Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாயிரம் இல்லையேல் அது நூல் இல்லை!


Guru

Status: Offline
Posts: 7468
Date:
பாயிரம் இல்லையேல் அது நூல் இல்லை!
Permalink  
 


தமிழோவியம்

கட்டுரை : பாயிரம் இல்லையேல் அது நூல் இல்லை!
- தமிழநம்பி

 
பாயிரம் என்பது முகவுரை. எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்டுமென்பது மரபு. சிறந்த நூல்களுக்கு முகவுரை இன்றியமையாதது. அதனால் நூலை ஆராய்ந்து, அதன் முன்னதாக, அழகிய நுட்ப உரையாக, அணிந்துரையை, எந்த ஒரு நூற்கும் பெரிதும் இயைபுபட நந்தமிழ்ப் பெரியோர் வைத்தனர்.

"ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே” என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது என்பதே இதன் பொருளாகும்.

பாயிரத்தின் தேவை

பாயிரம், நூலிற்குப் புறத்தே உரைக்கப் படுவதால், புறவுரையாகும். கணவனுக்கு நல்ல மனைவி போல இன்றியமையாச் சிறப்பினதாகவும் அழகிய பெரிய நகரத்திற்கு வடிவமைந்த வாயில் மாடம் போல அழகியல் சிறப்பினதாகவும் அமைவது பாயிரம் என்பர். மேலும், பாயிரம் யானைக்குப் பாகன் போலவும், வானத்திற்கு விளக்கமாகிய நிலவும் கதிரவனும் போலவும் இன்றியமையாச் சிறப்புடையது என்றும் கூறுவர். பாயிரமின்றி நூல் படிப்பார், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப் படுவராம்.

பாயிரம்

பாய் என்ற சொல் பரந்து கிடப்பது என்ற பொருளுடையது என்றும் இதனை அடியாகக் கொண்டு பிறந்த பாயிரம் என்ற சொல், பரந்து விரிந்து செல்லும் நூலின் தொடக்கப் பகுதி என்று பொருள்படும் என்றும் அறிஞர் கூறுவர்.

பாயிரத்திற்கு மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தரும் விளக்கத்தைக் காண்போம் :    போர் மறவர் போர்க்களத்தில் முதலில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் மறவியல் முகவுரையைப் பாயிரம் குறித்தது.  பின்பு, பொருள் விரிவாக்கமாக நூலின் முகவுரையைக் குறித்தது என்கிறார். பயிர்தல் என்றால் ஊர்கின்றவையும் விலங்குகளும் பறவைகளும் தமக்குள் ஒன்றை ஒன்று அழைத்தல்.

பயிர் > பயிரம் > பாயிரம் = அழைப்பு :  போருக்கு அழைக்கும் முகவுரை,  நூலின் முகவுரை.

பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என்று பாயிரம்  இரண்டு வகையினதாகும்.

பொதுப் பாயிரம்

எல்லா நூல்களின் முன்பும் பொதுவாக உரைக்கப் படுவது பொதுப் பாயிரம்.  நூலுள் சொல்லும் பொருளல்லாத  நூலின் இயல்பு, நூலாசிரியனின் இயல்பு, கூறுகின்ற முறை, படிப்போர் இயல்பு, படிக்கும் முறை ஆகிய ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரமாகும்.

 ( கற்பிக்கப்படும் நூலாயின், நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தினையும் பொதுப் பாயிரம் விளக்கும்)

சிறப்புப் பாயிரம்

பொதுப்பாயிரத்தின் ஐந்து கூறுகளும் எல்லா நூல்களுக்கும் பொதுவாய் கூறப்படுவதாகும். அவையெல்லாம் நூலுள் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறுவன.

அப் பொதுப் பாயிரம் போலன்றி நூலிற் சொல்லப்படுகின்ற பொருள் முதலிய உணர்த்துவது சிறப்புப் பாயிரமாகும்.  இப் பாயிரம், நூலுக்கு இன்றியமையாததாகும். அணியிழை மகளிர்க்கு,  அணிகளில் சிறந்த ஆடை போல நூலுக்குச் சிறப்பானது சிறப்புப் பாயிரம் என்பர்.

சிறப்புப் பாயிரத்தில் கூறுவன

நூலாசிரியர் பெயர்,  நூல் வந்த வழி,  தமிழகம் முதலாக நூல் வழங்கப்படும் நிலப்பரப்பு,  நூலின் பெயர், நூலின் வகை அல்லது கட்டமைப்பு,  நூலிற் கூறப்பட்டுள்ள பொருள்,  நூல் யாருக்காக எழுதப்படுகிறது என்ற குறிப்பு, நூலால் பெறக்கூடிய பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் சிறப்புப் பாயிரம் செப்பமாகக் கூறும்.
இவற்றுடன் நூல் எப்பொழுது, எவ்விடத்தில், எக்காரணம் பற்றி எழுதப்பட்டது என்பனவும் கூறப்படும்.

மேற்கண்ட பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குறைவாகவேனும் கூறி, அந்நூலைச் சிறப்பிப்பதும், மதிப்புரையும் சிறப்புப் பாயிரமே.

சிறப்புப்பாயிரத்தை எழுதத் தகுந்தோர்

நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியரோடு உடன் பயின்றவர், நூலாசிரியரின் மாணவர்,  நூலின் உரை ஆசிரியர் சிறப்புப் பாயிரம் எழுதுதற்கு உரியோர் ஆவர்.

இதுகாறும் தோன்றாத சிறந்த நூல்களைப் படைத்து, பல துறைகளிலும் நிறைவான புலமையைப் பெற்றிருந்தாலும் ஒருவர் தம்மைத்தாமே புகழ்ந்து தம் நூலில் தாமே சிறப்புப் பாயிரம் எழுதிக் கொள்ளுதல் பெருமைக்குரிய தகுதி ஆகாது.

ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம்,  நூற் பொருள்,  நூல் வந்த வழி,  நூற் பெயர் முதலியவற்றை நூலாசிரியர் கூறுவதே பொருத்தம் ஆகையானும் அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந் தராமையானும் அவற்றை நூலாசிரியர் கூறுவது தக்கது என்று கொள்ளப்படும். அவ்வாறு கூறுவது தற் சிறப்புப் பாயிரம் என்று பெயர் பெறும்.

பாயிரத்தின் பெயர்கள்

மேற்கூறிய பொதுப் பாயிரம் சிறப்புப் பாயிரம் இருவகைக்கும் பொதுவாகவும் சிறப்பாகவும் பல பெயர்கள் உள்ளன. அவை, முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்னும் எட்டாம்.  இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு:

முகவுரை :  இது நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பது. பெரும்பாலும் நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது.

பதிகம் :  இது நூலாசிரியனின் பெயர், நூல் வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது.

அணிந்துரை :  நூலுக்கு அணியாக (அழகாக) அமைவது.

நூன்முகம் :  இது நூல் முகத்து உரைக்கப் படுவது.

புறவுரை :  நூலின் கருத்து அல்லாமல் நூலோடு தொடர்புடைய செய்திகளை வரலாற்றை எடுத்துரைப்பது.

தந்துரை : இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர்களின் முன்னுரை பெரும்பாலும்     தந்துரையாக இருக்கும்.

புனைந்துரை : இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது. ( புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல்)

பாயிரம் :  இது முதன்முதல் பொருகளத்துப் போர் முகவுரையாகப் பகைவரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடுமொழியைக் குறித்தது.  பின்பு நூல் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது.

இக் கால நூல் வழக்கில், புறவுரை, பாயிரம் என்னும் இரண்டு பெயர்களும் பொதுப்பாயிரத்திற்கும் சிறப்புப் பாயிரத்திற்கும் பொதுவாக உள்ளன. மற்றவை சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாக உள்ளன்.

உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக்காலத்து எழுந்த புது வழக்குகள்.  இவற்றுள் உரைமுகம், தோற்றுவாய் இரண்டும் தற்சிறப்புப் பாயிரத்தையும் பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும்,  முன்னுரை அவ்விரண்டையும் சாரும்.  சாத்துப்பா என்பது செய்யுள்.  மற்றவை உரைநடை -  என்று மொழிநூற் கதிரவன் பாவாணர் விளக்கிக் கூறுகிறார்.

 


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

”முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்” – நன்னூல்- 1

 

பாயிரம் என்பது முகவுரை.  எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்டுமென்பது மரபு. சிறந்த நூல்களுக்கு முகவுரை இன்றியமையாதது. அதனால் நூலை ஆராய்ந்து, அதன் முன்னதாக, அழகிய நுட்ப உரையாக, அணிந்துரையை, எந்த ஒரு நூற்கும் பெரிதும் இயைபுபட நந்தமிழ்ப் பெரியோர் வைத்தனர்.  
ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது என்பதே இதன் பொருளாகும்.
 
பாயிரத்தின் தேவை
பாயிரம், நூலிற்குப் புறத்தே உரைக்கப் படுவதால், புறவுரையாகும். கணவனுக்கு நல்ல மனைவி போல இன்றியமையாச் சிறப்பினதாகவும் அழகிய பெரிய நகரத்திற்கு வடிவமைந்த வாயில் மாடம் போல அழகியல் சிறப்பினதாகவும் அமைவது பாயிரம் என்பர்.
மேலும், பாயிரம் யானைக்குப் பாகன் போலவும், வானத்திற்கு விளக்கமாகிய நிலவும் கதிரவனும் போலவும் இன்றியமையாச் சிறப்புடையது என்றும் கூறுவர். பாயிரமின்றி நூல் படிப்பார், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப் படுவராம்.
 
பாயிரம்
பாய் என்ற சொல் பரந்து கிடப்பது என்று பொருளுடையது என்றும்  இதனை அடியாகக் கொண்டு பிறந்த பாயிரம் என்ற சொல், பரந்து விரிந்து செல்லும் நூலின் தொடக்கப் பகுதி என்று பொருள்படும் என்றும் அறிஞர்  கூறுவர். 
பாயிரத்திற்கு மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தரும் விளக்கத்தைக் காண்போம்: போர் மறவர் போர்க்களத்தில் முதலில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் மறவியல் முகவுரையைப் பாயிரம் குறித்தது. பின்பு பொருள் விரிவாக்கமாக நூலின் முகவுரையைக் குறித்தது என்கிறார். பயிர்தல் என்றால் ஊர்கின்ற விலங்குகளும் பறவைகளும் தமக்குள் ஒன்றை ஒன்று அழைத்தல்.
பயிர் > பயிரம் > பாயிரம் = அழைப்பு : போருக்கு அழைக்கும் முகவுரை, நூலின் முகவுரை.
 
பாயிரம், பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரண்டு வகையினதாகும்.
 
பொதுப் பாயிரம்
எல்லா நூல்களின் முன்பும் பொதுவாக உரைக்கப் படுவது பொதுப் பாயிரம். நூலுள் சொல்லும் பொருளல்லாத, நூலின் இயல்பு, நூலாசிரியனின் இயல்பு, கூறுகின்ற முறை, படிப்போர் இயல்பு, படிக்கும் முறை ஆகிய ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரமாகும்.
கற்பிக்கப்படும் நூலாயின், நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தினையும் பொதுப் பாயிரம் விளக்கும்)
 
சிறப்புப் பாயிரம்
பொதுப்பாயிரத்தின் ஐந்து கூறுகளும் எல்லா நூல்களுக்கும் பொதுவாய் கூறப்படுவதாகும். அவையெல்லாம் நூலுள் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறுவன.
அப் பொதுப் பாயிரம் போலன்றி நூலிற் சொல்லப் படுகின்ற பொருள் முதலிய உணர்த்துவது சிறப்புப் பாயிரமாகும். இப் பாயிரம், நூலுக்கு இன்றியமையாததாகும். அணியிழை மகளிர்க்கு, அணிகளில் சிறந்த ஆடை போல நூலுக்குச் சிறப்பானது சிறப்புப் பாயிரம் என்பர்.
 
சிறப்புப்பாயிரத்தில் கூறுவன
     நூலாசிரியர் பெயர், நூல் வந்த வழி, தமிழகம் முதலாக நூல் வழங்கப்படும் நிலப்பரப்பு, நூலின் பெயர், நூலின் வகை அல்லது கட்டமைப்பு, நூலிற் கூறப்பட்டுள்ள பொருள், நூல் யாருக்காக எழுதப்படுகிறது என்ற குறிப்பு, நூலால் பெறக்கூடிய பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் சிறப்புப் பாயிரம் செப்பமாகக் கூறும்.
      இவற்றுடன் நூல் எப்பொழுது, எவ்விடத்தில், எக்காரணம் பற்றி எழுதப்பட்டது என்பனவும் கூறப்படும்.
      மேற்கண்ட பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குறைவாகவேனும் கூறி, அந்நூலைச் சிறப்பிப்பதும் மதிப்புரையும் சிறப்புப் பாயிரமே. 
 
சிறப்புப்பாயிரத்தை எழுதத் தகுந்தோர்
     நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியரோடு உடன் பயின்றவர், நூலாசிரியரின் மாணவர், நூலின் உரை ஆசிரியர் சிறப்புப் பாயிரம் எழுதுதற்கு உரியோர் ஆவர்.
      இதுகாறும் தோன்றாத சிறந்த நூல்களைப் படைத்து, பல துறைகளிலும் நிறைவான புலமையைப் பெற்றிருந்தாலும் ஒருவர் தம்மைத்தாமே புகழ்ந்து தம் நூலில் தாமே சிறப்புப் பாயிரம் எழுதிக் கொள்ளுதல் பெருமைக்குரிய தகுதி ஆகாது.
      ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம்,  நூற் பொருள், நூல் வந்த வழி, நூற் பெயர் முதலியவற்றை நூலாசிரியர் கூறுவதே பொருத்தம் ஆகையானும் அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந் தராமையானும் அவற்றை நூலாசிரியர் கூறுவது தக்கது என்று கொள்ளப்படும். அவ்வாறு கூறுவது தற் சிறப்புப் பாயிரம் என்று பெயர் பெறும்.
 
பாயிரத்தின் பெயர்கள்
     மேற்கூறிய பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் இருவகைக்கும் பொதுவாகவும் சிறப்பாகவும்பல பெயர்கள் உள்ளன. அவை, முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்னும் எட்டாம். இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு:
 
  1. முகவுரை : இது நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பது. பெரும்பாலும்       நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது.
 
  1. பதிகம் : இது நூலாசிரியனின் பெயர், நூல் வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது.
 
  1. அணிந்துரை : நூலுக்கு அணியாக (அழகாக) அமைவது.
 
  1. நூன்முகம் : இது நூல் முகத்து உரைக்கப் படுவது.
 
  1. புறவுரை : நூலின் கருத்து அல்லாமல் நூலோடு தொடர்புடைய செய்திகளை வரலாற்றை எடுத்துரைப்பது.
 
  1. தந்துரை : இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர்களின் முன்னுரை பெரும்பாலும் தந்துரையாக இருக்கும்.
 
  1. புனைந்துரை : இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது. ( புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல்)
 
  1. பாயிரம் : இது முதன்முதல் பொருகளத்துப் போர் முகவுரையாகப் பகைவரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடுமொழியைக் குறித்தது. பின்பு நூல் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது.
 
இக் கால நூல் வழக்கில், புறவுரை, பாயிரம் என்னும் இரண்டு பெயர்களும் பொதுப் பாயிரத்திற்கும் சிறப்புப் பாயிரத்திற்கும் பொதுவாக உள்ளன. மற்றவை சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாக உள்ளன்.
 
      உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக்காலத்து எழுந்த புது வழக்கு. இவற்றுள் முன்னிரண்டும் தற்சிறப்புப் பாயிரத்தையும் பின் மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும், இடையொன்றும் அவ்விரண்டையும் சாரும். சாத்துப்பா என்பது செய்யுள். ஏனைய உரைநடை. என்று மொழிநூற் கதிரவன் பாவாணர் விளக்கிக் கூறுகிறார்.  
....................................................................................................................................................
உதவிய நூல்களும் இயற்றியோரும்:
1, தொல்காப்பியம் -  எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை.
2. நன்னூல்  எழத்ததிகாரம்  தமிழண்ணல் உரை.
3. தேவநேயம் -10 தொகுப்பாசிரியர் : புலவர் இரா.இளங்குமரன்.
உதவியோர்க்கு உளமார்ந்த நன்றி.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

சிறப்புப்பாயிரம்

பாயிரம் நூலுக்கு இன்றி அமையாச் சிறப்பினது என்பது

 

54ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே.
 
ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் - ஆயிரம் உறுப்புக்களால் விரிந்தது ஆயினும் , பாயிரம் இல்லது பனுவல் அன்று - பாயிரம் இல்லாதது நூல் அன்றாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

பாயிரம் இல்லது பனுவல் அன்றே

1. முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

2. பாயிரம் பொது சிறப்பு எனஇரு பாற்றே

3. நூலே நுவல்வோன் நுவலும் திறனே

கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்

எல்லா நூற்கும் இவையொதுப் பாயிரம்

4. ஆக்கியோன் பெயரே வழியே எல்லை

நூற்பெயர் பாப்பே நுதலிய பொருளே

கேட்போர் பயனோடு ஆய்எண் பொருளும்

வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே

5. காலம் களனே காரணம் என்று இம்

மூவகை ஏற்றி மொழிநரும் உளரே"

6. ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்

பாயிரம் இல்லது பனுவல் அன்றே

7. மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்

ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும் போல் - நாடிமுன்

ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்

பெய்துரையா வைத்தார் பெரிது.

                                   - பவணந்தி முனிவர்

பாயிரத்திற்கான பொருளைக் காண்போமா ?

பாயிரத்திற்கு உரிய ஏழு பெயர்கள்

அ ) முகவுரை - நூலுக்குமுன்

சொல்லப்படுவது.

ஆ) பதிகம் - ஐந்து பொதுவும்பதினொரு சிறப்புமாகிய பலவகைப்பொருள்களையும் தொகுத்துச் சொல்வது.

இ) அணிந்துரை 

ஈ) புனைந்துரை - நூலின் பெருமை முதலியவை  விளங்க அலங்கரித்துச் சொல்வது.

உ) நூன்முகம் - நூலுக்கு முகம் போல முற்பட்டிருப்பது.

ஊ )  புறவுரை - நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின்  புறத்திலே சொல்வது.

எ) தந்துரை - நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து  சொல்வது

2. பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

3. நூலின் இயல்பு ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை ,  மாணவர் இயல்பு , கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.

4. சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம்

நூலாசிரியர் பெயர்

நூல் பின்பற்றிய வழி

நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு

நூலின் பெயர்

தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு 

நூலில் குறிப்பிடப்படும் கருத்து

நூலைக் கேட்போர் (மானவரி

நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்

                 ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது சிறப்புப்பாயிரத்தின் இலக்கணம் ஆகும். இப்பாடல் நூற்பா  வகையைச் சார்ந்தது.

5. நூல்  இயற்றப்பட்ட காலம் , அது அரங்கேற்றப்பாட் அவைக்களம், அது இயற்றப்பட்டதற்கான காரணம் என்னும் இம்மூன்றையும் மேலே கூறுப்பட்டுள்ள எட்டுச் செய்திகளுடன் சேர்த்துக் கூறுவோரும் உள்ளனர்.

6. ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படாது.

7. மாடங்களுக்கு ஓவியங்களும் பெரிய நகரங்களுக்குக் கோபுரங்களும் அழகிய தோள்களைக்கொண்ட மகளிருக்கு அணிகலன்களும் எழிலைத் தரும். அவை போன்று எல்லாவகை நூல்களுக்கும் முன்னர் அழகு தருவதற்காக அணிந்துரையைப் புலவர்கள் பெருமையுடன் சேர்த்து வைத்தனர்.

இலக்கணக்குறிப்பு

காட்டல், கோடல் - தொழிற்பெயர்கள்

ஐந்தும் - முற்றும்மை

கேட்போர் - வினையாலணையும் பெயர்

மாநகர் - உரிச்சொற்றொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

வைத்தார் - வை + த் + த் + ஆர்

வை - பகுதி

த் - சந்தி

த் - இறந்தகால இடைநிலை

ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி

 
புணர்ச்சிவிதி
 
அணிந்துரை - அணிந்து + உரை
 
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்
 
அணிந்த் + உரை
 
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
 
அணிந்துரை.
 
பொதுச்சிறப்பு - பொது + சிறப்பு
 
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும் - பொதுச்சிறப்பு.
 

***************      *************     **********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard