இவற்றில் உலகம் ஆரம்பத்தில் படைத்தது முதல் அனைத்து சம்பவங்களையும் முறையாக தொகுத்தது போலத் தோற்றம் வரும். இதன் கதைப்படி, கல்தேயர் நாட்டைச் சேர்ந்த ஆபிரகாமை, இஸ்ரேலிற்கான எல்லைத் தெய்வம் யாவே அல்லது கர்த்தர், தேர்ந்தெடுத்து, அவன் வாரிசுகளுக்கு கானான் எனப்படும் இஸ்ரேலின் மீதான ஆட்சி உரிமை தந்தார். இதுவே யூத பைபிளின் அடிப்படை.
ஆபிரகாமிற்கு சில தலைமுறை முன்பு, தேவ குமாரர்கள் மனிதப் பெண்களோடு, உடலுறவு கொள்ள அரக்கர்கள் நிறைய தோன்ற, பூமி முழுமையும் அனைத்து உயிர்களையும் கொல்ல பிரளய வெள்ளத்தால் பைபிள் தெய்வம் மூட, அதற்கு முன்பு நோவா என்பவர் குடும்பத்தையும், எல்லா உயிரினங்களையும் ஒரு கப்பலில் இட்டு, காப்பதாகவும் ஒரு கதை. இதற்குப்பின் ஆபிரகாம் கதை.
இந்தக் கதைகள் எல்லாம் பைபிள்படி எப்படி எழுதப்பட்டன, என பைபிளே தரும் தோற்றம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆபிரகாமின் பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக எகிப்து செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எபிரேயர் மக்கள் தொகை வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை செய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல 2 தாதிகள் செய்யவில்லை. எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை புதரில் விட்டுவிட, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார். அவர் எபிரேயர்களுக்கு உதவிட பார்க்கிறார். பின் ஒதுங்கிறார். இஸ்ரேலின் எல்லை கடடவுள் இவரிடம், எபிரேயர்களை ஒன்றிணைத்து, எகிப்து மன்னனிடம் சென்று இஸ்ரேல் செல்ல அனுமதி கேட்குமாறு சொல்கிறார். எகிப்து மன்னன் ஏற்றாலும், கர்த்தர் அவர் மனதைக் கடுமைப் படுத்தி, எகிப்து மக்களுக்கு 10 விதமான பெரும் தொல்லைகள் தர பின் ஆடு, மாடு பொருட்களோடு எகிப்தியர் யூதர்களை அனுப்பி வைக்க, கிட்டத்தட்ட 30 லட்சம் யூதர்கள் எகிப்திலிருந்து இஸ்ரேல் வருகின்றனர்.
பஞ்சத்ற்கு எகிப்து செல்ல அங்கே அடிமைப் பட்டிருந்த எபிரேயர்களை மோசே தலைமையில் வர – செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழி விட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் செங்கடலைத் தாண்டியதாகக் கதை. பின் இஸ்ரேல் வர 40 வருடம் ஆனதாம். வரும் வழியில் கர்த்தர் கொடுத்த கதைகளே பழைய ஏற்பாட்டின் சட்டங்கள்(முதலைந்து நூல்கள்) பகுதி.
மோசே சட்டங்கள் கர்த்தர் தர, இதற்குப் பின்பு, இஸ்ரேலியர் தங்கள் வரலாறை முறையாக எழுதி வைத்ததின் தொகுப்பே பழைய ஏற்பாடு எனும் தோற்றத்தைப் பார்க்கலாம்.
பைபிளை நடுநிலையோடு முழுமையாக ஆராய்பவர்கள் கண்டது, மோசே சட்டத்தில் கர்த்தருக்கு ஒரேஒரு இடத்தில் மட்டும் பலி, என்றெல்லாம் இருக்க, தீர்க்கர்கள் கூட பல இடங்களில் பலி செய்து வழிபட்டதாகக் கதையில் உள்ளதைக் கண்டனர். பின் மேலும் ஆராய மோசே சட்ட்ங்கள் எனும் புத்தகங்கள் உருவான கதை பைபிளிலேயே உள்ளதை கண்டனர்.
1 இராஜாக்கள் 6:1சாலொமோன் அவ்வாறே ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து 480 ஆண்டுகள் ஆகியிருந்தன. இப்போது சாலொமோன் அரசனாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. இது ஆண்டின் இரண்டாவது மாதமாகவும் இருந்தது. |
சால்மன் காலம் பொ.மு.970- 930 எனக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மோசே காலம் அதற்கு 480 வருடம் முன்பு எனில் பொ.மு 16 – 15 நூற்றாண்டு ஆகும்.
2 இராஜாக்கள்22:8 தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான். 10 மேலும் அவன் அரசரிடம், குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார் என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.11 அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.12 பின் குரு இல்க்கியாவையும் சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, அரசர் இட்ட கட்டளை இதுவே:13 நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். 16ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.17 ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்து விட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது. |
இந்த ராஜா காலத்தில் மோசே சட்டம் தேடிக் கண்டு பிடித்தனராம். ஆனால் எஸ்ரா காலத்தில் வேறொரு கதை