ஆரம்ப நிலைப்பாடு: மொழி அடிப்படையில் கால்டுவெல் ஜி வரையறுத்தது.
இரண்டாம்கட்ட நிலைப்பாடு: “பிராமணர்-அல்லாத பிறர்” என நீதிக்கட்சி பிரமுகர்கள் வரையறுத்தது.
மூன்றாம்கட்ட (தற்போதைய) நிலைப்பாடு: “சாதி இழிவு பாராட்டாத” + “தீண்டாமை பின்பற்றாத” மக்கள் அனைவரும் - என அண்ணாத்துரை ஜி உள்ளிட்டோர் உண்டாக்கிய ‘சித்தாந்தம்’ என்கிற வரையறை.
இந்த மூன்று வரையறைகளிலும் உள்ள பொய்மைகள்:
ஆரம்ப நிலைப்பாடு:
கால்டுவெல் ஜி படித்தது ஒப்பீட்டு மொழிவரலாற்றியல் (comparative philology). அவர் படித்த ஒப்பீட்டு மொழிவரலாற்றியல் அடிப்படையில் அவர் எழுதிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்கிற ‘தலைப்பு’ ஏற்கக்கூடியதே. ஏனெனில், அது முற்றிலும் ஒப்பீட்டு மொழிவரலாற்றியலுக்கு உட்பட்டது. ஆனால், அந்தத் தலைப்புக்குள் அவர் கொண்டு வந்த ‘ஆய்’வில் ஆய்வியலின் அடிப்படைகளுக்கே எதிரான விஷயங்கள் பல உண்டு. சுருக்கமாக:
- தென்னிந்திய மொழிகள் ஒரு குடும்பத்தை சேர்ந்தவை என உண்மையில் ஆய்வு செய்தவர் கால்டுவெல் ஜி அல்ல. அவருக்கு முன்பாகவே ஃப்ரான்ஸிஸ் வைட் எல்லீஸ் (Francis Whyte Ellis) என்கிற பிரிட்டிஷ் ஸிவில் ஸெர்வெண்ட் அதனை சொல்லி விட்டார். எல்லீஸ் துரை ஜி (ஆமாம், நீங்கள் கேள்விப்பட்டு உள்ள, திருக்குறளை பதிப்பித்த, அதே எல்லீஸ் ஜிதான்) தமிழில் மட்டுமல்லாது ஸம்ஸ்கிருதத்திலும் புலமை வாய்ந்தவர். இருப்பினும் அவரது 31 பக்கக் கட்டுரையானது ஒரு முழு ஆய்வு என ஏற்கத் தகுந்த காரணிகளை கொண்டிருக்கவில்லை.
- தென்னிந்திய மொழிகள் எல்லாம் ‘திராவிட’ மொழிக் குடும்பத்தை சேர்ந்த அதே சமயம் ஸம்ஸ்கிருதத்தை சாராதவை என்று முதன்முதலில் சொன்னவர் அலெக்ஸாண்டர் டங்கன் கேம்பல் ஜி. இவரும் எல்லீஸ் ஜி போலவே ஒரு ஸிவில் ஸெர்வண்ட். தெலுங்கு மொழி அறிந்தவர். தெலுங்கானது ஸம்ஸ்கிருதத்தில் இருந்து வேறுபட்ட அடிப்படையை கொண்டது என்று எழுதினார். இவரது ஆய்வு நூலின்* முன்னுரைதான் எல்லீஸ் ஜியின் கட்டுரை. * A Grammar of the Teloogoo Language
- கேம்பல் ஜியின் இன்னொரு ஆய்வானது* வடகிழக்கு மொழிகள் எல்லாம் ஓரினத்தை சேர்ந்தவை என்கிறது. * A Dictionary of the Teloogoo Language, Commonly Termed the Gentoo, Peculiar to the Hindoos of the North Eastern Provinces of the Indian Peninsula.
- கால்டுவெல் ஜியின் ஆய்வு இவ்வாய்வுகளின் முடிவுகளை கருத்தில் கொண்டது. எனினும், அந்த ஆய்வுகளோடு பிறரது ஆய்வுகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. சுருக்கமாக, அது பயன்படுத்தியவை:
1. எல்லீஸ் ஜியின் பரிந்துரை
2. எல்லீஸ் ஜியின் ஆய்வு முறை மற்றும் மொழியியல் தகவல்கள்
3. மேலே உள்ள 2வதுடன் தாமஸ் பரோ ஜியின் (Thomas Burrow) ஆய்வுகளோடு ஒப்பிடுதல்
4. மேலே உள்ள 2வதுடன் முர்ரே ஈமினௌ ஜியின் (Murray B Emeneau) ஆய்வுகளோடு ஒப்பிடுதல்
- இங்கனம் பிறரின் ஆய்வுகளை தொகுத்து தனது ஆய்வினை முன்வைத்ததால் கால்டுவெல் ஜியின் ஆய்வானது முந்தைய ஆய்வுகளைவிட முக்கியமானதாக ஆயிற்று.
- எனினும், இந்த ஆய்வுகளில் அடிப்படை பிரச்சினைகள் உண்டு.
- ஒப்பீட்டு மொழிவரலாற்றியலானது அடிப்படையில் பேச்சு மற்றும் எழுதப்பட்ட இலக்கியங்களை ஆய்வது. அவ்வகையில்தான் கால்டுவெல் ஜியின் ஆய்வானது பிற ஆய்வுகளை ஒப்பிட்டு எழுதப்பெற்றது.
- எல்லீஸ் ஜி மற்றும் கேம்பல் ஜியின் ஆய்வுகள் மொழியியல் (linguistics)க்கு உட்பட்டவை.
- கால்டுவெல் ஜியின் ஆய்வு ஒப்பீட்டு மொழிவரலாற்றியல் (comparative philology)க்கு உட்பட்டது. கால்டுவெல் ஜி உருவாக்கிய வரையறையானது செம்மைப்படுத்தப்பட்ட மொழியியல் (linguistics)க்கு உட்பட்டது இல்லை.
- நவீன ஆய்வுமுறையின்படி ஒரு மொழியியல் ஆய்வானது தனது ஆய்வுக்கு தேவையான தகவல்களை மொழிவரலாற்றியலில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், மொழிவரலாற்றியல் ஆய்வானது தனது ஆய்வுக்கு தேவையான தகவல்களை மொழியியலில் இருந்து பெறுவதை ஏற்பது இல்லை.
- ஏனெனில், மொழியியல் வரலாற்றில் (historical linguistics) இருந்துதான் ஒப்பீட்டு மொழிவரலாற்றியலுக்கான (comparative-historical philology) ஆய்வுமுறைகள் கிடைக்கின்றன.
- அவ்வகையில் கால்டுவெல் ஜி செய்த ஆய்வானது தற்கால ஆய்வுமுறைகளின்படி நிராகரிக்கத்தக்கது ஆகிறது. ஏனெனில், அவர் செய்த ஆய்வுமுறை, நிராகரிக்கப்படுகிற உல்டா ஆய்வுமுறை.
- அத்துடன், மொழியியலானது மொழிகள் குறித்த பலவிஷயங்கள் குறித்தும் பரந்த ஆழமான ஆய்வுகளை செய்கிறது. இந்த பரந்துபட்ட அறிதலோ ஆய்வுகளோ மொழிவரலாற்றியலில் இல்லை. அவ்வகையிலும், கால்ட்வெல் ஜியின் ஆய்வானது குறைவுள்ளதாக இருக்கிறது.
- கால்டுவெல் ஜி மற்றும் எல்லீஸ் ஜிக்கள் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு போன்றவற்றை மட்டுமே தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் சேர்க்கிறார்கள். அவ்வகையில், இந்த மொழிக் குடும்பமானது திராவிட தேசம் என்று அறியப்படும் தென்னிந்திய நிலப்பகுதிக்குள் இவர்கள் கொண்டுவர முயல்கிறார்கள்.
- கேம்பல் ஜியோ வடகிழக்கு இந்திய மொழிகளையும் ஒரே மொழிக் குடும்பத்தில் சேர்க்கிறார். அவ்வகையில், இந்த மொழிக் குடும்பமானது திராவிட தேசம் என்று அறியப்படும் தென்னிந்திய நிலப்பகுதிக்குள் மட்டும் சுருக்கப்பட முடியாத வகையில் மற்ற இருவரின் ஆய்வுகளோடு முரண்படுகிறது.
- எல்லீஸ் ஜிக்கு தமிழ், ஸம்ஸ்கிருதம், மலையாளம் போன்ற மொழிகளில் பாண்டித்யம் இருந்ததை யூகிக்க முடிகிறது. ஆனால், காம்பெல் ஜிக்கு தெலுகில் மட்டுமே பாண்டித்யம். கால்ட்வெல் ஜிக்கோ தமிழில் மட்டுமே பாண்டித்யம். மொழியியல் ஆய்வுக்கு பலமொழிகளில் பாண்டித்யம் கட்டாயம் இல்லைதான். ஆனால், மொழிவரலாற்றியலுக்கு அது கட்டாயம். தமிழ் மட்டுமே அறிந்த கால்டுவெல் ஜியின் மொழிவரலாற்றியல் ஆய்வுமுறை இவ்வகையிலும் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கத் தகுந்ததாகிறது.
- தென்னிந்திய மொழிகள் ஸம்ஸ்கிருதத்தில் இருந்து வேறுபட்டவை என்று சொல்லியவர் கேம்பல் ஜிதான் - கால்ட்வெல் ஜி அல்ல. ஆனால், தற்கால ஆய்வாளர்கள் அந்த முடிவுக்கு தேவையான தரவுகளையோ, தகவல்களையோ, ஆய்வுமுறைகளையோ கேம்பல் ஜி தரவில்லை என்பதை சுட்டுகின்றனர். அதாவது, ஸம்ஸ்கிருத மொழிக்கும், தென்னிந்திய மொழிகளுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்ல அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
- மொழியியலை, பிறப்பு அடிப்படை இனமாக (genetical) ஆக முன்வைத்தவர் எல்லீஸ் ஜிதான். அவ்வகையில் பார்த்தால், திராவிட இயக்கங்கள் முன்வைக்கிற பிறப்பு-அடிப்படை இனவாதத்தின் ஊற்றுக்கண் அவரே.
- இதில் ஒரு மாபெரும் ஓட்டை இருக்கிறது. திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்தவையாகத் தற்கால ஆய்வுகள் கண்டறிந்து உள்ள ப்ரஹூயி மொழியானது பலுச்சிஸ்தானில் பேசப்படுகிறது. நேபாள், பூடான் நாடுகளில் பேசப்படுகிறது தங்கார் எனும் பிரதேஸ மொழி. மத்திய இந்தியாவில் பேசப்படுகிறது கோண்டி மொழி. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தில்லி, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு-கஷ்மீர், மற்றும் ராஜ்ஸ்த்தான்களில் பேசப்படும் பாஸிகர் மொழியும் திராவிட மொழியே. மத்தியப் பிரதேசத்தில் பேசப்படும் பாரியாவும் பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்காளங்களில் பேசப்படும் மால்தோவும் ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிஸாக்களில் பேசப்படும் பஹாரியா மொழியும் திராவிட மொழிகளே. கோலமி, துருவ்வ, ஓளாரி, நாயகி, கைய்க்கடி போன்ற திராவிட மொழிகள் மஹாராஷ்ட்ரம், ஒரிஸா, சட்டீஸ்கர் மாநிலங்களில் பேசப்படுகின்றன.
- இம்மொழி பேசும் சமூகத்தினரின் மரபணுக்கள் தென்னிந்தியரின் மரபணுக்களில் இருந்து வேறுபடுகின்றன. முக்கியமாக, பிராமணர்-அல்லாதவர்களின் மரபணுக்களில் இருந்து மாறுபடுகின்றன.
- நவீன மரபணு ஆய்வுகள் மிகத் தெளிவாகவே மொழிகளின் மரபணு அடிப்படையை நிராகரிக்கின்றன. ஒரே மொழியை வெவ்வேறு மரபணுக்கள் கொண்ட வெவ்வேறு சமூகங்கள் பேசுவதை அவர்கள் சுட்டுகின்றன. மிக உறுதியாக அவை நிரூபிப்பது, ‘மரபணு அடிப்படையில் மொழிகளோ, மொழிகள் அடிப்படையில் மரபணுக்களோ உருவாகாது. எனினும், கற்கும் திறனானது மரபணுவின் அடிப்படையில் மாறுபடுகிறது’ என்பதை.
- ‘திராவிடம்’ மற்றும் ‘ஆரியம்’ போன்றவை நிலப்பகுதிகளாக இந்திய பேச்சு மற்றும் இலக்கிய மூலங்களில் சொல்லப்படுகின்றனதான். ஆனால், பிறப்பு அடிப்படை இனமாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது தற்கால ஆய்வுகளுடன் மிகவும் பொருந்திப் போகின்ற ஒன்று.
- நிலம் சார்ந்த கலாச்சாரமாக பேசப்பட்ட “ஆரியம்” பின்பு, பண்பு/குணம் என்கிற மாறுபாட்டை அடைந்து நிலம்-சாராத பொதுக் கருத்தாக இந்தியா முழுவதும் பயன்படுவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், ‘திராவிடம்’ என்பது எக்காலத்திலும் கலாச்சாரமாகவோ, பண்பு/குண்மாகவோ பயன்படுத்தப்படவே இல்லை.
- இக்காரணங்களால், இந்த எல்லீஸ் ஜி, கேம்பல் ஜி, மற்றும் கால்ட்வெல் ஜி எனும் இம்மும்மூதேவிகளின் ஆய்வுகள், இன-மொழி ஆய்வுகளில் குழந்தை கிறுக்கல்களாக ஏற்கத்தக்கவை. திராவிட இயக்கத்தார் அறியாமையால் போற்றும் அற்புத ஓவியங்கள் இல்லை அவை !
இரண்டாம்-கட்ட நிலைப்பாடு:
“பிராமணர்-அல்லாத பிறர்” என நீதிக்கட்சி பிரமுகர்கள் அவர்கள் காலத்தில் வரையறுத்தது.
இது மரபணு அடிப்படையிலும் மொழியியல் அடிப்படையிலும் அமைய வாய்ப்பில்லை என்பதை நவீன அறிவியல்பூர்வ ஆய்வுகள் நிரூபித்து விட்டன. அதனால், ‘பிராமணர்-அல்லாத பிறர் மட்டுமே தமிழர்’ என்பதோ ‘தமிழர் என்றோர் *இனம்* உண்டு. தனியே அவருக்கு குணம் உண்டு’ என்கிற பாரதிதாசன் ஜியின் சாராய போதை உளறலிலோ எள்ளளவுக்கு கூட உண்மை இல்லாமல் போகிறது.
அதே சமயம், இதனை ஒரு சமூகம்-சாராத அரசியல் நிலைப்பாடாக மட்டும் முன்வைத்திருந்தால் அதில் உண்மை இருந்திருக்கும். ஆனால், நீதிக்கட்சியினர் அத்தகைய கருத்தை முன்வைக்கவில்லை.
மூன்றாம்-கட்ட நிலைப்பாடு:
“சாதி இழிவு பாராட்டாத” + “தீண்டாமை பின்பற்றாத” மக்கள் அனைவரும் - என அண்ணாத்துரை ஜி உள்ளிட்டோர் அவர்கள் காலத்தில் உண்டாக்கிய ‘சித்தாந்தம்’ என்கிற வரையறை. இந்த வரையறையையே சுப. வீரபாண்டியன் ஜி தற்கால ‘திமுகவின் திராவிட சித்தாந்தம்’ என்கிறார்.
அதாவது, ‘இனம்’ என்கிற கருத்து திமுக அறிவாலய நிலத்தின் மூலப் பத்திரம் வைக்கப்பட்டுள்ள யாரும் அறியா ரகசியக் குப்பை தொட்டியில் போடப்பட்டு விட்டது !
ஒரு ‘அரசியல்’ சித்தாந்தமாக சுப. வீரபாண்டியன் ஜியால் முன்வைக்கப்படுகிறது. இது நாளைக்கே ஸ்டாலின் ஜியை வருங்கால பிரதமராக ஆக்க வழி செய்ய முயல்வதுடன், அண்ணாத்துரை ஜியை வேசிகுடும்பத்தான் என்று பாரதிதாசன் ஜி பிறப்பு அடிப்படை இனகுணமாக வரையறுத்ததையும் மறுத்து விடுகிறது ! ‘தமிழனுக்கு தனி குணம்’ என்பதையும் மறுத்து விடுகிறது !
“சாதி இழிவு பாராட்டாத” + “தீண்டாமை பின்பற்றாத” என்கிற இவ்விரண்டை எடுத்து, நம் பாரதத்தின் வைதீக ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தால், நம் சனாதன வைதீக நூல்களோ வேறு தரவுகளோ சாதி இழிவு பாராட்டவில்லை என்பதும் சாதி-அடிப்படை தீண்டாமை பாராட்டவில்லை என்பதும் தெரிய வருவதால்....
... சனாதன வைதீக பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்களே திராவிடர்கள் என்று நிலைநாட்டி விடுகிறது !
அவ்வகையில், பண்பு அடிப்படையிலும் கருத்து அடிப்படையிலும் நில அடிப்படையிலும் முன்பு ஆரியமாக எது போற்றப்பட்டதோ அதைத்தான் சுப. வீரபாண்டியன் ஜி திராவிடம் என்கிறார் !