லூக்கா1:26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 30 வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' 54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ' .
மத்தேயு19:28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான்19:18 இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதியிருந்தது.
அப்போஸ்தலர்1:6 பின்பு அங்கே கூடியிருந்த அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் (கதைப்படி உயிர்த்ததான), ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? என்று கேட்டார்கள்.கிறிஸ்து என்றால் யூதர்களின் அரசன்-மட்டுமே
ஏசுவை நேரில் பார்க்காத பவுல் என்பவர் கட்டும் கதை- ஆதாம் செய்த பாவத்தால் வந்தது மரணம். இயேசு மரணம் மூலம் பூமியில் மனிதம் மரணம் ஒழிக்கப்பட்டது
கலாத்தியர்2:15 பிறப்பால் நாம் யூதர்கள்: பாவிகள் எனப்படும் பிற இனத்தாரைச் சேர்ந்தவரல்ல. 1கொரிந்தியர்2:.7வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. 1கொரிந்தியர்15:22ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.23 ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்:ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.
யோவான் 6:34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. யோவான் 6:47உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48வாழ்வுதரும் உணவு நானே.49உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50உண்பவரை மரணம் இல்லாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. ஏசுவை நேரில் பார்க்காத பவுல் என்பவர் கட்டும் கதை- ஆதாம் செய்த பாவத்தால் வந்தது மரணம். இயேசு மரணம் மூலம் பூமியில் மனிதம் மரணம் ஒழிக்கப்பட்டது. இதையே ஏசு சொன்னதாக 4வது சுவி 120 வாக்கில் புனையப்பட்டது இயேசுவே சொன்னதாக உள்ளது. ஏசுவை ஏற்றால் மரணம் இல்லையாம். பவுல் முதல் அனைவரும் மரணமானர் எனில் ஏசு கிறிஸ்து இல்லையே.
உலகம் அழிவு- ஏசுவின் இரண்டாவது வருகை பவுல் தான் வாழ்நாளில் என்றார். பவுல் மரணத்திற்கு 50 வருடம் பின்பு புனைந்த 4வது சுவி
யோவான்21:20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ' ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ' என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ' என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ' என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ' என்றுதான் கூறினார். இயேசுவின் அன்புச் சீடரும் மரணமானர் எனில் ஏசு கிறிஸ்து இல்லையே.
ரோமன் அரசு இஸ்ரேலை அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் வாழ்ந்தவரானவர் இயேசு. இவர் மரணம் எப்படி?
கைது செய்தது யார்? யோவான் 18:1 இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான். 12 ரோமன் படைப்பிரிவினரும் ரோமன் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,.. இயேசு மீதான குற்றம்.
லூக்கா 23:1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.2 ' இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம் ' என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
உயரமான சாரம் கட்டி அதில் நிர்வாணமாக ஆயுதக் கலகக்கார குற்றவாளிக்கு நிருபிக்கப்பட்ட குற்றத்தை அட்டையில் தொங்கவிடும் ரோமன் முறையில்
யோவான்19:19பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்' என்று எழுதியிருந்தது.
இதில் எல்லாமே - மேசியா என்றால் யூதர்களின் அரசன் - இதில் தெய்வீகம் ஏது கிடையாது
இயேசு தன்னிடம் - ரோமானிய வெற்றிக்கான " மனுஷ குமாரன்" எனும் தகுதி வரும் எனப் பார்த்தார்.
மத்தேயு10:22என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.23அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
இயேசு சொன்னவையாக
மத்தேயு 10:5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
மத்தேயு7:6தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.
26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.
மத்தேயு19: 28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 2: 1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.
ஆனால் பவுல்- யூதர்களின் அரசன் என்பதை நீட்டி கடவுளின் மகன் தெய்வீகமானவர் என்றார். ஆனால் பவுலின் அடிப்படை நம்பிக்கை தன் வாழ்வில் உலகம் அழியும்- அதை இரண்டாவது வருகை என மாற்றினார்.
1தெசலோனிக்கர் 1:10- நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.
1தெசலோனிக்கர் 4: 1313 சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.
7பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.
2 கொரிந்தியர் 1: 14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்
கலாத்தியர் 1: 4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார்.
பிலிப்பியர் 1: .5ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர்,கிறிஸ்து இயேசுவின் நாள் வரைஅதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்
ரோமன் 8”:1 கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.
18இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். 19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள்வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
கலாத்தியர்4: 4 ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
சுவிசேஷக் கதை நாயகர் இயேசுவும் உலகம் தன் வாழ்நாளில் அழியும் என்றார்.
மாற்கு 9:1 1 மேலும் அவர் அவர்களிடம், ’இங்கே நின்று கொண்டு இருப்ப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள்என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.
மாற்கு 13: 29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.-24 ’ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
மாற்கு 14: 62அதற்கு இயேசு, நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘என்றார்
மத்தேயு 10: 5இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ’ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7 அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.
.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 26: 27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ’ இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘என்றார்.
மத்தேயு11: 12திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசுவன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.13திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.14உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்
பழைய ஏற்பாட்டில் எங்குமே நேரடியாக மேசியா-கிறிஸ்து- இறுதித் தூதர் என்பதோ- அவர் தெய்வீகமானவர் என்பதோ கிடையாது.
இஸ்ரேல் நாட்டு எபிரேய புராணக் கதைகளில் வீரன் தாவிது கீழ்தாந் பெரும்பகுதி ஆட்சி இருந்தது- மேலும் கதைப்படி எக்பிதின் நைல் நதி முதல் எபிராய்த்து நதி வரை உள்ள நிலத்தின் அரசாட்சி அன்னியர் ஆபிரகாம் வாரிசு என்பதே பழைய ஏற்பாட்டின் அடிப்படை, அதில் புனையப்பட்டுள்ள கதைப்படியே பெரும் பகுதியை ஆண்ட ஒரே அரசன் தாவீது மட்டுமே, அவனுக்கு இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் தாவீதின் வழி மகன்களுக்கு தடையில்லாமல் இறுதிகாலம் வரை ஆட்சி உரிமை வழங்கினார்.
அந்த ஆட்சியை மீட்க வரவேண்டியவனே மேசியா-கிறிஸ்து, மேசியா காலத்தோடு உலகம் அழியும்- மேசியாஉடனுள்ளோருக்கு சொர்க்கம்-மற்றவர்க்கு நரகம்.
இது ஒரு சிறு யூத மூட நம்பிக்கை குழுவினர் நம்பிக்கை.
இயேசு போதித்ததாக உள்ளது.
மத்தேயு 23: 2 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டு இருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்
அப்போஸ்தலர் நடபடிகள் 23: 8சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
வரலாற்றுபடி 65 – 70 போருக்குமுன் சதுசேயர்கள் தான் யூதப் பாதிரிகளாக இருந்தனர், அதாவது யூத மோசே நாற்காலியில் அதிகாரத்தோடே அமர்ந்தவர்கள்- தேவதூதநிறுதி நாள்- உயிர்த்தெழுதல் எதுவும் இல்லை என்றனர். எனேனில் எபிரேய மூலத்தில் எங்குமே இவை நேரடியாக கிடையாது. இயேசு சொன்னவையாக உள்ளது.
யோவான்21: 20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ’நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.
யோவான்6: 8 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில்மன்னாவைஉண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ‘
இவை ஏதுமே பலிக்கவில்லை-ஆனால வேறொரு இடத்தில் உள்ள சம்பவம்
மாற்கு1017 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.:
நல்லவர் என்பது அடிப்படையில் பாவமற்ற உத்தமர் எனும் பொருள். கடவுள் மட்டுமே வணக்கத்துக்குரியவர் - இயேசு இல்லை எனத் தெளிவாகும்