கேள்வி (24)
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி/நா இயல் மருங்கில் நவில பாடி - திரு 186,187
கேள்வி போகிய நீள் விசி தொடையல் - பொரு 18
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி/கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக - சிறு 228,229
தொடை அமை கேள்வி இட_வயின் தழீஇ - பெரும் 16
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315
பல் கேள்வி துறைபோகிய - பட் 169
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா - மலை 22
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று - பதி 21/1
உரை சால் வேள்வி முடித்த கேள்வி/அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/4,5
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி/உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை - பதி 70/18,19
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது - பதி 74/1
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் - பரி 3/48
கில்லா கேள்வி கேட்டன சில_சில - பரி 12/39
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி/திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி 23/19,20
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8
கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை - புறம் 26/12
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் - புறம் 53/12
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து - புறம் 68/3
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி/மாங்குடி மருதன் தலைவன் ஆக - புறம் 72/13,14
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் - புறம் 221/6
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு - புறம் 361/4
கண் கேள்வி சுவை நாவின் - புறம் 382/13
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து - புறம் 400/18
கேள்வியால் (1)
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ - கலி 15/14
மேல்
கேள்வியும் (1)
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை - பரி 13/56
மேல்
கேள்வியுள் (2)
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் - பரி 2/25
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் - பரி 2/61