Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் நுழைவாயில்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
திருக்குறள் நுழைவாயில்
Permalink  
 


 திருக்குறள் நுழைவாயில்

திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல் சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவின் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்

திருக்குறளும் கடவுள் நம்பிக்கையும்

ஆதி பகவன் முதற்றே உலகு; இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்ட இறைவனிடம் இருந்து தொடங்குகிறது என்று வள்ளுவர் ஆரம்பிக்கிறார். அதற்கு உவமையாக அகரமுதல, அகரத்தை எழுதி தொடங்கி அறிவு உலகத்தில் நுழைகிறான் அதுபோல இந்த உலகம் கல்வி கற்பதின் உச்சம் என்பதை கற்றதனால் ஆயபயன் இறைவன் திருவடிகளை தொழுவதற்கு என்கிறார்.

கடவுள் வணக்கத்தின் ஆல் என்ன பயன் என்று இந்த அதிகாரம் முழுமையாக கூறுகையில் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் பிறவி பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியை பற்றினால் என்று முடிக்கிறார் இந்த அதிகாரம் முழுக்க இறைவனை ஒருமையில் கூறுவதால் இது பிரம்மம் - இறைமை - பரம்பொருளைக் குறிக்கிறது என்பது மரபு தமிழர் மரபு ஆகும்

திருக்குறளும் தமிழர் மெய்யியல் மரபும்

திருவள்ளுவர் கல்வி அதிகாரத்தில் கற்க என்றவுடனேயே கசடற கற்க பின் அந்த கற்ற கல்வி மெய்மையில் நிற்க வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறுவார்.

திருவள்ளுவர் கல்வி-அறிவு முன்னேற்றத்தை முழுமையாக வலியுறுத்துவார் இந்த அறிவின் பயன்பாடு என்ன என்பதை

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு என்பார்



-- Edited by admin on Tuesday 26th of October 2021 06:14:18 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

கல்வி கற்பதன் பயன் இறைவனின் திருவடியைப் பற்ற என்று கூறியது மட்டுமின்றி அந்த அதிகாரம் முழுவதுமாக இறைவன் திருவடி பற்றுதல் என்பதை வள்ளுவர் தெளிவாக எடுத்துக் காட்டி இருப்பார்.

இதற்கு அடுத்த அதிகாரத்தில் அவர் சிறப்புடன் பூஜை என்னும் பொழுது இறைவனை உருவ வழிபாடாக பூஜை செல்வதை போற்றி வலியுறுத்துகிறார்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். 720
வள்ளுவர் அவையறிதல் அதிகாரத்தில் கூறியுள்ள அங்கணத்துள் அமிர்தம் என்ற என்ற உவமையில் இறைவன் திருமேனி அபிஷேக நீரை முற்றத்தில் வீண் செய்வது என கோவில் அபிஷேக வழிபாட்டை கூறுகிறது என அறிஞர்கள் கூறுகின்றனர்



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

திருக்குறள் தமிழில் எழுந்த மெய்யியல் வாழ்வியல் வழிகாட்டி நூல். இன்று இலக்கிய/ அரசியல் மேடைகளில் குறல் பெயர் கூறாப்பட்டு- ஓரீரு குறட்பாக்களின் பாதி மட்டும் கூறி வள்ளுவரின் உள்ளத்திற்கு மாறானவற்றை பரப்புவது தொடர்கிறது.

திருக்குறள்போற்றும்இறைநம்பிக்கை

"ஆதி பகவன் முதற்றே உலகு" என இந்த உலகம் பரம்பொருளினால் படைக்கப் பட்டு அவரிடம் இருந்து தொடங்குகிறது, அதை விளக்க-'அகர முதல் எழுத்து எல்லாம்' என அதாவது நாம் கல்வி கற்கும் முதல் படி அ'கரம் எழுதித் தொடங்கி- நாம் கற்கும் அனைத்தையும் (எழுத்து எல்லாம்) கற்கிறோம். நாம் உலகில் எங்கு இருந்தாலும் அந்தக் கல்வி நம்மோடு இருப்பது போல இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளார் எனும் கருத்தை இந்தை குறளில் கூறி உள்ளார்.

கல்வி கற்பதன் இறுதிப் பயனே அந்த உலகைப் படைத்த அனைத்து அறிவுற்கும் ஆனவன் திருவடிகளைத் தொழுவதற்கே என மேலும் உறுதி செய்வார்.

தமிழக மரபில் திருக்குறள்

இடைக்கால ஔவையார் பாடல்

தேவர் குறளும், திருநான்மறை முடிவும்

மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை

திருவாசகமும், திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர் -                 ஔவையார் நல்வழி

 

விளக்கம்:திருக்குறள், ரிக், யஜுர், சாம, அதர்வண எனௌம் நான்கு வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப் புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன

 திருவள்ளுவர் சமயம் என நவீன ஊக ஆய்வு மோசடிகள்:

இந்தியாவை அடிமை செய்து ஆக்கிரமித்த கிறிஸ்துவ மிஷநரிகள் தங்கள் மதமாற்ற நச்சுத் தனம் செய்ய திருக்குறளைக் கற்று ஒரு சில குறட்பாக்களைப் பரப்பி- திருக்குறளை சமணம் என ஒரு கும்பலையும், பௌத்தம் என ஒரு கும்பலையும் வளர உதவினர். இதன் இடையே திருக்குறளின் கிறிஸ்துவக் கருத்துக்களே உள்ளதாகப் பரப்பினர்.

காலனி ஆதிக்க மதமாற்ற நச்சுக் கருத்து அடிமையகளாக எழுந்த தமிழர் மெய்யியல் மரபை ஏற்காத நவீன திராவிடியார் புலவர்கள் பொது நூல் எனவும், வள்ளுவத்தின் அடிப்படைக்கு மாறாகப் பரப்பினர்.

வட இந்தியாவின் சமணர் மகாவீரருடன் இருந்து பிரிந்து தீவீர துறவு மதமான ஆஜிவகத்தோடும் திருக்குறளைத் தொடர்பு படுத்திய ஊக ஆய்வுகள் மற்றும் போலிப் பரப்பல்கள் நூல்கள் எழுதப்பட்டன.

திருக்குறள் கிறிஸ்துவமே மோசடி ஓலைச் சுவடி தயாரிப்பு திட்டம்

கிறிஸ்துவ கத்தோலிக்க ஆர்ச் பிஷப் அருளப்பா- தேவநேயப் பாவாணார் மற்றும் பிற சர்ச் சேர்ந்து அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி உதவியோடு திருக்குறள் கிறிஸ்துவமே எனப் பரப்பியும், மோசடியாக கிறிஸ்துவ வழி உரையோடான மோசடி ஓலைச் சுவடி தயாரிப்பும் செய்தது; கடைசியில் உயர்நீதிமன்ற வழக்கு என முடிந்தது. ஆயினும் தென் இந்தியப் பல்கலைக் கழகங்களில் ஒப்பிலக்கியம் என 1983ல் தொடங்கி 20க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் திருக்குறளையும் பைபிளையும் தொடர்பு படுத்து பெற்றும் உள்ளனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல் சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக் காலத்தில் குறள் வெண்பாவில் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை ஆராய்ச்சி செய்யும் பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் மொழியியல் அறிஞர்கள்படி திருக்குறள் இயற்றப்பட்ட ஒரு நூறு ஆண்டுக்குள் எழுந்தது தான் சமணர் இயற்றிய மணக்குடவர் உரை.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. குறள் 735: நாடு
பல குழுக்களாகப் (சாதி, இனம், அன்னிய சமய, அரசியல்,)பிரித்து பல்வேறு குழுக்கள், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.


திருக்குறளும்கடவுள்நம்பிக்கையும்

ஆதி பகவன் முதற்றே உலகு; இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட இறைவனிடம் இருந்து தொடங்குகிறது என்று வள்ளுவர் ஆரம்பிக்கிறார். அதற்கு உவமையாக அகரமுதல, அகரத்தை எழுதி தொடங்கி அறிவு உலகத்தில் நுழைகிறான் அதுபோல இந்த உலகம் கல்வி கற்பதின் உச்சம் என்பதை கற்றதனால் ஆயபயன் இறைவன் திருவடிகளை தொழுவதற்கு என்கிறார்.

கடவுள் வணக்கத்தின் ஆல் என்ன பயன் என்று இந்த அதிகாரம் முழுமையாக கூறுகையில் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் பிறவி பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியை பற்றினால் மட்டுமே முடியும் என்று முடிக்கிறார். இந்த அதிகாரம் முழுக்க இறைவனை ஒருமையில் கூறுவதால் இது பிரம்மம் - இறைமை - பரம்பொருளைக் குறிக்கிறது என்பது மரபு தமிழர் மரபு ஆகும்.

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவன் திருவடி பற்றுதல் என்பதை பல குறட்பாக்களில் வலியுறுத்திய வள்ளுவர் திருவடியை பற்றினால்  இதற்கு அடுத்த அதிகாரத்தில் அவர் சிறப்புடன் பூஜை என்னும் பொழுது இறைவனை உருவ வழிபாடாக பூஜை செல்வதை போற்றி வலியுறுத்துகிறார்.

கல்வி கற்பதன் பயன் இறைவனின் திருவடியைப் பற்ற என்று கூறியது மட்டுமின்றி அந்த அதிகாரம் முழுவதுமாக இறைவன் திருவடி பற்றுதல் என்பதை வள்ளுவர் தெளிவாக எடுத்துக் காட்டி இருப்பார்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்

அல்லார்முன் கோட்டி கொளல்.  720

வள்ளுவர் அவையறிதல் அதிகாரத்தில் கூறியுள்ள அங்கணத்துள் அமிர்தம் என்ற என்ற உவமையில் இறைவன் திருமேனி அபிஷேக நீரை முற்றத்தில் வீண் செய்வது என கோவில் அபிஷேக வழிபாட்டை கூறுகிறது என அறிஞர்கள் கூறுகின்றனர்

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 திருக்குறளும்தமிழர்மெய்யியல்மரபும்


திருவள்ளுவர் கல்வி அதிகாரத்தில் கற்க என்றவுடனேயே கசடற கற்க பின் அந்த கற்ற கல்வி மெய்மையில் நிற்க வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறுவார்.

திருவள்ளுவர் கல்வி-அறிவு முன்னேற்றத்தை முழுமையாக வலியுறுத்துவார் இந்த அறிவின் பயன்பாடு என்ன என்பதை
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு குறள் 358:மெய்யுணர்தல்என்பார்
மணக்குடவர் உரைபிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்பிறவாமை சிறந்ததாதலின்சிறப்பு என்னப்பட்டதுதான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

 

திருவள்ளுவரும்வர்ணமும்ஜாதியும்

தனி மனித வாழ்வில் நட்பு மிக முக்கியம்நண்பரைஎப்படிதேர்ந்தெடுக்க வேண்டும்
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.   குறள் 793: நட்பாராய்தல்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்புகுறள் 794: நட்பாராய்தல்

அரசர் தன்  நிர்வாகப் பணிக்காய்தூதராய் சரியானவரை தேர்ந்தெடுக்க வள்ளுவர் கூறும் அறிவுரை

குடிப்பிறந்துகுற்றத்தின்நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.          தெரிந்துதெளிதல்  குறள் 502:

அன்புடைமை ஆன்றகுடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்புகுறள் 681: தூது




__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் அல்லது நற்செயல் என்பது அவரவர் தொழிலுக்கு ஏற்ப மாறுபடும் உதாரணமாக அரசாங்கம் மற்றும் நாடு பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமான அறம் என வள்ளுவர் காட்டுவதை பார்ப்போம்
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்குறள் 550: செங்கோன்மை
மு. உரை:கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்குறள் 528: சுற்றந்தழால்
மு.வரதராசனார் உரைஅரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல்அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால்அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்குறள் 582: ஒற்றாடல்
மு.வரதராசனார் உரைஎல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டுவிரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரைபகைவர்நண்பர்பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும்எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்துகுறள் 776:படைச்செருக்கு
சாலமன் பாப்பையா உரை:
ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்துஅவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்துகுறள் 780: படைச்செருக்கு
முகருணாநிதி உரை:தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால்அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்குறள் 880: பகைத்திறந்தெரிதல்
சாலமன் பாப்பையா உரைநம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர்மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.

மணக்குடவர் உரை படியாக நாம் திருக்குறளை தமிழ் மரபில் பார்த்தால் அது இந்திய தத்துவ ஞான மரபில் வைதீக சனாதன மதம் அல்லது வைதீகத்தை சார்ந்த மதம் என்றும் திருவள்ளுவர் வேதங்களை மிக உயர்வாக போற்றினார் என்பதும் தமிழ் அறிஞர்கள் ஏற்கும் கூற்று.
திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து கூறுவது உலகை படைத்த பரம்பொருள் எனும் பிரம்மத்தை தான் என்று மணக்குடவர் மிகத்தெளிவாக காட்டுவது சமண மதத்திற்கு பொருந்தாது



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 

திருக்குறள்நுழைவாயில்

திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அடிமை செய்த ஆங்கிலேய கிறிஸ்தவர்களும் திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும்.

 

சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக் காலத்தில் குறள் வெண்பாவில் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள உவமைகள், மொழிநடை, சொல்லாட்சி போன்றவை தமிழ் மீது காதல் உள்ள அனைவரையும் ஈர்க்கும்.

திருவள்ளுவர் மிகவும் ஆழமான கருத்துக்களை எளிமையாக அனைவரும் புரியும் வழியில் எடுத்துக்காட்டியுள்ளார்.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.  குறள் 339: நிலையாமை

திருவள்ளுவர் நாம் தூங்க செல்வது போன்று தான் நம் இறப்பு மீண்டும் தூங்கியபின் எழுவது போல தான் பிறப்பு என்கிறார்; நாம் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறோம்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து

இந்தப் பிறவிப் பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே முடியும் என தெளிவாக கூறுகிறார்

 

திருவள்ளுவர் ஒரு முழுமையான தேசியவாதி

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லத நாடு.   குறள் 735: நாடு

பலவகையிலும் மொழி, இனம், மதம் & சாதி போன்ற முரண்பாடுகளால் பிரித்து பகை வளர்க்கும் கூட்டங்கள் இல்லாதபடி, உடனிருந்தே மக்கள் ஒற்றுமைக்கு எதிரான பகைவர்களும்; எல்லாம் மக்கள் விரோத கொலைகார கும்பல்களும் இல்லாததே நாடு என்கிறார்.

இந்தியா என்ற பெரிய நாட்டை அடிமைப்படுத்தி பிரித்தாள இனப்பிரிவு என்பதாக ஆரிய திராவிடம் மொழிக் குடும்பம் என்ற பெயரில் இனம் என்ற ஒரு ஊகத்தை உருவாக்கி பரப்பினர். வேதங்களில் இனப் பிரிவுகள் ஊகத்தை இருப்பதாக பரப்பினர். ஆனால் இவையெல்லாம் மிகத் தெளிவாக இன்று பன்னாட்டு பல்கலைக்கழக அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டன

 கிறிஸ்தவ மிஷனரி இந்தியர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் எழுப்பிய ஆரிய-திராவிட கோட்பாடு எழுந்த நிலையில் மொகஞ்சதாரோ ஹரப்பாவில் கிடைத்தவற்றை சிந்து வெளி தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல் அவர்கள் கூறுவதை பார்ப்போம்

“The [Harappan] religion is so characteristically Indian as hardly to be distinguished from still living Hinduism.... One thing that stands out both at Mohenjo-daro and Harappa is that the civilization hitherto revealed at these two places is not an incipient civilization, but one already age-old and stereotyped on Indian soil, with many millennia of human endeavour behind it...” John Marshall, Mohenjo-daro and the Indus Civilization (London, 1931, 3 vols.), vol. I, p. vi-viii.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

திருவள்ளுவர்ஒருமுழுமையானஆத்திகர்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.           குறள் 2: கடவுள் வாழ்த்து

கற்பதன் முழு பயனே இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்வதற்கே என வலியுறுத்துகிறார்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.  குறள் 9: கடவுள் வாழ்த்து

இறைவன் திருவடியை தன் தலையால் வணங்காதவர் தலையில் உள்ள ஐம்பொறிகளால் பயனில்லை என்றும் திருவள்ளுவர் மிகத் தெளிவாக கூறுகிறார்

 

வள்ளுவர் பார்வையில் மனிதனின் கல்வியும் அறிவும் எதற்கு

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு  : குறள் 358: மெய்யுணர்தல்

அறியாமையாகிய மீண்டும் மீண்டும் பிறப்பதில் இருந்து வீடுபேறு அடையும் வழியை தேடுவதற்கே அறிவு ஆகும்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்புகுறள் 351: மெய்யுணர்தல்

வாழ்வின் அடிப்படையான மெய்ப்பொருளை நாடாது மற்றவர்கள் மற்றவற்றை முக்கியம் என வாழ்வதால் தான் துன்பம் உள்ள பிறவிகள் உண்டாகிறது


கற்றீண்டுமெய்ப்பொருள்கண்டார்தலைப்படுவர்
        
மற்றீண்டுவாராநெறி.  356.                       மெய்யுணர்தல்

முறையான நூல்களைக் கற்று  மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard