Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறவாழி அந்தணன்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
அறவாழி அந்தணன்
Permalink  
 


 அறவாழி அந்தணன்

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உறுதிப் பொருளென்று சொல்வது மரபு; வட மொழியில் புருஷார்த்தம் என்று கூறுவர். மனிதனுடைய வாழ்வில் நிகழும் செயல்கள் யாவும் இந்த நான்கையும் சார்ந்தே இருக்க வேண்டுமென்பது இந்நாட்டவர் கருத்து.

இந்த நான்கிலும் வீடு என்பது இன்ப துன்பங் களுக்கு அப்பாற்பட்டுப் பிறப்பு இறப்பு என்னும் துன்பங்கள் இல்லாததாய் நிலவுவது. அதுவே முடிந்த முடிவான லட்சியம். இவ்வுலகில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் கிரப்பி, இப்பிறவியின் இறுதியில் வீடு பெறவேண்டும். இவ்வுலகில் இருக்கும் போது துறவு பூண்டு விரதம் காப்பதும், இறைவன்பால் அன்புகொண்டு வழிபட்டு வாழ்வதும் வீடு பெறுவதற்குரிய வழிகள். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுமே வீட்டு நெறிக்கு உதவியாக இருக்க வேண்டியவை.

வாழ்க்கையின் லட்சியம் நான்காவது உறுதிப் பொருளாகிய வீடானல், வாழ்க்கையில் எப்போதும் பிரிவின்றி கிற்பது அறம். எச்செயலைச் செய்தாலும் அது அறத்தோடு சார்ந்ததாய் வீட்டு நெறியில் விடுவதாக அமைய வேண்டும்.

முடிவு (End) என்றும் நெறி (Means) என்றும் சொல்லும் இரண்டினுள் முடிவு வீடு; நெறி அறம். கம் வாழ்வில் உயிர்காடியாக இருப்பது அறம். அதித்துக்குப் புறம்பான முயற்சியில் பொருளே ஈட்டினுல் அது உறுதிப் பொருளாகாது. அப்படியே அறநெறியினின்றும் வழுவி இன்பம் துய்த்தால் அது நல்ல இன்பம் அன்று. ஆகவே அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றையும் அறம் என்றே சொல்லி விடலாம். பொருளிட்டுவதற்கும் இன்பம் துய்ப்பதற்கும் உரிய செயல்களல்லாதவை அறம் என்று தனியே பெயர் பெறும். - . . .

அறமல்லாத வழியிலும் பொருளிட்ட வழி உண்டு; திருடிப் பொருள் பெறுதலும், வலிய ஒறுத்துப் பொருள் பெறுதலும், வஞ்சித்துப் பெறுதலும் அறமல்லாத செய்கை களாம். அப்படியே பிறன் மனேவி, கன்னி, பொது மகளிர். ஆகியோரிடத்தில் இன்பம் பெறுதலும், தன் மனேவியால் முறையற்ற வழியில் இன்பம் பெறுதலும் அறம் அல்லாத செய்கைகளே.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் பலபல பிரிவுகளாக விரிந்தவை. பொருள் இன்பங்களுக்கு ஆதாரமாக உள்ள அறம் தூயது. இறைவனே அறவடிவினனுக இருக்கிருன் என்று பெரியோர் கூறுவர். - " -

அறு என்பதன் அடியாகப் பிறந்தது அறம் என்ற சொல். இன்னது செய்யவேண்டும் என்று வரையறுக்கப் பட்ட நெறியே அறம். இந்த வரையறை யாரால் ஏற் பட்டது? இறைவலுைம், அவனருள் பெற்ற பெரியோர் களாலும் அமைந்தது.

காலத்துக்குக் காலம் வேறுபடும் அறங்களும் இடத்துக்கு இடம் வேறுபடும் அறங்களும் மக்களின்  கிலேக்கு ஏற்ப வெவ்வேருக அமையும் அறங்களும் உண்டு. இவற்றை அவ்வப்போது பெரியவர்கள் வரை யறுப்பார்கள். எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத் துக்கும் எல்லா மக்களுக்கும் அமையும் அறங்கள் உண்டு. அகாதியாக வரும் சில அறங்களும் உண்டு. இறைவன் தன் அருளானேயால் அந்தத் தொல்லறங் களே அமைத்தருளினன். அவன் காட்டிய வழியே நின்று உலகத்திற்கு நலம் செய்ய வந்த பெரியோர்கள் வகுத்த நெறிகளும் அறத்தின்பாற் படும். ஆகவே, அறத்தின் மூலமாக நிற்பவன் இறைவன் என்பதை உணரலாம். -

அறம் கடல் போன்றது; எல்லே இல்லாதது. அதன் வடிவாக இருக்கும் இறைவனே அறக் கடல் என்று சொல்வது பொருத்தமானது. வள்ளுவர் இறை வனே அறவாழி அந்தணன் என்கிருர். அந்தணன் என்பது அழகிய தட்பத்தை உடையான் என்று பொருள்படுவது. தட்பம்-குளிர்ச்சி; இங்கே இறைவ னிடம் உள்ள கருணையையே தட்பமென்று கொள்ள வேண்டும்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்

என்ற குறளில் எல்லா உயிர்களுக்கும் அருள் பூண்டு ஒழுகுவதைச் செந்தண்மையாகக் குறித்தார். இறைவன் அருட்கடலாகவும் இருக்கிறவன். உலகினருக்குரிய அறநெறிகளே வகுத்தற்கு அவ்வருளே காரணம். அவனுடைய தயையே இந்த அறத்துக்கு மூலமானது;. தயாமூல தன்மம் என்று சொல்வார்கள். அந்தணனுக, அழகிய அருளே வடிவினகை இருப்பதனால் அவன் அறப் பெருங்கடலாகவும் விளங்குகிருன். 

அருளே அறத்துக்கு மூலமாவது என்பதைச் சைவ நூல்களில் காணும் ஒரு கருத்தினுலும் தெளிவு பெறலாம். இறைவனுடைய பேரருளே சக்தி என்பது சைவநூல் துணிபு. அந்தச் சக்தியே அறப்பெருஞ் செல்வியாக நிலவுகிருள். -

இறைவன் அந்தணனாக நின்று அறம் வகுத்தான்; அறமே வடிவாக, அறக்கூறுபாடுகள் யாவும் தாகை, அறக்கடலாக விளங்குகிருன். அருளும் அறமும் இணைந்த இந்த கிலேயைத் திருநூற்றந்தாதி ஆசிரியர், 'அருளோ டெழும் அறவாழி அப்பா’ என்று கூறுவர். "அறவனே ஆழிப்படை அந்தணனை' என்பது திருவாய்மொழி. -

அறக்கடலாகிய இறைவன் திருவடியைச் சார்ந்த வர்கள் இவ்வுலகில் அறநெறியில் நின்று பொருளும் இன்ப மும் துய்த்துப் பின்பு வீட்டை அடைவர். அறம் பொருள் இன்பம் என்னும் இம்மூன்றும் இந்த உலக வாழ்விலே பெறுவதற்குரியவை. இம்மூன்றும் விட்டுப் பெறுவது வீடு. - -

'இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு” என்பது ஒளவையார் வாக்கு. -

அறக் கடலாக உள்ள இறைவன் திருவருளால் பொருள், இன்பம் என்னும் இரண்டையும் பெற்று அவற்றைக் கடந்து அப்பால் வீடு பெறவேண்டும். பொருளும், இன்பமும் ஒருவனுக்கு நிறைவைத் தருவது இல்லை. பொருளிட்டினருக்கு மேலும் மேலும் பொருளே ஈட்ட வேண்டு மென்னும் கிரீனவு எழுந்து கொண்டே இருக்கும். பொருளைக் குவிக்க வேண்டுமென்னும் எண்ணமுள்ளவர்களிடம் இந்த நினைவு இருப்பது வியப்பன்று. ஆனல் பொருளே ஈட்டி அறச் செயலும் இன்பச் செயலும் புரிபவர்களும் மேலும் மேலும் அவற்றை விரிவாகச் செய்யவேண்டும் என்று அவாவி, அதற்குக் கருவியாக உள்ள பொருளேப் பின்னும் ஈட்டும் முயற்சியில் தலைப்படுவார்கள். நூறு ஏழைகளுக்கு உணவளித்து இன்புற்றவர்கள் ஆயிரம் பேருக்கு உண வளிக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பே. ஆதலின் பொருளே நற்செயலின் பொருட்டு ஈட்டு பவர்கள் அவ்வாறு ஈட்டுவதற்கு ஒர் எல்லேயே இல்லாமல் முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். ஆதலின் பொருளும் எல்லே காண இயலாத கடலேப் போன்றது.

இன்பமும் அத்தகையதுதான். க்ற்புடை மனேவியோடு முறை பிறழாது இன்பம் நுகர்பவர்களும் அவ்வின்பத்தை நெடுங்காலம் நுகர விரும்புகிருர்கள். வீட்டின்கண் வேட்கை உண்டானுலன்றிப் பொருளிலும் இன்பத் திலும் போதும் என்ற நினைவு உண்டாவதில்லை. ஆதலின் அவ்விரண்டையும் கடலென்று சொல்வது பொருந்தும். வள்ளுவர் அவ்விரண்டையும் ஆழி என்றே சொல்கிருர்,

பொருட்கடலையும் இன்பக்கடலையும் கடந்து செல்ல இறைவன் திருவருள் வேண்டும். அறக்கடலாகிய அவனுடைய திருவடியைச் சேர்ந்தவர்கள்-தொழுது வழுத்தித் தியானித்தவர்கள்-அவ்விரண்டையும் கடப்பார் கள். இதையே திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் எட்டா வது திருக்குறளில் சொல்கிருர். 

எதிர்மறை முகத்தால், சேர்ந்தவர்க் கல்லால் பிற கடல்களைக் கடத்தல் அரிது’ என்று சொல்வதல்ை, சேர்ந்தவர்கள் பிற கடல்களேக் கடத்தல் எளிது’ என்ற கருத்து அதன்கண்ணே பொதிந்திருப்பதை உணரலாம். தாள் சேராதார் மிகுதியாக உள்ள உலகத்துக்குரிய அறிவுரையைப் புகல வந்தவராதலின், அவர்களுக்கு அச்சம் தோன்ற, இவ்வாறு செய்யாவிட்டால் இன்ன துன்பம் நீங்காது’ என்று கூறினர். -

இதற்குப் பரிமேலழகர், அறக்கடலாகிய அந்தணனது தாளாகிய புணேயைச் சேர்ந்தார்க்கு அல்லது, அதனிற் பிறவாகிய கடல்களே நீந்தல் அரிது’ என்று உரை கூறி, 'அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனேப் பொருளும் இன்பமும் பிற எனப்பட்டன என்று விளக்கினர். - - . . . ... -

இந்தக் குறளுக்கு வேறு வேறு வகையில் பொருள் கூறுபவர்கள் உண்டு. அறவாழி என்பதற்குத் தர்ம சக்கரம் என்று உரை கூறுவார் சிலர். இதைப் பரிமேலழகரே குறிக்கின்ருர்; அறவாழி என்பதனைத் தரும சக்கரமாக்கி, அதனேயுடைய அந்தணன் என்று உரைப்பாரும் உளர்' என்று எழுதியுள்ளார். -

பிற ஆழி என்பதற்குப் பிற கடல்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருத்தலின், முன்னுள்ள ஆழி என்பதற்கு அவற்றிற்கு இனமாகிய மற்ருெரு கடலேக் கொள்வதே பொருத்தம். பிற ஆழி என்பதிலுள்ள ஆழி என்பதற்கும் சக்கரங்கள் என்று பொருள் கொள்ள,  வாய்ப்பு இருந்தால் அற ஆழி என்பதற்குத் தர்ம சக்கரம் என்று பொருள் கொள்ளலாம். பிற சக்கரங்களேக் கடத்தல்’ என்று உரை கூறுவதற்கு அங்கே இடமில்லை; ஆதலின் பிற கடல்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்; நீந்தல் என்பது கடல் என்ற பொருளோடு இயைவதைக் காண்க. பிற என்று இனத்தைச் சுட்டும் சொல் இருத்தலின் முன்புள்ள ஆழியும் கடல் என்றே கொள்ளவேண்டும்.

அறவாழி என்பதற்குத் தருமக்கடல் என்று பொருள் கொண்டு பிறவாழி என்பதற்கு அதருமமாகிய பாவக் கடல் என்று பொருள் கொண்டார் பரிதியார் என்னும் உரையாசிரியர். அறம், மறம் என்பன ஒருங்கு வைத்து எண்ணப்படுவதல்ை அறக்கடலைச் சொன்ன வர் பிற ஆழி என்பதல்ை மறக்கடலாகிய பாவக் கடலேக் குறித்தார் என்று சொல்வது பொருத்தமாகத் தோற்றலாம். ஆனல் பிற என்பது பன்மை. பிறிதாழி ந்ேதலரிது என்று இருந்தால் பாவக்கடல் என்று ஒருமை யாகப் பொருள் கொள்ளலாம். பிற என்று இருத்தலின் அறத்தோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் ஒன்றுக்கு மேற்பட்டவற்றையே அது குறிக்கும். ஆதலின் பாவக்கடல் என்ற ஒருமையைக் கொள்வது பொருந்தாது.

காளிங்கர் என்னும் உரைகாரர் பிறவாழி என்ப தற்குப் பிறவிப்பெளவம் என்று உரை கூறினர். பிறவு ஆழி என்று பிரித்துப் பொருள் கொண்டார் அவர். பிறவு-பிறவி, பிறவாழிக் கரை கண்டாரே (வில்லி பாரதம், கண்ணன் துாது, 1) என்பதில் பிறவு என்பது பிறவியென்னும் பொருளில் வந்திருப்பதைக் ö了6况Tö。

'இறைவன் திருவடியைச் சேர்ந்தவர்கள் பிறவிக் க்டலே நீந்துவர் என்ற கருத்தைப் பின்னே திருவள்ளுவர்  சொல்கிருர்; சேராதவர்கள் நீந்தார்’ என்பதையும் சேர்த்தே சொல்கிருர்;

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

இங்கே ஒரு முறை சொன்ன கருத்தை மீட்டும் ஒரு குறள் விட்டு அடுத்த குறளில் சொன்னர் என்பது பொருத் தம் அன்று; அது காரணமின்றிக் கூறியதையே கூறும் குற்றத்தின்பாற் படும். -

ஆதலின் பரிமேலழகர் கொண்ட பொருளே பொருத்த மாகத் தோன்றுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

KVJ%2BThiruvadi%2B33.pngKVJ%2BThiruvadi%2B34.png



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 KVJ%2BThiruvadi%2B35.png

KVJ%2BThiruvadi%2B36.png



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard