Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளும் உரை ஆசிரியர்களும்:


Guru

Status: Offline
Posts: 7468
Date:
திருக்குறளும் உரை ஆசிரியர்களும்:
Permalink  
 


 திருக்குறளும் உரை ஆசிரியர்களும்: நக்கீரன் February 18th, 2014 

https://www.tamilcnn.lk/archives/251555.html

இருபதாம் நூற்றாண்டில் திருக்குறள் பற்றிய ஆய்வில் பெரும் புரட்சி ஏற்பட்டது. குறள் பற்றி நூற்றுக்கும் மேலான நூல்கள் வெளிவந்தன. அய்ம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் குறள் மொழிபெயர்க்கப் பட்டது. நூற்றுக்கணக்கான உரையாசிரியர்கள் குறளுக்குப் புத்துரையும் தெளிவுரையும் கண்டனர்.

திருக்குறளுக்குப் பல சிறப்புக்கள் இருக்கின்றன. இந்த சிறப்புக்கள் காரணமாகவே திருக்குறள் காலம் தோறும் கற்றோரால் போற்றி வரப்பட்டுள்ளது.

திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல். அதில் அய்ம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளின் முதல் பெயர் முப்பால். பின்னால் வந்தவர்களே அதன் ஆசிரியரின் பெயரை நூலுக்கு வைத்துவிட்டார்கள்.

ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகள், ஏழு சீர் களைக் கொண்டது. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.

முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு. போப்.

திருக்குறளுக்கு எழுதப்பட்ட பழைய உரைகள் பத்து என்பது மரபு. திருக்குறளின் பாடம் முதன்முதலில் நமக்குத் தெரிய வருவது மணக்குடவர் (10 ஆம் நூற்றாண்டு) உரை வழியாகவே. பரிமேலழகரின் உரை பத்தாவது. மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. மணக்குடவரின் உரையைப் பரிமேலழகர் பல இடங்களில் திருத்தி அமைக்கின்றார். திருக்குறளின் அமைப்பு முறையிலும் மாற்றம் செய்துள்ளார்.

பரிமேலழகர் உரை சிறப்படைந்ததற்கு காரணமாகக் கூறப்படுவன இவை:

பரிமேலழகர் உரையில் மிக நுட்பமான ஆழ்ந்த புலமை விளங்குகிறது. சிறப்பான உரை நுட்பம் கொண்டுள்ளது. அரிய இலக்கண நுட்பம் பளிச்சிடுகிறது.

ஆனால் திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் கால்கோள் இட்டதைத் தொடர்ந்து பரிமேலழகர் திருக்குறளைத் தமிழ்ப் பண்பாட்டு நூலாகக் கருதாமல், அதன்மீது ஆரியப் பண்பாட்டையும் மதச் சாயலையும் கருத்தியலையும் திணித்தார் என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. பரிமேலழகர் வைணவ சமய பிராமணர் என்பது இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்த்தது.

முப்பால் என்னும் பெயர் கொண்ட திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பால்களை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும் அது “வீடு” பற்றியும் பேசுகிறது என பரிமேலழகர் வலிந்து உரை கண்டார்.

பரிமேலழகர் ஆரியப் பண்பாட்டுக்கு உரிய தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நான்கு புருடார்த்தங்களின் தமிழாக்கமே திருக்குறள் என்றும் வள்ளுவர் மனுநீதி சாத்திரத்தைத் தான் தமிழில் தருகிறார் என்ற விமரிசனம் முன்வைக்கப்பட்டது.

காட்டாக பரிமேலழகர் திருக்குறளுக்கு எழுதிய உரைப் பாயிரத்தில் ‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும் ஆகும்’ என்று சொல்கிறார். அது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற மூன்று என்று சொல்லும் பரிமேலழகர் “அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரம்மசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றுக்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’ என்று சொல்கிறார். அத்துடன் தண்டம் என்பது ‘நால்வகை நிலத்ததாய் வருணந்தோறும் வேறுபாடு உடையது’ என்கிறார். அதாவது குறளின் நீதிக்குப் பதில் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனு நீதியைக் கைக்கொள்கிறார்.

திருக்குறள் மனு தர்மத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் அல்ல. வள்ளுவர் நால்வகை வர்ணங்களையோ, அந்தந்த வர்ணத்தாருக்கு உரிய சிறப்பு ஒழுக்கத்தையோ பற்றிப் பேசாமல் நாடு, இனம், சமயம் கடந்து அனைத்து மாந்தருக்கும் பொதுவான அறநெறியை உரைக்கிறார். பிறப்பு ஒக்கும் என்கிறார். ஆனால் பரிமேலழகர் தமது உரையில் வள்ளுவர் வர்ணாசிரம முறையை ஆதரிப்பதாகக் காட்டுகிறார்.

பரிமேலழகர் பெண்கள் இயல்பு பற்றி குறளில் இல்லாத, தவறான, விளக்கம் தந்துள்ளார். குறள் 61 உரையில் ‘அறிவறிந்த மக்கட்பேறு’ என்ற தொடருக்கு ”அறிவறிந்த’ என்றதனான் ‘மக்கள்’ என்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது’ என்று கூறி, ‘இதனால் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது’ என மேலும் ஒரு மனுநீதிக் கருத்தைத் திணிக்கிறார்.

குறள் 68 இல் ‘கேட்ட தாய்’ என்பதற்கு ‘பெண்ணியல்பால் தானாக அறியாமல் கேட்ட தாய்’ என சிறப்பு உரையில் கூறியுள்ளார். அதாவது பெண்ணிற்கு கல்வி, கேள்விகளால் வரும் அறிவில்லை எனவும் அதனால் தாய் தன் மகன் சான்றோனாய்த் திகழும் சிறப்பத் தானே அறிய மாட்டாள் எனவும் ஊர்ப்பெரியோர் வாயிலாகக் கேட்டே அறிவாள் எனவும் அவ்வுரை கேட்டமையால் பெரிதும் மகிழ்வாள் எனப் பரிமேலழகர் உரைக்கிறார். இது முற்றிலும் வள்ளுவத்திற்கு எதிரான கருத்து ஆகும்.

“திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக்கொள்ளப்பட்டது. அது தான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடு உடைமையின்” எனவும் “அஃதாவது – தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையரால்” எனவும் ஆங்காங்கே குறட்பாக்களின் உரை விளக்கங்களில் வருணாசிரம கருத்துக்களை – வள்ளுவர் கருதாததை – வலிந்து நுழைத்து பரிமேலழகர் வலிந்து உரை எழுதியிருக்கிறார்.

காமத்துப் பாலில் ‘பரத்தையிற் பிரிவு ஊடலுக்கு ஒரு காரணம்’ என்று வள்ளுவர் சொல்லாததைச் சொல்லி புலவி, புலவிநுணுக்கம், ஊடலுவகை அதிகாரங்களுக்கு துறை வகுக்கும்போது உரை காண்கிறார்.

பரிமேலழகர் கொண்ட சில பாடங்கள் மணக்குடவருடைய பாடங்களினும் வேறுபட்டுள்ளன. அவற்றுள் சில மணக்குடவரினும் சிறந்தவை. பிற பாடங்களில் பரிமேலழகர் உரை ஏற்கமுடியாதனவாக உள்ளன.

‘பலவிடங்களில் பரிமேலழகர் இலக்கண அமைதிக்காக இலக்கியத்தை முறித்து இயற்கைக்கு மாறான பொருள் கொண்டுள்ளார்’ என்று தமிழறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை கருதுகிறார்.

எனவே, பரிமேலழகர் உரையில் அடங்கியிருக்கின்ற ஆரியக் கருத்தியலை மறுத்து, தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப திருக்குறளுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.

ஒரு நூலுக்கு நூற்றுக்கணக்கான உரைகள் எழுதப்பட்டது ஏன்? அதற்கான தேவை என்ன? திருக்குறளுக்கு பல உரைகள் எழுதப்பட்டதற்கு முக்கிய காரணம் சில குறள்களின் பொருளை திருவள்ளுவர் ஊகத்துக்கு விட்டுவிட்டார். காட்டாக,

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (குறள் 41)

கலைஞர் உரை: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

மு.வ உரை: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை: மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

பரிமேலழகர் உரை: இல்லறத்தில் வாழ்பவன், பிரமச்சாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி ஆகிய மூவர்க்கும் துணையாவான்.

மணக்குடவர் உரை: இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்.

இன்னொரு குறள்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (குறள் 377)

வகுத்தான் என்பதற்கு ‘தெய்வம்’ என பரிமேலழகரும் ‘விதானம் பண்ணினவர்’ என மணக்குடவரும் ‘முன்னஞ் செய்தார்’ எனக் காலிங்கரும் ‘ஊழ்’ என மு.வ. அவர்களும் ‘வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறி’ எனக் கலைஞரும் ‘இறைவன் விதித்த விதி’ என்று சாலமன் பாப்பையா அவர்களும் பொருள் தருகின்றனர்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (குறள் 340)

துச்சில் இருந்த – குடியிருந்த (காலிங்கர்) முத்தி ஸ்தானம் (மணக்குடவர்) இருப்பிடம் (மு.வ), புகலிடம் (கலைஞர்) உடம்பினுள் குடியிருந்த உயிருக்கு வேறு நிலைத்திருக்கும் வீடு இல்லை போலும்! (பரிமேலழகர்). இப்படிக் புக்கில் என்பதற்கு வீடுபேறு என்று வலிந்து பொருள் கொண்டுள்ளார் பரிமேலழகர்.

தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், “பிறவாழி” எண்குணத்தான், பார்ப்பான், புத்தேளிர், ஊழ், தெய்வம், மறுமை, புத்தேளுலகு, எழுபிறப்பு, அறத்தாறு, வகுத்தான் போன்ற குழப்பம் தரும் சொற்கள் குறளில் காணப்படுன்றன.

வள்ளுவர் எழுதியுள்ள குறட்பாக்கள் சில வற்றில் எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று தெளிவாகக் காட்டுவார். சில குறட்பாக்களில் அவ்வாறு குறிப்பிடாமல், நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார். காட்டாக,

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (அறன் வலியுறுத்தல் – 35)

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின். (வான்சிறப்பு – 19)

குறளின் முதல் அதிகாரம் முதல் குறளில் வரும் ‘ஆதிபகவன்’ என்ற சொல் பற்றி ஒத்த கருத்து இல்லை. ஆதிபகவன் என்ற தொடர் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. சங்க காலத்துக்குப் பின்னரும் ஆதிபகவன் என்ற சொற்றொடர் சமயங்களின் முழுமுதற் கடவுளை குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளைத் தவிர வேறு எந்த பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆதிபகவன் என்ற சொற்றொடர் கையாளப்படவில்லை. இரட்டைக் காப்பியங்களில் பகவன் என்ற சொல் அருகனையும் (சமணம்) புத்தரையும் குறிப்பிடுகின்றது.

திருவாய்மொழியில் அறுவகைச் சமயத்தின் நெறியை ஏற்று உரைத்தவனாக “ஆதியம் பகவன்” குறிப்பிடப்படுகிறான். (திருவாய்மொழி 1_3_5)

வைதீகக் கடவுள்களில் ஒருவரேனும் ஆதிபகவன் என்று அழைக்கப்படுவதில்லை. மேலும் எஞ்சிய 9 குறள்களில் காணப்படும் (1), வாலறிவன் (2), மலர்மிசை ஏகினான் (3), வேண்டுதல் வேண்டாமை இலான் (4), இறைவன் (5, 10), பொறிவாயில் அய்ந்தவித்தான் (6), தனக்குவமை இல்லாதான் (7), அறவாழி அந்தணன் (8), எண்குணத்தான் (9) என்ற சொற்கள் யாரைக் குறிப்பிடுகின்றன என்பதில் முரண்பாடு காணப்படுகிறது. இந்தச் சொற்கள் ஒரு முழுமுதற் கடவுளைக் குறிப்பிடவில்லை என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் இந்தச் சொற்றொடர்கள் சமண, பவுத்த, வைதீக, கிறித்துவ மதத்தினர் தாங்கள் வழிபடும் கடவுளரைக் குறிப்பதாகப் பொருள் கொள்கின்றனர்.

இதனால் போலும் செக்கிழுத்த சிதம்பரனார் குறளின் முதல் மூன்று அதிகாரங்களும் இடைச் செருக்கல் என்கிறார்.

திருக்குறளின் மூலப் படி கிடைக்கவில்லை. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்துக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டு கழித்து திருக்குறளுக்கு உரை செய்த ஆசிரியர்களது படிகளே எமக்குக் கிடைத்துள்ளன.

மேலும் திருக்குறளை பலகாலங்களில் ஏடு பெயர்த்தெழுதியதால் பாடவேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. சிலர் தம் சமயம், கொள்கை ஆகியவற்றிற்கு மாறானவற்றை நீக்கிவிட்டு, தம் கருத்திற்கு ஏற்ப மாற்றினர். பழைய நூல்களைப் பதிப்பித்தவர்கள், கிடைக்காத பகுதிகளுக்கு, தாமே எழுதி அவ்விடத்தை நிரப்பியதாலும் மூலபாடம் திருத்தம் கண்டது. இவ்வாறான இடைச்செருகல் குறைகள் ஏற்பட ஏதுவாயிற்று.

பொருட்சிறப்பு இல்லை என்று கருதி பாடதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. யாப்பு அமைதிக்காவும் எதுகை மோனை நயம் என்ற காரணம் கொண்டும், பல்வேறு பாடத் தவறுகள் நடந்தன.

இதனால் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் (குறள் 55) போன்ற கருத்துக்கள் இன்று மறு ஆய்வுக்கு உரியனவாக கொள்ளப்பட்டுள்ளது.

பரிமேலழகரை உயர்த்தித் திருக்குறளைத் தாழ்த்தும் எண்ணம் சிலர் கொண்டிருந்ததால் அதற்கு எதிர்வினையாக பரிமேலழகரின் உரைக்கு எதிர்ப்பு எழுந்தது.

அதனால் அவரது உரையின் நிறைகுறைகளை ஆராயும் போக்குத் தோன்றியதோடு, தனித்தமிழ் உணர்வும் கால்கொள்ளத் தொடங்கியது. திராவிட – பகுத்தறிவு கோட்பாட்டாளர்கள் புதிய கண்ணோட்டத்தில் திருக்குறளுக்கு உரை எழுதினார்கள்.

இருந்தும் ஒரு குறளுக்கு ஒரு உரைதான் இருக்க வேண்டும். திருக்குறளுக்கு திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை, அவர் வாழ்ந்த கால நம்பிக்கைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உரை எழுத தமிழ் அறிஞர்கள் அடங்கிய குழு நியமிக்கப் படவேண்டும். அந்தக் குழு காய்தல் உவத்தல் இன்றி உரை எழுத வேண்டும். தற்காலத்துக்கு சில குறள்கள் பொருந்தி வராவிட்டால் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். மேலும் உரைகள் பெருகாதிருக்க இதுதான் ஒரே வழி.

(நன்றி – தகவல் 23 ஆவது ஆண்டு மலர்)



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

திருக்குறளை இந்து சமய நூலாக திரித்து சொல்லுகின்றார்கள் என்கிற முக.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அர்ஜூன் சம்பத் கண்டனம்.! http://www.jananesan.com/1708/

திருக்குறளை இந்து சமய நூலாக திரித்து சொல்லுகின்றார்கள் என்கிற முக.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அர்ஜூன் சம்பத் கண்டனம்.!

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில் :- திருக்குறளுக்கு காவி ச்சாயம் பூச இந்து இயக்கங்கள் முயற்சிக்கின்றன என்ற குற்றச்சாட்டை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் உருவாக்கியுள்ளார் அவரோடு கூட கம்யூனிஸ்ட் கட்சியின் உடைய தலைவர் திருவள்ளுவர் நெற்றியில் திருநீரு பூசப்படுகிறது இது திருவள்ளுவரை அவமதிப்பது என்று கருத்து தெரிவித்துள்ளார் திருக்குறள் ஒரு மதச்சார்பற்ற நூல் திருக்குறள் இந்து சமய நூல் அல்ல இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் திருக்குறளை இந்து சமய நூலாக திரித்து சொல்லுகின்றார்கள் என்கிற குற்றச்சாட்டு எங்கள் மீது சுமத்தப்படுகிறது திருக்குறள் அப்பழுக்கற்ற ஒரு இந்து சமய நூலாகும் கடவுள் வாழ்த்துடன் துவங்குகிற திருக்குறள் மறுஜென்மம் நம்பிக்கை வினைப்பயன் புலால் உண்ணாமைகள் உண்ணாமை ஒருவனுக்கு ஒருத்தி கற்புநெறி உள்ளிட்ட பல இந்து சமய நம்பிக்கைகளை வலியுறுத்துகின்றது.

திருக்குறள் தோன்றிய காலத்தில் இஸ்லாம் கிறிஸ்தவம் உள்ளிட்ட எந்த மதங்களும் தோன்றவில்லை இந்து சமயம் மட்டுமே இருந்தது இந்து சமயத்திற்கு கூட இந்து மதம் என்று பெயர் வைக்கப்படவில்லை இந்து சமயம் என்பது ஒரு மதம் அல்ல ஒரு கடவுள் ஒரு புத்தகம் அதை நம்பாவிட்டால் நரகம் மற்றவர்களை மதம் மாற்றி அவர்களை தங்களுடைய நம்பிக்கைக்கு கீழே கொண்டுவர வேண்டும் என்பது இஸ்லாம் கிறிஸ்தவம் பௌத்தம் உள்ளிட்ட மதங்களின் கோட்பாடு ஆகும் ஆனால் இந்து சமயம் என்பது எல்லோருக்கும் பொதுவானதாகும் இந்து சமயத்தின் ஆன்மீகத்திற்கு சாதி மதம் கிடையாது மற்றவர்களெல்லாம் மதம் என்று பெயர் வைத்துக் கொண்டார் காரணத்தினால் நாம் அந்தப் பெயரை கலாச்சாரம் தேசியத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் கடந்த பல வருடங்களாகவே கிறிஸ்தவப் பாதிரிமார்கள் திருக்குறளை ஒரு கிறிஸ்துவ நூலாக மாற்றிட முயற்சி செய்து வருகின்றார்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் கிறிஸ்தவ வெள்ளைய ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களுக்கு துணை போய் தமிழை தமிழ் மொழியை தமிழர் பண்பாட்டை திருக்குறளை கிறிஸ்தவ மயமாக மாற்ற முயற்சித்து வருகிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபொழுதும் திருக்குறளை ஒப்புக் கொண்டது கிடையாது திராவிடர் கழக ஸ்தாபகர் ஈவேரா அவர்கள் திருக்குறளை தங்கத்தட்டில் வைக்கப்பட்டு இருக்கின்ற மலம் என்று குறிப்பிடுகிறார் திருக்குறளில் இருக்கக்கூடிய புலால் உண்ணாமை கள் உண்ணாமை கற்பு ஆகியவற்றை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது இஸ்லாமிய மத எழுத்தாளர் மதனி என்பவர் எழுதிய உலகப் பொதுமறையான திருக்குறளை ஏற்றுக்கொள்ள முடியாது குர்ஆன் தான் உலகப்பொதுமறை என்று சொல்லும் அந்த புத்தகத்திற்கு கருணாநிதி அன்பழகன் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னுரை எழுதி வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.

எனவே திருக்குறள் என்பது இந்து சமய நூல் தான் என்பதற்கு கவியரசு கண்ணதாசன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உள்ளிட்டோர் பல சான்றுகளுடன் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சி வள்ளுவம் கண்ட ஹிந்துத்துவம் என்கின்ற அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கிறது செயின்ட் ஜார்ஜ் கோட்டையை வள்ளுவன் கோட்டையாக மாற்றுவோம் என்று ஆன்மீக அரசியல் மாநாட்டை நடத்துகிறது திராவிட முன்னேற்ற கழகம் திட்டமிட்டு இந்து சமய நூலாக திருக்குறள் திகழ்வதை தடுப்பதற்கு சதி செய்கின்றது குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எங்கு சென்றாலும் திருக்குறள் பெருமை பேசுவது திராவிட இயக்கத்தினுடைய முகமூடியை கிழிப்பது போல இருக்கிறது எனவே வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தங்களுடைய ஊடக பலத்தால் திருக்குறள் வேறு இந்து சமயம் வேறு என பிரிக்க நினைப்பது முட்டாள்தனமாகும்.

 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் ஐயா எஸ்.எஸ்.வாசன் அவர்கள் அவ்வையார் என்கிற படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து திருக்குறள் திருவள்ளுவர் எப்படி இருந்தார்கள் என்பதற்கு உதாரணமாக அந்தப் படத்தினுடைய காட்சி அமைப்பை அமைத்திருக்கிறார் வேங்கடசர்மா என்பவரால் திருவள்ளுவருடைய ஓவியம் வரையப்பட்டு அதன் பின்னர் திராவிட இயக்கத் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது திராவிட இயக்கத்தவர்கள் வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு திருவள்ளுவர் சிலையில் திருநீறு இல்லாமலும் ருத்ராட்சம் இல்லாமலும் அவர்கள் அந்த சிலைகளையும் படத்தையும் வெளியிட்டு திருவள்ளுவரை ஒரு நாத்திகர் போல சித்தரிக்கிறார்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது குறிப்பாக திருவள்ளுவருக்கு திருநீறு பூசி இதுகுறித்து அவமானம் என்று சொல்கின்ற கம்யூனிஸ்டுகளை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது திருநீறு தமிழரின் அடையாளம் நீறில்லா நெற்றி பாழ் என்று சொல்கிறார் அவ்வையார் எனவே திருநீற்றையும் திருக்குறளையும் திமுக தொடர்ந்து அவமானப்படுத்தி கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் துணைபோய் திருக்குறளை ஒழித்துக்கட்ட தொடர்ந்து திமுக முயற்சிக்கிறது திருக்குறளை காப்பாற்றிட இந்து மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார் அர்ஜூன் சம்பத் .



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

தமிழில் அறிவியலும் ஆன்மிகமும்
தமிழ் மொழியின் தொன்மை அளவிடற்கரியது. இந்த மொழியில் இருந்துதான் உலக மொழிகள் தோன்றின. பழைமையான பிராமி எழுத்துக்களாலும், வட்டெழுத்து சங்கிலி எழுத்துக்களாகவும் எழுதி வரப்பட்டது. இப்போது தமிழ் விஞ்ஞான பூர்வமாகவும் உச்சரிப்பு ரீதியாகவும் வாய்மொழி உத்தரவு...களை (VOICE COMMAND) கணினிகள் புரிந்து கொள்ளும் விதமாகவும் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தமிழ் என்பது நம் சித்தர்களின் சர நூல் சாத்திர ரீதியாகவும் தமிழ் எழுத்துக்கள் இத்தனைதான் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயிர் எழுத்துப் பன்னிரண்டும் வலது நாசியில் ஓடக் கொண்டிருக்கும் சூரியகலையைக் குறிக்கும். அதாவது அந்த சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதை 12 உயிரெழுத்துக்களாக்கி இருக்கிறார்கள்.நெடில் ஏழும் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைக் குறிப்பன. இதைக் குறிக்கவே திருக்குறளில் ஏழு சீர்களை வைத்துள்ளார். மேலும் 133 அதிகாரங்களையும் வைத்துள்ளார். அதாவது 1+3+3=7. குறில் எழுத்து ஐந்தும் ஐந்து ஐம்பூதங்களையும், பொறிகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள், புலன் ஐந்தைக் குறிக்கும். நெடில் ஏழு எழுத்துக்களும், குறில் ஐந்து எழுத்துக்களும் வைத்ததன் மற்றொரு காரணம் மனிதன் நெடிய ஆயுள், நெடிய புகழ், நெடிய ஞானம் பெற வேண்டும் என்பதற்காகவே. இவ்வாறு குறிலை குறைவாகவும் நெடிலை அதிகமாகவும் வைத்தார்கள். மெய்யெழுத்துக்கள் 18 வைத்ததன் காரணம் இடது நாசியில் ஓடும் சந்திர கலை 16 அங்குலம் ஓடுகிறது.அத்துடன் மனம், உயிர் இரண்டும் சேர்ந்து 18 மெய்யெழுத்துக்களாக வைத்துள்ளார்கள். ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையான 24 நிமிடத்திற்கு 360 மூச்சு (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ), ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே 216 உயிர் மெய் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஆயுள் 120 வருடம்.மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே! மேலும் தனிநிலை என்பதான ஆயுத எழுத்தை முக்கண் முதல்வனான பரமசிவனுக்கு இணையாக வைத்தார்கள். தமிழ் என்ற சொல்லே ஒரு வல்லெழுத்து(த), மெல்லெழுத்து(மி), ஒரு இடையின எழுத்து(ழ்) எனக்கோர்த்து உருவாக்கப்பட்டது. இப்படி தமிழ் மொழி எழுத்துக்கள் பல காரணங்களை வைத்து எழுத்தாக்கம் செய்துள்ளார்கள். கிளவியாக்கம் என்பது சொல்லாக்கம் என்பதுவே! இந்த சொல்லாக்கப்படுவதற்கு பல விதிமுறைகளோடு இயற்கையோடு இயைந்த மொழி நம் தமிழ்மொழி! சித்தர்கள் தந்த தமிழ் அண்ட, பிண்ட விளக்கங்களை தன்னகத்தே கொண்ட கட்டற்ற அறிவியல் களஞ்சியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 

திருக்குறளில் அறம்- ஒரு ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு

கு.அழகர்சாமி

 
Spread the love
 
 

1.முன்னுரை:

திருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல. அணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில் பேசிக்காட்டும் அசாத்தியத்தில் தான் அது குறள். அந்தப் பத்துக் குறட்பாக்களில், பேசப்படும் அறக் கருத்து வரையறுக்கப்படும்; அதன் அவசியம் விளக்கப்படும்; விளைவுகள் சொல்லப்படும். அதாவது அறங் கடைப்பிடிப்பதின் மேன்மையும், அறத்தைக் கடைப்பிடிக்காததின் கீழ்மையும் குறிக்கப்படும். கூர்ந்து நோக்கினால் சில கருத்துக்களை நிறுவுவதற்காகக் காணும் நடைமுறை நிகழ்வுகளைச் சான்றாகக் காட்டும் அனுபவ அணுகுமுறையும் (empirical method) கையாளப்படும்.( குறள்கள் 37,114,169 போன்ற குறள்களை நோக்குக)சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு அறக் கருத்தென்னும் வைரத்தின் பன்னிறங்கள் பத்துக் குறட்பாக்களில் பட்டை தீட்டப்பட்டிருக்கும்.

2.திருக்குறள் வாசிப்பு- ஒரு அதிகாரத்தில் குறட்பாக்கள் அளவில்:

இப்படி ஒவ்வொரு அறக்கருத்தையும் பத்துக் குறட்பாக்களில் வாசிக்கும் போது சில சமயங்களில் ஒரு அதிகாரத்தில் பேசப்படும் அறக் கருத்தின் கட்டமைப்பும் உன்னதமும் இப்போது இருக்கும் நிரல் முறையில் அல்லாமல் வேறு நிரல்முறையில் இருந்தால் இன்னும் உன்னதம் கூடி நிகரற்று விளங்குமோ என்று தோன்றும். இது உள்வயமானது (subjective) என்று சிலர் புறந்தள்ளலாம். இப்போது இருக்கும் ஒவ்வொரு குறட்பாக்களின் நிரல் முறையும் உள்வயமானதென்று இருக்கும் போது இன்னொரு நிரலில் அமையும் உள்வயமான வாசிப்பு ஒரு அறக்கருத்தைக் கூடுதலாய்ப் பட்டை தீட்ட முடியமென்றால், திருக்குறள் என்ற நிகரற்ற படைப்பு வாசகனுக்குத் தரும் வாசிப்பு சுதந்திரம் அது. அரவிந்தர் திருக்குறளின் கடவுள் வாழ்த்தையும் , வான் சிறப்பின் ஐந்து குறள்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளின் கடவுள் வாழ்த்தை அரவிந்தர் மொழி பெயர்த்துள்ள விதம் போப், சுத்தானந்த பாரதி போன்ற மற்ற மொழி பெயர்ப்பாளர்களிடமிருந்து வித்தியாசமாக மூலத்தின் உண்மையையும், உயிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது.(Usha Mahadevan(Jan(2009)) அதற்கு அரவிந்தருடைய ஆன்மீக அனுபவம் காரணமாய் இருக்க வேண்டும். ஆனால் சுவாரசியமானது என்னவென்றால் கடவுள் வாழ்த்தின் பத்துக் குறட்பாக்களை மொழி பெயர்க்கும் போது அவர் நிரல்படுத்தியிருக்கும் முறை. வழக்கமாக கடவுள் வாழ்த்தில் நாம் வாசிக்கும் பத்துக் குறட்பாக்களின் நிரல் முறையை, 1,2,3,4,5,6,7,8,9,10 என்பதற்குப் பதிலாக 1,2,3,7,8,4,5,6,10,9 என்று மாற்றியமைக்கிறார். இந் நிரலை1,2,3,6,7,8,4,5,10,9 என்று சிறிது மாற்றியமைத்தால் இன்னும் வாசிப்பு அனுபவம் மிகைப்படும். சொல்லப்படும் முறையிலும், கருத்தாக்கதிலும் மூன்றாவது ஆறாவது குறள்கள் இயைபுடைத்தாயிருக்கின்றன. இந்த இரு குறள்களை வாசித்துப் பாருங்கள்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழ்வார்.

இதே போன்று ஏழாவது எட்டாவது குறள்களும், நான்காவது ஐந்தாவது குறள்களும் முறையே இயைபுடையதாகி வாசிப்பு அனுபவத்தைக் கூட்டுகின்றன. இறைவனைச் சார்ந்தோருக்குச் சேரும் நலன்களைச் சொல்லும் நான்காவது, ஐந்தாவது குறள்களோடு பத்தாவது குறள் அடையும் நலன்களின் மலையடுக்குகளில் இறுதி உச்ச அடுக்கைச் சொல்வது போல் இருக்கிறது. மேற்சொன்ன மூன்று குறள்களையும் ஒரு சேர வாசித்துப் பாருங்கள்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு

யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார்.

திருக்குறளின் இந்த ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவம் வாசிக்கும் யாருக்கும் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக அறன் வலியுறுத்தல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான்காம், ஐந்தாம் குறள்கள் அறத்தை வரையறுக்கின்றன.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

இவற்றை முதல் இரு குறட்பாக்களாக வாசித்துப் பார்க்கலாம். அறத்தின் சிறப்பை ஒன்றாம் இரண்டாம் ஒன்பதாம் குறள்கள் பேசுகின்றன. ஆறாம், எட்டாம் குறள்கள் அறம் செய்ய வேண்டிய காரணங்களைச் சொல்கின்றன. மூன்றாம், பத்தாம் குறள்கள் அறம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அதற்கு நடை முறை உண்மையைச் சொல்வதாய் ஏழாவது குறள் அமைகிறது. கீழ் சொல்லப்படும் இந்த ஏழாம் குறளைப் பத்தாவது குறளாக வாசித்துப் பார்க்கும் போது ஒரு முத்தாய்ப்பு போல் ஒரு ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவம் கிடைக்கிறது.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

ஆக அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் எனது வாசிப்பு அனுபவத்தில் 4,5,1.2,9,6,8,3,10,7 என்று குறள்களை நிரல் மாற்றி வாசிக்கும் போது அறன் வலியுறுத்தல் என்ற கருத்தாக்கத்தின் முழுப் பரிமாணமும் ஒருங்கிணைந்த வாசிப்பாய் மனத்தில் பிடிபடுகிறது. இன்னொருவருக்கு, இது வேறு விதமாகவும் அமையலாம். இங்கு வலியுறுத்தப்படுவது வழக்கமான நிரல் முறை வாசிப்பில் திருக்குறளின் மகோன்னதம் முழுதும் மனத்தில் பிடிபடாமல் போய் விடும் சாத்தியம் இருக்கிறது என்பதைத் தான். இது ஒரு அதிகாரத்தின் கீழ் வரும் பத்துக் குறட்பாக்களின் வாசிப்பை விட , அடுத்த தளத்தில் அதிகார முறைமையில் வாசிக்கும் போது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

3.திருக்குறள் வாசிப்பு- அதிகார அளவில்:

திருக்குறளின் அறத்துப்பால், பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற நான்கு இயல்களாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இயலும் அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இல்லறத்துக்கான அறங்களைப் பேசுவது இல்லறவியலாகவும், துறவறத்துக்கான அறங்களைப் பேசுவது துறவறவியல் எனவும் இல்லறவியல் துறவறவியலுக்கான வகைப்படுத்தலை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.. ஆனால் இப்படி எளிதாகக் கோடு போட்டுக் கொண்டு வாசிப்பது ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதாக இல்லை. இல்லறவியலில் வைக்கப்படும் அறக்கருத்துக்களுக்கும் துறவிறவியலில் வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அப்படியொன்றும் பாகம் பிரிப்பது போல் பிரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை என்று துறவறவியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் கருத்துக்கள் , துறவறவியலுக்கு மட்டுமே உரித்தானது என்பது கண்மூடிய நிலைப்பாடாகத் தான் இருக்கும். இந்தக் கருத்துக்கள் இல்லறவியலுக்கும் இல்லறத்தின் நடைமுறைக்கேற்ற அளவில் பொருத்தமானவை தாம். அதே போல் பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம் போன்ற கருத்தாக்கங்கள் இல்லறவியலுக்கு மட்டுமே உரித்தானவை என்ற நிலைப்பாடும் அறிவுக்கு முழுதும் ஒப்புடையதாய் இல்லை. துறவற நிலையினும் இந்த அறக்கருத்துக்களுக்கு ஒரு பொருத்தம் இருக்கிறது. ஆக துறவறவியல், இல்லறவியல் என்ற பகுப்பு பல்வேறு அறக்கருத்துக்களிடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மறுதலிக்கிறது. ஆனால் அதிகாரங்களின் வரிசைக்கு, சொல்லப்படும் காரணங்கள் அவ்வளவு ஒப்புடையதாக இல்லை. சில அதிகாரங்களின் வரிசைக் கிரமத்திற்குச் சொல்லப்படும் காரணங்கள் வலிந்து நியாயங்கள் கற்பிக்கப்பட்டது போல் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்திற்கு அடுத்து பிறனில் விழையாமை என்ற அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பரிமேல் அழகரின் உரை தரும் காரணம் விசித்திரமாக இருக்கிறது. ”அஃதாவது காமமயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை. இஃது ஒழுக்கம் உடையார் மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது” என்பது பரிமேல் அழகர் உரை தரும் விளக்கம். அடுத்து பொறையுடைமை அதிகாரம் பிறனில் விழையாமை அதிகாரத்தின் பின் வைக்கப்பட்ட முறைமைக்குப் பரிமேல் அழகரின் உரை தரும் விளக்கத்தைப் பாருங்கள். “அஃதாவது காரணம் பற்றியாதல், மடமையானாதால் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன் கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்பதற்கு, இது பிறன் இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.” இந்த மாதிரியான வைப்பு முறையில் இன்னொரு சிக்கலும் ஏற்படுகிறது. ஒரு அதிகாரம் விளக்கம் பெறும் போது அதன் பெற்றி தாழ்வுறுவ்து போல் அதற்கான வைப்பு முறை விளக்கம் தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக நடுவு நிலைமை அதிகாரத்திற்கான விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ”அஃதாவது பகை நொதுமல்,நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. இஃது நன்றி செய்தார் மாட்டு அந்நன்றியினை நினைத்த வழிச் சிதையுமன்றே? அவ் இடத்துஞ் சிதையலாகாது என்றதற்கு செய்ந்நன்றி அறிதலின் பின் வைக்கப்பட்டது.” நடுவுநிலைமை என்ற கருத்தாக்கத்தின் தன்னளவிலான உயர்ச்சி அதற்கான அதிகார வைப்பு முறையில் சேர்த்துக் காணப்படும் போது உயர்ச்சியிலிருந்து தாழ்வுறுகிறது.

இந்த அதிகார முறைமை பற்றி ஏன் பெரிதும் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்கலாம். திருக்குறளின் பல் வேறு அறக்கருத்துக்களை உதிர்ந்த மணிகள் போல் பொறுக்கிக் கொள்ளலாமா? அல்லது பல் வேறு அறக்கருத்துக்களிடையே ஒரு தத்துவக் கோர்வை இருக்குமா என்று ஒரு மணிமாலையைக் கோர்த்துக் கொள்ளலாமா? இந்த இரு கேள்விகளில் நாமெடுத்துக் கொள்ளும் தெரிவைப் பொறுத்துத் தான் திருக்குறளில் பேசப்படும் அறத்தை நாம் மனத்தில் அகப்படுத்திக் கொள்ளும் திறனும் தீர்க்கமும் அமைகின்றன. தம்மபதத்தில் சினம், பேராசை, பயம், எண்ணம், பற்று போன்ற கருத்துக்களை வாசிக்கும் போது தம்மளவில் தனித்தனியாய் இருந்தாலும் அவை புத்தரின் போதனைகள் என்ற பிண்ணனியில் புத்தரின் தத்துவாக்கங்களான எண்பிரிவு வழி, நான்கு வாய்மைகளோடு பொருத்திப் பார்க்கப்படும் நீர்மையான் தம்முள் இயைபும் முழுமையும் பெறுகின்றன. இதையொட்டி, திருக்குறளுக்கும் ஒரு சமயப் பிண்ணனி தேடி ஆய்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயக் கருத்துக்கள் திருக்குறளில் உள்ளதாக வாதிடுகிறார்கள். ஜைன சமய சித்தாந்தத்தின் படி திருக்குறளை இயற்றியவர் குந்த குந்த ஆசாரியர் என்பவராவர். திருக்குறளுக்கு ஜைன உரை இருக்கிறது. இந்தக் கட்டுரையில் முயற்சிப்பது என்னவென்றால் திருக்குறளில் பேசப்படும் கருத்துக்களில் ஒரு தத்துவக் கோர்வையை நம்மால் நெய்து கொள்ள முடியுமென்றால் அது திருக்குறளில் பேசப்படும் அறத்தினை நாம் மேலும் வளமும்,முழுமையும் கூடிப் புரிந்து கொள்ள முடியும் என்பது தான். இந்தத் தத்துவார்த்தப் புரிதலுக்குத் தான் திருக்குறளின் தற்போதைய வைப்பு முறையிலிருந்து விலகி நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது.

அறத்தை மொழி, மெய், மனம் சார்ந்து புரிந்து கொள்வது ஒரு தத்துவார்த்த முறை. வாழ்வின் பரிசுத்தத்தையும் மொழி, மெய், மனம் சார்ந்த பரிசுத்தங்களாக அடையாளம் கண்டு கொள்ளலாம். திருக்குறளில் அறத்துப்பாலில் பேசப்படும் அதிகாரங்களை இந்த தத்துவார்த்த அடிப்படையில் நிரல் படுத்திப் புரிந்து கொள்ள முடியுமா என்பது தான் கேள்வி. மொழி சார்ந்த அறங்களாக இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை போன்ற அதிகாரங்கள் அடங்குகின்றன. இங்கு புத்தரின் மொழி சார்ந்த பரிசுத்தத்தின் தன்மைகளாக பொய்மையும், பயனில் பேச்சும் என்று கூறப்படும் விளக்கத்தை நினைவில் கொள்வது பொருத்தமானது.(The Buddha and His Dhamma, Dr.B.R.Ambedkar,p.230)).அடுத்து மெய் சார்ந்த அறங்களாக கீழ்க்கண்ட அதிகாரங்களை அடையாளம் காணலாம்- பிறனில் விழையாமை, வெஃகாமை, புலால் மறுத்தல், கள்ளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை. இவற்றை புத்தரின் மெய் சார்ந்த அறத்தின் தன்மைகளாகச் சொல்லப்படும் பண்பு நலன்களான- பிரிதொரு உயிர் கோறாமை, கள்ளாமை, தவறான புலனிச்சைகள் – என்பவற்றோடு பொருத்திப் பார்த்துக் கொள்வது சரியானது.( The Buddha and His Dhamma, Dr.B.R.Ambedkar,p.229)). மூன்றாவதாக மனம் சார்ந்த அறத்தை, முன்னால் குறிப்பிடப்பட்டது போல்

’மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.’

என்று திருக்குறள் மையப்படுத்திச் சிறப்பிக்கிறது. இந்தக் குறளை அடுத்து வரும் குறள் முன்னாலே குறிப்பிடப்பட்டது தான்.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

மனம் சார்ந்த அறத்தின் பண்புகளாகக் கடிந்தொழுக வேண்டியவற்றில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் குறிப்பாகச் சொல்லப்படுகின்றன. கடிந்தொழுக வேண்டிய இந்த நான்கு பண்புகளை விரித்துரைக்குமுகமாக அழுக்காறாமை, அவா அறுத்தல், வெகுளாமை, பொறையுடைமை என்ற நான்கு அதிகாரங்கள் அமைகின்றன. ஆக, மொழி, மெய், மனம் சார்ந்த அறங்கள் ஒழுக்கத்தின் அடிப்படையாய் அமைய, இதன் பிண்ணனியில் ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம் என்ற இரு அதிகாரங்களையும் இணைந்து வாசிக்கும் போது சில குறள்களின் அர்த்தங்கள் ஆழம் பெறுகின்றன. எடுத்துக் காட்டாக,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்

என்ற குறளுக்கு(குறள் 280) பரிமேழகர் உரையைப் பாருங்கள்-”உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின், தவம் செய்வார்க்குத் தலைமயிரை மழித்தலும், சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா”. இந்த உப்பு சப்பில்லாத உரையை விட இந்தக் குறள் வாழ்க்கையின் இரு தீவிர நிலைகளை- உல்லாசத்தில் திளைத்தல் அல்லது உடல் வருத்தி இளைத்தல்- என்பதைக் குறிப்பதாகி, இரண்டு நிலைகளும் வேண்டா என்று மத்திய வழியைச் சுட்டுவதாய்ப் பொருள் கொள்ளும் போது பொலிவு பெறுகிறது. இது புத்த உரை என்று சொல்லலாம். அதற்காக உப்பு சப்பில்லாத உரையைத் தூக்கி நிறுத்த முடியாது. அதுவும் பத்துக் குறள்களும் வயிர மணி போன்று ஒளி விடும் தவம் என்ற அதிகாரத்தின் பின் வரும் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தில் வரும் இந்தக் குறளுக்கு எப்படி இப்படியான உப்பு சப்பில்லாத உரை இருக்க முடியும். மேலும் கூடா ஒழுக்கம் அதிகாரத்தில் வரும் ஏனைய ஒன்பது குறள்களின் பிண்ணனியில் மத்திய வழியைப் பத்தாம் குறள் சுட்டுகிறது என்பது முத்தாய்ப்பாகவும் முடிவாகவும் இருக்கும் என்று அறுதியிடலாம். ஒழுக்கமுடைமையையும் ‘தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல்’ என்று பரிமேல் அழகர் உரை குறிப்பிடும் போது உரைகாரரின் கால சமூக ஒழுக்கம் திருக்குறளின் மேல் திணிக்கப்பட்டு விட்டதா என்று தோன்றுகிறது.

அற ஒழுக்கத்தின் அடுத்த கட்ட மன நிலைகளாக அன்புடைமையையும் அருளுடைமையையும் நாம் தேர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த மன நிலைகளை பெளத்ததில் பேசப்படும் கருணா, மைத்ரி என்ற நிலைகளோடு ஒப்பிடலாம். கருணா எனபது சக மனிதர்களோடான அன்பாகவும், மைத்ரி என்பது சக உயிர்நிலைகளோடான அன்பாகவும் ((மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு(குறள்:244)) பரிணமிக்கின்றன. அருளுடைமை குறித்து “அஃதாவது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை” என்று பரிமேல் அழகர் உரையும் குறிக்கிறது. அன்புடைமை பற்றி ‘இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள் மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயன் ஆகலின் இது வேண்டப்பட்டது’ என்று பரிமேல் அழகர் உரை சொல்லும் போது அன்புடைமையை இல்லறத்தாரொடு என்று பொருத்திப் பார்ப்பதை விட சக மனிதர்களோடு என்று பொருத்திப் பார்த்துக் கொள்வது நல்லது. இதை அன்புடைமை அதிகாரத்தில் வரும் குறள்களை வாசிக்குங் கால் உணரலாம். மேற் சொன்ன அன்புடைமை, அருளுடைமை அதிகாரங்களை ஒட்டி ஒப்புரவறிதல், ஈகை என்ற அதிகாரங்களை வாசித்தால் செல்வத்தைக் கையாள வேண்டிய அற நிலைகளைப் (ஊருணிநீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு. (குறள்(215)),அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி.(குறள்(226)) பெரிதும் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

ஆக எதைக் கருதி மொழி,மெய், மனம் சார்ந்த மேற் சொன்ன அறங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு மெய்யுணர்தலைக் கருதியே அது இருக்க முடியும் என்ற அளவில் திருக்குறளின் ’மெய்யுணர்தல்’ அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்த மெய்யுணர்தல் ‘மாசறு காட்சி (குறள்; 352; மற்றீண்டு வாரா நெறி(குறள்:356); பிறப்பென்னும் பேதைமை நீங்கிச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது(குறள்:358). இந்த மெய்யுணர்தல் அதிகாரத்தில் வரும் பத்தாம் குறள் மூன்று மாசுக்களை குறிப்பிட்டுச் சொல்கிறது.

காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக் கெடும் நோய்.

புத்த கோசர் தனது “ தூய்மையுறுவதற்கான வழி(The Path of Purification) என்ற நூலில் மூன்று அடிப்படை மாசுக்களைக் குறிப்பிடுகிறார். அவை பேராசை(greed), வெறுப்பு(hatred), காமம்( infatuation) என்பவை. இவை சகதி, எண்ணெய் போன்று தம்மளவில் மட்டும் மாசானவை அல்ல; மற்றவற்றையும் மாசுடையாக்குபவை என்பார் அவர்.(The Dhammapada, Eknath Eswaran(1996),p.150) புத்த கோசரின் மூன்று அடிப்படை மாசுக்களைப் போலவே, திருக்குறளின் மூன்று அடிப்படை மாசுக்கள்- காமம், வெகுளி, மயக்கம்- மெய்யுணர்தலுக்குத் தடையாக உள்ளன. மயக்கம் என்பதை அறியாமை, அல்லது அகந்தை என்று பொருள் கொண்டால், விருப்பு (காமம்), வெறுப்பு (வெகுளி) என்ற மனம் சார் நிலைகளான் மாசுக்கள் மெய்யுணர்தலுக்குத் தடையாகின்றன. இந்தக் கருத்து ‘யான் எனது என்னும் செருக்கு அறுப்போன்’ என்று வரும் குறளில் (குறள்:346) மேலும் விளக்கம் பெறுகிறது. ‘தான் இல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை எனது என்றும் கருதி அவற்றின் கண் பற்றுச் செய்வதற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்’ என்று பரிமேல் அழகர் உரை விளக்கம் சொல்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் ’தான்’ என்பது உடல் உபாதைகளால் பாதிக்கப்படாது உடலினின்றும் தனியாய் என்றும் நிலையாய் அனுபூதியாய் ஒளிரும் ஆத்மா என்ற ரீதியில் சொல்லப்படவில்லை. ‘தான்’ ’எனது’ என்னும் அகந்தை நிலைகளை அகற்றி ஒரு அகண்ட பிரக்ஞையைச்(cosmic consciousness) சுட்டுவதாய்த் தான் இருக்கிறது. இந்தக் கட்டத்தில் தவம் அதிகாரத்தில் வரும் ‘தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்’(குறள்(268)) என்ற குறளையும் நினைவு கூர்வது பொருத்தமானது. ஆக, நிலையாமை, தவம், துறவு, மெய்யுணர்தல் என்ற அதிகாரங்களை ஒருங்கு கூடி வாசித்தால் திருக்குறளின் அறத்தின் இலக்கு என்னவென்று புரிந்து கொள்ள உதவும்.

4.முடிவுரை:

தொகுத்துக் கூற வேண்டுமானால், திருக்குறளில் பேசப்படும் அறத்தின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு இணைப்பு-1 -ல் இருப்பது போல் அமையலாம். இந்தக் கட்டுரையில் மெய்யுணர்தல், மொழி, மெய், மனம் சார் அறங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்ற கட்டங்களுக்கு எதிரே ஏற்புடைத்தாய் அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை முடிந்த முடிபல்ல. கட்டுரையின் நோக்கம் திருக்குறளில் அறத்தை வாசிக்குங் கால் ஒருங்கிணைந்த கட்டமைப்பு அணுகு முறையை வலியுறுத்துவதே. அரவிந்தர் திருக்குறளைப் பற்றிக் குறிப்பிடும் போது, குறு வடிவில் மறை பொருட் கவிதையாக்கத்தில் (gnomic poetry) திருக்குறள் அதனது கட்டமைப்பிலும், கருத்தாக்கத்திலும், செயலாக்கத் திறனிலும் இப்படி இது மாதிரி எழுதப்பட்டதிலே மகத்தானது (Tiruvalluvar’s Kural is the greatest in plan, conception and force of execution ever written in this kind) என்பார். இந்தக் கருத்தினையொட்டி, திருக்குறளை ஒரு ஒருங்கிணைந்த தத்துவார்த்ததில் அணுகினால், அதனது படைப்பாக்கத்திற்கும் நாம் அடையும் வாசிப்பு அனுபவத்திற்கும் ஈடு இணையில்லை என்று உணரலாம்.

References

Sri Aurobindo’s translation of Thirukkural, Usha Mahadevan, IRWLE, vol,5, Jan,2009

The Buddha and His Dhamma, Dr.B.R.Ambedkar, Buddha bumi Publication, Nagpur

The Dhammapada, Eknath Eswaran(1996),Penguin books

திருக்குறள் தெளிவுரை, டாக்டர்.மு.வரதராசனார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,121 ஆவது பதிப்பு, ஜுலை,1994.

இணைப்பு-1

அற நிலைகள்

அதிகாரங்கள்
மெய்யுணர்தல்
பொறையுடைமை, அழுக்காறாமை,வெகுளாமை, அவா அறுத்தல், அன்புடைமை, அருளுடைமை,அடக்கமுடைமை, ஈகை, ஒப்புறவறிதல்,ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம், தீவினையச்சம்,நடுவு நிலைமை
மனம் சார் அறங்கள்
பிறனில் விழையாமை, வெஃகாமை,புலால் மறுத்தல்,கள்ளாமை,இன்னா செய்யாமை, கொல்லாமை
இனியவை கூறல்,புறங் கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை
நிலையாமை, தவம், துறவு, மெய்யுணர்தல்

மொழி சார் அறங்கள்
மெய் சார் அறங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 

திருக்குறள் தமிழர் பண்பாட்டு ஆவணம் சிவனருள், மே 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

 திருவள்ளுவருக்குப் பிறகு கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தை ஆண்ட சாளுக்கியர், களப்பிரர், பல்லவர் இவர்கள் போற்றிய சமண, பௌத்த மதங்கள், பின்னர் வந்த நாயக்கர், இஸ்லாமியர், கிருத்துவர் இவர்களால் தமிழ்நாடு தன் அடையாளத்தைச் சன்னஞ்சன்னமாக இழந்துவிட்டதோடு தமிழ்நாடு முழுவதையும் ஒரு குடை கீழ் வைத்த தமிழ்த் தலைவன் ஒருவனைக் காணாமல் போயிற்று. இக்காரணங்களால் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை அயலவர் பண்பாட்டுக் கலப்பால் தனித்தன்மையை இழந்தன.

 இக்குறைபாடுகளால் திருக்குறள் எடுப்பார் கைப்பிள்ளை ஆனது. கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழ் மாநிலம் திராவிடர் என்னும் பெயரில் அயலார் ஆட்சியில் நலிந்து கிடக்கின்றது. தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதன்றி தமிழையோ தமிழ் நாட்டையோ தமிழர் வாழ்வையோ வளப்படுத்தும் முற்சிகள் நடக்கவே இல்லை.

 திருக்குறள் பொது மறை அல்ல

இனி வரும் காலத்திலாவது தமிழர் அடையாளங்களையும் உடமைகளையும் மீட்டு எடுக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். வாயில் நுரை வழிய பழம்பெருமை பேசியது போதும். இன்றே செய்யத்தக்க செயல்கள் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். செய்யும் வழிவகை ஆராய வேண்டும்.

 (1)       திருக்குறள் பொதுமறை அல்ல. அது தமிழ் மறை. தமிழரின் சிந்தனைச் செல்வம். அதில் காணப்படும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுவதும் வாழும் மாந்தர் அனைவருக்கும் வழி காட்டும் தகுதி உடையன. இது திருக்குறளின் தனிச்சிறப்பு. இதனைச் செய்தவர் திருவள்ளுவர். அவர் தமிழர். தமிழர் மரபு வழி வரும் கடவுள் நெறிகளை அறிந்தவர் திருவள்ளுவர். இடையில் வந்த வைதீகத்தின் சாரல் திருக்குறளில் படிந்திருப்பதை மறுக்க முடியாது என்றாலும் தமிழர் மரபில் வரும் முன்னோர் வழிபாடு ஆகியன பற்றிய வெளிப்படையான, மறைமுகமான குறிப்புகள் பல திருக்குறளில் நிறைந்துள்ளன. ஆகவே திருக்குறள் தமிழர் மரபில் வரும் சமயம், பண்பாடு ஆகியவற்றின் ஆவணம் என்பதைத் தமிழர் உரக்கக் கூறி உறுதிப்படுத்த வேண்டும்.

(2)       மொழி, பண்பாடு கலப்புகள் இயல்பாகிவிட்ட இக்காலத்தில் தமிழ் பேசுகிறவர் எல்லாரும் தமிழர் ஆகமாட்டார். ஒரு நாட்டின் குடிமகன் இன்னார் என்று சட்டவிதிகளின்படி ஆவணப்படுத்துதல் போல் இன்னார் தமிழர் என்று விதிகளைக் குறிப்பிட்டு வரையறை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இன்னார் ஆதிகுடி, இன்னார் அயல்குடி என்று திட்டம் செய்ய வேண்டும். ஆட்சி உரிமை ஆதி குடிக்கே என்று முடிவு செய்ய வேண்டும்.

(3)       சமயமும் பண்பாடும் இனத்தின் அடையாளங்கள் என்பதால் அயல்மதம் மாறுவோன் இனம் மாறியவன் என்று முடிவு செய்ய வேண்டும். அவன் ஆதி குடி என்னும் தகுதி இழந்து அயல்குடி ஆவான்.

(4)       இன்னும் பல உண்டு. இந்தப் போக்கில் செயல்பட்டு தமிழ் நாட்டையும் தமிழனையும் தமிழர் பண்பாட்டையும் மீட்க வேண்டும். வேண்டாம் என்போரும் முடியாது என்போரும் தமிழர் உரிமை பற்றிப் பேச வேண்டாம். அயலானுக்கு அடிமையாகக் கிடந்து வாழ்வை முடித்துக் கொள்ளுங்கள்.

 யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று தமிழர் உலகப் பொதுமை போற்றலாம். ஆனால் இதனைச் சொல்லும்போது அவன் நிற்கவோர் இடம் வேண்டும். தனக்கென ஒரு நாடு இல்லாமல் உலகப் பொதுமை பேசுகிறவன் தெருத்தெருவாய்த் திரியும் பிச்சைக்காரனுக்கு ஒப்பாவான்.

இங்கு ஆளப்பெற்ற சொற்கள் சற்றுக் கடுமையாக இருக்கலாம். உயர்வு நவிற்சி, வஞ்சப் புகழ்ச்சியை விட இச்சொற்கள் நல்ல சொற்களே.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்கள்

 
4 / 5 ( 131 votes )

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் தன்னுடைய குறட்பாக்களில் ஒவ்வோர் அதிகாரத்திலும், தான் எடுத்துக்கொண்டுள்ள கருத்துப்பொருட்களை விளக்கும்போது, உபதேசங்களாகச் சொல்லிக் கடைசியில் தன் கருத்தை ஆணையாக இடுவார். சம்ஸ்க்ருதத்தில் “உபதேஷா” மற்றும் “ஆதேஷா” என்று கூறுவர். அதாவது குருவானவர், தன் சீடர்களுக்கு நல்லமுறையில் உபதேசங்களைக் கூறிவிட்டுக் அவர்கள் கேட்காத நிலையில் கண்டிக்கும் விதமாக உத்தரவிடுவதைப் போல, திருவள்ளுவர் நமக்குப் பல கருத்துகளைத் தன் குறட்பாக்கள் மூலம் விளக்கியுள்ளார்” என்று கவிமாமணியும் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் வ.வெ.சுப்பிரமணியம்கூறினார்.

வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூலைப் பற்றிய கருத்தரங்கு சென்ற 08-01-2018 திங்கட்கிழமை அன்று, மயிலை பாரடிய வித்யா பவன் சிற்றரங்கில் நடந்தது. அந்தக் கருத்தரங்கில் மேற்கண்டவாறு தலைமை உரையாற்றிப் பேசினார் பேராசிரியர் வ.வெ.சு.

அவர் மேலும் பேசுகையில், “திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது. அறத்துப்பால் குறட்பாக்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை, பிரம்மச்சாரி விரதம், கிரஹஸ்த விரதம், சன்யாஸம் என்று மூன்று வகையாகப் பிரித்திருப்பது அருமையான வகைப்படுத்தல். மேலும், ‘அகர முதல எழுத்தெல்லாம்…’ என்று ஆரம்பிக்கும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை “அக்ஷராப்யாசம்” என்று வகைப்படுத்தியிருப்பது அற்புதம். பிரம்மச்சரிய விரதம் அக்ஷராப்யாஸத்தில் தான் ஆரம்பிக்கிறது.”

“அதைப் போலவே அடுத்ததாக “வான்சிறப்பு” அதிகாரர்த்தை “பிக்ஷாவந்தனம்” என்று விளக்கியிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவ்விடத்தில் தைத்ரிய உபனிஷத் சொல்வதைச் சுட்டிக் காட்டி அதையே வள்ளுவரும் கூறுவதை உறுதி செய்கிறார் நாகஸ்வாமி. அதாவது பிரம்மச்சரிய விரதத்தில் கல்வி கற்க ஆரம்பித்தவுடன், உணவின் முக்கியத்துவமும் மாணவனுக்குக் கற்றுவிக்கப்படுகிறது. அவன் குருகுல வாழ்வில் ஆசிரியருடன் இருந்தாலும், தன்னுடைய உணவுக்காகப் பிக்ஷைக்குத்தான் போக வேண்டும். ஆகவே அன்னம் என்றால் என்ன, அது எவ்வாறு உண்டாகின்றது, போன்றவற்றை அவன் தன் அனுபவித்திலேயே உணர்ந்துகொள்கிறான். அன்னம் உருவாக நீர் காரணமாகின்றது. நீரை மழை தருகின்றது. பிரம்மச்சரிய விரதத்தில் கல்வியுடன் கூடவே நீர், அன்னம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால், அக்ஷராப்யாசத்துக்கு அடுத்ததாக பிக்ஷாவந்தனம் கூறப்படுகிறது. அதையே வள்ளுவரும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான்சிறப்பு என்று வைத்தார்.”

“அதைப்போலவே தான் அடுத்த அதிகாரமான நீத்தார் பெருமையும். இங்கே உலகத்தைத் துறந்தவர்கள் என்பதைவிட, ஒழுக்கத்தின்பாற் தங்களை ஈந்தவர் என்கிற வகையில் ‘ஒழுக்கத்து நீத்தார்’ என்று கொள்வதே சரி. ஆகவே, நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தை ஆசாரமாகக் கொண்டு, பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்பவர்கள் தங்களை ஒழுக்கத்தின்பாற் அளித்திட வேண்டும் என்று உறுதி செய்கிறார்.”

இவ்வாறாக, வேதங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் கூறப்பட்ட கருத்துப் பொருட்களின் சாரங்களைப் பிழிந்து திருக்குறளில் திருவள்ளுவர் கொடுத்துள்ளதை நன்றாக ஆய்வு செய்து, திறம்பட எழுதியுள்ளார் டாக்டர் நாகஸ்வாமி. இந்நூலைப் படித்து, இதன் கருத்துக்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் செல்வது நம் கடமையாகும்” என்று கூறித் தன் தலைமை உரையை நிறைவு செய்தார் பேராசிரியர் வ.வெ.சு.

 

டாக்டர் இரா.நாகசாமி

முன்னதாக அறிமுக உரை வழங்கிய டாக்டர் நாகஸ்வாமி, பின்வருமாறு பேசினார்.

“நமது வேத கலாச்சாரத்தின் சாரத்தைத் தருகின்ற நூலாக ஒரு புரட்சிகரமான பார்வையுடன் திருக்குறளை அணுகி எழுதப்பட்டுள்ள நூல் இது. நமது தர்ம சாஸ்த்திரம், அர்த்த சாஸ்த்திரம், நாட்டிய சாஸ்த்திரம், காம சாஸ்த்திரம்ஆகியவற்றின் கருத்துப் பொருட்கள் திருக்குறள் எங்கும் நெடுக உள்ளன. நமது ஹிந்து தர்மத்தின் அடிப்படைகளான நான்கு புருஷார்த்தங்களாகிய தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகியவற்றில் முதல் மூன்றான தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை “த்ரிவர்கம்” என்கிற ஒற்றைக் கோட்பாடாகக்கருதி முறையே அறம், பொருள் ம்ற்றும் காமம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது”

“வள்ளுவரின் குறள் நமது வர்ணாஸ்ரமத் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய மற்றும் சூத்திர வர்ணத்தவரின் வாழ்க்கை முறை, மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பல குறட்பாக்களில் பேசும் திருவள்ளுவர், நான்கு ஆஸ்ரம தர்மங்களான பிரம்மச்சர்யம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாஸம் ஆகியவற்றைப் பற்றியும் முதல் தொகுதியான அறத்துப்பாலில் பேசுகிறார். தேவர்கள், ரிஷிகள் மற்றும் பித்ருக்களுக்குச் செய்யும் தர்ப்பணம் பற்றியும், பஞ்ச மஹா யக்யங்கள் என்று சொல்லப்படுகின்ற ஐந்து வகையான யாகங்கள் பற்றியும் பேசுகிறார்.”

“தர்ம சாஸ்த்திரங்களைக் கருத்துப் பொருளாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக வரிசைப்படுத்தியும் எழுதியுள்ளார் திருவள்ளுவர். பொருட்பாலில் அந்தணர் நூலாகிய வேதங்களைப் பற்றியும் தர்ம சாஸ்த்திரங்களைப் பற்றியும் குறிப்பிட்டு, மன்னர்கள் அவற்றைப் பின்பற்றுவதே கடமை என்று சொல்லும் விதத்தில்,

‘அந்தணர் நூலுக்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்’

என்றும்,

‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூற்மறப்பர்

காவலன் காவான் எனின்’

என்றும் திருவள்ளுவர் தெளிவாக அறுதொழில் புரியும் அறவோரான அந்தணர்களின் நூல்களான வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்த்திரங்கள் சொல்படி செங்கோல் செலுத்துவதே மன்னரின் கடமை என்று நிலைநிறுத்துகிறார். இதையே தான் புறநானூறு (35) ‘அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை’என்று கூறுகிறது.”

“மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.”

“காமத்துப்பால் தொகுதியில் திருவள்ளுவர் களவு மற்றும் கற்பு என்று இருவகையாகப் பிரித்துக்கொண்டு, நாட்டிய சஸ்த்திரம் மற்றும் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம் ஆகியவற்றிலிருந்து குறிப்புகளை எடுத்தாள்கிறார். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், த.பொ.மீனாட்சிசுந்தரம், டாக்டர்.மு.வரதராசனார், ஆகியோர் காமத்துப் பால் தொகுதியை ‘நாடக வழக்கு’ என்றே குறிப்பிடுகின்றனர்.”

“பிராகிருத மொழியில் தம்மபதா என்று ஒரு நூல் உள்ளது. இது புத்தரின் உபதேசங்களை உள்ளடக்கியது, பௌத்த தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசும் நூல். இதையும் இந்நூலில் காட்டியுள்ளேன். மேலும் புத்தர் பிராம்மணர்களுக்கு உயர்ந்த நிலையைக் கொடுத்து உபதேசித்துள்ள ‘பாம்மண வக்கோ’ (பிராம்மண வர்கம்) பற்றியும் ஒரு அத்தியாயத்தைச் சேர்த்துள்ளேன். ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் பிராம்மணர்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தப் பிராம்மண துவேஷத்தின் அர்த்தமற்ற தன்மையை தம்மபதா பற்றிய அத்தியாயத்தைப் படிக்கையில் புரிந்து கொள்ளலாம். ஜி.யு.போப், லஸாரஸ், போன்றவர்களின் மொழியாகத்தையும் ஆங்காங்கே குறிப்பிட்டு, அவை எவ்வளவு பற்றாக்குறையுடன் இருக்கின்றன என்பதைப் பரிமேலழகரின் உரையுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்.”

“இறுதியாக, வேத, உபநிடத, தர்ம சாஸ்த்திரங்களின் சாரங்களைத் தமிழில் குறட்பாக்களாகத் தொகுத்து வழங்கும் திருவள்ளுவர், மனு, யாக்யவல்கியர், கௌதமர், ஆபஸ்தம்பர், போதாயனர், பராசரர், வசிஷ்டர் போன்ற மஹரிஷிகள் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் ஆவார். திருவள்ளுவர் வைதீக தர்ம மார்க்கத்தைத் தமிழில் எளிமையாக வழங்கியுள்ளதே திருக்குறள் என்கிற உண்மை எழுகின்றது. திருக்குறளைத் தொடர்ந்து வாசிக்கும் அன்பர்களின் திருக்குறள் பற்றிய பார்வையை இந்நூல் மாற்றும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்”



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

பேராசிரியர் வ.வெ.சுவைத் தொடர்ந்து அகில இந்திய வானொலியின் சென்னை மையத்தின் முன்னாள் இயக்குனர் கலைமாமணி டாக்டர் சேயோன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருவள்ளுவரைப் போற்றும் விதமாக ஒரு பாடலுடன் தன் உரையைத் தொடங்கிய டாக்டர் சேயோன், தாம் நடத்திவரும் மயிலைத் திருவள்ளுவர் சங்கத்தின் பல ஆண்டுகால சேவைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் கொடுத்தார்.

அவர் தன்னுடைய உரையில், “டாக்டர் நாகஸ்வாமி அவர்களின் இப்பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது. திருக்குறளில் திருவள்ளுவர் நமது வேத, தர்ம சாஸ்த்திரங்களின் கருத்துப்பொருட்களைக் கையாண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத் தெளிவாகவே தொகுத்தளித்துள்ளார் டாக்டர் நாகஸ்வாமி. குறிப்பாகப் பொருட்பாலில், மன்னரின் அட்சி முறைப் பற்றியும் செங்கோல் பற்றியும் பேசுமிடங்களில் எல்லாம் திருவள்ளுவர் அர்த்த சாஸ்த்திரத்தையும் தர்ம சாஸ்த்திரங்களையும் குறிப்பிட்டே பேசுகிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் இலக்கிய உலகில் இந்நூல் நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். இதன் மூலம் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய ஆய்வும் விவாதங்களும் மேலும் தொடரும். தமிழ் இலக்கிய உலகு நன்மை பெறும்” என்றார்.

 

பி.ஆர்.ஹரன்

அவரைத் தொடர்ந்து பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் பேசினார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவரும் ‘ஹிந்து மித்திரன்’ பத்திரிகையின் ஆசிரியருமான திரு.ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி அவர்கள் கடைசி நேரத்தில் கருத்தரங்கில் கலந்துகொள்ள இயலாத காரணங்களால் அவர் சார்பாகக் கலந்து கொண்டார் பி.ஆர்.ஹரன். அவர் தன்னுடைய வழ்த்துரையில், டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் நுலில், திருக்குறளை கிறிஸ்தவ மயமாக்கும் காலனிய முயற்சியைப் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டு, கிறிஸ்தவ மிஷனரிகள் தமிழகத்துள் நுழைந்த 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தைக் கிறிஸ்தவ மயமாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டார்கள் என்றார். அவர்கள் மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவே தமிழ் மொழியையும் கற்றுக்கொண்டனர்; தமிழ் இலக்கியங்களைத் தங்களுடைய கிறிஸ்தவ இலக்கிய கருத்தாக்கங்களுக்கு ஏற்றவாறு மொழியாக்கம் செய்தனர்; மேலும் கலாச்சாரக்களவு (Inculturation) மூலம் பெரிதும் மதமாறத்தில் ஈடுபட்டனர்; என்று கூறினார்.

தன்னை ரோமானிய பிராம்மணர் என்று சொல்லிக்கொண்ட ரோமானியப் பாதிரி ராபர்ட்-டி-நொபிலி, இத்தாலிய முனிவர் என்று சொல்லிக்கொண்ட கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், ஜெர்மானிய ஐயர் என்று சொல்லிக்கொண்ட பார்த்தலோமியோ ஸீகன்பால்கு, ஜி.யு.போப் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் எவ்வாறு தமிழ் மொழியையும், சில தமிழ் நூல்களையும் கற்றுக்கொண்டு அதன் மூலம் விவிலியத்தைத் தமிழில் கொண்டுவந்துப் பெரிதும் மதமாறத்தில் ஈடுபட்டனர் என்றும், தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கி எவ்வாறு திருவள்ளுவரைக் கிறிஸ்தவர் ஆக்கவும், திருக்குறளைக் கிறிஸ்தவ நூலாக ஆக்கவும் முயன்றனர் என்றும், அம்முயற்சி இன்றும் தொடர்வதைப் பற்றியும் விவரித்துப் பேசினார். டாக்டர் நாகஸ்வாமியின் உழைப்பும் பங்களிப்பும் போற்றப்பட வேண்டும் என்று கூறிய பி.ஆர்.ஹரன், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைவருக்கும், குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தொல்லியல் அறிஞரும் இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளருமான டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய வாழ்த்துரையில், டாக்டர் நாகஸ்வாமியுடனான தன்னுடைய துறை ரீதியான தொடர்பைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசினார். தன்னுடைய தொல்லியல் அனுபவத்தையும், தமிழ், சம்ஸ்க்ருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனக்குள்ள ஆளுமையையும் நன்றாகப் பயன்படுத்தி இந்நூலை அவர் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டார். அவர் மேலும், தொழில்நுட்பம் அசுரத்தனமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் அடுத்த தலைமுறையினருக்கு மற்ற நெடிய இலக்கியங்களை விட, குறுந்தகவல் (SMS) போன்று விளங்கும் திருக்குறளை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். அந்த விதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், திருக்குறள் போன்ற ஒரு தமிழ் இலக்கியத்தின் மீது அவர்களுடைய ஈடுபாட்டை அதிகரிக்கும் விதத்திலும் இருக்கும், என்றார்.

 

ஊரன் அடிகள்

இறுதியாக, எதிர்பாராமல் எழுந்தருளிய ஊரன் அடிகள் அவர்களுடைய அருளாசியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. சொந்த வேலையாக பாரதிய வித்யா பவனுக்கு வந்தபோது, டாக்டர் சேயோன் மூலம் நிகழ்ச்சி பற்றி அறிந்து கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய ஆசியுரையில், தமிழகத்தில் சம்ஸ்க்ருதம் எவ்வாறு அவமதிக்கப்படுகிறது என்பதையும், அன்னியர்கள் தமிழ் பங்களிப்பு செய்திருந்தாலும் அவர்களின் நோக்கம் மதமாற்றம் தான் என்பதையும் விளக்கிப் பேசினார். இன்றைய காலகட்டத்தில் டாக்டர் நாகஸ்வாமியின் இந்த நூல்  மிகவும் தேவையானது என்று கூறினார்.

காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரத்தாஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

கருத்தரங்கு நடந்த அன்று (08-01-18 – மார்கசிர கிருஷ்ணபக்ஷ துவாதசி) மாலை, பாரதிய வித்யா பவனும் வேத பாட நிதி அறக்கட்டளையும் இணைந்து, காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு, அவரது ஆராதனை தினத்தை முன்னிட்டு, பாரதிய வித்யா பவனின் பிரதான அரங்கில் “ஸ்ரத்தாஞ்சலி” நிகழ்ச்சி நடத்தின. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னின்று ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார்.

மாலை 5.30க்குச் சரியாகத் தொடங்கிய நிகழ்ச்சியில், வேத பண்டிதர்களின் வேதபாராயணத்துடன் காஞ்சி பரமாச்சாரியாரின் திருவுருவப் படத்திற்குப் பூஜை செய்யப்பட்டு, தீப ஆராதனை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூலும், அவருடைய மகன் திரு.மோகன் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “Samadarsan” என்கிற நூலும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அருளாசிகளுடன், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டன.

நூல் வெளியீடு, தேவாரத் திருப்பதிகப் பாடலுடன் தொடங்கியது. ஆச்சாரிய ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய டாக்டர் நாகஸ்வாமி அவர்கள், வெளியிடவிருக்கின்ற இரு நூல்களைப்பற்றியும் அறிமுக உரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஆச்சார்ய ஸ்வாமிகள் இரு நூல்களையும் வெளியிட, முதல் பிரதிகளை ‘கிரி டிரேடர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் பெற்றுக்கொண்டார்.  

அடுத்ததாக, தமிழ்நடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனர் தலைவர் திரு, வேதாந்தம் ஜி அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், டாக்டர் நாகசாமியின் புத்தகத்தைக் குறித்துப் பாராட்டிப் பேசினார். அவர் பேசுகையில், “டாக்டர் நாகசாமி அவர்கள் தன்னுடைய ‘திருக்குறள் வேத சாரம்’ என்ற புத்தகத்தைத் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலையில் துணிவோடு வெளியிடுவதற்கான காரணம் அவரிடம் இருந்த ஆதாரங்களே ஆகும். தமிழும் சமஸ்கிருதமும் நம் நாட்டில் இணைந்தே இருந்து வந்துள்ளன. இப்பொழுது நிலவும் பிரிவினைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் செய்த சதி. ஆதலால், இப்படியான மாயையிலிருந்து விலக இந்தப் புத்தகம் உதவும். இந்தப் புத்தகத்தை மிகவும் பாடுபட்டுக் கொண்டு வந்துள்ள டாக்டர் நாகசாமிக்கு நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறித் தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக, நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு இல கணேசன் அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், “இன்று ஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் நினைவு தின நிகழ்ச்சி அதில் வள்ளுவர் பற்றிய புத்தக வெளியீட்டு விழா. இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றால் இருவருமே வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தவர்கள். இது பல ஆராய்ச்சிகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாம் தேசம் முழுவதும் வேறுபட்டாலும் அனைத்து மொழிகளிலும் ஒற்றுமை இருக்கிறது. அதனால் இந்த ‘அகர’ என்ற சொல்லே பாரத தேசத்திற்குத் தான் பொருந்தும், இந்தப் புத்தகம் கடுமையான விமர்சனங்களைப் பெறும் என்று திரு. வேதாந்தம்ஜி அவர்கள் கூறியதை நானும் வழிமொழிகிறேன். ஆனால் அந்த விமர்சனத்தாலேயே இந்தப் புத்தகம் அமோகமாக விற்பனை ஆகும் என்று கூறி அனைவருக்கும் நன்றி பாராட்டி ஸ்ரீ பெரியவாளுக்கு நமஸ்காரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக, முன்னாள் IG திரு. C.L.ராமகிருஷ்ணன் IPS அவர்கள் ‘சமதரிசனம்’ என்ற புத்தகத்தைக் குறித்துப் பேசினார். அவர் தன் உரையில், “நிறைய தமிழ் புத்தகத்திலிருந்தும், வேதம் மற்றும் வேதாந்தம், உபநிஷத் போன்றவற்றிலிருந்தும் மேற்கோள்கள்களை எடுத்துக்காட்டி அவற்றுக்கு விளக்கம் கொடுத்து இருக்கும் ஒரு விரிவான புத்தகம் இது. இந்தப் புத்தகத்தை ஒரு முறை படித்தால் போதாது; பல முறைகள் படித்தால் தான் நமக்கு லாவகம் கிடைக்கும்” என்று கூறி தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய தமிழக ஆளுனரின் முன்னாள் செயலாளர் திருமதி கரியாலி IAS அவர்கள், “திருக்குறளுக்கு டாக்டர் நாகசாமி ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்துள்ளார். அவர் நிறைய ஆதாரங்களுடன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் மகன் மோகன் நாகஸ்வாமி எழுதியுள்ள சமதரிசனம் என்ற புத்தகத்த்தின் சாரமானது, கடவுள் என்பவர் எப்படி அனைவரையும் ஒன்று போல் பார்க்கிறாரோ, அது போல் நாமும் அனைத்தையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்பதாகும், என்று நான் புரிந்து கொண்டுள்ளேன்” என்று கூறிப் பாராட்டித் தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக, வேத பாட நிதி அறகட்டளையின் அறங்காவலர் திரு.சரபேஸ்வரன் அவர்கள், “இந்த வேத பாட நிதி டிரஸ்ட் 1983ல் பரமாச்சார்யாரால் ஆரம்பிக்கப்பட்டது. திரு.நானி பல்கிவாலா அவர்கள் இந்த டிரஸ்டின் முதல் சேர்மனாக இருந்தார். இந்த டிரஸ்ட்டின் நிறுவனர் TVS group லேட். T.சந்தானம் என்பவர். இந்த டிரஸ்ட்டின் நோக்கம் ஏதாவது ஒரு வேத சாகையை அத்யயனம் செய்து கொண்டு நமது புராதன கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வரும் வேத பண்டிதர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நன்மதிப்பு கொடுத்து மரியாதை செய்து வருவதாகும். அதன்படியே, அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதியுதவி செய்து வருகிறோம். 60வயதிற்கு மேற்பட்ட 150க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறோம். இப்படிப்பட்ட வேத பண்டிதர்கள் இறந்து விட்டால் அவர்களின் அந்திம காரியங்களான 13 நாட்கள் காரியங்களுக்கும் உடனடியாக நிதியுதவி செய்து வருகிறோம். இதற்கு எங்களுக்கு பாரதிய வித்யா பவனும் மிகவும் உடந்தையாக இருந்து உதவுகிறது.” என்றார்.

திரு. நாகசாமி அவர்கள் வருகைப்புரிந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் போர்த்தி மரியாதை செய்தார்.

நிறைவாக அனுக்ரஹம் செய்த காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தன்னுடைய அருளாசியில், “மார்கசிர கிருஷ்ணபக்ஷ துவாதசி அன்று ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆராதனையைப் பக்தி பூர்வமாகவும், வைதீக முறைப்படியும் பல இடங்களில் நடத்தி வருகிறார்கள். பலவிதமான சேவைக் காரியங்களும் அவர் அருளால் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. அந்தச் சேவைக் காரியங்களும் தொடரவேண்டும்; அவருடைய ஆராதனையும் தொடரவேண்டும். ஆச்சார்யாளின் அனுக்ரஹத்துடன் அனைத்தும் நடந்தேற வேண்டும்” என்றார்.

அவர் மேலும், “ஸ்ரீ மஹாபெரியவா, சாஸ்திரங்களையும், சரித்திரத்தையும் காப்பாற்றி சரித்திரம் படைத்தவர். திருக்குறளின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் தன்னுடைய உபன்யாசங்களில் சொல்லி இருக்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கும் மேலாக, தர்மத்திற்கு அரணாக விளங்கி, தர்மசாஸ்திரத்தில், உள்ள சந்தேகங்களை நீக்கி அனைவருடைய பார்வையிலும் தர்மசாஸ்திரத்தை விளக்கி, வெளி நாட்டவர்களுக்கும் அருள் புரிந்து அனுகிரகித்துள்ளார். இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசியும், பெரிவாளின் அனுக்கிரஹமும் கிடைக்கட்டும்” என்று கூறி பக்தர்களுக்கு அனுக்கிரஹ பாஷணம் அருளி, பிரசாதமும் வழங்கினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திருவள்ளுவரை அனைத்து விதமான அரசியலிலும் ஈடுபடுத்துகின்றனர். அவரை சமணர் என்றும் கிறிஸ்தவர் என்றும் முத்திரை குத்தும் முயற்சியில் மத அரசியலிலும், அவருடைய பிறப்பை ஆய்வு செய்கின்ற முயற்சியில் ஜாதி அரசியலிலும், அவருடைய பிறந்த தினத்தைக் குறித்துப் பொது அரசியலிலும் ஈடுபடுத்துகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியாளர்களாக இருந்துகொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினர், தமிழ் என்கிற பெயரில் திருவள்ளுவரை வெற்று அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை. இவர்களால் திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ, தமிழக மக்களுக்கோ எந்தப் பயனும் கிட்டவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும் பிராம்மண துவேஷத்தையும் சம்ஸ்க்ருத வெறுப்பையும், வேத தர்ம சாஸ்த்திர மறுப்பையும் கொள்கைகளாகக் கொண்டுள்ள திராவிட இயக்கம் திருவள்ளுவரையும் திருக்குறளையும் தொடர்ந்து சீரழிக்க முயன்று வரும் காலகட்டத்தில் டாக்டர் நாகஸ்வாமியின் இந்தப் புத்தகம் மகத்தான சேவை என்பதில் ஐயமில்லை

– தமிழ்செல்வன்



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

பேராசிரியர் வ.வெ.சுவைத் தொடர்ந்து அகில இந்திய வானொலியின் சென்னை மையத்தின் முன்னாள் இயக்குனர் கலைமாமணி டாக்டர் சேயோன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருவள்ளுவரைப் போற்றும் விதமாக ஒரு பாடலுடன் தன் உரையைத் தொடங்கிய டாக்டர் சேயோன், தாம் நடத்திவரும் மயிலைத் திருவள்ளுவர் சங்கத்தின் பல ஆண்டுகால சேவைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் கொடுத்தார்.

அவர் தன்னுடைய உரையில், “டாக்டர் நாகஸ்வாமி அவர்களின் இப்பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது. திருக்குறளில் திருவள்ளுவர் நமது வேத, தர்ம சாஸ்த்திரங்களின் கருத்துப்பொருட்களைக் கையாண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத் தெளிவாகவே தொகுத்தளித்துள்ளார் டாக்டர் நாகஸ்வாமி. குறிப்பாகப் பொருட்பாலில், மன்னரின் அட்சி முறைப் பற்றியும் செங்கோல் பற்றியும் பேசுமிடங்களில் எல்லாம் திருவள்ளுவர் அர்த்த சாஸ்த்திரத்தையும் தர்ம சாஸ்த்திரங்களையும் குறிப்பிட்டே பேசுகிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் இலக்கிய உலகில் இந்நூல் நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். இதன் மூலம் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய ஆய்வும் விவாதங்களும் மேலும் தொடரும். தமிழ் இலக்கிய உலகு நன்மை பெறும்” என்றார்.

 

பி.ஆர்.ஹரன்

அவரைத் தொடர்ந்து பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் பேசினார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவரும் ‘ஹிந்து மித்திரன்’ பத்திரிகையின் ஆசிரியருமான திரு.ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி அவர்கள் கடைசி நேரத்தில் கருத்தரங்கில் கலந்துகொள்ள இயலாத காரணங்களால் அவர் சார்பாகக் கலந்து கொண்டார் பி.ஆர்.ஹரன். அவர் தன்னுடைய வழ்த்துரையில், டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் நுலில், திருக்குறளை கிறிஸ்தவ மயமாக்கும் காலனிய முயற்சியைப் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டு, கிறிஸ்தவ மிஷனரிகள் தமிழகத்துள் நுழைந்த 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தைக் கிறிஸ்தவ மயமாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டார்கள் என்றார். அவர்கள் மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவே தமிழ் மொழியையும் கற்றுக்கொண்டனர்; தமிழ் இலக்கியங்களைத் தங்களுடைய கிறிஸ்தவ இலக்கிய கருத்தாக்கங்களுக்கு ஏற்றவாறு மொழியாக்கம் செய்தனர்; மேலும் கலாச்சாரக்களவு (Inculturation) மூலம் பெரிதும் மதமாறத்தில் ஈடுபட்டனர்; என்று கூறினார்.

தன்னை ரோமானிய பிராம்மணர் என்று சொல்லிக்கொண்ட ரோமானியப் பாதிரி ராபர்ட்-டி-நொபிலி, இத்தாலிய முனிவர் என்று சொல்லிக்கொண்ட கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், ஜெர்மானிய ஐயர் என்று சொல்லிக்கொண்ட பார்த்தலோமியோ ஸீகன்பால்கு, ஜி.யு.போப் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் எவ்வாறு தமிழ் மொழியையும், சில தமிழ் நூல்களையும் கற்றுக்கொண்டு அதன் மூலம் விவிலியத்தைத் தமிழில் கொண்டுவந்துப் பெரிதும் மதமாறத்தில் ஈடுபட்டனர் என்றும், தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கி எவ்வாறு திருவள்ளுவரைக் கிறிஸ்தவர் ஆக்கவும், திருக்குறளைக் கிறிஸ்தவ நூலாக ஆக்கவும் முயன்றனர் என்றும், அம்முயற்சி இன்றும் தொடர்வதைப் பற்றியும் விவரித்துப் பேசினார். டாக்டர் நாகஸ்வாமியின் உழைப்பும் பங்களிப்பும் போற்றப்பட வேண்டும் என்று கூறிய பி.ஆர்.ஹரன், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைவருக்கும், குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தொல்லியல் அறிஞரும் இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளருமான டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய வாழ்த்துரையில், டாக்டர் நாகஸ்வாமியுடனான தன்னுடைய துறை ரீதியான தொடர்பைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசினார். தன்னுடைய தொல்லியல் அனுபவத்தையும், தமிழ், சம்ஸ்க்ருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனக்குள்ள ஆளுமையையும் நன்றாகப் பயன்படுத்தி இந்நூலை அவர் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டார். அவர் மேலும், தொழில்நுட்பம் அசுரத்தனமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் அடுத்த தலைமுறையினருக்கு மற்ற நெடிய இலக்கியங்களை விட, குறுந்தகவல் (SMS) போன்று விளங்கும் திருக்குறளை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். அந்த விதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், திருக்குறள் போன்ற ஒரு தமிழ் இலக்கியத்தின் மீது அவர்களுடைய ஈடுபாட்டை அதிகரிக்கும் விதத்திலும் இருக்கும், என்றார்.

 

ஊரன் அடிகள்

இறுதியாக, எதிர்பாராமல் எழுந்தருளிய ஊரன் அடிகள் அவர்களுடைய அருளாசியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. சொந்த வேலையாக பாரதிய வித்யா பவனுக்கு வந்தபோது, டாக்டர் சேயோன் மூலம் நிகழ்ச்சி பற்றி அறிந்து கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய ஆசியுரையில், தமிழகத்தில் சம்ஸ்க்ருதம் எவ்வாறு அவமதிக்கப்படுகிறது என்பதையும், அன்னியர்கள் தமிழ் பங்களிப்பு செய்திருந்தாலும் அவர்களின் நோக்கம் மதமாற்றம் தான் என்பதையும் விளக்கிப் பேசினார். இன்றைய காலகட்டத்தில் டாக்டர் நாகஸ்வாமியின் இந்த நூல்  மிகவும் தேவையானது என்று கூறினார்.

காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரத்தாஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

கருத்தரங்கு நடந்த அன்று (08-01-18 – மார்கசிர கிருஷ்ணபக்ஷ துவாதசி) மாலை, பாரதிய வித்யா பவனும் வேத பாட நிதி அறக்கட்டளையும் இணைந்து, காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு, அவரது ஆராதனை தினத்தை முன்னிட்டு, பாரதிய வித்யா பவனின் பிரதான அரங்கில் “ஸ்ரத்தாஞ்சலி” நிகழ்ச்சி நடத்தின. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னின்று ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார்.

மாலை 5.30க்குச் சரியாகத் தொடங்கிய நிகழ்ச்சியில், வேத பண்டிதர்களின் வேதபாராயணத்துடன் காஞ்சி பரமாச்சாரியாரின் திருவுருவப் படத்திற்குப் பூஜை செய்யப்பட்டு, தீப ஆராதனை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூலும், அவருடைய மகன் திரு.மோகன் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “Samadarsan” என்கிற நூலும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அருளாசிகளுடன், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டன.

நூல் வெளியீடு, தேவாரத் திருப்பதிகப் பாடலுடன் தொடங்கியது. ஆச்சாரிய ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய டாக்டர் நாகஸ்வாமி அவர்கள், வெளியிடவிருக்கின்ற இரு நூல்களைப்பற்றியும் அறிமுக உரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஆச்சார்ய ஸ்வாமிகள் இரு நூல்களையும் வெளியிட, முதல் பிரதிகளை ‘கிரி டிரேடர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் பெற்றுக்கொண்டார்.  

அடுத்ததாக, தமிழ்நடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனர் தலைவர் திரு, வேதாந்தம் ஜி அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், டாக்டர் நாகசாமியின் புத்தகத்தைக் குறித்துப் பாராட்டிப் பேசினார். அவர் பேசுகையில், “டாக்டர் நாகசாமி அவர்கள் தன்னுடைய ‘திருக்குறள் வேத சாரம்’ என்ற புத்தகத்தைத் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலையில் துணிவோடு வெளியிடுவதற்கான காரணம் அவரிடம் இருந்த ஆதாரங்களே ஆகும். தமிழும் சமஸ்கிருதமும் நம் நாட்டில் இணைந்தே இருந்து வந்துள்ளன. இப்பொழுது நிலவும் பிரிவினைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் செய்த சதி. ஆதலால், இப்படியான மாயையிலிருந்து விலக இந்தப் புத்தகம் உதவும். இந்தப் புத்தகத்தை மிகவும் பாடுபட்டுக் கொண்டு வந்துள்ள டாக்டர் நாகசாமிக்கு நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறித் தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக, நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு இல கணேசன் அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், “இன்று ஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் நினைவு தின நிகழ்ச்சி அதில் வள்ளுவர் பற்றிய புத்தக வெளியீட்டு விழா. இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றால் இருவருமே வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தவர்கள். இது பல ஆராய்ச்சிகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாம் தேசம் முழுவதும் வேறுபட்டாலும் அனைத்து மொழிகளிலும் ஒற்றுமை இருக்கிறது. அதனால் இந்த ‘அகர’ என்ற சொல்லே பாரத தேசத்திற்குத் தான் பொருந்தும், இந்தப் புத்தகம் கடுமையான விமர்சனங்களைப் பெறும் என்று திரு. வேதாந்தம்ஜி அவர்கள் கூறியதை நானும் வழிமொழிகிறேன். ஆனால் அந்த விமர்சனத்தாலேயே இந்தப் புத்தகம் அமோகமாக விற்பனை ஆகும் என்று கூறி அனைவருக்கும் நன்றி பாராட்டி ஸ்ரீ பெரியவாளுக்கு நமஸ்காரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக, முன்னாள் IG திரு. C.L.ராமகிருஷ்ணன் IPS அவர்கள் ‘சமதரிசனம்’ என்ற புத்தகத்தைக் குறித்துப் பேசினார். அவர் தன் உரையில், “நிறைய தமிழ் புத்தகத்திலிருந்தும், வேதம் மற்றும் வேதாந்தம், உபநிஷத் போன்றவற்றிலிருந்தும் மேற்கோள்கள்களை எடுத்துக்காட்டி அவற்றுக்கு விளக்கம் கொடுத்து இருக்கும் ஒரு விரிவான புத்தகம் இது. இந்தப் புத்தகத்தை ஒரு முறை படித்தால் போதாது; பல முறைகள் படித்தால் தான் நமக்கு லாவகம் கிடைக்கும்” என்று கூறி தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய தமிழக ஆளுனரின் முன்னாள் செயலாளர் திருமதி கரியாலி IAS அவர்கள், “திருக்குறளுக்கு டாக்டர் நாகசாமி ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்துள்ளார். அவர் நிறைய ஆதாரங்களுடன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் மகன் மோகன் நாகஸ்வாமி எழுதியுள்ள சமதரிசனம் என்ற புத்தகத்த்தின் சாரமானது, கடவுள் என்பவர் எப்படி அனைவரையும் ஒன்று போல் பார்க்கிறாரோ, அது போல் நாமும் அனைத்தையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்பதாகும், என்று நான் புரிந்து கொண்டுள்ளேன்” என்று கூறிப் பாராட்டித் தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக, வேத பாட நிதி அறகட்டளையின் அறங்காவலர் திரு.சரபேஸ்வரன் அவர்கள், “இந்த வேத பாட நிதி டிரஸ்ட் 1983ல் பரமாச்சார்யாரால் ஆரம்பிக்கப்பட்டது. திரு.நானி பல்கிவாலா அவர்கள் இந்த டிரஸ்டின் முதல் சேர்மனாக இருந்தார். இந்த டிரஸ்ட்டின் நிறுவனர் TVS group லேட். T.சந்தானம் என்பவர். இந்த டிரஸ்ட்டின் நோக்கம் ஏதாவது ஒரு வேத சாகையை அத்யயனம் செய்து கொண்டு நமது புராதன கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வரும் வேத பண்டிதர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நன்மதிப்பு கொடுத்து மரியாதை செய்து வருவதாகும். அதன்படியே, அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதியுதவி செய்து வருகிறோம். 60வயதிற்கு மேற்பட்ட 150க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறோம். இப்படிப்பட்ட வேத பண்டிதர்கள் இறந்து விட்டால் அவர்களின் அந்திம காரியங்களான 13 நாட்கள் காரியங்களுக்கும் உடனடியாக நிதியுதவி செய்து வருகிறோம். இதற்கு எங்களுக்கு பாரதிய வித்யா பவனும் மிகவும் உடந்தையாக இருந்து உதவுகிறது.” என்றார்.

திரு. நாகசாமி அவர்கள் வருகைப்புரிந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் போர்த்தி மரியாதை செய்தார்.

நிறைவாக அனுக்ரஹம் செய்த காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தன்னுடைய அருளாசியில், “மார்கசிர கிருஷ்ணபக்ஷ துவாதசி அன்று ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆராதனையைப் பக்தி பூர்வமாகவும், வைதீக முறைப்படியும் பல இடங்களில் நடத்தி வருகிறார்கள். பலவிதமான சேவைக் காரியங்களும் அவர் அருளால் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. அந்தச் சேவைக் காரியங்களும் தொடரவேண்டும்; அவருடைய ஆராதனையும் தொடரவேண்டும். ஆச்சார்யாளின் அனுக்ரஹத்துடன் அனைத்தும் நடந்தேற வேண்டும்” என்றார்.

அவர் மேலும், “ஸ்ரீ மஹாபெரியவா, சாஸ்திரங்களையும், சரித்திரத்தையும் காப்பாற்றி சரித்திரம் படைத்தவர். திருக்குறளின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் தன்னுடைய உபன்யாசங்களில் சொல்லி இருக்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கும் மேலாக, தர்மத்திற்கு அரணாக விளங்கி, தர்மசாஸ்திரத்தில், உள்ள சந்தேகங்களை நீக்கி அனைவருடைய பார்வையிலும் தர்மசாஸ்திரத்தை விளக்கி, வெளி நாட்டவர்களுக்கும் அருள் புரிந்து அனுகிரகித்துள்ளார். இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசியும், பெரிவாளின் அனுக்கிரஹமும் கிடைக்கட்டும்” என்று கூறி பக்தர்களுக்கு அனுக்கிரஹ பாஷணம் அருளி, பிரசாதமும் வழங்கினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திருவள்ளுவரை அனைத்து விதமான அரசியலிலும் ஈடுபடுத்துகின்றனர். அவரை சமணர் என்றும் கிறிஸ்தவர் என்றும் முத்திரை குத்தும் முயற்சியில் மத அரசியலிலும், அவருடைய பிறப்பை ஆய்வு செய்கின்ற முயற்சியில் ஜாதி அரசியலிலும், அவருடைய பிறந்த தினத்தைக் குறித்துப் பொது அரசியலிலும் ஈடுபடுத்துகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியாளர்களாக இருந்துகொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினர், தமிழ் என்கிற பெயரில் திருவள்ளுவரை வெற்று அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை. இவர்களால் திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ, தமிழக மக்களுக்கோ எந்தப் பயனும் கிட்டவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும் பிராம்மண துவேஷத்தையும் சம்ஸ்க்ருத வெறுப்பையும், வேத தர்ம சாஸ்த்திர மறுப்பையும் கொள்கைகளாகக் கொண்டுள்ள திராவிட இயக்கம் திருவள்ளுவரையும் திருக்குறளையும் தொடர்ந்து சீரழிக்க முயன்று வரும் காலகட்டத்தில் டாக்டர் நாகஸ்வாமியின் இந்தப் புத்தகம் மகத்தான சேவை என்பதில் ஐயமில்லை

– தமிழ்செல்வன்



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

சிவனருள், சூன், 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருவள்ளுவர் உணர்த்தும் கடவுள் சிந்தனை

 

திருக்குறளைப் பொதுமறை என்றும் திருவள்ளுவரைக் கடவுள் சிந்தனை அற்றவர் என்றும் சமண, பௌத்த, கிருத்துவ மதங்களின் கொள்கைகளை உடையது என்றும் பலரும் பல விதமாகத் திருக்குறளின் உண்மை அடையாளத்தை அழித்து அதனைச் சீர்குலைத்துள்ளனர்.

 

இந்நிலையில் திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து அன்றி திருக்குறள் முழுவதும் பரவிக் கிடக்கும் சமய, சமூகப் பண்பாட்டுச் சிந்தனைகளை ஒருங்கு திரட்டி ஆய்ந்தால் திருவள்ளுவரின் கடவுட் கொள்கை யாது என உணரலாம்.

 

சிவஞானபோதம் முதல் நூற்பாவின் இறுதி அடி அந்தம் ஆதி என்மனார் புலவர் என்று  முடிகிறது. நூலாசிரியர் மெய்கண்டார் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். உலகை முற்றழிப்புச் செய்பவனே உலகுக்கு ஆதியும் ஆவான் என்றார் மெய்கண்டார். உலகுக்கு ஆதி என்னும் தொடர் உலகைப் படைப்போன் என்னும் கருத்தை உணர்த்துவது.

 

இக்கருத்தை மெய்கண்டார் எங்கிருந்து பெற்றார்? ஆதி பகவன் என்றும் முதற் குறளில் இருந்தே பெற்றார் எனலாம்.

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

 

என்பது குறள். உலகுக்கு ஆதி பகவன். உலகுக்குக் முதல் பகவன். உலகுக்கு பகவன் ஆதியாயும் முதலாயும் உள்ளான் என்பதே திருவள்ளுவர் சிந்தனை. பகவன் உலகைப் படைத்தோன். படைத்தோன் இன்றி உலகம் இல்லை. இக்கருத்தை விளக்குவதற்கு அகர முதல எழுத்தெல்லாம் என்னும் தொடரை உவமையாக ஆளுகின்றார். எழுத்துக்கள் அனைத்தும் அகரத்தை முதலாய்க் கொண்டது போல் உலகம் படைத்தவனை முதலாய்க் கொண்டுள்ளது என்பது திருவள்ளுவர் சிந்தனை.

 

அகரம் இன்றிப் பிற எழுத்துக்கள் பிறக்குமாறு இல்லை. ஆதியாகிய இறைவன் இன்றி உலகம் தோன்றுவதில்லை. உலகம் சடம், அறிவற்றது, அவயவப் பகுப்பு உடையது. இவை தாமே தோன்றி, நின்று அழியாது. தோற்றம், நிற்றல், அழிதல் ஆகிய முத்தொழிலும் செய்வோன் ஒருவனை உடையது உலகம்.

 

அகரம் தனித்து நின்று ஒலிக்கும். பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு இடமாய் இருக்கும். இறைவன் தனித்தும் உயிர், உலகப் பொருட்கள் அனைத்திலும் கலந்து அவற்றை இயக்கும் ஆற்றலாயும் இருப்பான் என்பது சைவ சமயக் கோட்பாடு. அகரத்தை உவமையாகக் காட்டியதன் வழி சைவ மெய்யியல் போக்கில் திருவள்ளுவரின் சிந்தனை செல்வதை உணரலாம்.

 

வள்ளுவர் வழியில் ......

 

திருவள்ளுவரின் அடியொற்றி,

 

அகர முதலானை அணிஆப்பனூரானை 1:88:5

 

என்று திருஞானசம்பந்தர் கூறினார். சுந்தரமூர்த்தி நாயனாரும் இந்த உவமையை துணை கொண்டு இறைவனுக்கு இலக்கணம் அமைத்தார்.

 

அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் 7:3:7 என்பது சுந்தரர் வாக்கு.

 

முதல் என்னும் சொல்

அகரம் எழுத்துக்கு முதல் போன்று இறைவன் உலகுக்கு முதல்வன் என்பதே திருவள்ளுவர் வாக்கு. இக்கருத்தைப் போற்றி அப்பர் பெருமானும் இறைவனை உலகுக்கு முன்னவன் என்றார்.

 

முன்னவன் உலகுக்கு 5:59:8 என்பது அப்பர் வாக்கு. முன்னவன் என்னும் பொருளில் ஆதி என்னும் சொல் ஆளப் பெற்றுள்ளது. முதற்றே என்பது வள்ளுவர் வாக்கு.

 

எழுத்துக்கள் அகரத்தை முதலாய்க் கொண்டன என்ற உவமையும் உலகம் இறைவனை  ஆதியாயும் முதலாயும் உடையது என்ற கருத்தையும் உளங்கொண்டு போற்றி அத்தொடர்களையே சிவஞானச்செல்வர் பலரும் பிற்காலத்தில் இறைவனுக்கு இலக்கணம் அமைக்கக் கைக்கொண்டனர்.

 

சான்றோர் உரைகள்

பரிமேலழகர்

எழுத்து எல்லாம் அகர முதல – எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன; உலகம் ஆதிபகவன் முதற்று - அதுபோல உலகம் ஆதிபகவானாகிய முதலை உடைத்து.

 

பரிதியார்

உயிர் எழுத்து பன்னிரண்டுக்கும் அகரம் முதல் எழுத்தாதல் முறைமை போல ஆதியான பகவன் முதலாம் உலகத்திற்கு...

 

காளிங்கர்

அகரத்திலிருந்து ஏனைய சொற்களும் கலைகளும் பிரிந்தது போல் இறைவனிடத்திலிருந்து தன்மாத்திரைகளும் பூதங்களும் உயிர்களும் உலகங்களும் விரிந்தன....

 

நச்சினார்க்கினியர்

அகர முதல என்புழி அகரம் தனி உயிருமாய் ககர ஒற்று முதலியவற்றுக்கு உயிருமாய் வேறு நிற்றல். அவ்வகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாதலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை உடைத்தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல உயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல...”

 

சான்றோர் அல்லாதார் உரைகள்

பிற்காலத்தில் தமிழ்நாட்டைத் தமிழர் அல்லாதார் திராவிடர் என்னும் பெயரில் தலைமை கொண்டபோது இறைமறுப்பு அரசியல் ஆயிற்று.

 

அரசியல் வலிமைக்குச் சான்றோர் நூல் ஒன்று வேண்டும் எனக் கருதியோர் திருக்குறளை எடுத்துத் தம் இறை மறுப்புக் கொள்கைக்கு ஏற்பத் திரித்தனர். இவர்கள் பரப்பிய பகுத்தறிவுக் கொள்கை வசப்பட்டோர் இறை மறுப்பு நெறியிலேயே உரை காண்போர் ஆயினர்.

 

இவர்கள் உரைகள் அனைத்தும் திருவள்ளுவர் உள்ளக்கிடக்கையும் அன்று, உரைநெறிக்கு இசைவானதும் அன்று. இறை மறுப்பை வலிந்து திணிக்கும் நோக்கத்தால் எழுந்த உரைகளே இவை.

 

பரிமேலழகர், பரிதியார், காளிங்கர், நச்சினார்க்கினியர் போன்ற பழந்தமிழ்ச் சான்றோர் சைவம் அல்லாத பிற சமயப் பிரிவுகளைச் சார்ந்தோராய் இருந்தும் காய்தல் உவத்தல் இன்றிச் செய்த நேரிய உரைகள் அனைத்தும் உலகம் படைப்போனை உடையது என்னும் கருத்தையே நாட்டின. இதனையே ஆசிரியரும் போற்றினர். சிவசிவ.

 துணை நூல்: திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய வெளியீடு, 1963



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 சிவனருள், ஜூலை, 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருக்குறளில் கடவுள்

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

 

என்னும் குறளில் எழுத்துக்கள் அகரத்தை முதலாகக் கொண்டு இயங்குவதைப் போல உலகம் கடவுளை முதலாகக் கொண்டுள்ளது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். பகவன் முதற்றே உலகு என்னும் இரண்டாம் அடியை உலகம் ஆதிபகவனாகிய முதலை உடையது என்று பொருள் கொள்ள வேண்டும். முதல் என்பது படைப்போன் அல்லது செய்வோனைக் குறித்தது.

 

சுட்டி அறியப்படுவதாயும் சடமாயும் உள்ள உலகம் தானே தோன்றி நின்று அழியாது. ஆகவே இதனைத் தோற்றுவித்து, நிறுத்தி, அழிப்பதற்குத் தோற்றமும் அழிவும் இல்லாத பொருள் ஒன்று இருக்க வேண்டும் என்று கடவுள் உண்மையை நிறுவும் அருஞ்செயலைச் செய்திருக்கிறார் திருவள்ளுவர்.

 

அகர முதல... என்று தொடங்கும் அதிகாரத்திற்குக் கடவுள் வாழ்த்து என்று திருவள்ளுவர் தலைப்பிட்டாரா, உரை ஆசிரியர் தலைப்பிட்டாரா என்று அறிய முடியவில்லை. திருவள்ளுவர் தலைப்பு இடாமல் விட்டார் என்றாலும் தொகை செய்யப்பட்ட பாடல்கள் கடவுள் தொடர்பான கருத்துகளின் தொகுப்பாகவே அமைந்துள்ளது.

 

ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறஆழி அந்தணன், எண்குணத்தான் போன்ற சொற்கள் இறைவனையும் இறைவன் இலக்கணத்தையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

 

கடவுளைக் குறிக்கும் இச்சொற்களுக்கு மனிதரில் சான்றோர், பெரியோர், தூய அறிவினர் என்று இறை மறுப்பு உரையாளர் வலிந்து கூறும் விளக்கம் சற்றும் பொருந்தாது என்பதை நடுநிலை ஆய்வறிஞர் அறிவர்.

 

உலகம் ஆதி பகவனை முதலாய் உடையது என்ற கருத்தை எளிதில் மறுக்க முடியாது. உலகம் தானே தோன்றியது என்றாலோ எவராலும் தோற்றுவிக்கப்படாமல் என்றும் இருந்தது என்றாலோ ஆதிபகவனை முதலாய் உடையது என்று சொல்ல வேண்டுவதில்லை. ஆதிபகவன் உலகுக்கு முதல் என்று திருவள்ளுவர் கூறுவதால் உலகம் இறைவனால் படைக்கப்பட்டது என்ற கருத்து உறுதியாகிறது. உலகைப் படைப்பது மனிதரில் சான்றோர், பெரியோர், தூய அறிவினர் எவராலும் இயலாத செயல் என்பதால் உலகைத் தோற்றுவித்தவன் ஆதிபகவன் என்னும் இறைவனே என்பது தேற்றம்.

 

மனிதரில் எந்தச் சான்றோரையும் மலர்மிசை ஏகினான் என்று கூற முடியாது. சிவபெருமானால் அதிட்டிக்கப்பெற்ற பிரமன் பிரகிருதி மாயையினின்று உலகைப் படைத்தான் என்பது சைவ சித்தாந்த உண்மை. பிரமன் தாமரை மலர் மீது இருப்பவன் என்பது புராணக் கூற்று.

 

இறைவன் அனைத்து உயிர்களுக்கும் அவற்றின் வினை வழியே அருள் செய்வான். அவனுக்கென்று விருப்பு வெறுப்பு ஏதும் இல்லை. மனிதரில் இப்பண்பினைப் பெறுவோர் இருவினை ஒப்பு என்னும் உயர்நிலை அடைந்து வீடுபேற்றினைப் பெறுவர். எனவே உயிர்களை அவ்வற்றின் வினை வழி செலுத்தும் கடவுள் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் ஆவான்.

 

தடத்த நிலையில் நம்மைப் போன்று ஐம்பொறிகள் கொண்டவனைப் போல் இறைவன் தோற்றமளித்தாலும் அவற்றின்வழி இன்ப துன்பங்களை நுகர மாட்டான். இதனையே பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் தொடரால் திருவள்ளுவர் குறிப்பிட்டார்.

 

இறைவன் எண்குணத்தான் என்பது சைவ சித்தாந்த முடிபு. தன் வயத்தன், இயற்கை அறிவினன், முற்றறிவு உடைமை, தூய உடம்பினன், மலமற்றவன், பேறாற்றல் உடைமை, பெருங்கருணை உடைமை, பேரின்ப வடிவினன் ஆகியன சித்தாந்த சைவம் குறிக்கும் எண்குணங்கள். இவற்றுள் தன்வயத்தன், எந்த ஒன்றின் சார்பும் இல்லாமல் சுதந்திரனாய் இருத்தல் என்பதைக் குறிக்கும். பரம்பொருளாகிய சிவபெருமானைத் தவிர ஏனைய உயிர்கள் அனைத்தும் ஓர் உடலிலிருந்து தோன்றி ஓர் உடலைச் சார்ந்து செயல்படும். இவ்வாறு இன்றி இறைவன் உடல், இடம் போன்ற சார்பு இன்றி இருக்கவும் செயல்படவும் வல்லவன்.

 

அடி சேர்தல்

திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் பத்துக் குறள்களில் ஏழு குறள்கள் இறைவன் அடி சேர்தல் பற்றிப் பாடுகின்றன. பிறப்பு இறப்பு நீங்கிய பிறவாப் பெருநிலையை முத்தி என்று கூறுவது சித்தாந்தம். முத்தியை இறைவன் திருவடி சேர்தல் என்றும் கூறும். கடவுளை மறுப்போர் அடி சேர்தலைச் சான்றோர் அடியில் வீழ்ந்து வணங்குதலைக் குறிப்பர். சான்றோர் அடியில் வீழ்ந்து வணங்குவதால் வணங்கியவருக்கு எந்தப் பயனும் வாய்ப்பதில்லை. அடி சேர்தல், இறைவனோடு இரண்டறக் கலத்தல் போன்ற நிலைகளால் உயிர் பிறவிப் பெரு நிலையும் இறவாப் பேரின்பமும் பெறும்.

 

திருக்குறளில் திருவள்ளுவர் இறை மறுப்புக்கு இடம் தராமல் சைவ சித்தாந்தம் குறிக்கும் கடவுட் கொள்கைகளையே விளக்கிச் சென்றார் என்பது தெளிவு. சிவசிவ.

 

 

எமது பின்குறிப்பு

 

'மயிலை சீனி வேங்கடசாமி' என்னும் இழையில் அவர் 'கடவுள்', 'இறைவன்' மற்றும் 'தெய்வம்' என்னும் சொற்கள் முனிவர்களையும் குறித்துப் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பதை நிருவ சில துறவற மத நூல்களை ஆதாரமாகக் கொண்டு 'ஆய்வு' என்னும் பொருளில் கட்டுரை ஒன்று வரைந்ததை அவ்விழையில் பதிவு செய்யப் பட்டிருந்தது.

 

மேலும் அப்பர் பெருமான் பாடிய ஒரு தேவாரப் பாடலை மேற்கோள் காட்டி, அதில் 'சமண முனிவரை பெண் துறவியர் 'தெய்வம்' என்று அறியாமையில் போற்றுகின்றனரே' என்று அப்பர் பெருமான் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி அச்சொல் 'கடவுளை'க் குறிக்கும் என்பதாகத் தம் சுய முடிவில்  பொருள் கொண்டுள்ளார். அப்பர் பெருமான் கூறாததைத் தாமே கடவுள் என்னும் பொருளில் அர்த்தப்படுத்திக் கொண்டால் தவறு அப்பர் பெருமானிடம் இல்லை மாறாக மயிலையாரிடமே உள்ளது என்பதை அறியலாம்.

 

தமிழில் 'இறைவன்' என்னும் சொல் சிறப்புப் பொருள் உடையது என்பதை தமிழறிஞர் யாவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இவ்விடம் முனைவர் அருனை பாலறாவாயன் அவர்களின் 'திருமுறைகளில் மற்றத் தெய்வங்கள்' என்னும் கட்டுரையை இணைக்கின்றேன். அதில் 'இறைவன்' என்ற சொல்லுக்கான பொருளை அவர் விளக்கிச் சொல்வதைப் புரிந்து கொள்க. 

 

மு. கமலநாதன்

  



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 சிவனருள், ஆகஸ்ட், 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருவள்ளுவரின் உயிர்க் கொள்கை

 

இக்கட்டுரைத் தொடரின் கடந்த மூன்று கட்டுரைகளில் கடவுள் இருப்பு குறித்து ஆராய்ந்தோம். கடவுள் இல்லை என்று மறுப்போர் திருவள்ளுவரின் சிந்தனையைத் தம் போக்கில் சிதைத்து உரைத்த உரைகளையும் அவற்றில் காணப்படும் பிழைகளையும் சிந்தித்தோம். இனிக் கடவுளோடு தொடர்புடைய பிற பொருள்களைக் குறித்துச் சிந்திப்போம்.

 

இந்தியத் தத்துவ துறையில் கடவுளைப் பற்றிப் பேசிய அனைவரும் கடவுளோடு தொடர்புடைய உயிர், உயிரின் பிறப்பு, மறுபிறப்பு, பிறப்பின் முடிவு, பிறப்புக்குக் காரணமான வினை, வினையும் பிறப்பும் கடந்த வீடுபேறு போன்ற பல பொருள்கள் பற்றியும் பேசியுள்ளார். எனவே கடவுள் இல்லை என்று மறுப்போர் கடவுளோடு தொடர்புடைய அனைத்துப் பொருள்கள் குறித்தும் விளக்கம் சொல்லியாக வேண்டும்.

 

தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டுக்கு அப்பாலும் திருக்குறளுக்குப் பல அமைப்புகளும் இயக்கங்களும் ஏற்பட்டுள்ளன. குறளின் மீது இத்துணை கரிசனையா என்று வியக்க வேண்டாம். இப்படித் தோன்றிய அமைப்புகளுள் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது கடவுள் இல்லை என்று மறுப்பதற்கே தோன்றிச் செயல்படுகின்றன.

 

இப்படித் தோன்றிய அமைப்பினர் முதல் அதிகாரத்தில் வரும் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறஆழி அந்தணன் போன்ற தொடர்களுக்குக் கடவுள் என்று பொருள் சொல்லாமல் சான்றோர், பெரியோர் என்றெல்லாம் பொருந்தாப் பொருள் கூறித் தப்பிச் செல்லலாம். இப்படி எளிதாகக் கடவுள் சிந்தனையை மறுப்போர் கடவுளோடு தொடர்புடைய பிற கருத்துகளை மறுக்க முடியாது.

 

அந்தக் காலக் கடவுள் மறுப்பு

 

கடவுள் மறுப்பைத் தமிழ் நாட்டில் இறக்குமதி செய்தவர்களில் சமண, பௌத்தர்க்குப் பெரும் பங்கு உண்டு. இவ்விரு மதத்தினரும் கடவுள் இருப்பை ஏற்கவில்லை. இல்லை என்று வெளிப்படையாகக் கூறவும் இல்லை.

 

கடவுள் இருப்பைத் திட்டவட்டமாகத் தெரிவிக்காத காரணத்தால் இம்மதங்களை நிறுவியவர்களையே கடவுளாகக் கருதும் போக்கு பிற்காலத்தில் உறுதிப்பட்டது. இக்காலத்தில் கடவுளை வெளிப்படையாக மறுக்க அஞ்சுவோர் சமண, பௌத்த மதங்களின் ஆசீவகம் போன்ற பிரிவுகளைக் கைக்கொண்டு மிகச் சாதுரியமாகக் கடவுளை மறுக்கின்றனர்.

 

உலகாயதம்

 

உலகாயதம் தெளிவான கடவுள் மறுப்புக் கொள்கையை உடையது. தமிழ் நாட்டில் பத்தாம் நூற்றாண்டு அளவில் இக்கொள்கை பரவியது ‘நாத்திகம் பேசி நாத்தழும்பேறினார்’ (திருவாசகம், போற்றித் திருவகவல் – 47ஆம் அடி) என்று மாணிக்கவாசகர் கூறினார். காட்சி அளவை ஒன்றையே கருவியாகக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத எதையும் ஏற்க மாட்டோம் என்றனர் உலகாயதர். சைவ சமயம் தத்துவங்கள் முப்பத்தாறு என்றும் சைவம் அல்லாத பிற மதங்கள் இருபத்தைந்து என்றும் கூற, உலகாயதர் மண், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கே தத்துவங்கள் என்பர். எனவே, உயிர், பிறப்பு, இறப்பு, வினை, வீடுபேறு என்னும் பேரின்பம் போன்றவற்றை உலகாயதர் ஏற்கவில்லை என்றாலும் உயிர், உயிர் நுகரும் பேரின்பம் ஆகியவற்றுக்கு வேறு விளக்கங்கள் கூறினார்.

 

உயிர் என்று ஒரு பொருள் இல்லை. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளைக் கொண்ட உடலில் உயிர் தோன்றுவது இயற்கை. வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு மூன்றும் ஒன்றாகச் சேரும்போது முன்பு அவற்றில் இல்லாத சிவப்பு நிறம் தோன்றுவது போல் ஐம்பொறிகள் கொண்ட உடலில் ஓர் உணர்வு தோன்றும் என்பது உலகாயதரின் உயிர்க் கொள்கை. பேரின்பம் என்பது பெண்களிடம் அனுபவிக்கும் கலவி இன்பமே என்பது இவர்கள் கொள்கைகள்.

 

திருக்குறளில் உயிர்

 

கடவுள் மறுப்பாளர் உயிர் உண்மை, ஆணவம், வினை, பிறப்பு, வீடுபேறு இவற்றை நம்ப வேண்டுவதில்லை. திருவள்ளுவர் இவற்றைப் பற்றிப் பேசுவதால் அவர் ஒருபோதும் கடவுள் மறுப்பாளராய் இருந்திருக்க முடியாது. எனவே, திருவள்ளுவர் மீது கடவுள் மறுப்புக் கொள்கையைத் திணிப்பது அவருக்குச் செய்யும் பெருங் கேடாகும்.

 

உயிர் அநாதி

 

உயிர் தொடக்கமும் முடிவும் இல்லாமல் என்றும் நிலையாக இருக்கும் பொருள் என்பது சைவ சித்தாந்தம் கொண்டுள்ள சிறப்புக் கொள்கை. வள்ளுவர் கருத்தும் இதுவாகவே இருக்கின்றது.

 

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு – 338

 

பறவை வசித்திருந்த கூடு குடம்பை எனப்படும். கூடு இயற்கைச் சீற்றங்களால் அழியும்போது பறவை சற்றும் வருந்தாமல் அதை விட்டு வெளியேறிச் செல்வது போல் உடம்பு கெடும்போது உயிரும் உடம்பை விட்டு நீங்கிச் செல்லும் என்றார் வள்ளுவர். உடம்பு அழியும்போதும் உயிர் அழிவதில்லை என்னும் கருத்து இக்குறளில் பெறப்படுகின்றது.

 

உயிர் உடம்பைப் பெறுவதும் இழப்பதும் இயல்பாக நிகழும் செயல் என்பதும் வள்ளுவர் கூற்றாக உள்ளது. ஒவ்வொரு நாளும் உயிர் மரண விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்கிறார் திருவள்ளுவர்.

 

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாள்அது உணர்வார்ப் பெறின்’ – 334

 

ஒரு நாள் என்பது உடம்பிலிருக்கும் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து வீழ்த்தும் வாள் என்பது வள்ளுவர் கருத்து.

 

கொல்லாமை

 

கொல்லாமை என்னும் அதிகாரத்தில் உயிரைக் கொன்று துன்புறுத்தல் ஆகாது என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். உடல் சடம். உடலை அறுப்பதால் உடலுக்கு ஒரு துன்பமும் இல்லை. உடலை இடமாய்க் கொண்ட உயிரே சார்ந்ததன் வண்ணமாகும் தன்மையால் உடலுக்கு வரும் கேடுகளைத் தன் கேடாக உணர்ந்து துன்புறுகிறது.

 

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்’ – 321

 

மக்கள் செய்யும் அறச்செயல்கள் அனைத்திலும் மிக உயர்ந்தது கொல்லாமையே. கொலை தீவினை அனைத்தையும் கொண்டு வரும் என்பது வள்ளுவர் சிந்தனை.

 

உலக வாழ்வை வெறுத்து துறவு பூண்டு செல்லும் துறவிகளைக் காட்டிலும் கொலைத் தொழிலைச் செய்ய அஞ்சி கொல்லாமை என்னும் அருள் நெறியைப் போற்றுவோர் உயர்ந்த மக்களாய்க் கருதப்படுவர் என்பதும் வள்ளுவர் கருத்தாக உள்ளது.

 

நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை – 325

 

என்பது வள்ளுவம். இது வரை வள்ளுவர் கூறிய கருத்துகளால் உயிர் உண்மை உறுதியானது. மேலும் உயிருக்கு உடலின் சார்பால் துன்பம் வரும். கொல்லாமையே உயர்ந்த அறம் என்பன போன்ற கருத்துகளால் சைவம் கூறும் உயிர்க் கொள்கையைத் திருவள்ளுவர் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் கூற முடியும். சிவசிவ. தொடரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 சிவனருள், செப்டம்பர், 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருவள்ளுவர் உணர்த்தும் பிறவியும் மறுபிறவியும்

 

கடவுட் கொள்கையை ஏற்ற எல்லா மதங்களும் உயிர்க் கொள்கையை ஏற்கின்றன. ஆனால் உயிர் உண்மையை ஏற்ற எல்லா மதங்களும் கடவுளை ஏற்கவில்லை. உயிர் உண்மையை ஏற்ற எல்லா மதங்களும் சைவ சித்தாந்தம் கூறும் உயிர் பற்றிய உண்மைகளை ஏற்பதில்லை.

 

கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை. அவை தோற்றம் அற்றவை; அழிவு இல்லாதவை; எண்ணற்றவை; முத்தி என்னும் இறவா இன்ப நிலை அடையும் வரை பல முறை பிறந்தும் இறந்தும் பக்குவப்படுகின்றன என்பன உயிர் குறித்த சைவ சித்தாந்தக் கொள்கைகள். இதனை இந்திய மதங்களும் உலக மதங்களும் ஏற்பதில்லை. திருவள்ளுவர் ஏற்கிறார் என்பதைப் பல குறள்கள் உணர்த்துகின்றன.

 

எது பிறக்கிறது?

 

உடல் பிறக்கிறது. உடல் இறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உயிர் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை என்பதே உண்மை. ஆனால் சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையால் பிறப்பு முதல் இறப்பு வரை உயிர் உடலையே சார்ந்து அறிவு பெறுகின்றது. உடலை இழந்து அறியாமையில் கிடக்கிறது என்பதே உண்மை.

 

உயிர் இருப்பதற்கு உரிய தகுதியை உடல் நோய் முதலிய காரணங்களால் இழந்துவிடுகிறபோது உயிர் உடலை விட்டுப் பிரிந்து போகிறது. உடல் அழிகிறது. இதனைக் கீழ் வரும் குறளால் வள்ளுவர் உணர்த்துகின்றார்.

 

‘’குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு – 338

 

பிறவி என்னும் கடல்

 

உயிர் உடலைப் பெறும் நிகழ்வே பிறப்பு அல்லது பிறவி. பிறவியைப் பெருங்கடல் என்றார் வள்ளுவர். ஒரு பிறவியில் இதனைக் கடக்க முடியாது. ஒரு பிறவியில் இறைவன் திருவடியைச் சென்று அடையவும் முடியாது. பல பிறவிகள் பிறந்து முயன்று பிறவி என்னும் கடலை நீந்திக் கடக்க வேண்டும். நீந்திக் கடக்க முடியாதவர் இறைவன் திருவடியைச் சென்று சேர மாட்டார். சேரும் வரை பிறவிப் பெருங்கடலில் நீந்தியபடியே இருப்பார். இறைவன் திருவடியைச் சேர்ந்தவர் பிறவிப் பெருங்கடல் நீந்தார். நீந்தார் என்னும் சொல் மீண்டும் பிறக்க மாட்டார் என்னும் உண்மையை உணர்த்தியது.

 

பெருங்கடல் தொடர்ந்து வரும் பிறவிக்கு உவமை. நீந்துதல் பிறப்புக்கு உவமை. நீந்தாமை பிறப்பு அறுவதற்கு உவமை. இவ்வாறு உயிர்கள் பிறப்பதும் இறப்பதுமாகப் பல பிறவிகளை அடைகிறது என்னும் கருத்தைக் கீழ்வரும் குறள் உணர்த்துகின்றது.

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

இறைவன் அடிசேரா தார் – 10

 

எழு பிறப்பு

 

பல காலம் பிறக்கும் உயிர்கள் ஏழு வகையான பிறவிகளில் அச்சு மாறிப் பிறக்கும் என்பது சித்தாந்தம். இதனை ஓரறிவு உடைய புல் முதலிய நிலைத்திணை சார்ந்த உயிர்கள் என்றும் புழு, சங்கு ஊர்வன என்னும் முறையே இரண்டு, மூன்று, நான்காம் அறிவுடைய உயிர்கள் என்றும் பறவை, விலங்குகள் ஐந்து அறிவுடையன என்றும் மனம், புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களால் அறிவு பெறும் மக்கள் பகுத்தறியும் ஆறாம் அறிவினர் என்றும் நூல்கள் சாற்றும். இவ்அறுவகைப் பிறவிகள் நில உலகின்பால் வருவன. இவை பிரகிருதி மாயையில் இருப்பன. இவற்றுக்கும் அப்பால் கலப்பு மாயை மற்றும் சுத்த மாயையில் உலகங்களும் உயிர்களும் உள்ளன. இவை அனைத்தும் ஏழாம் அறிவு உடையன. நிலவுலகு கடந்த உலகங்களில் வாழும் தேவர், சிவகணங்கள் என்னும் பெயர்களைப் பெறுவர். அறிவின் அடிப்படையில் ஏழு வகைப்பட்ட பிறவிகளில் உயிர்கள் எண்ணற்ற பிறவிகள் பிறந்து இறக்கும்.

 

‘’எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்” – 62

 

 

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு” – 106

 

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து” – 126

 

என்னும் குறள்கள் எழு வகைப் பிறப்புகள் குறித்துப் பேசுகின்றன. இவற்றால் பிறவிகள் பல என்பதும் ஓர் உயிர் ஒரு பிறவி பெற்று இறந்து பின்னர் மீண்டும் பிறக்கும் என்பதும் உறுதிப்படுகின்றது.

 

பிறவி ஒன்றே எனில் ......

 

பிறவி ஒன்றே என்றும் உயிர் அது சார்ந்த மதக் கோட்பாடுகளின்படி வாழ்ந்து இறந்தால் மோட்சம் பெறலாம் என்று சிலர் கூறுவர். இதனை ஏற்பதில் என்ன சிக்கல்?

 

இதற்கு முன்னால் உயிர் பிறவிகள் பெற்றதில்லை என்று கருத வேண்டி வரும். அதனால் உயிருக்கு முன் செய்த வினைகள் என்று இல்லை. ஆகவே உயிர் எழு வகைப் பிறவிகளில் எதுவாகப் பிறந்தாலும் அது முன் செய்த வினை அதற்குக் காரணமாகாது. ஆகவே உயிர் பெறும் எவ்வகைப் பிறப்புக்கும் அதனைப் படைத்த கடவுளே பொறுப்பு ஆவார். சில உயிர்களுக்குச் செம்மையான உடலும் சில உயிர்களுக்குக் குறையுடைய உடலும்  சில உயிர்களுக்கு இன்பம் நிறைந்த வாழ்க்கையும் சில உயிர்களுக்குத் துன்பம் நிறைந்த வாழ்க்கையும் இறைவனே கொடுத்தான் என்றால் இறைவன் நடுநிலையான கருணையாளன் என்னும் கருத்து பிழையாகிப் போகும். இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்ற கருத்தும் பிழையாகிவிடும். இக்காரணங்களாலேயே உயிர் செய்த வினையின் அடிப்படையில் இறைவன் உடலும் உடல் வாழும் உலகமும் உடலுக்கு ஏற்ற நுகர்வுகளும் படைத்துத் தருகிறான் என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது.

 

ஏன் பல பிறவி?

 

ஒரு பிறவியில் உயிர் முத்தி என்னும் உயரிய இன்ப நிலையை அடைய முடிவதில்லை. எனவே பல பிறவிகளில் உயிர் தொடர்ந்து பக்குவப்பட வேண்டும். ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தை சிறிய அளவு அறிவு பெற்றுத் திரும்புகிறது. பல நாள், பல ஆண்டுகள் பயின்று நிறைந்த அறிவைப் பெறுகின்றது. ஒரு பிறவி என்பது ஒரு நாள் பள்ளிக்குச் செல்வதைப் போன்றது என்று நாம் உணர்ந்தால் பல பிறவி பெற வேண்டியதன் காரணம் புரியும்.

 

இவ்வாறு மறுபிறவி உண்மையைச் சைவமும் வள்ளுவமும் நிறுவுகின்றன. சிவசிவ.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 சிவசிவ

 

கேள்வி ஒன்று:

 குறள் எழுந்த காலத்தில் சைவ மெய்யியல் இருந்ததா? (இருந்தது என்றால், எந்த நூல், எந்த நூற்றாண்டு என்று தரவுகள் கொடுக்கவும்)

  குறள் எழுவதற்கு முன்பே சைவ சித்தாந்த மெய்யியல் சிவாகமத்தின் ஞானபாதம் என்னும் நூல் வடிவில் இருந்தது.

 

 தொன்மையான சிவாகமங்களின் காலம் கி.மு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு என்று கூறுகின்றார் சிவாகமத்தைப் பற்றி ஒர் ஆய்வு நூலை எழுதிய திரு. எம். அருனாசலம் என்பார். இந்நூல் அவர்தம் முதுகலை பட்டத்திற்காக எழுதப்பட்ட ஆய்வறிக்கையாகும். அந்நூலை இத்துடன் இணைக்கின்றேன். சிவாகமத்தின் தொன்மையை அறிய 6 முதல் 10 -வது பக்கம் வரையில் காண்க. சிவாகமத்தின் ஞான பாதத்தின் விளக்கத்தை 27 ஆம் பக்கத்தில் காண்க. சில சிவாகமத்தின் ஞான பாதத்தை அறவாழி அந்தணன்’ என்னும் இழையில் பதிந்துள்ளேன். அங்கிருந்து தறவிரக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.

 மேற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை வெளியிட்ட (1988) உயராய்வு’ என்னும் நூல் தொடரில் (பகுதி 2 & 3) ‘சிவாகமங்களும் திராவிட நாகரிகமும்’ என்னும் தலைப்பில் டாக்டர் குல. சபாரத்தினம், (இணைப் பேராசிரியர், சைவசித்தாந்த துறை) எழுதிய ஆய்வுக் கட்டுரையை இத்துடன் இணைக்கிறேன்.

 இக் கட்டுரையில் (பக்கம் 126) சிவாகமங்களின் காலம் ஏறக்குறைய வேதத்தின் கால அளவே என்று கூறுகின்றார். அதாவது வேதங்கள் எழுந்த காலமகிய ஏறக்குறைய கி.மு. 2400 – 2000 ஆண்டுகளையொட்டி எழுந்தவை சிவாகமங்கள் என்று கூறுகின்றார்.

 

மேற்கூறிய இரண்டும் சிவாகமத்தைப் பற்றிய சிறப்பான ஆய்வு நூல்கள் என்பதால் இது வியந்து வியந்து கூறியது என்று கொள்ளாமல் சைவ மெய்யியலின் தொண்மையை உள்ளப்பூர்வமாக அறிந்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகின்றேன்.

இதனை மறுக்கத் துணிந்தால் அதற்கான ஆய்வு நூல்களை முன் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சிவசிவ.

 

அன்புடன் மு. கமலநாதன்
 


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

கேள்வி இரண்டு:

 

பதியைப் போல பசுவும்பாசமும் அனாதி என்றால்உலகுக்கு பதியை மட்டும் முதல் என்று சொல்வது 

எங்ஙனம்?

 

இதற்கான பதிலை அறவாழி அந்தணன் இழையில் தங்களோடு உரையாடும் பொழுது சுருக்கமாகப் பதிந்தேன். அதனை தங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்று கருதுகிறேன்.

 

 

பதி – அறிவுப் பொருள் – சத் சித், ஆனந்தம் – சிவாகமம் கூறும் பதிக்குரிய எண் குணங்களாகும்

 

பசு – சதசத்து எனப்படும் – அதாவது உயிர் அறிவிக்க அறியும் தன்மையுடையது. தானே எதையும் அறியாது.

 

பாசம் – சடமானப் பொருள் என்பதால் அறிவித்தாலும் அறியாது.

 

மேற்கூறிய முப்பொருளும் அநாதி (தோற்றம் மற்றும் அழிவில்லாதது) என்று கூறினாலும் அவை அதனதன் ஆற்றல் தன்மையால் வேறுபட்டுள்ளதை அறியலாம்.

 

உயிர் சார்ந்ததின் வண்ணமாகும் தன்மையால் அசத்தான பாசத்தைச் சார்ந்தால் அசத்தாகவும், பாசத்தை விட்டு நீங்கி சித்தான பதியைச் சார்ந்தால் அறிவுப்பொருளாகி நிற்கும். அதனால் உயிர் சதசத்து எனப்படும். உயிர் அறிவு நிலையில் மாறுபடக் கூடிய தன்மையுடையது என்பது இதன் பொருளாகும்.  

 

இம்மூன்றில் பதியே என்றும் மாற்றமில்லாத (சத்) ஞான வடிவமாக (சித்) இருப்பதால், இறைவன் முழுமுதல் தன்மை பெறுகின்றான் என்பதை அறிவீராக. இது சித்தாந்த விளக்கமாகும். சிவசிவ.

 

தங்களால் இவ்விளக்கத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லையானால் தமிழ் நாட்டில் ஒரு சித்தாந்தியை அனுகி தெளிவித்துக் கொள்ளலாம். 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

கேள்வி மூன்று:

 தனக்குவமையில்லான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் குறளாசான். அவ்வாறிருக்க,

இறைவனை அகரத்திற்கு உவமிப்பது முரண் இல்லையா?

 அக்குறளுக்குச் சமணரின் விளக்கத்தை இதற்கு முன்னமே அறஆழி அந்தணன் இழையில் பதிவேற்றினேன். தாங்கள் படிக்கவில்லை போலும்! மீண்டும் சமணரின் விளக்கவுரையை இவ்விடம் பதிவேற்றுகிறேன். இதற்கு முன் பதிவேற்றியவற்றை படிக்காமல் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதால் பயன் ஏதுமில்லை.

சமணரும் பிறர் கூறும் உரையை ஒத்து உவமானமாக கூறியது என்பதாகவே விளக்கினார். இதே கேள்வியைத் தங்களவரிடமும் கேட்டிருக்கலாமே?

இருந்தாலும் பரவாயில்லை கடவுட் கொள்கையற்ற சமணர்களுக்கு இதன் விளக்கத்தை தெளிவாகச் சொல்ல இயலவில்லையானாலும் சைவரால் விளக்கிக் கூற முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்காக க. வெள்ளைவாரணனார் எழுதி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட (2002) நூலிலிருந்து திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும் பிரிவில் தேவையான பக்கங்களை இத்துடன் இணைக்கின்றேன். அக்கட்டுரையில் 426-ஆம் பக்கத்தில் அப்பேராசிரியரின் விளக்கத்தைக் காண்க.

தனக்குவமை இல்லாதன் என்று கூறியது தனக்கு நிகரில்லை என்ற பொருளைக் குறிக்குமென்று உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருவருட்பயன் முதற் குறளைக் கொண்டு விளக்குகின்றார்.

திருக்குறளின் முதல் குறளில் கூற வந்த பொருளோ இறைவன் உலகப் படைப்பைச் செய்வோனாக உள்ளான் என்பதை திருவள்ளுவர் கூறுவதாகத்தான் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் கூறினார். ஆதலால் முதல் குறளில் கூறப்பட்டது அவனுடைய படைப்புத் தொழிலில் அவனே முதல்வனாக நிற்கின்றான் (ஆதி) என்பதைக் குறிக்கும். இங்கே உவமானமாக கூறப்பட்டது இறைவனின் முழுமுதற் நிலையைப் பற்றியதல்ல மாறாக அவனது ஐந்தொழில் பற்றியதாகும். ஆகையால் இவ் உவமானம் ஏழாவது குறளுக்கு முரணாகாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சிவசிவ.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 கேள்வி நான்கு:

 

அகரத்தில் இருந்து மற்ற எழுத்துகள் வந்தது என்பது முரண். உயிர் எழுத்துகள் தனித்து இயங்கக்

கூடியனஅதனாற்றான் அவ்வெழுத்துகளுக்கு உயிரெழுத்து என்று வகுக்கப்பட்டன. உ என்ற

எழுத்தில் அ ஓசையில்லையேவிளக்க முடியுமா?

 

ஏம்பா! சில நூற்றாண்டுகளாக பல உரையாசிரியர்கள் திருக்குறளுக்கு உரை எழுதினார். அவர்களிடமெல்லாம் இக்கேள்வியைக் கேட்காமால் சிறியோனாகிய எம்மிடம் கேட்டால் எப்படி? இது தங்களுக்கு குற்றமாகத் தெரியவில்லையா?

 

என்ன செய்வது சித்தாந்தம் என்றொரு மெய்யியலைப் படித்து விட்டேன். படிக்கும்போதே ஆசான்கள் எங்களுக்கு இட்ட கட்டளையோ தங்கள் பதில் ஒரு பாமரன் பதிலாக இருக்கக் கூடாது மாறாக சித்தாந்தியின் பதிலாக இருக்க வேண்டும் என்பதையும் கட்டளையாக இட்டனர். அதன் பயனை இப்பொழுதான் அனுபவிக்கின்றேன் போலும்.

 இருந்தாலும் பரவாயில்லை தாங்கள் கேட்டுக் கொண்டதற்காக விளக்குகின்றேன்.

 பயிற்றுவிக்கும் முறையில் தூல அருந்ததி நியாயம் ஒன்று உள்ளதை அறிவீர்களே! அதன் அடிப்படையில் தெரியாத ஒன்றை விளக்குவதற்கு முன் தெரிந்த ஒன்றை விளக்கியபிறகு தெரியாத பொருளை விளக்கினால் பாமரனும் புரிந்து கொள்வான்.

 திருக்குறளைப் படிக்கும் அனைவரும் சித்தாந்த பயிற்சி உடையோர் அல்ல. அதனால் சித்தாந்தத்தைக் கொண்டு கர முதல என்ற சொற்றொடருக்கு விளக்கம் கூற புகுந்தோமானால், திருக்குறளைப் படிப்போர் அது புரியாத புதிர் என்று வீசி எறிந்து விட்டுப் போய் விடுவார். அதன் காரணமாக சித்தாந்திகளும் பொதுவாக அனைவருக்கும் விளக்க முற்படும் பொழுது  என்னும் உயிர் எழுத்து அனைத்து எழுத்துக்கும் முதல் எழுத்தாக இருப்பது போல் உலகைப் படைக்குங்கால் இறைவனே முதல்வனாக நிற்கிறான் என்று விளக்குவார். இப்படிச் சொன்னால் பள்ளிப் பிள்ளைகள் கூட எளிதாகப் புரிந்து கொள்வார். அதை விடுத்து சித்தாந்ததை எடுத்து அவர் முன் போட்டால் டீச்சர் எங்களை சித்திரவதை செய்யாதீர் என்று இருகரம் கூப்பி வேண்டிக் கொள்வார்.

 அதனால்தான் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களும் இன்னும் அவரைப் போன்ற பிற தமிழறிஞரும் தூல அருந்ததி நியாயத்தின் வழியே விளக்கிச் சென்றனர்.

 இப்பொழுது தங்களின் கேள்விக்கு வருகின்றேன்.

 #அகரத்தில் இருந்து மற்ற எழுத்துகள் வந்தது என்பது முரண். உ என்ற எழுத்தில் அ ஓசையில்லையேவிளக்க முடியுமா?#

தாங்கள் ஒரு தெளிவான சித்தாந்தியிடம் சித்தாந்தம் பயிலவில்லை. அதனால் தாங்கள் கேட்ட கேள்விக்கு தங்களாலேயே விடை காண இயலவில்லை.

 முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களிடம் சித்தாந்தப் பயிற்சி பெற்ற மாணவன் என்பதால் தங்களின் கேள்விக்கு எம்மால் விடையளிக்க முடியும் காரணம் தங்கள் கேள்விக்கு முன்னமே அதற்கான விளக்கத்தை அவர் எங்களுக்கு போதித்துள்ளார்.

இறைவன் உலகத்தைப் படைக்குங்கால் பொருட்பிரபஞ்சம் சொற்பிரபஞ்சம் என்று இருகூறுகளாய்ப் படைக்கின்றான். இங்கே சொற்பிரபஞ்சத்தை மட்டும் காண்போம்.

சொல் முதலில் ஒலி வடிமாகாகத் தோன்றுமிடம் சிவதத்துவத்தில் முதலிடமாகிய நாதத் தத்துவத்திலிருந்து தோன்றும். அவ்வாறு தோன்றுமிடத்து அது சூக்கும நிலையில் இருக்கும். இச்சூக்குமை ஒலியானது ’, ’,  – வாகத் தோன்றும். அப்படி தோன்றும் ஒலியை நாம் ஓம் என்னும் தூல உச்சரிப்பில் கூறுகின்றோம். இது அசபை ஒலி என்று திருமூலர் கூறுவார். அதாவது உச்சரிக்க முடியாததாகும். அவ்வளவு நுண்ணியத் தன்மையுடையது.

இவ்வாறு சொற்பிரபஞ்சம் தோன்றுங்கால் ஒலியானது  என்ற ஒலியை அடிப்படியாகக் கொண்டு தோன்றுகின்றது என்று சித்தாந்தம் விளக்கும். இச்சூக்கும ஒலி சத்தி தத்துவதில் விரியும் பொழுது பைசந்தி பின்னர் அடுத்தடுத்த தத்துவதில் மத்திமை, வைகரி என்று விரிந்து  நம் செவிக்கு மந்திரமாக (சொற்றொடராக) விளங்கும் வண்ணம் தூல ஓசையில் கேட்கும்.

அதை அப்படியே நம் உடலுக்குள் கொண்டு வந்து வைத்து காண்கையில் உந்தியிலிருந்து காற்று மேல்நோக்கி எழும்பும் போது  என்ற சூக்கும ஒலியோடு துவங்கும் பின்னர் நாவின் வழி வெளிப்படும் பொழுதே வெவ்வேறு ஓசையுடன் நம் செவிகளுக்கு கேட்கும். அதனால்தான் கர ஒலி விரிவடைய அதிலிருந்து பிற ஒலி ஓசைகள் எல்லாம் வெளிப்படும்.  என்ற ஒலி தோன்றுவதற்கும்  கரமே முதலிடமாக இருக்கும். இதற்கான விளக்கத்தை தொல்காப்பியம் முதல் சித்தாந்த சாத்திரங்கள் வரை காணலாம். விவரித்துச் சொல்ல நேரமில்லை.   

அதனால்தான் திருவள்ளுவர் கர முதலாகி என்று உவமை கூறினார். சிவசிவ.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 இவ்விழையில் கருத்துக்கள் பதிந்த மிந்தமிழ் நண்பரகள் அனைவருக்கும் வணக்கம் .

1975-முதுகலை தமிழ் வகுப்பில் நடந்த ஒருகருத்துப்பரிமாற்றம் பற்றி இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
தேம்பாவணி பாடம் எடுக்க ஒரு பாதிரியார் வருவார் .திருவள்ளுவர் மயிலாப்பூரைச் சேர்ந்தவர் .கிறிஸ்து மறைந்தபின் அவரது சீடரகளில் ஒருவர் மயிலாப்பூரில் வந்து கரையேறினார் .திருவள்ளுவர் அவரைச் சந்தித்து இருக்க வேண்டும் .அதனால்தான் திருக்குறள் கிறிஸ்துவம் போற்றும் கருத்துக்களையெல்லாம் தன்னுள் கொண்டிருக்கிறது என்று கூறும் கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்றார் .
மேற்கூறிய கருத்தை பெரிதுபடுத்தத் தேவையில்லை .ஆனால் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் தோன்றிய ஒரு சமயத்தைச் சார்ந்தவர்கள் திருக்குறளைத் தம்மோடு இணைக்கத் துடிக்கும்போது நம்நாட்டிலேயே தோன்றிய இருவேறு சமயங்கள் தம்முள் போட்டி போடுவது வியப்பன்று .ஆனாலும் எனக்குள்ள ஐயங்கள் 3 
.
1.திருக்குறள் பாயிரத்தில் மழையைப் போற்றுவதுபோல சைவம் மழையை தெய்வமாகப் போற்றச் சொல்கிறதா /
2திருக்குறள் நீத்தாரைப் போற்றுகிறது .சைவம் நீத்தாரை தெய்வமாகப் போற்றச் சொல்கிறதா /
3திருக்குறள் அற த்தை வலியுறுத்த்துகிறது .வாழ்வில் எந்தத் தொழிலைச் செய்தாலும் அறம் பிறழக்கூடாது .இது செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் மூலம் .சமணபௌத்தப் பள்ளிகளைத் தான் அறப்பள்ளி என்றும் கூறுவோம் .சைவம் அறத்தை வலியுறுத்துகிறதா /
இளங்கோவடிகள் மழையைப் போற்றுகிறார் .அறவாழி உருட்டும் மன்னனைப் போற்றுகிறார் .இதனால் திருவள்ளுவரும் இளங்கோவடிகளும் ஒரே சமயத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லலாம் .
கண்மணி 


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

தங்களுக்கோ இறை நம்பிக்கையில்லை என்று சொல்லிக் கொண்டீர்கள்.
 
வினைக் கொள்கையிலும் மறுபிறப்புக் கொள்கையிலும் நம்பிக்கையில்லையென்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டீர்கள். ஆதலால் இறை நம்பிக்கையையும் மறுபிறவி கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்ட திருக்குறளில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றாகி விட்டது. 
 
இப்படி இறை நம்பிக்கை இல்லாதபோது இறை நம்பிக்கையை வலுத்தும் நூல்களைப் பற்றி தாங்கள் கேள்வி கேட்பதினால் தங்களுக்கு யாதொரு நன்மையும் ஏற்பட போவதில்லை. நம்பிக்கையின்றி எத்தொரு செயலையும் செய்தால் அது விழலுக்கு இறைத்த நீர் போலாகும். இத்தகைய கேள்வி கேட்கும் தங்களின் ஆர்வ கோளாறு தங்களிடம் ஒரு மன இறுக்கம் உள்ளதை வெளிப்படையாகவே காட்டுகின்றது.
 
இவ்வாறு மன இறுக்கத்துடன் வாழ்வது தங்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் தீங்கிழைக்கும் என்பதை புரிந்து கொண்டு இறை நம்பிக்கையுடைய நூல்களைப் படிக்காமலும் அவற்றை வியாக்கீனப்படுத்தாமலும் இருந்தால் தங்கள் உடலும் உள்ளம் ஆரோக்கியமடையும் என்பதை அறிவுரையாகக் கூற விரும்புகிறேன்.
 
இது தங்கள்பால் கொண்டுள்ள அன்பினால் செய்யும் நற்செயலாகும்.
 
தாங்கள் குறித்த நூலை ஏற்கனவே தரவிறக்கம் செய்து படித்துள்ளேன். அதில் இருக்கும் நிறையும் குறையும் படிக்கும் போதே கணித்து விட்டேன்.
 
ஆதலால் பக்கம் 68-ல் உள்ள எப்பொருளைப் பற்றி தாங்கள் அறிய விரும்புகின்றீர்கள் என்பதைச் சுருக்கமாக முன் வைக்கவும். தக்க பதிலை அளிப்போம். 
 
தங்களின் கேள்வி திருக்குறளுக்குச் சம்பந்தம் இல்லாததால் தங்கள் கேள்வியை இந்து மகாசமுத்திரத்தில் கொட்டவும். அங்கு வந்து முத்துக்குளித்து முத்துகளைத் தேடி தருகின்றேன். சிவசிவ. 
 
அன்புடன் மு. கமலநாதன்
   


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

இந்து சமய‌கருத்துக்கள் திருவள்ளுவர் காலத்திலேயே புழக்கத்தில் வந்து விட்டன. அந்த கருத்துக்களில் பல அவருக்கு உடன்பாடு இல்லை.

ஏற்கெனவே உள்ள சில வழக்குகளை மறுக்கும் போது அவற்றை மேற்கோள் காட்டித்தான் மறுப்பது மரபு. வளமை மிகுந்த நாட்டின் கண் வந்தேறிகள் தம்மை உயர்த்திக் காட்ட பொய் நூல்கள் பல செய்து அவற்றை மேம்படுத்தி பரப்பி வந்தனர். அத்தகைய புனைகளை ஏற்று தமிழர் தம் பண்பாட்டில் இருந்து பிறழ்தல் கூடாது என்பதற்காக விழிப்புணர்வு உண்டாக்கிட திருவுளம் கொண்டார் திருவள்ளுவர். அடை கொடுத்ததை வைத்து வடவர் புனைகளை திருவள்ளுவர் ஏற்றுக் கொண்டார் என்ற முடிவுக்கு வருவது பிழையாகும். நூல் செய்வதில் ' பிறர் தம் மதம் மேற்கொண்டு களைவே' என்பதும் ஒரு முறையாகும். அதாவது பிறர் கொள்கையில் ஒருபுடை ஏற்று பின்பு அதனை முழுக்க மறுப்பதாகும்.

நஞ்சு நிறைந்த குடத்தை கையில் வாங்கித் தான் புறத்தே மண்ணில் புதைப்பது வழக்கம். அப்படி வாங்கிய நஞ்சுக் குடுவையை வைத்தே அதனை அருந்தியதாக கற்பித்தல் தவறாகாதா?ஐந்தவித்த தமிழ் அறவோர் செய்த நூல்களுக்கு, புலன்களை ஆறு படுத்த இயலாது உருமாற்றம் எய்தி முனிவர் மனைவியை ஏமாற்றி கற்பழித்த; அறம் வழுவிய இந்திரன் செய்த ஐந்திரம் நூல் மூல நூலாகாது என்பதாம்.

" அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி " என்றார் திருவள்ளுவர். அதாவது இந்திரனா முன்னோடி? ஏ வினா எதிர்மறைப் பொருட்டு. கரி - உண்மை. காரணம் கரு முதனிலை இ இறுதி நிலை.
கரு + இ = முற்றும் அற்று ஒரே வழி எனும் நன்னூல் விதியால் கரி எனப் புணர்ந்தது. இது தூய தமிழ் காரணப்பெயர்.

அந்த மேற்கோள்களை வைத்து, திருவள்ளுவர் இந்து சமய கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாக புனைந்து பதிவிடுவது அபத்தம். அவர் எந்த கடவுளையும் மதத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. திருக்குறள் பொதுமறை.

தெய்வத்தான் ஆகாது எனினும், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்றார்.

தெய்வம் கொடுக்கும் என்று வாளா இருத்தல் கூடாது. முயற்சியே செல்வம் தரும் வினையாக முகிழ்க்கும்.

பல்லக்கில் செல்பவனையும் சுமப்பவர்களையும் பார்க்கிறபோது, அறத்தாறு ( விதிவழி) இதுவென வேண்டாம் என்றார்.

உலகம் பழிப்பதை விட்டுவிட்டால் நீட்டலும் மழித்தலும் வேண்டாம் என்றார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லி சாதி பாகுபாட்டை சாடியுள்ளார்.

வாழ்வாங்கு வாழ்ந்தால் காவி உடுத்து, ஆற்றில் இறங்கி முழுக்கு போட வேண்டியதில்லை என்றார்.

காதலியின் தோள் தழுவி நுகரும் இன்பத்திற்கு முன், தாமரைக்கண்ணான் உலகில் நிலவுவதாக சொல்லப்படும் சொர்க்க சுகமும் இணையாகாது ( குறள் 1103).

அன்புடைய நெஞ்சங்கள் கணவன் மனைவியராக சேர்ந்து நடாத்தும் இல்லற வாழ்க்கையில் கணவனைப் போற்றிடும் பெண்டிர், தேவர் உலகத்திற்குள்ள சிறப்பினும் மேலான தகுதியை எய்திடுவர். - ( குறள் 58).

(வானில்‌ இருந்து வீழும் மழைநீர் மண்ணின் தன்மையோடு இரண்டற கலந்துவிடுவது போல), இரண்டறக் கலந்த காதலரிடம் புலத்தலைக் காட்டிலும், வானுலக இன்பம் மிகுமா? இல்லை மிகாது. (குறள் 1323).

அழகிய இந்த பெண்ணுடன் ஆன புணர்ச்சி தரும் இன்பம், தமது வீட்டில் இருந்து தன்னிடம் மிக்கிருக்கும் பொருளை இல்லாதாருடன் பகுத்துண்ணும் இன்பத்திற்கு இணையானது. - குறள் (1107).

மேற்சொன்ன எல்லா குறள்களிலும் இல்லற வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதையே, தாமரைக்கண்ணான் உலகினும் சிறப்புடையதாக சுட்டியுள்ளார் திருவள்ளுவர்.‌

இல்லறத்தை ஒழுங்குற இசைப்பட வாழ்ந்து கடமைகளை நிறைவேற்றிய பின்னர் தன்னலம் துறந்து பொதுத் தொண்டு புரியும் சான்றோரே, வாழ்க்கை நெறிகளை வலியுறுத்தும் நூல்களை செய்யும் தகுதி உடையவராவர்..

திருவள்ளுவர் முதன்மைப் பண்புகளையே இறையாக உருவகப் படுத்தினார். தம் வளத்தினை தகுதி உடைய இல்லாரோடு பகுத்துண்டு, மனித நேயம் போற்றலே உண்மையான இறை வழிபாடு என்றார்.

முனிவரின் சாபத்தால் உடல் முழுக்க ஆயிரம் எதிர்ப் பாலின குறிகளை பெற்ற இந்திரனின் இழிவை சுட்டி மறுத்தார.

மறுப்பு கண்ணியம் தவறாமல் நயம்பட‌ எடுத்து இயம்பியதை சாதகமாக்கி, திருவள்ளுவர் இந்துசமய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டார் என்பது அறமாகாது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard