திருக்குறள் 133 அதிகாரங்கள், அதிகாரத்திற்கு 10 பாடல் என 1330 பாடல் கொண்டது. மெய்யியல் மரபின் வாழ்வியல் உறுதிப் பொருட்களான அறம், பொருள் & இன்பம் எனப் பிரித்து என முப்பால் என்ற பெயரிலே தமிழ் மொழி நன்கு நெகிழ்ச்சி அடைந்த இடைக்காலத்தில் குறள் வெண்பா அமைப்பில் இயற்றப்பட்டது.
திருவள்ளுவமாலைப் பாடல்கள்
திருக்குறள் யாக்கப்பட்ட காலம் முதல் அது தமிழரால் போற்றப்பட்டும் உரைகளும் திறனாய்வும் செய்யப்பட்டன. திருவள்ளுவமாலை பாடல்கள் திருக்குறளின் மொத்தம் 133 அதிர்காரங்கள் மற்றும் இயல் பிரிப்புகளை உறுதி செய்ய உதவி உள்ளது.
20.சிறுமேதாவியார்[ii]பார்வை (வீடுஒன்றியபாயிரம் 4, அறம் 33, ஊழ் 1, பொருள் 70, இன்பம் 25) & 37. மதுரைப்பெருமகனார்[iii] (அறம் 38, பொருள் 70, இன்பம் 25)
ஊடலுவகை-அதிகாரத்தில்பரிமேலழகர் வைப்பில் பத்தாவது மணக்குடவர் & காளிங்கர் நான்காவது என பழமையான ஓலைச் சுவடிகளில் அமைந்துள்ளது
இன்றைய குறள் எண் என்பது பரிமேலழகர் வைத்த அமைப்பு. அவருக்கு முந்தைய உரையாசிரியர்கள் வைப்பு சில பல மாறுபடுகிறது. தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட உரைக் களஞ்சியம் தொகுப்பு ஒவ்வொரு அதிகாரத்திலும் பழமையான உரையாசிரியர்கள் எப்படி அமைத்து இருந்தனர் என்பதை கொடுத்த முறையான ஆய்வு நூலாகும்.

அறத்துப்பால் - தமிழ் பதிப்புகளில் இன்று பயன்படுத்தப் படும் இயல் பிரிப்புகள் முவ பதிப்பு அடிப்படையில் தொடர்ந்து பாயிரம் - இல்லறவியல் துறவறவியல் ஊழியல் எனும் அமைப்பு பண்டைய உரை ஆசிரியர் அனைவரும் பயன் படுத்தியமையும், வள்ளுவ மாலை[iv] உறுதி செய்பவை ஆகும்
குறிப்பறிதல்எனும்அதிகாரம்பொருட்பாலிலும், தலைவன் - தலைவிமனதினுள்உள்ளதைஅறியஎனகாமத்துப்பாலிலும்(காலிங்கர் 'குறிப்புணர்தல்')ஒரேபெயரில்உள்ளது.
கடவுள் வாழ்த்து: அனைத்து அதிகாரங்களிலும் தலைப்பில் வரும் சொல் அல்லது எதிர்- மறையானது உள்ளது, கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கடவுள் எனும் சொல் இல்லை.
வள்ளுவர் ஒரு முழுமையான ஆத்திகர் - கற்றதின் பயன் இறைவன் திருவடியைத் தொழுவதற்கே, அறிவின் பயனே மீண்டும் பிறவாமை எனும் வீடுபேறு அடைய இறைவனை தேடிப் பற்றவே என்ற்பார், இறைவனை வணங்காதார் தலையில் உள்ள உறுப்புகள் பணி செய்யாதவை என்பார். மெய்யறிவை உணரும்உணர்வுஇல்லாதவர்க்குஐந்துபுலன்களின்வேறுபாட்டால்வளர்ந்தஐந்துவகைஉணர்வும்முற்றப்பெற்றபோதிலும்பயன்இல்லை.ஒருபயனும்இல்லை.
இறைவன் என்ற சொல்லை அரசன், தலைவன் என்ற பொருளில் பொருட்பாலில் பயன்படுத்தி உள்ளார். இறை என்ற சொல்லை[ix] கை மணிக்கட்டு எனும் பொருளிலும் உள்ளதால் உலகைப் படைத்த பரம்பொருள் வணக்கம் பயன் கூறும் அதிகாரத்திற்கு வள்ளுவரே கடவுள் வாழ்த்து என வள்ளுவரே பெயர் கொடுத்துள்ளார் என்பர் அறிஞர்கள்.
திருவள்ளுவர் காட்டுவது 10 உடைமைகளா?
அதிகாரத் தலைப்புகளில் என இன்றைய பதிப்புகளில் உள்ளதை வைத்து வள்ளுவர் காட்டும் உடைமைகள் பத்து என நூல்களே வந்துவிட்டன.
1.அடக்கமுடைமை; 2.அருளுடைமை; 3.அறிவுடைமை;
4.அன்புடைமை; 5.ஆள்வினைஉடைமை; 6.ஊக்கமுடைமை;
7.ஒழுக்கமுடைமை; 8.நாணுடைமை; 9.பண்புடைமை &
10.பொறையுடைமை
பரிமேலழகர் அமைத்துள்ள அதிகாரப் பெயர்படி மேலே உள்ள பத்து, ஆனால் மணக்குடவர் உரைப்படி மேலும் 5 அதிகாரங்களில் அவர் பயன் படுத்தியுள்ளது
வள்ளுவர் காட்டும் உடைமைகள் பத்து எனும் தொடர் தவறானது, மேலும் குறள் உள்ளே மனித வாழ்வில் மெய்யியல் வழியில் மேலும் பல உடமைகள் வள்ளுவர்காட்டுவார்.
அன்னிய காலனிய வழிச் சிந்தனையில் திருக்குறள் ஆராய்ச்சியில் புதைய கருத்து, பொருள், ஊகம் பரப்பல் அதிகமான வழியில் சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞரான வ.வு.சி. திருக்குறளில் முதல் மூன்று அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை பிற்காலத்தில் இடைசெருகல் என்றது மிகத் தெளிவான தவறானது என்பதை உறுதி செய்தது