திருக்குறளில் முன்வாயிற் பூஞ்சோலையாக நிற்பது கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரம். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பெரும் பகுதியாகப் பிரித்துக்கொண்டு நூல் செய்ய வந்த திருவள்ளுவர் முதலில் நான்கு அதிகாரங்களில் பாயிரம் என்ற பகுதியை வைத்திருக்கிருர். பாயிரம் என்பது முகவுரையைப் போல நூல் முழுவதற்கும் பொதுவான செய்திகளேச் சொல்வது. கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களும் சேர்ந்து திருக்குறளில் பாயிரம் என்ற பகுதியாக அமைந்திருக்கின்றன. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று வகைகளுக்கும் உபகாரப்படுவனவாகவும், அவற்றிற்கெல்லாம் பொதுவாகவும் இருப்பவை அந்த நான்கும் என்ற கருத்தால் அவற்றை முன்னே வைத்தார்.
பாயிரத்தின் முதல் அதிகாரமாக நிற்பது கடவுள் வாழ்த்து. பொதுவாக நூல்களில் உள்ள கடவுள் வாழ்த்து, அந்த நூல் இனிது முடியும் பொருட்டுக் கடவுளே வாழ்த்திய துதியாக அமைவது வழக்கம். அது ஏற்புடைக் கடவுள் வணக்கம் என்றும், வழிபடு கடவுள் வணக்கம் என்றும் இரண்டு வகைப்படும். நூலின் பொருளுக்கு ஏற்ற வகையில் அமைந்த கடவுள் வணக்கத்தை ஏற்புடைக் கடவுள் வணக்கம் என்றும், ஆசிரியர் தாம் வழிபடு கடவுளேத் துதித்துப் பாடுவதை வழிபடு கடவுள் வணக்கம் என்றும் சொல்வார்கள். ஒருவர் இராமாயணத்தைப் புதிதாகப் பாடுவதாக வைத்துக் கொள்வோம். அதில் முதலில் இராமனுடைய வணக்கத்தை அமைத்தால், அது ஏற் புடைக் கடவுள் வணக்கமாகும். நூலே இயற்றும் ஆசிரியர் முருகனடியாராக இருந்து முதலில் முருக இணுடைய துதியை அமைத்தால், அது வழிபடு கடவுள் வணக்கமாகும்.
திருவள்ளுவர் ஏற்புடைக் கடவுளே வாழ்த்தினர் என்று பரிமேலழகர் கருதுகிருர்,
'அஃதாவது, கவி தான் வழிபடும் கடவுளே யாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளேயா தல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளே என உணர்க. என்னே? சத்துவம் முதலிய குணங்களால் மூன்ருகிய உறுதிப்பொருட்கு அவற்ருன் மூவராகிய முதற் கடவுளரோடு இயைபு உண்டாகலான். அம்மூன்று பொருளையும் கூறலுற்ருர்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறையாதலின், இவ்வாழ்த்து அம்முவர்க்கும் பொதுப்படக் கூறினர் என்று உணர்க’ . r
என்று அவர் எழுதுகிருர், கவிஞன் தான் பாட மேற் கொண்ட நூல் இனிது முடியும் பொருட்டுக் கடவுளே வாழ்த்தும் வகையில் இவ்வதிகாரம் அமைந்தது என்ற கருத்தை முதலில் கொண்டு, அப்பால் ஏற்புடைக் கடவுள் வாழ்த்து இது என்று வகை காட்டுகிருர். அவதாரிகையில், எடுத்துக் கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறு கின்ருர்’ என்று அவர் செய்யும் தோற்றுவாயினுல் இது புலகுைம்.
ஆனல் கடவுள் வாழ்த்துப் பாடல்களின் பொருளே நோக்கில்ை இந்தக் கருத்தைப் பரிமேலழகர் சற்று நுணுகிப் பார்த்து எழுத வில்லையென்று தோற்று கிறது. மக்கள் வாழ்க்கையில் சிறந்து கிற்க வழி வகுக்க வந்த திருவள்ளுவர், பிற நீதிகளே அதிகாரங்க ளாக வகுத்து விரிவாகச் சொல்லப்போகிருர். எல்லா வற்றிற்கும் மேலான ஒன்றை எடுத்தவுடன் வற்புறுத்து கிருர். மக்கள் யாவரும் கடவுள் உணர்ச்சியோடு வாழவேண்டுமென்றும், அவனை வழிபட வேண்டு மென்றும் புலப்படுத்துவதற்காகவே கடவுள் வாழ்த்தைப் பாடினர்.
‘கடவுள் வழிபாடு என்ற பெயரை அமைத் திருக்கலாமே; கடவுள் வாழ்த்து என்று இருப்பதால் கவிஞன் கடவுளே வாழ்த்தியதாகக் கொள்வதுதான் தக்கது’ என்று கூறலாம். இந்த அதிகாரத்தில், கடவுளே மக்கள் மன மொழி மெய்களாகிய மூன்று கரணங்களாலும் வழிபட வேண்டும் என்று வள்ளுவர் புலப்படுத்துகிரு.ர்.
தனக்குவமை இல்லாதான்
தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (7) என்பது, மனத்தால் தியானம் செய்வதைக் குறிப்பது. மனக் கவலை மாற்றுவதற்கு மனத்தால் சிந்திக்க வேண்டும். - - -.
- இருள்சேர் ຈົorq; சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5) என்பது இறைவன் புகழை வாயினுற் சொல்ல வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது.
கோள் இல் பொறியிற் - குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (9)
என்பது தலேயால் வணங்க வேண்டும் என்று, மெய்யால் புரியும் வழிபாட்டைச் சுட்டுகிறது.
இப்படி மூன்று கரணங்களாலும் மக்கள் இறை வனே வழிபட வேண்டுமென்று கூறினர் ஆசிரியர். இறைவனே நினைத்தல், இறைவனே வாழ்த்துதல், இறைவனேப் பணிதல் என்ற மூன்றும் முறையே மனம், மொழி, மெய் என்னும் மூன்ருலும் நிகழ்வன. இவற்றில் மனிதன் தனக்கே உரியதாகிய வாக்கில்ை புரியும் வழிபாடு, வாழ்த்து. சிறப்பான ஒன்றைச் சொன்னுல் அதனுேடு தொடர்புடையவற்றையும் சேர்த்துக் கொள்வது வழக்கு. அதை உபலட்சணம் என்று சொல்வார்கள். ஆதலின் கடவுள் வாழ்த்து என்பதை, கடவுளே நினைத்தல், வாழ்த்துதல், வணங்குதல் என்னும் மூன்றுக்கும் பொதுவாகவே கொள்ள வேண்டும்.
எல்லாருக்கும் பொதுவான நூலே இயற்ற வந்த வள்ளுவர் இறைவனைச் சிவன், திருமால், முருகன், அருகன் என்று பெயர் சுட்டாமல் பொதுவான முறையிலேயே குறித்திருக்கிருர். ஆதிபகவன், வாலறி வன், மலர்மிசை ஏகினன், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்றே கடவுளே அவர் கூறு கிருர். இப்பெயர்கள் எல்லாத் தெய்வங்களுக்கும். பொருந்துவன, இறைவன உருவமுடையவகை வைத்து வழி படும் முறை இந்த நாட்டுச் சமயங்களுக்கெல்லாம் பொதுவான வழக்கம். இயல்பாகக் குறியும் குணமும் கடந்து கிற்கும் அவன் பெயரும் உருவமும் உடைய' உயிர்களின்பால் உள்ள கருணையால் பல உருவங் களுடனும் பெயர்களுடனும் எழுந்தருளுகிருன். மனத்தையுடைய மனிதன் இறைவனைத் தியானம் செய்ய வேண்டுமானல் அவனுக்கு உருவம் இருந்தா லன்றி இயலாது. மனம் காமரூப நாட்டமுடையது. கடவுளுக்கு உருவம் இல்லை என்று கொள்ளும் சமயத் தினரும் கண்ணே மூடித் தியானம் புரியும்போது ஏதாவது ஒன்றை-கட்டிடமோ, குறியோ-எண்ணுவது தான் இயல்பு. மனத்தினுல் எண்ணும்போது உருவம் இல்லா மல் அந்தத் தியானம் அமைவதால்ை இரண்டு வகையில்தான் அது முடியும். ஒரே இருளாக உள் ளத்தே தோன்றும்; அல்லது ஒளியாகத் தோன்றும். இரு ளாகத் தோன்றுவதே பெரும்பாலோருடைய அநுபவம்; பல காலம் பயிற்சி செய்தவர்களுக்கே முழு ஒளியாகத் தோன்றும். -- -
இருளாகத் தோன்றுவதை மாற்றி மனம் ஒரு மைப்பட வேண்டுமானல் எந்த உருவையாவது பற்றிக்கொள்ள வேண்டும். அதனுல்தான் தனக் கென்று உருவம் இல்லாத இறைவன் பல பல வடிவங்களுடன் வருவதாகப் பெரியோர்கள் கூறி யுள்ளார்கள்.
'கடவுளுக்கு உருவம் உண்டு’ என்பதே வள்ளு வர் கருத்து. நம் தலையால் அவன் தாளே வணங்க வேண்டும்’ என்று சொல்வதனல் இதன. உணரலாம்,
பொதுநூல் இயற்ற வந்த அவருக்கு இறைவனுடைய வடிவங்களில் எதைச் சொல்வது என்ற கேள்வி தோன்றியிருக்க வேண்டும். ஏதேனும் ஒன்றைச் சொன்னல் மற்றவற்றைப் புறக்கணித்ததாக முடியும். உருவத்தைச் சொல்ல வேண்டும்; ஆனால் ஒரு குறிப்பிட்ட வடிவத்தைச் சொல்லக்கூடாது. இந்தச் சிக்கலே எப்படித் தீர்ப்பது?
திருவள்ளுவர் பேரறிஞர். கடவுளின் உருவத்தில் எல்லோரும் கொள்ளும் பொதுவான பகுதி எது என்று பார்த்தார். ஆறுமுகன், ஆனேமுகன், ஐந்து முகன், சிங்கமுகன் என்று முகத்திலே வேறுபாடு உண்டு. ஆனல் திருவடிகளில் வேறுபாடு இல்லை. எல்லாத் தெய்வங்களுக்கும் திருவடி இரண்டு; அவை தாமரை போல இருக்கும். திருவடியைக் கண்டாருக்கு வேறு பாட்டுணர்வே எழாது. ஆதலின் கடவுள் வாழ்த்தில் இறைவன் திருவடியைப் பற்றியே சொன்னர். ஏழு பாடல்களில் கற்ருள், மாணடி, அடி, தாள் என்றே சொல்லியிருக்கிருர், -
இறைவனுடைய வழிபாட்டில் அவனுடைய அடியைத் தொழுவதே இலக்கு. கம்மாழ்வார், 'துயரறு சுடரடி தொழுதெழென் மனனே’ என்று தொடங்கினர். 'நமச்சிவாய வாஅழ்க, நாதன்தாள் வாழ்க’ என்று தொடங்கினர் மணிவாசகர். -
இறைவனுடைய தொடர்பு நமக்கு இருக்க வேண்டுமானுல் அவனுடைய தாளே வணங்க வேண்டும். அவனுடைய வடிவைக் கண்டு களித்துப் பின்பு அவன் தாளில் புகலடைய வேண்டும். சிறு பையன் பம்பரத்தைக் கயிற்ருல் சுற்றி வீசுகிருன்.
அது சுற்றிச் சுற்றிச் சுழன்றுகொண்டே வருகிறது. கடைசியில் ஒரிடத்தில் நின்று சுழலுகிறது. அப் போது, அது துளங்குகிறது என்று சொல்வான் பையன். பக்தர்களுடைய கண்ணும் மனமும் இறைவனுடைய திருவுருவத்தில் சுற்றிச் சுற்றி வந்து ஈடுபடும். பிறகு திருடியில் நின்று இன்புறும். இறைவன் திருவடி மலரில் வண்டாக நின்று இன்புறுவது அன்பர்களின் உள்ளத்துக்கு இயல்பு.
இறைவனுக்கும் நமக்கும் தொடர்பு எப்படி உண்டாகும்? ஒரு கூட்ஸ் வண்டியில் பாரம் நிறைந்த பெட்டி ஒன்றை இணைக்க வேண்டுமானல், வண்டி யின் பக்கத்திலேயோ எஞ்சினுக்கு அருகிலேயோ கொண்டு சென்று அதைச் சார்த்தி இணைப்பதில்லை. வண்டியின் கடைசிப் பெட்டியில் உள்ள கொக்கியையும், கோக்கப் பெறும் பெட்டியிலுள்ள கொக்கியையும் இணைப்பார்கள். அதுவரையில் தனியே நின்றிருந்த பெட்டி அதன் பிறகு வண்டியோடு சேர்ந்து இயங்கத் தொடங்கும். அவ்வாறே இறைவனிடம் ஒரு கொக்கி யும் நம்மிடம் ஒரு கொக்கியும் உள்ளன. அவற்றை இணைக்க வேண்டும். நம்மிடம் உள்ளது தலே. அது உடம்பிலுள்ள உறுப்புக்களிற் சிறந்தது. அதை வட மொழியில் உத்தமாங்கம் என்பார்கள். ஐந்து இந்திரி யங்களும் ஒருங்கே இருக்கும் இடம் அது. இறைவனுடைய உத்தம அங்கம் திருவடி.
“நின்னிற் சிறந்தகின் தாளினையவை'
என்பது பரிபாடல். நம்முடைய உத்தமாங்கமாகிய தலையை இறைவனுடைய உத்தமாங்கமாகிய திருவடி யோடு இணைத்துவிட்டால் நமக்கும் இறைவனுக்கும் தொடர்பு உண்டாகும். இறைவனுடைய பக்தர்களுக்கு அடியார் என்ற பெயர் இருப்பதை எண்ணிப் பார்த்தால் இவ்வுண்மை புலகுைம். முகத்தார், தோளார் என்று சொல்லாமல் அடியார் என்று சொல் வதற்குக் காரணம், இறைவன் திருவடியோடு தொடர் புடைமையே.
இறைவன் குணம் இறந்தவன், குறி கடந்தவைைலும் குணம் குறியுடையவர்களின் பொருட்டு அவற்றை உடைய வகை எழுந்தருளுகிருன். நாம் தலேயால் வணங்கி வழிபட வேண்டுமென்றே அவ்வாறு எழுந்தருளுகிருன், அதனல் தான் வள்ளுவர்,
கோளில் பொறியிற் குணமிலவே, எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்ருர், எண்குணத்தான் என்பது குணமுடையான் என்
பதையும், தாள் என்பது வடிவுடையான் என்பதையும் புலப்படுத்தி கிற்கின்றன.
责
திருவள்ளுவர் ஒவ்வோர் அதிகாரத்திலும் எடுத்துக் கொண்ட பொருளிள் இலக்கணத்தைக் கூறிப் பின்பு அது சம்பந்தமானவற்றைச் சொல்லுவார்.
அந்த வகையில் கடவுள் வாழ்த்தின் முதற்பாட்டு இறைவனுடைய முழுமுதல் தன்மையை எடுத்துச் சொல்கிறது. -
திருக்குறள் வெறும் நீதிநூல் மாத்திரம் அன்று; கவிதை நூலாகவும் இருக்கிறது. கவிஞர்கள் எடுத் தாளும் அணிகளிற் சிறந்தது உவமை. கடவுளின் முதன்மையை ஒர் உவமையில்ை சொல்ல வருகிறர் கவிஞர் திருவள்ளுவர். எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாக இருக்கிறது அல்லவா? அதைப் போலவே எல்லா உலகங்களுக்கும் இறைவனே முதல்வகை விளங்குகிருன்’ என்று சொல்கிருர்.
அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு.
தெரிந்ததைக் கொண்டு தெரியாததை விளக்க வேண் டும். கல்வி கற்கப் புகுந்தவுடனே யாவரும் அ என்ற எழுத்தைத் தெரிந்து கொள்வார்கள். அதிலிருந்து எழுத்து, சொல் முதலிய யாவும் தொடங்குகின்றன. அவ்வாறே எல்லாப் பிரபஞ்சங்களும் இறைவனிடத்தி லிருந்து தொடங்குகின்றன.
இந்தக் கருத்தைச் சொல்ல வந்தவர், 'கடவுள் எல்லா உலகங்களுக்கும் முதல்வன்’ என்று சொல்லி யிருக்கலாம். “உலகம் கடவுளே முதலாக உடையது” என்று வேறு உருவில் சொல்கிருர். உலகு என்பதை எழுவாயாக வைத்து வாக்கியத்தை அமைக்கிருர். படிச்கிறவர்களுக்கு, கடவுளேப்பற்றிச் சொல்கிறவர் கடவுளே எழுவாயாக வைக்காமல் உலகின் தன்மை யைச் சொல்பவரைப்போல உலகு என்பதை எழுவாயாக்கி யிருக்கிருரே என்று தோன்றக்கூடும். அந்த ஐயத்தைப் பரிமேலழகர் போக்குகிருர். தெரிந்ததைக் கொண்டு தெரியாதவற்றைத் தெரிவிப்பது மரபாதலால், தெரிந்த உலகத்தைக் கொண்டு தெரியாத கடவுளைப் பற்றிச் சொல்கிருர் என்று தெரிவிக்கிருர். காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டு தலின், 'ஆதிபகவன் முதற்றே உலகு’ என உலகின் மேல் வைத்துக் கூறினர். கூறினரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க’ என்று நுட்பம் உணர்ந்து எழுதினர்.
உலகுக்கு முதல்வன் இறைவனே என்பதை உணர்த்த வந்தவர், அதற்கு ஏற்றவாறு அந்தத் தன்மை யைப் புலப்படுத்தும் ஆதி பகவன்’ என்ற பெயரால் கடவுளேக் கூறினர். அது போலவே கல்வியின் பயன் கடவுளே வழிபடுதல் என்பதைச் சொல்லும் அடுத்த குறளில் வாலறிவன்’ என்ற தொடரால் இறைவனேக் குறித்தார்.
கண்ணன், எழுத்துக்களில் நான் அகரமாகின்றேன்’ என்ருன் கீதையில். 'அகர முதலானே அணி ஆப்பனும் ரானே' என்று சம்பந்தரும், 'ஆனத்து முன்னெழுத்தாய் நின்ருர் போலும்’ என்று அப்பரும், அகரம் முதலின் எழுத்தாகி நின்ருய்' என்று சுந்தரரும் பாடியருளியிருக் கிருர்கள். முதற்குறள் இவற்றையெல்லாம் நினைக்கச் செய்கின்றது.
தொன்மங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. இன்றும் நம் சமூகக்கூட்டுமனம் அவற்றைச் சார்ந்தே செயல்படுகிறது. சோதிடம், சிறுதெய்வங்கள், புராணக்கதைகள் போன்றவையே இன்றைய தமிழ் ஆழ்மனதை கட்டமைக்கின்றன. ஆனால் அவையெவையும் இலக்கியத்தில் வரலாகாது என்றால் இவர்கள் எழுதும் நவீன இலக்கியம் என்பது என்ன? ஒரு சமூகத்தின் அகவாழ்வு அச்சமூகத்தின் இலக்கியத்தில் வரலாகாது என்ற அசட்டு வரையறை உலகின் வேறேதாவது மொழிச்சூழலில் பேசப்படுகிறதா?
இந்திய நவீனத்துவம் இந்தியப்பண்பாட்டின் அடித்தளமாக அமைந்த கிருஷ்ணனையும் புத்தரையும் அப்படி எதிர்கொண்டிருக்கவேண்டும் அல்லவா?
இலக்கிய ஆக்கத்தில் தொன்மங்களோ ஆழ்படிமங்களோ இருக்கவேண்டுமா என்பது அந்த படைப்பைச் சார்ந்து ஆசிரியன் முடிவெடுக்கவேண்டியது.
தொன்மங்களை மரபான முறையில், வழக்கமான பார்வையில், இயந்திரத்தனமாக பயன்படுத்தும்போது அவை பயனிழந்துவிடுகின்றன. சாவு வரும்போது யமன் வந்தான் என்பதுபோல. அவை வாசகனின் கனவுக்குள் ஊடுருவும்படி கூர்மையாகியிருக்கின்றனவா என்பது முக்கியம். கலையில் மறுஆக்கம் செய்யப்படும்போது மட்டுமே அது நிகழ்கிறது. மறுஆக்கம் என்பது மறுவிளக்கம் கொடுப்பது அல்ல. அது இன்றைய ஒருவாசகனின் கனவுள்செல்லும்படி உருமாற்றம் அடைவது.