Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கற்பக மலர்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
கற்பக மலர்
Permalink  
 


 கற்பக மலர் -(திருக்குறளைப் பற்றிய கட்டுரைகள்) கி. வா. ஜகந்நாதன்

தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்சங்கம் லிமிடெட்

8, சின்னரெட்டி தெரு, எழும்பூர், சென்னை-8

பதிப்பு ை

எழுத்தாளர்கள் ஒன்று கூடித் தங்கள் நூல்களேத் தாங்களே வெளியிட்டுக் கொள்ளத்தக்க வகையில் ஒரு நிறுவனம் இருந்தால், பல நல்ல வெளியீடுகளைக் கொணரவும் எழுத் தாளர்களுக்கு நலம் செய்யவும் இயலும் என்ற எண்ணத்தில்ை சில எழுத்தாளர்கள் சேர்ந்து தொடங்கியது தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ் மக்களிடையே இப்போது மிகுதியாக உண்டாகி வளர்ந்து வருகிறது. பல பல வெளியீட்டாளர்கள் புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறர்கள். அதனல் ஒரளவு எழுத்தாளர் சிலருக்கு ஊதியம் கிடைக்கிறது. ஆயினும் எழுத்தாளர்களின் பொருளாதார கிலே இன்னும் உயரவில்லை. பல நல்ல எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களே வெளியிட வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகிரு.ர்கள். கிடைக்க வேண்டிய ஊதியம் கிடைக்காவிட்டாலும் அவசியத்தை முன்னிட்டுப் பலர் கிடைத்ததைப் பெற்றுப் புத்தகங்களே விற்று விடுகிருர்கள்.

இவ்வாறு உள்ள கிலேயை ஒரளவேனும் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுந்தது இந்தக் கூட்டுறவுச் சங்கம், வேறு மொழியாளர்களிடையே இத்தகைய சங்கம் இருப்ப தாகவும் அதனால் எழுத்தாளர்களுக்கு கலன் உண்டாவதாகவும் தெரிய வருகிறது.

கூடிய வரையில் நல்ல நூல்களே வெளியிட வேண்டும் என்பது இந்தச் சங்கத்தின் கொள்கை. இதற்கு அரசியலாரின் உதவியும் பொது மக்களின் உதவியும் இன்றியமையாதவை. ஏழைகளாகிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களேத் தங்கள் பொருளைக் கொண்டே வெளியிடுவது என்பது இயலாத காரியம். ஆகவே இந்தக் கூட்டுறவுச் சங்கத்துக்கு எத்தனேக்கு எத்தனே அரசினருடைய ஆதரவு இருக்கிறதோ, அத்தனைக்கு அத்தனே எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் தமிழ் மக்களுக்கு நல்ல புத்தகங்களும் கிடைக்கும். பணமாக உதவுவதோடு தங்கள் ஆட்சியிலுள்ள நிறுவனங்களில் இந்த வெளியீடுகளே வாங்கச் செய்து ஆதரிக்கும் வண்ணம் அரசினர் செய்ய வேண்டும் என்பது இந்தச் சங்கத்தின் வேண்டுகோள்.

பொது மக்களும் இந்தச் சங்க வெளியீடுகளே வாங்கி ஆதரிக்க வேண்டும். தமிழ் உறவு என்ற அழகிய அடையாளக் குறியையுடைய சங்க வெளியீடுகள் தமிழ்நாட்டின் புத்திலக்கியப் படைப்பின் கொழுந்துகளாக கிலவ இச் சங்கம் முயலும் என்று உறுதி கூறுகிருேம். -

வளர்ந்து வரும் சமுதாயத்தில் எத்தனே பதிப்பகங்கள் இருந்தாலும் அறிவுப் பசியைப் போக்கும் துறையில் மிகையாவ: தில்லை. ஆகவே இந்தச் சங்கம் பிற பதிப்பகங்களின் ஆதர. வையும் எதிர்பார்க்கிறது. அவற்றின் உரிமையாளர்கள் இவ் வெளியீடுகளையும் தங்கள் புத்தகங்களாகவே எண்ணி விற்பனே. செய்து நலம் புரிவார்கள் என்று நம்புகிருேம்.

நல்ல வகையில் நல்ல புத்தகங்களே வெளியிட முன்வந்திருக் கும் இந்தச் சிறிய கிறுவனத்திற்கு அரசாங்கம், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பொது மக்கள் எல்லாருடைய ஆதரவும் இன்றி யமையாதது. இந்தக் குழந்தை வளர்ந்தால் தமிழ் காட்டு எழுத் தாளர் கிலே வளரும். அவர்கள் கிலே வளர்ந்து உயர்ந்தால் தமிழ்மக்களுக்கே பெருமை உண்டாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ? -

தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தார்



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

முன்னுரை கற்பக மலர் -(திருக்குறளைப் பற்றிய கட்டுரைகள்) கி. வா. ஜகந்நாதன்

t சென்ற ஆண்டு திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு 'ஒன்றை வெளியிட்டேன். அந்தப் பதிப்புக்காக ஐந்து ஆண்டுகளுக்குமேல் திருக்குறளையும் அதன் உரைகளை யும் ஆழ்ந்து ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது. திருக் குறளில் உள்ள பல நுட்பங்களையும் கவிச்சுவையையும் உணர்ந்து இன்புற்றேன்.

கடவுளைப் பற்றியும் தேவர்களைப் பற்றியும் சொர்க்கம், நரகம், வீடு என்பனவற்றைப் பற்றியும் திருவள்ளுவர் கூறும் செய்திகளைத் தொகுத்துப் பின்னிச் சில கட்டுரை களை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனுல் இந்தப் பதின்ைகு கட்டுரைகளையும் எழுதிக் கலைமக'ளில் வெளியிட்டேன். -

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடவில்லை என்று யாரோ சிலர் கூறுவதாகக் கேள்வியுற்ற துண்டு. தெய் வத்தைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை என்பதைக் காட்டவே அந்தக் கருத்தை அவர்கள் சொல்வதாகவும் தெரிந்தது. கடவுள் வாழ்த்தை எடுத்து விட்டாலும் வேறு பல இடங்களில் இறைவனைப் பற்றியும் பற்றற்று வீடுபெறும் நெறியைப் பற்றியும் அவர்கூறும் பாடல்களை என்ன செய்வது? தெய்வத்தைப் பற்றிய செய்திகள் மூன்று பால்களிலும் வருகின்றனவே! கடவுள் வாழ்த் தில் மட்டும் அன்றி வேறு இடங்களிலும் இத்தகைய கருத்துக்கள் வருவதை இந்தச் சிறிய நூலிலுள்ள கட்டு ரைகள் தெளிவாகப் புலப்படுத்தும்.

சொல்லும் கருத்தை யாவரும் எளிதில் உணர வேண்டும் என்பதற்காக அங்கங்கே பல உவமைகளைக் கூறியிருக்கிறேன். பரிமேலழகர் உரையிலும் பிறர் உரைகளிலும் காணும் பகுதிகளைச் சில இடங்களில் எடுத் துக் காட்டியிருக்கிறேன். தொல்காப்பியம் முதலிய பழந் தமிழ் நூல்களிலுள்ள மரபை எடுத்துக் காட்டியதோடு, தேவாரம் முதலிய அருளாளர் திருவாக்குகளில் திருக் குறளின் சொல்லும் பொருளும் புகுந்து விளங்குவதையும் சொல்லியிருக்கிறேன்.

திருக்குறளை வெவ்வேறு வகையில் ஆராய்ந்து எழுதலாம். வாழ்க்கையின் வகைகளைத் திருவள்ளுவர் எப்படி நுட்பமாகத் தெரிந்து உணர்த்தியிருக்கிருர் என் பதையும், மனிதப் பண்பையும் மனிதனை உயர்த்துவதற் குறிய நெறியையும் இடமும் காலமும் கடந்து எல்லாச் சமுதாயத்துக்கும் பயன்படும் வண்ணம் அவர் எவ்வாறு காட்டியிருக்கிருர் என்பதையும், இவை போன்ற பலபல பகுதிகளையும் ஆராய இடம் இருக்கிறது. திருக்குறளை ஆழ்ந்து பயிலும் அறிஞர்கள் அவ்வாறு எழுதப் புகுவார் களானுல் எத்தனையோ நல்ல புத்தகங்களை நாம் பெறலாம்.

கி. வா. ஜகந்நாதன்

2–10–1964



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

உள் ளு ைற

கற்பக மலர்                               1

இறைவன் திருவடி                      16

முடிந்த பயன்                                26

இடும்பை இலா வாழ்வு             37

பொருள் சேர் புகழ்           46

பொய்தீர் நெறி                            56

உவமை இல்லான்                            65

அறவாழி அந்தணன்                     76

பிறவிப் பெருங்கடல் 84

தெய்வம்                                   110  

தெய்வ வகை                          95

இந்திரன் முதலியோர்     102

வானேர்  118

முடிந்த நிலை                        129



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

கற்பக மலர்

அமுதம், கற்பகம், காமதேனு, சிந்தாமணி ஆகிய வற்றை நாம் நேரில் அறியர்விட்டாலும் நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடி அவை அடிபடு கின்றன. மிகவும் சுவையுள்ளதாக இருந்தால், 'அமுதம் போல இருக்கிறது” என்று சொல்லுகிருேம். அமுதத்தைப் பற்றின கதை நமக்குத் தெரியுமேயன்றி அதை யாரும் கண்டதும் இல்லை; சுவைத்துப் ப்ார்த்ததும் இல்லை. பூமத்திய ரேகை அல்லது நில நடுக்கோடு என்ற ஒன்றைப் பூகோள நூலில் அடிக்கடி படிக்கிருேம். நாடுகளின் வெப்பதட்ப நிலைகளையும் அவற்றின் அமைப்புக்களையும் தெரிந்து கொள்வதற்கு அந்த நடுக்கோட்டை வைத்துக் கணக்குப் போடுகிருேம். ஒருவன் அதை நேரிலே போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று, கணக்கையெல்லாம் வைத்துக்கொண்டு புறப்படுகிருன். அவன் அதைக் காண முடியுமா? நிச்சயமாக முடியாது. தொலேயாடி, நுண்ணுடி என்ற விஞ்ஞான விசித்திரப் படைப்புக்களாகிய கண்ணுடி கனயெல்லாம் எடுத்துச் சென்று பார்த்தாலும் அந்தக் கோட்டைக் காண முடியாது. காரணம் என்ன? அப்படி ஒரு கோடே இல்லை.

இல்லாத ஒன்றையா சின்ன வகுப்பிலிருந்து, ஈக்வேடர், பூமத்திய ரேகை, நில நடுக்கோடு என்று வெவ்வேறு பெயரால் சொல்லித் தருகிருர்கள்? அது பூமியில் இல்லே. விஞ்ஞானிகளுடைய கற்பனையில் இருக்கிறது. அதை ஒருவகை அளவாக வைத்திருக்கிரு.ர்கள். அந்தக் கோடு கற்பனையாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு போடும் கணக்கும் அதனுல் தெரிந்து கொள்ளும் உண்மை களும் கற்பனைகள் அல்ல.

ஒரு வகையில் அமுதம், கற்பகம், காமதேனு என்பன யாவும் கற்பனை என்னும் பாற்கடலில் தோன்றின என்றே சொல்லலாம். சுவையான பொருளுக்கு அமுதம் என்பது தலையளவு; அது ஒரு கற்பனே. கேட்டதையெல்லாம். தருவதற்கு ஒரு கற்பனைப் பொருள் உண்டு; அது கற்பகம். அது, தான் இருந்த இடத்தில் வந்து கேட்பவருக்கு வேண்டியதைக் கொடுப்பது. காமதேனுவோ கேட்பவர் உள்ள இடத்துக்குப் போய்க் கொடுப்பது. இந்த மூன்று கற்பனைப் பொருளையும் வைத்துப் படர்ந்த் புராணக் கதைகள் பல. - -

மனிதனுக்கு இந்த உலகத்தில் விரும்பினவை. எல்லாம் கிடைப்பதில்லை. ஆசையை மட்டுப்படுத்திக் கொண்டு தனக்குக் கிடைக்கக்கூடியதாக இருப்பதையே விரும்பிலுைம், பல சமயங்களில் கிடைப்பதில்லை. ஏழை பணம் வேண்டுமென்று விரும்புகிருன்; அவனுடைய ஆசை பத்து ரூபாய்; அது ஒரு பெரிது அன்று; ஆலுைம் அவனுக்கு அது கிடைப்பதில்ல்ே, வியாபாரி லாபத்துக்கு, ஆசைப்படுகிருன்; அது நியாயமான ஆசை, கிடைக்கக் கூடியதையே அவன் அவாவுகிருன். ஆலுைம் பல சமயங்களில் அவனுக்கு அது கிடைக்கிறதில்லே. ஆசை கிறைவேருமல் ஏமாந்து போவதே உலகில் பெரும் பாலோரின் இயல்பாக இருக்கிறது. -

இத்தகைய குறைபாடுடைய மனிதன் கேட்டன. வெல்லாம் வாழ்க்கையில் கிடைக்காவிட்டாலும், எல்லா வற்றையும் தரும் பொருள் ஒன்று எங்கோ இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டான். கற்பனை செய்யும் ஆற்றல் அவனுக்கு இருப்பதால் அவன் அதை வளரவிட்டு அமுதத்தையும் கற்பகத்தையும் காமதேனுவையும் உரு வாக்கினன்.

கற்பகம் எப்படி இருக்கும்? புராணங்களில் அதன் வருணனை வருகிறது. அது பொன்னிறமாக இருக்குமாம். அதன் தளிர் பொன்னிறம்; அதன் மலர் பொன்னிறம். கேட்டதெல்லாம் தருமாம்.இந்திரனுக்குச் சொந்தமானதாம். போகங்களிலெல்லாம் உயர்ந்தது இந்திர போகம். வளவாழ்வின் தலை யெல்லே அது. அந்த வாழ்வுக்குத் துணையாக இருப்பது கற்பகம். கற்பகம் ஒரு மரம் என்றும், பல மரங்களுக்குக் கற்பகம் என்ற பெயர் உண்டென்றும் வேறு வேருகச் சொல்வதுண்டு. அதைப் பற்றிய ஆராய்ச் சியில் இப்போது இறங்க வேண்டாம். கற்பகம் என்பது மரம் என்று தெரிந்துகொண்டால் போதும்.

மரம் என்ருல் அதில் இலை, பூ, காய், கனி ஆகிய உறுப்புக்கள் இருக்க வேண்டும் அல்லவா? கவிஞர்கள் தங்கள் நூல்களில் பல இடங்களில் கற்பகத்தைக் கொண்டுவந்து நட்டு அதன் பூங்கொம்பையும் மலரையும் கனியையும் காட்டுகிருர்கள்.

கற்பக மலர் "கற்பகத்தின் பூங்கொம்போ’ என்று சேக்கிழார் பாடுகிருர். 'கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை’ என்பது திருவிசைப்பா. கற்பகத்தைக் கண்ணுரக் கண்டேன் யானே’ என்று அப்பர் திருவாய்மலர்ந் தருளுகிருர். எல்லாம் உவமையும் உருவகமுமாக உள்ளவை.

கற்பக மலர் ஒன்றை ஒரு புலவர் காட்டுகிருர். மற்ற மலர்களுக்கும் அதற்கும் வேறுபாடு உண்டு. உலக மரங்களின் மலர்கள் வாடும். கற்பக மரத்து மலர் வாடா தாம். எவ்வளவு நாளானுலும் புலராதாம். கோடையிலும் குளிரிலும் நிற்கும். நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள், யுகம் என்று காலக் கணக்கு எவ்வளவு ஆலுைம் நிற்கும்; மலர்ச்சி மாருது மணத்துடன் நிற்கும். மலருக்கு மலர்ச்சி, மென்ம்ை, தண்மை, மணம், தேன் இருத்தல் இலக்கணம். கற்பக மலரிலும் இவை உண்டு. அதிலும் தேன் பிலிற்றும். இந்த இயல்புகளிலே குன்ருத அந்த மலர் தளிரி னிடையே தோன்றுகிறதாம். அந்தத் தெய்வத் திருமலரைப் புலவர், . .

. . -குன்ருத • , செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்,

என்று சொல்கிருர்.

எதற்காக அந்தத் தெய்வத் திருமலரைக் கொண்டு வருகிருர்? கற்பனையிலே வளர்ந்த அதனை உண்மையாக நமக்கு முன் உள்ள மலர் ஒன்றைக் காட்டி, "இது கற்பகத்தின் தெய்வத் திருமலர்போல இருக்கிறது, பாருங்கள்’ என்கிருர். கற்பக மலரை நாம் கண்டதில்லை. அதன் இயல்புகள் கற்பனையால் தெரிந்து கொண்டவை. அது கற்பனேக் கற்பக மலர்; இது உண்மைக் கற்பக மலர். அதுதான் திருக்குறள்.

-குன்ருத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல். .

கற்பக மலர் கற்பகத்தின் பூங்கொம்பிலே பூத்தது. இந்தக் குறள் மலர் வள்ளுவர் திருவாயிலே மலர்ந்தது; 'திருவாய் மலர்ந்தருளினர்' என்று சொல்வது வழக்கம் அல்லவா? திருவள்ளுவராகிய கற்பகம் நெடுநாள் மன்னு வது. எப்படிக் கற்பகம் மக்கள் உள்ளத்தில் நினைவாக மன்னுகிறதோ, அப்படி அப்புலவர் புகழுடம்போடு மக்கள் உள்ளத்தே மன்னுகிருர். அவர் திருக்குறள் ஒன்றுதான பாடியிருப்பார்? இந்த ஒரு நூலைத்தான் அவர் எழுதினர்; அது உலகப் புகழ் பெற்றுவிட்டது” என்று அபிமானத்தால் சொல்லலாம். குழந்தை பிறந்தவுடன் கால் வீசி நடக்க முடியுமா? பல பல நூல்களே இயற்றிப் பிறகே இந்த அரிய நூலே அப்புலவர் வழங்கியிருக்க வேண்டும். அந்த நூல்க ளெல்லாம் மலர் தோன்றுவதற்கு முன் தோன்றிய தளிர்களாக இருக்க, கடைசியில் வந்த குறளோ தளிர் களுக்குப் பின் மலர்ந்த மலரைப்போல விளங்குகிறது. செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்' என்று அடைகளுடன் புலவர் சொல்வது குறளுக்கும் பொருத்த மாக இருக்கிறது.

தெய்வத் திருமலர் என்பது கற்பகத்தின் உயர்வைக்

குறிக்கிறது. அந்தத் தெய்வத் தன்மை வள்ளுவருக்கும் உண்டு. தெய்வப் புலமைத் திருவள்ளுவர்” என்று  புலவர்கள் மிகவும் மதிப்புடன் அப்புலவரைச் சொல்வது வழக்கம். தெய்வத் திருவள்ளுவர்', தேவர் திருவள்ளுவர்” (திருவள்ளுவமாலை, - 1, 19, 39, 41,49) என்று திருவள்ளுவ மாலையில் புலவர்கள் பாராட்டியிருக் ஒருர்கள். திருக்குறளுக்கு ஈடும் எடுப்பும் இல்லாத அரிய உரையைச் செய்த பரிமேலழகர், ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் 5T GŪT எடுத்துக்கொள்ளப்பட்டது. என்று உரை எழுதத் தொடங்கும்போது அவதாரிகையிலே எழுதுகிரு.ர். - .

திருக்குறளைக் கற்பக மலராகச் சொன்ன புலவர் தாம் அப்படிச் சொல்வதற் குரிய காரணங்களையும் சொல்கிருர்; கற்பக மலருக்கும் திருக்குறளுக்கும் பொது வாக உள்ள இயல்புகளே எடுத்துக் கூறுகிருர்,

கற்பக மலர் என்றும் வாடாதது. திருக்குறளும் என்றும் புலராதது. நூல்கள் பல வகைப்படும். பல நூல்கள், இயற்றிய ஆசிரியர் காலத்திலே மங்கி மறைந்து போகும். சில நூல்கள் ஆசிரியர் மறைக் தாலும் தாம் மறையாது ஆசிரியருடைய புகழை கிலே காட்டிக்கொண்டிருக்கும். இப்போது அச்சில் வரு கின்ற எல்லாமே நூல்கள் என்றுதான் பேசப்படு கின்றன. தினசரிப் பத்திரிகையும் அச்சிட்டதுதான். ஆனல் அதன் வாழ்வு ஒரே ஒரு நாள்; சில சமயங் களில் காலப்பதிப்பை மாலைப் பதிப்பு மங்கச் செய்து விடுகிறது. அதன் காகிதம் அதற்குள் கிழிந்து விடு கிறதா? எழுத்து மங்கிவிடுகிறதா? அல்லது தமிழ் எழுத்து வேறு ஏதாவது எழுத்தாக மாறிவிடுகிறதா? ஒன்றும் இல்லை. ஆனாலும் முதல் நாள் செய்தித் தாளாக மதிப்புப்பெற்ற அது மறுநாள் புளி மடிக்கும் காகிதமாகி விடுகிறது. அதில் உள்ள எழுத்தின் பயன் போய்விடுகிறது. - -

நூல்களிலும் சில மாதங்களே வாழ்பவை உண்டு. திருக்குறள் தோன்றிக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டு கள் ஆகிவிட்டன. அது இன்னும் உருப்படியாக விளக்கத் தோடு கிலவுகிறது. என்றும் புலராத நூல் அது என்று சொல்வதற்குத் தடை என்ன?

சில நூல்கள் பழமையைப் புலப்படுத்திக் கொண்டு "கிற்கும்; அவற்றை இக்காலத்தில் பயன்படுத்திக் கொள் ளாமல் இருப்பார்கள். மொகெஞ்சதடோவில் ஒரு பழைய சிப்புக் கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் அருமையாகப் பாது காப்போம். அந்தக் காலத்துச் சீப்பு என்று பெருமை யாகப் பேசுவோம். அதைக் காட்சிச் சாலேயில் வைத்து உலகத்தாருக் கெல்லாம் காட்டுவோம். ஆனால் அதை நாம் சீப்பாக உபயோகப்படுத்த மாட் டோம். இப்போது எத்த்னேயோ நாகரிகமான சீப் புக்கள் வந்துவிட்டன. மொகெஞ்சதடோச் சிப்புப் பழமைப்பொருள்; புதுமைப் பொருளோடு ஒன்ருக கின்று பயன் தராது. காலம் அதைப் பயன் அற்றதாக்கி விட்டது. - - .

நூல்களிலும் சில, பழமையின் அடையாளமாக வைத்திருப்பனவாக இருக்கலாம்; ஆல்ை இந்தக் காலத்தின் நடைமுறைக்குப் பயன்படாமல் இருக்கும். திருக்குறள் அத்தகையது அன்று. எத்தனே ஆண்டுகள் சென்ருலும் மங்காமல் நின்று மலர்ச்சியுடன் விளங்கும் கற்பக மலரைப்போல, எல்லாக் காலத்திலும் பயன் தந்து விளக்கத்துடன் நிலவுகிறது.

யாணர்நாட் செல்லுகினும் நின்று அலர்ந்து என்று பாடுகிருர் புலவர். . .

யாணர் என்பதற்குப் புதுவரவு என்று பொருள். காலம் போய்க்கொண்டே இருக்கிறது. காலத்துக்கு ஏற்பப் புதிய புதிய கருத்துக்களும் வழக்கங்களும் நாகரிகப் பாணிகளும் தோன்றிக் கொண்டே இருக் கின்றன. அந்த மாற்றத்தில் அடிபட்டுப் பல நூல்கள் இறந்து போகின்றன. புதிய புதிய கருத்துக்களும் கொள்கைகளும் நம்பிக்கைகளும் வந்தாலும் திருக் குறள் பயனின்றி ஒழியாமல் கிற்கிறது. கால வெள்ளத் தோடு போகாமல் கிலேகிற்பதோடு இன்றும் அலர்ந்து, 'மலர்ச்சி பெற்று, மனித வாழ்க்கைக்குப் பயன் தருவதாக மணந்து விளங்குகிறது. காலத்துக்கு ஏற்றவகையில் விரிவு பெற்று நிலவுகிறது. - -

- இதற்கு ஏதாவது தக்க காரணம் இருக்க வேண்டும். காலத்தால் மனிதனுடைய புறக்கோலங்களே மிகுதியாக மாறுகின்றன. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தபடி நம்முடைய நாடு இப்போது இருக்கவில்லை. அக்காலத்தில் இருந்த அமைப்போடு நம் ஊர்கள் இருக்க வில்லை. பழங்காலத்தில் சில துளைகளேயே சாளரமென்று சொல்லி வைத்து வாழ்ந்த வீடுகளைப்போல நம் வீடுகள் இப்போது இல்லை; பெரிய பெரிய சன்னல்களே வைத்து வீடு கட்டுகிருேம். நம்முடைய ஆடைகளில்தான் எத்தனை மாற்றம்! மகளிர்களுடைய ஆடைகளில் மாதத்துக்கு ஒரு  பாணி; நாளுக்கு ஒரு மோஸ்தர். நாம் உண்ணும் உணவில் எத்தனையோ பொருள்கள் புதியனவாகப் புகுந்திருக்கின்றன. பிஸ்கோத்து பழங்காலத்தில் இல்லை. ஒரு காலத்தில் மிளகாயே இந்த நாட்டில் இல்லை என்ருல் வியப்பாக இருக்கிறதல்லவா?

நம்முடைய உடம்பிலேகூட மாற்றங்கள் நிகழ்கின்றன. தலைக் கோலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக் கின்றன. நம்முடைய பேச்சில், எண்ணங்களில் வாழ்க்கை மாற்றத்துக்கு ஏற்ற புதிய கருத்துக்களும் புதிய கற்பனைகளும் வந்துவிட்டன. ஆதலின் யாணர் நாள் (புதிய காலம்) இது என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். புதிய முயற்சிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் பழமையை யாராவது சுட்டிக் காட்டினல்,

'அதெல்லாம் பழைய காலம், சுத்தக் கர்நாடகம், பத்தாம் பசலி!” என்று எள்ளி நகையாடுவதைப் பார்க்கிருேம்.

இப்படி, காலத்துக்குக் காலம் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில அடிப்படையான செயல்களும் கருத்துக்களும் அப்படியே நிற்கின்றன. உடையில் மாற்றம் வந்தாலும் உடை உடுத்துவதாகிய செயல் அப்படியே இருக்கிறது. உணவில் புதிய சேர்க்கைகள் வந்தாலும் வாயால் உணவை உண்பது என்ற அடிப்படையை மாற்றவில்லை. பெண்களே குழந்தைகளைப் பெறுவது என்பதை மாற்ற முடியவில்லை. . -

இவற்றைப் போலவே மனித சாதியின் வாழ்வில் அடிப்படையான கருத்துக்கள் இருக்கின்றன. மகளிர் கற்புகெறியைப்பற்றி ஒவ்வொரு காட்டினருக்கும் ஒவ்வொரு முறை இருக்கலாம். மணம் புரிவதில் வேறுபாடு இருக்கலாம். ஆனல் ஆண், பெண்ணே மணந்து மக்களேப் பெறுதல் என்பது உலகத்துக்கே பொதுவானது; இடத்தால் வேறுபடாத செய்தி. அப்படியே காலத்தால் வேறுபடாததும் உண்டு. இரவு நேரங்களில் இருளேப் போக்கி வெளிச்சத்தை உண்டாக்கப் பல உபாயங்களே மனிதன் கண்டுபிடித்தான். விளக்கு வந்தது. புதுப் புது முறைகளில் விளக்குகளே நாம் கண்டு பிடித் திருக்கிருேம். குண்டு விளக்குப் போய்க் குழாய் விளக்கு வந்திருக்கிறது. அதுவும் போய் வேறு வகை விளக்கு வரலாம். ஆனல் பகலில் நமக்கு ஒளிதரும் கதிரவனில் மாற்றம் இல்லை. நம்மால் மாற்றம் செய்யவும் இயலாது. எல்லா இடத்துக்கும் எல்லாக் காலத்துக்கும் பொதுவான ஒளியாக நிலவுகிறது அது .

அதுபோலவே கருத்துலகத்திலும் பெரும்பான்மை யான மக்களுக்குப் பல காலத்துக்குப் பயன்படும் கருத்துக்கள் உண்டு. அவற்றைச் சிந்தித்து வகைப் படுத்தித் தொகுத்து உரைத்தால் அந்தக் கருத்துக் கருவூலம் கால வெள்ளத்தில் மாயாமல் சாயாமல் கிலே நிற்கும் என்பதில் ஐயம் இல்லை. அத்தகைய கருத்துக் கருவூலக்தான் திருக்குறள். அதனால் அது, யாணர் நாட் செல்லுகினும் நின்று விளங்குகிறது.

மக்களுக்குப் பயன்படும் பொருள்களிலும் சில வகை உண்டு: அவசியத்தினுல் கொள்வன, விரும்பிக்கொள்வன, அவசியத்தாலும் விருப்பத்தாலும் கொள்வன என்று அவற்றை மூன்ருகப் பிரிக்கலாம். நோய் வந்தவனுக்கு மருந்து அவசியம்; அதை நோயாளி உண்ணுகிருன்; ஆனல் அதை அவன் விரும்பி உண்ணுவதில்லை. பனம்பழத்தை ஒரு சிறுவன் விரும்பி உண்ணுகிருன்; ஆணுல் அது நன்மை பயப்பதில்லே; அதல்ை அவசியம் அன்று. பால் அவசியமானது; நன்மை பயப்பது; விரும்பி உண்பது.

நூல்களிலும் இந்த மூன்று வகை உண்டு. அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை, பயன்படுபவை என்பன நீதி நூல்கள், சட்டங்கள், இலக்கணங்கள் முதலியவை. இவற்றை விரும்பிப் படிப் பவர் அரியர். சில வசை இலக்கியங்கள், காமச்சுவை தரும் மட்டரக நூல்கள் என்பவற்றைப் பலர் விரும்பிப் படிக்கலாம். ஆனால் அவை அவசியமானவை அல்ல; நல்ல பயனேத் தருவனவும் அல்ல. கவிதை நூல்கள் பயன் தருவன; இனிமையை உடையன; அதல்ை படிக்கும் தகுதி உடையோர் விரும்பிப் படிப்பதற் குரியன.

சுருக்கமாகச் சொல்லப் போனல் பயன் தருவன, பயனும் இனிமையும் தருவன என்று நல்ல நூல்களேப் பிரித்துவிடலாம். வேதம், ஆகமம், சட்டம் எல்லாம் முதல் வகையைச் சேர்ந்தவை. காப்பியம், நல்ல கதைகள் பின் வகையைச் சேர்ந்தவை. -

திருக்குறள் சிறந்த நீதி நூல். பல காலத்துக்கும் பல இடத்துக்கும் பொதுவான உண்மைகளைச் சொல்வது. அதனுல் பயனுடையது. பல காலம் நின்று மலர்ச்சி பெறுவது. அந்த அளவில் அது கின்றிருந்தால் அதன் பெருமைக்கு ஒர் அளவு இருக்கும். அதற்கு மேலும் அதற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது கவிதையாகவும் அமைந்திருக்கிறது. கவிதை பயனேடு இனிமையையும் தருவது; திருக்குறள் கவிதை நூலாக இருப்பதல்ை அதில் பயனும் இனிமையும் ஒருங்கே இருக்கின்றன.

பழைய இலக்கண உரையாசிரியர்கள், பாலும் ஆயிற்று; மருந்தும் ஆயிற்று’ என்று ஒரு வாக்கியத்தை எடுத்துக் காட்டுவார்கள். சுவை தரும் பொருள்; அதோடு பயன் தரும் பொருள்' என்பது அதன் கருத்து. பாலுக்குப் பதில் தேனே வைத்து, தேனும் ஆயிற்று; மருந்தும் ஆயிற்று என்று நாம் புதிய வாக்கியம் ஒன்றைச் சொல்லிப் பார்க்கலாம். தேனும் உடம்புக்கு நலம் தருவதுதானே? தேன் இனிமை யானது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? தேன் என்றவுடன் அதன் இன்சுவைதான் நம் நினைவுக்கு வரும். படிக்கப் படிக்க இனிமை உடைய கவிதை யாகவும், பொருள் உணர உணர நலம் பயக்கும் நீதி நூலாகவும் விளங்குவது திருக்குறள். அதற்கு இனிமையும் பயனும் உடைய தேனை உவமை சொல்லலாம் அல்லவா?

திருக்குறளேக் கற்பக மலராகச் சொன்ன புலவர், அது அம் மலரைப்போல், தேன்பிலிற்றும் நீர்மையது' என்று. சொல்கிருர். அது சுவையான கவிதை வடிவில் அமைந்தது; சொற்சுவை பொருட் சுவைகளைப் பெற்றது; மனித சாதியை உயர்த்தும் கருத்துக்களைச் சொல்வது.

இந்த இருவகைத் தன்மையும் திருக்குறளில் இருப்பதைத் திருவள்ளுவ மாலேயில் மற்ருெரு பாட்டுச் சொல்கிறது.

ஒதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித்-தீதற்ருேர் உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

உண்மையைச் சொல்வது மட்டும் போதாது; அதைச் சுவைபடச் சொல்ல வேண்டும். அதுதான் இலக்கியம். கலேகள் இன்பந்தரும் இயல்புடையனவாக இருக்க வேண்டும். அவற்றின் முதல் இலக்கணம் அது. எல்லாக் கலேகளிலும் உயர்ந்தது கவிதைக் கலை. ஆதலின் இன்பத் தைத் தருவதில் அது மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். திருக்குறள் கவிதையாகவும் இருந்து இன்பத்தைத் தருகின்றது. மலரில் தேன் இருப்பதுபோல அந்த நூலில் கவிதைச் சுவையும் இருக்கிறது.

இதுவரைக்கும் கூறியவற்ருல் திருக்குறள் என்றும் மங்காத திட்பம் உடையது, கால வெள்ளத்தில் சாயாமல் கின்று மக்கட் சாதிக்கு நலம் தருவது, அவ்வக் காலத்துக்கு ஏற்ற வகையில் பொருள் விரிவு பெற்று கிற்பது, கவிச் சுவையையுடையது என்பவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இத்தனே இயல்புகளேயும், அது கற்பகத்தின் மண நிறை நறை மலர் போன்றது என்ற உவமையால் சொல்லிவிட்டார் புலவர்.

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் - நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்-குன்ருத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

(புலராது - வாடாமல். யாணர் - புது வரவு. நீர்மைய

தாய் - இயல்பையுடையதாய். போன்ம் போலும். மன்

நில பெற்ற, திருக்குறளின் சிறப்பைச் சொல்லும் தனி நூல் ஒன்று உண்டு. திருவள்ளுவ மாலே என்று அதற்குப் பெயர். வேறு எந்த நூலுக்கும் சிறப்புப் பாயிரமே தனி நூலாக இல்லை. ஐம்பத்து மூன்று பாடல்களால் அமைந்த அந்த நூலில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவரால் பாடப் பெற்றதாகப் பெயரைச் சேர்த்திருக்கிருர்கள். அசரீரி, நாமகள், இறையனர் ஆகிய தெய்வங்களும் பாராட்டிப் பாடியனவாக முன்று பாடல்கள் தொடக்கத்தில் இருக் கின்றன. என்றும் புலராது” என்ற இப் பாடலைப் பாடியவர் பெயர் இறையனுt என்று காணப்படுகிறது. மதுரையில் இருக்கும் ஆலவாய் இறையனராகிய சோமசுந்தரக் கடவுளே இதைப் பாடியதாகப் பழங் காலத்தில் சொல்லி வந்தார்கள். இறையனர் அகப் பொருள் என்ற இலக்கண நூலின் ஆசிரியரும், 'கொங்கு தேர் வாழ்க்கை’’ என்ற குறுந்தொகைப் பாடலின் ஆசிரி யரும் அந்த இறையனரே.

ஆலவாய் இறையனராகிய தெய்வமே இந்தப் பாட்டைப் பாடினரா, இல்லையா என்ற ஆராய்ச்சியில் இப்போது புக வேண்டாம். பாட்டு என்னவோ மிகவும் அருமையாக இருக்கிறது; இலக்கியப் பண்புகளேக் கவிதைச் சுவையோடு சொல்வதாக அமைந்திருக்கிறது. அதைப் பாடியவர் இன்று தெய்வமாகிவிட்டார் என்று சொல்வதில் நமக்கு ஒரு தடையும் இல்லே. உண்மையைச் சொல்லும் வாக்குத் தெய்வ வாக்கு என்று உபசாரமாகக் கொள்வது வழக்கம். -

தேவர்களுக்குக் கிடைத்த கற்பக மலரை நாம் அறியோம்; அது கற்பனைக் கற்பகத்தில் மலர்ந்தது ஆல்ை இந்த இறையனர் காட்டும் கற்பகத்தின் தெய்வத் திருமலர் நாம் காணக் கிடைக்கிறது; கற்று இன்புறத்தக்க பொலிவோடு விளங்குகிறது. அதன் மணத்தையும் தேனேயும் இனி ஒரளவு நுகர்ந்து பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Karpa%2Bmalar%2B01.jpg  Karpa%2Bmalar%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Karpa%2Bmalar%2B03.jpg Karpa%2Bmalar%2B04.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 Karpa%2Bmalar%2B05.jpg

Karpa%2Bmalar%2B06.jpg

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 Karpa%2Bmalar%2B07.jpg

t சென்ற ஆண்டு திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு 'ஒன்றை வெளியிட்டேன். அந்தப் பதிப்புக்காக ஐந்து ஆண்டுகளுக்குமேல் திருக்குறளையும் அதன் உரைகளை யும் ஆழ்ந்து ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது. திருக் குறளில் உள்ள பல நுட்பங்களையும் கவிச்சுவையையும் உணர்ந்து இன்புற்றேன்.

கடவுளைப் பற்றியும் தேவர்களைப் பற்றியும் சொர்க்கம், நரகம், வீடு என்பனவற்றைப் பற்றியும் திருவள்ளுவர் கூறும் செய்திகளைத் தொகுத்துப் பின்னிச் சில கட்டுரை களை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனுல் இந்தப் பதின்ைகு கட்டுரைகளையும் எழுதிக் கலைமக'ளில் வெளியிட்டேன். -

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடவில்லை என்று யாரோ சிலர் கூறுவதாகக் கேள்வியுற்ற துண்டு. தெய் வத்தைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை என்பதைக் காட்டவே அந்தக் கருத்தை அவர்கள் சொல்வதாகவும் தெரிந்தது. கடவுள் வாழ்த்தை எடுத்து விட்டாலும் வேறு பல இடங்களில் இறைவனைப் பற்றியும் பற்றற்று வீடுபெறும் நெறியைப் பற்றியும் அவர்கூறும் பாடல்களை என்ன செய்வது? தெய்வத்தைப் பற்றிய செய்திகள் மூன்று பால்களிலும் வருகின்றனவே! கடவுள் வாழ்த் தில் மட்டும் அன்றி வேறு இடங்களிலும் இத்தகைய கருத்துக்கள் வருவதை இந்தச் சிறிய நூலிலுள்ள கட்டு ரைகள் தெளிவாகப் புலப்படுத்தும்.

சொல்லும் கருத்தை யாவரும் எளிதில் உணர வேண்டும் என்பதற்காக அங்கங்கே பல உவமைகளைக் கூறியிருக்கிறேன். பரிமேலழகர் உரையிலும் பிறர் உரைகளிலும் காணும் பகுதிகளைச் சில இடங்களில் எடுத் துக் காட்டியிருக்கிறேன். தொல்காப்பியம் முதலிய பழந் தமிழ் நூல்களிலுள்ள மரபை எடுத்துக் காட்டியதோடு, தேவாரம் முதலிய அருளாளர் திருவாக்குகளில் திருக் குறளின் சொல்லும் பொருளும் புகுந்து விளங்குவதையும் சொல்லியிருக்கிறேன்.

திருக்குறளை வெவ்வேறு வகையில் ஆராய்ந்து எழுதலாம். வாழ்க்கையின் வகைகளைத் திருவள்ளுவர் எப்படி நுட்பமாகத் தெரிந்து உணர்த்தியிருக்கிருர் என் பதையும், மனிதப் பண்பையும் மனிதனை உயர்த்துவதற் குறிய நெறியையும் இடமும் காலமும் கடந்து எல்லாச் சமுதாயத்துக்கும் பயன்படும் வண்ணம் அவர் எவ்வாறு காட்டியிருக்கிருர் என்பதையும், இவை போன்ற பலபல பகுதிகளையும் ஆராய இடம் இருக்கிறது. திருக்குறளை ஆழ்ந்து பயிலும் அறிஞர்கள் அவ்வாறு எழுதப் புகுவார் களானுல் எத்தனையோ நல்ல புத்தகங்களை நாம் பெறலாம்.

 கி.வா.ஜகந்நாதன்

சென்னை-28 ),

2–10–1964



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard