பொயுமு187- இல் மௌர்ய பேரரசின் வலிமையற்ற வேந்தனான ப்ரஹத்ரதனைக் கொன்று விட்டு தளபதியாக இருந்த புஷ்யமித்ரன் அரசனான். இவனில் துவங்கிய சுங்க வம்சம் அந்தப் பேரரசை நூற்றுப்பத்து ஆண்டுகள் நடத்தியது. Sankara Narayanan G
கின்னரர்கள் இருபுறமும் மாலையேந்தி நிற்க நடுவே மரத்தடியில் சிவலிங்கமானது வீற்றிருக்கிறது. மற்றொரு கற்பலகையில் ஏகமுக லிங்கமானது வீற்றிருக்கிறது. இதுவும் மரத்தடித் திண்ணையில் வீற்றிருக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இவையிரண்டும் பொதுயுகத்திற்கு முன்பு லிங்க வழிபாடு எப்படியிருந்திருக்கும் என்பதற்கு அடையாளமாக அமைந்துள்ளன.
மரத்துக்குக் கீழே சிவலிங்கத்தை வைத்து வழங்கும் வழக்கம் மிகவும் பண்டைக் காலத்தைச் சேர்ந்தது. படத்தில் இடம் பெற்றிருப்பது சுங்கர் காலத்தைச் சேர்ந்தது. அதாவது இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையானது. இதில் மரத்தின் கீழ் சிவலிங்கமும் இருபுறமும் கந்தர்வர்கள் போற்றுவதும் அக்காலத்திய சிறிய சிவாலயத்தின் வடிவத்தை் காட்டுகிறது. மேலும் குப்தர் காலத்து முத்திரையொன்றில் சிவலிங்கத்துடன் "பாதபேச்வரர்" - மரத்தின் கீழ் இறைவர் என்றே குறிப்பிடப்பெற்றிருப்பது நோக்கற்பாலது. தமிழகத்திலும் பல்வேறு மரங்களோடான சிவாலயத் தொடர்பும் இதனோடு ஒப்பு நோக்கத்தக்கது. கச்சி, ஆனைக்கா என்று எல்லா இடங்களிலும் தல மரமாகக் கருதப்பெறும் மரங்களே ஒருகாலத்தில் எந்தையின் விதானமாக இருந்திருக்கும். படம் - இணையச்சுடுகை