வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: கிறிஸ்தவ பெண் பாதிரி Rev.மரியா சிஸ்டர் மீது பிஷப்.காட்ப்ரே நோபில் (அருவருப்பாய் பேசும் புரோக்கர் பாதிரி மோகன் சி லாச்ரஸ் நெருங்கிய உறவினர்) போலீசில் புகார் https://www.youtube.com/watch?v=QjgHheGZOyo
https://www.dinamalar.com/news_detail.asp?id=3033683 திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேராயர்.காட்ப்ரே வாஷிங்டன் நோபில்; இவர், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகார்:சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மரியா சிஸ்டர் என்பவர், என் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். 'நீங்களும் பேராயர், நானும் மத போதகர். உங்கள் மூத்த மகனுக்கு, கிரீஸ் நாட்டில், மெடிட்டேரியன் ஷிப்பிங் கம்பெனியில் வேலை வாங்கி தருகிறேன்' என, கூறினார்.
அங்கு, மே 2க்குள் வேலையில் சேர வேண்டும் எனக் கூறி, வங்கி கணக்கு வாயிலாகவும், பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்தும், 8.50 லட்சம் ரூபாய் வாங்கினார். 'விசா' வந்தபாடில்லை. இதனால், இவர் தெரிவித்த கம்பெனியின் இணையதள பக்கத்தை பார்த்தேன். அதில், 'வேலை வாங்கித் தருவதாக, எங்கள் கம்பெனியின் பெயரைச் சொல்லி யாரும் பணம் கேட்டால் தர வேண்டாம்' என, எச்சரிக்கப்பட்டு இருந்தது.
பின், அந்த கம்பெனி நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, மரியா சிஸ்டர் எங்களிடம் வழங்கிய பணியாணை போலி என தெரியவந்தது. பணத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீசார் விசாரித்தனர். அப்போது, 'மரியா சிஸ்டர் என்பவரின் பெயர் மரியா செல்வம், 42. இவர், இலங்கையைச் சேர்ந்தவர். மத போதகராக செயல்பட்டு, 'சர்ச்'சுகளுக்கு வருவோருக்கு, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்வதையே தொழிலாக செய்து வந்தார்' என்பது தெரிய வந்தது. இவர் மீது மோசடி உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
புகாருக்கு உள்ளான மரியாசெல்வத்தால், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் ரூ.18.5 லட்சம் இழந்ததாகவும், இதனால் அவர் அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 2019-ம் ஆண்டு தீக்குளித்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.