Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவர் போற்றும் முன்னோர் ஞான மரபு


Guru

Status: Offline
Posts: 7468
Date:
வள்ளுவர் போற்றும் முன்னோர் ஞான மரபு
Permalink  
 


Sanmukam%2B02.jpg

Sanmukam%2B03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Sanmukam%2B04.jpg 

Sanmukam%2B05.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Thol%2Bkappiyar%2Bsamayam%2B01.jpg

Thol%2Bkappiyar%2Bsamayam%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 Thol%2Bkappiyar%2Bsamayam%2B03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

tham%2Bveda%2B01.jpgtham%2Bveda%2B02.jpg tham%2Bveda%2B03.jpgtham%2Bveda%2B04.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

tham%2Bveda%2B05.jpg tham%2Bveda%2B06.jpg tham%2Bveda%2B07.jpg tham%2Bveda%2B08.jpgtham%2Bveda%2B09.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 Kural%2BAram%2Breligion%2B01.jpg Kural%2BAram%2Breligion%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Kural%2BAram%2Breligion%2B03.jpg Kural%2BAram%2Breligion%2B04.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 Kural%2BAram%2Breligion%2B05.jpg

Kural%2BAram%2Breligion%2B06.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Kural%2BAram%2Breligion%2B07.jpg 

Kural%2BAram%2Breligion%2B08.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Kural%2BAram%2Breligion%2B09.jpg Kural%2BAram%2Breligion%2B10.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 Kural%2BAram%2Breligion%2B11.jpg

Kural%2BAram%2Breligion%2B12.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 Kural%2BAram%2Breligion%2B13.jpg

Kural%2BAram%2Breligion%2B14.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Vaithikam%2B02.png Vaithikam%2B03.png 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

வள்ளுவர் காட்டும் உலகு

 

-- இரெ. சந்திரமோகன்.
 
 
thiru-1.png?w=450


முன்னுரை:
உலக  பொதுமறையாம் திருக்குறளில்  ‘உலகம்’ ‘உலகு’  எனும் சொல் பல பொருட்களில் கையாளப்படுவதை பல குறட்பாக்களின் மூலம் அறியலாம். “வையம் போற்ற வாழும் கலை” கற்பிக்கவே தமிழ் மறைகள் தோற்றுவிக்கப் பெற்றுள்ளன. “உலகத்தோடு ஒட்டொழுகல்” வேண்டும் எனில் உலகம் யாது என்று உணர்தல் வேண்டும். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என சேக்கிழார் பெருமான் சிவபிரானின் பெருமையைப் பேசுவார். “உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக” என்ற உணர்வில் வாழ்பவர்கள் நம்பிக்கை ஊட்டுபவர்களாக தலைவர்களாக உருவாகின்றனர். வள்ளுவர் “உலகம் பழிப்பதை ஒழித்துவிடு” என்று கூறுகின்றார். அவரது பல குறட்பாக்களில் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற செய்தியும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற செய்தியும் எங்கும் மிளிர்கின்றது. கம்பனின் உலகம் யாவையும் தாமுளவாக்களும்” என்ற பாடலும் நக்கீரர் தம் திருமுருகாற்றுப்படையை ‘உலகம் உவப்ப ….’ எனத் தொடங்குவதும், “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” – என்ற தொல்காப்பியர்கூற்றும்ஒத்த செய்தியைத் தருகின்றன. இவ்வழி “நல்லோர்கள் நிறைந்தது உலகம்” என்பது வள்ளுவரின் கூற்றாக இருப்பதை பல குறட்பாக்கள் மெய்ப்பிக்கின்றன.

“குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்” (504)

எனும் குறட்பாவில் ஒவ்வொரு மனிதனிடமும் “குணமே மிகும்” எனும் செய்தியும் மறைந்திருப்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். இவை வள்ளுவர் காட்டும் உலகு என நாம் தொல்காப்பியம் வழி தீர்மானிக்க வாய்ப்பு இருந்தாலும், அதனினும் நுட்பமான செய்திகளை வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பதை நிறுவ முயற்ச்சிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதற்குறட்பாவில் உலகம்:
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு." (1)

கடவுள் வாழ்த்து முதல் பாடல் மிக ஆழமான கடலை ஒத்த பாடாலாகும். இதனை ஆராய முற்படுகையில்;பாற்கடலைக் கடைந்த கதையே நினைவுக்கு வருகின்றது. இனி இக்குறட்பாவில் கூறப்படும் “உலகு” எனும் சொல் தொல்காப்பியம் காட்டும் ‘உயர்ந்தோர்’ எனும் நோக்கில் இல்லாமல் அண்டத்தின ;பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிப் பேசுவதாகக் கொள்ளலாம்.

‘அகரம்’ என்பது ‘அ’ என்ற எழுத்தின் ஒலி. முதலில் ஒலி எழுப்பின் உயிர்கள். இன்றும் மனிதனைத் தவிர ஏனைய உயிர்கள் ஒலியினாலே தொடர்பு கொள்கின்றன. ஒலிகளின் தலைவன் ‘அகரம்’. ஒலி வடிவத்திற்குப் பின்  ‘வரி வடிவம்’  உருவானது. அது போன்ற இந்த பிரபஞ்சமான உலகும் தோன்றியதற்கான அடிப்படை ஒலியாகும். ஆதியில் தோன்றிய ““Big Bang”” என்ற அதிர்வே உலகம் (பேரண்டம், அண்டம், பால்வெளி, நட்சத்திரங்கள், சூரியன், கிரகங்கள், பூமி, நிலா, வின்கற்கள்) தோன்றுவதற்கு அடிப்படை எனவே எழுத்துகளைப் போன்றே, உலகம் தோன்றுவதற்கும் காரணம் ஒலியே, அதிர்வே, என்றும் பொருள் உணரலாம்.  “அண்டப் பிளக்கத்து உண்டைப் பிறக்கம்”என்ற மணிவாசகர் வாக்கும், திருமூலரின் தமிழ்வேதத்தின்  உட்கிடக்கையான “அகர உகர மகர” உட்சேர்க்கையை ‘ஓம்’ எனும் மந்திர ஒலியாகக் குறிப்பதை ஈண்டு நினைத்துப்பார்க்கலாம்.

கிருத்துவத்திருமுறை  1:1 ன் படி
“Your words create world:
In the beginning was the word and the word was with GOD, and the word was GOD!
இத்திருமறைச் செய்தியைஉற்றுநோக்கின் நம் உலகம் நம் வார்த்தைகளே என்றாகிறது.

எனவே ‘அ’ என்ற எழுத்தைப் போல் எழுத்துக்களும், வார்த்தைகளும் ‘அகரம்’ அடிப்படை. இறைவனே உயிர்களின் தலைவன். இன்சொற்கள் வழியாக இறைவனை அடையலாம் என்றோ இறைவனுக்கு ஒப்பான தலைவன் ஆகலாம் என்பதும் இதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி. எனவே தான் “ தான் போற்றி, கழல் வெல்க, என்று மணிவாசகரும், எண்ணியவர் திண்ணியராகப்பெரின்” என்று உயர் எண்ணத்தால் எதையும் பெறலாம் என்றும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.

முதற்குறட்பாவில் பேர அண்டத்தின் பிளவைப்பாடி  அதன்பின் “நிலமிசை நீடுவாழ்வார்” என்ற குறட்பாவிற்குப்பின் “பூமி”, உயிர்கூட்டம், உயர்ந்தோர், எனும் பொருளில் உலகம் என்ற சொல்லைக் கையாளுகின்றார் என்றும் தெளிவாகிறது.

அகரம் இறைவனுக்கும், உயிர்க்கும் பொது. சொற்களே உலகம் - எனில் சொல்லுக சொல்லில் என்று அதன் பொருளை விரித்து பல குறட்பாக்களைச் செய்துள்ளார்.
“கற்றிலன் ஆயினும் கேட்க”
“சான்றோன் எனக் கேட்டதாய்”
“என்னோற்றான் கொல் எனும் சொல்”

நாகாக்க!
புறங்கூறாமை, வாய்மை, இனியவை கூறல்… போன்ற அதிகாரங்கள் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்….
என்று சொற்கள், கேட்டல் ஆகியவற்றின் உயர்வை விளக்க என்று சொற்கள், கேட்டல் ஆகியவற்றின் உயர்வை விளக்க பல குறட்பாக்களை சமைத்துள்ளார்.

முதற் குறளிலேயே இன்றைய விஞ்ஞான உலகத்தின் அடிப்படைத் தேடலின் விடையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எம் ஐயன் வள்ளுவன் தந்திருக்கின்றான் என்ற செய்தி கரும்பாய் இனிக்கின்றது.

படைக்கப்பட்ட உலகம்:
இனி உலகம் தானாய் தோன்றியதா? படைக்கப்பட்டதா? இந்தக் கேள்வி இன்றும் சர்சைக்குரிய கேள்வி. ““Standard model”” என்ற கொள்கை பேரண்டப் பிளவு வெற்றிடத்திலிருந்து தோன்றியது என்றும், பேரண்டப்பிளவின் சில நுண்துளி வினாக்களில் சமச்சீர்கேடு உருவாகி, அதிலிருந்து கடவுள் துகள், மற்றும் நுண்துகள்கள் உருவாகி, அதனின்று இன்றைய அண்டம், விண்வெளி, பால்வெளி, நமது சூரியகுடும்பம் மற்றும் பூமி, உயிர்கள், தோன்றியது என்றும் நிருவ முயற்சி மேற்கொண்டு பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது.

“ஆதிபகவன்” என்ற சொல்லாட்சி மூலம் இறைவன் என்ற சக்தியையே குறிக்கின்றார். “விச்சதன்றியே விளைகு செய்குவான்” என்ற மணிவாசகர் “விண்ணும் மண்ணும் வைத்து வாங்குவான்” என்று சொல்வதைப் போல் “பேரண்ட உலகைப் படைத்தவனே…… உலகையும் படைக்கின்றான்” அகரத்தைத் தலைவனாகக் கொண்டது போல், இறைவனைத் தலைவனாக ஏற்றுக்கொள்பவன் நல்லுலகமாகி உயர்ந்த நெறிகளுக்கு வழி வகுக்கின்றான்.

“நெருநர் உளன் ஒருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்து இவ்வுலகு”

என்று காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வரும் பெருமை உடையதே இப்பூமி என்று வள்ளுவம் பகர்கின்றது.

முடிவுரை:
“செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகம் ஆற்றல் அரிது”.
என்ற குறட்பா கூறுவது போல் வள்ளுவர் காட்டும் உலகம் பெரும்பான்மையாக மற்றும் வானுலகம் மண்ணுலகமாகும்.

“கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றும் கொல்லா உலகு”.  (211)

“இருமை வகை தெரிந்து ஈண்டாரம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு” – (23)

“சுவை ஒளி உறு ஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.” (27)

போன்ற குறட்பாக்களில் மண்ணுலகைச் சுட்டும் குறட்பாக்கள் என்று கொள்ளலாம்.

“பெற்றால் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு.” (58)

என்ற குறட்பா வானுலகைச் சுட்டும் குறட்பா. ஆயின்

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு.” (1)

என்ற குறட்பா குறிப்பிடும் உலகு  எனும் சொல் “பேரண்டமான பிரபஞ்சமாகும்” என்பதும் அதன் உள்ளிடக்கை அறிவதே “கற்றதனால் ஆய பயன்” என்பதே வள்ளுவரின் வாக்கு என்றும் அறிந்து இன்புறுவோம்.

வாழிய திருக்குறள் வாழிய இவ்வுலகு.

___________________________________________________________
இரெ. சந்திரமோகன்
முதல்வர், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக்கல்லூரி,
தேவகோட்டை-630303. தமிழ் நாடு, இந்தியா.
___________________________________________________________

இரெ. சந்திரமோகன்
rathinam.chandramohan@gmail.com


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

குறள் அமுது - (24)

 

 


Thiruvalluvar.jpg
குறள்:
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்”                               - 140
 
பொருள்:
பல நூல்களைக் கற்ற அறிஞர்களாயினும் உலகத்தோடு சேர்ந்து ஒழுகும் ஒழுக்கத்தை கல்லாதவராய் இருந்தால் அவர்களும் அறிவில்லாதவர்களே.
 
விளக்கம்:
இத்திருக்குறள் 'ஒழுக்கமுடைமை' என்னும் அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறளாகும். ஒழுக்கமுடைமை என்றால் ஒழுக்கத்துடன் வாழ்தல் என்ற கருத்தைத் தரும். ஆத்திசூடியில் 'ஒப்புரவொழுகு' என ஔவையார் சொன்னதும் உலகத்தோடு ஒட்ட ஒழுகலும் ஒன்றேயாகும். அதாவது உலகத்தில் வாழ்வோர் ஒத்துக்கொள்ளும் [ஒப்புக்கொள்ளும்] படியான ஒழுக்கத்துடன் வாழ்தலாகும்.
 
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பது பழந்தமிழர் கொள்கை. அறிவில் சிறந்த சான்றோரை உயந்தோர் என்றனர். சான்றோர் தமது பழக்க வழக்கங்களால் தமது அனுபவ முதிர்ச்சியால் எவை சரி எவை பிழை என அறிந்தனர். தமது அனுபவ உண்மையைக் கொண்டு நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகம் இனிமையாக இருக்கும் என்பதைக் கூறியுள்ளனர். 
 
மனித இனம் இவ்வுலகுக்கு அளித்த தத்துவஞானியர் யாவருமே உலகம் வாழ பல நல்ல கருத்துக்களையே சொல்லிச் சென்றுள்ளனர். நீதி, நேர்மை, சட்டம், ஒழுங்கு போன்ற நடைமுறைகளை மனிதப் பண்புகளில் உயர்ந்தோரே உருவாக்கினர். மானுடப்பண்புக்கு ஒத்துவராத கொள்கைகள் கால ஓட்டத்தில் அழிந்து போயின. உலகெங்கும் போரும் புரட்சியும் காலம் காலமாக நடந்தாலும் மனித இனச்சங்கிலி உயர்ந்தோர் சொன்ன ஒழுக்க முறைமையாலேயே தொடர்நடை போடுகின்றது.
 
ஆதிமனிதன் ஆடை இன்றித் திரிந்தான் என்பதற்காக இன்றைய மனிதனும் ஆடை இன்றித் திரிய முடியுமா? அப்படித்திரிவது இன்றைய உலகநடைமுறைக்குச் சரியாகுமா? ஆதலால் நாம் உலகநடைமுறைக்கு ஏற்ப உலகுடன் சேர்ந்து நடக்க வேண்டும். அதுவே உலகத்தோடு ஒட்ட ஒழுகலாகும். உலக வழக்கத்துக்கு மாறாக நடக்கும் அறிஞர்களின் செயலை அறிவிலார் செயலாகக் கருதுவது இக்குறளின் சிறப்பாகும்.
 
பல பட்டங்களைப்  பெற்று பேரறிஞர்களாக இருந்தாலும் உலகநடைமுறைக்கு ஏற்ப எப்படி வாழ்வது எனும் ஒழுக்கத்தை கல்லாதவராய் இருந்தால் அவரும் அறிவில்லாதோரே.


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

திருமுருகாற்றுப்படை

துன்பம் நீங்கி வாழ்வதே இன்பம். பொருள்செல்வம் இருந்தால் தான் இந்த உலகில் இன்பமாக வாழலாம். இதைப்போல் இறப்புக்குப் பின் உள்ள மறுமை உலக வாழ்க்கைக்கு அருள்செல்வம் வேண்டும். பொருள் செல்வத்தை அடைவதற்கு ஒரு வள்ளலிடம் செல்வதற்கு வழி சொல்லுபவை, நாம் முன்பு கண்ட ஆற்றுப்படைப் பாடல்களும், பத்துப்பாட்டின் மற்ற நான்கு ஆற்றுப்படை இலக்கியங்களும்! அருள் செல்வத்தை அடைவதற்காக, உலகை எல்லாம் படைத்து, அளித்து, காக்கும் வள்ளல் ஆகிய இறைவனிடம் செல்வதற்கு வழி கூறுவது திருமுருகாற்றுப்படை. இதற்கு முருகு, புலவர் ஆற்றுப்படை என்ற வேறு பெயர்களும் உள்ளன.

317 அடிகள் கொண்ட இப்பாட்டை இயற்றியவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார்.

பொருளை எவரிடத்தில் இருந்தும் எந்த வழியிலும் பெற முடியும். ஆனால் அருள் உள்ளம் என்பது கடவுளால் மட்டுமே அருளப்படுவது. அதைப் பெறுவதே மறுமை வாழ்வுக்குச் சிறந்தது என்னும் உயர்ந்த நோக்கத்துடன், முருகனிடமிருந்து அருளைப் பெற்ற ஓர் அரும்புலவன் மற்றவனுக்கு அதைப் பெறவழி சொல்வதாக, ஆற்றுப்படையாக நக்கீரர் இந்நூலை இயற்றியுள்ளார்.

உலக உயிர்கள் எல்லாம் மகிழ்ந்து வாழக் கடவுள் புரியும் அருட்செயல்களை உணர்ந்து பார்க்கும் உள்ளம்தான், பிறர் நலனுக்காக வாழும் அருள் உள்ளமாய் ஆகும். அந்த இறையருளை உணர்த்துவதே இந்த நூலின் முதன்மை நோக்கம் ஆகும்.

தன் ஊர்தியாகிய தோகை மயில் மீது சிவந்த ஒளிமிக்க மேனியுடன் தோன்றும் முருகனின் தோற்றத்துக்கு, உலகம் எல்லாம் மகிழக் காலையில் நீலக்கடல் அலைகளின் மீது எழும் செங்கதிரோனின் தோற்றத்தை உவமையாகக் கூறி, நூலைத் தொடங்குகிறார் நக்கீரர்,

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு... (1-2)

(உவப்ப = மகிழ; வலன்ஏர்பு = வலப்பக்கமாகச் சுற்றி; திரிதரும் = வலம்வரும்)

இந்த உவமை, முருகனின் அழகிய தோற்றப் பொலிவை மட்டும் சுட்டவில்லை. இருளை அழித்தல், ஒளிவழங்கி உலகைக்காட்டுதல், வெப்பம் என்னும் உயிர்ச்சத்தை உலக உயிர்களுக்கு எல்லாம் ஊட்டுதல் ஆகிய பயன்பாடுகளையும் உணர்த்துகிறது. வெளிப்படையான இவற்றை மட்டும் அன்றி, உள்ளார்ந்த பயன்பாடு தரும் பண்புகளையும் சுட்டுகிறது. தீமைகளைச் சுட்டுஎரித்தல், நன்மைகளின் பால் செலுத்தும் ஞான ஒளிதருதல் ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்துகிறது.

ஆன்மிக ஆற்றுப்படையாக அமைந்துள்ள இந்நூல் ஆறுமுகன் ஆகிய முருகன் காட்சி தரும் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று அருள் பெற வழிகாட்டுகிறது; ஆறுபகுதிகளாக அமைந்



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை             - குறள் 322  கொல்லாமை
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
மணக்குடவர் உரை: பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.

Translation:

Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.

Explanation: The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.

 ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்

  தெற்று என்க மன்னவன் கண்                          குறள் 581  ஒற்றாடல்
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.
மணக்குடவர் உரை: ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக.
அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.
Translation:
These two: the code renowned and spies,
In these let king confide as eyes.
Explanation:
Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு                   - குறள் 683 தூது
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
Translation:
Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.
Explanation:
To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்

  யா உள முன் நிற்பவை                          - குறள் 636 அமைச்சு

இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.

மணக்குடவர் உரை: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.

Translation:

When native subtilty combines with sound scholastic lore,
'Tis subtilty surpassing all, which nothing stands before.

Explanation:

What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?.

வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்

  நுண் அவை அஞ்சுபவர்க்கு                       - குறள் 726 அவையஞ்சாமை

நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?.

Translation:

To those who lack the hero's eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?.

Explanation:

What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.        குறள் 662: வினைத்திட்பம்
மணக்குடவர் உரை:வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர்.
பரிமேலழகர் உரை:
ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர். (தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும்,இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார் 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர், அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்தில
மு. வரதராசன் உரை:இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
மு. கருணாநிதி உரை:இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.
சாலமன் பாப்பையா உரை: பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.
Translation:
'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,'
These two define your way, so those that search out truth declare.
Explanation:Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.     அவையஞ்சாமை.  குறள் 725:
மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.
பரிமேலழகர் உரை:ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
மு. கருணாநிதி உரை:அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.
Translation:
By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.
Explanation:In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Alavai%2Bnul%2Bvalluvar.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

கலித்தொகை 99
மருதன் இளநாகனார், மருதம், மன்னனிடம் அவன் மனைவியின் தோழி சொன்னது
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர் இன மணி யானையாய்!

அறன் நிழல் எனக் கொண்டாய் ஆய் குடை; அக் குடை
புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள்? இவள் காண்டிகா,
பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! 10

பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள்? இவள் காண்டிகா,
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை!

ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அம் முரசின்
ஏமத்து இகந்தாளோ இவள? இவள் காண்டிகா, 15
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை!
ஆங்கு,
நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற
வடுக் காட்டக் கண் காணாதற்று ஆக, என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையைக் 20
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே?

Kalithokai 99
Maruthan Ilanākanār, Marutham, What the queen’s friend said to the king

O king with a sturdy chariot with banners
and many jingling bells, decorations and
elephants, who is righteous like the unfailing
rains that fall on earth nurturing its citizens,
like a mother who feeds and cares for her child
like the two Brahmins who do not stray
from righteousness protecting both groups,
those who do not drink liquor and those
who drink it!

You are righteous in offering shade under
your beautiful umbrella. Is she one who is
outside of that umbrella shade? Look at her,
who trembles in fear. Pallor has spread on
her crescent-moon forehead.

Your scepter proclaims truthfulness. Is she one
who does not deserve the protection of your
scepter? Look at the one attacked by affliction
who hates living.

Your drum roars offering protection to all. Is she
one who does not get the protection of your drums?
Look at her who is sad, who has lost the beauty of
her bamboo-like arms.

Even when they see what is far away, the eyes are
not able to see their own scars. Is it hard for you to
know your harshness, abandoning my friend and
letting her bangles become loose?

Meanings:  நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் – those who removed drinking liquor and those who did not remove drinking liquor, அவை எடுத்து அற வினை – who show what is righteous to both, இன்புறூஉம் – with happiness, அந்தணர் இருவரும் – two Brahmins – Viyālan and Velli, திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – not failing from fairness according to the holy books to those different from each other, குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல் – like a mother who who feeds and enjoys her child (உறூஉம் – இன்னிசை அளபெடை), உலகத்து மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த – giving due to your righteous nature like the unfailing rain that falls and protects everyone on earth, இழை அணி – decorated with ornaments, கொடித் திண் தேர் – sturdy chariots with flags, இன மணி – with clusters of bells, many bells, யானையாய் – O one with elephants,

அறன் நிழல் எனக் கொண்டாய் – you are righteous in offering shade (அறன் – அறம் என்பதன் போலி), ஆய் குடை – beautiful umbrella, அக் குடை புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் – is she one outside of that umbrella shade, இவள் காண்டிகா – look at her (காண்டிகா – காண்டி’ என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது, an expletive of the second person), பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை – the woman who is very fearful as pallor spreads on her crescent-moon like forehead,

பொய்யாமை நுவலும் நின் செங்கோல் – your scepter proclaims truthfulness, அச் செங்கோலின் செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் – is she one who does not deserve your just scepter, இவள் காண்டிகா – look at her (காண்டிகா – காண்டி’ என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது, an expletive of the second person), காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – the woman who ended up with love affliction who hates to live,

ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் – your drum roars that it will protect, அம் முரசின் ஏமத்து இகந்தாளோ இவள் – is she one who does not get the protection of your drums (இகந்தாளோ – ஓகாரம் எதிர்மறை), இவள் காண்டிகா – look at her (காண்டிகா – காண்டி’ என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது, an expletive of the second person), வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை – the woman who is sad who lost her the beauty of her bamboo-like arms,

ஆங்கு – அசை நிலை, an expletive, நெடிது சேண் இகந்தவை காணினும் – even if they are able to see what is far away, தான் உற்ற வடுக் காட்டக் கண் காணாதற்று – eyes will not be able to see the scars on themselves, ஆக என் தோழி தொடி கொட்ப – as my friend’s bangles whirled (loose), நீத்த கொடுமையை – the cruelty of abandoning her, கடிது என உணராமை – not realizing that it is harsh, கடிந்ததோ நினக்கே – is it hard



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.          குறள் 849: புல்லறிவாண்மை.

சாலமன் பாப்பையா உரை:அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.
மு. கருணாநிதி உரை:அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.
மணக்குடவர் உரை:அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்: அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானாயிருக்குமாதலான். இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.  குறள் 354: மெய்யுணர்தல்.
மு. வரதராசன் உரை:மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
மு. கருணாநிதி உரை:உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.
மணக்குடவர் உரை:மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. குறள் 1110: புணர்ச்சிமகிழ்தல் 
மு. வரதராசன் உரை:செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.
மணக்குடவர் உரை:யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும், இச்சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை. காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமையாமையின் கூற்று.                     

சாலமன் பாப்பையா உரை: நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

உவமானப் பிரமாணம்

Jwj;jhH ngUik Jizf;$wpd; itaj;J

,we;jhiu vz;zpf; nfhz;lw;W (Fws; 22)

vd;w Fwspy; Fwj;jhhpd; ngUik Mfpa vz;zpypg; ngWkjpia tpsf;Ftjw;F ,we;jtHfspd; vz;zpf;if vd;w ghpr;rakhd Kbtpypg; ngWkjpia ctkhdkhff; ifahz;bUg;gJ eag;Gf;FhpaJ.

ஆப்தவாக்கியம்  உரையளவை

cyfk; vd;gJ caHe;NjhH khl;L vd;w tifapy; rhd;NwhH ciuapidr; rhd;Wiuahff; nfhs;tjhy; ,t;tsitapid Mg;j thf;fpak;,  ciuasit vdTk; toq;FtH.

me;j tifapy; cyfj;jtuhy; cz;L vd Vw;Wf; nfhs;sg;gl;l xU tplaj;jpid ,y;iy vd;W kWg;gtid myif (Nga;) vd ts;StH tpkHrpj;Js;s ghq;F ftdj;jpw;FhpaJ.   

cyfj;jhH cz;nld;gjpy;nyd;ghy; itaj;J

myifah itf;fg;gLk; (Fws; 850)

nysfPfk; - mnysfPfk; vd epahajhprd thjpfSk; Ntjthf;fpak;> cyfthf;fpak; vdr; irtrpj;jhe;j thjpfSk; Mg;jthf;fpag; gpukhzj;ij tifg;gLj;jpAiug;gJk; ftdpf;fj;jf;fJ. (tphptQ;rp tpthpf;ftpy;iy)

,t;thwhf Rghtk;> xopG> IjPfk; cs;spl;l midj;Jg; (10) gpukhzq;fspd; gapy; epiyfisAk; gy;NtW re;jHg;gq;fspy; jpUf;Fwspy; milahsq;fhl;l KbAk;. mwpthuha;r;rpapaypy; msitapay; xU gFjpNa-ahjypd; tphptQ;rp mit gw;wp tpsf;f Kw;gltpy;iy.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.  குறள் 318: இன்னாசெய்யாமை 
மு. வரதராசன் உரை:தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ?
மணக்குடவர் உரை:தன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. குறள் 315: இன்னாசெய்யாமை
மணக்குடவர் உரை:பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்குறள் 91: இனியவைகூறல்

சாலமன் பாப்பையா உரை:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
மு. வரதராசன் உரை:ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்..                                         மணக்குடவர் உரை: ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். 
 குறள் 96: இனியவைகூறல் 

மு. வரதராசன் உரை:பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
மணக்குடவர் உரை:நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.         
குறள் 441:பெரியாரைத் துணைக்கோடல்.

சாலமன் பாப்பையா உரை:அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

மு. வரதராசன் உரை: அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
மணக்குடவர் உரை: அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

திருக்குறளின் தத்துவத்தளம் குறித்த விசாரணையில் அறிவாராய்ச்சியியலின் பயில்நிலை -ச. முகுந்தன்

முதுநிலை விரிவுரையாளர  இந்துக்கற்கைகள் பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 

அறிவென உரிமைகோரப்படும் விடயங்களின் ஏற்புடைமை பற்றிய ஆய்வே அறிவாராய்ச்சியியல் ஆகும். ஞானத்தின் மீது நாட்டமுள்ள புலமாகிய மெய்யியலின் அடித்தளமாக விளங்குவது அறிவாராய்ச்சியியலே எனில் அது மிகையில்லை. 

அறிவாராய்ச்சியியல் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் “Epistemology”” என வழங்குகிறது. இது Episteme + Logos என்ற இரு கிரேக்கச் சொற்களின் இணைப்பால் உருவானதாகும். அறிவு தொடர்பான முறைமை பற்றிய அல்லது முறைமைக்குட்படுத்தப்பட்ட ஆராய்ச்சி என்பதே இதன் கருத்தாகும். 

அந்தவகையில் அறிவின் தோற்றம், இயல்பு, உண்மை, வரம்பு ஆகியவை குறித்து இப்புலமானது கவனம் செலுத்துகிறது. மேலைத்தேய மெய்யியல் மரபுகளில் அறிவின் ஊற்றுப் பற்றிய ஆய்வுகள் அறிவாராய்ச்சியியலிலும் அதன் நியாயித்தல் முறைமைகள் அளவையியலிலும் உள்ளடக்கப்படுகின்றன. இந்திய மெய்யியல் மரபிலோ இவ்விரு கிளைகளும் ஒருங்கிசைவுற்றே வளர்ச்சி பெற்று வந்துள்ளன. மேலும், அறிவு அறிவுக்காகவே என்ற போக்கில் இந்தியமெய்யியல் மரபு ஆய்வு செய்வதில்லை. ஆன்ம விசாரணையை முதன்மைப்படுத்தியதாகவே இந்திய அறிவாராய்ச்சியியல் திகழ்கிறது. 

திருக்குறளுக்கும் அறிவாராய்ச்சியியலும்;:

திருக்குறள் அடிப்படையில் தத்துவப் பனுவல் அன்று@ தர்க்க சாஸ்திரமும் அன்று. இலக்கணமும் இலக்கிய ஞானமும் கைவரப்பெற்ற திருவள்ளுவர் தத்துவ ஞானத்தின் வேராகிய அறிவாராய்ச்சியியலை உணர்ந்தவராய் இருப்பாரா? திருக்குறளை இலக்கியம் என்ற நோக்குகைக்கு அப்பால் வௌ;வேறு ஆய்வுக் கோணங்களில் கட்டுடைத்து நோக்குதல் விபரீதமானதா? என்ற ஆசங்கைகளும் எழாமலில்லை. 

திருவள்ளுவர் தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளுக்கு அப்பாலும் அகன்றாழ்ந்தவர். சமஸ்கிருத காவிய மரபுகளையும், ஸ்மிருதிகளையும், அர்த்த சாஸ்திரத்தையும் குறுகத்தறித்தவர். வாத்சாயனரையும் கரைகண்டவர். தான் பெற்றிருந்த பல்துறைப் புலமையினைப் பொருத்தமான சந்தர்ப்பங்களில் தனது பனுவலில் இழையோடவிட்டவர். இவ்வகையில் தர்க்கசாஸ்திர அறிவு இவருக்கு அந்நியமானதாய் இருக்க இயலாது.. 

அறிவாராய்ச்சியியல் தொடர்பாக குறட்பாக்களுள்ளே ஆழ்ந்து செல்ல வசதியாக  இரண்டு விவாதப் புள்ளிகள் முன்வைக்கப்படுகின்றன.  

விவாதப்புள்ளி- 1  உண்மை பற்றிய அறிவு தொடர்பாக இந்திய அறிவாராய்ச்சியியல் மரபில் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு அறிவுத் தளங்கள் ஆராயப்பட்டுள்ளன.

திருவள்ளுவரும் இதுபற்றிக் கவனம் செலுத்தியுள்ளார்.

ஆதாரம்        அறத்துப்பாலின் 36வது அதிகாரம் ‘மெய் உணர்த்தல்’ என்பதாகும்.

பொருட்பாலின் 43வது அதிகாரம் ‘அறிவுடமை’ என்பதாகும்.

விளக்கம் : இவ்விரண்டு அதிகாரங்களும் அறிவு பற்றியே ஆராய்ந்துள்ளன. ‘அறிவு’ என்ற சொல்லுடன் நிறைவுறுகின்ற குறட்பாக்களும் இவ்வதிகாரங்களில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறாயின் இது ‘கூறியது கூறல்’ என்ற குற்றத்தின் பாற்பட்டதா? எனில் இல்லையென்றே கூறவேண்டும். ஏனெனில் அறிவுடைமை என்ற அதிகாரம் பொருட்பாலில் அமைவது, இதில் பேசப்பட்ட  அறிவு கருவிநிலைப்பட்டது. அஃது உலகியலறிவாகிய – அபரஞானம் ஆகும். 

அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள ‘மெய்யுணர்தல்’ என்ற அதிகாரம் பரஞானத்தினை நோக்கிய பயணிப்பாகும். இவ்வதிகாரம் ‘துறவு’ என்ற அதிகாரத்திற்கு அடுத்ததாக வைக்கப்பட்டிருப்பதும் நோக்கற்பாலது. ‘பரஞானம்’ கருவி நிலைப்பட்டதன்று. எமது அறிகருவிகள் மூலம் அறியக்கூடியதுமன்று. அது உணரப்படவேண்டியது. அபரஞானத்திற்குரிய அறிவுப்புலங்கள் யாவும் மாற்றத்திற்குட்படக்கூடியவை. பொய்ப்பிக்கப்படக்கூடியவை. ஆகவே அவற்றை ‘மெய்’ என்றழைத்தல் தவறாகும். ஏனெனில் ‘உண்மை’ என்றைக்கும் மாற்றத்திற்குட்படாதது. இதனைக் கருத்தில் இருத்தியே ‘மெய்யுணர்தல்’ என்ற அதிகாரம் வள்ளுவரால் அமைக்கப்பட்டதெனலாம். 

விவாதப்புள்ளி -2

பிரமாணங்கள் பற்றிய விளக்கமும், பயில்நிலையும் திருக்குறளின் பொருட்புலப்பாட்டு நுட்பங்களில் நன்கு இழையோடியுள்ளன.

இதனை, பரிமேலழகரும் பல சந்தர்ப்பங்களில் தனது உரை விளக்கத்தில் உறுதி செய்யுள்ளார். 

ஆதாரம்-அமைச்சர்களுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத தகுதிப்பாடாக பிரமாணங்கள் பற்றிய அறிவு அமைவதாகத் திருவள்ளுவர் கருதியுள்ளமை, - பொருட்பால் ‘அமைச்சு’ (அதிகாரம்) குறள். 725, இது பற்றிய பரிமேலழகர் நிலைப்பாடு.

விளக்கம் “The commentator Parimelalakar while interpreting the contents at the first three Sources of knowledge viz. perception, inference verbal testimony to highlight the master mind of Tiruvalluvar according to him Tiruvalluvar anticipated the cabinet ministers to be equipped with epistemological knowledge.”[1]என்ற பேராசிரியர் சோ. ந. கந்தசாமியின் கருத்தும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது. இனிச் சற்று ஆழ்ந்தகன்று செல்ல முற்படலாம். 

பொருட்பால்

பிரபஞ்ச இயற்கையின் இயல்புகளைப் புறவயமாக ஆய்ந்துணர முற்படுவனவும், இயற்கையில் ஒரு உயிர்ச்சுவடாய் மனிதன் வாழ்வதற்கு உதவுகின்ற கருவிநிலைப்பட்ட அறிவுப்புலங்களும் இந்து மெய்யியற்புலத்தில் அபரஞானமாகக் கருதப்படுகின்றன. இயற்கை விஞ்ஞானங்களும் இன்னபிற சாஸ்திரஞானங்களும் இதில் உள்ளடக்கம். 

பிரபஞ்ச இயற்கை பஞ்சபூதக் கலப்பாலுருவானதாகும். இதனை அறிந்து கொள்ள ஞானேந்திரியங்களும், அந்தக்கரணங்களும் எமக்குத் தரப்பட்டுள்ளன. இக்கருவிக் கூட்டங்களின் துணைகொண்டு ஒருவனால் அறியப்படக்கூடிய அபரஞானத்தின் அதி உச்ச எல்லை என்பது பஞ்சபூதங்களின் சூக்கும நிலையாகிய தன்மாத்திரைகள் தொடர்பானதாகவே இருக்க முடியும். 

தன்மாத்திரைகளானவை : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

இந்நிலைப்பாட்டையே சாங்கியம் முதற்கொண்டு சைவசித்தாந்தம் வரையிலான பெரும்பான்மையான ஆஸ்தீக தத்துவ மரபுகள் கொண்டுள்ளன.  

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றைந்தின்

வகை தெரிவான் கட்கே உலகு (குறள் 27)    என்ற திருக்குறளும் இதே நிலைப்பாட்டையே எடுத்துரைத்துள்ளது. 

“இத்தன்மாத்திரைகள் ஐந்தினதும் கூறுபாட்டையும் ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம். அவற்றின் கூறுபாடாவன…………… இவையல்லது உலகெனப் பிறிதொன்றில்லையென உலகின் துண்மையறிதலின் அவனறிவின் கண்ணதாயிற்று” 

என்ற பரிமேலழகரின் விளக்கமும் இக்கருத்தை மேலும் அரண்செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. 

உலகியல் ஞானம்

அபரஞானத்துள் இதுவும் அடக்கம். சிந்திக்கும் விலங்காகிய மனிதன் ஒரு சமூகப்பிராணியாவான். சமூகவாழ்வில் செவ்வனே ஊடாடி இடைவினை புரிவதற்கான நுட்பமே உலகியல் ஞானம் ஆகும். 

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய மனத்திலிருந்து அறிவதாகக் கருதுகின்ற விடயங்கள் பலவற்றில் அவன் சார்ந்த சமூக பண்பாட்டுக் குழுக்கள் (குடும்பம், சகபாடிகள், இனம்) கற்பித்துத் தருகின்ற முன்னறிவுப் பிரதிமைகளின் பங்கு காத்திரமானதாகும். 

மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு

இனத்துளதாகும் அறிவு (குறள் 454) 

நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும் மாந்தற்கு

இனத்தியல்பதாகும் அறிவு (குறள் 452) 

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது அறைவது அறிவு (குறள் 426)  ஆகிய குறட்பாக்களில்  வள்ளுவராற் சுட்டப்பட்ட அறிவு என்பது மேற்கூறிய உலக ஞானத்தையே ஆகும்.  

அறிவின் முடிவற்ற பயணம்

அபரஞானத்தில் அடங்குகின்ற அத்தனை அறிவுப்புலங்களும் குறைபாடுடைய அறிவையே கொண்டுள்ளன. அவ்வறிவு பொய்ப்பிக்கப்படக்கூடியதும் மாற்றத்திற்கு உட்படக்கூடியதுமாகும். 

உ+ம் : “பூமி தட்டையானது”

இன்று இக்கருத்துப் பொய்பிக்கப்பட்டுவிட்டது. “உயிரினங்கள் வாழ ஏதுவான ஒரே கோள் பூமியே” ; இக்கருத்து நாளை பொய்ப்பிக்கப்படலாம். 

அந்தவகையில் அபரஞானப் புலங்களில் அறிவும் அறியாமையும் ஒன்றையொன்று சார்ந்திருப்பது புலனாகிறது. 

அறிவறியாமை கடந்தவறிவானால்

அறிவறியாமை அழகியவாறே.     எனத் திருமூலர் குறிப்பால் உணர்த்தியதும் இக்கருத்தையேயாகும். 

அபரஞானத்தில் நிகழும் அறிவின் முடிவற்ற பயணத்தினைக் காமத்துப்பாலின் குறளொன்றில் வைத்து வள்ளுவர் காட்சிப்படுத்தியுள்ளார். 

அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு (குறள் 1110) 

ஒவ்வொருமுறை தலைவன் தலைவியை நெருங்குகின்ற பொழுதும் அவள் பற்றி அவனிடமிருந்த ‘முன்னறிவு’ (பட்டறிவு) பொய்ப்பிக்கப்படுகின்றதாம். 

இவ்வாறாக அறிவு பற்றிய ஆழமானதொரு கருத்தியலைக் கூடற்சுவையின் குறியீடாக அநாயாசமாகக் கையாள்வது திருவள்ளுவருக்கேயுரிய தனித்திறமையாகும்.

பிரமாணங்களின் பிரயோகமும் நியாயித்தல் உத்திகளும்

அறிவைப் பெறுவதற்கான சாதனங்களாக – வாயில்களாக பிரமாணங்களும் அதனைப் பிறருக்கு விளக்கியுரைப்பதற்கான பொறிமுறையாக நியாயித்தல் உத்திகளும் தர்க்கவியலில் இடம்பெற்றுள்ளன. 

திருக்குறள் ஒரு தர்க்கசாஸ்திரம் அன்று. அது ஒரு வாழ்வியல் நூலேயாகும். எனினும் வாழ்வியற் சிந்தனைகளை எடுத்துரைப்பதற்கு திருவள்ளுவர் கையாண்ட வழிமுறைகளில் தர்க்கவியலின் தீட்சணியத்தைத் தரிசிக்க முடிகிறது. 

புலக்காட்சி அல்லது பிரத்தியட்சப்பிரமாணம்:

புலக்காட்சி என்பது புலனனுபவத்தின் வழி பெறப்படும் அறிவாகும். 

“இந்திய மெய்யியலில் பிரத்தியக்ஷம் பற்றிய ஆய்வானது ஐந்து புறப்புலன்களுடன் மனம் ஆகிய அகப்புலனையும் இணைத்ததாகவே கொள்ளப்படுகிறது” 

இவ்வாறு புலக்காட்சியின் பயில்நிலையில் மனம் சம்பந்தமுறுகின்ற காரணத்தாலேயே புலன்வழி பெறப்படும் விடயங்கள் உணர்வூட்டப்படுகின்றன. 

ஐந்து புலன்க@டாகவும் பெறுகின்ற அறிவை மனத்துடன் தொடர்புபடுத்தி ‘ஐயவுணர்வு’ எனச் சுட்டுகின்ற வள்ளுவரின் பாங்கு இங்கே கவனிக்கப்பட வேண்டியதாகும். 

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயனின்றே

மெய் உணர்வு இல்லாதவர்க்கு (குறள் 354) 

புலக்காட்சியில் மனதின் வகிபங்கு

புலக்காட்சியில் ஐந்து புலன் உறுப்புக்கள் நேரடியாகப் பங்கெடுப்பனபோல் தோன்றினாலும் அறிவைப் பெறுவதில் - உணர்வதில் அவற்றின் வகிபங்கு முற்றிலும் புறவயமானதாகும். கண்ணாடியைப் போலக் கருவிநிலைப்பட்டதேயாகும். ஆனால் மனமோ நேரடியாகப் பங்கெடுப்பதுபோல் தோன்றுவதில்லை. ஆனால், புலக்காட்சி மூலம் பெறப்படும் அறிவில் மனதின் வகிபங்கே காத்திரமானதாகும். 

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான் கண்டவாறு (குறள் 849)  இக்குறளில் இழையோடுகின்ற சிந்தனாமுறைமையில் மேற்கூறிய நுட்பத்தின் சாயலை உணர முடிகிறது. 

அனுமானம் ஃ பின்வருமறிவு

புலக்காட்சி முதலிய அளவைகளால் கண்டறியப்பட்ட விடயங்களினைத் துணைகொண்டு புதிய விடயங்களை உய்த்துணர்தலே அனுமான அளவையின் பயில் நிலையாகும். 

“உண்மையென அறியப்பட்ட நேர்வுகளைத் தொடர்புபடுத்தி நியாயித்தல் மூலமாகப் புதிய தகவல்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் பிரமாணமே அனுமானமாகும்”  

யான் நோக்கும் காலை நிலம் நோக்கும், நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகும். (குறள் 1094) 

இக்குறளின் பொருளமைதியை யாவரும் அறிவர். ஆனால் தர்க்கநுட்பத்தில் தவறொன்றுள்ளது போலில்லையா? 

தலைவியைத் தான் நோக்காதபோது குறித்த தலைவி தன்னை நோக்குவதையும், இளநகை பூப்பதையும் தலைவன் எவ்வாறு அறிந்து கொண்டான் என்பதே இவ்விடத்திலெழுகின்ற ஆசங்கையாகும். ‘இது காமத்துப்பாலின் கவிநயம்’ என்று கண்டுபிடித்துச் சொல்வதற்கு ஆய்வாளர்கள் அவசியமில்லை. 

காமத்துப்பாலின் கட்டமைப்பில் தமிழ் இலக்கண இலக்கிய வரம்புகளை மீறாத வள்ளுவர் தர்க்கவியலில் மட்டும் தவறிழைத்திருப்பாரா? 

ஒரு குறளிற்கு பொருள் விரிந்துரைப்பதற்கு இரண்டு வழிமுறைகளைப் பரிமேலழகர் முதற்கொண்டு உரையாசிரியர்கள் பலர் பின்பற்றியுள்ளனர். 

1.      குறித்த குறளிற்கு முன்னைய அல்லது அடுத்துவரும் குறள்களின் பொருளமைதியுடன் கொண்டு கூட்டிப் பொருள் விரிப்பது.

2.      குறிப்பிட்ட குறள் இடம்பெற்றுள்ள அதிகாரத்தினை அவதானித்துப் பொருள் கொள்வது.

இங்கு இந்நடைமுறை பயனளிக்கவல்லதாயுள்ளது. அந்தவகையில் ‘யான் நோக்கும் காலை’……………….. என்ற குறித்த குறளிற்கு முன்னைய குறளையும் அதன் பொருளமைதியையும் புரிந்து கொண்டு அதன் தொடர்ச்சியாக இக்குறளை விளங்கிக் கொள்ள முயல்வது முதலாவது வழிமுறை.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டியநீர் (குறள் 1093)

என்பது ‘யான் நோக்கும் காலை’ க்கு முன்னைய குறளாகும். இதன் பொருளமைதியை நோக்கும்பொழுது தலைவி ஏலவே இவனை நோக்கியிருந்தாள் என்பதும் இவன் அவளை நோக்கியபொழுது தலைகுனிந்தாள் என்பது வெளிப்படுத்தப்-பட்டுள்ளது.

எனவே அனுமானப் பிரமாணத்திற்கு அவசியான ‘முன்னறிவு’ இங்கே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது வழிமுறையில் பொருள்கொள்ள முயலும்போது (அதிகாரத்தால்) குறித்த குறள் இடம்பெறுவது காமத்துப் பாலின் ‘குறிப்பறிதல்’ என்ற அதிகாரத்திலேயாகும்.

குறித்த குறளின் (‘யான் நோக்கும் காலை………’) பொருண்மையில் உய்த்துணரப்படவேண்டிய – குறிப்பால் உணரப்பட வேண்டிய விடயமொன்றை வள்ளுவர் இழையோடவிட்டிருப்பதும் பொருத்தமானதேயாகும்.

எனவே

01.     அவள் அவனை நோக்கியபடியிருந்தாள். (முன்னைய குறள்)

02.     எப்பொழுதெல்லாம் அவன் அவளை நோக்குகின்றானோ அப்பொழுதெல்லாம் விழிகளை அவள் தாழ்த்திக் கொள்கிறாள்.

03.     இப்பொழுது அவன் அவளை நோக்கவில்லை.

04.     எனவே, முன்னறிவின் பிரகாரம் அவன் அவளை நோக்குவான்……….

இதனைத் தலைவன் ஊகிப்பது அனுமான அளவையின் வழியே ஏற்புடையதேயாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

உவமானப் பிரமாணம்

துறத்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக் கொண்டற்று (குறள் 22)

என்ற குறளில் குறத்தாரின் ‘பெருமை’ ஆகிய எண்ணிலிப் பெறுமதியை விளக்குவதற்கு ‘இறந்தவர்களின் எண்ணிக்கை’ என்ற பரிச்சயமான முடிவிலிப் பெறுமதியை உவமானமாகக் கையாண்டிருப்பது நயப்புக்குரியது.

ஆப்தவாக்கியம் ஃ உரையளவை

‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு’ என்ற வகையில் சான்றோர் உரையினைச் சான்றுரையாகக் கொள்வதால் இவ்வளவையினை ஆப்த வாக்கியம்இ  உரையளவை எனவும் வழங்குவர்.

அந்த வகையில் உலகத்தவரால் உண்டு என ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயத்தினை இல்லை என்று மறுப்பவனை ‘அலகை’ (பேய்) என வள்ளுவர் விமர்சித்துள்ள பாங்கு கவனத்திற்குரியது.  

உலகத்தார் உண்டென்பதில்லென்பால் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

லௌகீகம் - அலௌகீகம் என நியாயதரிசன வாதிகளும் வேதவாக்கியம், உலகவாக்கியம் எனச் சைவசித்தாந்த வாதிகளும் ஆப்தவாக்கியப் பிரமாணத்தை வகைப்படுத்தியுரைப்பதும் கவனிக்கத்தக்கது. (விரிவஞ்சி விவரிக்கவில்லை)

இவ்வாறாக சுபாவம், ஒழிபு, ஐதீகம் உள்ளிட்ட அனைத்துப் (10) பிரமாணங்களின் பயில் நிலைகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருக்குறளில் அடையாளங்காட்ட முடியும். அறிவாராய்ச்சியியலில் அளவையியல் ஒரு பகுதியே-யாதலின் விரிவஞ்சி அவை பற்றி விளக்க முற்படவில்லை.

பிரமாணங்களின் கையாட்சி மட்டுமன்றி தர்க்கவியலில் பயன்படுகின்ற தூல அருந்ததி நியாயம் முதலிய நியாயித்தல் உத்திகளும் வள்ளுவரால் ஆங்காங்கே பிரயோகிக்கப்பட்டுள்ளன.

தூல அருந்ததி நியாயம்

ஒருவருக்குத் தெரியாத விடயமொன்றைத் தெரிந்து கொள்ள வைப்பதற்கான உத்திமுறை இதுவாகும். தெரியாத விடயமொன்றை அதிகம் துலாம்பரமாக அறியப்பட்ட விடயமொன்றுடன் தொடர்புபடுத்திச் சுட்டுவதனூடாக அறிந்ததிலிருந்து அறியப்படாத விடயத்தினைப் புரிய வைத்தலே தூல அருந்ததி நியாயத்தின் பயில் நிலையாகும்.

விண்ணிலுள்ள நட்சத்திரக்கூட்டத்தில் அருந்ததியை ஒருவனுக்குக் காட்டவேண்டுமெனில்,

01.     பிரசித்தமாகத் தெரிகின்ற சப்தரிஷிமண்டலத்தைச் சுட்டிக் காட்டுதல்.

02.     சப்தரிஷிமண்டலத்தினுள் அதிக பிரகாசமுடைய வசிட்டர் விண்மீனைச் சுட்டிக்காட்டுதல்.

03.     வசிட்டர் விண்மீனுக்கு அருகில் உள்ள பிரகாசம் குறைந்த விண்மீனே அருந்ததி எனக் காட்டுதல்.

இவ்வகை நியாயித்தல் உத்தியினை வள்ளுவரும் கையாண்டுள்ளார். எடுத்துக்காட்டு:

ஈன்றாள் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை (குறள் 656)

சான்றோர் பழிக்கும் செயலைப் புரிவதால் எத்தகைய பாதகம் விளையும் என்பதை உணர்த்துவதே இக்குறளின் நோக்கம். பெற்ற தாயானவள் பசியினால் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்நிலை எவ்வளவு கொடுமையானது என்பதனை ஒவ்வொருவரும் அறிவர். சப்தரிஷி மண்டலத்தைக் காட்டுவதுபோல இதனை முதலில் குறிப்பிட்டு, பின்னர் அதனை விடவும் பாதகமானது சான்றோர் பழிக்கும் செயலைப் புரிவது என தூல அருந்ததி நியாயம் பேசுகிறார் திருவள்ளுவர்.

சுந்தோப சுந்த நியாயம்

(சுந்தன் - உபசுந்தன் என இரு சமபலங்கொண்ட சகோதரர்கள் ஊர்வசியின் பொருட்டு தம்முள் சண்டையிட்டு மாய்ந்தமைபற்றி வழங்கும் பௌராணிகப் பெயரீடு இதுவாகும்) சமவலிமையுள்ள இரண்டு காரணங்கள் ஒன்றையொன்று தாக்கி வெறுமையாகின்ற நிலைமையினை விளக்குவதற்கு இந்தியத் தர்க்கவியலில் சுந்தோப சுந்த நியாய உத்திமுறை கையாளப்படுகிறது.

திருக்குறளில் சுந்தோப சுந்த நியாயத்தின் பயில்நிலைக்கு மேல்வரும் குறளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

இருநோக்கு இவள் உன்கண் உள்ளது ஒரு நோக்கு

நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து (குறள் 1091)

அஃதாவது தலைவியின் ஒரு நோக்கு (பொது நோக்கு) இவனுக்கு ஏக்கத்தை உண்டுபண்ணும் நோயாகிறது. அவளின் ஒரு நோக்கு (தனி நோக்கு) இவனின் நோயைத் தீர்க்கவல்ல மருந்தாகிறது. இவையிரண்டும் கணத்துக்குக்கணம் மாறி மாறி நிகழ்வதால் சுந்தனும், உபசுந்தனும் தம்முள் போரிடுவதுபோல தலைவனின் உள்ளம் ஸ்தம்பித்துப் போகிறது.

இவ்வாறாகத் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கருத்து வெளிப்பாட்டு முறையியலுக்குத் துணை செய்பவையாக அளவைப் பிரமாணங்களையும், நியாயித்தல் உத்திகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளமை அவதானிக்கப்பாலது.

அப்பிரமாணம் - ஏற்கப்பட முடியாத அறிவு

இது ஏற்புடை அறிவிற்கு நேர்முரணானது.

இதனை ஐயம் (சம்சயம்), பிழை (விபர்பாயம்) போன்றவற்றினூடாக தத்துவாதிகள் இனங்காட்டியுள்ளனர்.

உண்மை பற்றிய தேடலே ஐயத்தை மனிதர்களிடத்தில் உண்டாக்குகிறது. நிச்சயமற்ற அல்லது ஐயத்திற்கு இடமளிப்பதாயுள்ள பிரச்சினைகளே அறிவாராய்ச்சிக்கு அடிப்படையாகவும் அமைந்து விடுகின்றன. திருக்குறளில் இடம்பெறும்,

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு (குறள் 353)

ஐயப்படாது அகத்தது உணர்வானை (குறள் 702)

மாசறு காட்சியர் (குறள் 352)

புன்மையில் காட்சியர்.

ஆகிய சொற்பிரயோகங்களும் இவைபற்றிய பரிமேலழகரின் உரை விளக்கங்களும் திருவள்ளுவரின் அறிவாராய்ச்சியியற் புலமையினைத் தெளிவுபடுத்து-வனவாய் அமைந்துள்ளன.

பரஞானம்

அபரஞானத்தைப் போலன்றி பரஞானம் பூரணமானது@ மாறுதலுக்கு உட்படாதது@ குறைபாடற்றது. இதுவே பிரம்மஞானம் அல்லது பரம்பொருள் பற்றிய அறிவு ஆகும். அறிவுத்துறைகளுக்கெல்லாம் ஊற்றான - மூலமான அறிவு என்பதனால் ‘அடிநிலை அறிவு’ என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறளில் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பத்துக் குறள்களும் பரஞானத்துடன் தொடர்புடைய விடயங்களைப் பேசியுள்ளன. அந்தவகையில் இவ்வதிகாரத்தின் முதல் நான்கு குறட்பாக்களும் அபரஞானத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. (பார்க்க – மெய்யுணர்தல் 1 –4) இவ்வதிகாரத்தின் ஐந்தாவது குறள் மெய்யுணர்வின் இலக்கணம் பற்றிக் குறிப்பிடுகிறது.

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள் 355)

இக்குறளிற்குப் பரிமேலழகர் உரை பின்வருமாறு அமைகிறது.

“இந்தப் பிரபஞ்சத்தினை நிலம்முதல் உயிரீறாகிய தத்துவங்களின்  தொகுதியென உணர்ந்து அவற்றை நிலமுதலாகத் தத்தங் காரணங்களுள் ஒடுக்கிக்கொண்டு சென்றால் காரண காரியங்கள் இரண்டுமின்றி முடிவாய் (ஒரு பொருள்) நிற்பதனையுணர்த்தலாம். இதனால் மெய்யுணர்தலின் இலக்கணம் கூறப்பட்டது”

இதுவே பரஞானமாகிய அடிநிலையறிவாகும். பரஞானம் பற்றிய டாக்டர் எஸ் இராதாகிருஷ்ணனின் மேல்வரும் கூற்று இவ்விடத்தில் பொருத்தங்கருதித் தரப்படுகிறது.

“உயரிய ஞானம் அல்லது பரஞானம்  அறியாதனவெல்லாம் அறியச் செய்வது. இது அடிநிலை அறிவு என்று விளக்கம் பெறுகிறது. மண்ணால் செய்த ஒரு பொருளை அறிந்தால் களிமண்ணால் செய்யப்பெற்ற பொருட்கள் அனைத்தையும் நாம் அறிய முடியும். களிமண் பெறும் மாறுபட்ட உருவங்கள் பெயர்களினால் பிரித்தறியப் பெறுகின்றன. ஆனால் மூலப்பொருளால் (களிமண்) ஒன்றேயாகும். இதனைப் போன்றதே அடிநிலை அறிவு பற்றிய போதனையும், அனைத்தையும் அறிவிக்கும். இது அந்த முழுமுதலான பரமான்மாவை அறிவதாகும்”

இவ்வாறாக எல்லா அறிவுப்புலங்களின் விரிவுக்கும் அடிநிலைக்காரணமாகிய அந்த மூலப்பொருளை – பரம்பொருளை – மெய்ப்பொருளை மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வைத்துச் - செம்பொருள் எனத் திருவள்ளுவர் சிறப்பித்துப் பேசுகிறார்.

செம்பொருள் காண்பதறிவு (குறள் 358) “    The meta physical intellectuals are celebrated as ‘cemporul kantar, meypporul kantar’………. etc Thirukkural. They respectively denote the mystics who envisioned the perfect and absolute reality.”[2]

  திருக்குறளுக்கும் அறிவாராய்ச்சியியலும்;:

ஆன்மாக்கள் தமக்குள்ள இயல்பான அறிவினால் பரஞானத்தை அறிவது நேரடியாகச் சாத்தியமற்றதாகும். ஏனெனில் அவை கொண்டுள்ள அறிவைப் பெறுவதற்கான கருவிகள் குறைபாடுடையவை@ வரையறைக்குட்பட்டவை.

எனவே, பரஞானத்தை நோக்கிய பயணிப்புக்கு ஞானகுருவின் வழிகாட்டல் அவசியமாகிறது. உலக ஞானத்தை உபதேசிக்கும் உபாத்தியாயனைப் போலன்றி பரஞானத்திற்கான பாதைகாட்டியாக விளங்கும் ஞானகுருவை பரப்பிரம்மமாகவே இந்துப் பனுவல்கள் கருதுவதற்கான காரணமும் இதுவேயாகும். 

குரு ஷாட்ஷாத் பரப்பிரம்மம் (குருகீதை)

இவ்வாறாக ஞானகுருவின் துணையுடன் மெய்ப்பொருளை உணர்வதற்கு

கேட்டல் சிந்தித்தல் தெளிதல்   நிட்டை கூடல் (சிரவணம்), (மனனம்), (நிருத்தியாசனம்) ஆகிய படிநிலைகளை இந்து தத்துவ சாஸ்திரங்கள் அறிமுகஞ் செய்துள்ளன.

மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் செம்பொருளை எய்துவதற்கான படிநிலைகளாக திருவள்ளுவரும் இவற்றையே வலியுறுத்தியுள்ளார்.

பரிமேலழகரும் இவற்றை மிகவும் வெளிப்படையாகத் தனது உரையில் விளக்கியுள்ளார்.

“செம்பொருள் காண்பதறிவு” என்று நிறைவெய்தும் குறளிற்கு முன்னுள்ள இரண்டு குறள்களிலும் முற்குறிப்பிட்ட சிரவணம் முதலிய படிநிலைகள் வள்ளுவரால் எடுத்தாளப்பட்டுள்ளமையும் நயக்கத்தக்கது. அக்குறள்கள் பின்வருமாறு :

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி (குறள் 356)

ஓர்த்துள்ளம் உள்ளதுணரின் ஒருதலையாய்

பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு (குறள் 357)

இவ்விரண்டுள் முதலாவது குறள் (கற்றீண்டு………) ஞானகுருவின் துணையுடன் நிகழும் கேட்டல், சிந்தித்தல் ஆகிய படிநிலைகளைக் குறிப்பால் உணர்த்தியுள்ளது.

இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவமுடைய தேசிகர்பாற் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர்…………11

எனக் குறித்த அக்குறளிற்கு பரிமேலழகர் வழங்கிய உரையும் இக்கருத்தை மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

இரண்டாவது குறளின் முதலாவது அடியில் திருவள்ளுவர் “தெளிதல்” என்ற பரஞானத்திற்கான மூன்றாவது படிநிலையை வெளிப்படுத்தியுள்ளார். தெளிதல் நிகழ்ந்த மாத்திரத்தே நிட்டைகூடல் நிகழ்ந்துவிடும். பரஞானம் உணரப்படுகின்றபோது பிறப்பு முதலிய லோக விகாரங்கள் அற்றுப்போய் விடுகின்றன. இதனையே குறித்த குறளின் இரண்டாவது அடி புலப்படுத்தி நிற்கிறது.

“      அங்ஙனம் கேட்ட உபதேசப் பொருளை ஒருவனுள்ளம் அளவைகளாலும் பொருந்து மாற்றானுந் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின்……..”

என இக்குறளிற்கான பரிமேலழகரின் உரையும் முதற்குறளின் பொருளமைதியுடனான தொடர்ச்சியாகவே அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. 

எனவே செம்பொருளாகிய பரஞானத்தினை உணர்வதற்கான படிநிலைகள் தொடர்பாகத் திருக்குறள் முன்வைத்துள்ள சிந்தனைகள் இந்து மெய்யியல் மரபின் வழிவந்தவையாகவே அமைந்து கிடக்கின்றமை நோக்கற்பாலது.

 குறிப்பு :“ஓர்த்துள்ளம் உள்ளத்துணரின்…….” என்ற முற்கூறிய குறளிற்கு தரப்பட்ட பரிமேலழகரின் உரைப்பகுதியில் ‘அளவைகள்’ பற்றி வலியுறுத்தப்பட்டிருப்பதனைக் கவனிக்கவும். பரஞானத்திற்கான படிநிலையிற்கூட அளவைகளின் பிரயோகத்தினைப் பரிமேலழகர் புறந்தள்ளவில்லை. அவ்வாறாயின் அபரஞானப் புலங்களில் ‘அளவைகள்’ பெறவல்ல முக்கியத்துவம் பற்றிக் கூறவேண்டியதில்லை. எனவே திருக்குறளின் பொருட்புலப்பாட்டு நுட்பத்தில் அளவையியலும் அதன்வழி அறிவாராய்ச்சியியலும் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதனை ஊகிக்க முடியும்.

திரிபுடி – நிலை

அறிவாராய்ச்சியியலில் ‘திரிபுடி’ பற்றிக் குறிப்பிடாத இந்து தத்துவப் பள்ளிகளே இல்லை எனலாம். எந்தவொரு  அறிவைப் பெறுகின்ற செயன்முறையிலும்,

அறிபவன் (ஞாதுரு)

அறியப்படுபொருள் (ஞேயம்)

அறிவு (ஞானம்)

ஆகிய மூன்று கூறுகள் சம்பந்தமுறுகின்றன.

அபரஞானநிலையில் ஒத்திசைவாகத் தொழிற்படுகின்ற இம்மூன்று கூறுகளும் பரஞானத்தையுணர்கின்றபோது ஸ்தம்பிக்கின்றன. ஒரு நிலைப்படுகின்றன. பரஞானத்தை உணர்கின்ற நிலை ஏற்படுகின்றபொழுது அறிபவன் என்றும் அறியப்படுபொருள் என்றும் அறிவு என்றும் வேறுபாடுகள் இருக்க முடியாது.

ஏனெனில், பரஞானம் பரிபூரணமானது. அதனைப் புறவயமாக உணர முடியாது. இந்நிலையில் முற்கூறிய மூன்று கூறுகளும் ஒருநிலைப்படுகின்றன. இதுவே திரிபுடி நிலையாகும்.

பிரக்ஞானம் பிரம்மம் (ஐதரேய உபநிடதம்)

உய்வல்லார் அறிவுள் அறிவாமே (தி. மந். 2822)

ஞேயத்தை நின்றார்க்கு ஞானாதி நின்றிடும்

ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும். (தி. மந். 1606)

மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் ‘திரிபுடிநிலை’ பற்றித் திருவள்ளுவரும் கருத்துரைத்தள்ளார். செம்பொருளாகிய பரஞானத்தினை உணர்ந்தநிலையில் பிறப்பு நீங்கி விடுகிறது – அதாவது அறிபவன் இல்லாது போகின்றான் என்ற கருத்தினையே,

பிறப்பென்னும் பேதமை நீங்கிச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பதறிவு (குறள் 358)

என்னும் குறள் வெளிப்படுத்தி நிற்கிறது. இக்குறளிற்கு முன்னள்ள இரண்டு குறட்பாக்களும் இதே கருத்தை அரண்செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

இவ்வாறாகத் திருக்குறளில் இழையோடியுள்ள அறிவாராய்ச்சியியலுடன் தொடர்புடைய கருத்தாடல்களின் மூலமாக இக்கட்டுரை திருக்குறளின் தத்துவத்தளம் குறித்த சில முக்கிய விவாதப்புள்ளிகளை அடையாளப்படுத்த  முற்படுகின்றது.

•      திருக்குறள் அபரஞானம் பரஞானம் ஆகிய இருவகை அறிவுத் தளங்களையும் ஏற்றுக்கொள்கிறது.

•      திருக்குறள் செம்பொருள் பற்றிய நாட்டத்தை வலியுறுத்தியுள்ளது.

•      பிரபஞ்ச இயற்கையின் தோற்றம் குறித்த ஆய்வில் சாங்கியம் முதலிய இந்துதரிசனங்களின் நிலைப்பாட்டுடன் ஒத்திசைவுற்றுள்ளது.

•      பிரமாணங்கள் பற்றிய நிலைப்பாட்டில் ஆப்தவாக்கியத்தை நிராகரிக்கவில்லை மாறாக ஆப்தவாக்கியத்தை மறுப்பவரை பேய்- அலகை எனக் கடுமையாக விமர்சிக்கிறது.

•      பரஞானத்தை நோக்கிய பயணிப்பில் உபநிடதங்களின் வழிவந்த சிரவணம் முதலிய படிநிலைகளை அடையாளப்படுத்தியுள்ளது.  

அடிக்குறிப்புகள்


01.  .கிருஷ்ணராஜா, சோ.,(1995)இ  சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல் ஓர் அறிமுகம்,  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு,ப.2

02. Kandasamy, S.N., (2000),Indian Epistolomogy, As Expounded in the Tamil Classics,    International Institute of Tamil Studies, Chennai, P. 04.

 03 .திருக்குறள் பரிமேலழகர் உரை,(1962),பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, ப. 12.

  04. கிருஷ்ணராஜா, சோ.,(1995)இமு.கு.நூ. ப. 16.

  05 மேலதுஇப.25.

  06 திருக்குறள் பரிமேலழகர் உரை,(1962),மு.கு.நூ.,ப.147.

  07இராதாகிருஷ்ணன்,எஸ்.,(1982)இகீழை மேலைநாடுகளின் மெய்ப்பொருளியியல் வரலாறு,ப.82.

 08 Kandasamy, S.N.,(2000), op. cit, P.4.

 09திருக்குறள் பரிமேலழகர் உரை,(1962),மு. கு. நூ.,ப.148.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 Kural%2Bthath%2B01.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Kural%2Bthath%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

Kural%2Bthath%2B03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 அறனறிந்துவெஃகாஅறிவுடையார்ச்சேரும்

திறன்அறிந்தாங்கேதிரு.            குறள் 179: வெஃகாமை
மணக்குடவர் உரை:அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
  திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 45:1

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
குறள் 249: அருளுடைமை.
மணக்குடவர் உரை:தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும். இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். குறள் 91: இனியவைகூறல்.
மணக்குடவர்உரை:ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?
சாலமன்பாப்பையாஉரை:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.


இழுக்கல்உடையுழிஊற்றுக்கோல்அற்றே
ஒழுக்கமுடையார்வாய்ச்சொல். குறள் 415: கேள்வி.
மணக்குடவர் உரை:வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.

சாலமன் பாப்பையா உரை:கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

கறுத்துஇன்னாசெய்தவக்கண்ணும்மறுத்தின்னா
செய்யாமைமாசற்றார்கோள். குறள் 312: இன்னாசெய்யாமை
மணக்குடவர் உரை:தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

சிறப்பீனும்செல்வம்பெறினும்பிறர்க்குஇன்னா
செய்யாமைமாசற்றார்கோள். குறள் 311: இன்னாசெய்யாமை
மணக்குடவர் உரை:மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.

வேட்பத்தாஞ்சொல்லிப்பிறர்சொல்பயன்கோடல்
மாட்சியின்மாசற்றார்கோள்.     குறள் 646: சொல்வன்மை
மணக்குடவர் உரை:தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

திருவள்ளுவர் மிகத்தெளிவாக பனுவல் துணிவு என நீத்தார் பெருமை கூறும் போது முன்னோர் இந்திய மெய்யியல் மரபின் வழியில் திருக்குறளை இயற்றியுள்ளார்; வள்ளுவர் நூல் என  20க்கும் மேற்பட்ட குறட்பாக்களில் முந்தைய நூல்களை கூறுகின்றார்.  மேலும் சான்றோர்க்கு ஏற்றது, உலகத்தார் உலகு ஏற்பது,  என்ப & என்மனார் என்பவை எல்லாமே முன்னோர் மரபினை கூறுவது என அறிஞர்கள் மிகத் தெளிவாக நமக்கு காட்டுகின்றனர்.

 வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான”              - (தொல்:பொருள்:638) தொல்காப்பிர். உலகவழக்கு என்பது உயர்ர்ந்தோர் மேலேயே என்று அடிக்கோடிட்டுச் சொல்கிறார் .  நிகழ்வுகள் அவர்களால் நடைபெறுகின்றனவாம். 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் என கூறியவரே எனக் கூறியவரே அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து (501); அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை(441) என மீண்டும் கூறுவதால்  வேதங்களும் அதன் சாரமாகிய தர்ம சாஸ்திரத்தின் வழிமுறையே உயர்ந்தோர், சான்றோர் & உலகு என திருவள்ளுவரே  கூறுகின்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.             குறள் 870:பகைமாட்சி. குறள் 865:
சாலமன் பாப்பையா உரை:நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.


கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. குறள் 870:பகைமாட்சி.
மணக்குடவர் உரை:கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.
மு. வரதராசன் உரை:நீதிநூலைக் கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.


ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. அவையஞ்சாமை.குறள் 725:
மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

அறம்சாராநல்குரவுஈன்றதாயானும்
  பிறன்போலநோக்கப்படும் - குறள் 105:7

 

அன்புஒரீஇதன்செற்றுஅறம்நோக்காதுஈட்டிய

 

  ஒண்பொருள்கொள்வார்பிறர் - குறள் 101:9

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள்கண்டார்வாய்ச்சொல். குறள் 91: இனியவைகூறல்.
மணக்குடவர்உரை:ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?
சாலமன்பாப்பையாஉரை:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

இழுக்கல்உடையுழிஊற்றுக்கோல்அற்றே
ஒழுக்கமுடையார்வாய்ச்சொல். குறள் 415: கேள்வி.
மணக்குடவர் உரை:வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.

சாலமன் பாப்பையா உரை:கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

உலகம்தழீஇயதொட்பம்மலர்தலும்
கூம்பலும்இல்லதறிவு. குறள் 425: அறிவுடைமை
மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.

காட்சியவர்

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.    குறள் 174: வெஃகாமை
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.      குறள் 654: வினைத்தூய்மை.

தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். குறள் 218: ஒப்புரவறிதல்.

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

 

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். குறள் 258: புலான்மறுத்தல்.
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.  குறள் 352: மெய்யுணர்தல்.

மு. வரதராசன் உரை:மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.
மு. கருணாநிதி உரை:மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை: மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.  குறள் 699: மன்னரைச் சேர்ந்தொழுதல்.

மு. கருணாநிதி உரை:ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்

  செம் பொருள் கண்டார் வாய் சொல் - குறள் 10:1
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
  இன்னா சொல் நோற்கிற்பவர் - குறள் 16:9
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
  ஒழுக்கம் உடையார் வாய் சொல் - குறள் 42:5


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.  அமைச்சு. குறள் 635:

அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.    பயனில சொல்லாமை. குறள் 198:

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். குறள் 141: பிறனில் விழையாமை.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.  வெஃகாமை. குறள் 179:

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். சொல்வன்மை.  குறள் 644:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன். இல்வாழ்க்கை. குறள் 46

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. குறள் 48: இல்வாழ்க்கை.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. அறன்வலியுறுத்தல். குறள் 37:

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.  குறள் 91: இனியவைகூறல்

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. புல்லறிவாண்மை. குறள் 849:

செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். குறள் 637: 

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. அவையறிதல். குறள் 716:

பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். தெரிந்துசெயல்வகை. குறள் 468:

ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. குறள் 1110: புணர்ச்சிமகிழ்தல்.

நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.

 

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். வரைவின்மகளிர் குறள் 914:

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்

  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை             - குறள் 322  கொல்லாமை

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

 

ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்

தெற்று என்க மன்னவன் கண்                          குறள் 581  ஒற்றாடல்

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

வினைத்தூய்மை. குறள் 656:

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. பிறனில் விழையாமை.  குறள் 148:

அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.


நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.  குடிமை  குறள் 953:

உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

"நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்குரிய" என்னும் தொல்காப்பிய வரிகள் வைணவ அடியார்களைச் சுட்டுமென்பதற்கு வாழும் சான்றுகள் உண்டு. இதே அர்த்தத்தில் பெரியாழ்வார்,

பக்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்சத்
திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே (417)
என்று பாடுகிறார். வள்ளுவர் பாயிரமாக நீத்தார் பெருமை பேசுகிறார். அதாவது துறவிகள் எப்படி இருக்க வேண்டுமென்று சொல்கிறார்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்
கலித்தொகை இத்தகையோரைக் குறிக்குமிடத்து,

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகம் உரைசான்ற முக்கோலும்
நெறிபடச் சுவல் அசைஇ

என்கிறது. "உரை சார்ந்த் முக்கோல்" என்பதற்கு தத்துவப் பொருள் இருக்க வேண்டும் (சத், அசித், ஈசன்). நெய்தல் கலியும் முக்கோல் பற்றி பேசுகிறது. பாகவதர், பகவர் என்ற இரு சொற்களும் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டவர்கள், வைணவ சமயத்தைப் பின் பற்றுபவர்கள் என்று பொருள். பாகவதர்கள் என்பதற்கு நாராயண சமயத்தைப் பின் பற்றுபவர்கள் என்று திவாகரம் கூறுகிறது.

உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் – கலி 9/2-4

உறியில் தொங்கும் கமண்டலத்தையும், புகழ் பெற்ற முக்கோலினையும், முறையாகத் தோளில் சுமந்து, நன்மையைத் தவிரே வேறு ஒன்றனையும் நினைக்காத நெஞ்சத்துடன், ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard