“புதுமையை விரும்புவதிலும் வெளிமயக்கில் வீழ்ந்து விட்டிலைப் போல அழிவதிலும் இந்தியருக்கு இணையாக எவரையுமே கூறமுடியாது’ என்றார் ஆன்ற சான்றாேராம் இராமகிருட்டினர். அவரவர்தம் உருவும் திருவுமே இன்று தனி மனிதன் சமுதாயத்தில் மதிக்கப்படுவதற்குப் பெரிதும் காரணமாக அமைகின்றன. உருவுடன் திருவும் சேர்ந்தவர் கள் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். உருவின்றித் திரு இருந்தாலும் உயர்வு உண்டு. உரு மட்டும் இருந்து, திரு இன்றேல் உயர்வு அவ்வளவாகச் சொல்ல முடியாது. சிலரைக் கருவிலே திருவுடையார்’ என்று நாம் கூறுவதுண்டு. கரிகாலன் ‘உருகெழு தாயம் ஊழின் எய்தி’ என்று பட்டினப் பாலையிலே கூறப்படுகின்றான். உருவும் திருவும் பல்வேறு பொருள்களைக் குறித்து நிற்கும் சொற்களாகும். அதாவது, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகும். முதற்கண் உரு’ என்னும் சொல்லினைக் காண்போம்.
‘உரு’ என்பதற்குப் பல பொருள்கள் இருப்பினும் அழகு, வடிவு, தோற்றம், நிறம் என்னும் பொருள்களில் அச் சொல் பயின்று வருகின்றது. சிறு துரும்பும் பல்குத்த உதவும்: என்ற பழமொழி நாமனைவரும் அறிந்த ஒன்று. உருவிற் சிறியதும் ஒருகாலத்தில் உற்றுழி உதவும் என்பதே இதன் பொருள்.
மேலும், மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது’ என்ற சொல் நாட்டில் வழங்கி வருகின்றது. இதற்குச் சான்றாகக் கரிகால் வளவன் என்னும் பழந்தமிழ்ச் சோழ மன்னனின் இளமை வாழ்விலே நிகழ்ந்த செய்தியினைக் குறிப்பிடுவர். அரசனின் அவைக்கு முதியவர் இருவர் வழக்கு ஒன்றினைக் கொணர்ந்தனர். ஆனால், அரசன் இளையவனுய் இருத்தலைக் கண்டு, இவன் நம்முடைய வழக்கினே முறையாக விசாரித்து நல்ல நீதி வழங்கும் ஆற்றல் உடையவனே எனவும் ஐயுற்ற னர். இக் கருத்தினைக் குறிப்பால் உணர்ந்தான் மன்னன். ஒருவர் தம் கருத்தைச் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஒர் அணிகலன் ஆவன் என்பது வள்ளுவர் வாக்கன்றாே?
எனவே அரசன் அவையினின்றும் நீங்கி, நரை திரை முடித்து முதியவகை வேடம் பூண்டுவந்து அவர்கள் வழக்கைத் தீர விசாரித்து அவர்கள் மனங்கொளும் வண்ணம் தீர்ப்பு வழங்கினன் என்ற செய்தியினைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி என்னும் நூல்கொண்டு அறியலாம்:
உரைமுடிவு காளுன் இளமையோன் என்ற கரைமுது மக்கள் உவப்ப-நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும்.
-பழமொழி நானுாறு: 6. இது குறித்தே,
உருவகண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னர் உடைத்து.என்று தெய்வப் புலவராம் திருவள்ளுவர் கூறிப் போந்தார். இங்கு உரு என்பது வடிவம், தோற்றம் என்ற பொருளில் வ ழ ங் கு கி ன் ற து. வடிவாற் குறுகியவரை-தோற்றப் பொலிவு இல்லாதவரை-எளிதிலே வென்றுவிடலாம் என்று எண்ணுவது அறியாமையாகும். இது குறித்தே ‘கள்ளன நம்பினுலும் குள்ளன நம்பாதே என்று பாமரரும் கூறுவர். அதற்கு எடுத்துக்காட்டாக, குறுகிய வடிவுகொண்டு வந்து, மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு இரந்து பெற்று மூவுலகத்தையும் அளந்த திருமாலின் கதை கூறப்படு கிறது. இதனை நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள்,
‘மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி என்று கூறுகின்றார். சங்கத் தமிழ்ப் புலவராம் மதுரைப் பொன் வாணிகளுர் மகளுர் நப்பூதனர்.
என்று தாம் பாடிய முல்லைப்பாட்டில் குறிப்பிடுகின்றார்.
அடுத்து, பிறப்பு இறப்பு இல்லாத, ஆதியும் அந்தமும் இல்லாத, உருவமின்றி அருவமாய்ப் பெயரற்று எங்கும் நீக்க மற நிறைந்திருக்கின்ற இறைவனை, வேண்டுவார் வேண்டிய வண்ணத்திலும் வடிவிலும் காண்கின்றனர். இதனையே மணிவாசகப் பெருமான், “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்று மில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேனம் கொட்டாமோ’ என்று பாடினர். யார் யார் எவ்வெவ் வடிவில் காண்கின்றார்களோ அவ்வவ் வடிவில் இறைவன் காட்சியளிக்கின்றான்.
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட ஆண்டான் டுறைதலும் அறிந்த வாறே.என்று நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் நமக்கு விளக்கம்
தந்திருக்கிரு.ர்.
உளன் எனில் உளன், அவன் உருவம் இவ்உருவுகள் உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள் உளன் என, இலன் என, இவை குணம் உடைமையின் உளன் இரு தகைமை யொடு, ஒழிவு இலன் பரந்தே
என்பது திருவாய் மொழி (2907).
உருவமில்லாத மன்மதன் காதல் நெஞ்சில் புகுத்தும் துன்பங்கள் மிகுதி. இன்னும் அவனுக்கு உருவமிருப்பின் என்னென்ன செய்வனே?
என்று சிலப்பதிகாரத்தில் க வு ந் தி ய டி. க ள் உருவிலாத மன்மதன் உயிர்களை வாட்டும் துன்பத்தினை அடுக்கிக் கூறு கின்றார்.
உரு என்பது வடிவம், தோற்றம் (Presence) என்ற பொருள்களிலும் செந்தமிழ்க் கவிஞர் சிலரால் சிறந்த இடங்களில் கையாளப் பெற்றுள்ளது. கைகேயி பெற்ற வரத்தால் காடேகுகின்றான் காகுத்தன். அதுபொழுது மன்னுயிர்கள் அன்றித் தாய்க் கருவிலிருக்கும் உருவறியாப் பிள்ளைகளும் அழுதன என்று ஒர் அவல ஒவியத்தினையே தீட்டிக் காட்டுகிறார் கம்பநாடர்.
கிள்ளையொடு பூவை அழுத; கிளர்மாட்த்து உள்ளுறையும் பூசை அழுத: உரு அறியாப் பிள்ளே அழுத; பெரியோரை என்சொல்ல? வள்ளல் வணம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால். பின்னர், சுந்தரகாண்டத்தில், அனுமன் அசோகவனத்தில் சிறையிருந்த செல்வியாம் சீதையிடம் தன் வருகையினை உணர்த்தும் படலத்தை உருக்காட்டுப் படலம் என்று அழைத் திருக்கின்றார்.
பெருஞ்சித்திரளுர் என்னும் புலவர் வெளிமான் என்னும் மன்னனிடம் பரிசில் பெறச் சென்றார். நோயுற்ற நிலையில் இருந்த வெளிமான் தன் தம்பியைப் பரிசில் கொடு என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி, குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளி மான் ஊர்க் காவல்மரத்தில் கட்டிச் சென்று சொல்லிய புறப் பாடல் வருமாறு:
இப் பாடலால், காணுது தந்த பரிசிலை-வள்ளல் நேராகவே வந்து தராத பரிசிலைக் கொள்ளாது-உருவில்லாததால் திருவை வேண்டா என்று உதறிய புலவர் பெருஞ்சித்திர னரின் பெருமித நெஞ்சத்தினை நாம் காண்கின்றாேம்.
இப்பொழுது அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் கள், அரசாங்க அலுவல்களில் அமர்த்தப்பெறும் மாணவர்கள் எக்கருத்துக்கொண்டு, எந்த மதிப்பீடு கொண்டு உருத்தேர்வு” (Personality Test) வெற்றி பெற்றவர்களாகக் கருதப் பெறுகின்றனர் என்று கேட்டார்கள். அந்த அளவிற்கு உருத் தேர்வு முறை இன்று அரசாங்க அலுவல்களுக்கும் உறுதுணை யாக வைக்கப் பெற்றிருக்கின்றது.
பழங்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் தலைமகன் தலைமகளுக்கிடையில் சில ஒற்றுமைகள் இருத்தல் வேண்டும் என்று எண்ணினர்கள். இதனைப் பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியலில் (நூற்பா, 25) தொல்காப்பியனுர் குறிப்பிடு கின்றார்:
பிறப்பே குடிம்ை ஆண்மை யாண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே யருளே யுணர்வொடு திருவென முறையுறக் கிளந்த வொப்பினது வகையே.
‘ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த பிராயமும், ஒத்த உருவும், ஒத்த அன்பும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமுமெனப் பத்து வகைய தலைமகளொப்பினது பகுதி என்று பேராசிரியர் கூறுகின்றார். மேலும் தொல்காப்பியனர் உவமங்கள் நான்கு பொருள்களின் நிலைக்களஞகப் பிறக்கும் என்கிரு.ர்.
வினை பயன் மெய்யுரு வென்ற நான்கே வகை பெற வந்த வுவமத் தோற்றம்
_
என்பது அவர்தம் கருத்தாகும்.
அடுத்து, “திரு’ என்னும் சொல்லினைச் சிறிது ஆய்ந்து காண்போம். ‘திரு’ என்ற சொல்லும் உரு’ என்ற சொல் போன்றே பல பொருள்களைப் பயக்குமெனினும், சிறந்த சில பொருள்களையே ஈண்டு எடுத்துக் கொள்ளுவோம். முதற்கண் “திரு என்பது “அழகு என்னும் பொருண்மைத்து. இலக்குமி, செல்வம், பொலிவு முதலியன பின்னர்ச் சிறக்கும் பொருள் களாம். o
செல்வத்திற்கும் தெய்வமாக விளங்கும் இக்ைகுமியை நாம் திருமகள் என்கிருேம்.
திருவள்ளுவர் கூட,
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதல் வேறு
என்கிறார். கடிய நெடுவேட்டுவன் என்ற குறுநில மன்னன் பரிசில்தரக் காலந் தாழ்த்தாளுகப் பெருந்தலைச் சாத்தனர்.
என்று பாடியுள்ளார். மேலும், பெருஞ்சித்திரளுர் என்ற புலவர் அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசில் பெறச் சென்றபோது, வெளிமான், பெருந்தலைச் சாத்தனரிடம் நடந்துகொண்டதைப் போலவே, அவனும் பெருஞ்சித்திரன ரைக் காணுது, இதுகொண்டு செல்க!” என்று பரிசில் கொடுப்பக் கொள்ளாது பின்வருமாறு பாடினர்:
உருவினைக் காணுது ஈத்த திருவினை மறுத்தார் புலவர். திருவின் உரு-அளவு முக்கியமன்று. திரு தரும் மன்னனின் திருத்தோற்றம் (Presence)தான் முக்கியம் என்று உணர்ந்த செம்மாந்த நெஞ்சத்தை நாம் கண்டு வியக்கின்றாேம்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்
என்ற குறட் கருத்துக்கு இலக்கியமாயினர். இறுதியில் கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கத் துணிந்தபோதுதான் பார்த்தறியாத, உருவறியாத பிசிராந்தையார், தான் திருப் பெற்றிருந்த காலையில் வராவிடினும் திருத்துறந்து தவம் நினைந்து செல்லும் காலையில் உறுதியாக வருவார் என்று எண்ணினன்.
செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே
என்று உருவறியாத நிலையிலும் உறுதியாக எண்ணிய உயர்ந்த நட்புள்ளத்தை எண்ண எண்ண வியப்பு மேலிடு கின்றது.
தமிழ்நாட்டின் பல ஊர்ப் பெயர்களும் திருவில் தொடங்குவது கண்டு நாம் உள்ளம் மகிழலாம். திருவாளர்’ என்ற பழகுதமிழ் அழகுச்சொல் திரும்ப வந்தது கண்டு அகநிறைவு கொள்ளலாம்.
இறுதியாகப் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவரான சேக்கிழார் பெருமான் தம் திருத் தொண்டர் புராணத்தில் திரு. உரு என்ற இரண்டு சொற் களேயும் ஒருசேர ஞானத்தோடு சேர்த்துத் தக்க இடத்தில் வழங்கிச் சிறப்பும் பெறுகின்றார். சிவம் பெருக்கும் திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியுள்ளார். கூன்.பாண்டியன் மனைவியாம் மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறை யாரும் விரைந்து சென்று திருமடத்தில் காழிப் பிள்ளையாரைக் காணுகின்றனர். அயல்வழக்கையெல்லாம் தமிழ் வழக்காக ஆக்கிய திருஞான சம்பந்தர்தம் திருக்கோலத்தினைப் பாமணக்கப் பாடும் பாவலர் சேக்கிழார்தம் வாக்கால் கண்டு மகிழலாம்.