போர்ச்சுகீசியர் கிறிஸ்துவ புராண நாயகன் இயேசுவின் சீடர்களில் ஒருவர் எனப்படும் தாமஸ் என்பவர் இந்தியா வந்த்தாகவும் கல்லறை இது என கதை கட்டி முன் கபாலிஸ்வரர் கோயில் இருந்த இடத்தில் சாந்தோம் சர்ச் எனக் கட்டியுள்ளது. பழைய கபாலிசுவரர் கோயில், சாந்தோம் கடற்கரையருகே இருந்தது.
1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் சாந்தோம் கடற்கரை என எண்ண வேண்டியிருக்கிறது. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதேஇதற்குக் காரணமாகும்.
மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது.
மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் .
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :-“கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும்.” Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204
போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் . S.Kalyanasundaram- A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது
பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது.
கடற்கரையில் மயிலாப்பூர் இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார். அதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. இன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு.
மேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நிலமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம். உண்மையில் ஹூஸ்டன் இதனைப் பார்த்து பிற்காகத்தில் தமக்கு சாதகமாக இருக்குமே என்று பக்கங்களை சிதைத்து விட்டான். அப்பொழுதே “மெயிலில்” இந்த ஆளுடைய “அத்தாட்சிகளை அழிப்புத்தன்மையினை” எடுத்துக் காட்டி எழுதப்பட்டது. அத்ற்கும் இந்த ஆள் காட்டமாக பதில் சொல்லியுள்ளான்.
புதிய கோவிலில் கல்வெட்டுகள் கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது.
கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன. துறைமுக நகர் இவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது. பூம்பாவையின் பெயர் திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீசுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.
இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.
இதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான். பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. எனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது.
படிக்கட்டுகளில் கல்வெட்டுகள்
ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் முன்பு கடற்கரையில் (சாந்தோம் சர்ச்) இருந்தது.
பைபிள் கதைகள் அடிப்படையிலான கிறிஸ்துவம் இந்தியாவில் ஆயுத பலத்தோடு 16ம் நூற்றாண்டு நுழைய கோவாவில் முழு ஆட்சி பலம் வர 3000 கோவில்களை அழித்து சொத்துக்களை கொள்ளை அடித்தது கிறிஸ்துவ சர்ச். கோவா வந்த அரக்கத்தனம் கொண்ட ப்ரான்சிஸ் சேவியர் சொல்வார், நான் கடவுளை நம்பிய இந்துவை பைபிள் கதை வணங்கியாக மதம் மாற்றி -அவர்களது கட்வுள் சிலையை உடைக்க வைக்கும் போது அடையும் சந்தோஷம் அருமையானது என பன்றித்தனமாய் அம்மணமாக கூறியுள்ளார். இது பைபிளின் அடிப்படைக்கு ஒத்ததே - பைபிள் தெய்வம் அருவருப்பான இஸ்ரேலின் அருவருப்பாகிய யாவே கர்த்தர் வேறு தெய்வ வணக்கத்திற்காக கொடுத்த தண்டனை என்பதே பைபிள் கதைகளின் முழுசுமே.