எழுதிய திரு அருட்பிரகாச வள்ளலாரும்!உலகத்தின்
இரு கண்களாகும் .''
திருவள்ளுவர் !
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் .அறம்,பொருள் ,
இன்பம் ,என்ற முப்பால்களை கொண்டதாக உள்ளன .
அதாவது 1 ,இம்மை இன்பவாழ்வு,2 , மறுமை இன்பவாழ்வு,
3 ,பேரின்ப வாழ்வு என்பதாகும்.உலக உயிர்கள் எப்படி
வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தி எழுதப்பட்ட
நூலாகும்.ஆதலால் உலகப் பொதுமறை எனறு பெயர்
வழங்கப் பட்டன .
திருக்குறளுக்கு சரியான விளக்கம் இதுவரை எவராவது
தந்து இருக்கிறார்களா ?என்றால் இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும் .!
கடவுள் கொள்கை உடையவர்கள் ,இல்லாதவர்கள் ,
இருதரப்பினரும்,திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதி
இருக்கிறார்கள் .கடவுள் கொள்கை உள்ளவர்கள் ,உண்மையான
கடவுளை அறியாதவர்கள் ,தெரியாதவர்கள். பழைய குப்பைகளான
வேதம் ,ஆகமம் .புராணம் ,இதிகாசங்களை படித்துவிட்டு
பொய்யான தத்துவங்களை ,கடவுளாக பாவித்து வணங்கி ,
வழிபாடு செய்து ,அறிவில்லாமல் ஒன்றுகிடக்க ஒன்றை
உளறிக்கொண்டு இருப்பவர்கள் .அவர்களால் திருக்குறளுக்கு
சரியான விளக்கம் தர இயலாது .
அடுத்து கடவுள கொள்கை மறுப்பவர்கள் ,பகுத்தறிவு எனறு
சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் .அவர்களும் கற்களான,
சித்திர சிலைகள்,பொம்மைகள், ,நிழல் படங்கள் போன்ற
பொய்யான பொருள்களை வைத்து வணங்குகிறார்கள் .
கேட்டால் தலைவர்கள் ,வழிகாட்டியவர்கள் ,பெரியவர்கள்
எனறு சொல்லி சமாளித்து விடுகிறார்கள் .அவர்களும்
உண்மையான கடவுள் யார் ?என்பது தெரியாதவர்கள்.
அவர்களும் மூட நம்பிக்கை உடையவர்களே !
மேலே உள்ள இரு தரப்பினரும் திருக்குறளுக்கு ,உண்மையான
விளக்கம் எப்படி?தரமுடியும் ,திருக்குறள்படி வாழ்ந்தார்களா ?
வாழ்வதற்குத்தான் முயற்ச்சி செய்தார்களா ?என்றால் இல்லை
என்றுதான ,விளங்ககுகிறது ,
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்படி வாழ்ந்து வழி காட்டியவர்
திரு அருட்பிரகாச வள்ளலார் .என்பவராகும் .
திருவள்ளுவர் திருக்குறள் எழுதினார் ,திருஅருட்பிரகாச வள்ளலார்
திருஅருட்பா எழுதினார் .
திருக்குறள் வாழ்வதற்கு வழிகாட்டியது .
திருஅருட்பா வாழ்ந்து காட்டியது .
திருக்குறள் ;--
திருக்குறள் ஆயிரத்து மூன்று நூற்று முப்பது குறளுடையது
முதல் குறளிலே, அனைத்து குறளும் அடங்கி இருக்கிறது .
அதே போல் ஒவ்வொரு குறளிலும் அனைத்தும் அடங்கி
இருக்கிறது .ஒருகுறள் படித்தாலே அனைத்தையும்
தெரிந்து கொள்ளலாம் ..புரியாதவர்கள் அனைத்தையும்
படித்தாலும் புரிந்து கொள்ள முடியாது .உயிர்கள் மேல்
கடவுள்மேல், உண்மை அன்பு, .உண்மை இரக்கம்
இருந்தால் தான்.திருக்குறளின் உண்மையான கருத்துக்களை
தெரிந்து ,அறிந்து விளக்க முடியும்..
வடலூரில்;-
வள்ளலார் இடம் பல அன்பர்கள் திருக்குறளுக்கு
விளக்கம் அறிந்துகொள்ள வேண்டினர் .வள்ளலார் அவர்கள்
வடலூரில் சன்மார்க்க பாடசாலை வைக்க எண்ணி
படித்தவர்களைக் கூடடித் தன்னுடைய முதன்மை
அன்பரான, பன்மொழிப்புலவர் திரு, வேலாயுதம் அவர்களை
உபாத்தியாயராக அமைத்துத் திருக்குறள் பாடம் நடத்துவிக்கக்
கட்டளையிட்டனர் ,மூன்று மாதமாகியும் மூன்று அதிகாரம்
நடவாமையால் ,வாசிப்போர்கள் வள்ளலாரிடம் குறைகூற
வள்ளலார் ''மூடம் முண்ட வித்வானைக் கூப்பிடும்''
எனறு கூற,வேலாயுதம் அவர்கள் வந்து வாய் புதைத்துப்
பின் புறத்தே கைகட்டித் தூசுஒதுக்கி நிற்க ,வள்ளலார்
''பிச்சு'' மூன்று மாதமாகியும் மூன்று அதிகாரந்தானும்
நடக்கவில்லையாம் ,எனறு கோவம் கொண்டு ,
பாடசாலை வேண்டாம்! .வித்வான்களே !உங்களுக்குத்
தானாகவே கல்விவரும் .அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல்
திருக்குறளின் விளக்கம் தெரியும் ,எனறு கூறிப் பாடசாலையை
நிறுத்திவிட்டனர் .
இதிலிருந்து என்ன விளங்குகின்றன எவ்வளவு பெரிய
படிப்பு படித்திருந்தாலும் ,அருள் ,அறிவு தெளிவுயில்லாமல்
மெய்ப்பொருளான திருக்குறளுக்கு விளக்கம் தர இயலாது .
என்பது தெளிவாகின்றன ,
ஆதலால் திருக்குறளுக்கு சரியான விளக்கம் வேண்டுவோர்
திருஅருட்பாவை படித்தால் அறிந்து கொள்ளலாம் .
வள்ளலார் வழியில் இருப்பவர்களும் ,வள்ளலார்
எழுதியுள்ள திருஅருட்பா நூலின் உண்மைகளை
இன்னும் அறிந்துகொள்ளவில்லை ,
சாதி,சமய ,மத ,இன ,நாடு ,என்ற பற்று இல்லாமல் ,
உலகம் அனைத்தும் ஒரு குடையின் கீழ்,
செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது ,என்பதை
அறிவு தெளிவோடு,புரிந்து கொண்டு ,ஆன்மநேய
ஒருமைப்பாடு வந்தால்தான் ,திருக்குறளையும் ,
திருஅருட்பாவையும்,அறிந்துகொள்ளமுடியும் .
''திருக்குறள்'' முதல் குறளாகிய கடவுள் வாழ்த்து ,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ,
அகரம் ,உகரம், உடம்பு, உயிர் இவை இரண்டையும்
அறிந்துகொள்ள எழுத்தும் என்னும் தேவைப்படுகிறது.
எழுத்தும் என்னும் ,ஆதியிலுள்ள பகவானாகிய ,
அருட்பெரும்ஜோதியாகிய ஒளியால் இந்த உலகம்
முதலாவதாக கொண்டுள்ளன.அந்த அருட்பெரும்ஜோதியாகிய
ஆண்டவரால் ,''அ'' என்ற எழுத்து முதல் அனைத்து
எழுத்துக்களும் உருவாக்கப்பட்டதாகும் .அவை
தமிழ் எழுத்துக் களாகும் .
ஓர் அறிவு முதல்,ஆறு அறிவுள்ள மனிதர்கள் வரை .
உள்ள உயிர்கள் ஒரே தன்மையுள்ளது .உடம்பு வேறாக
இருந்தாலும் உயிர்களில் மாற்றமில்லை,
பலகோடி பிறவிகளுக்குப் பிறகு மனிதபிறவி கிடைத்து
உள்ளது .மனித பிறவி கிடைத்ததின் முக்கிய நோக்கம்
ஆதி பகவனாகிய அருபெரும்ஜோதி ஒளியிடம் சென்று
அடையவேண்டியதாகும்.அதைத்தான் திருவள்ளுவர் ,
திருக்குறளிலே ம்தன்மையாக தெரியப்படுத்தியுள்ளார் .
''பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்''
என்பதின் நோக்கம் எல்லா உயிர்களும் இன்பமுடன்
வாழ்வதற்கு ,வழிகாட்டியாக இருப்பவர் ,ஆதியிலே
உள்ள ஆதி பகவனாகிய அருட்பெருஞ்ஜோதியாகிய
ஒளிதான் காரண காரியமாக இருந்துகொண்டு இருக்கின்றன .
என்பதை முதல் குறளிலேயே தெரியப்படுத்தியுள்ளார் .
திருவள்ளுவர் .
மனிதனாக பிறந்தவர்கள் மெய்ப்பொருளாகிய
ஆதிபகவனை அடைவதற்கு ஒழுக்கம் மிக முக்கியமானதாகும் .
என்பதை திருவள்ளுவர் அவர்கள் ஒழுக்கமுடைமை
என்ற தலைப்பில் பத்து குறள்கள் பதிவு செய்துள்ளார் .
அதிலொன்று;-- .
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
அந்த ஒழுக்கம் என்ன என்பதை வள்ளலார் அவர்கள்
திரு அருட்பாவில் தெளிவு படுத்துகிறார் . அவற்றைப்
பார்ப்போம் .
அக ஒழுக்கம் ,புற ஒழுக்கம் ,என இரண்டுவகைப்படும்.
புற ஒழுக்கம் ஒழுக்கம் அல்ல ,அக ஒழுக்கம் மிக,மிக
முக்கியமானதாகும்.அவை யாது என்பதைப் பார்ப்போம் .