Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இளங்கோ அடிகள் சமயம் எது -பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
இளங்கோ அடிகள் சமயம் எது -பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
Permalink  
 



  இளங்கோ அடிகள் சமயம் எது - பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்

இந்தச் செவிவழிச் செய்தி கதைக்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. சிலம்பின் ஆசிரியர் பெயர் இளங்கோ என்பதுதானா என்பதையும் உறுதியாகக் கூறச் சான்று எதுவு மில்லை அல்லாமலும், கோவலன் ஜைன சமயத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லவும் எவ்வித ஆதாரமும் இல்லை. அப்படி யிருந்தும் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தப் பதிகத்தையும் வரந்தரு காதையின் கடைசி பன்னிரெண்டு அடிகளையும் நம்பிச் சேரன் தம்பி சிலம்பை இசைத்தான் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இக்கருத்து எவ்வளவு பொருத்தமற்றது, இளங்கோ அடிகளின் உண்மையான சமயம் யாது என்பதே முதற் கட்டுரையாகும்.

இரண்டாவது கட்டுரை, தொன்றுதொட்டு இந்நாட்டில் ஏறத்தாழ எல்லாச் சமயத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த வினைக் கொள்கை பற்றிச் சிலம்பு என்ன பேசுகிறது என்பதை ஆய்வதையே பொருளாகக் கொண்டது.

மூன்றாவது கட்டுரை, கண்ணகி என்ற பாத்திரத்தை அடிகள் எவ்வாறு படைக்கின்றார் என்பது பற்றிச் சிந்திப்பது.

நான்காவது கட்டுரை, இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலம்பும், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணமும் பல்வேறு ஒற்றுமைகளையுடைய கண்ணகியையும், காரைக்கால் அம்மையாரையும், எங்ங்ணம் படைத்துள்ளன என்பதை ஆய்கிறது.

இளங்கோவும் திருவள்ளுவரும்'என்ற ஐந்தாவது கட்டுரை நீதி நூலாகிய குறளை எந்த அளவுக்கு அடிகள் பயன்படுத்து கிறார் என்பதை விளக்குவதாகும்.

முதல் கட்டுரை தவிர, ஏனையவை பற்றிக் கருத்து வேற்றுமை எழ இடமில்லை. ஆயிரம் ஆண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கையைத் தகர்க்க முற்படுவது முதற்கட்டுரை. ஆக அதில் வலுவான கருத்து வேற்றுமை எழ இடமுண்டு. சிலப்பதிகார நூலில் காணப்படும் பாடல்கள், செய்திகள் என்பவற்றைக் கொண்டே தருக்க முறை ஆய்வாக இளங் கோவின் சமயம் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது. அனைவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று இந்த ஆசிரியன் நம்ப வில்லை. என்றாலும், நடுநிலையோடு இதனைப் படித்து மேலும் இதுபற்றிச்சிந்திக்க இக்கட்டுரை இடந்தருமாயின் அதுவே இந்த ஆசிரியனுக்கு மன நிறைவைத் தரும்.

ஒரே நூலைப்பற்றி பல்வேறு கோணங்களில் ஆய்ந்துள்ள பல கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். ஒரு கோணத்தில் இருந்து ஆயும் பொழுது சொல்லப்பட்ட பல கருத்துக்கள் வேறு கோணத்தில் இருந்து ஆயும் பொழுதும் மறுபடியும் இடம் பெற்றே திரும். எனவே கூறியது கூறல் என்ற குறைதவிர்க்க முடியாத ஒன்றாகும். இதனைக் கற்போர் பொறுத்துக் கொள்ள வேண்டு கிறேன்.

இளங்கோ கண்ட ஊழ் என்ற இரண்டாவது கட்டுரை ஐந்து சொற்கள், நான்கு நிகழ்ச்சிகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆராயப்படுவதால் கட்டுரை முழுவதும் கூறியது கூறல் தவிர்க்க முடியாமல் வந்தே திரும்.

ஒவ்வொரு முறையும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி பேசும் பொழுது குறிப்பிட்ட சில சொற்களுக்கு அழுத்தம் தந்து ஆராயப் பெற்றுள்ளது. நான்கு நிகழ்ச்சிகளைப் பற்றி ஆராயும் பொழுது ஒரு தடவை அல்லாமல், பலதடவை கூறியது கூற வேண்டி யுள்ளது. இந்த இக்கட்டான நிலை தவிர்க்க முடியாது. ஆகவே கற்போர் இதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இளங்கோ அடிகள் சமயம் எது?’ என்ற கட்டுரையில் கண்ணகியைப் பற்றிப் பேசும் கருத்துக்கள், ஒரே பிறப்பில் வீடு என்ற கட்டுரையிலும் வேறு கோணத்தில் நின்று மறுபடியும் பேசப்பட்டு உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை - 600 083. ஆசிரியன். மார்ச் - 96



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
RE: இளங்கோ அடிகள் சமயம் எது -பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
Permalink  
 


பொருளடக்கம்

இளங்கோ அடிகள் சமயம் எது? 1

இளங்கோ கண்ட ஊழ் 64

ஒரே பிறப்பில் வீடு  91 

கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும்  105

இளங்கோவும் திருவள்ளுவரும் 132



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

இளங்கோ அடிகள் சமயம் எது?

தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை சில தனிப்பட்ட பழக்கங்கள் நமக்கு உண்டு. ஒரு நூல் அல்லது இலக்கியம் என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை பலகாலமாக இந்நாட்டில் இருந்து வந்துள்ளது. கர்ன பரம்பரைக் கதைகளுக்கும் நாளாவட்டத்தில் இதே மதிப்பு தரப்பெற்றது. வரலாறு, செவி வழிச் செய்தி என்ற இரண்டும் ஒன்றாகவே மதிக்கப்பட்டு விட்டன. உதாரணமாக ஐம்பெருங் காப்பியம்’ என்ற தொடரை எடுத்துக் கொள்ளலாம். சிலப்பதி காரம், மணிமேகலை, சிந்தாமணி வளையாபதி, குண்டலகேசி என்ற ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தலைப்பில் அடங்குவதாக இன்றும் கூறிக்கொண்டு வருகிறோம். சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றியதால் ஐம்பெருங்காப்பியம் என்ற சொற்றொடர் பதினான்கு அல்லது பதினைந்தாவது நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும். இந்த ஐந்து நூல்களுள் சிலம்பு, மணிமேகலை, சிந்தாமணி ஆகிய மூன்றும் பெருங்காப்பியம் என்ற பெயருக்குப் பொருத்த மானவையேயாகும். ஆனால் வளையாபதியும், குண்டலகேசியும் காப்பியம் என்ற பெயருக்குத் தகுதியுடையனவா என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு உரியன. சூளாமணி போன்ற காப்பியம் ஒன்றேனும் இந்த ஐந்தில் ஏனோ இடம் பெறவில்லை. யாரோ ஒருவர் நாட்டைவிட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்ற ஜைனம் பெளத்தம் ஆகிய இரு சமயங்களுக்காகப் பெளத்தத்திற்கு இரண்டும் (மணிமேகலை, வளையாபதி) ஜைனத்திற்கு மூன்றும் என்று தொகுத்துக் கூறிவிட்டார். அந்நாள் முதல் இந்நாள் வரை ஐம்பெருங்காப்பியம் என்ற தொடரும் அது குறிக்கும் ஐந்து நூல்களும் பெருங்காப்பியங் களா? என்ற வினாவை யாரும் எழுப்பவில்லை. அது மட்டுமல்லாமல் சிலப்பதிகாரத்தை ஜைன சமயத்திற்கு உரியது என்று வாலாயமாகக் கூறி வருகிறோம். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் என்பதும் அவர் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர் என்பதும் செங்குட்டுவன் என்ற சேர மன்னனின் தம்பி என்பதும் எங்கே யாரால் உறுதியாகக் கூறப்பட்டுள்ளன என்று பார்த்தால் சில புதுமைகளைச் சந்திக்க நேரிடும். சிலப்பதிகார நூலுக்கு முன்னர் பதிகம் என்ற ஒன்று காணப்படுகிறது. தொண்ணுாறு வரிகளைக் கொண்ட இப்பகுதி இளங்கோவடிகளாலேயே இயற்றப்பட்டது என்று நம்புகிறவர்கள் அன்று முதல் இன்று வரை உண்டு. இந்தப் பதிகம் இல்லையானால் இளங்கோவடிகள் சேரன் தம்பி என்பதும், அரசைத் துறந்து குன்னவாயில் கோட்டத்தில் இருந்தார் என்பதும் யாருக்கும் தெரியாத கதையாகிவிடும். இப்படிப்பட்ட பல கருத்துக்களைக் கூறும் பதிகம், காப்பியம் தோன்றிய காலத்துக்கு மிகமிகப் பிற்பட்டு யாரோ ஒருவரால் எழுதிச் சேர்க்கப்பட்டதாகும். திருவள்ளுவரைப் போல இளங்கோவடிகளுக்கும் உண்மைப் பெயரென்ன? பெற்றோர்கள் யார்? எப்போது வாழ்ந் தார்? என்பனபோன்ற செய்திகள் இன்று வரை தெளிவாகத் தெரியவில்லை. அரசுரிமை பெற வேண்டிய அவர் அரசைத் துறந்து குனவாயிற் கோட்டத்தில் துறவியாக வாழ்ந்தார் என்று பதிகம் பேசுகிறது. இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. செங்குட்டுவனைப் பற்றி அவன் பெயரோடு சேர்த்துப் பல நிகழ்ச்சிகள் நூலில் பேசப்பட்டு உள்ளன என்பது உண்மைதான். இந்தச் செங்குட்டுவன் பதிற்றுப்பத்தில் பேசப்படும் கடல் பிறக்கோட்டிய செல்கெழுகுட்டுவன்' என்றும் நினைப்பதற் கில்லை. காரணம் நான்கு பாடல்களில் குட்டுவனுடைய கடற் படைப் பெருமை பேசப்பெறுகிறது. அதே பதிற்றுப்பத்தில் சிலப்பதி காரம் கூறும் இவனுடைய இமயப் படையெடுப்புப் பற்றி ஒரு சொல் கூட இல்லை. சிலம்பில் அவன் கடற்படை பற்றி ஒரு சொல் கூட இல்லை. இவ்விரண்டையும் கொண்டவன் ஒருவன் என்றால் இவ்விரு நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒன்று முன்னும், மற்றொன்று பின்னரும் நடைபெற்று இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருக்க, பதிற்றுப்பத்து கூறும் செல்கெழுகுட்டுவனும் சிலம்பு கூறும் செங்குட்டுவனும் வெவ்வேறானவரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இளங்கோவைப் போன்ற ஒரு மாபெரும் கவிஞர் செல்கெழுகுட்டுவனின் தம்பியாக இருந்திருப்பின் பதிற்றுப் பத்தின் பாடல்கள் இளங்கோவைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமலா இருக்கும்!

இஃது இவ்வாறு இருக்க, பதிகம் இளங்கோ தமக்குரிய அரசைத் துறந்து குணவாயிற்கோட்டத்தில் இருந்தார் என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை. பதிக ஆசிரியர் ஏதோ ஒரு காரணத்தால் இளங்கோவையும் சிலம்பின் பாட்டுடைத் தலைவனாகிய கோவலனையும் ஜைனராகக் காட்ட முயன்றுள்ளார். இளங்கோ என்பவர் அரசைத் துறப்பதற்கு உரிய காரணத்தைப் பதிகத்தில் புகுத்த இடமில்லை என்பது தெளிவு. அப்படியானால் நிமித்திகனையும் அவனுடைய எதிர்கால நோக்கையும் சொல்வதற்கு இடமில்லை என்று தெரிந்த பதிக ஆசிரியர் மிக்க துணிவோடு சிலப்பதிகாரத்தின் இறுதிக் காதை யாகிய வரந்தரு காதையில் இடைச் செருகல் செய்துள்ளார். அது பற்றிப் பின்னர் விரிவாகக் காணலாம்.

பதிகத்திலோ நூலிலோ எந்த ஒர் இடத்திலும் தெளி வாகப் பேசப்படாமல் இருக்கும் இளங்கோவடிகளைச் சமண சமயத்தவர் என்று கூறும் மரபு மிக நீண்ட காலமாக இருந்து ஒரளவு வேரூன்றிவிட்டது. ஆராய்ச்சி மிகுந்த இக்காலத்திலுங் கூட இவரைச் சமனர் என்று சொல்லுவதற்குச் சான்றுகள் ஏதேனும் உண்டா என்று பாராமல் பல ஆராய்ச்சியாளர்களும் இதை ஒரு நிரூபிக்கப்பட்ட செய்தியாகவே கொண்டு பேசி வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை சில காலமாகவே இப்பிரச்சனை மனத்தில் ஒரு நெருடலைத் தோற்றுவித்து வளர்த்துவிட்டது. சிலப்பதிகார நூலில் எல்லாத் தெய்வங்களும் சிறப்பித்துப் பேசப்படுகின்றன. காவிரிப் பூம்பட்டினத்தைப் பொறுத்தவரை அருகன் கோட்டம் முதல் ஐயை கோட்டம் வரை பல கோயில்கள் இருந்ததாகப் பேசப்படுகிறது. நூல் முழுவதையும் நன்காராய்ந்தால், திருமால் பற்றி எண்பத்தி ஒன்பது (39) இடங்களிலும், அருகன் பற்றி ஐம்பத்தி ஒன்பது (59) இடங்களிலும், சிவபெருமான் பற்றி முப்பத்தி ஆறு (36) இடங் களிலும், முருகன் பற்றி இருபத்தொரு (21) இடங்களிலும் பேசப்பட்டுள்ளதைக் காணலாம். இங்குக் குறிப்பிடப்பட்ட எல்லா இடங்களிலும் இத்தெய்வங்களைப் புகழ்ந்து பேசும் சொற்கள் ஆசிரியருடைய கூற்றுக்கள் என்ற முடிவிற்கு வரத் தேவையில்லை. மிக மிகப் பெரும்பான்மையான இடங்கள் பாத்திரங்களின் கூற்றுக்களாகும். கவுந்தியடிகள் கூற்றாகப் பன்னிரண்டு (12) இடங்களும் சாரணர் கூற்றாக நாற் பத்தியேழு (47) இடங்களும் அருகன் புகழ் பேசுகின்றன. ஆய்ச்சியர்கள் கண்ணனையும் நாராயணனையும் இராமனை யும் புகழ்ந்து பேசுகின்றனர். குன்றக் குறவர் முருகனைப் புகழ்ந்து பாடுகின்றனர். வேட்டுவ வரியில் கொற்றவையின் புகழ் பேசப்படுகிறது.

இவ் எல்லா இடங்களிலும் இத்தெய்வங்கள் மிகவும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இவற்றைக் கொண்டு நூலாசிரியர் சமயம் யாது என்ற முடிவிற்கு வருவதும் பொருத்தமாகப் படவில்லை. பாத்திரங்களின் கூற்றாக இல்லாமல் ஆசிரியர் கூற்றாகவே வரும் இடங்களில் அவர் எவ்வாறு இத்தெய்வங்களை அறிமுகப்படுத்து கிறார் என்பதைக் காண்டல் வேண்டும். அதற்குரிய சான்றுகள் இரண்டொன்றைக் காணலாம்.

இந்திர விழவூ ரெடுத்த காதையில் நான்கு பெருங் கோயில்கள் பேசப்படுகின்றன. அவை வருமாறு :

“பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்

அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும்

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

நீல மேனி நெடியோன் கோயிலும்’ (169-172)

தமிழிலக்கியத்தில் அதிகம் பேசப் பெறாத பலராமனுக்கு ஒரு கோயில் இருந்தைச் சிலம்பு பேசுகிறது : செவ்வேள் என்று முருகனையும் நீலமேனி நெடியோன் என்று திருமாலையும் குறிப்பிடும் ஆசிரியர் சிவபெருமான் கோயிலைச் சொல்ல வரும்பொழுது பிறவா யாக்கைப் பெரியோன் என்று கூறுவது சிந்திக்கத் தக்கது. இப்படிப்பட்ட அடை மொழிகள் தந்து பேசுவது ஆசிரியனுடைய அடிமனத்திலுள்ள எண்ண ஓட்டங்களைக் குறிப்பனவோ என்ற ஐயம் தோன்றுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 இதே போல வஞ்சிக் காண்டத்தில் ஒரு நிகழ்ச்சி பேசப் படுகிறது. அந்த நிகழ்ச்சி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அன்று என்றும் கூறுவதற்கில்லை. சேரன் செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டு புறப்படுகிறான். எல்லாப் பணிகளையும் முடித்த பிறகு வஞ்சி மாநகரில் எழுந்தருளியுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று யாருக்கும் வனங்காத தன் முடியைத் தாழ்த்தி வணங்கிவிட்டு யானைமேல் ஏறுகிறான். அந்த நிலையில் ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்த திருமாலை வழிபடவேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. யானைமேல் ஏறிவிட்ட பிறகு திருமால் கோயில் பிரசாதத்தை சிலர் ஏந்தி வருகின்றனர். அதைப் பெற்றுக் கொண்ட அவன் சிவபெருமானுடைய திருவடிகளின் அடையாளமான வில்வத்தைத் தன் உச்சந் தவையில் தரித்திருப்பதால் திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் தோளில் தரித்துக் கொண்டான் என்று பாடுகிறார் இளங்கோ,

'நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி

உலகு பொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி

மறஞ்சேர் வஞ்சி மாலையொடுபுனைந்து

இறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங் கொண்டு (கால்கோட் காதை 57)

,,,,,,,,

கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன்

குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென

ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்

சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்

தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்

வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்

ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத்

தாங்கினனாகி.... - (கால்கோட் காதை 60 - 67)

இப்பகுதியைப் படிக்கும் பொழுது இவ்வளவு விரிவாக இதனைப் பாடுவது தேவையா என்ற ஐயம் மனத்தில் எழுகிறது. செங்குட்டுவன் சிறந்த சிவ பக்தனாக இருக்கலாம். எனவே அவன் சிவபெருமான் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு யானை மேல் ஏறினன் என்று பாடுவது பொருத்தமுடையதாகும். ஆனால் பின்னர் காட்டிய பகுதி நடைபெற்றிருப்பினும் சொல்ல வேண்டிய தேவையில்லை. அறிதுயில் அமர்ந்தோன் கோயிலுக்கு அரசன் செல்லவில்லை என்பதே அவன் திருமால் வழிபாட்டில் நாட்டம் செலுத்தவில்லையென்பதை அறிவிக்கின்றது. அவ்வாறு இருந்தும் திருமால் பிரசாதத்தை ஒரு சிலர் கொண்டு சென்று யானை மேல் இருப்பவனுக்குக் கொடுக்க நீட்டினார்கள் என்று கூறுவது ஏன் என்று தெரியவில்லை. கொடுத்தார்கள், மன்னன் வாங்கிக் கொண்டான் என்று பாடிச் சென்றிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல் சிவபெருமான் திருவடி, தலைமேல் இருப்பதால் இப்பிரசாதத்தை வாங்கித் தோளில் தரித்துக் கொண்டான் என்று ஆசிரியர்பாடுவது, அவருடைய ஆழ்மனத்தில் சிவபெருமானுக்கு இருந்த சிறப்பை எடுத்துக் கூற இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இது இவ்வாறு இருக்க, பதிக ஆசிரியர் பதிகத்தின் முதல் மூன்றடிகளில் இளங்கோவடிகளைக் குறிப்பிடும் முறை எவ்விதச் சான்றும் இல்லாமல் அவருடைய கற்பனை ஒன்றை மட்டும் துணையாகக் கொண்டு கூறியதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

'குண வாயிற் கோட்டத் தரசு துறந் திருந்த

குடக்கோச் சேர லிளங்கோ வடிகட்கு'

அரசு துறந்து இருந்த இளங்கோவடிகள் என்று பதிக ஆசிரியர் கூற வரலாற்றுச் சான்று எதுவுமில்லை. நூலாசிரிய ராகிய இளங்கோவை அரசு துறந்து இருந்தார் என்று கற்பனை செய்த பிறகு பதிகவாசிரியர்க்கு மற்றோர் இடையூறு குறுக்கிடு கின்றது. நகருக்கு வெளியேயுள்ள குனவாயிற் கோட்டத்தில் இளங்கோ இருந்தார் என்று கற்பனை செய்துவிட்ட பிறகு கண்ணகி சேர நாடு வந்த செய்தியும் கொடிமாடச் செங்குன்றில் வானவர் வந்து அவளை அழைத்துச் சென்றனர் என்பதும் இத் துறவிக்கு எவ்வாறு தெரியவந்தது என்ற வினாவிற்கு விடைகூற வேண்டிய கட்டாயம் பதிக ஆசிரியர்க்கு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைக்கு அவர் கண்ட முடிவு எவ்வளவு பொருத்தமற்றது என்பதைப் பின்னர்க் காணலாம்.

காப்பியம் பாட வந்த இளங்கோவிற்கே இது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சேர நாட்டை அடுத்து உள்ள பாண்டிய நாட்டின் தலை நகரம் ஒரு பெண்ணரசியால் தியூட்டப் பட்டது, தவறு இழைத்த மன்னவன் அத்தவறுக்குக் கழுவாயாக தன் உயிரையே கொடுத்தான் என்ற மிகப் பெரிய செய்திகள் அண்டை நாட்டான் ஆகிய சேரனுக்கு எவ்வாறு தெரியாமல் இருந்தன? ஒற்றர்கள் மூலம் சேரன் இதையறியவில்லை என்றால் இது அவன் ஆட்சிக்கே ஒரு குறைபாட்டை உண்டாக்கும். ஒற்றர் மூலம் அறிந்து செங்குட்டுவன் கண்ணகியின் பெருமையுணர்ந்தான் என்று பாடியிருந்தால் அவள் தன் நாட்டை அடைந்ததும் பின்னர் தேவர் உலகம் சென்றதும் செங்குட்டுவன் அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விடும். காரணம் கண்ணகியின் சேரநாட்டுச் செலவை ஒற்றர்கள் அறிந்தார்கள் என்று சொல்வது பொருத்த முடையதாகாது. இப் பிரச்சனையைத் தீர்க்க காப்பியப் புலவர் கையாண்ட வழி மிகச் சிறப்புடையதாகும். எனவே செங்குட்டுவன் மலைவளங்கானச் சென்றான். வேட்டுவ மக்கள் அவனைக் காண வந்து ஒரு முலை இழந்த திருமாபத் திணி'தேவருலகம் சென்ற வரலாற்றை தாம் கண்டவாறு கூறினர் இந்த நிலையிலும் மதுரையில் நடந்ததையோ கண்ணகி வரலாற்றையோ செங்குட்டுவன் அறிய வாய்ப்பில்லை. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காகக் காப்பியப் புலவர் தண்டமிழாசான் சாத்தன்'என்ற ஒரு பாத்திரத்தை உருவாக்குகிறார். வேடுவர்கள் கூறியதைக் கேட்டு ஒன்றும் புரியாத செங்குட்டுவனுக்கு உடனிருந்த புலவர் சாத்தன் கண்ணகி வரலாற்றைக் கூறிய தாகக் காப்பியம் பேசுகிறது.

மண்களி நெடுவேள் மன்னவற் கண்டு.

கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த

தண்டமி ழாசான் சாத்தன் இஃது உரைக்கும்

                                காட்சிக் காதை (64-66)

கண்ணகியின் வரலாற்றைச் செங்குட்டுவன் அறிந்தால் தான் அவளைப் போற்றி வழிபடக் கோயில் எடுக்க முடியும். அது நடைபெற வேண்டுமானால் ஒற்றர் முதலியவர் போல் அல்லாமல் பெரும்புலவன் ஒருவன் கண்ணகி வாழ்க்கையில் அதுவரை நடந்ததை உரைக்க வேண்டும். இதனைச் செய்வதற்காகவே தண்டமிழ் ஆசான் சாத்தன் உடனிருந்து விளக்கம் தந்ததாக இளங்கோ காப்பியத்தை அமைக்கிறார்.

தண்டமிழாசானைப் பயன்படுத்தி, தமக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்துக் கொண்ட இளங்கோ, சாத்தனுக்கு இவ்வரலாறு எவ்வாறு தெரிந்தது என்பதை விளக்க முற்பட வில்லை. காப்பியக் கட்டுக்கோப்புக்கு இதனுடன் நிறுத்திக் கொள்வதே போதுமானது என்று புலவர் நினைத்திருக்கிறார். இதனைப் புரிந்து கொண்ட பிறகு பதிகத்துக்குச் செல்வோ மானால் பதிகம் பாடிய ஆசிரியன் எந்த அளவு கற்பனை செய்துள்ளார் என்பதையறிய முடியும். கோட்ட வாயிலில் இருந்த இளவலாகிய இளங்கோவிற்கு இவ்வரலாறு எவ்வாறு தெரிந்தது என்பதைச் சொல்ல வேண்டிய சூழ்நிலை பதிகவாசிரியனுக்கும் ஏற்பட்டுவிட்டது. முன்பின் யோசியாமல் காப்பியத்தில் கண்ட அதே சூழ்நிலையைப் பதிகத்தில் உண்டாக்குகிறான். மலை வளங் காண வந்த மன்னனிடம் வேடுவர்கள் பேசியது பொருத்த மாக இருக்கிறது. ஆனால் அதே வேடுவர் கூட்டம் மலையை விட்டுக் கீழிறங்கி குணவாயிற் கோட்டம் வந்தடைந்து ஒரு சம்பந்தமும் இல்லாத இளங்கோவிடம் தாம் கண்டதைக் கூறினர் என்று பதிகவாசிரியர் கூறுவது நகைப்பிற்கு இடந்தருவதாகும். மன்னனைக் காண வந்த குடிமக்கள் அவனிடம் கூறுவது வேறு. ஆனால் மலையை விட்டுப் பிரிந்து இராத அந்த வேடுவர்கள் குணவாயிற் கோட்டத்திற்கு ஏன் வரவேண்டும்? அங்கே தங்கி யிருந்த தம்பியிடம் இந்தக் கதையை ஏன் சொல்ல வேண்டும்? சற்றும் பொருத்தமில்லாமல் இவன் கூறும் பதிகத்தை இதுவரை ஆராய்ச்சியாளர் அனைவரும் வேதவாக்கு என ஏற்றுக் கொண்டது வேடிக்கைதான்.

இப்பதிக ஆசிரியன் இந்நிகழ்ச்சியை இதனோடு நிறுத்த வில்லை. ஏனென்றால் யார் எவர் என்று தெரியாத ஒரு பெண் மணி தேவருலகம் சென்றாள் என்று கூறுவதை வைத்துக் கொண்டு இளங்கோ என்ன செய்திருக்க முடியும்? துறவியாகிய அவர் மன்னனிடம் சென்று கேட்டார் என்று கூறினாலாவது பொருத்தமாக இருக்கும். அவை அனைத்தையும் விட்டுவிட்டு குன்றக்குறவர் வருகையை அப்படியே ஏற்றுக் கொண்டது போல, தண்டமிழ் ஆசான் சாத்தனையும் ஏற்றுக் கொள்கிறார். குறவர் உரையைக் கேட்ட இளங்கோ ஒன்றும் புரியாமல் விழிக்கையில் வழக்கம்போல நினைத்த இடத்தில் தோன்றும் நாரதரைப் போல, தண்டமிழாசன் இங்கேயும் வருகிறார். அது மட்டுமல்லாமல்

அவனுழை யிருந்த தண்டமிழ்ச்

சாத்தன் யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் - (பதிகம் 10-11)

என்ற முறையில் கண்ணகியின் வரலாற்றை ஆதியிலிருந்து சொல்வதாகப் பதிகம் அமைகிறது. காட்சிக் காதையில் வரு வதை அப்படியே எடுத்துக் கூறுவதோடு பதிக ஆசிரியர் நிற்க வில்லை, தனக்கு இவ்வரலாறு எவ்வாறு தெரியும் என்பதையும் கண்ணகிக்கும் மதுராபதித் தெய்வத்திற்கும் இடையே நடந்த உரையாடலையும் சாத்தன் பேசுகிறான். மதுரையே தீப் பற்றி எரியும்போது, தான் வெள்ளியம்பலத்துத் துஞ்சிக் கிடந்த தாகவும் அந்நிலையில் இதனையறிந்ததாகவும் சாத்தன் கூறு கிறான். இது பதிக ஆசிரியருடைய கைவண்ணம்.

அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்

வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன்

ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்

மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்

கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்! (பதிகம் : 39-44)

இவ்வடிகள் எவ்வளவு பொருத்தமில்லாமல் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன என்பது சிந்திப்பவர் அனைவர்க்கும் புலனாகும். ஊர் முழுவதும் திப்பற்றி எரியும்போது நட்ட நடு நிசியில் வெள்ளியம்பலத்தில் தான் படுத்துக்கிடந்ததாகச் சாத்தன் பேசுகிறான். இங்கே வெள்ளியம்பலம் என்று கூறப் பட்டது எப்பகுதியை? இன்று மதுரையில் வெள்ளியம்பலம் என்று கூறப்படும் பகுதி மீனாட்சியம்மையின் கோயிலின் ஒரு பகுதி யாகும். நடராசப் பெருமான் கால் மாறி ஆடும் இடமே வெள்ளி யம்பலம் என்று கூறப்படுகிறது. இளங்கோ பாடுகின்ற காலத்தில் இப்பகுதி அதே பெயருடன் இருந்தது என்று கூறமுடியாது. காரணம் இறைவன் ஆடும் ஆனந்த தாண்ட வத்தின் ஒரு பகுதியாகும் இது. ஆனந்தத் தாண்டவம் முதன் முதலின் ஆடப்பெற்றது. தில்லையில்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருதப் பெறும் காரைக்கால் அம்மையார் இறைவனின் தாண்டவத்தைப் பற்றி திருவாலங்காட்டு இரண்டு பதிகங் களிலும், அற்புதத் திருவந்தாதியிலும் பாடுகிறார் என்றாலும் திருவாலங்காட்டில் ஆடும் ஊர்த்துவதாண்டவம் பற்றிப் பாடு கிறாரே அல்லாமல் தில்லையைப் பற்றி ஒரு சொல்கூடச் சொல்லவில்லை. திருவாலங்காட்டுத் தல புராணப்படி ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் தில்லையம்பலம் தோன்றியது என்று பேசப்படுகிறது. அப்படியானால் வெள்ளியம் பலமும் கால் மாறி ஆடிய வரலாறும் ஆறாம் நூற்றாண்டின் பின்னரே தோன்றியிருக்க வேண்டும். இளங்கோவின் காலத்தில் வெள்ளியம்பலம் இருந்ததாகக் கூறமுடியாது. அதனால் செங்குட்டுவனிடமிருந்த சாத்தன் தான் வெள்ளி யம்பலத்தில் தங்கியிருந்ததாகக் கூறவேயில்லை. அவ்வாறிருக்க அந்தப் பகுதியை அப்படியே எடுத்துக் கொண்டு பாடும் பதிக வாசிரியர் வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன் என்று சாத்தனைப் பேச வைக்கின்றார். இதன்படி பார்த்தால் பதிக வாசிரியர் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டுக்கு பிற்பட்டவர் என்று நினைப்பதில் தவறில்லை.

நூலில் வரும் சாத்தன், கண்ணகி வரலாற்றைக் காட்சிக் காதையில் 67ஆம் அடி முதல் 92ஆம் அடி முடியக் கூறுகிறான். இக்கூற்றில் மதுராபதித் தெய்வம் வந்து கண்ணகியிடம் பேசிய குறிப்பு எதுவுமில்லை. அப்படியிருக்கப் பதிக ஆசிரியன் கூறும் சாத்தன் மதுராபதித் தெய்வம் வந்து கண்ணகியிடம் பேசியதை விரிவாகப் பேசுகிறான். காப்பியத்திலுள் காட்சிக் காதையில் 19ஆவது அடியில் யாரை நீ என்பின் வருவோய்' என மதுராபதித் தெய்வத்தைக் கண்ணகி கேட்டதாகக் காண் கிறோம். இதற்கு முதலாவதாக உள்ள அழற்படு காதையின் இறுதி அடிகள் வருமாறு :

ஆரஞர் உற்ற வீரபத்தினி முன்

கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள்

வந்து தோன்றினள் மதுரா பதியென் (அழல். 155)

என்றுள்ள அடிகளின் பொருளைப் பதிக ஆசிரியர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பெருந்துயருற்ற வீரபத்தினி யாகிய கண்ணகியின் எதிரே (முன்) தோன்றிய கொதிக்கின்ற அழல் போன்ற அவள் கற்புத் தீயின் வெம்மையைப் பொறுக்க மாட்டாது பின்னர் வந்தாள் என்பது பொருளாகும். இதை உறுதிப்படுத்தவே காட்சிக் காதையில் 19ஆவது அடியில் என் பின்னர் வருகின்ற நீ யார் என்று கண்ணகி கேட்டதாகக் கவிஞர் பாடிச் செல்கிறார்.

இதனைப் புரிந்து கொள்ளாமையால் பாயிர ஆசிரியன் ஆரஞர் உற்ற வீர பத்தினிமுன் மதுரைமாதெய்வம் வந்து தோன்றிக் கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்' என்று கூறுவதாகப் பாடியுள்ளான். இதில் ஆரஞர் உற்ற விர பத்தினி முன் என்பது வரையில் காப்பியத்தில் உள்ள அடியாகும். அதை அப்படியே எடுத்தாண்ட பதிக ஆசிரியர் மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன்னே தோன்றிவிட்டது என்று பாடிவிட்டார். இதன் பிறகு, வினைக் கொள்கையை மிகுதியும் வலியுறுத்த விரும்பிய சமணர் ஆகிய பதிக ஆசிரியர் இந் நிகழ்ச்சியின் பின்னணியை வினைக் கொள்கையின் அடிப் படையில் மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குக் கூறுவதாகச் சொல்லிச் செல்கிறார்.

அது முடிந்தபின் பதிக ஆசிரியர் கூறும் சில அடிகள் குழப்பத்தை உண்டாக்குகின்றன. அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது முதல் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள் என்று அடிகள் கூறினாராம். எதிரே இருந்த தண்டமிழ் சாத்தன் இதிலுள்ள சிக்கலைக் கருத்திற் கொண்டாராம். சிக்கல் என்னவென்றால் சோழன், பாண்டியன், சேரன் ஆகிய மூன்று அரசுகளையும் இணைத்துப் பாட வேண்டிய காப்பியம் ஆகும் இது. இளங் கோவடிகள் என்பவர் சேரனுடைய தம்பியாக இருப்பின் ஏனைய இரண்டு அரசர்களைப் பற்றி இவர் பாடுவது ஒரளவு சங்கடத்தை உண்டாக்கும். அதனாலேயே இந்தச் சிக்கலைத் தவிர்க்க நினைத்த சாத்தன் இக்காப்பியம் முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரியதாயிற்றே. இதனை அடிகள் நீரே அருளுக என்று கேட்டாராம். இதில் நீரே என்பதிலுள்ள ஏகாரத்தை வினாப் பொருளில் அமைத்து தாங்கள செய்யப்போகிறீர்கள்? என்ற கருத்தில் சாத்தன் கேட்டாராம். ஏகாரத்திற்கு பல பொருளுண்டு. வினாப் பொருள், ஐயப்பொருள், உறுதிப்பொருள் (தேற்றேகாரம்) ஆகிய பல பொருள்களில் வரும். பதிக ஆசிரியர் கூற்றுப் படி இதையெடுத்துக் கொண்டு நானே செய்கிறேன் என்று அடிகள் முடிவு செய்து விட்டாராம். இது பதிக ஆசிரியர் கூற்று.

இந்த நிகழ்ச்சி முழுவதும் குறவர்கள் வந்து இளங்கோவிடம் கண்ணகியைப் பற்றிக் கூறியதாக வரும் பகுதி எவ்வளவு பொருத்தமற்றதோ அவ்வளவு பொருத்தமற்றதாகும்.

சங்கப் பாடல்களில் சாத்தன் என்ற பெயரில் 19 பேர் காணப் படுகின்றனர். அழிசி நச்சாத்தனார் முதல் மோசி சாத்தனார் வரை உள்ள இப்பெயர்களுள் ஒரேயொருவருடைய பெயர் மட்டும் அடை மொழி இல்லாமல் காணப்படுகிறது. எஞ்சிய 18 பெயர் களும் அடைமொழியோடு வந்துள்ளன. அவருள் சீத்தலைச் சாத்தனார் என்ற பெயருமுண்டு. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் காணப்படும் சாத்தனை சங்கப் புலவர்கள் வரிசையில் தேடுவது சரியில்லை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமேயாகும். அப்படியானால் இந்தக் கணக்கெடுப்பினால் பயன் என்ன என்று கேட்கப்படலாம். அக்காலப் பெயர்களுள் சாத்தன் என்ற பெயர் மிக அதிகமாகக் காணப்பட்டது என்பதுதான் இங்கு சிந்திக்க வேண்டிய கருத்தாகும்.

காப்பிய ஆசிரியர், செங்குட்டுவனுக்கு கண்ணகியின் வரலாற்றைத் தெரிவிப்பதற்கு ஒரு கருவியைத் தேடினார். வேறுவழி ஒன்றும் புலப்படாமையால் தண்டமிழாசான் சாத்தன் என்ற பாத்திரத்தைப் படைத்தார். இந்தப் பாத்திரம் கண்ணகி வரலாற்றைத் தான் எவ்வாறு அறிந்தது என்று சொல்லவே யில்லை. அப்படிச் சொல்லாததற்கு மிகமிக முக்கியமானதும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதுமான ஒரு காரணம் உண்டு. மதுரை தீப் பிடித்த 14 வது நாள் கண்ணகி வீடுபேற்றை அடைகிறாள்.

இந்தப் பதினான்கு நாட்களும் இரவு பகல் பாராமல் நடந்து கொண்டேயிருந்தாள் என்றும் இறுதியாக நெடுவேள் குன்றம் அடைந்தாள் என்றும் ஆசிரியர் பேசுகிறார். புறப்பட்ட அவளுக்கே எங்கே போகிறோம் என்று தெரியாது.

கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக்

கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்

மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென

இரவும்பகலு மயங்கினள் கையற்று

உரவுநீர் வையை யொருகரைக் கொண்டாங்கு

....................................................................

நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப்

பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்

தீத்தொழி லாட்டியேன் யான் என்று ஏங்கி

ஏழு நாள் இரட்டி எல்லை சென்றபின்

தொழு நாள் இது எனத் தோன்ற வாழ்த்தி

.........................................................................

கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு

வான வூர்தி ஏறினள்... (கட்டுரை காதை 181-199)

காப்பியத்தில் வரும் இவ்வடிகளிலிருந்து மதுராபதித் தெய்வம் கூறிய பதினான்கு நாட்களும் ஊண் உறக்கமின்றி ஒய்வென்பதே இல்லாமல் நடந்தே சென்று நெடுவேள் குன்றத்தின் உயரத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் மேலே ஏறி நின்றாள் என்று ஆசிரியர் பேசுகிறார். சாத்தன் மதுரை எரியும் பொழுது அவ்வூரில் இருந்தான் என்று கூறுவதானால் கண்ணகி சென்ற வழியை அவனும் பின்பற்றி வந்து அதே பதினான்காவது நாளில் செங்குட்டுவன் கூட அவள் அமர்ந்திருந்தான் என்று சொல்ல வேண்டி வரும். இது நடக்க முடியாத காரியம். இந்த நுணுக்கத்தைக் காப்பியப் புலவர் நன்கறிந்திருந்தார் ஆதலின் சாத்தன் மதுரையில் இருந்த கதையை அவர் கூறவேயில்லை. இதை நன்குணராத பதிக ஆசிரியன் காப்பியப் புலவர் கூறாது விட்ட பகுதியை தாம் இட்டு நிரப்புவது போல் வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன்’ என்று சாத்தனைச் சொல்லுமாறு செய்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 இவ்வாறு கூறுவதால் அறிவிற்குப் பொருத்தமல்லாத பல செய்திகளைச் சற்றும் ஆராய்ந்து பார்க்காமல் பதிக ஆசிரியர் பாடுகிறார் என்பதை அறிய முடியும். அதுவுமல்லாமல் கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வமாகிய கண்ணகியிடத்து மதுராபதித் தெய்வம் பேசியதையும் தான் கேட்டது போல சாத்தனைப் பேச வைக்கிறார் பதிக ஆசிரியர் ஒரு தெய்வம் மற்றொரு தெய்வத்திடம் பேசுவதை சாதாரண மனிதராகிய இவர் காதால் கேட்டார் என்பது எவ்வளவு பொருத்தமில்லாதது என்பதையும் சிந்திக்க வேண்டும். பதிக ஆசிரியர் படைத்த சாத்தன் மதுரை எரியும் பொழுது அவ்வூரில் இருக்கிறான். இரவு பகல் பாராமல் கண்ணகி கடந்துசென்ற பாதையை அவளுக்கு முன்னர் இவன் கடந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் செங்குட்டுவனிடம் போய்ச் சேரமுடியும். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிகளை இந்தச் சாத்தன் நேரே கண்டிருந்தால் செங்குட்டுவனிடம் சென்ற உடன் இதைச் சொல்லியிருக்க வேண்டாமா? குறவர்கள் வந்து சொல்லும் வரை ஏன் வாய் மூடிக் கொண்டிருந்தான்? இவை எல்லாம் ஒருபுறம் இருக்க குன்றக்குறவர்கள் குணவாயிற் கோட்டத்தைத் தேடி வந்து இளங்கோவினிடம் வருவதற்கு முன்னரே அவரிடம் வந்த இந்தச் சாத்தன் இந்த அற்புதத்தைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறான்? அவர்கள் வந்து கூறிய பிறகுதான் அவ்வரலாற்றை நான் அறிவேன்' என்று பேசுகிறான்.

இவ்வனைத்தையும் ஒன்றாக வைத்து நோக்கினால் பதிகம் என்பது நூல் தோன்றி ஆறு, ஏழு நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் யாரோ ஒருவர் இந்நூலையும் நூலாசிரி யரையும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்ட முனைந்துள்ளார். 

முரண்பாடுகளின் மொத்தவுருவமாகவும், பொருத்தமற்ற கருத்துகளைத் தாங்கி நிற்கும் பாடலாகவும் அமைந்துள்ளது பதிகம் ஆழ்ந்து சிந்தித்தால் நூலையும் நூலாசிரியனையும் நல்ல முறையில் அறிமுகப்படுத்த வேண்டிய கடப்பாடுடைய பதிகம் அதற்கு நேர்எதிரான செயல்களைச் செய்து கற்பவர் உள்ளத்தில் குழப்பத்தையே நிலைக்கச் செய்கிறது. பதிகம் அடிபட்டால் நெஞ்சை அள்ளும் சிலம்பை இசைத்தவர் குணவாயிற்கோட்டத்து அரசு துறந்திருந்தவர் சேரன் தம்பி இளங்கோ என்பதும் நிலை பெற முடியாமல் போய்விடும்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இக்காப்பியத்தை இயற்றிய ஆசிரியர் எச்சமயத்தைச் சேர்ந்தவர் என்பதை நடுநிலையில் நின்று புதிதாக ஆய்வது பயனுடையதாகும். முன்னரே குறிப்பிட்ட படி சிவபெருமான், திருமால், முருகன், அருகன், பலராமன் ஆகிய தெய்வங்களை இவர் குறிப்பிட்டுப் பேசுகிறார் என்று கண்டோம். பாத்திரங்கள் வாயிலாக வரும் தெய்வம் பற்றிய குறிப்புக்கள் கணக்கில் எடுக்கப்படக் கூடாதவை. இந்த அடிப்படையை மனத்திற் கொண்டு நூலில் புகுந்தால் வேட்டுவ வரி ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என்ற மூன்றும் நம் கண் முன் வரு கின்றன. இம்மூன்றிலும் முறையே கொற்றவை, கண்ணன், முருகன் ஆகிய தெய்வங்கள் முன்னிலைப் பராவலாகவும், படர்க்கைப் பராவலாகவும் புகழப் பெறுகின்றன. இப்பகுதிகள் அமைந்துள்ள இடங்கள் காப்பியக் கட்டுக்கோப்பில் எவ்வாறு பொருந்துகின்றனன என்று பார்ப்பது நலம் பயக்கும். நடுவே உள்ள ஆய்ச்சியர் குரவை காப்பியத்துடன் முற்றிலும் ஒருங் கிணைந்து அக்கட்டுக்கோப்பிலிருந்து பிரித்தெடுக்க முடியாத நிலையில் அமைந்துள்ளது. ஆய்ச்சியர் குரவையை எடுத்து விட்டால் காப்பியம் மேலே தொடரமுடியாது. இவ்வளவு முக்கிய மான ஆய்ச்சியர் குரவையில் பெருமளவிற்குக் கண்ணனும் ஒரளவிற்கு இராமனும் இந்த இரண்டு அவதாரங்களுக்கும் மூலமான ரீமன் நாராயணனும் புகழப்படுகின்றனர். -

திருவாயுஞ் செய்ய

கரியவனைக் காணாத கண்னென்ன கண்ணே

கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்னே’ (ஆய்ச்சியர் குரவை 36)

“சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே

திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே’ (ஆய்ச்சியர் குரவை 35)

'நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே

நாராயணா என்னா நாவென்ன நாவே' (ஆய்ச்சியர் குரவை 37)

இத்துனை அழுத்தமாக நாராயணன் புகழைக் கூறியதால் இவரை வைணவர் என்று கூறிவிடலாமா? இவை பாத்திரங் களின் பேச்சு என்பதை மறந்துவிடலாகாது. ஆய்ச்சியர்களின் தெய்வம் கண்ணன். இங்கு பாடுபவர்களும் ஆய்ச்சியர் தாம். எனவே இங்கு அழுத்தமாகத் திருமால் பெருமை பேசப்படுகிறது. பாத்திரங்களின் உரையாடலை வைத்துக் கொண்டு இதுதான் நூலாசிரியனின் உள்ளக்கிடக்கை என்று கூறுவது பொருத்தமற்ற தாகும். ஒருவேளை ஆய்ச்சியர் குரவையே நூலின் வளர்ச்சிக்குத் தேவையில்லாமல் இருந்து எப்படியாவது இதை நூலினுள் இடம்பெறச் செய்யவேண்டும் என்று ஆசிரியர் பாடியிருப் பாரேல் இவ்வாறு எண்ணுவதில் தவறே இல்லை. நூலின் பிற உறுப்புக்களோடு தொடர்புடையதாய், பிரிக்க முடியாததாய் (Integral part)  உள்ள பகுதி ஆய்ச்சியர் குரவை, எனவே இத்தகைய ஒரு பகுதியைப் பாட வருகின்ற ஆசிரியர் அதில் தம் கருத்திற்கு இடந்தந்தார் என்று கூறுவது பொருத்தமற்றதாகும்.

மூன்றாவதாக உள்ள குன்றக்குரவை வஞ்சிக் காண்டத்தில் இடம் பெற்றுள்ளது. இது மலைவாழ் மக்கள் தங்கள் குல தெய்வமாகிய முருகனைப் போற்றும் பகுதியாகும். தெய்வம் பராஅயது என்ற பகுதியில் முருகன் புகழ் விரிவாகப் பேசப்படுகிறது. இந்தக் காதையின் முற்பகுதியில் வரும் உரைப்பாட்டு மடையில் குறவர்கள் கண்ணகியைக் கண்ட நிகழ்ச்சியும், அவளையார் என்று கேட்டதும், அவள்மதுரை அழித்த செய்தியும், தான் இங்கு வந்த நிலையும் கூறியதாக உள்ள பகுதி இடம்பெறுகிறது.

எனவே குன்றக்குரவையும் ஆய்ச்சியர் குரவை போல, காப்பிய வளர்ச்சிக்கும் கட்டுப்கோப்புக்கும் உறுதுணையாக நிற்றலின் இப்பகுதியையும் காப்பியத்தில் இருந்து எடுத்துவிட முடியாது. அப்படிப்பட்ட ஒரு பகுதியில் குறவர்கள் முருகனைப் போற்றினார்கள் என்று சொல்ல வரும்பொழுது எவ்வாறு போற்றினார்கள் என்று பாடுகிறார் ஆசிரியர் என்வே இதில் அவருடய சொந்த விருப்பைப் பாடினார் என்று கூறுதல் பொருத்த முடையதாகாது. இவ்விரண்டு பகுதியிலும் காப்பிய மாந்தர்கள் தத்தம் மரபிற்கேற்ற முறையில் தத்தம் வழிபடு தெய்வங்களைப் பாடுகிறார்கள் ஆதலின் இதில் ஆசிரியருடைய பங்கு எதுவு மில்லை. அதே நேரத்தில் தேவையில்லாமல் ஆசிரியர் இப் பகுதியைப் புகுத்தி உள்ளாரா என்ற வினாத் தோன்றினால் உறுதியாக இல்லையென்ற விடைதான் கிடைக்கும். இவை பிரண்டிற்கும் எதிராக வேட்டுவ வரி என்ற பகுதி அமைந் துள்ளதைக் காணலாம். கண்ணகி, கவுந்தியடிகள் என்ற இருவரையும் அழைத்துக் கொண்டு காட்டுவழி வந்த கோவலன் கதிரவனுடைய சிற்றம் தாங்கமுடியாமல் கண்ணகி நொந்து போவதைக் கண்டு வழியிலுள்ள ஐயைக் கோட்டம் என்ற கோயிலின் ஒரு பக்கமாக நிழலுக்கு ஒதுங்கினான் என்று காதை தொடங்குகிறது. வெயில் தணிகின்ற வரை தங்குவதற்கு நிழல் தரும் ஜயைக் கோட்டத்தை அடைந்தனரே தவிர வேறு கருத்து ஒன்றுமில்லை. இதற்கு அடுத்தபடியாக வரும் புறஞ்சேரியிறுத்த காதையில் பகல் பயணத்தைவிட்டு அச்சம் இல்லாமல் பாண்டிய நாட்டில் இரவுப் பயணம் செய்யலாம் என்று காவுந்தியடிகள் கூறுகிறார். இவ்விரண்டையும் நோக்கும் இடத்து வேட்டுவ வரி என்ற பகுதி காப்பிய வளர்ச்சிக்கோ கட்டுக்கோப்புக்கோ ஒரு சிறிதும் உதவவில்லை என்பதையறிய முடிகிறது. வெயில் கொடுமைக்காக ஐயைக் கோட்டத்தில் தங்கி இருந்தபொழுது இன்று முதல் இரவுப் பயணம் செய்யலாம் என்று கவுந்தியடிகள் கூறுகிறார். அதையேற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள் என்றால் அவர்கள் தங்கியிருக்கின்ற பொழுது ஏதோ ஒரு நிகழ்ச்சி இடைப்பிறவரலாகவே உள்ளது என்பதை எளிதாக அறி முடியும். வேட்டுவ வரியை எடுத்துவிட்டால் காப்பிய வளர்ச்சி எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

அவ்வாறானால் வேட்டுவ வரியில் உரைப்பாட்டு மடையில் 74 அடிகளும், வேடுவர் வாழ்க்கை கூறும் முகமாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகொண்ட 24 பாடல்களும் இடம்பெற வேண்டிய அவசியம் என்ன? இந்த வினாவிற்கு எளிதாக விடை கூற முடியாது.

காப்பிய வளர்ச்சிக்கு ஒரு சிறிதும் உதவவில்லை என்று தெரிந்திருந்தும் இப்பகுதியை ஆசிரியர் பாடியுள்ளார் என்றால் அவருடைய மனத்தில் ஆழமான வேறோர் கருத்து இருந் திருக்க வேண்டும்.

உரைப்பாட்டுமடையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சி நம் மனத்திற்கொண்டு வரவேண்டும். கோவலன், கண்ணகி கவுந்தியடிகள் ஆகிய மூவரும் கோயிலின் ஒரு புறத்தில் நிழலுக் காகத் தங்கியிருக்கின்றனர். மற்றொரு புறத்தில் வேடுவர்கள் வந்து தங்கி தம் கூட்டத்துள் ஒருத்திக்குக் கொற்றவை வேடம் அணிவிக்கின்றனர் வேடம் அணியப்பெற்ற பெண் உடனே தெய்வம் உற்றவளாய்க் கண்ணகியைப் பார்த்து பின்வருமாறு பேசினாள். -

இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி

தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து

ஒருமா மணியா யுலகிற் கோங்கிய திருமா

மணியெனத் தெய்வமுற் றுரைப்பட்  (வேட்டுவ வரி 47-50)

சாதாரண சாலினியாக இருப்பின் கண்ணகியை யாரென்று அறியவோ கற்புக்கடம் பூண்ட தெய்வம் என்றோ அறிந்திருக்க முடியாது. கவுந்தியடிகள்கூட சில நாட்கள் கண்ணகியிடம் பழகிய பிறகே கற்புக்கடம் பூண்ட தெய்வம் என்றும் வண்ணச் சீறடி, மண்மகள் அறிந்திலள் என்றும் பேசுகிறார். ஆனால் இடங்கை வலங்கை வேறுபாடு அறியாத சாலிணி இவளோ கொங்கச் செல்வி என்று எப்படித் தொடங்கி இருக்க முடியும்? எனவேதான் ஆசிரியர் தெய்வம் உற்று உரைப்பு என்று முடிக் கிறார். இவ்வாறு கூறுவதில் ஒரு துண்மையான கருத்தைப் பெற வைக்கிறார் ஆசிரியர் தெய்வம் உற்ற நிலையில் கண்ணகியின் எதிர்காலம் தெரிகிறது. அயல் அறியாமல் வாழ்ந்த இப்பெருமாட்டி உலகத்திற்கு ஒரு மணி என்று அனைவராலும் போற்றப்படும் நிலையை அடையப் போகிறாள் என்ற குறிப்பும் இதனால் பெறப்படுகிறது.

இதுவரை கூறியதோடு நிறுத்தியிருந்தால் கவுந்தியடி களைப் போன்ற ஒரு துறவி மட்டும் அல்லாமல் தெய்வங்கூட உயர்த்திப் பேசுகிறது என்று அமைதி கொள்ளலாம்.

இதனையடுத்து வேடுவர்கள் கொற்றவையைப் பரவு கிறார்கள் என்ற கருத்தில் வரும் செய்திகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. வரிப்பாடல்கள் இளங்கோவடிகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நாட்டில் வழங்கி வந்தன. அவற்றை ஓரளவு மாற்றி அடிகள் பயன்படுத்திக் கொண்டார் என்ற கருத்தும் தமிழகத்தில் நிலவுகிறது. அதை ஏற்றுக் கொள்வதானால் கூட நம்முடைய ஐயம் தெளிந்த பாடில்லை. காப்பியக்கட்டுக் கோப்புக்கும் காப்பிய வளர்ச்சிக்கும் ஆய்ச்சியர் குரவை போன்றோ குன்றக் குரவை போன்றோ வேட்டுவ வரி ஒரு சிறிதும் உதவவில்லை என்பதை முன்னரும் குறிப்பிட்டோம். அத்தகைய வேட்டுவ வரியில் கொற்றவையைப் புகழ்வதற்கு ஆய்ச்சியர் குரவை போன்று கர்ண பரம்பரைக் கதைகளைப் பயன்படுத்துவதோடு அடிகள் நிற்கவில்லை, ஆய்ச்சியர் குரவையில் காணப்படுவது போல பொதுப்படையாகக் கொற்றவையின் புகழ்ச்சி பேசப்படுவதோடு அல்லாமல் தனிப்பட்ட சொற்களால் அவள் புகழ் பேசப்படுகிறது. தொடர்ந்து வரும் கொற்றவை புகழ்பாடும் இச்சொற்றொடர்களைப் படிக்கும் பொழுது இவற்றை வேறெங்கோ படித்த நினைவு மனத்தில் தோன்றுகிறது. நின்று நிதானித்தால் தேவி பாகவதத்தில் காணப்படும் லலிதா சகஸ்ர நாமங்களில் வரும் பல மந்திரங் களை மொழிபெயர்த்தது போன்று இவை இருப்பதைக் கான லாம். இத்தகைய புகழ்த் தொடர்கள் தமிழிலேயே இருந்திருக்கக் கூடாதா என்ற வினா தோன்றுதல் இயல்பு அதை மறுக்கும் முறையில் பலபல மந்திரங்கள் உண்மையிலேயே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதை நடுநிலையோடு இவற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். -

இனி வேட்டுவ வரியின் உரைப்பாட்டு மடை தொடங்கி இறுதி வரையுள்ள பாடல்களில் வரிசையாகக் காணப் பெறும் புகழ்த் தொடர்களை அடியில் தந்துள்ளோம். அவை லலிதையின் எத்தனையாவது மந்திரத்தின் தமிழாக்கம் என்பதையும் குறித் துள்ளோம். இவற்றை ஆழ்ந்து பார்த்த பிறகு இவற்றிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு மேலும் சில முடிவுகளை எட்டலாம். .

page30-734px-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99

மஹாமஹோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு)

சிலப்பதிகாரம்-12. வேட்டுவ வரி - பாடல்கள்

(லலிதா ஹைஸ்ரநாம ஸ்தோத்திரத்துடன் ஒத்த பகுதி)

மதியின் வெண்தோடு சூடும் சென்னி 54

"சாரு சந்திர கலா தரா லஸ்ஹ. 243

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டம் 55

"த்ரிநயனா” ல. ஸஹ. 453 ல.ஸஹ. 477

த்ரிலோசநா ,

பவள வாய்ச்சி (56)

“நவவித்ரும பிம்ப ரீ ந்யக்காரி

தசனச்சதா” ഓ.സഇ.

24 தவளவாள் நகைச்சி (56)

“தரஸ்மேர முகாம்புஜா” ல.ஸ்ஹ 924 "சாருஹாஸா' ல. ஸஹ. 242 “தரஹாலோஜ்வலந்முகீ” , ல.ஸஹ 602. நஞ்சு உண்டு கறுத்த கண்டி 57 “காலகண்டி” ல. ஸஹ. 464 வளையுடைக் கையில் சூலம் ஏந்தி, 60; சூலி - 68 “சூலாத்யாயுத ஸம்பந்நா” ல.ஸஹ. 506 (அரியின் உரிவை) மேகலையாட்டி 62 “(ரணத் கிங்கிணி) மேகலா - ல.ஸஹ 312

சிலம்பும் (கழலும்) புலம்பும் சீறடி 63

சிஞ்ஜான மணி மஞ்ஜீர

மண்டித யூரீ பாதம்புஜா" ல.ஸஹ. 46

(வலம்படு கொற்றத்து வாய்வாள்) கொற்றவை

64 துர்கா - ல.ஸஹ. 190



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

page31-734px-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99

(மஹாமஹோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு) சிலப்பதிகாரம்- 12. வேட்டுவ வரி - பாடல்கள் (லலிதா ஹைஸ்ரநாம ஸ்தோத்திரத்துடன் ஒத்த பகுதி) மதியின் வெண்தோடு சூடும் சென்னி 54 "சாரு சந்திர கலா தரா” ல.ஸஹ. 243 நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டம் 55 "த்ரிநயனா” ல. ஸஹ. 453 ல. ஸஹ. 477 த்ரிலோசநா , பவள வாய்ச்சி (56) “நவவித்ரும பிம்ப ரீ ந்யக்காரி தசனச்சதா” ல.ஸ்ஹ. 24 தவளவாள் நகைச்சி (56) “தரஸ்மேர முகாம்புஜா” ல.ஸஹ 924 "சாருஹாஸா' ல. ஸஹ. 242 “தரஹாலோஜ்வலந்முக்” , ல.ஸஹ 602. நஞ்சு உண்டு கறுத்த கண்டி 57 “காலகண்டி” ல. ஸஹ. 464 வளையுடைக் கையில் சூலம் ஏந்தி, 60; சூலி - 68 “சூலாத்யாயுத ஸம்பந்நா” ல.ஸ்ஹ. 506 (அரியின் உரிவை) மேகலையாட்டி 62 "(ரணத் கிங்கிணி) மேகலா - ல.ஸஹ 312 சிலம்பும் (கழலும்) புலம்பும் சீறடி 63 சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித யூரீ பாதம்புஜா” ல.ஸஹ. 46 (வலம்படு கொற்றத்து வாய்வாள்) கொற்றவை 64 துர்கா - ல.ஸஹ. 190

page32-734px-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99 

இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் தலைமிசை நின்ற தையல் 65-66 துர்கா - ல.ஸஹ. 190 சண்டிகா , 755 - பலர் தொழும் அமரி 67 தேவர்ஷிகன ஸங்காத ஸ்து யமானாத்ம வைபவா' ல.ஸஹ. 64 குமரி - 67 “தருணி സെ.സു. 358 கவுரி 67 G៩៣f – ல.ஸஹ 635 &Lsff 67 'தைத்ய ஹந்த்ரீ” ல.ஸஹ. 599 மாலவற்கு இளங்கிளை - 68, திருமாற்கு இளையாள் 4-4. ‘பத்மநாப ஸ்ஹோதரீ” സെ.ണു. 280 ஐயை 69 (சயமகள்) ஜயா - ல.ஸஹ. 377 செய்யவள் (69) (திருமகள் எனில்) 'மஹாலக்ஷ்மீ ல.ஸ்ஹ. 210 (சிவந்த நிறம் உடையவள் எனில்) 'ஸர்வாருணா ഓ.സഇ. 49 ஆரக்தவர்ணா , 476 — ரக்தவர்ணா , 499 – பாய்கலைப் பாவை 70 செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால் 10-2 பூரீமத் ஸிம்ஹாஸ்னேச்வரீ ல.ளலஹ. 3

page33-734px-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99

பைந்தொடிப் பாவை 70 கனகாங்கத கேயூர கமணிய புஜான்விதா' ல.ஸ்ஹ. 31 ஆய்கலைப்பாவை 70 'கலாத்மிகா - ல.ஸஹ. 611 அருங்கலப்பாவை 70 (அணிகலன் எனில்) 'ஸர்வாபரண பூவிதா' സെ.സു. 51 (படைக்கலன் எனில்) ‘சக்ரராஜ ரதாருட் ஸர்வாயுத பரி க்ருதா ல.ஸ்ஹ. 68 கண்ணுதல் பாகம் ஆளுடையாள் 2-4 கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் நிற்பாய் 10-3 பூரீ கண்டார்த்த சரீரிணி - ல.ஸஹ. 392 காந்தார்த்த விக்ரஹா , 861 திங்கள் வாழ் சடையாள் 3-4 "சாரு சந்த்ர கலா தர - ல.ஸஹ. 243 வானோர் வணங்க நிற்பாய் 8-3 ‘தேவேசீ ல. ஸஹ. 607 மறைமேல் மறையாகி நிற்பாய் ல.ஸஹ. 8-3 மறை ஏத்தவே நிற்பாய் 10-4 ஞானக் கொழுந்து 8-4 ஜ்ஞான விக்ரஹா - ல.ஸஹ. 644 அரி அரன் பூமேலோன் அகமலர்மேல் - நிற்பாய் 9-3 பஞ்சப்ரேதாஸ்னாஸினா ல.ஸஹ. 249 பஞ்சப் ப்ரேத மஞ்சாதிசாயினி - , 947



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 page32-734px-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99

இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் தலைமிசை நின்ற தையல் 65-66 துர்கா - ல.ஸஹ. 190 சண்டிகா , 755 - பலர் தொழும் அமரி 67 தேவர்ஷிகன ஸங்காத ஸ்து யமானாத்ம வைபவா' ல.ஸஹ. 64 குமரி - 67 “தருணி സെ.സു. 358 கவுரி 67 G៩៣f – ல.ஸஹ 635 &Lsff 67 'தைத்ய ஹந்த்ரீ” ல.ஸஹ. 599 மாலவற்கு இளங்கிளை - 68, திருமாற்கு இளையாள் 4-4. ‘பத்மநாப ஸ்ஹோதரீ” സെ.ണു. 280 ஐயை 69 (சயமகள்) ஜயா - ல.ஸஹ. 377 செய்யவள் (69) (திருமகள் எனில்) 'மஹாலக்ஷ்மீ ல.ஸ்ஹ. 210 (சிவந்த நிறம் உடையவள் எனில்) 'ஸர்வாருணா ഓ.സഇ. 49 ஆரக்தவர்ணா , 476 — ரக்தவர்ணா , 499 – பாய்கலைப் பாவை 70 செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால் 10-2 பூரீமத் ஸிம்ஹாஸ்னேச்வரீ ல.ளலஹ. 3

page33-734px-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99

பைந்தொடிப் பாவை 70 கனகாங்கத கேயூர கமணிய புஜான்விதா' ல.ஸ்ஹ. 31 ஆய்கலைப்பாவை 70 'கலாத்மிகா - ல.ஸஹ. 611 அருங்கலப்பாவை 70 (அணிகலன் எனில்) 'ஸர்வாபரண பூவிதா' സെ.സു. 51 (படைக்கலன் எனில்) ‘சக்ரராஜ ரதாருட் ஸர்வாயுத பரி க்ருதா ல.ஸ்ஹ. 68 கண்ணுதல் பாகம் ஆளுடையாள் 2-4 கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் நிற்பாய் 10-3 பூரீ கண்டார்த்த சரீரிணி - ல.ஸஹ. 392 காந்தார்த்த விக்ரஹா , 861 திங்கள் வாழ் சடையாள் 3-4 "சாரு சந்த்ர கலா தர - ல.ஸஹ. 243 வானோர் வணங்க நிற்பாய் 8-3 ‘தேவேசீ ல. ஸஹ. 607 மறைமேல் மறையாகி நிற்பாய் ல.ஸஹ. 8-3 மறை ஏத்தவே நிற்பாய் 10-4 ஞானக் கொழுந்து 8-4 ஜ்ஞான விக்ரஹா - ல.ஸஹ. 644 அரி அரன் பூமேலோன் அகமலர்மேல் - நிற்பாய் 9-3 பஞ்சப்ரேதாஸ்னாஸினா ல.ஸஹ. 249 பஞ்சப் ப்ரேத மஞ்சாதிசாயினி - , 947

page34-734px-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99  

26. விரிகதிரஞ்சோதி விளக்காகியே நிற்பாய் 9-4 'உத்யத்பானு ஸஹஸ்ராபா - ல.ஸஹ. 6 28. மணி உருவினை 19-2. 'பத்மராக ஸ்மப்ரபா സെ.ണ്ഡണ്ണ, 248 29. சங்கரி - 21-3 சாங்கரி - ல.ஸஹ. 126 30. அந்தரி - 21-3 'பராகாசா - ல.ஸ்ஹ. 782 31. நீலி - 21-3 (துர்கா ச.ஸ். 190. அம்பாள் பஞ்சபூத சொரூபமாதலால் அதன் கலவையாகிய கடல் வான் போல நீ



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

இலக்கணங்களையும் பெற்றவளாகவும் சிவபெருமானின் இடப்பக்கம் உறைபவளாகவும் பேசப்படுகிறாள். சங்கப் பாடல்களிலிருந்து கொற்றவை பெற்ற வளர்ச்சியைச் சிலம்பில் கான முடிகிறது. மதுராபதித் தெய்வம் என்று அடிகள் கூறும் தெய்வமும் உமையொரு பாக வடிவத்தையே வருணிப்பதாக உள்ளது. மதுராபதித் தெய்வம் என்று கூறியவுடன் ஊர்க்காவல் செய்யும் சிறு தெய்வம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே அடிகள் அவ்வளவு விரிவாக வருணனை பேசுகிறார். கட்டுரைக் காதையில் முதல் அடிமுதல் 13 ஆம் அடி வரைஉள்ள பகுதிகளிலும் விளக்கமாகப் பேசப்பெறும் மதுராபதித் தெய்வ வருனனை சிந்தனைக்குரியது. இறைவியின் தொன் மைக் கோலத்தின் முழு வருனனையாகும் இது, மேலும்

கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்

பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்

குலமுதற் கிழத்தி ஆதலின் (கட்டுரை காதை 11 -13)

என்ற அடி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். பாண்டியர்கள் தம்மைச் சந்திர குலத்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மரபு பிற்காலத்தில் தோன்றிவிட்டது. ஆனால் தடாதகைப் பிராட்டி என்ற பெயருடன் பாண்டியனுக்கு மகளாகப் பிறந்து பின்னர் அவளே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்று திருவிளையாடற் புராணம் கூறுதலின் இக்கதை மிகப் பழமை யானதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தடாதகைப் பிராட்டி சொக்கப் பெருமானை மணந்து உக்கிரகுமார பாண்டியன் என்னும் மகனையும் பெற்று பாண்டியர் குல முதல்வி யாக விளங்கினாள் என்றும் திருவிளையாடற் கதைகளின் முன்னோடியாக அமைந்துள்ளது பொதியில் பொருப்பன் குலமுதற் கிழத்தி ஆதலின்' என்ற தொடர் எனவே மதுராபதித் தெய்வம் என்று அடிகள் குறிப்பிடுவது அங்கயற்கண் அம்மையையே என்பது தெளிவாகும்.

மதுராபதித் தெய்வம் (அங்கற்கண்ணி), வேட்டுவ வரியில் வரும் கொற்றவை என்ற இருவரையும் பற்றி வரும் வருணனை ஒன்றாகவே இருத்தலின் உமாதேவியையே அடிகள் குறிக் கின்றார் என்பது தெளிவாகும். அப்படியானால் வேட்டுவ வரியில் வரும் கொற்றவைக்குச் சாத்தப் பெறும் புகழ் மாலைகள் லலிதா சஹஸ்ரத்தின் மொழியாக்கமாய் அமைந்திருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

மேலே காட்டப்பெற்றுள்ள கொற்றவையைப் பரவும் 38 தொடர்களில் சில சிந்திக்கத் தக்கவை. இரண்டு மூன்று இடங் களில் காணப்படும் பாய்கலைப் பாவை என்பது தமிழகத்தில் தோன்றி வளர்ந்த கருத்தாகும். தமிழகத்துக் கொற்றவையை லலிதையில் வரும் உமையுடன், இணைத்து ஒருவராகக் காணும் நிலை ஏற்பட்டவுடன் சில புதுமைகள் தோன்றலாயின. பாய்கலைப் பாவை கலைமானின் மேல் ஊர்பவள் என்ற கருத்து லலிதையில் இல்லை. அதேபோல இரண்டு வேறுருவில் என்று தொடங்கும் ஒன்பதாவது சிலம்புக்குறிப்பும் கானத் தெருமை என்று தொடங்கும் 26 ஆவது சிலம்புக் குறிப்பும் லலிதையில் இல்லை, இவை இரண்டும் மகிடாசுர வதத்தைக் குறிக்கும். என்ன காரணத்தாலோ இக்கதை லலிதையில் இடம்பெறவில்லை. இதன் எதிராக லலிதையில் இடம்பெறும் பண்டாசுரவதம் தமிழகத்தில் இடம்பெறவில்லை. அதே போன்று கலைமா ஊர்பவள் என்பது லலிதையில் இடம் பெறவில்லை. என்றாலும் ஆண்சிங்கத்தை வாகனமாகவுடையவள் என்ற லலிதையின் மூன்றாவது மந்திரம் அடிகளால் செங்கண் அரிமான் சினவிடை மேல் நின்றாய் என்று தமிழாக்கம் செய்யப்பெற்று இங்கே பயன்படுத்தப்படுகிறது.

லலிதையில் காணப்பெறும் இத்தனை மந்திரங்கள் அடி களால் தமிழாக்கம் செய்யப்பெற்றுக் கொற்றவைப் பராவலில் இடம் பெறுகிறது என்றால் இதற்கொரு தனியான காரணம் இருத்தல் வேண்டும். 

இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தில் வேத வழக்கொடுபட்ட வைதீக சமயம், சிவ வழிபாட்டை அடிப்படை பாகக் கொண்ட சைவ சமயம், திருமால் வழிபாட்டை அடிப் படையாகக் கொண்ட வைணவ சமயம், சக்தி வழிபாட்டை அடிப் படையாகக் கொண்ட சாக்தம், சமணம், பெளத்தம் என்பவை தம்முள் மாறுபாடு கொண்டு கலகத்தில் நுழையாமல் சகிப்புத் தன்மையோடு இனங்கி வளர்ந்தன என்பதையறிய முடிகிறது. அதனால்தான் புத்தம் தவிர ஏனைய சமயங்கள் அனைத்தையும் போற்றிப் புகழும் முறையில் அடிகள் காப்பியஞ் செய்துள்ளார்.

என்றாலும் அவருடைய மனத்தைப் பற்றிக் கொண்ட சமயம் சக்தி வழிபாடோ என்று நினைக்கப் பல காரணங்கள் உள்ளன. இன்றியமையாக் காப்பியக் கூறாக உள்ள ஆய்ச்சியர் குரவை குன்றக் குரவை போல் அல்லாமல் வேட்டுவ வரி தனித்து நிற் கின்றது. காப்பிய அமைப்பில், கட்டுக்கோப்பில் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் வேட்டுவ வரிநிற்கிறது என்பதை முன்னரே கண்டோம். அப்படியானால் இதனைப் புகுத்துவதற்கு அடி களுக்கு என்ன தேவை ஏற்பட்டது? எப்படி ஆராய்ந்தாலும் இதற்கு ஒரு தக்க காரணத்தைக் காண முடியவில்லை. தம் மனத்தை ஈர்த்த சக்தி வழிபாட்டிற்கும் சக்தியின் புகழ்பேசும் மந்திரங்கட்கும் இடந்தர வேட்டுவ வரியைப் புகுத்தினார் என்று நினைக்கத் தோன்றுகிறது. சைவர்களும் வைணவர்களும் ஏற்றுக் கொள்ள முடியாத சில பகுதிகள் லலிதாசகஸ்ரத்தில் உண்டு. சைவர்களுக்குப் பரமேசுவரனும் வைணவர்களுக்கு பூரீமன் நாராயணனும் தனி முதலாக எண்ணப்படுவர். இதன் எதிராக பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், சதாசிவன், மகேசுவரன் ஆகிய ஜவரையும் பிரேதங்களாக ஆக்கி அவற்றின் மேல் அமர்பவள் என்ற 249 ஆவது மந்திரமும் ஐந்து பிரம்ம சொருபங் களான ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்தின் வடிவாகவும் இருப்பவள் என்றும் கூறும் சாக்த சமயத்தை, சைவரும் வைணவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த அளவு செல்லா விடினும் அடிகள் அரி, அரன், பூ மேலோன் அகமலர் மேல் நின்றாய் என்று கூறுவது மேலே சொல்லிய மந்திரத்திற்கு ஒரு படி கீழே நிற்பதாகும். இம்மூவருக்கும் தொழிற்படுவதற்கு சக்தியின் உதவி தேவை. எனவேதான் அகமலர்மேல் நின்றாயால் என்று அடிகள் பாடுகிறார்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தாய்த்தெய்வ வழிபாடு மிகப் பழமையான ஒன்று. சிவ வழிபாடு எவ்வளவு தொன்மை யானதோ அவ்வளவு தொன்மையானது தாய்த் தெய்வ வழி பாடு, அதுவே கொற்றவை வழிபாடாக வளர்ந்து தமிழகத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் வங்காளத்திலிருந்து வந்த சக்தி வழிபாடு அதனுடன் இணையலாயிற்று, அந்த இணைந்த நிலையில் தான் பாய்கலைப் பாவையை சிம்ம ஆசன ஈஸ்வரி யாகவும் செங்கண் அரிமான் சினவிடை மேல் நின்றவளாகவும் அடிகள் காண்கிறார். அன்றியும் மதுராபதித் தெய்வம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட உமை ஒரு பாகம் வடிவு கொண்ட தேவியைக் கொற்றவையாகவும் நீலகண்டியாகவும் ஒருங் கினைத்துக் காணமுற்படுகிறார். வங்காளத்தில் வளர்ந்த சாக்தத்தைத் தமிழகத்துச் சங்க காலத்துக் கொற்றவையோடு இணைத்து அதற்கு அங்கயற்கண்ணி என்ற புது வடிவையும் தந்தது இளங்கோவின் பெரிய சாதனையாகும். அடிகளாரின் அக மனத்தில் முகிழ்த்து எழுந்த சக்தி வழிபாட்டுக்கு மிகச் சிறந்த முறையில் சிலம்பில் இடம் தந்தது அவருடைய தனிச் சிறப்பாகும்.

 

மேலே காட்டப்பெற்ற மந்திரங்கள் அனைத்தும் லலிதா சகஸ்ரத்தில் காணப்பெறும் மந்திரங்கள் என்றும் அவற்றை அடிகள் தாராளமாக எடுத்துப் பயன்படுத்துகிறார் என்றும் கண்டோம். கொற்றவைப் பராவல் என்பது அங்கயற்கண்ணி அம்மையையே என்பதையும் ஊகித்து உணர முடிகிறது. இவற் றோடு நில்லாமல் காப்பியத்தின் தொடக்கத்திலேயே அடிகள் மங்கல வாழ்த்து என்னும் பெயரில் மூன்று பாடல்களைப் பாடு கிறார். அவற்றுள் முதல் இரண்டு பாடல்களும் முறையே திங் களைப் போற்றுதும் என்றும் ஞாயிறு போற்றுதும் என்றும் தொடங்குகின்றன. சிலம்பிற்குப்பிற்பட்டுத் தோன்றிய அனைத்து நூல்களும் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் ஏற்புடைக் கடவுளையோ அன்றி நூலாசிரியரின் வழிபடு கடவுளையோ வணங்கித் தொடங்குவதைக் காணலாம். சிலம்பிற்கு முற்பட்ட காப்பிய நூல் ஏதேனும் இருந்ததா என்பதை அறிந்து கொள்ள இன்று வாய்ப்பில்லை. ஆனால் சிலம்பு போன்ற ஈடுஇணையற்ற ஒர் இலக்கிய காப்பியம் (Literary Epic) இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிற்று என்றால் பல காப்பியங்கள் இதற்கு முன்ன்ர்த் தோன்றி வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.

சங்கப் பாடல்கள் என்ற பெயருடன் இன்று காணப் பெறும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகையுள் எல்லா நூல்களும் கடவுள் வாழ்த்தைப் பெற்றுத் திகழ்கின்றன. எட்டுத்தொகை என்பது உதிரிப்பாடல்களின் தொகுப்புக்களாகும் என்றாலும் அவற்றிற்குக் கூட கடவுள் வாழ்த்து என்பது இன்றியமையாதது என்று கருதிய பெருந்தேவனார் போன்ற புலவர்கள் இத்தொகுப்பிற்குக் கூட கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த் துள்ளனர். பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சமணக் காப்பிய மானசிந்தாமணியும் அதற்குச் சற்று முன்போபின்போ தோன்றிய சூளாமணியும் அருக தேவனை வாழ்த்தி நூலைத் தொடங்கும் மரபினை மேற்கொண்டுள்ளன. இவற்றையல்லாத பிற காப் பியங்கள் அனைத்தும் கடவுள் வாழ்த்தோடுதான் தொடங்கு கின்றன. பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளுங்கூட கடவுள் வாழ்த்து என்ற ஒரு முழு அதிகாரத்தையே பாடிச் செல்கிறது. அப்படியிருக்க சிலப்பதிகாரம் மட்டும் மங்கல வாழ்த்து என்ற பெயரில் திங்களையும் கதிரவனையும் போற்றிப்பாடுகிறது. தமிழ்மொழியில் மட்டுமல்லாமல் உலகிலுள்ள வேறு எந்த மொழியில் தோன்றிய காப்பியமாயினும் கடவுளையோ அன்றி ஒரு தெய்வத்தையோ போற்றி வணங்கிவிட்டு நூலைத் தொடங்குவதைக் காணலாம். மில்டனுடைய சொர்க்க நீக்கம்’ கவிதா தெய்வத்தைப் போற்றிவிட்டு நூலைத் தொடங்குகிறது. வேறு எந்த மொழியிலும் திங்களையும் கதிரவனையும் போற்றித் தொடங்கும் நூலைக் காண முடியவில்லை. மிகச் சிறந்த முறையில் சிலம்பிற்கு உரை வகுத்த அடியார்க்கு நல்லார் கூட இப் புதுமையைக் கண்டதாகத் தெரியவில்லை. வேறு யாரும் எந்த நூலும் பாடாத முறையில் திங்களையும் ஞாயிற்றையும் போற்றி நூல் தொடங்கப்படுகிறது என்றால் அது ஏன் என்ற வினாவைத் தொடுப்பதில் தவறில்லை. இதற்குரிய உண்மையான காரணம் எது என்று அறுதியிட்டுச் சொல்வது இவ்வளவு நீண்ட காலத் திற்குப் பிறகு அரியதாகும். என்றாலும் அடிகள் அம்பிகைக்குரிய மந்திரங்கள் பலவற்றை வேட்டுவ வரியில் குறிப்பிட்டுள்ளமையால் ஒரு வேளை இத்தொடக்கமும் அது பற்றி எழுந்ததோ என்ற ஐயம் தோன்றுகிறது. திங்களைப் போற்றுதும் என்ற அடி சந்த்ர மண்டல மத்திகா'240-ஆம் மந்திரத்தையும் ஞாயிறு போற்றுதும் என்பது பானு மண்டல மத்திஸ்தா என்பது 277 ஆவது மந்திரத்தின் தமிழாக்கமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஞாயிற்றுக்கு அவன் திகிரியை உவமையாகக் கூறினாரேனும் இந்த உவமைக்காகத் திங்களையும் ஞாயிற்றையும் போற்றி யுள்ளார் என்பது பொருத்தமற்ற கூற்றேயாகும். எவ்வாறு ஆராய்ந்தாலும் நூலின் தொடக்கத்தில் திங்களையும் ஞாயிற்றையும் போற்றுவது ஏன் என்பது புரியவில்லை. அப்படியா னால் மாமழை போற்றுதும் என்ற மூன்றாவது வாழ்த்து அம்பிகையைக் குறிப்பதாகுமா என்று கேட்பதில் பயனில்லை. கூறப்பட்ட அனைத்துமே அம்பிகையைக் குறிக்க வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. தம்முடைய கருத்தை வெட்ட வெளிச்சமாகத் தெரிவிக்காமல் உய்த்துனரும்படி பாடி இருப்பது இளங்கோவின் தனிச்சிறப்பிற்கு ஒரு காரணமாகும். இறுதியாக இளங்கோவடிகள் என்பவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பதும் அவர் தமக்கே அரசாள் உரிமை உண்டு என்று நிமித்திகன் கூறியதைப் பொய்ப்பிக்கும் முறையில் துறவு பூண்டார் என்பதும் இன்றுவரை நம்பப்பட்டு வரும் கதையாகும். குட்டுவன் என்ற பெயரில் பதிற்றுப்பத்தில் காணப்படும் கடல் பிறக்கோட்டிய செல்கெழுகுட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறு என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அவ்வாறாயின் வரந்தரு காதை குறிக்கும் செங்குட்டுவன் யார்? என்ற வினா தோன்றுகிறது. இந்த கதை முழுவதற்கும் ஆதாரமாக இருப்பது வரந்தரு காதையில் காணப்படும் கீழ்வரும் தொடர்களேயாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 வேள்விச்சாலையின் வேந்தன் போந்த பின்

யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து

தேவந் திகை மேற் றிகழ்ந்து தோன்றி

வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை

நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை

அரை சுவிற் றிருக்குந் திருப்பொறியுண்டென்று

உரை செய்தவன்மேல்உருத்து நோக்கிக்

கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்

செங்குட்டுவன்றன் செல்லல் நீங்கப் 

 பகல் செல் வாயிற்படியோர் தம்முன்

அகலிடப் பாரம் அகல நீக்கிச்

சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து

அந்தமில் இன்பத்து அரசாள் வேந்தென்று

என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி

தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி (வரந்தரு காதை 170-184)

மேலே கண்ட அடிகளின் பொருளை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். 'கண்ணகியை வழிபட்ட வேள்விச் சாலையிலிருந்து செங்குட்டுவன் முதலானோர் போன பின்னர் (170), நான் உள்ளே சென்றேன். என் முன்னர் (171) கண்ணகித் தெய்வம் அவளுடைய தோழியாகிய தேவந்திகை மேல் வந்து தோன்றிற்று (172), வஞ்சி மாநகரில் கொலு மண்டபத்தில் (173) தந்தையின் திருவடி நிழலில் இருந்த உன்னைப் பார்த்து (174) அரசனாகக் கூடிய விதி உனக்கு இருக்கிறது. (175) என்று. கூறியவனை (நிமித்திகனை) மிக்கக் கோபத்துடன் பார்த்து (175) மனம் நிறைந்த மலர் மாலையணிந்தவனும் கொடியோடு கூடிய தேர்ப் படை உடையவனும் (177) ஆகிய செங்குட்டு வனுடைய மனத்துயரம் நீங்கும் படியாக (178) குணவாயிற் கோட்டத்துச் சென்று அத் தெய்வத்தின்முன் (179) இந்த பூமியையாளும் செல்வத்தை அறவே துறந்து (180) வாக்கு மனம் கடந்து நிற்கின்ற (181) முடிவில்லாத இன்பமாகிய துறக்கத்தைப் பெற்ற வேந்தனே' என்று (182) எனது இறந்தகாலம் எதிர்காலம் என்ற இரண்டையும் கூறிய (183) நல்ல மொழி பேசும் தகைமை சார்ந்தவள் கண்ணகி (184). .

இன்று வழங்கப்படும் இளங்கோவின் வரலாற்றிற்கு மேலே கண்ட அடிகளே சான்றாகும். ஒப்பற்ற பெருங்காப்பியத்தை நாடக பாணி கலந்த காப்பியப் பாணியில் அமைத்த இளங்கோவடிகள் காப்பிய இலக்கணத்தை சிறிதும் வழுவாமல் வரந்தரு காதை வரை காப்பாற்றி வந்துள்ளார் என்பதை நன்கறியலாம். கோவலன் கொலை பற்றிய செய்தி கூறும் பகுதியில் காலப் பிரமாணம் அடிபடுகிறது என்பது உண்மைதான். ஆனால் கண்ணகியைக் காப்பாற்ற அவளைத் துறக்கத்திற்கு தயார் செய்ய வேண்டியே இத்தவற்றைச் செய்கிறார் இளங்கோவடிகள், இது தவிர காப்பிய இலக்கணத்திற்கு முரண்படும் எந்த ஒரு சிறு பகுதியும் சிலப்பதிகாரத்தில் இல்லை.

இவை எல்லாவற்றிற்கும் எதிராக எந்தக் காப்பியப் புலவனும் நாடக ஆசிரியனும் செய்யாத ஒரு பகுதி வரந்தரு காதையில் இடம் பெறுகிறது. எந்த ஒரு காப்பிய ஆசிரியனும், படர்க்கை நிலையில் பேசுவானே தவிர தன்மையாக (First person) நின்று பேசும் இடமே இராது. அப்படியே பேசுவதானால் பாத்திரங்களின் செயல் விளக்கமாக அது அமையுமே தவிர பன்னிரெண்டு வரிகளில் தன் வரலாற்றைத் தானே கூறிக் கொள்ளும் நிலை வேறு எந்தக் காப்பியத்திலும் இடம்பெறாத ஒன்றாகும், அதிலும் தான் செய்த மாபெரும் தியாகத்தை கண்ணகித் தெய்வம் தன்னிடமே கூறுவதாகப் பாடுவது முற்றிலும் அடாத செயலாகும். இளங்கோவைப் போன்ற ஒரு மாபெருங்கவிஞர் இதனைச் செய்தார் என்று கூறுவது அவர் பெயருக்கே இழுக்குச் சேர்ப்பதாகும். சேர நாட்டு வரலாற்றில் குணவாயிற் கோட்டத்தில் அரசு துறந்து இருந்தார் ஒர் இளவரசர் என்ற குறிப்பு எந்த தமிழ் இலக்கியத்திலும் இடம் பெறவில்லை. வஞ்சிக் காண்டத்தில் காணப்படும் செங்குட்டுவனின் வடபுல யாத்திரை வேறு எந்தத் தமிழ் இலக்கியத்திலும் இடம் பெற வில்லை. இதனை உண்மையென்று எடுத்துக் கொண்டாலும் வேண்டும். அம்முயற்சியின் பலனாகவே ஐம்பெருங்காப்பியம் என்ற ஆட்சி வந்திருக்க வேண்டும். சமண சமயத்திற்கு மூன்று நூல்கள் தேவைப்பட்டபொழுது சிலப்பதிகாரத்தை இத்தொகுப் பினுள் கொண்டு வரவேண்டும் என்ற முயற்சியில் பதிகம் பாடிய ஆசிரியர் போன்ற ஒருவர் இதனைச் செய்திருக்க வேண்டும். முன்பின் ஆராயாமல் தம் கருத்தை நிறைவேற்ற முயன்றதால் முயற்சி வெற்றியடையாமல் போய்விட்டது.

அது ஒரு புறம் இருக்க சிலப்பதிகாரத்தை, ஐயர் அவர்கள் வெளியிட்ட 1892 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இக்கதைகளை நம்பிக்கொண்டு அடிகளைச் சமணர் என்றும் சிலம்பைச் சமணக் காப்பியம் என்றும் நம்பியே பல ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட்டு வந்தன. இதற்கிடையில் என் மனத்திடைத் தோன்றிய சிலப்பதிகாரம் பற்றிய சில ஐயப்பாடுகள் சில வினாக்கள் ஆகியவற்றை எதிர்மறை உடன்பாடு ஆகிய முறை களில் பல நாட்கள் சிந்தித்ததன் பயனாக மேலே கூறப்பெற்ற முடிவுகளுக்கு வந்தேன். அவையனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை என்றோ, அவைதாம் உண்மை என்றோ நான் சொல்ல வரவில்லை. இப்புதிய சிந்தனைகளை ஒதுக்கிவிடாமல் அறிஞர்கள் காய்தல், உவத்தல் அகற்றி இதுபற்றி மேலும் சிந்திக்க வேண்டுகிறேன். இப்புதிய முடிபுகள் தவறானவை என்று கண்டால் அருள் கூர்ந்து எனக்கு அறிவிக்க வேண்டுகிறேன். நீண்ட காலமாக இருந்து வந்த ஒரு கருத்தை, பலரும் ஏற்றுக் கொண்ட ஒன்றை, மறுப்பது கடினம் என்பதை அறிவேன், என்றாலும் இப்புதிய சிந்தனைகளை தமிழகத்தில் உலவவிடு வதன் மூலம் அறிஞர்கள் மேலும் இது பற்றிச் சிந்திக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற கருத்தில்தான் இதனை வெளி யிடுகிறேன். -

இளங்கோ அடிகள் சமயம் எது? என்ற வினாவுக்கு வருவதற்கு முன்னர் இந்தச் சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலன் தலைவி கண்ணகி எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று சிந்திக்க வேண்டும். இதை நாம் ஆராய்வதால் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று முடிவு கட்டுவதாக நினைக்க வேண்டாம். அந்த வினாக்களுக்கு முடிவு கான முடியுமா என்று பார்ப்பதுதான் நமது நோக்கமே தவிர அவர்கள் இந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் அந்தச் சமயத்தைச் சேர்ந்த வர்கள் என முடிவு கட்ட நாம் தயாராக இல்லை. அவர்கள் சமன சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள், ஆனால் ஒரு புதுமை,

சமண சமயத்தில் இன்று வாழ்கின்ற பெருமக்கள் சிந்தா மனியை மணநூல் என்று சொல்லி பூசைக்குரியதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே தவிர சிலப்பதிகாரத்திற்கு அந்த மரியாதையை அவர்கள் தரவேயில்லை என்பதை மனத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே, இனி இளங்கோவடிகளால் பாடப்பெற்ற தலைவன், தலைவி இருவரும் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நூல் பேசுகிறது என்பதை நூல் வழி சிந்திக்க வேண்டும்.

நூலில் கோவலன் கண்ணகி திருமணத்தைப் பற்றிப் பேசுகின்றார் இளங்கோவடிகள்.

“மாமுது பார்ப்பான் மறைவழி

காட்டிடத் தீவலஞ் செய்வது

காண்பார்கண் நோன்பென்னை” (மங்கல வாழ்த்து 52-53)

என்பது மரபு வழி நடைபெற்ற திருமணம் என்பதை அறிவிக் கிறது.

“பொய்யும் வழுவும் தோன்றிய

பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (தொல். கற்பியல் 1091)

என்ற பழைய இலக்கணத்தை அடியொற்றி - மாமுது பார்ப்பான் - வயது முதிர்ந்த அந்தணன் மறைவழி காட்டிட - வேத நெறிப்படி திருமணத்தைச் செய்விக்க

தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை' என்கிறார். சப்தபதி செய்வதைச் சொல்கிறார். இம்மாதிரித் திருமணமுறை சமனப் பெருமக்களுக்கு என்றுமே இருந்த தில்லை. தீ வளர்த்துத் திருமணம் செய்வது கூட பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தான் சமணர்களுள் ஒரு சிலர் மேற்கொண்டிருக்கிறார்களே தவிர தீ வளர்த்து, அதனைச் சுற்றி வந்து திருமணம் செய்வது என்பது சமணர்களுக்கு இல்லாத ஒரு பழக்கமாகும். அதுமட்டுமல்ல

'மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட”

என்று நூல் பேசுகின்றது. ஆக இந்து சமயத் திருமணங்கள் என்று சொல்கிறோமே, அதாவது இந்து மக்கள் வேத அடிப் படையில் செய்துகொள்கிற திருமண அடிப்படையிலேதான் கோவலன், கண்ணகி திருமணம் நடைபெற்றது என்று நூல் பேசிச் செல்கிறது. அப்படித் திருமணம் செய்து கொண்டவர் களைச் சமணர்கள் என்று சொல்ல முடியுமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

இனி இதற்கடுத்தபடியாக அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டே செல்கிறோம். அவர்களது சமயத்தைப் பற்றிப் பேச வேண்டிய நிலை நூலில் ஏற்படவேயில்லை.

ஒர் இடம் மாதவியைப் பிரிந்த கோவலன் கண்ணகியோடு காட்டின் வழியே போய்க் கொண்டிருக்கிறான். கவுந்தி அடிகளும் உடன் செல்கிறார்கள், போகும்போது வனதேவதை ஒன்று அவனுடைய அழகில் ஈடுபட்டு அவனை மயக்கிப் பயன்படுத்த வேண்டுமென்று நினைக்கிறது. அவன் தனியாக இருக்கும் சமயம் பார்த்து, கோவலனுக்குத் தெரிந்த வசந்த மாலை வடிவத்தில் - மணிமேகலை பிறப்பதற்கு முன்னர் மாதவிக்குத் தோழியாக இருந்த அந்த வசந்தமாலையின் வடிவத்தை எடுத்துக் கொண்டு - வருகிறது. (மதுரைக் காண்டம் காடுகான் காதை 173)  ஏனென்றால் அது கோவலனுக்குத் தெரிந்த வடிவம். அந்த வடிவத்தை எடுத்துக் கொண்டால் அவனுடன் தொடர்பு கொள்ள லாம் என்று அந்த வனதேவதை நினைப்பதற்கு அதுவும் ஒரு காரணம்,

வந்தது. ஆனால் அறிவில் மிகுந்தவனாகிய கோவலன் சிந்திக்கிறான் : நாம் பல நாட்கள் நடந்து இந்த இடத்திற்கு வந்திருக்க இவள் எப்படி இந்தக் காட்டிற்கு வர முடிந்தது? ஒரு வேளை இது வருத்தும் சிறு தெய்வங்களின் திருவிளையாடலாக இருக்குமோ?” என்று நினைந்து மந்திரம் சொன்னான். என்ன மந்திரம் சொன்னதாக இளங்கோவடிகள் பேசுகிறார் பாய்கலைப் பாவை மந்திரம் சொன்னதாகக் குறிப்பிடுகிறார் (காடுகாண் காதை 197). பாய்கலைப் பாவை என்பது கொற்றவைக்குரிய பல பெயர்களுள் ஒன்று என்று அறிய வேண்டும். பாய்கலைப் பாவை மந்திரம் ஆதலின் உடனே அந்தத் தெய்வம் தன்னுடைய புதிய வடிவத்தை விட்டு விட்டு

வனசாரிணி யான், மயக்கஞ்

செய்தேன் புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்

என்திறம் உரையாது ஏகு என்றேக (காடுகாண் காதை 198-200)

"வன சாரிணி நான் இந்த வனத்திலே சுற்றிக்கொண்டிருக் கின்ற சிறு தெய்வம், உன்மாட்டுக் கொண்ட ஆசையினாலே இந்த வடிவத்தை எடுத்துக் கொண்டு வந்தேன். நான் இப்படி வந்து உன்னை மயக்கப் பார்த்தேன் என்பதைக் கண்ணகி யிடத்தும், கவுந்தி அடிகளிடத்தும் சொல்ல வேண்டா” என்று சொல்லிவிட்டு அது மறைந்து போகிறது.

இந்த இடத்தில் கொஞ்சம் நன்கு சிந்திக்க வேண்டும். ஆபத்து என்ற ஒன்று வருமேயானால் மனித மனம் எங்கே போகிறது? அவன் மரபு வழி எந்தச் சமயத்தைப் பின் பற்றியிருந் தானோ, எந்தக் கடவுளை வழிபட்டுப் பழக்கமுடையவனோ, அந்தக் கடவுளின் பெயரைத் தானே சொல்லுவான்? கோவலன் சமணன் ஆக இருந்திருப்பானேயானால் பாய்கலைப் பாவை' மந்திரத்தைச் சொல்லுகின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்குமா?

திடீரென்று ஒரு மந்திரத்தைச் சொல்லி விடுவதனாலே பயன் ஏற்பட்டுவிடுமா? இந்தப் பாய்கலைப் பாவை மந்திரம் சொன்னவுடனே வனசாரிணி நான். மயக்கம் செய்தேன். என் தவற்றை மன்னித்துவிடு' என்று அந்தத் தெய்வம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டுமானால் அந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னவுடன் அதற்குரிய பலனை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு, அவன் பலகாலம் அந்த மந்திரத்தை உருவேற்றியிருக்கிறான் என்பது சொல்லாமலே பெறப்படும். ஆக, கோவலன் சமணன் ஆக இருந்திருப்பானேயானால் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் திருமணம் செய்து கொண்டு ஆபத்தான சந்தர்ப்பம் வந்தபோது மட்டும் பாய்கலைப்பாவை மந்திரத்தைச் சொல்லி யிருப்பானா? சிந்திக்க வேண்டும்.

அடுத்து, கவுந்தி அடிகளிடத்தில் இருந்து கோவலனையும், கண்ணகியையும் மாதரி என்ற இடைக்குல மடந்தை அழைத்துச் செல்கிறாள். கோவலன் கண்ணகி இருவர்க்கும் ஒரு தனி வீடு அமைத்துக் கொடுத்து இருவரும் நீராடிய பின்னர் கண்ணகி சமைப்பதற்குரிய பல பாத்திரங்களையும், காய்கறி முதலிய வற்றையும் தருகிறாள். அந்தச் சந்தர்ப்பத்தில் மூல நூலில் காணப்பெறும் ஏழு அடிகள் ஆராய்ச்சிக்குரியன.

மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி

ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள்

நோதக வுண்டோ நும் மகனார்க்கினிச்

சாவக நோன்பிகள் அடிகளாதலின்

நாத்தூண் நங்கையொடு, நாள் வழிப் படுஉம்

அடிசி லாக்குதற்கு அமைந்த நற் கலங்கள்

நெடியா தளிமின் நீர் .... (கொலைக் களக்காதை 15-21)

ஏதமில்லா'என்ற அடியும் நோதகவுண்டோ'என்ற அடியும் அடி எதுகை பெற்றுள்ளமை காணலாம். அடிசிலாக்குதற்கு'என்ற அடியும் நெடியாது’ என்ற அடியும் அடி எதுகை பெற்று வந்துள்ளமை காணலாம். இந்நிலையில் நோதக வுண்டோ' என்று தொடங்கும் அடி அதனையடுத்து மூன்றாவதாக நிற்கும் நாத்துரண்'என்ற அடியுடன் இணைந்து செல்வதைக் காணலாம். இடையேயுள்ள சாவக நோன்பிகள் அடிகளாதலின்' என்ற அடி முன்பின் எந்த அடியுடனும் பொருந்தாமல் தனியே நிற்றலைக் காணலாம். பொருள் முறையில் பார்த்தாலும் நோதகவுண்டோ நும்மகனார்க்கு என்று கூறிவிட்டு அடுத்து நாத்துரண் நங்கை யொடு நாள் வழிப்படுஉம் அடிசில் ஆக்குதற்கு என்ற சொற் றொடர் எவ்வித இடையீடும் இன்றி தொடர்ந்து செல்வதைக் கான முடியும்.

'சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்

நாத்து ணங்கையொடு நாள் வழிப் படுஉம்' (கொலைக்களக்காதை 18.19)

என வருகிறது. சாவக நோன்பிகள் என்ற சொல் சமண சமயத்தில் இல்லறத்தை மேற்கொண்டவர்களுக்குரிய பெயர் என்பதை மறுக்கவில்லை. ஆகவே இந்தச் சொல்லை வைத்துக் கொண்டு ஒரு காப்பியத்தில் முன்னும் பின்னும் வரும் கருத்துக் களையெல்லாம் மீறிக் கோவலன் கண்ணகியைச் சமணர்கள் என்று கூறுவது பொருந்துமா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

சிலப்பதிகாரத்திலுள்ள அடிகளைப் படித்து வருவோமே யானால் அடி எதுகை வைத்தே இளங்கோவடிகள் பாடிக் கொண்டு வருகிறார். இரண்டு இரண்டு அடிகளுக்கு அடி யெதுகை என்று சொல்லப் பெறும்.

‘மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி

ஏத மில்லா விடந்தலைப் படுத்தினள் (கொலைக்களக்காதை 15, 16)

 என்பது முன் இரண்டடி. வழியில் வந்த களைப்பு நீங்க, பாதுகாப்பான ஒரு இடத்தில் மாதரி அவர்களைத் தங்கச் செய்தாள். அடுத்து

நோதக வுண்டோ நும்மகனார்க் கினி'

என வரும் அடியோடு நாத்துரணங்கையொடு நாள் வழிப் படுஉம்' என்ற அடி தொடர வேண்டும். ஆனால்

சாவக நோன்பிகளடிகளாதலின்

என்கிற ஒரேஒரு அடி குறுக்கே வருகிறது. சாவக நோன்பிகள் என்று சொல்வதன் மூலம் அவர்களைச் சமணர்கள் என்று நினைக்கும்படியாகச் செய்திருக்கிறார்கள். கோவலன் கண்ணகியைப் பொறுத்தமட்டில் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதற்கு இந்த ஒரு அடியைத் தவிர சிலப்பதிகாரத்தில் வேறு சான்றே இல்லை. இந்த ஒரு அடி அடிஎதுகை இல்லாமல் முன்பின் தொடர்பு இல்லாமல் ஒற்றை யாக நிற்கிறது. அப்படியானால் இந்த இடைச் செருகல் பதிகம் பாடிய பிற்கால ஆசிரியரின் கைவண்ணமாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வேறு எந்த இடத்திலும் இவர்கள் சமணர்கள் என்ற கருத்தைப் புகுத்த முடியாத நிலையில் பதிக ஆசிரியர் சாவக நோன்பிகள் என்ற அடியை இடைச் செருகலாகப் புகுத்தியுள்ளார். இதன் உட்பொருள் வருமாறு : சமண சமயத்தைச் சேர்ந்த இல்லறவாசிகள் கூட மாலைப் பொழுது கழிந்து இருள் சூழ்வதற்கு முன்னர் உணவு உண்டுவிடுவர். எனவே பொழுது சாய்வதற்குள் கோவலன் கண்ணகி உண்டுவிட வேண்டும் என்றக் கருத்தைப் புகுத்துவதற்கு இந்த ஒர் அடியைப் புகுத்து கிறார் பதிக ஆசிரியர். அதன் பொருத்தமின்மையைப் பின்னர் காணலாம்.

அடைக்கலமாகப் பெற்ற கோவலன், கண்ணகி இருவரையும் மாதரி கவுந்தி யடிகளிடமிருந்து பிரித்து அழைத்துக் கொண்டு புறப்பட்ட நேரத்தை அடிகள் விரிவாகப் பேசுகிறார்.

சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக் கன்று தேர்

ஆவின் கனைகுரல் இயம்ப (அடைக்கலக் காதை 203-204)

.................................................................

'வாயில் கழிந்து தன் மனை புக் கனளால்

கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென் (218-1)

இவ்விரண்டு அடிகளின் பொருளைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும் சென்ற ஞாயிறு என்றமையின் கதிரவன் மறைந்துவிட்டான் என்பதையும் செல்சுடர் அமயம் என்றதால் அந்திப் பொழுது என்பதையும் ஆசிரியர் குறிக்கிறார். செல்சுடர்' என்றதால் அந்த அந்திப் பொழுதும் ஏறத்தாழ முடிகின்ற நிலை என்பதையும் ஆசிரியர் குறிக்கின்றார். இந்த நேரத்தை நன்கு புரிந்து கொள்வதற்காக அமைத்த தொடரே கன்று தேர் ஆவின்' என்பது. தம் கன்றுக் குட்டிகளை நினைத்துக் கொண்ட பசுக்கள் கத்துகின்றன (கனை குரல்) என்று கூறுவதால் அந்தி சாய்ந்த நேரத்தில் அதாவது 32 நாழிகைக்கு மேல் தான் புறஞ்சேரி யிலிருந்து கண்ணகியை அழைத்துக் கொண்டு மாதரி புறப்படு கிறாள். இதனையடுத்து மதுரைக் கோட்டையை அவள் சென்று அடைகிறாள், கோட்டை வாயிலின் உட்புகுந்து அவள் வீட்டைச் சென்று அடைய ஒரு நாழிகைப் பொழுதாவது ஆகியிருக்க வேண்டும். வீடு சென்ற பிறகு அவ்விருவரையும் குளிக்கச் செய்து சமையலுக் குரிய பாத்திரங்களைத் தந்து கண்ணகியைச் சமைக்குமாறு பணிக்கிறாள் மாதரி என்ன என்ன காய்களை நறுக்கி எவ்வாறு சமையல் செய்து எப்படி இலைபோட்டு கண்ணகி அமுது படைத்தாள் என்பதையும் அடிகள் விரிவாகப் பேசுகிறார். இந்நிலையில் குளித்தல், சமையல் செய்தல், உணவு உண்டல் ஆகிய மூன்று செயல்கட்கும் குறைந்தது நான்கு முதல் ஐந்து நாழிகைப் பொழுதாகியிருக்கும். எவ்வளவு விரைவாகப் பணியாற்றி இருப்பினும் 36 நாழிகைக்கு முன்னர் கோவலன் உணவு உண்டு இருக்க முடியாது என்றால் இரவு 8 மணியளவில் தான் அவன் உண்டிருக்க வேண்டும். கண்ணகி புறப்பட்ட நேரத்தை ஆசிரியர் துல்லியமாகக் கூறியமையின் சாவக நோன்பிகள் உண்னும் நேரம் அப்பொழுதே கழிந்து விட்டது என்பதை அறிய முடியும். இந்த நுணுக்கத்தையறியாத பதிக ஆசிரியர் இந்தக் கால வேறுபாட்டைச் சிந்திக்காமல் சாவக நோன்பிகள்'என்ற அடியைப் புகுத்திவிட்டார். இந்த ஒரு அடியை வைத்துக் கொண்டு கோவலனைச் சமண சமயத்தவனாக ஆக்குவதன் பொருந்தாத தன்மையை நன்கு அறியலாம்.

அடுத்து சமண சமயத்தின் அடிப்படைக் கொள்கை பெண் களுக்கு வீடு பேறு இல்லை என்பது பெண்கள் மோட்சம் போக வேண்டுமானால் அவர்களும் ஆண்களாகப் பிறந்து தான் வீடுபேற்றை அடைய வேண்டுமே தவிர பெண்ணாக இருந்து வீடு பேற்றை அடைய முடியாது என்பது அவர்களது அடிப்படைக் கொள்கை,

- இதற்கு நேர்விரோதமாக கண்ணகி என்ற ஒரு பெண்ணை ஒரே பிறப்பில் மோட்சம் ஏற்றுகிறார் இளங்கோவடிகள். வியப்பிலும் வியப்பு.

பெருவாணிகன் மடமகள் அவள், பிறந்த இடம் அப்படி. புகுந்த இடம் கேட்க வேண்டியதே இல்லை. அதைவிடப் பெரிய இடம் ஆக செல்வச் செருக்கிலே பிறந்து, செல்வச் செருக்கிலே வாழ்க்கைப்பட்டவள். அப்படிப்பட்ட ஒருத்தி எப்படி மோட்சம் போக முடியும்? இந்த வினாபலருடைய மனத்தை நெருடக் கூடிய ஒன்று தான். ஆனாலும் இளங்கோவடிகள் கண்ணகியை இந்த ஒரு பிறப்பிலேயே வீடு பேற்றை அடையச் செய்ய வேண்டுமென்ற உறுதிப்பாட்டோடு ஜாக்கிரதையாக நூலில் பாடிக் கொண்டு செல்கிறார். -

திருமணம் நடைபெற்றது. ஏதோ சில ஆண்டுகள் கணவனும் மனைவியுமாக வாழ்ந்தார்கள். அப்படி வாழ்ந்தபோது கூட, கண்ணகி திருமண வாழ்வில் முழு மனத்தோடு ஈடுபட வில்லை என்பதைக் காட்ட இளங்கோவடிகள் சில இடங்களைச் சுட்டுகிறார். சிலப்பதிகாரத்தைப் படிப்போர் இதனை அறிந்து கொள்ள முடியும்.

திருமணமான முதல் இரவு, கணவனும் மனைவியும் சந்திக்கிறார்கள்.

மலையிடைப் பிறவா மணியே என்கோ

அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ

யாழிடைப் பிறவா இசையே என்கோ (மனையறம் படுத்த காதை 77, 79)

என்று கோவலன்தன் மனமகிழ்ச்சியைப் பலவாறாக வெளியிடு கிறான். ஆனால் இளங்கோவடிகள் அந்தப் பெண்ணினிடத்தில் ஒரு கடுகளவு கூட எதிர்ச் செயல் (Reaction) வந்ததாகக் காட்டவே இல்லை. இல்லற வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாத ஒரு பெண்ணாக இருந்தாள். அப்படிச் சொல் வதனாலே எந்தவிதமான தவறும் ஏற்பட்டுவிடவே இல்லை. அவளைப் பொறுத்தமட்டில் வாழ்ந்தாள் கணவனுக்காக. அவ்வளவுதான். ஆக அவள் அதில் ஈடுபட்டாளா என்று சொல்வதற்குச் சான்றேயில்லை. இதையெல்லாம் மனத்தில் கொண்டு இளங்கோவடிகள் கோவலன் கூறியவற்றை அவற்றை ஏற்றுக் கொண்டதாகவோ அதற்குரிய மகிழ்ச்சி கண்ணகி மனத்தில் தோன்றியதாகவோ அடிகள் குறிப்பிட வில்லை,

சில காலங்கழித்து கோவலன் பிரிந்து போகிறான். பிரிந்து போய்ப் பதினைந்து வருடம் ஏறத்தாழ ஆகியிருக்கும். ஏனென் றால் பல ஆண்டுகள் மாதவியோடு வாழ்ந்து, ஒரு பெண்ணைப் பெற்று, தன் குலதெய்வத்தின் பெயராகிய மணிமேகலை என்ற பெயரை அதற்குச் சூட்டி வாழ்ந்து வருகிறான்.

அவன் பிரிந்துள்ள இந்நிலையில் கண்ணகி வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கணவன் அதே ஊரில் தான் இருக்கிறான். கண்ணகியிடம் ஒருமுறை கூட வரவேயில்லை என்பதை

விடுதலறியா விருப்பினன் ஆயினன்

வடுநீங்கு சிறப்பில்தன் மனையகம் மறந்தென் (அரங்கேற்று காதை 174, 175)

இந்த அடிகளின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர். அதற்காகக் கோவலனை அவள் குற்றம் சொல்லவில்லை. அப்படியானால் அவளுக்கு என்ன குறையாக இருந்தது? அதை அவளே பின்னர் கூறுகிறாள். தாங்கள் என்னிடம் வராமையால் மிக இன்றிமையாத சிலவற்றை இழந்துவிட்டேன்' என்று கூறு கிறாள்.

அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும்,

துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை . (கொலைக்களக் காதை 72-74)

கண்ணகியின் இக்கூற்று அவள் வாழ்க்கையில் கொண்ட குறிக்கோள் என்ன என்பதை நன்கு அறிவுறுத்துகிறது. இல்லறப் பயனாக அவள் கண்டவை நான்கு, அவற்றுள் ஒன்று அந்தணர் ஒம்பல் என்பதாகும். இப்பழக்கம் சமண சமயத்த வர்க்கு இல்லை யென்பதை அறியலாம். கோவலன் கண்ணகி

உலவாக்கட்டுரை பல பாராட்டி

என்று பாடுகிறார். உலவாக் கட்டுரை என்பதன் பொருள் ஆழ முடைய இத்தகைய பல சொற்களைக் கூறி அவன் பாராட்டியும் இருவரும் சமண சமயத்தவர் அல்லர் என்பதற்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டாகும். அவளுடைய வாழ்க்கையில் மிக உயர்ந்த குறிக்கோள் (Ultimate aim) ஒன்று இருந்தது. அது என்ன? திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், இந்தப் பிறப் பிலேயே வீடுபேற்றை அடைய வேண்டுமென்பதே அக்குறிக் கோள். நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்தவர் காரைக்கால் அம்மையார், அவர்களுடைய வாழ்க்கையில் இதே குறிக்கோள் இருந்ததையும் அதே பிறப்பில் கண்ணகி போலவே காரைக்கால் அம்மையாரும் வீடுபேற்றை அடைந்தமையையும் அறிகிறோம்.

மற்றவர் தம்மை நோக்கி மானுடர் இவர் தாம் அல்லர்' (காரைக்கால் அம்மையார் 47)என்பதாக தன்னுடைய கணவன் சொல்லிவிட்டுத் தன்னைப் பிரிந்து போன பின்னர்

“ஈங்கு இவன் குறித்த கொள்கை இது; இனிஇவனுக்காக,

தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்து இங்கு உன்பால்

ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப்

பாங்குற வேண்டும்” (காரைக்கால் அம்மையார் 49) என்று வேண்டுகிறார்

ஆகவே பிறக்கும் போதே ஒரு உறுதிப்பாடு, மோட்சத்தை அடைய வேண்டுமென்று. இரண்டாம் நூற்றாண்டில் கண்ணகியையும், நான்காம் நூற்றாண்டின் கடைசியில் காரைக்கால் அம்மையாரையும் பார்க்கிறோம். இந்த இரண்டு வரலாறுகள் தாம் தமிழகத்தில் தலை சிறந்து விளங்குகின்றன. ஆகவே கண்ணகியின் வாழ்க்கையில் துயரத்திற்கு இடமில்லை.

அவளுடைய தோழி சோம குண்டம், சூரிய குண்டம் மூழ்கினால் கணவனைப் பெறுவாய் (கனாத்திறம் - 59) என்று கண்ணகிக்கு அறிவுரை கூறுகிறாள். அதற்கு கண்ணகி பீடன்று' (கனாத்திறம் 64) என்று மறுத்துவிடுகிறாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

வாழ்க்கையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் கண்ணகிக்கு இருந்திருந்தால் ஒருவேளை அதற்கு உடன் பட்டிருக்கலாம். இந்தப் பிறப்பிலேயே மோட்சம் அடைய வேண்டு மென்ற குறிக்கோள் அவளுக்கு இருந்திருக்கிறது என்பதைத் தான் இது காட்டுகிறது.

பெண்கள் இல்லற வாழ்வில் ஈடுபடுவார்களேயானால் அது மோட்சத்திற்குத் தடை என்று அக்காலகட்டத்தில் இளங்கோ அடிகள் நம்பினார் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆகவே கோவலனைப் பிரித்து, அவன் மீண்டு வந்தபோதும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ இடம் இல்லாமல் செய்கிறார் ஆசிரியர் காப்பியத்திற்குக் காலம், இடம் (Space Time) இரண்டும் மிக இன்றியமையாதவை. இருந்தும் காலப்பிரமானம் (Time Element) அடிபடுகிறது என உணர்ந்தும் இந்த மாபெரும் தவற்றைச் செய்கிறார் இளங்கோவடிகள்.

திடீரென்று ஒரு நாள் இரவு கண்ணகியின் வீட்டுக்கு கோவலன் வந்து சேருகிறான். வியப்பினும் வியப்பு. தன் மனையகம் மறந்து பல்லாண்டுகள் வெளியில் தங்கிவிட்ட கோவலன் இப்பொழுது எதிரே நிற்கிறான். திடீரென்று அவனைக் கண்டவுடன் செய்வது அறியாது நின்ற கண்ணகியை அழைத்து படுக்கையறைக்குச் செல்கிறான். அவள் மேனி வாடிக் கிடப்பது கண்டு வருந்தி தான் வாழ்வில் அடைந்த இக்கட்டான நிலையை ஐந்தடிகளில் கூறுகிறான் கோவலன்

'சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்

குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த

இலம்பாடு நாணுத் தருமெனக்கு என்ன

நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிக்

சிலம்புள கொண்ம்' r (கனாத்திறம் 69-83)

பல்லாண்டுகள் பிரிந்து கூடிய கணவர் மனைவியர் இடைஎவ்விதச் சலனமும் ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள் கிறார் அடிகள். கோவலன் தன் மனைவியைச் சந்தித்த இடம் பள்ளியறை என்கிறார் அடிகள். (பாடமைசேக்கை - கனாத்திறம் 67), இந்த இடத்திலும் அவர்கள் உறவு புதுப்பிக்கப்படவில்லை என்பதை நாடக பாணியில் அடிகள் அறிமுகஞ் செய்கிறார். படுக்கையில் அமர்ந்த அவன் மலை போன்ற செல்வத்தை இழந்த இலம்பாடு நாணத்தை உண்டாக்குகிறது என்று கூறுகிறான். இவனுடைய மனநிலையைப் புரிந்தோ புரியாமலோ முறுவலோடு நகைமுகங் காட்டி சிலம்புள கொண்ம்' என்கிறாள் கண்ணகி.

சாதாரண நிலையில் இச்சிலம்பு முதலாக மாட மதுரை அகத்துச் சென்று உலந்த பொருள் ஈட்ட முடிவு செய்து விட்டேன். (கனாத்திறம் 75, 76), காலையில் செல்லலாம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறாயின் அன்றிரவு அவர்கள் இருவரும் ஒன்றாய் இருந்தனர் என்று கொள்ள நேரிடும். அதற்கு இடங்கொடாமல் ஏடலர் கோதாய் எழுக இங்கு என்னோடு' என்று கூறி அந்த வினாடியே அதாவது பொழுது விடியும் முன்னரே (கனைசுடர் கால்சியா முன் - கனாத்திறம் 79) புறப்பட்டுவிட்டான் என்று கூறுகிறார் அடிகள்

இடையே காட்டுவழியில் செல்லும் போதுங்கூட இவர்கள் உறவு கொள்ளாது இருக்க கவுந்தியடிகள் என்ற சமணத் துறவியை இவர்களுடன் சேர்த்துவிடுகிறார் அடிகள்,

அடுத்து மாதரி வருகிறாள். கவுந்தியடிகள் மாதரி இடத்தில் இடைக்குல மடந்தைக் கடைக்கலம் தந்தேன்’ (அடைக்கலம் - 130) என்று கூறி கண்ணகியையும் கோவலனையும் மாதரியிடம் ஒப்படைக்கிறார். 

அப்படி ஒப்படைக்கும் நேரம் கன்று தேராவின் கனை குரல் இயம்பும் அந்த மாலை சாய்ந்த நேரம் என்று முன்னரே அடிகள் குறிப்பிட்டுள்ளார். 

இவர்களை அழைத்துச் சென்ற மாதரி, கணவன் மனைவி யாக இருக்கின்ற இவர்களை ஒரு தனி விட்டில் இருக்கச் செய்கிறாள். கணவனுக்கு விருப்பமானதை மனைவி சமைத்துப் போடவேண்டும் என்ற எண்ணத்தில் இரவுச் சமையலுக்கு வேண்டியதைத் தந்ததுடன் தன் மகளையும் உதவிக்கு அனுப்பி வைக்கிறாள். சமையல் முடிந்தது, மனைவி பரிமாற கணவன் இனிதே உண்டான் தான் செய்த தவறுகளை வரிசைப்படுத்தி தன் வருத்தத்தை வெளியிட்டான். இந்த உரையாடல் எங்கே சென்று முடியும் என்பதை அறிந்த இளங்கோவடிகள் அதைத் தடுப்பதற்காக

'கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி

சீறடிச் சிலம்பின் ஒன்று கொண் டியான்போய்

மாறி வருவன் மயங்காது ஒழிக’ (கொலைக்களக் காதை 91-93)

என்று கோவலன் பேசுமாறு செய்கிறார். அவள் சிலம்பில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு கோவலன் புறப்பட்டுவிடுகிறான். மேலேயுள்ள மூன்று அடிகளில் மாறி வருவன் மயங்காது ஒழிக’ என்ற இரண்டு தொடர்கள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. ஒப்பற்ற சிலம்பை எடுத்துக் கொண்டு விற்கப் போகின்ற ஒருவன் அபசகுனங்களின் மொத்த இருப்பிடமாக மேலே கூறிய இரண்டு தொடர்களையும் பயன்படுத்துகிறான், செல் கின்றவனுடைய முடிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்றாலும் அடிகள் இவ்வளவு விரைவாக கோவலனை இரவோடு இரவாக சிலம்பை விற்க அனுப்புவதன் நோக்கம் யாது? பெருமதிப்புள்ள ஒரு பொருளை விற்கச் செல் கிறவன் பகலில் போவது தானே முறை? அதைவிட்டுவிட்டு இரவோடு இரவாகக் கோவலனை வெளியே அனுப்புவதன் நோக்கம் யாது? அன்றிரவு இவர்களிடையே கூட்டம் நடை பெறாமல் இருக்க இது ஒன்று தான் வழி. இவ்வாறு செய்ததால் காப்பியக் கட்டுக்கோப்பில் காலப் பிரமானம் (Time Element) எவ்வளவு அடிபடுகிறது என்பதை அடிகள் அறியாதவரல்லர். இரவு எட்டு மணிக்கு மேல் இரவுக் கடை வீதியில் பொற் கொல்லனைச் சந்தித்தல், பொற் கொல்லன் அரசனைச் சந்தித்தல், கள்வனைக் கொல்ல அரசன் ஆணையிடுதல், கொலை நடைபெறுதல் ஆகிய அனைத்தும் பொழுது விடி வதற்குள் நடைபெற்று முடிந்துவிடுகின்றன. ஆயர்பாடியில் நிகழும் உற்பாதங்கள், ஆய்ச்சியர் குரவையாடுதல், கோவலன் கொலை பற்றிய செய்தி பரவுதல், கண்ணகி கதறிக் கொண்டு கணவன் இறந்த இடத்திற்குச் செல்லுதல் ஆகிய அனைத்தும் நடைபெற அடுத்த நாள் பகற் பொழுதில் பெரும்பகுதி செலவாகி விட்டது. கணவன் உடலைக் கண்ணகி பார்க்கும் நேரம் மாலை நேரமென அடிகளே குறிப்பிடுகிறார். -

வண்டா ரிருங்குஞ்சி மாலைதன் வார் குழன்மேற்

கொண்டாள் தழிஇக் கொழு நன்பாற் காலைவாய்;

புண்டாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்

கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் (ஊர் சூழ்வரி 35 - 38)

இந்த நான்கு அடிகளில் காலக்கணக்கு எங்ஙனம் அடி படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும், காலையில் மலர் மாலை அணிந்த கூந்தலோடு கூடிய கண்ணகி கணவன் தன்னை தழுவி மகிழ்தலைக் கண்டாள். மாலை நேரத்தில் இரண்டு துண்டாகக் கிடக்கின்ற அவன் உடலைக் கண்டாள். ஆனால் அவன் தன்னைக் காணமுடியாத நிலையில் இருப்பதனையும் கண்டாள்.

இளங்கோவின் கணக்குப்படி முதல் நாள் மாலை ஆறரை மணியளவில் புறஞ்சேரியை விட்டுக் கணவனும் மனைவியும் வருகின்றனர். அன்றிரவு எட்டு மணிக்கு சிலம்புவிற்கப் புறப்படுகிறான் கோவலன். மறுநாள் மாலை வெட்டுண்டவன் உடலைக் காண்கிறாள் கண்ணகி, உணவு உண்டபின் மையீர் ஒதியை வருகெனப் பணித்து தழுவி விடை கொண்டிருக்க வேண்டும் கோவலன், சென்றவன் மீளவேயில்லை. அப்படியிருக்கக் காலை வாய் தழுவி நின்ற கோவலனைக் கண்டாள் என்று அடிகள் கூறுவது அவர் கொண்ட காலப்பிரமானத்தோடு மாறுபடுகிறது. இதை நன்கறிந்தும் அடிகள் அதுபற்றி கவலைப்படாமல் காப்பியம் செய்கிறார். காரணம்

பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் விட்டுப் போன கணவன் மனைவி உறவு புதுப்பிக்கப்படலாகாது என்ற தம் கருத்தை நிறுவுவதற்காக அடிகள் தெரிந்தே இந்தக் கால வழுவைச் செய்கிறார். பதினைந்தாண்டுகளுக்கு மேல் கண்ணகி துறவு வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தாள் என்பதை அரும் பாடுபட்டு நிறுவுகிறார் ஆசிரியர் மீண்டு வந்த கோவலனுடன் அவள் உறவு கொள்ளவில்லை என்பதை கொலைக்களக்காதை வரை கொண்டு செலுத்திவிடுகிறார்.

ஒரு பிறப்பில் ஒருவர் ஆனாயினும் சரி, பெண்ணாயினும் சரி துறவு வாழ்க்கை ஒன்று மட்டுமே துறக்கம் செல்ல வழி வகுக்குமா என்றால் இல்லை என்ற விடைதான் கிடைக்கும். மன ஒருமைப்பாடு, புலனடக்கம், காமம், குரோதம் முதலிய குற்ற மின்மை ஆகிய அனைத்தும் தேவைப்படும். ஆனால் இவை மட்டும் இருந்துவிட்டால் போதுமா என்றால் இவையனைத் திற்கும் அப்பாற்பட்ட ஒன்று மிகுதியும் தேவையென்பதை இந் நாட்டவர் என்றோ கூறியுள்ளனர். அந்த ஒன்று அனைத்து உயிர்களிடத்தும் செலுத்தப்படும் அன்பாகும். அன்புடைமை ஒன்றே துறக்கத்தின் திறவு கோலாகும்.

 இந்த அன்புடைமை, உயிர்கள் மாட்டு இரக்கம், பிறர் பிழை பொறுத்தல், தனக்குச் செய்யப்பட்ட கொடுமை அல்லது தீங்கு முதலியவற்றை மறந்து, செய்தவர்களிடம் அன்பு பாராட்டல் ஆகியவையே துறக்கத்தின் திறவு கோலாகும். இந்த ஒன்று கண்ணகியிடம் இருந்தது என்பதைக் காட்ட அடிகள் இரண்டு இடங்களைப் பயன்படுத்துகிறார். தனக்குப் பெருந்திங்கு இழைத்த கோவலன் மீண்டு வந்து இலம்பாடு நானுத் தரும் என்று கூறிய பொழுது கூட அவன் மாட்டுக் கடுகளவுகூட சினமோ, வெறுப்போ கொள்ளாமல் அன்புடன் இருந்தாள் என்பதைக் காட்ட அடிகள் கூறும் இரண்டடிகள் இவை :

'நலங்கேழ் முறுவல் நகை முகங் காட்டிச்

சிலம்புள கொண்ம்'

முதலடியில் உள்ள அனைத்துச் சொற்களும் ஆழமான பொருளுடையன. முறுவல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு எள்ளி நகையாடுதல் என்பது பொருளாகும். நகை தோன்றுவதற்கு நான்கு நிலைக்களன்களைத் தொல்காப்பியனார் கூறுகிறார். அவையாவன: எள்ளல், இளமை, பேதைமை மடன் என்ற நான் காகும். கண்ணகியின் முறுவல் எள்ளல் அடிப்படையில் வந்தது அன்று என்பதைக் குறிக்க நலங்கேழ் முறுவல் என்றார். நலத்தோடு பொருந்திய முறுவலும் அல்லது நலஞ் செய்கின்ற முறுவலும் அன்புடையார் கண்ணே தோன்றுவதாகும். நகை முகம் என்ற வழி நகை தோன்ற நிலைக்களமாக இருந்தது இளமையாகும். இளமை பற்றி வந்த இந்த நகை எந்த நிலையிலும் எத்தகைய துன்பத்திலும் அவளை விட்டு நீங்க வில்லையென்பார் நகை முகம் என்றார். எப்பொழுதும் புன்னகையோடு கூடிய கண்ணகிக்கு கோவலன் மாட்டுக் கொண்ட அன்பின் காரணமாக முறுவல் பிறந்தது என்றார். முறுவலும் நகையும் முகத்திற்கு என்றுமுள்ள அணிகளாகும்.

அவள் மனத்துயர் அனைத்தையும் பிறர் காணாதவாறு செய்தது இந்நகையும் முறுவலுமாம். அவ்வாறானால் பின்னர் ஒர் இடத்தில் அவளே என் வாய் அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த (கொலைக்களக் காதை 80) என்று கூறுகிறாளே! அந்நிலையில் பொய்மையான முறுவல் என்று அவளே கூறிய பிறகு நலங்கேழ் முறுவல் என்று ஆசிரியர் கூறுவது சரியா என்ற வினாத் தோன்றும் அவர்கள் வாழ்வு கருகிப் போனதைப் பற்றி உண்மையில் பெருங்கவலை கொண்டவர்கள் கோவலனைப் பெற்றவர்களாவர். தங்கள் மகனால் ஒரு பெண்ணின் கதி இவ்வாறாயிற்றே என்ற துயரத்தோடு வரு கின்ற அவர்களை முறுவலுடன் எதிர்கொண்டு அழைத்தாள் கண்ணகி, தங்கள் துயரத்தைப் போக்க அவள் போர்த்துக் கொண்ட முறுவல் இது என்று அவர்கள் வருந்தினார்கள். வாய் அல் முறுவல் என்றது மாசாத்துவான் மனநிலைப்படி பொருள் கொண்டதாகும். எனவே சுகதுக்கங்களை விருப்பு வெறுப்புக் களைச் சமமாக பாவிக்கும் சம நோக்கை இளமையிலேயே பெற்றுவிட்டாள் கண்ணகி என்ற முறையில் அப்பாத்திரத்தை அடிகள் படைக்கிறார்.

மான அவமானங்களையும் இதே சமநோக்குடன் காண் பதோடு அல்லாமல் தன்னை அவமானம் செய்தவர்களைக் கூட மன்னித்து அன்பு பாராட்டும் பண்புடையவள் கண்ணகி என்பதை நாடுகாண் காதையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி மூலம் அடிகள் நிறுவுகிறார். கீழ்மக்கள் இருவர் கோவலன் கண்ணகியைப் பார்த்து இவர்கள் யாவர்'எனக்கேட்க கவுந்தியடிகள், இவர்கள் எம்மக்கள் என விடையளிக்கிறார். அக்கீழ் மக்கள் இருவரும் உம்முடைய மக்களாயின் எப்படி கணவன் மனைவியாயினர்'என வினவுகின்றனர். பெருஞ்சினங் கொண்ட கவுந்தியடிகள் அவர் களை நரிகளாக என்று சபித்துவிடுகிறார். சினத்தைத் தவிர்க்க வேண்டிய துறவி பெருஞ்சினம் கொள்கிறார். ஆனால் இல்லற வrசியாகிய கண்ணகியோ

நெறியி னிங்கியோர் நீரல கூறினும்

அறியா மையென் றறியல் வேண்டும்

செய்தவத் தீர்துந் திருமுன் பிழைத்தோர்க்கு

உய்திக் கால முரையி ரோவென (நாடுகாண்காதை 237-40)

என்ற பேசுகிறாள். கீழ்மக்கள் கீழ்மையான பேச்சுக்கள் பேசுவது இயல்பு. அவ்வாறு பேசுவதற்குக் காரணம் அவர்களது அறியாமையேயாகும். இவர்களை மன்னித்து அருள்க என் கிறாள் கண்ணகி தன்னை அவமானப்படுத்தியவர்களைக் கூட அன்புடன் நோக்கும் சம நோக்குப் பெற்றுவிடுகிறாள் என்பதை எடுத்துக் காட்டுகிறார் இளங்கோவடிகள். இதனால் வீடுபேறு அடைவதற்குரிய சமநோக்கு அவள் பால் அமைந்துவிட்டது என்பதை அறிய வைக்கின்றார். கணவனோடு கூட்டமின்மை மட்டும் வீடுபேறு அடைய வழியாக அமைந்து விடுவதில்லை. மனவடக்கம், புலனடக்கம், அறுவகைக் குற்றமின்மை ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து அவற்றுடன் மெய்யுணர்வும் சேரும்பொழுது அந்த ஆத்மா ஆனாயினும் சரி பெண்ணாயினும் சரி, வீடுபேற்றை அடையத் தகுதியுடையதாகிறது. அந்த அடிப்படையில் தான் கண்ணகி வரலாற்றைப் படைக்கிறார் அடிகள். கதைப்போக்கு முழு வதையும் பார்த்துக் கொண்டு வரும் நமக்கு கண்ணகியோ கோவலனோ சமண சமயத்தைச் சேர்ந்தவரல்லர் என்பது நன்கு தெளிவாகிறது. முதற்பகுதியில், அடிகளின் நூல் முழுவதையும் எடுத்து ஆய்ந்து அவர் வேறு எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் உறுதியாகச் சமணர் அல்லர் என்பதை எடுத்துக் காட்டினோம். இரண்டாம் பகுதியில் அவரால் படைக்கப் பெற்ற காப்பியத்தில் காப்பியத் தலைவனாகவும் தலைவியாகவும் வரும் கோவலனும் கண்ணகியும் சமண சமயத்தவர் அல்லர் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே என்றோ இருந்த பெயர் தெரியாத ஒருவர் பாடிய பதிகத்தை வைத்துக் கொண்டு இளங்கோவடிகளைச் சமணராக்குவதன் பொருத்த மின்மையை நன்கறியலாம். அடிகள் வெளிப்படையாகத் தம் சமய ஈடுபாட்டைக் குறிப்பிட்டுக் காட்டவில்லை என்றாலும் வேட்டுவ வரி ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அவர் சாக்தராக இருக்கலாமோ என்று ஐயப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை. காப்பிய மாந்தராகிய கோவலனும் கண்ணகியும் வேத வழிப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள்; அவசியம் நேர்ந்த பொழுது கோவலன் பாய்கலைப் பாவை மந்திரம் சொல்கிறான். கணவனை இழந்த கண்ணகியிடம் மதுராபதித் தெய்வம், கொற்றவை, அங்கயற்கண்ணி வந்து பேசுகின்றன. இவை யனைத்துக்கும் - இத்துணைச் சான்றுகளுக்கும் - எதிராக சாவக நோன்பிகள் மட்டும் வைத்துக் கொண்டு இவ்விரு வரையும் சமணராக்குவது பொருந்தாது என்று சொல்லத் தேவையில்லை.

இதுகாறும் கூறியவற்றிலிருந்து இளங்கோ, கோவலன் கண்ணகி என்ற மூவரும் வேறு எந்த சமயத்தைச் சார்ந்திருப் பினும் இருக்கலாம். ஆனால் உறுதியாக இவர்கள் யாரும் சமணர் அல்லர் என்பது தெளிவாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard