உத்தர ப்ரதேஶம் நொய்டாவில் ராவணனுக்கு ஓர் ஆலயம், மேலே 'தஶானன் மந்திர்' என தேவநாகரியில் எழுதியுள்ளது. 20 கரங்கள் தெரிகின்றன. கையில் மலரோடு காத்திருக்கும் பக்தர்கள்.
வடபுலத்தில் பிரசித்தமான தசரா ராவண ஸம்ஹாரம் (ராம் லீலா உத்ஸவ்) நொய்டாவில் கிடையாது.
ராவணனுக்காகத் தர்ப்பணம் செய்யும் வழக்கம் கொண்ட பிராமணக் குடியினர் வடபுலத்தில் உள்ளனர், ஸாரஸ்வத ப்ராஹ்மணரில் ஒரு பிரிவினர்.
அரக்கர் பெருவாரியாக வாழ்ந்தது வடபுல வனங்களிலும், பாரதத்தின் நடுப்பகுதியான தண்டக அரண்யத்திலும்தான் என்பதே இதிஹாஸ விவரிப்பு. தேவியைத் தேடும் பொறுப்பு இருந்ததால்தான் ஜடாயுவின் வழிகாட்டலின்படி அண்ணல் பஞ்சவடிக்குத் தெற்கு நோக்கி நகர்கிறார்.
ஸுபாஹு வதம், லவணாஸுர வதம் எல்லாம் வடபுலத்தில்தான்; கர - தூஷண வதம், விராத-கபந்த வதம் எல்லாம் பஞ்சவடியில், கோதாவரிக் கரையில். தெற்கில் காவிரி, பொருநைக் கரையில் எந்த அரக்கரையும் அண்ணல் மாய்க்கவில்லை.
ராவணனும் வடக்கத்தியான்; குபேரனின் விமானத்தையும், அவன் ஆண்ட லங்கா ராஜ்யத்தையும் கவர்ந்துகொண்டு அவனைத் துரத்திவிட்டு, இவன் இலங்கையில் உட்கார்ந்து கொண்டதாகத்தான் இதிஹாஸம் சொல்கிறது. ராவணன் செய்த சோதிட நூல் "ராவண ஸம்ஹிதா". இராமன் ஆரியன் என்றால் இராவணனும் ஆரியனே.
ஆனால் இராவணன் திராவிடன் எனும் உருட்டல் மட்டும் தமிழ்நாட்டில் என்றும் நிற்காது; ஏனென்றால் அது ஒரு வயிற்றுப் பிழைப்பு.
இராமபிரானைப் பழிக்கும் நோக்கில் தசமுகனை உயர்த்திப் பிடிக்கும் 'இராவண காவியம்' எனும் பாடாவதிக் குப்பை ஒன்று பகுத்தறிவுப் பாசறைக்குள் உருவானது. அதற்கான தேவையே கிடையாது. வால்மீகி ராமாயணம் உத்தர காண்டத்தில் ராவணனது தவம், ஆற்றல், அவன் யார் யாரை வெற்றிகொண்டான் என்பதையெல்லாம் விரிவாகவே சொல்லியுள்ளது, அதுவும் மறை முனிவர்கள் வாயால். அவனது பின்னடைவையும் குறிப்பிடாமல் இல்லை.
படத்தில்:
நொய்டா கோயிலும், ராவணன் பிறந்த ஊரான உத்தர பிரதேசத்தின் பிஸ்ரக் கிராமத்திலுள்ள ராவணனது பளிங்குச் சிலையும்