Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுங்க வம்ச மரத்துக்குக் கீழே லிங்க வழிபாடு


Guru

Status: Offline
Posts: 7468
Date:
சுங்க வம்ச மரத்துக்குக் கீழே லிங்க வழிபாடு
Permalink  
 


சுங்க வம்ச மரத்துக்குக் கீழே லிங்க வழிபாடு

 

பொயுமு187- இல் மௌர்ய பேரரசின் வலிமையற்ற வேந்தனான ப்ரஹத்ரதனைக் கொன்று விட்டு தளபதியாக இருந்த புஷ்யமித்ரன் அரசனான். இவனில் துவங்கிய சுங்க வம்சம் அந்தப் பேரரசை நூற்றுப்பத்து ஆண்டுகள் நடத்தியது. Sankara Narayanan G

13900195_10153907460942499_9169759572824
மௌர்யர்கள் பரப்பியிருந்த பௌத்தத்தை நீக்கிய செயல் இவர்களுடையதே. புஷ்யமித்ரனின் மகனான அக்னிமித்ரனே காளிதாஸனால் தனது மாளவிகாக்னிமித்ரத்தில் கொண்டாடப்பெற்றவன். இவர்கள் காலத்தில் பலவிதமான வழிபாடு தொடர்பான கற்பலகைகள் கிடைக்கின்றன. மதுராவில் கிடைத்த இந்த இரண்டு கற்பலகைகளும் மிக இன்றியமையாதவை. ஒரு பலகையில் லிங்க வழிபாடு தெற்றென விளக்கப் பெற்றிருக்கிறது.

 

13882565_10153907460987499_2170384943359

கின்னரர்கள் இருபுறமும் மாலையேந்தி நிற்க நடுவே மரத்தடியில் சிவலிங்கமானது வீற்றிருக்கிறது. மற்றொரு கற்பலகையில் ஏகமுக லிங்கமானது வீற்றிருக்கிறது. இதுவும் மரத்தடித் திண்ணையில் வீற்றிருக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இவையிரண்டும் பொதுயுகத்திற்கு முன்பு லிங்க வழிபாடு எப்படியிருந்திருக்கும் என்பதற்கு அடையாளமாக அமைந்துள்ளன.

 

1920px-Katra_architrave,_Mathura_100_BCE
The Katra architrave, possibly representing Brahmins and the cult of the Shiva Linga, Mathura, circa 100 BCE

மரத்துக்குக் கீழே சிவலிங்கத்தை வைத்து வழங்கும் வழக்கம் மிகவும் பண்டைக் காலத்தைச் சேர்ந்ததுபடத்தில் இடம் பெற்றிருப்பது சுங்கர் காலத்தைச் சேர்ந்ததுஅதாவது இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையானதுஇதில் மரத்தின் கீழ் சிவலிங்கமும் இருபுறமும் கந்தர்வர்கள் போற்றுவதும் அக்காலத்திய சிறிய சிவாலயத்தின் வடிவத்தை் காட்டுகிறதுமேலும் குப்தர் காலத்து முத்திரையொன்றில் சிவலிங்கத்துடன் "பாதபேச்வரர்" - மரத்தின் கீழ் இறைவர் என்றே குறிப்பிடப்பெற்றிருப்பது நோக்கற்பாலதுதமிழகத்திலும் பல்வேறு மரங்களோடான சிவாலயத் தொடர்பும் இதனோடு ஒப்பு நோக்கத்தக்கதுகச்சிஆனைக்கா என்று எல்லா இடங்களிலும் தல மரமாகக் கருதப்பெறும் மரங்களே ஒருகாலத்தில் எந்தையின் விதானமாக இருந்திருக்கும். படம் - இணையச்சுடுகை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard