Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெனிசி என்பதே தமிழின் " வணிக " என்பதன் கிரேக்க மருவியாகும்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
பெனிசி என்பதே தமிழின் " வணிக " என்பதன் கிரேக்க மருவியாகும்
Permalink  
 


 

தமிழன் மறந்த தமிழர் வரலாறு !!! பாகம் - 4

தமிழ் எழுத்துக்கள்

தமிழ் மொழி வரலாறு

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

சங்க காலம் (கிமு 300 - கிபி 300)சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

 

சொற்பிறப்பு

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர். சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

எழுத்துமுறை

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

தமிழ் எழுத்து எப்பொழுது தொடங்கி எவ்வாறு வளர்ந்தது? 2006ம் ஆண்டில் கிடைத்த கி.மு. பதினைந்திலிருந்து கி.மு இருபதாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்திய கற்கோடாரியில், சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட 'Indus' எழுத்துருவில் சில வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலிரு வடிவங்கள் முருகன் என்ற பொருளைக் கொடுப்பதாக திரு. ஐராவதம் மகாதேவன் கூறுகிறார், மேலும் Indus எழுத்துரு தமிழ்தான் என்றும் கருதுகிறார். இவர் கருத்தை ஆதரித்து இந்தியா முழுமைக்கும் எழுத்துமுறை தந்தவன் தமிழனே என்று பல அறிஞர்களும் கருதுகின்றனர். இந்த 'Indus' எழுத்துரு உண்மையிலேயே தமிழாக இருந்தால், காலத்தால் முற்பட்ட தமிழ் எழுத்து இதுவேயாகும்.

இந்த Indus எழுத்துருவைத் தவிர்த்து நமக்கு இப்பொழுது கிடைத்துள்ள கல்வெட்டுச் சான்றுகளின் படி தமிழ் எழுத்துகளிலேயே மிகவும் தொன்மையானது 'தமிழ் பிராமி'யேயாகும். தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் பானை ஓடுகளில் உள்ள எழுத்துக் கீறல்கள் இவற்றின் காலத்தை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்ததில், இவ்வெழுத்துமுறை கி.மு 4ம் அல்லது 3ம் நூற்றாண்டிலுருந்து (அ.கு.1) கி.பி. 4ம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி.பி. 4ம் நூற்றாண்டிற்குப் பின், இவ்வெழுத்துமுறை மாற்றமடைந்து வட்டெழுத்தாகவும், பிறகு நாம் இப்பொழுது பயன்படுத்தும் நவீன தமிழ் எழுத்துகளுக்கு முன்னோடியான எழுத்துமுறையாகவும் வளர்ச்சியடைந்தது. தமிழ் பிராமி எழுத்துகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

கண்டுபிடிப்பு

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் சில புரிந்துகொள்ள முடியாத கல்வெட்டுகள் கிடைத்தன. இவற்றைப் பல அறிஞர்கள் ஆய்வு செய்தனர். அவ்வறிஞர்களுள் வெங்கய்யா என்பவரே இவை அசோகச் சக்கரவர்த்தி கால பிராமிக் கல்வெட்டுகளை ஒத்திருப்பதை உணர்ந்து, இவை பிராமிக் கல்வெட்டுகள் என்று கண்டுபிடித்தார். ஆனாலும் இவரும் இன்னும் பிற அறிஞர்களும் இவை வடமொழி அல்லது பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் என்றே நினைத்தனர். தமிழ் மொழிக்கே உரித்தான ழ, ள, ற, ன முதலிய எழுத்துகள் இக்கல்வெட்டுகளில் இல்லாதிருப்பதை கே. வி. சுப்பிரமணிய அய்யர் எனும் அறிஞரே முதன்முதலில் கண்ணுற்றார். மேலும் அவர் வடமொழி எழுத்துக்கள் சில இக்கல்வெட்டுகளில் இடம்பெறாமல் இருப்பதையும் உணர்ந்து, இவை தமிழ் மொழிக் கல்வெட்டுகளாகலாம் என்று மொழிந்தார். பின்னாளில் பல அறிஞர்கள் இக்கல்வெட்டுகளை படிக்க முயன்று பாடங்களை வெளியிட்டனர். ஆயினும் அக்கல்வெட்டுகளின் தெளிவில்லாத புகைப்படங்கள் மற்றும் மசிப்படிகளை மட்டுமே கொண்டு படித்த காரணத்தால் அப்பாடங்களில் பல தவறுகள் நேர்ந்தன. சில வருடங்களுக்கு முன்பு ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மிகவும் முனைந்து, இக்கல்வெட்டுகள் எல்லாவற்றையும் முடிந்தவரை நேரில் பார்வையிட்டு, மேலும் மசிப்படியில்லாமல் புதிதாக 'Tracing' முறை கொண்டு கல்வெட்டுகளைப் படியெடுத்து இக்கல்வெட்டுகள் அனைத்தும் ஒரு சில பிராகிருத சொற்கள் தவிர முழுதும் தமிழ் மொழியிலேயே இருப்பதை ஐயமின்றி நிரூபித்துள்ளார். தமிழ் பிராமியைப் பற்றி இதுவரை தெரிந்த எல்லா விவரங்களையும், இவர் புதிதாகக் கண்டுபிடித்த விவரங்களையும் "Early Tamil Epigraphy" என்ற புத்தகத்தில் விரிவாகக் கொடுத்துள்ளார். மேலும் அப்புத்தகத்தை வெளியிட்ட தேதிவரை கிடைத்த அனைத்துத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் படங்கள் மற்றும் கல்வெட்டுப் பாடங்களையும் இப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

தோற்றம்

தமிழ் பிராமி எழுத்துமுறை அசோகரின் பிராமி-யிலிருந்து தோன்றியது என்று சிலவருடம் முன்பு வரை எண்ணப்பட்டு வந்தது. ஆயினும் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்கும் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானைக்கீறல்கள் மற்றும் தேனியில் கிடைத்த கி.மு. 4 அல்லது 3ம் நூற்றாண்டின் நடுகற்கள் இவற்றிலிருந்து அசோகர் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே தமிழ்-பிராமி எழுத்துமுறை வழக்கில் இருந்தது என்று கருதப்படுகிறது. கீழே தமிழ் பிராமி எழுத்துக்களின் அட்டவணை (கையெழுத்துப்பிரதி) கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துக்கள்

தமிழ் பிராமியில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ இவற்றை குறிக்க 6 எழுத்துக்களும், எ மற்றும் ஏ இவ்விரண்டையும் குறிக்க ஒரு எழுத்தும், ஒ, ஓ இவையிரண்டையும் குறிக்க ஒரு எழுத்தும் ஆக மொத்தம் 8 உயிரெழுத்துக்கள் இருந்தன. ஔ இடம்பெறவில்லை. 14 மெய்யெழுத்துக்களையும் சேர்ந்து 22 எழுத்துக்களே இருந்தன. க், ம் முதலிய எழுத்துக்களைக் குறிக்க முற்காலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் புள்ளிகள் காணப்படவில்லை. ஒருசில பிற்கால தமிழ் பிராமி கல்வெட்டுகளில் அரிதாக புள்ளி காணப்படுகிறது. முற்கால வட்டெழுத்துக்கல்வெட்டுகளில் இப்புள்ளிகள் அதிகமான அளவில் காணப்படுகின்றன.

வளர்ச்சி

தமிழ்-பிராமி கி.பி 4ம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்தாலும், எழுத்துக்கள் சில காலத்திற்கேற்ப மாற்றமடைந்தன. திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள், தமிழ் பிராமி தோன்றியது 3ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 2ம் நூற்றாண்டு என்ற கருத்தில் கி.மு 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 1ம் நூற்றாண்டு வரை இருந்தது முற்கால தமிழ் பிராமி எனவும், கி.பி. 2ம் நூற்றாண்டிலிருந்து 4ம் நூற்றாண்டுவரை இருந்தது பிற்கால தமிழ் பிராமி எனவும் பகுத்துள்ளார். இப்பகுப்பில் கி.மு 2ம் நூற்றாண்டு என்பதை திருத்தம் செய்து கி.மு. 4ம் அல்லது 3ம் நூற்றாண்டு எனப் படிப்பது சரியாக இருக்கும். தமிழ்-பிராமி எழுத்து கி.பி 5-6ம் நூற்றாண்டில் முற்கால வட்டெழுத்தாக மாற்றமடைந்தது.

கல்வெட்டுகள்

மாங்குளம், அரிட்டாபட்டி, அரச்சலூர், எடக்கல் குகைகள், அழகர்மலை, சித்தன்னவாசல், திருமலை, ஜம்பை முதலிய பல இடங்களில் முற்கால தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், ஆனைமலை, புகளூர், குன்னக்குடி, குடுமியான்மலை முதலிய பல இடங்களில் பிற்கால தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் கிடைத்திருக்கின்றன.

இக்கல்வெட்டுகள் பல சுவையான தகவல்களைத் தருகின்றன. உதாரணத்திற்கு, புகளூரிலுள்ள 9 கல்வெட்டுகளுப் ஒரே செய்தியைத் தரும், ஒரு சில வித்தியாசங்கள் தவிர மற்றபடி ஒன்று போலவே இருக்கும் இரு கல்வெட்டுகள் கோ ஆதன் செல்லிரும்பொறை, அவர் மகன் பெருங்கடுங்கோன் மற்றும் பெருங்கடுங்கோனின் மகன் இளங்கங்கோ ஆகியோரின் பெயர்களைத் தருகிறது. இப்பெயர்கள், சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்களாக முறையே செல்வக்கடுங்கோ வாழிய ஆதன் எனவும், அவரை அடுத்து அரசாண்டவர்களாக பெருஞ்சேரல் இருப்பொறை மற்றும் இளங்சேரல் இரும்பொறை ஆகியோரின் பெயர்களைத் தருகிறது. பதிற்றுப்பத்தில் வரும் அரசர்கள் தாம் கல்வெட்டிலும் இடம்பெற்றவர்கள் என்று கருதக்கூடியதாக இருக்கின்றது.

முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் [இ*]ளங்
கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்

இதுமட்டுமல்லாது புறநானூறு மற்றும் அகநானூறுப் பாடல்கள் காட்டும் குதிரைமலையின் அரசரான சேரப்படையின் தளபதி பிடன் மற்றும் அவரின் மகன் பிடன்கொற்றன் இவர்களை அதே புகளூரில் உள்ள மேலும் சில கல்வெட்டுகளில் முறையே பிடன் அல்லது பிடந்தை என்றும் மகனை கொற்றந்தை எனவும் குறிப்பிடுவதாகக் கருதமுடிகிறது. இதிலுள்ள மற்றுமொரு கல்வெட்டு பிடனின் மகளாகக் கொற்றி என்பவரைக் காட்டுகிறது.

மேலும் பாண்டிய நெடுங்செழியன் மற்றும் சங்க இலக்கியம் காட்டும் அதியமான் நெடுமானஞ்சி ஆகியோரின் பெயர்களெனக் கருதத்தக்க வகையில் மாங்குளம் மற்றும் ஜம்பையிலுள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இப்பெயர்கள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் காட்டும் இவ்வரசர்கள் இருந்ததற்கான மேலுமொரு சான்றாக இக்கல்வெட்டுகள் இருக்கின்றன.

முதல் வரி - அ ன் ஊ ர் அ த ன்

இரண்டாம் வரி - ன் அ ன் க ல்

செய்தி

இக்கல்வெட்டு தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி தாலுகாவில் புளியம்கொம்பை என்ற ஊரில் கிடைத்துள்ள மூன்று நடுகற்களுள் ஒன்று. அ த ன் என்பதை ஆதன் என்று படித்து (பல கல்வெட்டுகளில் குறில் நெடில் எழுத்துகள் வித்தியாசம் இல்லாமல் ஒன்று போலவே குறிக்கப்பட்டுள்ளது). ஆதன் என்ற ஒருவரின் நினைவாக நட்ட கல் என்று பொருள் கொள்ளலாம். கல்வெட்டு முழுவதும் கிடைக்காததால் ஆதனின் முழுப்பெயர், ஊர் மற்றும் முழு செய்தியும் தெரியவில்லை.

மண்பானைக் கீறல்கள், காசுகள், மற்ற பொருள்கள்
உறையூர், அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் மற்றும் பல இடங்களிலும் 2005ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரிலும் தமிழ்-பிராமி எழுத்துகள் பொறித்த மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை தவிரத் தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த பல காசுகளும், மோதிரங்களும் அகழாய்வுகளில் முக்கியமாகக் கரூர் அமராவதி நதிப்படுகையில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, ஆந்திராவில் சாலிகுண்டம் பகுதியிலும் மற்றும் இலங்கையிலும் பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் எகிப்து நாட்டில் சிவப்புக் கடற்கரையிலுள்ள ரோம் நாட்டினர் குடியிருந்த பகுதிகளின் அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த ஒரு பானை ஓடு கிடைத்திருக்கின்றது. அதுபோல தாய்லாந்து நாட்டில் தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பொற்கொல்லர் உபயோகித்த உறைகல் ஒன்று கிடைத்திருக்கிறது.

பானைக்கீறல் பாடம்

முதல் எழுத்து உ போல் உள்ளது ஆயினும் சரியாகத் தெரியவில்லை. தமிழ் பிராமியில் உ மற்றும் ந எழுத்துகள் இரண்டுமே 'L' வடிவில் இருக்கும், 'ந' எழுத்தில் கீழுள்ள கோடு இடது பக்கமும் நீண்டிருக்கும். பிற்கால பிராமி கல்வெட்டுகள் சிலவற்றில் இந்த நீளல் காணப்படவில்லை. இவ்வெழுத்தை திரு ஐராவதம் மகாதேவன் 'ந' என்று படித்துள்ளார். அடுத்து வரும் எழுத்து 'க',

மூன்றாம் எழுத்தை திரு ஐராவதம் மகாதேவன் 'ன' என்று படித்துள்ளார். கீழே உள்ள படத்தில் 'ன' எழுத்து முற்கால மற்றும் பிற்கால தமிழ் பிராமியில் எப்படி இருந்தது என்பதும். பானைக்கீறலில் உள்ள எழுத்து எப்படி இருக்கிறது என்பதும் காட்டப்பட்டுள்ளது. 'ன' எழுத்தை தவறாக அப்படிப் பானையில் கீறியிருக்கலாம்.

நான்காம் எழுத்து படத்தில் பார்ப்பதற்கு 'ந' போல் இருந்தாலும் உற்றுப் பார்த்தால் அது 'உ' தான் என்பது புலப்படும். இடது பக்கம் நீண்டிருப்பதாகத் தோன்றும் கோடு உண்மையில் 'original' பானைக்கீறல் இல்லை. அடுத்து வரும் எழுத்துக்கள் 5) ர 6) ல.

சேர்த்துப்படித்தால்: ந க ன உ ர ல,

செய்தி

இதை திரு ஐராவதம் மகாதேவன் 'நாகன் ஊறல்' என்று படித்து, இப்பானை நாகன் என்பவரின் ஊறல் பானை அதாவது பனையில் பாளையைக் கீறி அதிலிருந்து ஊறும் நீரை சேமித்து இறக்கப் பயன்பட்ட பானை என்று கருதுகிறார். நாகன் என்பவர் பனையிலிருந்து பதநீர் இறக்கும் தொழிலாளியாக இருந்திருக்கலாம்.

கிடைக்கும் செய்திகள்

மேலே குறிப்பிட்டுள்ள படி அரசர்களின் பெயர்களும், அக்காலத்து ஊர் மற்றும் ஊர்சபையின் பெயர்கள், பொற்கொல்லர் போன்று பலவித தொழில் செய்வோரின் பெயர்கள், ஜைனத்துறவிகள் மற்றும் பள்ளிகளின் பெயர்கள், இளயன், குறவன், நாகன் போன்ற இனப்பெயர்கள், பல சொந்தப் பெயர்கள், வேளாண்மை பற்றிய விவரங்கள் போன்று சமயம் மற்றும் சமுதாயம் சார்ந்த பல விவரங்களை இக்கல்வெட்டுகள் மற்றும் பானைக்கீறல்களை ஆராய்ந்து அறிய முடிகிறது.

எகிப்து, தாய்லாந்து முதலிய இடங்களில் கிடைக்கும் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானையோடு மற்றும் உறைகல் இவை அந்நாளில் தமிழ்நாட்டினர் மற்றைய நாட்டினருடன் கொண்டிருந்த வாணிபத் தொடர்பிற்குச் சான்றாக உள்ளது.

இதுவே பெனிசிய இனத்திற்கும் பழந்தமிழர் இனத்திற்கும் இடையில் இருக்கும் தொடக்கப்புள்ளியாக அமைகிறது. ஏறக்குறைய பெனிசிய எழுத்து வடிவமும் உச்சாராடங்களும் ஒன்று போலவே வருகின்றது. பழந்தமிழரின் கடல் வாணிப தொடர்பிற்காக உருவாக்கப்பட்ட மொழியாக பெனிசிய மொழி இருந்திருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.

இதனை உண்மைப்படுத்தும் விதமாக பண்டைய பெனிசிய மொழியின் சொற்கள் அத்தனையும் ஆதி தமிழ்ச்சொல்லாகவே இருக்கின்றது. பொதுவாக கிரேக்க மொழியில் சொல்லின் முடிவு ' ஸ் ' ல் முடியும், அது பெயர்ச்சொல்லாக இருந்தாலும் வினைச்சொல்லாக இருந்தாலும் சரியே.. ஆனால் பிற்காலத்திய கிரேக்க சொற்கள் " யே " என முடிய ஆரம்பித்தன.. இது மொழியின் காலப்பிரிவை காட்டுகிறது. பெனிசிய மொழி தொடர்பற்றுப்போன காலம் வேறு மொழிகள் கிரேக்கத்துடன் இணைய ஆரம்பித்ததால் இது நிகழ்ந்திருக்கலாம்.

பெனிசி என்பதே தமிழின் " வணிக " என்பதன் கிரேக்க மருவியாகும் , இதுபோல தமிழாக இருந்து பெனிசிய சொல்லாக மாறிய பல சொற்களை இங்கே அடையாளங்காணலாம்.

ரைஸ் - அரிசி
மெற்சண்டைஸ் - மேற்சந்தை
நிற்சண்டைஸ் - நெல்சந்தை
சாப்பேர்ஸ் - கப்பல் ,கலன்
நிம்பஸ் - நீலமேகம்
கிர்ரஸ் - கார்மேகம்
போர்ஸ் - பொழிவு ( மழை )
டார்ச்சஸ் - தீவெட்டி
சீஸ் ( cheese ) - சீம்பால்

தமிழ்நாட்டில் காணப்படும் இக்கல்வெட்டுகள் தமிழ் தெரியாத புத்த, ஜைனத் துறவிகளால் வடமொழியில் எழுதப்பட்டதாக ஒரு கருத்து நிலவியது. இப்பொழுது இக்கல்வெட்டுகள் தமிழ்மொழிக் கல்வெட்டுகள்தாம் என்று ஐயமுற நிரூபிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானைக்கீறல்களில் பொதுமக்களின் பெயர்களும் அவர்கள் தம் பெயரால் பொறித்துக்கொண்டதாக உள்ள தமிழ் எழுத்துகளும், மிகப்பழமையான காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் எழுத்தறிவு மேல்தட்டு மக்களிடம் மட்டுமல்லாது சாமானிய பொதுமக்களிடமும் பரவலாக இருந்தது என்று கருத இடமளிக்கிறது. மேலும் சங்க இலக்கியங்களைப் பாடியோர் மற்றும் தொகுத்தோரில் சமுதாயத்தின் பலதரப்பட்ட தளங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இருப்பதையும் சான்றாகக் கொண்டு சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் முதல் அறிவொளி இயக்கம் மிகப்பரவலாக நடைபெற்றது என்று திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் கருதுகிறார்கள்.

அடிக்குறிப்பு

1) தேனியில் கிடைத்த நடுகற்கள் கி.மு. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று ஒரு சாராரும், கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சிலரும் கருதுகின்றனர்.

பார்வை நூல்கள்

1) Early Tamil Epigraphy - Iravatham Mahadevan
2) சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - திரு. ஐராவதம் மகாதேவன், வரலாறு ஆய்விதழ் 6.
3) தன்னிகரில்லாத தமிழ் - ச. கமலக்கண்ணன் & தமிழ்சசி, வரலாறு.காம் இதழ் 23
4) "Discovery of a century" in Tamil Nadu - T.S. Subramanian, The Hindu dated May 01, 2006.
5) "The tale of a broken pot" Iravat Mahadevan.

பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.

இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.

மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை.! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள். தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள்.

தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா? சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.

பழங்காலத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் அதை ஏன் எழுதவில்லை? சிந்திக்க வேண்டிய விசயம்! உலகிலேயே முதன்முதலில் தான் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்! அதைக் கல்லிலும், ஓட்டிலும், ஓலையிலும் எழுதிப்பார்த்தவன் தமிழன்!

சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது.

கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழ் சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர்.

அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி ம



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard