Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவமாலை


Guru

Status: Offline
Posts: 7467
Date:
திருவள்ளுவமாலை
Permalink  
 


TVM%2B01.jpgTVM%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

TVM%2B03.jpgTVM%2B03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

TVM%2B04.jpgTVM%2B05.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

TVM%2B06.jpg TVM%2B07.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

TVM%2B08.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை என்பது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களின் கோவை என்று பொருள்படும். மொத்தம் ஐம்பத்து மூன்று வெண்பாக்களாலான பாக்களையுடையது.

இதில், பல பாக்கள் கருத்துச் செறிவுடனும், மேற்கோளாக ஆளத்தக்கனவுமாகமும் உள்ளன. சில பாக்கள் குறளின் முப்பாலின் இயற்பகுப்புகளை எடுத்தோதுகின்றன; கவிதை நலம் நிறைந்து கற்பனையால் குறளைச் சிறப்பிக்கின்றன சில; வடமறைநூலுக்கும் இதற்கும் வேற்றுமை காட்டி ஏற்றம் கூறுகின்றன சில; குறள் ஆசிரியரைப் பாராட்டுகின்றன சில; வள்ளுவரின் இதயத்தின் ஆழத்தையும், அவரது அறிவின் ஆற்றலையும் தெளிவையும் உணர்ந்து தாங்கள் பெற்ற இன்பத்திற்குக் கனிந்த கற்பனையுடன் செய்த பாக்கள் பிற.

காலம்

வள்ளுவமாலை திருக்குறள் அரங்கேற்றத்தின்போது சங்கப் புலவர்களால் பாடப்பெற்றது என்பர் ஒருசாரார். கல்லாடத்தில் கூறப்பட்டுள்ள குறள் அரங்கேற்ற நிகழ்ச்சி இத்தொகுப்பின் முதல் பாட்டுக்கு ஆதாரமாக இருக்கலாம். அப்பாடல் மதுரையில் உள்ள சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு ஒத்து இருத்தற்கு உருத்திரசன்மரே ஏற்றவர் என்று குறிப்பது. ஆனால் பழங்கதைகளில், குறள் அரங்கேறிய காலத்தில், சங்கப்புலவர் நாற்பத்தெண்மரும் திருவள்ளுவரோடு ஒக்க இருக்கத் தகுதியற்றவராய்ப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து மூழ்கினர் என்று கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வள்ளுவமாலை குறள் ஆசிரியர் காலத்தது அல்ல; பிற்காலத்தே தோன்றியதே என்பர்.

காலத்தால், பண்டைய குறள் உரை ஆசிரியர்கள் பதின்மருக்கு முந்தியது திருவள்ளுவமாலை என்பது பல அறிஞர்களின் முடிவு. இப்பாடல்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் உள்ள காலகட்டத்தில் தொகுக்கப்பட்டதெனச் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர் இதன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதாக அமையும் என்று கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் திருவள்ளுவமாலை வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதென்பதில் ஐயம் இல்லை என்பார் தெ பொ மீ.

தொடுத்தது யார்?

அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொனபதின்மரும் பாடிய பாடல்களுமாகக்கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக அறியப்படுவது வள்ளுவமாலை. இவ்வாறாக விண்ணிலிருந்து வந்த ஒலியாகவும் உடல்கொண்டோராலும் பாடப்பட்ட பாடல்களுடன் மேலும் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.

வள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் அன்றி வேறு ஒன்றுமில்லை. அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொபதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை. வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணமமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே குறளைப் பற்றிச் சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே வள்ளுவமாலை என்பது பொருந்தாதாகிறது.

இந்நூல் அனைத்தும் ஒரே புலவரால் பாடி இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும் ஆராய்ச்சி அறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்தப் பாராட்டு மாலை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. வள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் எனவும் கொள்ள முடிகிறது.
சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே வள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. வள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பதற்கான காரணம் வலுப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

தாக்கங்கள்

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நுல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர்திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஓரு தொடக்கம் உண்டானது எனலாம்இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர்வள்ளுவமாலை திருக்குறளின் நயத்தையும் சிறப்பையும் ஆராய்ந்துரைக்கும் திறனாய்வு மாலையாக விளங்குகிறது.
இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் குறளை அணுகிய முறை வெவ்வேறாக உள்ளதுஇப்பாடல்கள் வள்ளுவரை தெய்வ வாக்கு கொண்டவர் என்று வாழ்த்தும்குறள் மறைநூலுக்கு மேலானதுஇணையானது எனவும் வடமொழியின் சிறப்பிற்கு மறைநூல்தமிழ்மொழியின் பெருமைக்குக் குறள், முப்பாலில் நாற்பால் மொழியப்பட்டது எனவும் ஒப்பாய்வு செய்யும்பால்இயல்அதிகாரத் தொகுப்பு இவற்றைக் கூறி குறளின் சொற்பொருள்யாப்பின் அமைப்பு ஆகியவற்றின் சிறப்புபற்றிப் பேசும்உள்ளத்து இருளை நீக்கும் வாழ்வியல் நூல் என்றும் இருவினை நீக்கும் மாமருந்தாகிய ஆன்மநூல் இது என்றும் போற்றும்இவ்வாறு பல்வேறு நிலைகளில் திருக்குறளின் பாடுபொருளும் பாடுமுறையும் ஆராயப்பட்டுள்ளன.

வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல்குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலேதிருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது.
வடமொழிநூல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பேசுதல் ஒவ்வாது என்பதனை வலியுறுத்தும் போக்கு அக்காலச் சூழலிலேயே தோன்றியமையும்திருக்குறள் தமிழில் எழுந்த மூலநூல் என்பதனை வள்ளுவமாலை மூலமும் நிறுவப் பெற்றமையையும் காணலாம்.
வள்ளுவமாலை எழுந்த காலத்தில் மாந்தர் பெரிதாக மதித்து வந்ததாகக் கருதப்படும் வைதீக நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டுப் பாராட்டிக் கூறியதன் நோக்கம் தமிழின் ஆற்றலை மற்றவரும் உணர வேண்டும் என்பதே என்று ஒரு கருத்து உள்ளதுஆனால் காலப்போக்கில் இந்த ஒப்பீடே பிறழ உணரப்பட்டுப் பின்னையோர் திருக்குறள் கருத்துகள் வடநூற் கருத்துக்களின் பிழிவாகக் கருதத் தொடங்கி விட்டனர்பின்வந்த உரையாசிரியர்களின் வெவ்வேறு அணுகுமுறைக்கு மாலைப்பாடல்கள் அடித்தளமாக அமைந்து விட்டன என்பதும் தெளிவாகும் என்பர் ஆய்வாளர்கள்.
வள்ளுவமாலை தரும் பாராட்டுரைகளே வள்ளுவத்திற்கு வேறுபொருள் காணத்தூண்டியிருக்கலாம்அல்லது குறள் தோன்றிய காலத்திலிருந்து பின்னர் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கருத்துகள் அதில் ஏற்றியுரைக்கப்பட்ட பின் அக்கருத்துரைகளே வள்ளுவமாலை தரும் கருத்துரைகளாக மாறின எனவும் கொள்ளலாம்எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும்உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 வள்ளுவம் பெற்ற திரிபிற்கு வள்ளுவமாலையும் அடிப்படை என்னும் நிலையில் பல காரணங்களைக் காட்டுவார் கு  ஆனந்தன்திருக்குறளின் உண்மைப் பொருளையும் உள்ளுறை நோக்கையும் அமைப்பையும் மூலத்திலிருந்து மாற்றியமைத்து வேறுவிளக்கம் தரும் பல பாட்டுகள் வள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ளனதொன்மை நூலாகிய தொல்காப்பியம்சங்க நூல்கள்திருக்குறள் முதலியவற்றில் 'வீடுபற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லைஅறம்பொருள்காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றனஆனால் வள்ளுவமாலையின் பல பாடல்களில் (7,8,20,22,33,38,40,50) திருக்குறளில் இல்லாத நாற்பால் வலியுறுத்திச் சொல்லப்பட்டுத் திருக்குறளின் ஆராய்ச்சிப் போக்கை அல்லது திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் இவர்.

 

அடுத்து வள்ளுவமாலை திருக்குறளுக்குத் தரும் இன்னொரு மதிப்பீட்டுரை வேதப்பொருளும் குறட்பொருளும் ஒன்றேயாம் என்பதுஇது தவறான ஒப்பீடுஏனென்றால் வேதங்கள் இயற்கை சக்திகளையும் தெய்வங்களையும்யாகம்-சடங்குகள் செய்யும் முறைகளையும் விளக்குபவைகுறள் போல வாழ்வியல் நெறிகாதல் நெறிகளை விளக்குவன அல்லமேலும் குறளை இராமாயணம் போன்ற காப்பியங்களோடு ஒப்பிட்டதும் பொருத்தம் இல்லை.

வள்ளுவமாலைக் கருத்துக்கள் அந்தணர்-அந்தணர் அல்லாதவர் என்று வேற்றுமை பாராட்டும் கொள்கையைக் காட்டுவதாக உள்ளன என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

தொகுப்புரை

 

முன்னர் வள்ளுவமாலை திருக்குறளின் சிறப்புப் பாயிரமாகப் பேசப்பட்டதுஆனால் இன்று யாரும் அதைக் குறளின் சிறப்புப் பாயிரம் என்று கருதவில்லைஇது இப்போது சில உரைகளின் பிற்சேர்க்கையாகவும் தனி நூலாகவும் படிக்கப்படுகிறது.

பொறுப்பற்ற நாடோடிகளின் கற்பனையில் உருவான கதையே வள்ளுவமாலை என்று ஒரு புறம் கூறப்பட மறுகோடியில் சிலர்க்கோ இது நல்லதோர் திறனாய்வு மாலையாகத் தோன்றியதுவள்ளுவமாலைப் பாடல்களே திருக்குறளைத் திரித்துப் பொருள் கொள்வதற்குப் பயன்பட்டன என ஒருசாரார் கூற மற்றவர்கள் இது கவித்துவம் மிக்க பாராட்டுப் பாடல் தொகுதி எனப் போற்றினர்எவ்வாறாயினும் குறளைப் பற்றி அறிதற்கு இது ஓர் பண்டைக் கருவி நூலாகத் திகழ்கிறது என்பதிலும் திருக்குறளின் சிறப்பை நன்கு சுவைத்துப் பிறரையும் சுவைக்கச் செய்கின்றது என்பதிலும் ஐயமில்லை.

இதன் காலம் கல்லாடர் காலமாகிய கி பி 11-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது பலரின் முடிவு.

வள்ளுவமாலையில் உள்ள பாடல்களுக்குள்ளேயேகுறள் அமைப்பு பற்றிய பால்இயல்அதிகாரம் என்ற கூறுகளைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் கூறப்பட்டுள்ளனஅதுபோலவே முப்பாலில் நாலு உறுதிப் பொருளையும் கூறியது என்று ஒரு பாட்டு கூறநாலு உறுதிப் பொருளையும் நேரடியாகக் கூறியது என்கிறது இன்னொரு பாடல்திருக்குறளை அதனுடன் ஒப்புமையற்ற வேதம்வடமொழி இலக்கியங்களான இராமாயணம்மகாபாரதம் ஆகியவைகளோடு இணைத்துக் கூறியது ஒப்பிலக்கிய நோக்கில் பிழையானதுதிருக்குறள் முதல்நூல் அல்லஅது வழிநூல்குறள் வடமொழி வேதத்தைத் தழுவியது போன்ற வள்ளுவமாலைக் கருத்துக்கள்இதனுள் குறளின் புகழுரை மட்டுமே அடங்கியிருக்கவில்லைகுறளின் வரலாற்றைத் திரிக்கும் பாடல்களும் இருக்கின்றன என்பதையும் உணர்த்துகின்றன.

திருக்குறள் பற்றிய பாராட்டுரைகள்புகழுரைகள்திறனாய்வுரைகள் கொண்ட பாடல் தொகுப்பு வள்ளுவமாலை.
வானொலிதெய்வம்வேந்தன் பாராட்டுரை - இவை குறளுக்குத் தெய்வத்தன்மை தரும் நோக்கில் புனையப்பட்டதாகத் தோன்றுகின்றன.
குறளாசிரியரின் மீது வழங்கி வந்த பழியை நீக்க வேண்டும் என்ற எண்ணம் சில பாடல்களில் தெரிகிறது.
எந்த ஒரு நூலினும் மேம்பாடனது குறள் என்பதைக் காட்டவேண்டும் என்ற ஆர்வம் சில பாக்களில் காணப்படுகிறது.
இயலும் அதிகாரமும் இத்தனையென்று அரண் செய்ய விரும்பிய நோக்கம் சில பாடல்கள் மூலம் வெளிப்படுகிறது.
திருவள்ளுவரைக் கொண்டாடவும் திருக்குறளைப் புகழ்ந்தேத்தவும்குறள் பற்றிச் சுதந்திரமாக மொழியப்பட்ட பல புலவர்களின் கருத்துக்களின் தொகுப்பாக ஆக்கப்பெற்ற நூல் இது.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 திருவள்ளுவ மாலை

இப்பாடற்றிரட்டு கடைக் கழகப் புலவராற் பாடப்பட்டதன்று.பிற்காலத்து ஆரியச்சார்பான ஒருவரோ ஒரு சிலரோ அவர்பெயரிற் பாடிவைத்ததாகும்.இதற்குச் சான்றுகள்:-

1. உடம்பிலி (அசரீரி) யுரையும் நாமகள் கூற்றும் இறைவன் பாராட்டும் என்று முப்பாக்கள் கலந்திருத்தல்.

2.இறையனாரகப் பொருளுரைக் கட்டுக் கதையிற் கூறப்பட்டுள்ள உருத்திரசன்மன் என்னும் ஐயாட்டை மூங்கைப் பிராமணச் சிறுவன், திருவள்ளுவரோடு ஒக்கவிருக்கவென்று வானுரையெழுந்ததாகக் கூறப்பட்டிருத்தல்.

3. இத்திருவள்ளுவமாலைப் பாடகராகக் குறிக்கப்பட்டவருட் பலர் திருவள்ளுவர் காலத்தவராக இருத்தல்.

4. திருக்குறள் ஆரியவேத வழிப்பட்டதாகப் பல பாட்டுக்கள் கூறுதல்.

5. பாக்களின் நடை பெரும்பாலும் பிற்காலத்த தாக விருத்தல்.

6. உருத்திரசர்மன் என்னும் இயற்பெயர் உயர்வுப்பன்மை வடிவிற் குறிக்கப்பட்டிருத்தல்.

7. நல்கூர்வேள்வியார் பெயரிலுள்ள பாவில் மாதாநுபங்கி என்னும் ஒரு பொருளற்ற வடசொல் ஆளப்பட்டிருத்தல்.

8. சில பாக்களில் திருவள்ளுவர் கருத்திற்கு மாறாகப் பிராமணரை அந்தணரென்று குறித்திருத்தல்.

உடம்பிலி (அசரீரி)

1. திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ

டுருத்தகு நற்பலகை யொக்க-விருக்க

வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி

லொருக்கவோ வென்றதோர் சொல்.

(பொழிப்புரை) உருத்திரசர்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளுவருடன் ஒக்கவிருக்க வென்று வானில் ஓர் உரையெழுந்த்து.

நாமகள்

2.நாடா முதனான் மறைநான் முகனாவிற்

பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன்--கூடாரை

யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்

வள்ளுவன் வாயதென் வாக்கு.

(பொ--ரை.) பாண்டிய வேந்தே!நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்; இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்;இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.

இறையனார்

3.என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு

நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க்--குன்றாத

செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்

மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்.

(பொ-ரை.) திருவள்ளுவரின் திருக்குறள் நெடுங்காலஞ்செல்லினும் தேன் சொரியுந்தன்மையதான விண்ணக மலர்போலும்.

உக்கிரப்பெரு வழுதியார்.

4.நான்மறையின் மெய்ப்பொருளை முகப்பொருளா நான்முகத்தோன்

றான்மறைந்த வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை

வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்

சிந்திக்க கேட்க செவி.

(பொ-ரை) நான்முகன் வள்ளுவனாகத் தோன்றிக் கூறிய முப்பால் நூலை , என்தலை வணங்குக; வாய்வழுத்துக; மனம் ஊழ்குக (தியானிக்க) செவி கேட்க.

கபிலர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 5.தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

 

பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு

வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி.

(பொ-ரைவீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசேதிருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம்புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.

பரணர்

6.மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்

ஞால முழுது நயந்தளந்தான் -வாலறிவின்

வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா

ருள்ளுவ்வெல் லாமளந்தா ரோர்ந்து.

(பொ-ரை ) திருமால் குறளாய்த் தோன்றித்தன் இருபேரடியால் உலகனைத்தையும் அளந்தான்ஆனால் திருவள்ளுவர் தம்குறளின் இரு சிற்றடியால் மாந்தர் கருத்தனைத்தையும் அளந்தார்.

நக்கீரர்

7.தானேமுழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா

லான வறமுதலா வந்நான்கு - மேனோருக்

கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்

வாழியுல கென்னாற்று மற்று.

(பொ-ரைதாமே எல்லாவற்றையும் அறிந்து நாற்பொருளையுங் குறள் வெண்பாவால் எல்லார்க்கும் எளிதாயறிவித்த திருவள்ளுவர்க்கும் மழைபொழியும் முகிலுக்கும் உலகம் என்ன கைம்மாறு செய்யவல்லதாம் ?

மாமூலனார்.

8.அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்

றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்

வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்

கொள்ளா ரறிவுடை யார்.

(பொ-ரைஅறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை , மறந்தேனும் மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவுடையோர் கொள்ளார்.

கல்லாடர்

9.ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி

னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென

வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்

முப்பான் மொழிந்த மொழி.

(பொ-ரைஅறுவகை மதத்தாரும் ஒருபொருளின் இயல்பை இன்னதென்று ஒருமதத்தார் கூறின்அதைமறுத்து வேறாகக் காட்டுவர் ஏனை மதத்தாரெல்லாரும் , ஆனால் திருவள்ளுவர் தம் முப்பாலிற் சொன்னவற்றையோ உண்மையென்று எல்லாரும் ஒத்துக்கொள்வர்.

சீத்தலைச்சாத்தனார்.

10.மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு

மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந்

தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ

பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்.

(பொ-ரைதிருவள்ளுவரின் முப்பால் , மலை , நாடு ஆறு நகர் , முரசுகொடி , குதிரைதமிழ் ஆகியவற்றை மும்மூன்றாகக் கொண்ட மூவேந்தரின் முடிமாலை போல்வதாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை (thiruvalluva malai) எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும்திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு.

திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள்இடைக்காடர்ஔவையார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

காலம்

இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் சார்த்தப்பட்டவை. இந்தத் தொகுப்புநூல் உருவான காலம் கி. பி. 11 ஆம் நூற்றாண்டு.

சான்றுகள்

சங்கப் புலவர்களும் சம காலத்தவர் அல்லர்.

இதில் உள்ள புலவர் பாரதம் பாடிய பெருந்தேவனார், 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

புலவர் எண்ணிக்கையில் குழப்பம்.

ஒருவர் பாடிப் பிறர்மேல் சாற்றிய நூல்கள் (திருமூலர் ஞானம், திருவள்ளுவர் ஞானம்)

பிற்காலப் புகழாரம்

இவை தவிர்த்துக் கல்லாடனார்சிவப்பிரகாசர்பாரதியார்பேராசிரியர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார்கவிமணிபாரதிதாசன் போன்ற இடைக்கால மற்றும் பிற்காலப் புலவர்களும் திருக்குறளைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றி உள்ளனர். அவை திருவள்ளுவ மாலையில் இடம் பெறாது.

தொடுத்தது யார்?

அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொனபதின்மரும் பாடிய பாடல்களுமாகக்கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக அறியப்படுவது வள்ளுவமாலை. இவ்வாறாக விண்ணிலிருந்து வந்த ஒலியாகவும் உடல்கொண்டோராலும் பாடப்பட்ட பாடல்களுடன் மேலும் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.

வள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் அன்றி வேறு ஒன்றுமில்லை. அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொபதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை. வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணமமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே குறளைப் பற்றிச் சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே வள்ளுவமாலை என்பது பொருந்தாதாகிறது.

இந்நூல் அனைத்தும் ஒரே புலவரால் பாடி இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும் ஆராய்ச்சி அறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்தப் பாராட்டு மாலை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. வள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் எனவும் கொள்ள முடிகிறது.
சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே வள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. வள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பதற்கான காரணம் வலுப்படும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை தாக்கங்கள்

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நுல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர்திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஓரு தொடக்கம் உண்டானது எனலாம்இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர்.

வள்ளுவமாலை திருக்குறளின் நயத்தையும் சிறப்பையும் ஆராய்ந்துரைக்கும் திறனாய்வு மாலையாக விளங்குகிறதுஇதிலுள்ள ஒவ்வொரு பாடலும் குறளை அணுகிய முறை வெவ்வேறாக உள்ளதுஇப்பாடல்கள் வள்ளுவரை,

தெய்வ வாக்கு கொண்டவர் என்று வாழ்த்தும்;

குறள் மறைநூலுக்கு மேலானதுஇணையானது எனவும்

வடமொழியின் சிறப்பிற்கு மறைநூல்தமிழ்மொழியின் பெருமைக்குக் குறள்,

முப்பாலில் நாற்பால் மொழியப்பட்டது எனவும் ஒப்பாய்வு செய்யும்பால்இயல்அதிகாரத் தொகுப்பு இவற்றைக் கூறி குறளின் சொற்பொருள்யாப்பின் அமைப்பு ஆகியவற்றின் சிறப்புபற்றிப் பேசும்உள்ளத்து இருளை நீக்கும் வாழ்வியல் நூல் என்றும் இருவினை நீக்கும் மாமருந்தாகிய ஆன்மநூல் இது என்றும் போற்றும்இவ்வாறு பல்வேறு நிலைகளில் திருக்குறளின் பாடுபொருளும் பாடுமுறையும் ஆராயப்பட்டுள்ளன.

வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல்குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலேதிருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது.

வடமொழிநூல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பேசுதல் ஒவ்வாது என்பதனை வலியுறுத்தும் போக்கு அக்காலச் சூழலிலேயே தோன்றியமையும்திருக்குறள் தமிழில் எழுந்த மூலநூல் என்பதனை வள்ளுவமாலை மூலமும் நிறுவப் பெற்றமையையும் காணலாம்.

வள்ளுவமாலை எழுந்த காலத்தில் மாந்தர் பெரிதாக மதித்து வந்ததாகக் கருதப்படும் வைதீக நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டுப் பாராட்டிக் கூறியதன் நோக்கம் தமிழின் ஆற்றலை மற்றவரும் உணர வேண்டும் என்பதே என்று ஒரு கருத்து உள்ளதுஆனால் காலப்போக்கில் இந்த ஒப்பீடே பிறழ உணரப்பட்டுப் பின்னையோர் திருக்குறள் கருத்துகள் வடநூற் கருத்துக்களின் பிழிவாகக் கருதத் தொடங்கி விட்டனர்பின்வந்த உரையாசிரியர்களின் வெவ்வேறு அணுகுமுறைக்கு மாலைப்பாடல்கள் அடித்தளமாக அமைந்து விட்டன என்பதும் தெளிவாகும் என்பர் ஆய்வாளர்கள்.

வள்ளுவமாலை தரும் பாராட்டுரைகளே வள்ளுவத்திற்கு வேறுபொருள் காணத்தூண்டியிருக்கலாம்அல்லது குறள் தோன்றிய காலத்திலிருந்து பின்னர் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கருத்துகள் அதில் ஏற்றியுரைக்கப்பட்ட பின் அக்கருத்துரைகளே வள்ளுவமாலை தரும் கருத்துரைகளாக மாறின எனவும் கொள்ளலாம்.

எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும்உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை.

வள்ளுவம் பெற்ற திரிபிற்கு வள்ளுவமாலையும் அடிப்படை என்னும் நிலையில் பல காரணங்களைக் காட்டுவார் கு  ஆனந்தன்திருக்குறளின் உண்மைப் பொருளையும் உள்ளுறை நோக்கையும் அமைப்பையும் மூலத்திலிருந்து மாற்றியமைத்து வேறுவிளக்கம் தரும் பல பாட்டுகள் வள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ளன;

தொன்மை நூலாகிய தொல்காப்பியம்சங்க நூல்கள்திருக்குறள் முதலியவற்றில் வீடு’ பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை;

அறம்,

பொருள்,

காமம்

என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றனஆனால் வள்ளுவமாலையின் பல பாடல்களில் (7,8,20,22,33,38,40,50) திருக்குறளில் இல்லாத நாற்பால் வலியுறுத்திச் சொல்லப்பட்டுத் திருக்குறளின் ஆராய்ச்சிப் போக்கை அல்லது திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் இவர்.

அடுத்து வள்ளுவமாலை திருக்குறளுக்குத் தரும் இன்னொரு மதிப்பீட்டுரை வேதப்பொருளும் குறட்பொருளும் ஒன்றேயாம் என்பது.

இது தவறான ஒப்பீடுஏனென்றால் வேதங்கள் இயற்கை சக்திகளையும் தெய்வங்களையும்யாகம்-சடங்குகள் செய்யும் முறைகளையும் விளக்குபவை;

குறள் போல வாழ்வியல் நெறிகாதல் நெறிகளை விளக்குவன அல்லமேலும் குறளை இராமாயணம் போன்ற காப்பியங்களோடு ஒப்பிட்டதும் பொருத்தம் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

அசரீரி
திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு
உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க
உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்
ஒருக்கஓ என்றதுஓர் சொல்
நாமகள்
நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு
இறையனார்
என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்
உக்கிரப் பெருவழுதியார்
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி
கபிலர்
தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி
பரணர்
மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து
நக்கீரர்
தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் – ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று
மாமூலனார்
அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்
கல்லாடர்
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி
சீத்தலைச் சாத்தனார்
மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்
மருத்துவன் தாமோதரனார்
சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் – காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு
நாகன் தேவனார்
தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
வேளாது ஒழிதல் வியப்பன்று – வாளாதாம்
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்
முப்பால் மொழிமூழ்கு வார்
அரிசில்கிழார்
பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் – சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்
பொன்முடியார்
கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப – நூல்முறையான்
வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்
கோதமனார்
ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று
நத்தத்தனார்
ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் – போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்
முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா வலரினும் இல்
ஆசிரியர் நல்லந்துவனார்
சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்
கீரந்தையார்
தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் – எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
தெய்வத் திருவள் ளுவர்
சிறுமேதாவியார்
வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் – கூடுபொருள்
எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை
நல்கூர் வேள்வியார்
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப – இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு
தொடித்தலை விழுத்தண்டினார்
அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்து – பெறல்அறிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள்
வெள்ளி வீதியார்
செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்
மாங்குடி மருதனார்
ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு
எறிச்சலூர் மலாடனார்
பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றுஊழாக – ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து
போத்தியார்
அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் – இருவியல்
திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை
மோசிகீரனார்
ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால்ஓர் ஆறாக – மாண்பாய
காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தாமரை மேல் அயன்
மதுரைத் தமிழ்நாகனார்
எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்
பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை
பாரதம் பாடிய பெருந்தேவனார்
எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப்
பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்
உருத்திர சன்மகண்ணர்
மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் – பிணக்குஇலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு
பெருஞ்சித்திரனார்
ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன
நரிவெரூஉத் தலையார்
இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் – மன்பதைகட்கு
உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
கொள்ள மொழிந்தார் குறள்
மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்
புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச்செப்பல் – நிலவு
பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள் மாலைக்கும் பெயர்
மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்
இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ – அன்பொழியாது
உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து
கவிசாகரப் பெருந்தேவனார்
பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா
மதுரைப்பெருமருதனார்
அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
திறம்இருபத் தைந்தால் தெளிய – முறைமையால்
வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதஅழக் கற்றது உலகு
கோவூர்க் கிழார்
அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் – குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
முன்னை முதுவோர் மொழி
உறையூர் முதுகூற்றனார்
தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் – நாவிற்கு
உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயலில்லை என்னும் திரு
இழிகண் பெருங்கண்ணனார்
இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியின் தெளிவுபெற – மும்மையின்
வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினர் இன்குறள்வெண் பா
செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்
ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
யாவரும் வல்லார் எடுத்தியம்பத் – தேவர்
திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
பொருவில் ஒழுக்கம் பூண்டார்
செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்
வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு
வண்ணக்கஞ் சாத்தனார்
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து
களத்தூர்க் கிழார்
ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தர்மம் முதல்நான்கும் சாலும் – அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்
நச்சுமனார்
எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பு அணிவண்ணம் – இழுக்கின்றி
என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றிவர் இன்குறள்வெண் பா
அக்காரக்கனி நச்சுமனார்
கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பும் நீர்மைய தேனும் – தொலைவுஇலா
வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பால்நூல் நயத்தின் பயன்
நப்பாலத்தனார்
அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு – குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு
குலபதி நயனார்
உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் – வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு
தேனிக்குடிக் கீரனார்
பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
மெயப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து
கொடிஞாழல் மாணிபூதனார்
அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் – மறன்எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு
கவுணியனார்
சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து – முந்திய
நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா
மதுரைப் பாலாசிரியனார்
வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
பொள்என நீக்கும் புறஇருளை – தெள்ளிய
வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்இருள் நீக்கும் ஒளி
ஆலங்குடி வங்கனார்
வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் – தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து
இடைக்காடர்
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
ஔவையார்
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
(திருவள்ளுவமாலை நிறைவு)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard