- பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
- அருணகிரிநாதரின் இந்தத் திருமயிலைத் திருப்புகழ்ப் பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- கயிலைப் பதியரன் முருகோனே
கடலக்கரைதிரை அருகே – சூழ்
மயிலைப் பதிதனில் உறைவோனே
மகிமைக் கடியவர் பெருமாளே!அசைக்க முடியாத ஆதாரம் இது. அருணகிரிநாதர் காலத்திற்குப் பின்னர் 1566′ம் ஆண்டு இன்றைய சாந்தோம் இருக்கும் இடத்தில் இருந்த கபாலிச்சுரம் ஆலயம் கிறுத்துவ மதவெறியர்களால் உடைக்கப்பட்டுப் பின்னர் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.