விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வல்லம் பகுதியில் இளமங்கலம் கிராமத்தில் சுமார் 30 அடி உயரமுள்ள பாறையின்மீது சமீபத்தில் கட்டப்பட்டுள்ள பிள்ளையார் கோயில் ஒன்று இருக்கிறது. அதனை அவ்வூர் மக்கள் `உச்சிப்பிள்ளையார் கோயில்' என்றே அழைக்கின்றனர். அந்தக் கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டின் அருகே சுமார் 10 அடி உயரமுள்ள சதுரமான பலகைக் கல்லில் சக்கரத்துடன் கூடிய 11 வரியில் கல்வெட்டு
கல்வெட்டு:
'ஸ்ரீகோவிசைய' என்று தொடங்கும் அந்த கல்வெட்டு, இரண்டாம் நந்திவர்மனின் 14வது ஆட்சியாண்டை சேர்ந்த கல்வெட்டாகும்.
அதாவது கி.பி. 745 -ம் வருடம், 'சிங்கபுரி நாட்டு கீழ்வழி இளமங்கலத்தில் உள்ள திருவடிகளுக்கு கற்றளி எடுப்பித்து, அத்தளிக்கு நந்தவனம் செய்து தந்ததாக' கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை 'அருவாரையர் காடடிகன் மகன் கல்லறையோன்' என்பவர் செய்ததாகவும், 'இந்த தருமத்தைக் காப்பவர்களின் பாதத்தைதத் தன் முடிமேல் வைத்துத் தாங்குவேன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாகக் கோயிலுக்கு தானம் கொடுத்தால், அக்கோயில் உள்ள இறைவனின் பெயரை குறிப்பிட்டுக் கல்வெட்டில் சொல்வார்கள். ஆனால், இக்கல்வெட்டில் பயின்று வரும் 'திருவடிகள்' என்ற வார்த்தையும் அத்திருவடிக்குக் கற்கோவில் எடுப்பித்த செய்தியும், எந்த சமயம் என்று நேரடி தகவலைத் தரவில்லை. பாதங்களை வணங்கும் வழக்கம் சமணம், பௌத்தம் மற்றும் வைணவம் ஆகிய 3 சமயங்களிலும் இருக்கிறது.
இவ்வூரில், 1987 - ம் வருடத்தில் கட்டிய 'பஜனை கோயில்' என்ற பெருமாள் கோயிலைத் தவிர வேறு வைணவம் சார்ந்த தரவுகள் சுற்று வட்டாரத்தில் இல்லை. அதனால், வைணவமாகக் கருதுவதற்கு வாய்ப்பில்லை. அதேபோல் சமணத்தில் பாத வழிபாடுகள் இருந்த போதிலும் இவ்வூரில் உள்ள 'அனந்தநாதர் கோயில்' மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்ததே. அவ்வூருக்கு 1976 - ம் வருடம் வருகைபுரிந்த ஹரிராஜ் முனிகள் நினைவாகப் பாதம் வைத்து வழிபடுகின்றனர். எனவே சமணமாகக் கருதும் வாய்ப்பு குறைவு தான். அதேபோல, இவ்வூரின் ஏரிக்கரையில் சுமார் 5 அடி உயரம் கொண்ட பிரமாண்ட 'பிரம்ம சாஸ்தா சிற்பம்' மற்றும் சிவ லிங்கத்தின் ஆவுடை சிதைந்து காணப்படுகிறது. இதன் காலம் 9 - ம் நூற்றாண்டாகக் கருதலாம். இதன் மூலம் இவ்வூரில் ஒரு பிரமாண்ட சிவன் கோயில் இருந்து அழிந்துள்ளதை அறிய முடிகிறது. அதே வேளையில், சைவ சமயத்தில் சக்கரம் மற்றும் திருவடிகளை வணங்கும் வழக்கம் இல்லையாதலால் சைவமாகக் கருதவும் இயலாது.
கிடைத்த பெரும்பான்மையான தரவுகள் பௌத்த சமயம் சார்ந்இளமங்கலம் பௌத்த சமய பலகைக் கல்வெட்டு
-----------------------------------------

கிடைத்த பெரும்பான்மையான தரவுகள் பௌத்த சமயம் சார்ந்ததாகவே உள்ளது. இக்கல்வெட்டின் மேல் பகுதியில் காட்டப்பட்டுள்ள சக்கரம், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் இருக்கும் புத்த ஸ்தூபியில் உள்ள தர்மச்சக்கரத்தை ஒத்துள்ளதோடு, இதே போன்ற சக்கர ஸ்தூபி இவ்வூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள தேசூரிலும், சென்னை அருகே உள்ள திருவிற்கோலத்தில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. பௌத்த சமயத்தில் புத்தரின் பாதத்தை வணங்கும் முறை பரவலாகக் காணப்படுகிறது. மேலும் இவ்வூருக்கு மிக அருகாமையில் பள்ளிகுளம், இந்திரசன்குப்பம் என்ற பௌத்த சொல்லாடல் உடைய ஊர்ப்பெயர்கள் உள்ளது.
பல்லவர்கள் காலத்தில் குறிப்பாக 7 மற்றும் 8 - ம் நூற்றாண்டில் காஞ்சியிலும், நாகையிலும் பௌத்த சமயம் சிறப்புற்று விளங்கிய ஏராளமான சான்றுகள் உள்ளன. குறிப்பாகச் சீனப் பயணி 'யுவான் சுவாங்' காஞ்சிபுரம் பகுதியிலிருந்த பௌத்த விகார்களைப் பற்றித் தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். பௌத்தர்கள், வணிக தொடர்புடையவர்கள். காஞ்சிபுரத்தில் இருந்து சோழ நாட்டுக்குச் செல்லும் ராஜபாட்டை அமைந்த பகுதிகளில் ஆங்காங்கே பௌத்தத் தடையங்கள் உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இவ்வூரும் அந்த ராஜபாட்டையை ஒட்டிபடி அமைந்த ஊராகும். இங்கே கிடைத்த தரவுகளை வைத்துப் பார்க்கையில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த தானத்தை பௌத்த கோயிலுக்குத் தந்த தானமாகவே கருதலாம்.
இதன் மூலம் இரண்டாம் நந்திவர்மன் காலம் வரையிலும் பௌத்த சமயம் சிறப்புற்று விளங்கி இருந்துள்ளதை அறியமுடிகிறது. மேலும், தமிழ்நாட்டில் இதுவரை பௌத்தம் சார்ந்து புத்தர் சிலை, தர்மசக்கரம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்தக் கோயில் எழுப்பியதற்கான சான்றாக கண்டுபிக்கப்பட்டுள்ள முதல் கல்வெட்டு இதுவே ஆகும்.ததாகவே உள்ளது. இக்கல்வெட்டின் மேல் பகுதியில் காட்டப்பட்டுள்ள சக்கரம், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் இருக்கும் புத்த ஸ்தூபியில் உள்ள தர்மச்சக்கரத்தை ஒத்துள்ளதோடு, இதே போன்ற சக்கர ஸ்தூபி இவ்வூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள தேசூரிலும், சென்னை அருகே உள்ள திருவிற்கோலத்தில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. பௌத்த சமயத்தில் புத்தரின் பாதத்தை வணங்கும் முறை பரவலாகக் காணப்படுகிறது. மேலும் இவ்வூருக்கு மிக அருகாமையில் பள்ளிகுளம், இந்திரசன்குப்பம் என்ற பௌத்த சொல்லாடல் உடைய ஊர்ப்பெயர்கள் உள்ளது.
பல்லவர்கள் காலத்தில் குறிப்பாக 7 மற்றும் 8 - ம் நூற்றாண்டில் காஞ்சியிலும், நாகையிலும் பௌத்த சமயம் சிறப்புற்று விளங்கிய ஏராளமான சான்றுகள் உள்ளன. குறிப்பாகச் சீனப் பயணி 'யுவான் சுவாங்' காஞ்சிபுரம் பகுதியிலிருந்த பௌத்த விகார்களைப் பற்றித் தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். பௌத்தர்கள், வணிக தொடர்புடையவர்கள். காஞ்சிபுரத்தில் இருந்து சோழ நாட்டுக்குச் செல்லும் ராஜபாட்டை அமைந்த பகுதிகளில் ஆங்காங்கே பௌத்தத் தடையங்கள் உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இவ்வூரும் அந்த ராஜபாட்டையை ஒட்டிபடி அமைந்த ஊராகும். இங்கே கிடைத்த தரவுகளை வைத்துப் பார்க்கையில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த தானத்தை பௌத்த கோயிலுக்குத் தந்த தானமாகவே கருதலாம்.
இதன் மூலம் இரண்டாம் நந்திவர்மன் காலம் வரையிலும் பௌத்த சமயம் சிறப்புற்று விளங்கி இருந்துள்ளதை அறியமுடிகிறது. மேலும், தமிழ்நாட்டில் இதுவரை பௌத்தம் சார்ந்து புத்தர் சிலை, தர்மசக்கரம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்தக் கோயில் எழுப்பியதற்கான சான்றாக கண்டுபிக்கப்பட்டுள்ள முதல் கல்வெட்டு இதுவே ஆகும்.