Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எலிபெண்டா தீவுகளின் மகோன்னதமான ஆடல்வல்லான்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
எலிபெண்டா தீவுகளின் மகோன்னதமான ஆடல்வல்லான்
Permalink  
 


எலிபெண்டா தீவுகளின் மகோன்னதமான ஆடல்வல்லான்

292975723_3030861403830075_4163202634978

 

இராஷ்டிரகூடரின் காலத்தைச் சார்ந்த மும்பையின் புறநகர்ப்பகுதியான கரபுரி என்னும் எலிபெண்டா தீவுகளின் மகோன்னதமான ஆடல்வல்லானைப்பற்றி விவரித்திருந்தது

மும்பை கரபுரியின் ஆடல்வல்லான் :-

மும்பையின் புறப்பகுதியில் கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரபுரி தீவுகளில் உருவாக்கப்பட்ட எலிபெண்டா குகைக்கோயில்கள் உருவான காலம் பற்றி வேறுபட்ட தரவுகள் பல உள்ளன. அக்ரஹாரபுரி என்பதன் மருவலே கரபுரி. இங்கே உள்ள குஷானர்களின் ஆட்சிக்காலமான பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஸ்தூபி வகையறாக்கள் பௌத்த சமயம் இங்கே மிகவும் புராதனமான காலம் முதலே பரவலாக இருந்ததற்கு சான்றுகள் அளிக்கின்றன. இரண்டு குன்றுகளாக இவற்றை பிரித்தால் அவற்றுள் கிழக்கு குன்றினில் பௌத்த ஸ்தூபிகளும் மேற்கு குன்றினில் சிவபெருமானின் குடைவரை ஆலயமும் உள்ளன. இங்கு உள்ள இந்து சமய குடைவரைகள் பாசுபத மதத்தினை வழுவியவரால் உண்டாக்கப்பட்டன. 

பொதுயுகம் ஐந்தில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் நானூறு ஆண்டுகள் வரை இங்கு பல்வேறு குகைகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் தலையாயது மஹேஸ்வர மூர்த்தியின் மூன்று முக புடைப்புச் சிற்பம் உள்ள பிரதான குகையே ஆகும். ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரும் வழிபாட்டுத் தலமாக விளங்கிய இந்த குடைவரைக் கோயில்களில் பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் ஒரு படைத்தளம் அமைத்த பின்னர் அவர்களது போர்வீரர்களின் துப்பாக்கி மற்றும் பீரங்கி குண்டுவீச்சு பயிற்சிகளினால் கண்கவர் அழகு படைத்த மகத்தான இந்த குடைவரை சிற்பங்கள் பாழடைந்தன. ஆலயங்களும் சீர் குலைந்தன. குஜராத்தை ஆண்ட சுல்தான்களிடமிருந்து இந்த தீவு போர்த்துகீசியர் கைகளுக்கு மாறியதினால் ஏற்பட்டதே இந்த அவலநிலை. 

பொதுவான கருத்துப்படி ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஏழாம் நூற்றாண்டு அல்லது எட்டாம் நூற்றாண்டு வரையிலும் இராஷ்டிரகூட அரச காலம் வரையிலும் இந்த குடைவரைகள் நிர்மாணிக்கப்பட்டதென நாம் இணையங்களின் வாயிலாக அறிந்து கொள்ளுகிறோம். நண்பர்கள் இதற்கான சரியான தரவுகளை தந்துதவினால் மிகவும் சிறப்பே…எனினும் Fergusson போன்ற சில ஆராய்ச்சியாளர்கள் ராஷ்டிரகூட அரசர்களின் படைப்பே இந்த சிவாலயங்கள் என்றும் K V Soundara Rajan போன்றவர்கள் சாளுக்கியரின் படைப்பே இவை என்றும் Colin Smith போன்றவர்கள் காலாச்சூரி அரசர்களே இந்த குடை வரைகளை உருவாக்கினர் என்றும் விவாதிக்கின்றனர். கிழக்கு இந்திய பிரதேசத்தில் வாகாடகர்களின் ஆட்சி வீழ்ந்தபின்னர் சாதவாஹனர்களைத் தொடந்து விஷ்ணுகுண்டின அரசர்கள் எழுச்சி பெற்றது போல் காலாச்சூரி அரசர்கள் வாகாடகர்களுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றினர். இவர்களுக்கும் வாகாடக அரசர்களுக்கும் இடையில் திருமணத்தின்மூலம் பந்தமும் இருந்தது. சாளுக்கியரின் சிறப்பான சிற்பக் கலையின் மகத்தான உதாரணங்கள் பாதாமி, ஐஹொளே, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் அளவற்று காணப்படுகிறது. அவர்களின் சிற்பப் படைப்புகளுக்கும் எலிபெண்ட்டா குடைவரையில் நாம் காணும் சிற்பங்களுக்கும் சிறிதளவு கூட ஒப்புவமை இல்லை என்பது காண்போர் அனைவருக்கும் எளிதில் புரியும். 

 

எலிபெண்டா குடைவரை கோயிலில் முக்கியமானதும் அளவில் பெரியதுமான முதலாம் குகைப்பகுதி வடக்கு தெற்கு மார்க்கமாக மலையினை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குடைவரையின் வடக்கு வாயிலின் இருபுறமும் குப்தர்கள் காலத்தியதாக கணிக்கப்படும் புடைப்புச் சிற்பங்களுள் மேற்கு நோக்கிய சுவற்றில் யோகீஸ்வரசிவ கோலமும் கிழக்கு நோக்கிய சுவற்றில் நடராஜரின் தாண்டவக் கோலமும் வடிக்கப்பட்டுள்ளன. குகையின் தெற்குச்சுவற்றில் மையமாக சதாசிவமூர்த்தியின் உருவமும் இருமருங்கிலும் அர்த்தநாரீஸ்வரக் கோலமும் கல்யாணசுந்தரரின் மணக்கோலமும் செவ்வனே செதுக்கப்பட்டுள்ளன. சதாசிவ சிற்பம் இருபதரை அடி வரையிலும் உயர்ந்து நம்மை மலைக்க வைக்கின்றது. அதே போன்று ஏனைய சிற்பங்களும் உயரத்தில் பதினாறு அடிகளுக்கு குறையாமல் பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
RE: எலிபெண்டா தீவுகளின் மகோன்னதமான ஆடல்வல்லான்
Permalink  
 


நடராஜரின் தாண்டவக்கோலம் பதின்மூன்று அடி அகலமும் பதினொன்று அடி உயரமும் உள்ள புடைப்புச் சிற்பமாக மேற்கு சுவற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. நிருத்தமூர்த்தியாக கருதப்படும் இவர் பெரும்பாலும் சேதமுற்றவரே. இவரது எட்டு கரங்களில் பலவற்றைக் காணவில்லை. லலித கரணத்தில் நடனமிடும் இவரின் இடுப்பிற்கு கீழே உள்ள பெரும்பகுதிகளையும் காணவில்லை. வலக்கரம் ஒன்றில் தூக்கிப்பிடிக்கப்பட்ட பரசுவில் வளைந்து நெளிந்து தொங்கும் நாகம் நம்மை வியப்புற வைக்கிறது. இடது கரம் ஒன்றினில் தனது உத்தரீயத்தின் ஒரு பகுதியை தூக்கி பிடித்தவாறும் இந்த சிற்பத்தில் காண்பித்துள்ளனர் ( இத்தகு பாணி இன்னும் நிறைய சிற்பங்களில் நம்மால் காண முடிகிறது. ஒருவேளை இதுவே பின்னாளில் சோழஅரசர்களின் காலத்தில் செப்புப்படிமங்களில் இடது தோளின் மீது வடிக்கப்படும் உத்தரீயத்திற்கு முன்னோடியோ தெரியவில்லை. ஆயினும் எனக்கு அப்படியும் இருக்கலாம் என்று ஊகிக்கத்தோன்றுகிறது ). பிற கரங்களுள் வலது முன் கரம் டோலஹஸ்தமாக இடப்புறமாக வீசி ஆடும் வண்ணம் காணப்படுகிறது. இவரது வலது துடையின் மேலெழும்பிய பகுதி வலது முழங்காலை மடித்து லலித கரணமாகவே வைத்திருப்பதை நமக்கு உணர்த்துகின்றது. ஸ்தித பாதமாக இருக்கவேண்டிய இடது கால் முழுவதிலும் முற்றாக சேதமடைந்து இடுப்பு பகுதியிலிருந்தே இல்லாதது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. இவரைச்சுற்றி உள்ள மேற்பகுதிகளில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன், அரம்பையர் முதலானோர் இருக்க பிருங்கியும் கணேசரும் இந்திரனும் கார்த்திகேயனும் இவரது வலப்பக்கத்தில் காட்சி தருகிறார்கள். ஈசனின் இடப்பக்கம் அம்பிகையும் பரமனின் களி நடனத்தைக் காண, இருபுறமும் சேடியரும் பூதகணங்களும் பிற இருடியரும் சுரர்களும் படை சூழ, பிரபஞ்ச இயக்கத்தை, தனது தாள லய ஸ்ருதிகளுடன் பரமேஸ்வரன் நிருத்த மூர்த்தியாக தரிசனம் அளிக்கிறார். என்னே சிற்பிகளின் கற்பனை வளம். என்னே அவர்தம் சீரிய பணி. எத்துணை நேரம் நோக்கினும் சலிக்காத ஆனந்த காட்சியல்லவா இது. இதுவன்றோ நமது பிறவிப்பேறு. இதைக்காணத்தானே நாவுக்கரசர் கயிலையை நோக்கி மெய் தேய கடும் பயணம் செய்தார். ஈசனால் அம்மை என அழைக்கப்பட்ட காரைக்கால் கண்ட கனிஅமுதம் பரமனின் பேரானந்தத்தருளினால் ஆலங்காட்டிலேயே இக்காட்சியை தரிசனம் செய்ய நேர்ந்தது. இந்த காணுதற்கரிய காட்சியை காணவல்லோ புலிக்கால் முனிவரும் பதஞ்சலி மகரிஷியும் தில்லை வனக்காட்டில் கடுந்தவம் செய்து இறைவனடி ஏகினர்... 

நான் முதன்முறையாக மும்பை சென்றபோது கரபுரிக்கு தனியாகத்தான் சென்றேன், போனபின்னரே எனக்கு புரிந்தது ஒரு நல்ல கேமரா இல்லாமல் அங்கு போவது எப்பேர்ப்பட்ட தவறு என்று. எனினும் அப்பொழுது எனது கைபேசியில் எடுக்கப்பட்ட படங்கள் எனக்கு அவ்வளவாக திருப்தி இல்லாததால் இந்த பதிவுக்கு பெரும்பாலும் இணையத்திலிருந்து தொகுக்கப்பட்ட படங்களையே பகிர்ந்திருக்கிறேன். ஒரு சில படங்களும் என்னால் எடுக்கப்பட்டவையே. நேரில் காணும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியும் இந்த ஆடல்வல்லானின் அற்புதக்காட்சியும் சிறிதளவேனும் வாசகர்களின் மனதில் திகைப்பூட்டும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. என்னை மலைக்க வைத்த இவரது தோற்றத்தின் எழிலும் பிரம்மாண்டமும் சில வருடங்கள் கழித்தும் இன்றுகூட நெஞ்சின் நினைவலைகளாக எனது உள்ளத்தை சிலிர்க்க வைக்கிறது என்பது மட்டும் உண்மை. ஒரு சில இணையங்களில் காணப்பெறாத அவரது கரங்களில் என்னவெல்லாம் இருந்திருக்கக்கூடும் என்றுகூட சிலர் தொகுத்துள்ளனர். எண்கரத்தினராய் காணப்படும் இவரது வலது கரங்களில் டமருகமும் அபய முத்திரையும் இருந்திருக்கலாம். அதே போல ஒரு இடக்கரம் கடிஊருஹஸ்தமாக துடையினில் ஒய்யாரமாக வைக்கப்பட்டிருக்கலாம். அக்னியோ தீயகலோ இருந்திருக்கலாமோ தெரியவில்லை. ஆயினும் முற்கால படைப்புகளில் நம்மால் ஆடல்வல்லானின் கரங்களில் நாகங்களையும் ஆயுதங்களையும் தவிர தீச்சுடரைக் காண முடிவதில்லை. 

சில நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு இதே மும்பையின் வேறு ஒரு பகுதியில் மற்றுமொரு ஆடல்வல்லான் குடைவரை புடைப்புச் சிற்பமாக மீண்டும் படைக்கப்படுகிறார் என்றால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். அவரைப்பற்றியும் பின் வரப்போகும் பதிவுகளில் காண்போம். 

அடுத்த பதிவுக்கு ஒரு சில நாட்கள் அதிகம் ஆகலாம். எனவே பொறுமையுடன் காத்திருங்கள். தகுந்த அரிய படங்களுடன் மேலும் ஆடல்வல்லானின் அதிசய காட்சிகளை ஊன்றி நோக்குவோம்.

நன்றி..

Dr KP இரவிச்சந்திரன், கோவை.

Description of Elephanta Nataraja from https://elephanta.co.in/nataraja-at-elephanta :-

Nataraja Panel is located at the entry point of the main cave, opposite to the Mahayogi Shiva at Elephanta. After the three panels (Gangadhara at Elephanta , Mahesh Murthy at Elephanta and Ardhanarishvara at Elephanta ) which are located in the deep wall of the cave, this is the most dynamic of all the panels of Elephanta. As it is located right next to the portico, it is well illuminated by natural light. Natraj , the king of dancers is portrayed in the classical posture of the cosmic dance. This aspect of Shiva is shown with eight hands. The lower portion of the panel and the arms are partially missing. However the image still retains the grace of the movement the rock cut artist wanted to capture. 

One of his right hand holds the battle axe while a left hand stretches across the torso. Though it adds to the balance of the image, the other two hands are broken from elbow. The cobra twists itself from the battle axe and move forward to Shiva’s shoulder.

While one of his left hand is shown lifted , the other left hands follows the body with its graceful bend. Shiva’s head is tilted towards right and a bunch of his matted hair shown flowing over the left shoulder. A closer look can even reveal the folded cloth on the left thigh. So are the decorated bands tied around the upper arms. Even in its ruined condition , the image is majestic. As usual around the dancing Shiva are a plethora of godly themes. Most notable is that of the three headed Brahma at the top corner of the panel, on your left. His circular seat is carried by a flock of flying swans. Just behind Brahma are two semi naked ascetics. Below them stands two of Shiva’s sons – the elephant headed Ganesha and the larger image of Subramanya ( Kumara). While Ganesha is considered as the Lord of Beginnings, Subrahmanya is considered as God of War.

Next to Subrahmanya stands a female attendant whose face is completely damaged. Below Subrahmanya sits a drummer. On the left of the dancing Shiva ( on your right) are the images of Parvati ( Shiva’s consort), standing in a bit shying away posture. Above Parvati are the two gods – Vishnu riding the Garuda and Indra (king of gods) riding Airavatha, the white elephant. Further on either sides of Shiva’s head are the rows of flying celestial attends



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard