திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறம் ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு
திருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல. அணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில் பேசிக்காட்டும் அசாத்தியத்தில் தான் அது குறள்.
அந்தப் பத்துக் குறட்பாக்களில், பேசப்படும் அறக் கருத்து வரையறுக்கப்படும். அதன் அவசியம் விளக்கப்படும், விளைவுகள் சொல்லப்படும், அதாவது அறம் கடைப்பிடிப்பதின் மேன்மையும், அறத்தைக் கடைப்பிடிக்காததின் கீழ்மையும் குறிக்கப்படும். கூர்ந்து நோக்கினால், சில கருத்துக்களை நிறுவுவதற்காகக் காணும் நடைமுறை நிகழ்வுகளைச் சான்றாகக் காட்டும் அனுபவ அணுகுமுறையும் கையாளப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு அறக் கருத்தென்னும் வைரத்தின் பன்னிறங்கள் பத்துக் குறட்பாக்களில் பட்டை தீட்டப்பட்டிருக்கும்.
திருக்குறள் வாசிப்பு- ஒரு அதிகாரத்தில் குறட்பாக்கள் அளவில்
இப்படி ஒவ்வொரு அறக்கருத்தையும் பத்துக் குறட்பாக்களில் வாசிக்கும் போது சில சமயங்களில் ஒரு அதிகாரத்தில் பேசப்படும் அறக் கருத்தின் கட்டமைப்பும் உன்னதமும் இப்போது இருக்கும் நிரல் முறையில் அல்லாமல் வேறு நிரல் முறையில் இருந்தால் இன்னும் உன்னதம் கூடி நிகரற்று விளங்குமோ என்று தோன்றும்.
இது உள்வயமானது என்று சிலர் புறந்தள்ளலாம். இப்போது இருக்கும் ஒவ்வொரு குறட்பாக்களின் நிரல் முறையும் உள்வயமானதென்று இருக்கும் போது இன்னொரு நிரலில் அமையும் உள்வயமான வாசிப்பு ஒரு அறக்கருத்தைக் கூடுதலாய்ப் பட்டை தீட்ட முடியுமென்றால் திருக்குறள் என்ற நிகரற்ற படைப்பு வாசகனுக்குத் தரும் வாசிப்பு சுதந்திரம் அது. அரவிந்தர் திருக்குறளின் கடவுள் வாழ்த்தையும், வான் சிறப்பின் ஐந்து குறள்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
திருக்குறளின் கடவுள் வாழ்த்தை அரவிந்தர் மொழி பெயர்த்துள்ள விதம் போப், சுத்தானந்த பாரதி போன்ற மற்ற மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து வித்தியாசமாக மூலத்தின் உண்மையையும், உயிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது. அதற்கு அரவிந்தருடைய ஆன்மீக அனுபவம் காரணமாய் இருக்க வேண்டும். ஆனால் சுவாரசியமானது என்னவென்றால் கடவுள் வாழ்த்தின் பத்துக் குறட்பாக்களை மொழி பெயர்க்கும் போது அவர் நிரல்படுத்தியிருக்கும் முறை வழக்கமாக கடவுள் வாழ்த்தில் நாம் வாசிக்கும் பத்துக் குறட்பாக்களின் நிரல் முறையை 1,2,3,4,5,6,7,8,9,10 என்பதற்கு பதிலாக 1,2,3,7,8,4,5,6,10,9 என்று மாற்றியமைக்கிறார். இந்த நிரலை 1,2,3,6,7,8,4,5,10,9 என்று சிறிது மாற்றியமைத்தால் இன்னும் வாசிப்பு அனுபவம் மிகைப்படும். சொல்லப்படும் முறையிலும், கருத்தாக்கத்திலும் மூன்றாவது, ஆறாவது குறள்கள் இயைபுடையதாயிருக்கின்றன.
இதேபோன்று ஏழாவது, எட்டாவது குறள்களும், நான்காவது, ஐந்தாவது குறள்களும் முறையே இயைபுடையதாகி வாசிப்பு அனுபவத்தைக் கூட்டுகின்றன. இறைவனைச் சார்ந்தோருக்குச் சேரும் நலன்களைச் சொல்லும் நான்காவது, ஐந்தாவது குறள்களோடு பத்தாவது குறள், அடையும் நலன்களின் மலையடுக்குகளில் இறுதி உச்ச அடுக்கைச் சொல்வது போல இருக்கிறது.
திருக்குறளின் இந்த ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவம் வாசிக்கும் யாருக்கும் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக அறன் வலியுறுத்தல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான்காம், ஐந்தாம் குறள்கள் அறத்தை வரையறுக்கின்றன.
அறத்தின் சிறப்பை ஒன்றாம் இரண்டாம் ஒன்பதாம் குறள்கள் பேசுகின்றன. ஆறாம், எட்டாம் குறள்கள் அறம் செய்ய வேண்டிய காரணங்களைச் சொல்கின்றன. மூன்றாம், பத்தாம் குறள்கள் அறம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அதற்கு நடைமுறை உண்மையைச் சொல்வதாய் ஏழாவது குறள் அமைகிறது.
ஆக அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் வாசிப்பு அனுபவத்தில் 4,5,1,2,9,6,8,3,10,7 என்று குறள்களை நிரல் மாற்றி வாசிக்கும் போது அறன் வலியுறுத்தல் என்ற கருத்தாக்கத்தின் முழுப் பரிமாணமும் ஒருங்கிணைந்த வாசிப்பாய் மனதில் பிடிபடுகிறது. இன்னொருவருக்கு, இது வேறு விதமாகவும் அமையலாம். இங்கு வலியுறுத்தப்படுவது வழக்கமான நிரல் முறை வாசிப்பில் திருக்குறளின் மகோன்னதம் முழுதும் மனத்தில் பிடிபடாமல் போய் விடும் சாத்தியம் இருக்கிறது என்பதைத் தான். இது ஒரு அதிகாரத்தின் கீழ்வரும் பத்துக் குறட்பாக்களின் வாசிப்பை விட, அடுத்த தளத்தில் அதிகார முறைமையில் வாசிக்கும் போது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
திருக்குறள் வாசிப்பு- அதிகார அளவில்
திருக்குறளின் அறத்துப்பால், பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற நான்கு இயல்களாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இயலும் அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இல்லறத்துக்கான அறங்களைப் பேசுவது இல்லறவியலாகவும் துறவறத்துக்கான அறங்களைப் பேசுவது துறவறவியல் எனவும் இல்லறவியல், துறவறவியலுக்கான வகைப்படுத்தலை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இப்படி எளிதாகக் கோடு போட்டுக் கொண்டு வாசிப்பது ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதாக இல்லை.
இல்லறவியலில் வைக்கப்படும் அறக்கருத்துக்களுக்கும் துறவறவியலில் வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அப்படியொன்றும் பாகம் பிரிப்பது போல் பிரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை என்று துறவறவியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் கருத்துக்கள், துறவறவியலுக்கு மட்டுமே உரித்தானது என்பது கண்மூடிய நிலைப்பாடாகத் தான் இருக்கும். இந்தக் கருத்துக்கள் இல்லறவியலுக்கும் இல்லறத்தின் நடைமுறைக்கேற்ற அளவில் பொருத்தமானவை தாம். அதேபோல் பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம் போன்ற கருத்தாக்கங்கள் இல்லறவியலுக்கு மட்டுமே உரித்தானவை என்ற நிலைப்பாடும் அறிவுக்கு முழுதும் ஒப்புடையதாய் இல்லை. துறவற நிலையினும் இந்த அறக்கருத்துக்களுக்கு ஒரு பொருத்தம் இருக்கிறது.
ஆக துறவறவியல், இல்லறவியல் என்ற பகுப்பு பல்வேறு அறக்கருத்துக்களிடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மறுதலிக்கிறது. ஆனால் அதிகாரங்களின் வரிசைக்கு, சொல்லப்படும் காரணங்கள் அவ்வளவு ஒப்புடையதாக இல்லை. சில அதிகாரங்களின் வரிசைக் கிரமத்திற்குச் சொல்லப்படும் காரணங்கள் வலிந்து நியாயங்கள் கற்பிக்கப்பட்டது போல் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்திற்கு அடுத்து பிறனில் விழையாமை என்ற அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பரிமேல் அழகரின் உரை தரும் காரணம் விசித்திரமாக இருக்கிறது. அஃதாவது காமமயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை.
இது ஒழுக்கம் உடையார் மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது என்பது பரிமேல் அழகர் உரை தரும் விளக்கம். அடுத்து பொறையுடைமை அதிகாரம் பிறனில் விழையாமை அதிகாரத்தின் பின் வைக்கப்பட்ட முறைமைக்குப் பரிமேல் அழகரின் உரை தரும் விளக்கத்தைப் பாருங்கள். "அஃதாவது காரணம் பற்றியாதல், மடமையானாதால் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன் கண் செய்யாது பொறுத்தலை உடையராதல் நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்பதற்கு, இது பிறன் இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது. இந்த மாதிரியான வைப்பு முறையில் இன்னொரு சிக்கலும் ஏற்படுறது.
ஒரு அதிகாரம் விளக்கம் பெறும் போது அதன் பெற்றி தாழ்வுறுவது போல் அதற்கான வைப்பு முறை விளக்கம் தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக நடுவு நிலைமை அதிகாரத்திற்கான விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது பகை நொதுமல், நண்பு எனும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. இது நன்றி செய்தார் மாட்டும் அந்நன்றியினை நினைத்த வழிச் சிதையுமன்றே? அவ் இடத்துஞ் சிதையலாகாது என்றதற்கு செய்ந்நன்றி அறிதலின் பின் வைக்கப்பட்டது. நடுவு நிலைமை என்ற கருத்தாக்கத்தின் தன்னளவிலான உயர்ச்சி அதற்கான அதிகார வைப்பு முறையில் சேர்த்துக் காணப்படும் போது உயர்ச்சியிலிருந்து தாழ்வுறுகிறது.
இந்த அதிகார முறைமை பற்றி ஏன் பெரிதும் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்கலாம். திருக்குறளின் பல்வேறு அறக்கருத்துக்களை உதிர்ந்த மணிகள் போல் பொறுக்கிக் கொள்ளலாமா? அல்லது பல்வேறு அறக்கருத்துக்களிடையே ஒரு தத்துவக் கோர்வை இருக்குமா என்று ஒரு மணிமாலையைக் கோர்த்துக் கொள்ளலாமா? இந்த இரு கேள்விகளில் நாமெடுத்துக் கொள்ளும் தெரிவைப் பொறுத்துத் தான் திருக்குறளில் பேசப்படும் அறத்தை நாம் மனதில் அகப்படுத்திக் கொள்ளும் திறனும் தீர்க்கமும் அமைகின்றன.
அறத்தை மொழி, மெய், மனம், சார்ந்து புரிந்து கொள்வது ஒரு தத்துவார்த்த முறை. வாழ்வின் பரிசுத்தத்தையும் மொழி, மெய், மனம் சார்ந்த பரிசுத்தங்களாக அடையாளம் கண்டு கொள்ளலாம். திருக்குறளில் அறத்துப்பாலில் பேசப்படும் அதிகாரங்களை இந்த தத்துவார்த்த அடிப்படையில் நிரல் படுத்திப் புரிந்து கொள்ள முடியுமா என்பது தான் கேள்வி, மொழி சார்ந்த அறங்களாக இனியவை கூறல் புறங்கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை போன்ற அதிகாரங்கள் அடங்குகின்றன.
அடுத்து மெய் சார்ந்த அறங்களாக கீழ்க்கண்ட அதிகாரங்களை அடையாளம் காணலாம் - பிறனில் விழையாமை, வெஃகாமை, புலால் மறுத்தல், கள்ளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை மூன்றாவதாக மனம் சார்ந்த அறத்தை, முன்னால் குறிப்பிடப்பட்டது போல்
மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்து அறன்.
ஆகுல நீர பிற
என்று திருக்குறள் மையப்படுத்திச் சிறப்பிக்கிறது. இந்தக் குறளை அடுத்து வரும் குறள் முன்னாலே குறிப்பிடப்பட்டது தான்.
அழுக்காறு, அவா வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
மனம் சார்ந்த அறத்தின் பண்புகளாகக் கடிந்தொழுக வேண்டியவற்றில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் குறிப்பாகச் சொல்லப்படுன்றன. கடிந்தொழுக வேண்டிய இந்த நான்கு பண்புகளை விரித்துரைக்குமுகமாக அழுக்காறாமை, அவா அறுத்தல், வெகுளாமை, பொறையுடைமை என்ற நான்கு அதிகாரங்கள் அமைகின்றன. ஆக, மொழி, மெய், மனம் சார்ந்த அறங்கள் ஒழுக்கத்தின் அடிப்படையாய் அமைய, இதன் பின்னணியில் ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம் என்ற இரு அதிகாரங்களையும் இணைந்து வாசிக்கும் போது சில குறள்களின் அர்த்தங்கள் ஆழம் பெறுகின்றன.
அற ஒழுக்கத்தின் அடுத்த கட்ட மன நிலைகளாக அன்புடைமையையும் அருளுடைமையையும் நாம் தேர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த மன நிலைமைகளை பெளத்தத்தில் பேசப்படும் கருணா, மைத்ரி என்ற நிலைகளோடு ஒப்பிடலாம். கருணா என்பது சக மனிதர்களோடான அன்பாகவும், மைத்ரி என்பது சக உயிர்நிலைகளோடான அன்பாகவும் (மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு (குறள் 244) பரிணமிக்கின்றன. அருளுடைமை குறித்து "அதாவது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை என்று பரிமேல் அழகர் உரையும் குறிக்கிறது. அன்புடைமை பற்றி 'இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள் மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயன் ஆலின் இது வேண்டப்பட்டது. என்று பரிமேல் அழகர் உரை சொல்லும் போது அன்புடைமையை இல்லறத்தாரோடு என்று பொருத்திப் பார்ப்பதை விட சக மனிதர்களோடு என்று பொருத்திப் பார்த்துக் கொள்வது நல்லது. இதை அன்பிடைமை அதிகாரத்தில் வரும் குறள்களை வாசிக்குங் கால் உணரலாம்.
ஆக எதைக் கருதி மொழி, மெய், மனம் சார்ந்த மேற் சொன்ன அறங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு மெய்யுணர்தலைக் கருதியே அது இருக்க முடியும் என்ற அளவில் திருக்குறளின் மெய்யுணர்தல் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். புத்த கோசர் தனது "தூய்மையுறுவதற்கான வழி என்ற நூலில் மூன்று அடிப்படை மாசுக்களைக் குறிப்பிடுகிறார். அவை பேராசை (மிrலீலீனீ), வெறுப்பு (சிatrலீனீ), காமம் (யிnஜீatuation) என்பவை.
இவை சக்தி, எண்ணெய் போன்று தம்மளவில் மட்டும் மாசானவை அல்ல; மற்றவற்றையும் மாசுடையாக்குபவை என்பார் அவர். புத்த கோசரின் மூன்று அடிப்படை மாசுக்களைப் போலவே, திருக்குறளின் மூன்று அடிப்படை மாசுக்கள்- காமம், வெகுளி, மயக்கம்- மெய்யுணர்தலுக்குத் தடையாக உள்ளன. மயக்கம் என்பதை அறியாமை, அல்லது அகந்தை என்று பொருள் கொண்டால், விருப்பு (காமம்), வெறுப்பு (வெகுளி) என்ற மனம் சார் நிலைகளான் மாசுக்கள் மெய்யுணர்தலுக்குத் தடையாகின்றன. இந்தக் கருத்து 'யான் எனது என்னும் செருக்கு அறுப்போன் என்று வரும் குறளில் (குறள் 346) மேலும் விளக்கம் பெறுகிறது.
'தான் இல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை எனது என்றும் கருதி அவற்றின் கண் பற்றுச் செய்வதற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் என்று பரிமேல் அழகர் உரை விளக்கம் சொல்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் "தான்" என்பது உடல் உபாதைகளால் பாதிக்கப்படாது உடலினின்றும் தனியாய் என்றும் நிலையாய் அனுபூதியாய் ஒளிரும் ஆத்மா என்ற ரீதியில் சொல்லப்படவில்லை. "தான்" "எனது" என்னும் அகந்தை நிலைகளை அகற்றி ஒரு அகண்ட பிரக்ஞையைச் (Cosmic Consciousness) சுட்டுவதாய்த் தான் இருக்கிறது. இந்தக் கட்டத்தில் தவம் அதிகாரத்தில் வரும் 'தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் வரும் "தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (குறள் (268) என்ற குறளையும் நினைவு கூர்வது பொருத்தமானது. ஆக, நிலையாமை, தவம், துறவு, மெய்யுணர்தல் என்ற அதிகாரங்களை ஒருங்கு கூடி வாசித்தால் திருக்குறளின் அறத்தின் இலக்கு என்னவென்று புரிந்து கொள்ள உதவும்.
அறிவின் ஆற்றல் இற்றைநாளில் சூழலுலகென (Universe) விரிந்து அளப்பரிதாய் விளங்குகின்றது. மானுடச் சிந்தனைக் கதிர்களின் ஒளிச் சிதறல்கள் கலைகளின் தொடக்கம் என்பர் அறிவோர். பண்டைக் காலத்தில் அறிவியல் பொருண்மைகளும் கலையின் கலவையில் ஒளிர்ந்தன. தமிழ்ச் செம்மொழி இலக்கியங்கள் மேற்கணக்கு, கீழ்க்கணக்குப் பகுப்பில் பலுக்கப் பெறுகின்றன. இவற்றுள் கீழ்க்கணக்கில் சுட்டும் அறஇலக்கியங்கள் அறிவியல் பார்வைக்கு உரியனவாய் இலங்குகின்றன.
நோக்கம்
பதினெண்கீழ்க்கணக்கின் பதினோர் நூற்கள் அறத்தின் சிறப்பைப் பதிவுறு செய்கின்றன. மூன்று இலக்கியங்கள் மருந்துப் பொருட்களை நயமுற நவிலுகின்றன. இவையொத்த அற இலக்கியங்கள் எதிரொளிக்கும் கணிதம், மருத்துவம், வாழ்வியல், நீரியல், குடும்பக்கலை, சுற்றுச்சூழலியலன்ன கருத்துகள் நடைமுறை அறிவியல் அணுகுமுறைக்கு ஒட்டியுள்ளதை எடுத்துரைப்பது இவ்ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
தமிழ்மொழி அமைப்பும் செவ்வியல் பகுப்பும்
‘உலகம் எண்களால் ஆனது’ என்பர் கிரேக்க கணிதவியலறிஞர் பித்தகோரசு. தமிழர் சிந்தனையின் பதிவுகள் எண்ணைத் தொடக்கமாகக் கொண்டது. நிலம், தீ, நீர், வளி, விசும்போடைந்தும் கொண்டதுதான் உலகம் என்று வரையறை செய்யும் தொல்காப்பியர், அய்ந்துத் தனிமங்கள் (Elements) என்று எண்களால் குறிப்பிடுவது நோக்கற்பாலது.“ஒருவர் காவியம் கற்காமல், கவிதையைப் படிக்காமல் இருந்துவிடலாம். ஆனால், கணக்கைக் கற்காமல் இருக்க முடியாது. அதனால்தான் நம் முன்னோர்கள் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றும், எண் எழுத்து இகழேல்என்றும் கூறியுள்ளனர்.
வள்ளுவரோ,
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு– என்று எண்ணுக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளதைக் கவனித்தாலே, கணக்கின் முக்கியத்துவம்” தமிழ்ச் சிந்தனையில் கால்கொண்டுள்ளதைத் தெரிய வைக்கின்றது.
இயற்கையாகத் தோன்றிய மொழிகளுள் தாய் போன்றது தமிழ் என்கின்றார் பாவாணர். தமிழ் மொழியின் அமைப்பு எண்களால் சுட்டி விளக்குவதற்கு இசைவானது. இதனைத் தமிழ்ச் சான்றோர் தமிழ் நெடுங்கணக்கு என்று இயம்புவர். தமிழ் நெடுங்கணக்கின் பெரும எல்லை 247 எழுத்துகளாகும். இவை உயிர், மெய் என 2 ஆகி முறையே 12, 18 என விரியும். இவ் உயிரும், மெய்யும் புணர உயிர்மெய் 216 உய்யும். இவையும் 3 வகைமையாக வல்லினம் 6, இடையினம் 6, மெல்லினம் 6 எனச் சொல்லப் பெறுகின்றன.
இயல், இசை, நாடகம் என 3 ஆகி, அகம், புறமென அமுதத் தமிழ் 2 தொகையாகின்றன. மேற்கணக்கில் 18, கீழ்க்கணக்கில் 18 என அடிநிமிர்வில் பகுவாய்க் கணக்கிற்குப் பக்குவப்படுகின்றதைக் காணமுடிகின்றது.
நான்கு அடிகளுக்கு மேற்பட்டு ஈறிலியாய் அமையும் அடிகளைக் கொண்டமைவனவற்றை மேற்கணக்கென்றனர். நான்கு அடிகளுக்குட்பட்டவற்றை கீழ்க்கணக்கு என்றனர். இப்பதினெட்டையும் மிகச் சுருங்கியகணிதவாய்பாடன்னவெண்பாவில் நெடுவெண்பா, குறுவெண்பா என்றளந்து கட்டினர். இவ்வாறு அடிவரையறை, சுருக்கம், உரிய சொற்சொட்டும் கொண்ட வெண்பாக்களால் ஆனது 18 கீழ்க்கணக்குப் பனுவல்களாகின்றன. வெண்பா 4 அடிகளையும், குறுவெண்பா 2 அடிகளையும் கொண்டது. நாலடி வெண்பா போன்று இலக்கியங்களை எண்களால் குறிப்பிடும் போக்கில் கணிதவியல்சிந்தனைக்குத் தலைமையிடம் கொடுத்தவர்களாகத் தமிழ்ச் சான்றோர் திகழ்ந்தனர் என்பதை, “பழங்காலத்தில் கல்வி கற்பிக்கும்ஆசிரியரை, கணக்காயர் என்று அழைத்தமையும், கணக்கின் சிறப்பை விளக்கும்” என்று பூவண்ணன் தமிழிலக்கியப் புலத்தில் காணும் கணிதவியலின் ஆளுமைக்கூறு உறுதியாக அறிவிக்கின்றது.
கணிதவியலும் பதின்மவியலும்
பதினெண் கீழ்க்கணக்கு நூற்களை இயற்றியவர் கணிதத்தில் வல்லுநராய் விளங்கியுள்ளனர். இப்பனுவல்களின் பெயரமைப்பு எண்களால் சுட்டப் பெறுகின்றன. குறள் என்ற சொல் ஈரடிகளால் ஆன குறுவெண்பாவினைக் குறிக்கின்றது. நாலடியார், நான்மணிக்கடிகை, கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அய்ந்திணை அய்ம்பது, அய்ந்திணை எழுபது, திணைமொழி அய்ம்பது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம்ஆகிய 14 நூற்கள் எண்களின் பெயராலேயே விளிக்கப் பெறுவது நினைவுகூரத்தக்கது.
அண்மைக்கால அறிவியலின் அளவையியலில் காணும் பதின்ம முறை (தசம முறை) கணக்கீட்டு எளிமைக்கும், சீர்மைக்கும் கையாளப் பெறுகின்ற அறிவியல் அணுகுமுறை. இவ்வெளிய முறை, சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப்பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்துஎன்ற முதுமொழிக் காஞ்சிமொழிதலில் காணமுடிகின்றது. தமிழ்ச் சிந்தனையில் முகிழ்த்த இப் பதின்ம இலக்க முறைக்குரிய கணித அறிவியலுக்கு, “சிந்துவெளி மக்களிடையிலும் 10, 100 எனப் பதின் (தசம) மடங்கு எண்கள் தென்னாட்டுத் தமிழரிடமிருந்தே சென்றுள்ளன” என்று முனைவர் இரா.மதிவாணனின் கூற்று முன்மொழிவாக அமைகின்றது. “முதுமொழிகள் அல்லது மூதுரைகள் அறிவியல் நூல்களுக்குத் தொடக்கமாகத் தோன்றுகின்றன” எனும் முனைவர் க.த.திருநாவுக்கரசு ஆய்வறிவிக்கை தமிழரின் கணக்கியல் அறிவியலுக்கு வழிமொழியாகி வலுவூட்டுகின்றது.
அறநெறிகளும் மருத்துவக் கருத்துகளும்
அறிவியலில் உண்மையும் கருத்தும் கலந்து முதலிடம் பெறுகின்றன. இலக்கியங்களில் புனைவும், கற்பனையும் இழைந்த வருணனைகள் முன்னிலை வகிக்கின்றன. தமிழ் மருத்துவம் எனும் சித்த மருத்துவம் பல மருந்துப் பொருட்களைக் கொண்டது. இதனைத் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம்ஆகிய நூற்கள் இனிது நுவலுகின்றன. கடுக்கும் குணமுடைய பொருட்களான சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அன்றி இம்மூன்றையுமோ உணர்த்துவது திரிகடுகம். மக்களின் உடல் நோயைப் போக்கும் திரிகடுகம் போன்று இந்நூலின் பாடல்தோறும் உரைக்கப் பெறும் மூன்று கருத்துகள் மக்களின் உளநோய்களைப் போக்கும் மருத்துவ முறைக்குச் சான்றாக விளங்குகின்றன.
மானுடர் நோய்கள் பற்பல. இவற்றுள் மூப்புஎன்பதும் ஒருவகை நோய் என்பர் மருத்துவ அறிவியலர். இதற்குரிய மருத்துவ முறைக்கு மூப்பியல் (GERIATRIC MEDICINE) என்று பெயர். இம்மருத்துவத்தால், மனிதருடல் விரைவில் மூப்படையும் காலத்தை / போக்கைத் தள்ளிடப் போட இயலும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர். மருத்துவ அறிவியலின் இவ்வணுகுமுறை “ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்புடைய மக்களைப் பெற்றவர்கள். மூப்பெனும் நோய் அளந்து காக்கும் மருந்துப் போன்றவர்கள்” என்ற திரிகடுக நூலின் கருத்துகளில் எதிரொளிக்கக் காணமுடிகின்றது. ஏவா மக்கள் மூவா மருந்துஎன்ற முதுமொழியும் இதனைச் சுட்டுகின்றது. இவ்வாறு, “அற இலக்கியங்களுக்கு உயிராக விளங்குவன கருத்துகள்” என்பதால் அற இலக்கியங்கள் ஓர் அறிவியல் பண்பைப் பெற்றுள்ளதை நிறுவிடவியலுகின்றது.
அறிவியலில் இலக்கியப் போக்கு
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது திருமூலரின் திறம்பா கருத்து. உடம்பை வளர்க்கும் முறைமை தெரியின், உடலுடன் உயிர் வளர்க்கும் திறன் பெறவியலும். கல்லாமை நோய்க்கு மருந்து கல்வியாகிறது.உடல்நோயொத்து உயிர்க்கும் நோய்கள் பற்பல. பொய், கொலை, புலால் உண்ணுதல், களவு என்பன உயிரைப் பற்றும் நோய்கள். இவற்றிற்கு மருந்தாவன அருளுடைமை, மெய்ம்மை, புலால் உண்ணாமை, திருடாமை ஆகியன. சிறு வழு துணைவேர், நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், கண்டங்கத்தரி வேர் என்ற அய்ந்து வேர்களும் மக்களின் உடல்நோயைத் தீர்க்கவல்ல மருந்துகள். இதனையொத்து, சிறுபஞ்சமூலம் நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பெறும் அய்ந்து கருத்துகளும் மக்களின் அறியாமைப் பிணிக்கு மருந்தாவன அறக்கருத்துகள் என்று மருத்துவ அறிவியலை உவமைப்படுத்துகின்றது. தமிழ் அற இலக்கியத்தின் இப்போக்கு, இலக்கியத்தில் அறிவியல் கூறுகள் காணக் கிடைப்பன போன்று, அறிவியலில் ஓர் இலக்கியப் போக்கு இழையோடி மிளிர்வதைப் பதினெண் கீழ்க்கணக்கு நூற்கள் பகலவ ஒளியாய் எதிரொளிக்கின்றன.
நீரியல் அறிவியல்
உலகம் என்பது உயிர்கள் உள்ளடங்கியது. உயிரிகளுக்கு நீர் மூலப்பொருள். நீரின்றி உலகு அமையாதுஎன்பது தமிழரின் அறிவுக் கோட்பாடு. இந்நீரும் வான்மழையின் மூலமே இவ்வுலகு பெறுகின்றது என்கிறார் திருவள்ளுவர்.
மழை நீரின் அறிவியல் கண்டுபிடிப்பை “குழந்தைசாமி மாதிரியாக” உலகம் முழுவதும் பொறியியல் மாணவர்களால் கற்கப் பெறுகின்றது. நீர்நிலைகளில் உள்ள நீர் கதிரவ வெப்பத்தால் ஆவியாகிறது. இது வானில் முகிலாக உருவாகின்றது. இம்முகில் குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிந்து நீர்நிலைகளில் தேங்குகின்றது. இது நீர் சுழற்சி என்று நீரியலில் சொல்லப் பெறுகின்றது. இந் நீரியியல் அறிவியல் (hydrology’s)கருத்து, “உப்பு நீரைக் கடலிலிருந்து முகந்து ஆவியாகி, பின் மழை நீராகிய நன்னீரைப் பொழிகின்றது. அதுபோல் நற்பண்புடையார் தீதகற்றி மாண்புடையராக மக்களுக்குப் பயன்படுவர்” எனும் அறக்கருத்தில் காண ஏதுவாகின்றது. அற இலக்கியத்தின் இப்பதிவு ’கடல்நீர் குடிநீர் (நன்னீர்) ஆகும் பண்புடையது’ எனும் அறிவியல் உணர்வுடன் ஒத்திருக்கும் உண்மை புலனாகின்றது.
அறநெறியியலில் அளவையியல்
அறிவியலுக்கு எண்ணிக்கையும் அளவீடும் (Measurement)இன்றியமையாத அடிப்படைகள். தமிழ் அறநெறி இலக்கியங்களில் ஒன்றான ஏலாதியில், “ஏலம் ஆகிய ஆறுபொருள்கள் சேர்ந்த ஒருவகைச் சூர்ணம் ஏலாதி என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப் பட்டை இரண்டு பங்கு. நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நான்கு பங்கு, திப்பிலி அய்ந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படிச் சேர்த்து ஆக்குவதைப் போன்று, உயிருக்கு உறுதுணையான அறநெறியை உரைக்கும் ஒப்புமை நீர்மையில் இப்பெயரைப் பெற்றுள்ளது” என்ற கூற்றிலிருந்து அறிவியலின் அடிப்படைப் பண்பான அளவீடு, மருந்தியல் முறைகளுக்கு முதலிடம் கொடுக்கப் பெற்றுள்ளதை அறிய இயலுகின்றது.
முக்காலத்து உண்மை அறிவியலின் தன்மை
தற்காலத் தன்மை (Presence)அறிவியலின் உயிர்நாடி போன்றது. அதனுடன், முற்கால, பிற்காலத் தன்மைகளும் இன்றியமையாதன. இயற்கையின் அகப்புற நிகழ்வுகளின் உண்மைகள் தமிழ் அற இலக்கியங்களின் மாறா விதிகளாக (Laws) இடம் பெற்றுள்ளன. இதனை, “எக்குடியிலும் நன்மக்கள் தோன்றுவர்; உயிர்கள் பிறக்கும்போதே மறைகென மறையாது; இறக்கும்போது நிலவென நில்லாது; விண்மீன், திங்கள், கதிரவன் என்றும் உள்ளவை; நோயும் முயற்சியும் (சிகிச்சையும்) என்றும் உள்ளவை; ஈவாரும் ஏற்பாரும் என்றும் உள்ளனர். பிறப்பார் இறப்பார் என்றும் உள்ளனர்” என்ற இயற்கையின் நிலைத்த முடிபுகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றதை அறிய ஏதுவாகின்றது.
குடும்பக்கலை
கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், சுற்றத்தினர் கொண்ட நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்பது தமிழ்ப் பண்பாடு. இத்தகையக் கூட்டுக் குடும்பம் சிதைவுற்று வருகின்றது. குடும்பச் சிக்கல்களும், மணமுறிவுகளும் மிகுகின்ற காலமிது. இச்சூழலில், “இளமையில் கல்வி நல்குதல், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதல், சான்றோர் வழிச் செல்லுதல் உயர்ந்த அறங்கள்” என்று தமிழ் அறநெறி இலக்கியங்கள் காட்டும் குடும்பக்கலை (Science of Family Life)கருத்துகள் ஏற்புடையனவாகின்றன.
சூழலியல் அறிவியல்
இயற்கையுடன் இயைந்த வாழ்வியலைப் பழந்தமிழர் மேற்கொண்டனர். இற்றைச் சூழலியல் பேரிடர்க்குப் பழந்தமிழ்ச் சுட்டும் திணை ஒழுக்கமும், திணைத் தொழில் நுட்பமும் தீர்வாக அமைகின்றன என்பர் சூழலியல் அறிவியலர். இக்கருத்தை எதிரொலிக்கும் வகையில், “அறச் செயல்களுக்கும் இயற்கை நெறிகளுக்கும் நெருங்கியத் தொடர்பு நிலவுகின்றது. மன்னனும் மக்களும் நெறி தவறி நடந்தால் இயற்கை தன் நிலை மாறும். குடிமக்களை வருத்தி வரி வாங்கும் மன்னனின் நாட்டில் மழை பெய்யாது. பொய் பேசுவோர் நாட்டில் மழை பெய்யாது. வலிமை வாய்ந்த இயற்கையை நெறிப்படுத்தும் ஆற்றல் அறத்திற்கு உண்டு” என்ற திரிகடுகப் பாடல் கருத்து எடுத்தியம்புகின்றது.“காவோடு அறக்குளம் தொட்டல் மிகவினிதே” என்ற மூதுரையும் இங்கு எண்ணிப் பார்க்கப் பொருத்தமாகின்றது.
முடிவுரை
தமிழில் ஒளிரும் அற இலக்கியங்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நாடிய வேட்கையில் தேடிய மணிகளாக விளங்குகின்றன. அவை, “புறப்பொருள்களின் மறைபொருள்களைப் பேரார்வத்தோடு துருவித் துருவி ஆய்ந்து காண்பது அறிவியல்; அகப்பொருளின் மறைபொருளை ஆய்ந்து காண்பது இலக்கியம்” எனும் இரு பொருண்மைகளும் ஒருசேர அமைந்த அறிவியல் இலக்கியம் எனும் வகைமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
தமிழின் மூத்த குடிகளில் முக்கியமான குடியினர் பார்ப்பனர் எனும் அந்தணர். இது சாதியப் பிரிவு இல்லை, தொழில் முறைப் பிரிவு. தமிழின் மிக முக்கிய நூல்களான பொ.ஆ.7ம் நூற்றாண்டின் தொல்காப்பியம், பொ.ஆ. 9ம் நூற்றாண்டின் இயற்றியவர்கள் அந்தணர்களே. சங்கப் புலவர்களில் பலப் பிரிவு போலே அந்தணர்களும் நிறைய உண்டு.
திருவள்ளுவர் தமிழருள் இருந்த பல மூட வழக்கங்களை கண்டிக்கவே திருக்குறள் எழுதினார் என யாரும் சொல்வது இல்லை.
பாட்டுத் தொகை நூல்களில் பரத்தையர் நட்பு பெருமையாய் பேசுகிறது.
கள் குடித்தல், வெளிநாட்டு சாராயம்(ஏசுவின் ரத்தம்) குடித்தல் பெருமை என உள்ளது.
மாமிசம் உண்ணல் பெருதும் போற்றப் பட்டு உள்ளது- சங்கத் தொகை நூல்களில்.
இறைவனுக்கு விலங்கு படைத்தல் உள்ளது.
களவியல் என பெண்களோடு பழகி விட்டுச் செல்லல் பெருகவே -"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்பர்" என்பார் தொல்காப்பியரும்.
திருக்குறள் முழுவதிலும் ஒருமுறை கூட அவர் பயன்படுத்தா சொல் தமிழ், அதைவிடவும் மொழியால், இனத்தால் புனைகதைகளால் நாட்டு மக்களை பிரித்துக் கெடுப்போர் இல்லாதது நாடு என்பார்.
பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் என்பார், உட்பகை கொண்டு நடிப்போருடன் நட்பாய் இருத்தல் விஷம் கொண்ட பாம்போடு வாழ்தல் போலெ என்பார். தவறான நட்பு கொண்டால் உன் காலம் அல்ல வரும் சந்ததி கூட பாதிக்கும் என்பார் வள்ளுவர்.
கோவாவில் நுழைந்த வேசித்தன மதமாற்ற கிறிஸ்துவம் கத்தி பலத்தால் மாற்றும் ஆரம்பகாலத்தில் ப்ரான்சிஸ் சேவியர், லயோலா போன்றோர் செய்துள்ள அராஜகம் அளவில்லாதவை, இதை "கிறிஸ்துவ தண்ட நியாய சர்ச் விசாரணை" என பாதிரிகள் தலைமை விசாரணை மன்றம் என வைத்து செய்துள்ள கொலைகள், கற்பழிப்புகள் அராஜகங்கள் பற்றிய வரலாற்று உண்மைகளை இந்தியாவில் அழித்தனர்; ஆனால் ப்ரான்சைச் சேர்ந்த கிறிஸ்துவ மருத்துவர் தில்லான் என்பவர் உள்லே சிக்கி தான் பட்ட அவலத்தை எழுதியது கொண்டு மேலும் விசாரணை செய்து பேராசிரியர் ஏ.கே.பிரோல்கர் எழுதிய நூலையும் தடை செய்யப் பார்த்தார் பாதிரி ஹீராஸ் தடுக்கப் பார்த்தும் நூல் வெளிவந்தது, கிறிஸ்துவ பாதிரிகள் வேசித்தனமாய் மதமாற்றம் மட்டுமின்றி அராஜகம், கொலை, கற்பழிப்பு இவற்றை பைபிள் கதை நாயகர் ஏசு பெயரில் செய்தவை வெளிவந்த்ன.
Priolkar, A. K. The Goa Inquisition (Bombay, 1961).
Relation de l'inquisition de Goa, Gabriel Delon (1688, in French)
The history of the Inquisition, as it is exercised at Goa written in French, by the ingenious Monsieur Dellon, who laboured five years under those severities ; with an account of his deliverance ; translated into English, Henry Wharton (1689) (Large file, University of Michigan Archives)
An account of the Inquisition at Goa, in India by Gabriel Dellon (Re-translated in 1819)
Flight of the Deities: Hindu Resistance in Portuguese Goa Modern Asian Studies, Vol. 30, No. 2. (May, 1996), pp. 387–421.
Repression of Buddhism in Sri Lanka by the Portuguese (1505 - 1658)
1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள் தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கு என்று ஒரு இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும் அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார்.
போர்ச்சுகீசிய அரசர் அனுமதியில் கிறிஸ்துவ சமய புனித விசாரணை மன்றம் அமைத்து மன்றம் அமைத்து தன்னால் மாற்றப்பட்டவர்களை சர்ச்சில் பிடித்துவைக்க அதைப் பயன்படுத்தினர்.
இங்கு நாம் மதமாற்றியவர்களை தரத்தில் வைத்துக்கொள்ளவும், அவிசுவாசிகளை மதம் மாற்றவும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.... இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் அதனை வெறுக்கின்றனர். ஆகவே நமக்கு அவர்களை நாம் பிரசிங்கிக்கிற விசயங்களை கேட்க வைப்பதே ரொம்ப கடினமாக உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதென்பதை ஏதோ சாவது போல பார்க்கின்றனர். எனவே இப்போதைக்கு நாம் கிடைத்த மதம்மாறிகளை நழுவாமல் வைத்துக்கொள்வதில்தான் முழு கவனம் செலுத்த வேண்டும்." (St.Francis Xavier's Letter on the Missions, to St. Ignatius de Loyola, 1549)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்குறள் மணக்குடவர் உரை என்பது திருக்குறளுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவரும், பரிமேலழகருக்கு உரை வழிகாட்டியாக விளங்கியவருமான மணக்குடவர் என்பவர் திருக்குறளுக்கு எழுதிய உரையைக் குறிக்கும்[1].
இந்த உரையின் தனித்தன்மையையும் சிறப்பியல்புகளையும் ஆய்ந்து, கு. மோகனராசு போன்ற அறிஞர்கள் வெளியிட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் சில தகவல்கள் இங்கே தொகுக்கப்படுகின்றன.
"உரையாசிரியர்கள்" என்னும் நூலை எழுதிய மு.வை. அரவிந்தன் என்பவர் பின்வருமாறு கூறிகின்றார்:
திருக்குறள் உரைகளில், பரிமேலழகர் உரைக்கு அடுத்தபடியாக அச்சேறி மக்களிடத்தில் பரவிச் செல்வாக்குப் பெற்ற பெருமை, மணக்குடவர் உரைக்கு உண்டு. பரிமேலழகர் உரையை மறுப்பவர்களும் அவரது கருத்தை ஏற்காதவர்களும் மணக்குடவர் உரையையே நோக்குவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும்...
பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே. இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கிறார். அதிகாரந் தோறும் அமைந்துள்ள குறட்பாக்களை, கருத்து இயைபு நோக்கிப் பிரித்துப் பொருள்கூறும் முறையைப் பரிமேலழகர் மணக்குடவரிடமிருந்தே பெற்றுள்ளார். பல குறட்பாக்களின் உரையும் விளக்கமும்கூடப் பரிமேலழகர் மணக்குடவரைத் தழுவியே உரைக்கின்றார். "அறத்தாறு இதுவென" என்ற குறளின் (37) விளக்கவுரையில் மணக்குடவர், "இது பொன்றினாலும் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று" என்கிறார். பரிமேலழகர் அவர் கருத்தைத் தழுவி, "இதனாற் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது" என்று உரைக்கின்றார்.
"செவிக்குணவு" என்ற குறளின் (412) உரையில் மணக்குடவர், "பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காம நுகர்ச்சியை விரும்பும் ஆதலான், 'சிறிது' என்றார்" என்று கூறுகின்றார். பரிமேலழகர் அவர் கருத்தை மேற்கொண்டு "நோயும் காமமும் பெருகுதலால் 'சிறிது' என்றும் கூறினார்" என்று உரைக்கின்றார்.
"உலகம் தழீஇயது" என்ற குறளின் (425) உரையில் மணக்குடவர், "நீர்ப்பூப்போல மலர்தலும் குவிதலும் இன்றி, ஒரு தன்மையாகச் செலுத்துதல் அறிவு" என்று கூறுகிறார். பரிமேலழகர் அக்குறளின் விளக்கவுரையில், "கயப்பூப் போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான் எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்" என்று மணக்குடவர் கருத்தைத் தழுவி எழுதுகின்றார்.
வேறு சில இடங்களில் பரிமேலழகர், மணக்குடவரைப் பெரிதும் மதித்து அவர் உரையையும் கருத்தையும் சுட்டிச் செல்லுகின்றார். அவர் கருத்துப் பொருந்தா இடங்களைக் காரணங்கூறி மறுக்கின்றார். (மேற்குறிப்பு, பக்கங்கள்: 3;6).
முதன்முதல் மணக்குடவர் உரையில் ஒரு பகுதியாகிய அறத்துப்பால் உரையை வெளியிட்ட பெருமை வ.உ. சிதம்பரனாரைச் சாரும். இந்த உரை 1917இல் வெளிவந்தது. 1925இல், மணக்குடவரின் உரை முழுவதையும் கா. பொன்னுசாமி நாட்டார் வெளியிட்டார்.
முதன்முதலாக, பரிமேலழகர் உரை முழுவதும் 1849இல் சென்னையில் எம். வீராசாமியால் பதிப்பிக்கப்பட்டது என்பதைக் கருதும்போது, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மணக்குடவர் உரை பொதுமக்களின் கவனத்திற்கு வராமலே இருந்தது என்பது தெரியவருகிறது.
திருக்குறள் உரை என்றாலே அது பரிமேலழகர் உரைதான் என்னும் உயர்வு நிலையில் - உணர்வு நிலையில் பரிமேலழகரின் உரை தமிழறிந்தார் மனத்தில் ஆட்சி செலுத்தியது. பரிமேலழகர் உரை வைதிக சிந்தனையை உள்ளடக்கியிருந்ததும் இலக்கண நுட்பம் செறிந்ததுமாக விளங்கியது இதற்கு முக்கிய காரணம்.
ச. தண்டபாணி தேசிகர் எழுதிய "திருக்குறள் உரை வளம்" (பின்னர் ஏழு தொகுதிகளாய் அமைந்த "திருக்குறள் உரைக்களஞ்சியம்"), இரா. சாரங்கபாணி எழுதிய "திருக்குறள் உரை வேற்றுமைகள்" (பின்னர், மூன்று தொகுதிகள்), திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்ட "திருக்குறள் உரைக் கொத்து", கி.வா. ஜகந்நாதன் வெளியிட்ட "திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு" போன்றவை 1970-80களில் வெளிவந்தன. இந்நூல்களில் பண்டைய உரையாசிரியர்கள் மற்றும் புதிய உரையாசிரியர்கள் ஆகியோரின் திருக்குறள் உரைகளும் விளக்கங்களும் ஒற்றுமை வேற்றுமை காட்டி வழங்கப்பட்டன.
இவ்வாறு பரிமேலழகர் உரை மட்டுமே ஏற்புடையது என்ற நிலை மாறி, மற்ற உரையாசிரியர்களின் உரைத்திறனும் வளமையும் தெரிய வந்தன. இதனால் மணக்குடவரின் உரையும் அறியப்படலாயிற்று.
மணக்குடவர் திருக்குறளை மூன்று பால்களாகக் காண்கின்றார். அறத்துப்ப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பன அந்த மூன்று பால்கள் என்னும் பகுதிகள். மணக்குடவரிடம் காணப்படும் அந்த முப்பால் பகுப்பு, அவருக்குப் பின் வந்த பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய பழைய உரையாசிரியர்களின் உரைகளிலும் காணப்படுகின்றது.
இந்த முப்பால் பகுப்பு, எல்லா உரைகளிலும் ஒன்றாக இருப்பதாலும், திருக்குறளுக்கு முப்பால் என்பதே முதற்பெயராக இருந்துள்ளதாலும், வாழ்க்கையின் உறுதிப் பொருள்களாகத் தமிழர்கள் இந்த மூன்றையே இலக்கண இலக்கியங்களில் வெளிப்படுத்தியிருப்பதாலும், மரபு வழியாக - வழிவழியாக - திருக்குறளில் இந்த முப்பால் பகுப்பே இருந்துள்ளது எனக் கொள்ளலாம்.
வேறு சான்றாதாரங்கள் கிடைக்கும் வரை, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பால் பகுப்பைத் திருவள்ளுவரே செய்திருப்பார் என்றும் கொள்ளலாம்[2].
திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், அப்பால்களுக்குள் நான்காவது பாலாக "வீடு" என்பதைக் காணும் முயற்சி பழைய உரையாசிரியர்களிடம் தெரிகிறது. இதைப் பரிமேலழகர் செய்வதற்கு முன்னரே மணக்குடவர் செய்துள்ளார். அவரது உரையில்,
புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...
என்று மணக்குடவர் விளக்குகிறார்.
அதுபோலவே பழைய உரையாசிரியர் பரிப்பெருமாளும் கூறுகின்றார்.
திருக்குறளைப் புருடார்த்த வரையறைக்குள் கொண்டு வருகின்ற பரிமேலழகர் கூற்று[3] யாவரும் அறிந்ததே:
இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலில், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவது அல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூற்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.
இப்பார்வை, திருவள்ளுவரை ஒரு "தெய்வ" நிலைக்கு உயர்த்தும் முயற்சி இருந்ததையே சுட்டுகிறது.
முப்பால்களில் இயல் பகுக்கும் முறையில் வேற்றுமை[தொகு]
திருக்குறளின் அடிப்படைப் பிரிவாகிய அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் பிரிவு முறை வள்ளுவராலேயே செய்யப்பட்டது என்று கொண்டாலும், அந்த மூன்று பால்களின் உட்பிரிவாகிய "இயல்"கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்னும் போது பழைய உரையாசிரியர்கள் நடுவில் கூட பல வேற்றுமைகள் உள்ளன.
பண்டைய திருக்குறள் உரையாசிரியர்களுள் காலத்தால் முந்தியவரான மணக்குடவர் அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று நான்காகப் பகுத்துள்ளார்.
அதே முறையைப் பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் மற்றும் பரிமேலழகர் பின்பற்றுகின்றனர்.
இவ்வாறு அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்காகப் பகுத்துக் காணும் போக்கு மணக்குடவருக்கு முன் அல்லது அவரது காலத்தில் உருவாக்கம் பெற்றுவிட்டதைக் காண முடிகின்றது. இந்தப் பகுப்பை மணக்குடவரே உருவாக்கியிருக்கவும் கூடும். ஆனால் அதற்கான உறுதியான சான்றுகள் இல்லை.
பழைய உரையாசிரியர்கள் காலமான 300 ஆண்டுக் காலமும் இந்த மரபே தொடர்ந்துள்ளது. அதன் பின்னரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் சுகாத்தியர் உரை வரும் வரையிலும் (1889) இந்த மரபே தொடர்ந்துள்ளது.
இங்கே பரிமேலழகர் ஒரு உட்பிரிவைப் புகுத்தியுள்ளார். அதாவது, அறப்பாலின் நான்காம் இயலாகிய துறவறவியலை இவர் விரதம், ஞானம் என இரண்டாகப் பகுத்துக் கொள்கிறார். இந்த மாற்றம் மற்ற பழைய உரையாசிரியர்களிடம் காணப்படாத ஒன்று ஆகும்.
இந்தப் பாகுபாட்டைப் பரிப்பெருமாள் அப்படியே பின்பற்றுகின்றார். ஆனால், காலிங்கள் இவர்களிலிருந்து மாறுபட்டு,
அரசியல் - 38 முதல் 63 அதிகாரங்கள் அமைச்சியல் - 64 முதல் 108 அதிகாரங்கள்
என்று இரு இயல்களாக மட்டுமே பகுக்கின்றார். இவ்வாறு, பரிப்பெருமாள் அமைச்சியல் என்பதில் மணக்குடவர் சுட்டும் ஐந்து பகுப்புகளை ஒன்றாக்கிக் கொள்கின்றார்.
பரிமேலழகர் மேற்கூறிய இரண்டு பாகுபாட்டு முறைகளிலிருந்து வேறுபட்டுப் புதியதொரு பகுப்பு முறையை உண்டாக்கிக் கொள்கிறார். அப்பகுப்பு முறை வருமாறு:
இயல் பெயர்
அதிகாரங்கள் அமைப்பு
அரசியல்
39 முதல் 63 முடிய
அமைச்சியல் (அங்கவியல்)
64 முதல் 95 முடிய
ஒழிபியல்
96 முதல் 108 முடிய
மணக்குடவரின் பகுப்பு முறையிலிருந்து காலிங்கரும் பரிமேலழகரும் வேறுபடுகின்றார்கள் என்றாலும், அவர்கள் அதிகார வைப்பு முறைகளை மாற்றிவிடவில்லை. அதிகார வைப்பு முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு, பகுப்பதில் தான் வேறுபடுகின்றார்கள்.
இவர்களை அடுத்து வரும் திருவள்ளுவமாலைப் புலவர் போக்கியார், பொருட்பாலைப் பின்வருமாறு ஏழாகப் பகுப்பதைக் காண முடிகின்றது: அரசியல் அமைச்சியல் அரணியல் பொருளியல் படையியல் நட்பியல் குடியியல்
இந்த அமைப்பு முறை, பொருட்பாலில் வரும் முதல் அதிகாரத்தோடு பொருந்த வருகின்றது. இந்தப் பகுப்பே இன்று பெரிதும் பின்பற்றப்படுகின்றது.
காமத்துப்ப்பால் இயல் பகுப்பில் உரையாசிரியர்களிடையே பெருத்த வேறுபாடு காணப்படுகின்றது. மணக்குடவர் காமத்துப்பாலைக் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பகுத்து ஒவ்வோர் இயலுக்கும் ஐந்தைந்து அதிகாரங்களாகக் கொண்டுள்ளார் என்பர். இதை,
காமத்துப்பால் கூறுவார் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணையும் முதல் கரு உரிப்பொருள் பற்றிப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை எனவும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை எனவும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் எனவும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம் எனவும் ஒரோ ஒரு நிலம் ஐந்து அதிகாரமாக இருபத்தைந்து அதிகாரத்தான் கூறி
என வரும் மணக்குடவர் கூற்றுவழி அறிய முடிகின்றது.
காலிங்கரும் பரிமேலழகரும் வேறு வகையில் காமத்துப்பாலின் இயல்களைப் பிரிக்கின்றனர்.
மணக்குடவர் அமைப்புப்படி இயலுக்குள் வரும் அதிகார வைப்பு முறை[தொகு]
திருக்குறளின் இயல்களில் வரும் அதிகார வைப்புகளிலும், அதிகார முறை வைப்புகளிலும் மணக்குடவர் போக்குக்கும் பிற பழைய உரையாசிரியர்களின் போக்குக்கும் வேறுபாடுகள் உள்ளன.
அதிகாரங்களுக்குள் வரும் குறள்களை வரிசைப்படுத்தி வைப்பதில் மணக்குடவர் ஒரு முறையைக் கையாளுகின்றார். ஆனால் பிற பழைய உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணப்படி குறள் வைப்பு வரிசைமுறையை மாற்றியுள்ளார்கள்.
திருக்குறளின் முதல் அதிகாரத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்:
திருக்குறள் முதல் அதிகாரத்தில் வரும் குறள்களின் முதல் சீர்கள்
மணக்குடவர் வைப்பு முறை
பரிப்பெருமாள் வைப்பு முறை
பரிதியார் வைப்பு முறை
காலிங்கர் வைப்பு முறை
பரிமேலழகர் வைப்பு முறை
அகர முதல எழுத்தெல்லாம்
1
1
1
1
1
கற்றதனால் ஆய பயன் என்கொல்
2
2
2
2
2
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
3
3
3
3
3
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
6
6
5
7
4
இருள் சேர் இருவினையும் சேரா
7
7
6
6
5
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
8
8
7
7
6
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு
4
4
6
4
7
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு
5
5
10
9
8
கோளில் பொறியில் குணமிலவே
10
10
8
5
9
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
9
9
9
10
10
மணக்குடவர் கொள்ளும் திருக்குறள் பாடமும் வேறுபாடுகளும்[தொகு]
தலைமுறை தலைமுறையாக ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு வந்த திருக்குறளின் படிகள் பல பாட வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில் வியப்பில்லை.
என்றாலும், மணக்குடவர் திருக்குறளின் முதல் உரையாசிரியராக விளங்குவதால் அவர் கையாளுகின்ற மூல பாடத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் அவருடைய மூல பாடத்திலிருந்து, பின் வந்த பழைய உரையாசிரியர்கள் பின்வரும் எண்ணிக்கையில் வேறுபடுவதை அறிய முடிகிறது:
மணக்குடவர் குறள் பாடத்திலிருந்து வேறுபாடுகள்
உரையாசிரியர்
குறள் பாட வேறுபாடுகளின் எண்ணிக்கை
பரிப்பெருமாள்
16
பரிதியார்
20
காலிங்கர்
171
பரிமேலழகர்
120
மேலே காட்டிய பட்டியலிலிருந்து காலிங்கரும் பரிமேலழகரும் தாம் விரும்பியவாறு பாடங்களை மாற்றியுள்ளனர் என அறிய முடிகின்றது. இந்தப் பாட வேறுபாடுகளுக்கு ஒருவேளை அவர்களுக்குக் கிடைத்த சுவடிகளும் காரணமாக இருக்கலாம்.
எனவே, திருக்குறளின் பால் பகுப்பில் (அறம், பொருள், காமம்) பழைய உரையாசிரியர்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பது தெளிவு. பால் பகுப்பைத் திருவள்ளுவரே செய்திருப்பார் என்று நம்ப இடமிருக்கிறது.
ஆனால், இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகிய இவற்றின் வைப்பு முறையில் பழைய உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர். அதுபோலவே, அவர்களிடையே பாட வேறுபாடுகளும் பல காணப்படுகின்றன.
இதிலிருந்து, பிற்காலத்தில் திருக்குறளுக்கு முறை மாறிய உரைகள் எழுந்ததற்கு வித்திட்டவர்கள் பழைய உரையாசிரியர்களே என்பது தெளிவாகிறது.
சங்க இலக்கியத்தின் வலுவான பின்புலத் துணையுடன் புதிய யாப்பில், புதிய முறையில், பல புதுமைக் கருத்துக்களோடு சமூக முன்னேற்றத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு பொருட்பெருக்கமும் சொற்சுருக்கமும் கொண்ட தனிச்சிறப்புடன் எழுதப்பட்ட ஒப்புயர்வற்ற நூல் குறள். இது அற நூல், மெய்யியல் நூல், இலக்கிய நூல், அரசியல் நூல், இன்ப நூல், வாழ்வியல் நூல் என்ற பல பரிமாணங்களை உடையது. குறள் யாக்கப்பட்டது புலவர்களுக்காகவோ அறிஞர்களுக்காகவோ அல்ல. யாரையும் குறிப்பாக நோக்காமல் எல்லா நிலையில் உள்ள உலக மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணம் எளிய நடையில் படைக்கப்பட்ட பனுவல் ஆகும் இது. மனிதன் பலவேறு நிலமைகளில் கொள்ளவேண்டியவற்றையும் தள்ளவேண்டியவற்றையும் கூறி, நாட்டிலே நல்லாட்சி ஏற்பட, இல்வாழ்வான் சான்றாண்மையுடனே குடிமையை நடத்தி, இன்பம் நுகர்ந்து, வாழ்வாங்கு வாழ வழி கூறுவது நூலின் நோக்கமாகும்.
நூல்
திருக்குறள் என்பது அழகிய குறள் வெண்பாவினால் ஆகிய நூல் எனப் பொருள்படும். திரு என்னும் அடைமொழி ஒவ்வொரு குறளையும் சிறப்பித்து நிற்கிறது. இந்நூலை வள்ளுவர் குறட்பாக்களால் கூற எடுத்துக்கொண்டதால், சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல் முதலான அழகுகள் இனிதாக அமைந்தன. ஏழு சீர்களில் எதுகை மோனை இன்பத்துடன், இலக்கியச் சுவை மிக்க, கவித்துவம் ஒளியிடும் நுலாக அமைந்துள்ளது. குறட்பாக்கள் அனைத்தும் கேட்டாரை மீண்டும் தம்மை நோக்கி நோக்கப் பயன்கொள்ள நிற்கும் நிலைமை வாய்ந்தன.
பதினெண்கீழ்கணக்கு
சங்க கால இலக்கியங்களில் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சேர்ந்து பதினெண்மேல்கணக்கு என்று பகுத்துக் காட்டப்பட்டது. சங்கம்/சங்கம் மருவிய கால பதினெட்டு நூல்களின் தொகுப்பு பதினெனண்கீழ்க்கணக்கு எனப்பெயர் பெற்றது. ஏறத்தாழ 500 ஆண்டுகளில் எழுதப்பட்ட பலவேறு சிந்தனை நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற ஒரே தொகை நுல்களாயின. கீழ்க்கணக்காவது- பெரும்பாலும் ஐந்தடியின் மிகாத பாடல்களால், ஐம்பதில் குறையாமல் ஐந்நூற்றில் மிகாமல், வெண்பா யாப்பில் அமைவது- என்ற இலக்கண வரையறையில் நூல்வகைப் படுத்தினர் என்று பழம் செய்யுட்களால் தெரியவருகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பன்னிரண்டு நீதி நூல்கள். இவை யாவும் வெண்பாக்களால் ஆனவை. திருக்குறள் எழுசீர் வெண்பாவாகும். இந்நூல்களின் பாடல் மற்றும் யாப்புவகை ஒருதன்மைத்தானது எனக் கொள்ளப்பட்டு பதினெண்கீழ்க்கணக்கு என்ற இந்தத் தொகுப்பில் திருக்குறளையும் சேர்த்து விட்டனர்.
குறள் வெறும் நீதிநூல் எனப் பிற்காலத்தவர் முடிவு எடுத்துப் பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாகத் தொகுத்துள்ளனர். பதினெண்கீழ்க்கணக்குத் தொகுதி முறையே மிகத்தவறானது என்று ஆய்வாளர்கள் கருதுவர். இத்தொகுதியினுள் சங்க நூல்களும் சங்கம் மருவிய நூல்களும் இருக்கின்றன. குறள் இத்தொகுப்பில் கண்ட ஏனைய 17 நூல்களுக்கும் முற்பட்டது. மற்ற நூல்களின் பழமையையும் கருத்தையும் உயர்த்தவே குறள் இவைகளோடு இணைக்கப்பட்டதா? குறள் ஐந்நூறில் மிகுந்த ஆயிரத்து முந்நூற்று முப்பது பாடல்களால் ஆனது; எந்த வகையில் குறளை பதினெண்கீழ்க்கணக்குத் தொகை நூல்களில் ஒன்றாகப் பகுத்தார்கள்? என்ற கேள்விகள் எழுகின்றன. அத்தொகுதியில் சேர்க்கப்பட்டதால் திருக்குறளின் உள்ளார்ந்த மெய்ப்பொருளும், நுவல் பொருளும், மறுமலர்ச்சிச் சமுதாயத்தைப் படைக்கும் புதுமைக் கொள்கைகளும், மறைக்கப்பட்டு, திரிபு படுத்தப்பட்டுத் தோற்றம் தருகிறது என்றும் இதனால் குறள் வெறும் நீதி நூலாகவும் சிற்றிலக்கியமாகவும் வடமொழி வழிநூல் கருத்துக்களின் தொகுப்பாகவும் திசை திருப்பப்பட்டு விட்டது என்றும் அதன் நுண்மாண் நுழைபுலத் திறன்கள், அஃகி அகன்ற அறிவுக் கோட்பாடுகள், உண்மைப் பொருள் விளக்கங்கள் நமக்குத் தரப்படவேயில்லை என்றும் பதினெண்கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டதால் குறளுக்குப் பிறழ்ச்சியும் அநீதியும் நேர்ந்தன என்பார் கு ச ஆனந்தன். தனிப் பெருமை வாய்ந்த திருக்குறளை பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாக்கிக் மற்ற ஏனைய சிறு நூல்களில் ஒன்றாய்க் கூறியது பொருத்தமற்றது. குறளைத் தொகை நூல்களில் ஒன்றாகப் பார்க்காமல் தனி நூலாகப் பார்ப்பதே ஏற்புடையதாகும்.
முப்பால்
சங்ககாலத்தில் தமிழ் மரபைச் சார்ந்த இலக்கியக் கோட்பாடு அகம், புறம் என்றிருந்தது. வடநூலார் அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு உறுதிப் பொருட்களைச் சொல்கிறார்கள். சில சஙகப்பாடல்கள் முப்பொருள் பற்றிப் பேசின. அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப (செய். 105)என்று தொல்காப்பியமும் அறமும் பொருளும் இன்பமு மூன்றும் ஆற்றும் பெருமநின் செல்வம் (புற. 28) சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல (புற. 31) என்று புறநானூறும் கூறுகின்றன.
முப்பால் பகுப்புப் பற்றிய சோமசுந்தர பாரதியார் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது: "இனி, இதுவே போல், குறள் நூலும் இன்பமல்லா எல்லாப் பொருளுமே புறப்பகுதி ஒன்றிலே அடங்கும். அதை அறத்துப்பால்-பொருட்பால் என்றிரு வகையாக்க யாதோர் அவசியமும் நியாயமும் இல்லை.அது தமிழ்மரபும் ஆகாது. அறமற்ற பொருளும் பொருள் தொடர்பற்ற அறமும் கருத்தொணாதன. அது போலவே அறத் தொடர்பற்ற இன்பமும் இன்பமாகக் கொள்ளாத அறமும் தமிழறிஞர்கட்கு உடன்பாடில்லை. அறமே 'சிறப்பீனும் செல்வமும் ஈனும்' எனவும் 'அறத்தான் வருவதே இன்பம்' எனவும் பேசும் பொய்யில் புலவர் பொருளுரைகள் போற்றற் பாலனவாம். எனவே அறம், பொருள் என்ற இரண்டும் ஒன்றோடொன்று இன்றியமையாத் தொடர்புடைய வாகலும், அதனால் அவை வெவ்வேறு பொருவகைகளாகாமையும் இனிது விளங்கும். ஆனால், அவை அனைத்தும் அகத்தின் வேறாய புறப்பொருள் வகைகளாய் அடங்கும் என்பதும் மறுக்கொணாது. உண்மை இதுவாகவும் குறட்பொருளைத் தமிழ் மரபுக்கேற்ப அகம் புறம் என்றிருவகையாக்காமல் அறத்தை வேறு பிரித்து அறம், பொருள், இன்பம் என முப்பாற்படுத்தியதோடு, இன்பத்தைக் காமத்துப் பால் எனப் பெயரிட்டதும் உரைகாரர் குறளை வடநூல் வரன்முறையாக்கும் நோக்கத்தாலன்றி அதற்கு வேறு தக்க ஏது ஏதுவுமில்லை. மேலும் அப்பாகுபாடு குறளுக்குப் பொருள் நிறைவும் மாட்சியும் தருமாறில்லை எனக் கான்கிறோம். அது உரைகாரர் குறள் துவக்கத்தில் பாயிரம் என்று வேறு ஒரு பகுதி வகுப்பதால் தெளிவாகும். அவர் கொண்ட மூவகுப்பிலும் அடங்காத ஊழ்-உழவு-கள்ளாமை, கயமை- வரைவின் மகளிர்-மருந்து-மானம் போன்ற பலவற்றை வலிந்து பொருத்தமின்றிப் பொருள் வகையில் புகுத்தி இடர்ப்படுவதாலும் அவர் வீண் முயற்சி விருதாவாவது தெளிவும் தேற்றமுமாகும். அவை அனைத்தும் தமிழ்ப் புறப்பொருள் வகையில் அடங்கி அமைவதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கதாம்."
வள்ளுவர் தமிழ் இலக்கியக் கோட்பாடோடு மேலே சொன்ன உறுதிப் பொருள்களை இணைத்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் போல் தோன்றுகிறது. மேலும் அறநெறியோடு இந்த உலகத்தில் வாழ்ந்தால் தானாகவே அமைவது வீடு என்பதால் சிந்தைக்கு எட்டாத வீட்டை கைவிட்டு வள்ளுவர் திருக்குறளை அறம், பொருள், காமம் என முப்பாலாய் தன் நூலில் பகுத்துக்கொண்டார் என்று விளக்கம் அளிப்பார் பரிமேலழகர். எனினும் குறளை ஒரே பாலாகக் கொண்டு நூல் முழுவதையுமே தொடர்ச்சியாக அறிந்து அதை ஒரு வாழ்வியல் நூலாகக் கொள்வது சிறப்புடைத்து.
குறள் அமைப்பு
இலக்கியப் படைப்புகள் சிறந்த வெற்றியினைப் பெறுவதற்குப் பாடு பொருளுடன் அவற்றின் வடிவமும் அடிப்படையாக அமையும். யாப்பின் கட்டுக்கோப்புடன் இருக்கும் இலக்கியங்கள் யாவும் இன்றும் அழியா இலக்கியங்களாக உள்ளன. எப்பொருள் எந்த யாப்பில் பாடினால் சிறக்கும் என்பதனை அறிந்த கவிஞர்கள் அந்தந்த அடிப்படையில் இலக்கிய வடிவங்களை வகுத்தனர். வெண்பா யாப்பும் அவ்விலக்கிய வடிவங்களுள் ஒன்றாகும். குறள் முழுமையும் குறுகிய எழுசீர் வெண்பாக்களால் ஆனது. குறட்பாக்களான வேறு ஒரு பெரிய இலக்கிய நூல் முன்பு இருந்ததாகத் தெரியவில்லை. இலக்கண நூல்கள் மட்டும் சில இருந்தனவென்று யாப்பருங்கலவிருத்தியால் தெரிகின்றது. வெண்பா பிரிவில் முதலில் வைக்கப்பட்ட பா வகை குறட்பா ஆகும். குறள் என்பது குறுமை - குறுகியதைக் குறிக்கும். குறுகிய பா குறட்பா. இது குறுவெண்பாட்டு என்றும், குறள் வெண்பா என்றும் சொல்லப்படும். முதல் அடி நான்கு சீரும், இரண்டாம் அடி மூன்று சீருமாக ஏழு சீர் கொண்டது குறள் வெண்பா. எளிதில் ஓதும் வண்ணம் பெரும்பான்மையும் ஓரசை முதல் மூன்றசைகளுடைய் எழுத்துக்களால் அமைந்துள்ளன. ஒவ்வொரு குறளும் முப்பதுக்குட்பட்ட எழுத்துக்களால் ஆனது. ஈற்றடியிலுள்ள இறுதிச்சீர், நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நால்வகை அசையுள் ஓர் அசையாய் நிற்கும்.
"வெண்பாவில் வேற்றுச் சீர்கள் கலந்துவிட்டால் ஓசை கெட்டுப் போகும். உயர்ந்த ஒழுக்கத்தை வரையறுக்கும் நூலுக்கு வேற்றுச்சீர் விரவினும் ஓசை கெடும்; வெண்பா பாடுபவனுக்குத் துன்பம்; படிப்பனுக்கு எளிது. வெண்பாவை இருமுறை படித்தாலே பாடம் வந்துவிடும்; சிறந்த கருத்துக்களத் தாங்கி நிற்கும் பாக்களும் பயில்வார் மனத்தில் எளிதில் பதிய வேண்டும் என்பதால் வெண்பா யாப்பு வள்ளுவரால் விரும்பப்பெற்றது; வெண்பாவிற்கு உரிய ஓசை செப்பலோசை; செப்பல் என்றால் சொல்வது என்று பொருள்; அறக்கருத்துகளை எடுத்துச்சொல்வதற்கு செப்பலோசையுடன் பிற தளைகள் கலவாத தூய்மையுடையதாக வெண்பா கருதப்பட்டது."- இவை ச தண்டபாணி தேசிகர் கூறும் விளக்கங்கள். திருவள்ளுவர் தம்நூலை எல்லோரும் ஓதி உணர விரும்பியதால் செய்யுள் வழக்கினை மட்டும் மேற்கொள்ளாமல் பேச்சு வழக்கினையும் பின்பற்றிச் சென்றார்.
பகுப்பு
இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும், சிறு பிரிவு இயல் எனவும், அதனில் சிறு பிரிவு அதிகாரம் எனவும் அமைக்கப் பெற்றுள்ளது. பால்: பகுதி என்னும் பொருள்பட்டது. இயல்: இலக்கணம் என்ற பொருள் கொண்டு பாலின் உட்பகுதியாகிய 'கற்பியல்' போன்றவற்றின் இலக்கணம் உணர்த்தும். அதிகாரம்: இயலின் உட்பிரிவாகி அதிகரித்தல் உடைய பகுதி எனப் பொருள்படும். ஏனைய நூல்களில், இப்பெயர் பெரும் பிரிவிற்கே வழங்கியிருக்கிறது. குறித்த பத்துக் குறளிலும் அந்தப் பொருள் அதிகரித்து நிற்பதால் இப்பெயர் இடப்பெற்றிருக்கலாம் என்கிறார் ச தண்டபாணி தேசிகர். பாக்கள்- ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை உடையது. இவ்வாறாக 133 அதிகாரங்களுக்கு மொத்தம் 1330 குறட்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு குறளும் முப்பதுக்குட்பட்ட எழுத்துக்களில் அமைந்தவையாய் உள்ளது. குறள் அமைப்பொழுங்கை நினைவிற்கொள்ள: நூல் - 1 ; பால் - 3 ; இயல் - 13; அதிகாரம் - 133; பாக்கள் - 1330 குறளைப் பெரும் பிரிவாகப் மூன்று பாலாகப் பிரித்தாலும், அறமே மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டு, ஒழுக்கம் பற்றிய அறமும், பொருளீட்டல் பற்றிய அறமும், இன்பம் பற்றிய அறமுமாக இயற்றப்பட்டதாக அறிஞர்கள் கருதுவர்.
குறளின் பகுப்பு முறையும் மிகுந்த ஐயப்பாட்டுடனே நோக்கப்படுகிறது. திருக்குறள் மூலநூல் அதன் ஆசிரியரால் செய்யப்பட்ட மெய்யான பகுப்புக்களுடன் இன்றுவரை முழுவடிவில் கிடைக்கவில்லை. திருக்குறளின் முப்பால் முறையும், இயல்கள் பகுப்பும் அதிகார அடைவும் வள்ளுவரால் செய்யப்பட்டனவா? திருக்குறள் என்ற பெயரோ முப்பால்களின், இயல்களின் அதிகாரங்களின் தலைப்புக்களோ குறட்பாக்களைத் தொகுத்தவர்கள் தந்தனவா? பாக்களையும் அதிகாரங்களையும் வரிசைப்படுத்தியது வள்ளுவர்தானா? என்ற ஐய வினாக்கள் எழுப்பப்ப்ட்டுள்ளன.. உரை ஆசிரியர்கள் வழியும் திருவள்ளுவமாலை பாடியவர்கள் வழியும் பால், இயல், அதிகாரம், பாக்கள் ஆகியவற்றின் துணையுடன்தான் அமைப்பு முறையைக் கணிக்க முடிகிறது. பாக்கள் இயற்றி அதிகாரப் பெயரிட்டுப் பகுப்பு செய்தது வள்ளுவர்தான் என்பதில் பெரும்பாலும் எல்லா ஆய்வாளர்களும் உடன்படுகின்றனர். ஆனால் இயற்பகுப்பு, அதிகார வரிசை, குறள் உட்பகுப்பு, முறை வைப்பு இப்பொழுது உள்ளபடியே மூலநூலில் இருந்தது என்று சொல்ல முடியாதிருக்கிறது. இவற்றில் உரைகாரர்கள் வேறுபடுகின்றனர். எனவே இவை உரைகாரர்களது பிற்காலப் படைப்பே என்று ஆய்வாளர்கள் கருதுவர்.
பரிமேலழகர் பகுத்தபடி 9 இயல்கள். அறத்துப்பால்: (38 அதிகாரங்கள்) 1. பாயிரம்- 4அதிகாரங்கள்; 2.இல்லறவியல்- 20அதிகாரங்கள்; 3.துறவறஇயல்-13அதிகாரங்கள்; 4.ஊழ்-1அதிகாரம். பொருட்பால்: (70அதிகாரங்கள்) 5.அரசியல்-25அதிகாரங்கள்; 6.அங்கவியல்-32அதிகாரங்கள்; 7.ஒழிபியல்-13அதிகாரங்கள். காமத்துப்பால்: (25அதிகாரங்கள்) 8.களவியல் (7 அதிகாரங்கள்); 9.கற்பியல் (18 அதிகாரங்கள்) மேற்சொன்னபடி மொத்தம் 133 அதிகாரங்களாகும். பரிமேலழகர் பகுப்பு முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் “வள்ளுவரது முறையை உணர்வதற்குப் பரிமேலழகரைக் காட்டினும் பிற உரைகாரர்களே நாம் நம்பித் துணையாகக் கொள்வதற்கு உரியன. மணக்குடவர் நமக்கு துணையாகலாம் என்று தோன்றுகிறது. இவரது செய்யுள் வைப்புமுறை பெரும்பாலும் வள்ளுவரது ஆகலாம். ஆனால் இவர் உரை கிடைக்கக்கூடும் பிரதிகள் அனைத்தையும் ஒப்பு நோக்கி ஆராய்ச்சி முறையாகப் பதிப்பிக்கப்பெறவில்லை” என வையாபுரிப்பிள்ளை தனது ஆய்வுக் கருத்தில் சொல்கிறார்.
71,110 ஆகிய இரண்டு அதிகாரங்களுக்கும் 'குறிப்பறிதல்' என்ற பெயரே உள்ளது. எனவே 132 தலைப்புகளே 133 அதிகாரங்களுக்கு உள்ளன. காலிங்கர் தம் உரையில், 110-ம் அதிகாரத்தைக் 'குறிப்புணர்தல்' என வேறு பெயரில் குறிக்கிறார்.
பாயிரம்
பாயிரம் என்பது நூலைப் பற்றிய பருப்பொருள்களை அறிவிப்பது. பாயிரத்தால் நூற்போக்கு அறியப்படும். குறளின் முதல் நான்கு அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்பனவற்றைக் கூட்டாக பாயிரம் என்று கூறுவர். குறளின் கடவுள் வாழ்த்திற்கும் ஏனைய நூல்களின் கடவுள் வாழ்த்திற்கும் வேறுபாடு உண்டு. ஏனைய நூல்களில், எடுத்துக்கொண்ட நூல் இனிது நிறைவேறுதற்காகவும் நின்று நிலவுதற்காகவும் கவிஞர் கடவுளை வாழ்த்துவர். இந்நூலில் கடவுளின் பொது இயல்பும், சிறப்பியல்பும் கூறி, அவரை வாழ்த்துததால் உண்டாகும் பயனும் கூறப்படுகின்றன. குறளில் கடவுளை வாழ்த்துதலும் தலையாய அறம் அல்லது ஒழுக்கம் என்பது உணர்த்தப் பெற்றதேயன்றி, ஏனைய நூல்களைப் போலப் பயன் கருதிக் கடவுள் வாழ்த்தப்படவில்லை. கடவுளை வாழ்த்தாமல், கடவுளை வாழ்த்துதல் கற்றவருக்கும் மற்றவர்க்கும் உள்ள கடமை என்று அதனையும் ஓர் ஒழுக்க இயலாக வள்ளுவர் உரைத்தார். பாயிரத்திலுள்ள நான்கு அதிகாரங்களுமே வள்ளுவரால் இயற்றப்படவில்லை என்று ஒரு சாரார் கூறினர். வான் சிறப்பு அதிகாரம் எந்த வகையில் பாயிரத்தில் சேர்க்கப்பட்டது என்றும் வினவப்படுகிறது. ஆனால் அவர்கள் கூற்றில் வலு இல்லை என்பதும் பாயிரம் வள்ளுவர் இயற்றியதே என்பதுமே பெரும்பன்மையோர் கருத்தாகும்.
மூலநூலா? வழிநூலா?
திருக்குறளின் முதல்நூல்கள் எவை என்று ஆராய்ந்தவர்கள் மேம்போக்காக சில அடிப்படை உண்மையற்ற முடிவுகளைக் கூறினர். அவற்றில் ஒன்று குறள் வடமொழி இலக்கியங்களின் வழிநூல் என்பதாகும். தமிழ்நூல்களில் சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் எப்படி குறளுக்கு முன்னோடியாக வழிகாட்டி நூல்களாக இருந்திருக்கின்றனவோ அதேபோல சில வடமொழி இலக்கியங்களின் தாக்கமும் குறளுக்கு இருந்திருக்கலாம். எல்லா நூல்களும் பல்வேறு நூல்களிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு பிறப்பனவே என்ற புரிதலில் இருந்து எழும் எண்ணமாகவும் இது இருக்கக்கூடும். குறள் ஒருவரால் இயற்றப்பட்டதா? அல்லது பலரின் கூட்டு முயறசியால் நாலடியார் போல உருவான தொகை நூலா? என்றுகூட சிலர் ஐயுற்றனர். பரந்துபட்ட பல்வேறு துறைகளுக்குரிய விழுமிய கருத்துக்களை ஒரு தனிப் புலவரால் எடுத்துரைக்க இயலுமா என வியப்புற்றுதால் எழுந்த வினாக்களே இவை. "எல்லா நூல்களிலும் நல்லன வெடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கியல்பு" என்னும் பரிமேலழகர் (குறள் 322) கருத்துரை இங்கு நோக்கத்தக்கது.
குறள் எப்படி வடநூலின் வேறுபடுகிறது? வள்ளுவர் செய்த பனுவலில் வடநூலார் வழிகாட்டும் வீடில்லை . பெற்றோரும், மனைவி, குழந்தைகள் பசியால் வருந்துவராயின் தீயன செய்தாயினும் புறந்தருக என்பதும் இறக்க நேர்ந்தால் இளிவந்தன செய்தாயினும் உய்க என்பது வடநூன்முறையாகும். ஆனால் குறளோ உடம்பினது நிலையின்மையை வலியுறுத்தியும் மானத்தினது நிலையுடைமையைத் தூக்கியும் 'ஈன்றவள் பசி காண்பாளாயினும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யற்க' என்கிறது என்பதைப் பரிமேலழகர் சுட்டிக்காட்டியுள்ளார். சாணக்கியரும் சுக்கிரநீதி நூலுடையாரும் தத்தம் பொருள் நூல்களிற் கள்ளினை சிறிதளவுண்ண இடம் கொடுத்திருக்க, திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை நன்கு வற்புறுத்திச் சொல்லியுள்ளார். சுக்கிரநீதி சிறிதளவு உண்ணப்படும் கள் மதி நுட்பத்தையுந் தருவதாகும் என்கிறது. குறள் கள்ளுண்பவரைச் சாடி அவர்களைச் செத்தார் என்கிறது. பிறப்பால் உயர்வும் பீடில்லாத் தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறா நிலையில் உள்ளது என்று கூறி சாதிக்கொரு நீதி விதித்தது வடவர் நூல்கள். அதை மறுத்து ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று முழங்கும் குறள் பிறப்பாலுரிமையும், சாதி நீதியும் பேசாது மட்டுமல்ல; ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்று நம் சமுதாயக் கொள்கையையும் வரையறுக்கிறது. எல்லா ஸ்மிருதிகளும் நான்குவருணங்கள் நான்கு புருஷார்த்தங்கள் நான்கு ஆசிரமங்கள் இவற்றைப்பற்றியே விரித்துரைக்கின்றன. ஒரு நீதிநூலை இன்னொன்றுடன் நாம் வேறுபடுத்திப்பார்ப்பது எவ்வகையில் அது இந்த பொதுமையில் இருந்து வேறுபடுகிறது என்பதை வைத்தே. குறள் நான்குவருணங்களைப் பற்றிப் பேசவே இல்லை. நான்கு புருஷார்த்தங்களில் வீடுபேறை விட்டுவிட்டது. ஆல்பர்ட் சுவைட்சர் என்ற ஜெர்மனி நாட்டைச் செர்ந்த உலகப் புகழ் பெற்ற அறிஞர் "பண்டைக்கால இந்தியாவில் திருக்குறளில் காணாப்படுவதைப் போன்ற அன்புவழிப்பட்ட செயல்முறை வாழ்க்கையும், வாழ்க்கை மறுப்பு இன்மைக் கோட்பாடும் புத்த,(சமண)சமயத்திலோ, பகவத்கீதை வழி வளர்ந்துள்ள இந்து சமயத்திலோ இடம் பெறவில்லை" என்று தெளிவுபடக் கூறியுள்ளார். இவை குறளுக்கும் வடநூலார் மரபுக்கும் உள்ள வேற்றுமைகளில் ஒருசில. இதுவே குறள் வழிநூல் அல்ல; அது தனித்தன்மை வாய்ந்த மூலநூலே என்பதைத் தெள்ளிதின் விளக்கும்.
குறளின் சிறப்புக்கள் சில
தானே முழுது உணர்ந்து தண்தமிழில் ஓதற்கும் உணர்தற்கும் எளிதான குறளைப் படைத்தார் வள்ளுவர். “மிக எளிய நடை; பளிங்கு போலத் தெளிவாகத் தோன்றும் சிந்தனை, பொருத்தமான, அழுத்தமான, சிறிய தேர்ந்த சொல்லாட்சி, ஆழமான கல்வி, பண்பாடு, ஞானம், விரிந்து பரந்த மனப்பான்மை, தேவையானவற்றையெ தேர்ந்து தரும் திறம், மேன்மையான நகைச்சுவை, முழுமையான அறவுரை ஆகிய அனைத்தும், சேர்ந்து, அவரை எக்காலத்திலும் தொழத்தக்கவராய் ஆக்கியுள்ளன; தமிழ் மக்களின் மறைநூலாக அவரது நூல் மதிக்கப்படுகிறது.” என்று எஸ். வையாபுரிப் பிள்ளை குறளுக்கு ஒரு தெளிவான திறனுரை தந்துள்ளார்.
வள்ளுவர் தாம் கூற விரும்பும் பொருளை நன்கு உணர்த்துவதற்குப் பல்வேறு உத்திகளையும் மொழி நடைகளையும் பயன்படுத்துகின்றார். முன்னிலைப் படுத்தி விளித்தலையும், ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினா-விடைப் பாணியில் உரையாடல்களை அமைத்தலை ஒருவகைக் கலைத்திறனாகக் கையாண்டுள்ளார். உபநிடதங்கள், புத்தரின் போதனைகள், பிளேட்டோவின் உரையாடல்கள் போன்ற மெய்யியல் நூல்களும் இந்த உத்தி பின்பற்றப்படுவதை அறிஞர்கள் சுட்டிக்காட்டுவர்.
நூல் மிகச்சிறந்த அமைப்புடையது. மிக அரிய செய்திகளை வரையறைப்படுத்திச் சுருக்கமாக கூறுகிறது. சொல் வளனும், பொருட்சிறப்பும், நுண்ணோக்கும், அணி நலனும், ஓசையொழுக்கும், ஆழ்கருத்தும் ஒருங்கு நிறைந்தது குறள். சொல், தொடர், குறிப்புப்பொருள் எனப்பலவற்றில் நுட்பமான உத்திகளைப் பயன்படுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது குறள். நூல் முழுவதும் உயர்வு நவிற்சியையோ, இல்பொருளையோ எடுத்துக் கூறாது பெரும்பாலும் தன்மை நவிற்சியாக இயற்கையோடு பட்டு, மக்கள் மனத்தில் தைக்குமாறு அழகுற எளிய நடையில் உவமைகளை ஆண்டுள்ள திறம் வியக்கவைக்கும். இப்பனுவலில் தமிழின் இனிமை உண்டு; தத்துவத்தின் தெளிவுண்டு; வாழ்க்கையின் விளக்கமுண்டு; உணர்வும் உண்மையும் ஒன்றி இருக்கும்; அறத்தோடு பொருளும் பொருளோடு இன்பமும், இன்பத்தோடு அறமும் பொருந்திக் கிடக்கும்; இனிமையும் எளிமையும் இணந்திருக்கும்; ஆழமும் அகலமும் அமைந்திருக்கும்.
சமயத்திலும் வாழ்க்கையிலும் மேல்நாட்டார் பெரும்பாலும் உலகையும் வாழ்க்கையயும் ஏற்றுக்கொள்ளுதல் (World and Life Affirmation) என்ற கோட்பாட்டையே பின்பற்றுகின்றனர் எனவும் இந்தியரோ பெரும்பாலும் உலகையும் வாழ்க்கையையும் மறுத்தல்(World and Life Negation) என்ற கோட்பாட்டைத் தழுவுகின்றனர் எனவும் மெய்யியல் அறிஞர் ஆல்பர்ட்டு சுவெட்சர் கருதினார். பிறப்புக்களினின்று விடுதலையடைதல் வேண்டும் என இந்தியச் சமயங்கள் கற்பிப்பதால் வாழ்க்கையும் உலகும் துன்பமானவை அல்லது குறையுள்ளவை என அவற்றை மறுத்து விடுதலையைத் தேடுதல் இந்திய மக்களின் நோக்கமாகிறது. உலகையும் வாழ்க்கையையும் மறுத்தல் என்னும் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும் மக்கள் தீமை செய்யாமையையே சிறந்த அறமாகக் கொள்வார் அன்றி நன்மையைச் செய்தலாகிய அறங்களில் அதிகம் கருத்தைச் செலுத்தார். தீமை செய்யாமை ஒருவரை உலகினின்றும் காக்கிறது; நன்மை செய்தாலோ ஒருவரை உலக வாழ்க்கையில் ஈடுபடும்படி செய்யும். ஆகவே உலகையும் வாழ்க்கையையும் மறுக்க விழைவோர் தீமை செய்யாது தம்மைக் காத்துக் கொள்வாரேயன்றி நன்மை செய்தல், பிறர்க்கு உதவி செய்தல், பிறர் துன்பம் நீக்குதல் ஆகிய அறச் செயல்களில் போதிய அளவு ஈடுபடார் என சுவைட்சர் கருதினார். குறளை நன்கு ஆய்ந்துணர்ந்த சுவைட்சர், பிற இந்திய மொழி நூல்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்தக் குறளோ வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உடன்பாட்டு நிலையை வலியுறுத்தும் நூல் என்று கூறினார். உலகமும், உயிர்களும், மானிட வாழ்வும் கனவுமல்ல, பொய்யுமல்ல, மாயையுமல்ல. மாறாக அவை மனிதன் உணரக்கூடிய உண்மையே என்னும் உடன்பாட்டுக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, மனிதனைச் செயற்பாட்டு வாழ்வில் நின்று ஒழுகச் செய்வதற்கு ஊக்கமளித்திடும் நெறியாகவும் குறளறம் மாட்சிமை கொண்டு விளங்குகிறது.
பொருளும் காமமும் பெரிதாகக் கொண்ட நூலை வெறும் அறநூலென்பது தவறு. குறள் ஒரு அறநூல் மட்டுமல்லாது கவிச்சுவையோடு கூடிய வாழ்வியல் நூலுமாகும். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத பல கருத்துக்களைக் கொண்டு, சமயம், காலம், இடம், இனம் என்ற வேறு பாட்டுக்கு அப்பாற்பட்ட அடிப்படையான உண்மைகளச் சொல்லுகிறது. அற நூல் என்பதற்கும் வாழ்வு நூல் என்பதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. அற நூல்கள் பல சமயச் சார்பும் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறும் போக்கும் மிக்கன. குறள் அறக்கருத்துகளைக் கூறும் வகையில் மட்டும் அற நூலுடன் ஒற்றுமை உடையது என்பதைத் தவிர தனக்கெனப் பல தனித் தன்மைகளை உடையது. பொருட்டொகையாலும், முறைவகையாலும் குறளுக்கு ஈடான நூல் வேறொன்று இல்லை.
இன்றைய காலகட்டத்தின் குடியரசுப் பண்புகளுடன் ஒத்துப்போகின்றவையாக குறட்பாக்கள் இருக்கின்றதையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
மனித வாழ்க்கையினை உயர்ந்த வழியில் அமைத்துக் கொள்ளுவதற்கு அடிகோலும் நூல் இது. பொதுவாக உலகில் வழங்கிவரும் எல்லா அற நூல்களும் இறை வழிபாட்டினையும் தத்துவார்த்தமான சிந்தனையுடன் போதனை நுலாக மட்டுமே உள்ளன. ஆனால் திருக்குறள் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய நெறிகள் அனத்தையும் கூறும் நடைமுறை நூலாகும்.