாப்போதாரும்,

"மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்"

என்னும் பாவின்கண் ‘மறப்பினும்' என்றமை காண்க. உறவினர் மாட்டுப் பற்றுடையானாயின் பழிக் கஞ்சித் தன் சேனையில் ஓருயிர்க்கும்

வீணாக இழிவு நேராதபடி பாதுகாப்பானாகலின் பந்தமுடையான் படையாண்மை முன்னினிதே ' என்றார்.

"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி"(குறள் - 506)

என்றிருத்தல் காண்க. இதற்குச் ‘சுற்றமுடையார் படையை ஆளுந்தன்மை மிகவினிது' எனப் பொருளுரைப்பாரு முளர்.

"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்"(குறள் - 834)

என்றிருத்தலின் தந்தையாயினும் மனமொழி மெய்களினடங்கானாயின், அவன்பால் உபதேச மொழிகளைக் கேட்டு அவற்றின்

வழியொழுகாமை இனி தென்றார். இதற்குத் தந்தையே யானாலும் அவன் அடங்காதவனானால் அவனை உடன் கொண்டு ஓரிடத்தை அடையாதவனாகுதல்

இனிது என் றுரை பகர்வாருமுளர். ஏல் : ‘எனின்' என்பதன் மரூஉ.

http://www.tamilvu.org/slet/l2800/l2800aru.jsp?song_no=7&book_id=37&head_id=37&sub_id=1015

7அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது.

(ப-ரை.) அந்தணர் - பிராமணர்க்கு, ஓத்து உடைமை - வேதத்தினை, மறவாமை, ஆற்ற மிக இனிது - மிகவினிது; பந்தம் உடையான் - (மனைவி மக்கண்

முதலியோர் மாட்டுப்) பற்றுடையவன், படை ஆண்மை - சேனையை ஆளுந்தன்மை, முன் இனிது - முற்பட வினிது ; தந்தையே ஆயினும் -(தன்னைப்பெற்ற)

தந்தையே யானாலும், தான் அடங்கான் ஆகுமேல அவன் (மனமொழி மெய்கள் தீ நெறிக்கட் சென்று) அடங்கானெனின், கொண்டு அடையான் ஆதல் - அவன்

சொற் கொண்டு அதன்வழி நில்லாதானாதல், இனிது-.

அந்தணர் - அழகிய தன்மை யுடையார் அல்லது வேதாந்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி பொருள். அதனை,

"அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச்
சிந்தைசெ யந்தணர்"

என்னுந் திருமூலநாயனார் திருவாக்கா னறிக. ஓதப்படுதலின் ஓத்தாயிற்று. பார்ப்பார் வேதத்தை மறந்துழி இழிகுலத்தரா மாகலின், மறக்கலாகா தென்னுங்

கருத்தாற் செந்நாப்போதாரும்,

"மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்"

என்னும் பாவின்கண் ‘மறப்பினும்' என்றமை காண்க. உறவினர் மாட்டுப் பற்றுடையானாயின் பழிக் கஞ்சித் தன் சேனையில் ஓருயிர்க்கும் வீணாக இழிவு நேராதபடி

பாதுகாப்பானாகலின் பந்தமுடையான் படையாண்மை முன்னினிதே ' என்றார்.

"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி"  (குறள் - 506)

 

என்றிருத்தல் காண்க. இதற்குச் ‘சுற்றமுடையார் படையை ஆளுந்தன்மை மிகவினிது' எனப் பொருளுரைப்பாரு முளர்.

"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்(குறள் - 834)

என்றிருத்தலின் தந்தையாயினும் மனமொழி மெய்களினடங்கானாயின், அவன்பால் உபதேச மொழிகளைக் கேட்டு அவற்றின் வழியொழுகாமை

இனி தென்றார். இதற்குத் தந்தையே யானாலும் அவன் அடங்காதவனானால் அவனை உடன் கொண்டு ஓரிடத்தை அடையாதவனாகுதல் இனிது

என் றுரை பகர்வாருமுளர். ஏல் : ‘எனின்' என்பதன் மரூஉ.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard