வலிமையும் காலமும் அறிந்தமை போல, வெற்றியடைதற்குத் தக்க இடமும் அறிந்து செயலாற்றுதல். இடம் என்பது தகுந்த நிலத்தை மட்டுமன்றி தக்க சூழ்நிலையையும் குறிக்கும். - தமிழண்ணல்
இடனறிதல் என்பது தன் செயல்களுக்கு ஏற்ற இடத்தை அறிந்து கொள்ளுதல் குறித்தது. செயல் நிறைவேற்றுவதற்கு வலியும் காலமும் தவிர்த்து இடமும் இயைய வேண்டுமாதலால் வலியறிதல், காலமறிதல் அதிகாரங்களுக்குப் பின் இடனறிதல் அதிகாரம் வைக்கப்பட்டது. மேற்கொண்ட செயல் வெற்றி பெறுதற்குத் தனக்கானதுமாய், மாற்றார்ர்க்கு ஆகாததுமாய் இருக்கிற இடத்தை அறிந்து நடந்து கொள்ளுவது பற்றிச் சொல்கிறது இது..
இடனறிதல்
ஒரு செயல் ஆற்றுதலுக்கு ஏற்றதான இடத்தை அறிந்து அதன் பிறகே செயலைத் தொடங்க வேண்டும் என்று இவ்வதிகாரம் சொல்கிறது. தற்கப்பு, மேற்செல்லல், என்ற இவ்விரண்டையும் சுற்றி அதிகாரப் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. போர்ச் சூழலில் உள்ள நாட்டுத் தலைவனுக்குக் கூறப்பட்ட அறிவுரைகள் போலத் தோன்றினாலும் இவ்வதிகாரத்துக் குறட்கருத்துக்களை எந்த ஒரு முயற்சிக்கும் பொருத்திக் கொள்ள முடியும். தம்மைத் தாக்க வ்ரும் எதிராளியை எதிர்க்கும் முனறயில் 'அரண் அதாவது பாதுகாப்புள்ள இடம் முக்கிய பங்கு பெறுகிறது.. அரணிலிருந்து போர் செய்தல் எப்போதும் வலினமயுனடயதஈகும் என்பது வலியுறுத்தப்படுகிறது- மேற்செல்லும் போது காட்டவேண்டிய திறத்தினனக் கூறும்போதும் இடம் அறிந்து செய்க என்கிறது அதிகாரப் பாடல்கள்.. தானிருக்கும் இடம், பனகவரின் இடம் செயல் ஆற்றுதற்கு ஆன இடம், பகைவரது இடத்தின் புறத்தே அரண் அமைத்து தங்கும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் பேசப்படுகிறது. எதிராளியைப் பொருந்தக் கூடாத இடமும் அவ்வாறு சந்தித்தஈல் வரக்கடியக் குற்றமும் குறிக்கப் பெறுகின்றன. . எதிராளியின் இடத்தை ஏளனமஈக கருதுதல் கூடாது என்பதும் எடுத்துக் காட்டப்பட்டது- மாற்றார் மக்கள் உறைவிடத்தில் தாக்குதல் மேற்கொள்ளல் கடினம் என்கிறது ஒரு பாடல். இடனறிதல் தாக்க வருபவன் செயலாகவும் தனது அரணகத்திருந்து காப்பவன் செயல்படுவதையும் கூறுவதால் அதிகாராப் பாடல்கள் வலியறிதலும் காலமறிதலும் போல இடனறிதலும் வருவார்க்கும் இருப்பார்க்கும் பொதுமையிலே கூறப்பட்டது என அறியலாம் .
இடனறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:
491 ஆம்குறள் செயல் நிறைவேற்றுதற்குரிய இடம் கிடைக்கும்வரை அதைத் தொடங்க வேண்டாம்; அவ்விடம் பற்றி இகழவும் கூடாது எனச் சொல்கிறது.
492 ஆம்குறள் பல திறம்பட்ட வலிமை பெற்றிருந்தாலும் தமக்கு அமைந்த இடமும் அதன் பாதுகாப்புத் திறனும் அறியவேண்டும் என்கிறது.
493 ஆம்குறள் இடம் தெரிந்து மாற்றர்கண் விழிப்புடன் செயல்பட்டால் அதுவே ஆற்றலற்றவர்களுக்கும் வலிமை கொடுக்கும் எனச் சொல்வது.
494 ஆம்குறள் ஏற்ற இடம் அறிந்து அதனைப் பற்றிக் கொண்டு விடாப்பிடியாகச் செயலாற்றினால் அழிவு செய்ய எண்ணி வந்த பகைவரும் தன் எண்ணம் இழந்து போவர். எனக் கூறுகிறது.
495 ஆம்குறள் நீரில் உள்ளவரைதான் முதலைக்கு பலம் இருக்கும். அது நீர்நிலையை விட்டுப் பெயர்ந்தால், சிறு விலங்குகூட விரட்டும் எனச் சொல்கிறது..
496 ஆம்குறள் தேர் நிலத்தில்தான் இயங்கும்; மரக்கலம் கடலில்தான் இயங்கும். அததன் இடத்தில் அததற்கு வல்லமை உண்டு என்கிறது.
497 ஆம்குறள் உள்ளத் திண்மை, தக்க வழிகள் முழுதும் ஒன்று விடாமல் ஆய்தல்- இவை, பொருந்திய இடத்துடன் கூடினால் செயல் நிறைவேற வேறு துணை நாடவேண்டாம் என்கிறது.
498 ஆம்குறள் படைவலி குறைந்தவனும் ஏற்ற இடத்திற்குச் சென்றால் பெரும்படையுடையவன் ஊக்கம் குறைந்து போவான் என்பதைச் சொல்வது.
499 ஆம்குறள் நல்ல பாதுகாப்பும் படைச் சிறப்பும் இல்லாதவர் என்றாலும் மாற்றார் மக்கள் வாழும் இடம் சென்று பொருந்துதல் கடினம் எனக் கூறுவது.
500 ஆவதுகுறள் வேல் அழுந்திய முகத்தையுடைய எதற்கும் பயமில்லாத யானை, சேற்றுக்குள் கால் அழுந்திச் சிக்குண்டால் நரியால்கூட அழியக்கூடும் எனச் சொல்வது.
சில புரிதல்கள்:
தன்னைத் தோண்டுவாரை வீழாமல் தாங்குகின்ற நிலம் போலத் தம்மை அவமதிப்போரை பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்று அறத்துப்பாலில் கூறும் குறள் பொருட்பாலில் கொக்குபோல் காத்திருந்து காலம் கனிந்தவிடத்து அது மீனைக் குத்தி எடுப்பதுபோல பிறரிடம் செயல்படவேண்டும் என்றும் பிறரை வெல்லுவதற்கு ஏற்ற இடத்தைப் அறிந்திருக்க வேண்டும் என்றும் கூறுவது ஏன்?. அறத்துப்பாலில் தன் நன்மையைக் கருதிப் பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது என்ற தனி மனித அறம் சொல்லப்பட்டது. ஆனால் பொருட்பாலில் குறள் கூறுவது பொது நன்மைக்காகச் செய்யப்படும் கடமைகள் பற்றியன. இங்கு பலருடைய வாழ்வுக்கு மேம்பாடு உண்டாக்கும் நோக்கத்துடன் செயல்படுவதும் அக்குறிக்கோளுக்கு இடையூறு ஏற்படுத்துவோரைத் தோல்வி அடையச் செய்வதும் கடமையும் அறமுமாகின்றது. எனவே சிலருடைய இடையூற்றை வென்று கடந்து போக காலமும் இடமும் அறிந்து தக்க செயல் ஆற்ற வேண்டும் என்கின்றது குறள்..
இடனறிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்
நீரில் வெல்'லும் முதலை அதிலிருந'து நீங்கி வி'ட்டஈல் எளிதில் கொல்லப்பட்டு விடும் என்று இடத்தினஈல் உண்டரகும் `வலினமயினனயும் நிலத்தில் ஒடும் தேரினனயும், கடலில் ஓடும் ஓடங்கனளயும் குறித்துக' காட்டி இடம், கருவி அறிந்து செய்தலின் சிறப்பையும் .சேற்று நிலம், யஈனன, நரி இம்முன்றினனயும் அமைத்து பொருந்தா இடம் சேராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் உருவகக் காட்சிகளாகச் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன. தக்க இடத்தினால் வெற்றி தோல்விகள், அமையும் என்பதனையும் இவை உணர்த்துகின்றன