Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவர் குரு குலத்துக்கு திருவள்ளுவர் B. R. Mahadevan


Guru

Status: Offline
Posts: 7467
Date:
வள்ளுவர் குரு குலத்துக்கு திருவள்ளுவர் B. R. Mahadevan
Permalink  
 


வள்ளுவர் குரு குலத்துக்கு திருவள்ளுவர் வந்திருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டதும் அறிவாலயத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஐயன் முகத்தில் எப்படி முழிக்க என்று பயம் ஒருபக்கம். அவர் ஏன் அங்கு போனார் முதலில் என்று இன்னொருபக்கம் பதற்றம். அவர் அங்கு போவதற்கு முன்பே நம் பக்கம் கடத்திக் கொண்டு வரத் தவறிவிட்டோமே என்ற கலக்கம் வேறொருபக்கம். ஒருவருக்கும் கையும் காலும் ஓடவில்லை. என்ன செய்ய என்று மேக் அப் அறை முன்னால் நின்று கூடிக் கூடிப் பேசினர்.
சாவித் துவாரம் வழியாக ஒரு உடன் பிறப்பு எட்டிப் பார்த்துவிட்டு, தலைல பசை தடவியாச்சு... விக் வெச்சாச்சு... ஃபேன் ஓடவிட்டு பறக்காம இருக்கான்னு டெஸ்ட் ரன் பண்ணியாச்சு... இதோ கீ கொடுத்தாச்சு... என்று ரன்னிங் கமெண்டரி கொடுக்கிறான்.
அறைக்கு வெளியே மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
கதவு திறக்கிறது. ரோபாட் பொம்மை நடந்து வருகிறது. அனைவரையும் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறது. தலையை இங்கும் மங்கும் அசைக்காமல் நேராக நடந்து செல்கிறது. பி.ஏ. பின்னாலே ஓடிச் சென்று, துண்டுச் சீட்டை நீட்டுகிறார். படித்துப் பார்ப்பவர் அதிர்ச்சியில் உறைகிறார்.
என்னது திருவள்ளுவர் வந்திருக்கிறாரா..?
ஆமாம். மகாபலிச் சக்கரவர்த்தி வாமன ஜெயந்திக்கு வருவதுபோல் திருவள்ளுவர் வந்திருக்கிறாராம். இப்போது நாம் என்ன செய்ய..?
இது என்ன புதுக் கேள்வி. எப்போதும் என்ன செய்வோமோ அதையே இப்போதும் செய்வோம் என்று நடந்துகொண்டே டோப்பா விழுந்துவிடாமல் ஜாக்கிரதையாகத் திரும்பிச் சொல்கிறது பொம்மை.
பி.ஏ. புரிந்துகொண்டு செல் போனை எடுத்து நம்பரை அழுத்துகிறார்.
”நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்’ என்ற வசனம் எதிர்முனையில் ரிங் டோனாக ஒலிக்கிறது.
டோப்பா பொம்மை நடந்தபடியே தன் அறைக்குச் செல்கிறது.
பி.ஏ. அவரை உள்ளே அனுப்பிவிட்டு செல் போனில் பேச ஒரு தனி இடத்துக்கு வருகிறார். சிறிது நேரம் கழித்து போன் எடுக்கப்படுகிறது.
சொல்லு பிள்ளே...
ஸ்தோத்திரம் ஆண்டவரே....
அது கெடக்கட்டு. நானே உன்னை விளிச்சணும்னு நினைச்சேன். நேத்து நெசம்மாவே பொங்கலாடே கிண்டினீங்க...?
(குழம்பியபடியே) இல்லையே ஃபாதர்.
(பீப் சவுண்ட்) அப்பறம் எப்படிடே எனக்கு அது வந்துச்சு?
ஃபாதர் என்ன சொல்றீங்க... உங்களுக்கு ஸ்பெஷல் அய்ட்டம்ல நாலு பீஸ் கூடுதலாப் போட்டு அனுப்பியிருந்தோமே...
அப்ப எப்படிடே பொங்கலு மயிரு எனக்கு வந்துச்சு?
இருக்காதே அச்சோ...
தின்ன நான் கேணையனா?
அதை எப்படி அச்சோ உங்க முன்னால சொல்ல...
மவனே. உன்னை அங்க விட்டு வெச்சிருக்கறது பெரிய தப்புதான் போல...
இல்லை ஃபாதர். ஒருவேளை ஓசிச்சோறுக்கு அனுப்பின தூக்குவாளி மாறி உங்களுக்கு வந்திட்டோ....
நீ வேணும்னே அப்படிச் செஞ்சிருப்படே...
ஃபாதர் யாருக்கு மாத்தி அனுப்பினாலும் உங்களுக்கு அப்படிச் செய்வேனா ஃபாதர். அப்பறம் பாவ மன்னிப்பு கொடுக்க பெலம் இல்லாம போயிடுமே.
ஏதோ உன்ன மாதிரி விசுவாசிகள் இருக்கறதுனால தேவனின் மகிமை ரட்சிக்கபட்டு வருதுடே... சரி... எதுக்காக்கும் விளிச்சது. பிட் பேப்பர் என்ன பண்ணுது.
நேத்து எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் பண்ணிப் படிக்கறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு ஃபாதர். சப்ஜெக்டுக்கு தகுந்தாப்ல எழுதிக் கொடுங்க ஃபாதர்
ஒவனுக்கு வெள்ளைப் பேப்பரைக் கொடுத்தாலே வாய் கோணிக்கும். சரி... நீ என்னவோ சொல்ல வந்தியே...
ஒரு பெரிய சிக்கல் அச்சோ.
அது இப்போதைக்குத் தீரும்னு தோணல பாத்துக்கோ.
அதில்லை அச்சோ... திருவள்ளுவரு வந்து இறங்கியிருக்காரு.
அதாருடே....
அதான் திருக்குறள் எழுதினாருல்ல அவரு.
என்னடே சொல்லுத?
அவரு வள்ளுவர் குருகுலத்துக்கு வந்திருக்காராம்.
பின்ன கான்வெண்டுக்கா வருவாரு.
அதில்லை அச்சோ. திராவிட மாடல் ஆட்சி நடத்தற அறிவாலயத்துக்கு வராம வள்ளுவர் குருகுலத்துக்கு வந்தவரு நேரா மயிலாப்பூர் கோவிலுக்குப் போயிருக்காராம்.
அவரு எங்கேயும் போகட்டு. நமக்கென்ன.
இப்ப நாம என்ன பண்ணனும்னு சப்ஜெக்ட் கேக்குது.
வள்ளுவரை இது போய்ப் பார்த்தா எழுத்தாணியாலயே குத்திக் கொன்னுடுவாரேடே.
சாராயமும் மாமிசமும் அவருக்கு செரிக்கலைன்னா அதுக்கு நாம என்ன தப்பு பண்ணினோம் ஃபாதர்.
அதுகூடப் பெரிய விஷயம் இல்லைடே. பதநில சர்க்கரை போட்டிருக்கான்னு கேட்ட இவன் போய் அவர்கிட்ட பேச ஆரம்பிச்சா அவரு கத்த வித்தையெல்லாம் பயன்படுத்திக் கதற வேண்டியிருக்குமேடே.
அதுக்குத்தான் ஒரு வழி சொல்லுங்க அச்சோ. இப்ப என்ன பண்ணலாம்? வள்ளுவரை கூட்டிட்டுப் போய் தில்லில இவனுங்க சிம்மாசனத்துல உட்கார வெச்சு நாட்டையே சங்கிஸ்தானா ஆக்கிடுவானுங்களே.
அதெல்லாம் கவலைப்படாத... வைகாசி அனுஷத்துல வந்தாதான் ஒரிஜினல்... இப்ப வந்திருக்கறவரு டூப் அப்படின்னு ஒண்ணைக் கொளுத்திப் போட்டா நமக்கும் சேர்த்து அவனுங்களே கெடந்து மோதிப்பானுங்க.
அது வேலைக்காகும்னு தோணலை அச்சோ. அவரை மொதல்ல அறிவாலயத்துக்கு வரவெச்சு திராவிட மாடலைப் புகழ்ந்து நாலு புது குறள் எழுத வெச்சாகணும் ஃபாதர்.
அது எப்படிடே முடியும். அவரு மீ டூ கேஸ்ல எதுலயும் சிக்கியிருக்கமாட்டாரேடே.
அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை ஃபாதர். எதுனாச்சும் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தாப் போறும். அவர் எழுதினதா நாமளே ஒரு அறிக்கை கொடுத்துடலாம்.
பரவாயில்லையே... உனக்கும் கொஞ்சம் உச்சில இருக்கு போல.
உங்க கூட இருக்கேன்ல ஃபாதர். ஆனா அது மட்டும் போதுமா... வேறெதுனாச்சும் செய்யேண்டாமா?
நமக்கு இப்ப வள்ளுவரை வெச்சு ஆகவேண்டியது எதுவுமில்லை பாத்துக்கோ. அவரை இல்லாமலாக்கணும் அதாக்கும் சங்கதி.
என்ன பண்ணனும் சொல்லுங்க ஃபாதர். செஞ்சிரலாம்.
இதுல நமக்கு ரெண்டு பிளான் இருக்கு. ஒண்ணு அவரை தோமாவுக்க சீடன்னும் இயேசுவுக்க விசுவாசின்னும் சொல்லிப்பிடலாம். இல்லைன்னா வள்ளுவர் எழுதினது அம்புட்டும் சனாதனம்னு சொல்லி காலி பண்ணிடலாம்.
மொதலாவது தேறும்னு தோணலை ஃபாதர். திருமா வேணும்னா எழுதிக் கொடுத்ததைப் பேசிட்டுப் போவப்ல. நாலைஞ்சு அறிவு ஜீவிங்களுக்கு கொஞ்சம் பொரை போட்டா வாலாட்டிட்டு தின்னுட்டு எதுனாச்சும் கழிஞ்சிட்டுப் போகும் மத்தபடி முரசொலியான்களைத் தவிர வேற யாரும் இதை யாரும் நம்ப மாட்டானுங்க.
அப்பா இரண்டாவது பிளான் தான் சரிங்கற அப்படித்தான.
ஆமாம் ஃபாதர். அதை எப்படி செய்யலாம்?
அதுக்குத்தான் நமக்கு வசமாட்டு ஒரு அல்லக்கை ஒண்ணு கிடைச்சிருக்கே.
நமக்குக் கிடைச்சிருப்பது எல்லாமே அல்லக்கைதான ஃபாதர்.... எதைச் சொல்றீங்க.
இந்த அல்லக்கைகளுக்கெல்லாம் தலைவன்.
புரியலையே ஃபாதர்.
கொஞ்ச நேரத்துல அங்க வர்றேன் உனக்கே புரியும் என்று சொல்லிவிட்டு போனை அணைக்கிறார் ஃபாதர்.
சிறிது நேரத்தில் சர்ரென்று ஒரு கார் வந்து நிற்கிறது.
ஃபாதர் இறங்குகிறார். அவரைத் தொடர்ந்து இறங்கியவரைப் பார்த்ததும் பி.ஏ. அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.
அவர்கள் இருவரும் நேராக டோப்பா பொம்மை அமர்ந்திருக்கும் அறைக்குச் செல்கிறார்கள். சிறிது நேரத்தில் மூவரும் வெளியே வருகிறார்கள். கார்கள் வந்து நிற்கின்றன. ஃபாதர் முதல் வண்டியில் ஏறிக் கொள்கிறார். என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்ற வாசகம் பொறித்த அந்த வாகனம் முன்பாகவே செல்கிறது. டோப்பா தலையன் ஒரு வண்டியில் ஏறிக் கொள்கிறான். ஃபாதர் அழைத்து வந்தவரும் வண்டிக்குள் ஏற முயற்சி செய்ய, யோய் பெரிசு... ஃபுட் போட்ல தொங்கிட்டு வா என்று சுமோவின் பக்கவாட்டு விளிம்பில் அவரை ஏற்றிவிடுகிறான் ஒரு கறுப்பு பூனை.
இதுல நான் எப்படி நிற்க... உள்ள இடம் இருக்கே...
உள்ள இடம் இருந்தா உட்கார வெச்சிரணுமா... யார் யாருக்கு எந்த இடமோ அங்கதான் இருக்கணும் என்று கறுப்புப் பூனை சொல்கிறது.
உள்ளிருந்து காரின் கறுப்புக் கண்ணாடிகள் ஏற்றப்படுகின்றன.
அந்த உருவம் ஒரு கையால் வண்டி மேல் கம்பியையும் இன்னொரு கையில் மூத்திர வாளியையும் பிடித்துக்கொண்டு பேந்தப் பேந்தவென முழுத்தபடி நிற்க சரசரவென சீறிப் பாய்ந்து புறப்படுகிறது கான்வாய்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
RE: வள்ளுவர் குரு குலத்துக்கு திருவள்ளுவர் B. R. Mahadevan
Permalink  
 


(2)
ஃபுட் போர்ட் காட்சி சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக ஆரம்பிக்கிறது. அன்றைய தூக்குவாளியை ஆசையோடு பிரித்தபடி உட்கார்ந்திருந்தவர் அதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைகிறார். வேகமாக எழுந்திருப்பவரை கண் முன்னால் இருக்கும் பதார்த்தங்கள் தடுமாற வைக்கின்றன. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமா என்ற பதற்றம் ஏற்படுகிறது. நிதானமாக யோசித்து கொள்கையே சிறந்தது என்று முடிவு செய்து தூக்குவாளியை ரசித்து ருசித்து காலி செய்கிறார். அதன் பின் பாய்ந்து சென்று செல்போனை எடுக்கிறார். டோப்பா பொம்மைக்கு போன் போடுகிறார். கால் டைவர்ட் ஆகி நேராக ஃபாதருக்குச் செல்கிறது.
என்ன கோனாரே...
ஸ்தோத்திரம் ஆண்டவரே. எங்க இருக்கீங்க இப்ப..?
டிராவலிங்கல இருக்கேன்.
(பதறியபடியே) மாக்கான், ஐயாவை ஃபுட் போர்ட்ல தொங்க விட்டுட்டு எங்கயோ போறான்.
தெரியும்.
தெரியுமா?
நான் முன்னால இருக்கற வண்டியில போயிட்டிருக்கேன். அது பொறத்தால வருது. இப்ப என்ன விஷயம்... எதுக்கு இப்படிப் பதற்ர... ஆணை முத்து எழுதினதெல்லாம் மறந்திருக்கும் பெரிசுக்கு.
அதில்லை ஃபாதர். அதெல்லாம் அப்பவே அவருக்குத் தெரியும்.
மானங்கெட்ட பயலுகடா நீங்க...
நன்றி ஃபாதர்.
யோவ்... உன்னை நான் திட்டிட்டிருக்கேன்யா.
எங்களுக்கு இதெல்லாம் தங்கப்பதக்கம் மாதிரி ஃபாதர்.
வெளங்கிரும். விக்டோரியா மகாராணி உங்களை எப்படித்தான் விட்டுவெச்சாளோ... மிஷனரி பொசிஷனைத் தவிர ஏதுவுமே கூடாதுன்னு எங்களை மட்டும் தாலி அறுத்துட்டுப் போயிருக்கா.
ஆமாம் நீங்க அப்படியே அதோட நிறுத்திட்டிருக்கீங்கல்ல ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும். நம்ம கதைகளை மிட் நைட்ல பேசிப்போம்... இப்ப எங்க ஐயாவை அந்த மாக்கான் உலகமே பார்க்க அவமானப்படுத்தறான்... நீங்களும் அதைப் பார்த்துட்டு சும்ம இருக்கீங்க.
பிட் பேப்பரும் இப்படித்தான் மொதல்ல துள்ளினான். அப்பறம் உண்மையைச் சொன்னதும் அடங்கிட்டான்.
உண்மையைச் சொன்னீங்களா. என்ன உண்மையை..?
நீ பதறாதய்யா.. உங்கொய்யாவும் அவங்கொய்யாவும் முரசொலிலயும் விடுதலைலயும் கட்டிப் பொரண்டு போட்ட சண்டையை கொஞ்சம் எடுத்துச் சொன்னேன்.
கருமம் அதை ஏன் இப்ப ஞாபகப்படுத்தறீங்க.
அதையும் தங்கப்ப தக்கமா குத்திக்கோ கோனாரே.
நீங்க பழசையெல்லாம் கிண்டிட்டே இருக்காதீங்க. இப்ப இந்த பிரச்னைக்கு வழி சொல்லுங்க.
இங்க பாரு... இராயனுடையதை இராயனுக்கும் ரெளடிக்கு உரியதை ரெளடிக்கும் கொடுக்கணும்னு தேவ வசனம் சொல்லியிருக்குல்லா கோனாரே. யார் யாருக்கு என்ன இடமோ அதைத்தான் தர முடியும். அதிகாரத்துக்கு அவனுங்க... அடி தடி சண்டைக்கு நீங்க. அடியாளுக்கு சீட்ல இடமெல்லாம் தரமுடியாது. வெளில தொங்க இடம் கிடைச்சதே பெரிய விஷயம்தான்.
ஏன் ஃபாதர் இப்படி..?
உங்களைத் தூக்கி அதிகாரத்துல உட்கார்த்தியிருந்தா நாளைக்கு இயேசுவும் கடவுள்தான்; அவனைக் கும்பிடறவனும் காட்டுமிராண்டின்னு சொல்ல ஆரம்பிச்சிருப்பீங்கள்ல.
அவனுங்களும் நாத்திகம் தான ஃபாதர் பேசறாங்க.
எங்க... ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு எடுத்துக் கொடுத்திருக்கோம்ல.
எனக்கு ஒரு சந்தேகம் ஃபாதர்... அந்த ஒருவர் யாரு ஃபாதர்...
தேவன்னா யாரு பிள்ளே...
அப்போ முக்காலுங்க கதி...
அதோ கதிதான்.
விசுவாசமா பின்னாலயே வர்றானுங்களே ஃபாதர்.
என்ன செய்ய. கசாப்புக் கடைக்காரனை நம்பற ஒட்டகங்களுக்கு குழம்புல வேகறதுதான ரட்சிப்பு (மனதுக்குள்) ஐய்யயோ குழம்புன்னா இவன் கெளம்பிருவானே...
ஃபாதர் என்ன சொன்னீங்க...
பாம்புச் செவி... ஓநாய் மூக்குய்யா உனக்கு.
நன்றி பாதர். சாப்பாடுன்னு வந்துட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன். சரி இப்ப ஐயாவுக்கு ஒரு வழி சொல்லுங்க. அவரு இந்த வயசுல எதுக்கு வந்திருக்காரு. உயிலை மாத்தச் சொல்லிருவாரா...
ஒங் கவலை உனக்கு.
இத்தனை வயசுக்கு மேல உழைச்சுச் சாப்பிடச் சொன்னா என் கதி என்ன ஆகும் ஃபாதர். அதுகூடப் பரவாயில்லை... இன்னொரு கல்யாணத்துக்கு அடி போட்டா எதை விட்டுக் கொடுக்கறது நான்..? ஒண்ணொண்ணும் ஒண்ணொணுல கில்லியா இருக்குதுங்க.
கவலைப்படாத... இதுல உனக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும் தான. திருவள்ளூவரு வந்திருக்காராம். ஒங்கொய்யவை கூட்டிட்டுப் போய் அவரை விரட்டியடிக்கணும்.
ஃபாதர்... அது வேணுமா. இவனுங்க வேற உலகப் பொதுமறை அது இதுன்னு ஸ்ட்ராங்கா பேஸ்மெண்ட் போட்டு வெச்சிருக்கானுங்க. அதே ரூட்லயே போயிருவோமே.
அவனுங்களாவே போட்டு வெச்சிருக்கானுங்க இல்ல...
தப்பு ஃபாதர்... மன்னிச்சிக்கோங்க.
அப்ப மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்கு. இல்லையா.
அதான் சாரி கேட்டுட்டேனே ஃபாதர். வந்தவரை வரவேற்று நம்ம பக்கம் கொண்டுவந்திருவோம். பெரிசை எதுக்கு கிளப்பிவிட்டிருக்கீங்க?
வள்ளுவனை நம்ம பக்கம் கொண்டுட்டு வர முடியாதுய்யா... அம்புட்டும் வெஷம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
(இடை மறித்து) எங்கிட்டயேவா..?
இல்லை ஃபாதர். நம்ம ஆளுங்க தூக்கிப் பிடிக்கற மாதிரி நாலு வார்த்தைகளை அங்கயும் போட்டு வெச்சாச்சுல்ல.
கோனாரே.. முரசொலியான்களுக்கு அது போதுமா இருந்தது. இப்ப வாரவனுங்க அப்படி இல்லை. நாக்கைப் பிடுங்கற மாதிரி நாலு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டானுங்க.
அப்படி என்ன கேள்வி கேட்டுட்டானுங்க?
அந்தக் குறள் எந்த அதிகாரத்துல வருது?
அது ஃபாதர், பெருமைங்கற அதிகாரத்துல.
அது எதுல இருக்கு?
(சற்று தயங்கி) குடிப் பெருமை - குடிமை
அதுக்கு என்ன அர்த்தம்?
அது வந்து...
யோவ்... அதுல பூரா நல்ல குடில உயர்ந்த குடில பிறந்தவன் தான் உசந்தவன். தாழ்ந்த குடில பிறந்தவன் தாழ்ந்தவன்னு படிச்சுப் படிச்சு சொல்லியிருக்காருய்யா...
அது உண்மைதான ஃபாதர்...
அது உண்மைதான்யா... ஆனா அவர் பிறப்பை உயர்வா பேசலைன்னு சொல்லித்தான நாம அவரை நம்ம பக்கம் கொண்டுட்டு வந்திருக்கோம். ஏழு பிறவி, லட்சுமி, எண் குணத்தான், தெவசம், அந்தணர் பெருமை, குடிப் பெருமை, குலப் பெருமை, சரணாகதி, புலால் உண்ணாமை, மது உண்ணாமை எல்லாத்துக்கும் மேல ஒருத்தனுக்கு ஒருத்தின்னு வேற சொல்லியிருக்காருய்யா...
அய்யய்யோ... ஆபாசம் ஆபாசம்.
நீ நாங்க எழுதிக் கொடுத்ததைத் தவிர ஒண்ணுத்தையும் படிக்கமாட்ட. இப்ப வாரவனுங்க நாலெழுத்தையும் படிச்சுருவானுங்க. நீ விடுதலை, முரசொலி இதழ்களை பூட்டி வெச்சிருக்கற மாதிரி இவரோடதைப் பூட்டி வைக்கல்லாம் முடியாது. முழுசும் உலகுக்கே கிடைச்சிருச்சு. இவ்வளவு ஏன், உங்கொய்யா அதை ஒழுங்கா படிச்சதுனாலதானய்யா மலம்னு சொல்லியிருக்காரு.
அவரு எல்லாத்தையுமே அப்படித்தான் சொல்லுவாரு. இந்து மதமே தப்பு... அதனால் இந்து மதத்துல இருக்கற இலக்கியங்களுமே தப்புன்னு அவரு பேசறாரு.
அதனாலதான் அவரைக் கொண்டுபோய் வள்ளுவர் முன்னால நிறுத்தணும்னு சொல்றேன்.
அவரு அதோட நிறுத்த மாட்டாரே. தமிழ் மொழிய காட்டுமிரண்டி மொழின்னு சொல்லுவாரு.
அதுல என்ன தப்பு இருக்கு..? ஆதிமனிதன் காட்டுமிராண்டிதான. அப்ப ஆதி மொழி காட்டுமிராண்டி மொழியாத்தான் இருக்கும்.
ஃபாதர்... காட்டுமிராண்டியா இருந்தவங்க நாகரிகமடைந்ததோட அடையாளம் தான் மொழியே. ஆதி மனிதனோட மொழின்னா ஆதியில் நாகரிகமடைஞ்சவனோட மொழின்னு அர்த்தம். ஆப்ரகாமிய, ஐரோப்பாக்காரனுங்கள்ளாம் காட்டுமிராண்டியா இருந்தப்ப தமிழர்கள் செஞ்ச சாதனைகள் இது.
யோவ்... அதெல்லாம் எனக்குச் சொல்லித் தர்றியா நீ.... தமிழன் பேசின முதல் வார்த்தையே ஓங்காரம். வேதத்தோட ஆதாரம். அந்த சனானதனத்தை அழிக்கணும்னா தமிழையும் சேர்த்துத்தான்யா அழிக்கணும். அதை காட்டுமிராண்டி மொழின்னு சொல்லறவன் தான் நமக்கு வேணும்.
டம்ப்ளர் பாய்ஸ் பின்னி பெடலெடுத்திருவானுங்களே.
எடுக்கட்டும்.
எங்க ஐயா பாவம் இல்லையா. அதோட வள்ளுவரை அடிக்க இவர் நமக்கு வேணுமில்ல.
வள்ளுவரை இவர் அடிக்கட்டும்; இவரை ஆமைக்கூட்டம் கவனிச்சுக்கட்டும். நீ பீப் விருந்து, ஏகாதசி விருந்துன்னு வெளுத்து வாங்கு. நாங்க பாவ மன்னிப்பு கொடுத்துட்டு வாறோம். பரலோக சாம்ராஜ்ஜியம் ஃபாதர்களுக்கு இங்கேயே கிடைக்கட்டும்.
எங்களுக்கும் ஐம்புலன்கள் உண்டு ஃபாதர்.
அனுபவிச்சுக்கோங்க. ஈ.எம்.ஐ. எல்லாம் ஒழுங்கா கட்டி எந்தப் பஞ்சாயத்தும் இல்லாம மெயிண்டெய்ன் பண்ணிக்கோங்க. ஒரு வண்டிய ஒன்பது பேர் ஓட்டறதுல தப்பில்லை. ஒரே நேரத்துல ஓட்டப் பாக்கறதுதான் தப்புங்கற தேவ வசனத்தை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டா போதும்.
ஐயா மேட்டருக்கு இப்ப என்னதான் ஃபாதர் பண்றது?
என்னடா இவன் நொய்யி நொய்யின்னுகிட்டு. நம்ம தத்துவ முத்து சமுத்திரக் கனி என்ன சொல்லியிருக்காருன்னு தெரியாதா உனக்கு? இத்தனை வயசானவரை ஃபுட்போர்ட் அடிக்க விடறானேன்னு பார்த்தாத்தான்யா தப்பு... அதையே பாசிட்டிவ்வா, எவ்வளவு வயசானாலும் கொய்யால கெத்தா ஃபுட் போர்ட் அடிக்கிறார் பாரு... ஐ லவ் யூ கிழவா ன்னு ஃபயர் விடச் சொல்லுய்யா....
நம்ம இன்னோவா கூட இதையேதான் சொல்லியிருக்கு, காறித் துப்பினா கர்ச்சீப்பால துடைச்சிப்பேன் அப்படின்னு.
அவன்லாம் மாஸ்டர்ய்யா. நாஞ்சில் நாட்டுக்கு மட்டுமில்ல தமிழ் நாட்டுக்கே ஏன் உலகம் பூரா இருக்கற முரசொலியான்களுக்கெல்லாம் தலைவனா வரவேண்டியவன்... எப்படியோ மிஸ் ஆகிட்டான்யா.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(3)
குருகுலத்தில் இருந்து புறப்பட்ட வள்ளுவர் நேராக மயிலைக் கடற்கரைக்கு வண்டியை விடச் சொல்கிறார்.
பிறந்து வளர்ந்த ஊரில் அவருக்கு மிகவும் பிடித்த இடமாக அது இருந்திருக்கும்... இந்தக் கடலோரத்தில் அவர் பச்சிளம் பாலகனாக இருந்தது முதல் துள்ளி விளையாடியிருப்பார்... கடலலைகள் கால் நனைக்க வந்தபோது பயந்து பதறி அம்மாவின் அரவணைப்பில் ஓடி ஒளிந்திருப்பார். கடலலைகளால் அழிக்க முடியாத மணல் வீடுகள் கட்டி மகிழ்ந்திருப்பார். அதிகாலைகளில் சூரிய உதயத்தைப் பார்த்தபடி சூரிய நம்ஸ்காரம் செய்து வந்திருப்பார். இன்பத்துப் பாலை பெளர்ணமி நிலவொளியில் இந்தக் கடலோர மணல் வெளியில் அமர்ந்துகொண்டு எழுதியிருக்ககூடும்.
கடல் அலை இழுத்து வந்து தள்ளிய ஏதேனும் சின்னஞ் சிறு மீனை தன் இரு கைகளால் அள்ளி ஏந்தி கடல் அன்னையிடம் திரும்பக் கொண்டு சேர்த்திருக்கக்கூடும். தன் மனதில் அலையடிக்கும் அந்தக் கடலை அவர் பார்க்கத் துடிப்பது நியாயம் தானே என்று அவரை உடனே கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர் உடனிருந்த சனாதனிகள்.
கடற்கரை சாலை ஆரம்பித்த இடத்தில் நிறுத்தி, வாருங்கள் செல்வோம் என்று அழைத்தனர்.
”இல்லை, இந்தச் சாலையில் தொடர்ந்து செல்லுங்கள்’ என்று அவர் சொல்லவே கார் மெதுவாகச் செல்கிறது. வழியில் எதையும் பார்க்காமல் கண்களை மூடியபடி வருகிறார் வள்ளுவர். தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்று அருகில் இருந்தவர்களும் மெளனமாக வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் ஐயன், கைகை உயர்த்தி வண்டியை நிறுத்தச் சொல்கிறார். வண்டி நிற்கிறது. உள்ளே அமர்ந்தபடியே தலையை சற்று வெளியே நீட்டி, மெள்ளக் கண்களைத் திறந்து பார்க்கிறார். அங்கு தெரியும் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைகிறார்.
இது என்ன என்று குழம்பியபடியே கேட்கிறார்.
உடன் இருந்தவர்கள் எட்டிப் பார்க்கிறார்கள். அவர் கை காட்டிய இடத்தில் இருப்பது சாந்தோம் சர்ச்!
இது என்ன..? இது எப்படி இங்கே வந்தது என்கிறார் ஐயன்.
(உடன் இருப்பவர்கள் மெள்ளத் தயங்கியபடியே) இது சர்ச் என்கிறார்கள்.
இது எதற்கு இங்கே இருக்கிறது என்று கேட்டபடியே காரைத் திறந்துகொண்டு இறங்குகிறார்.
கடல் காற்றில் அவருடைய மேலாடை அவருடைய மனதைப் போலவே படபடக்கிறது.
அருகில் இருப்பவர்களில் ஒருவர் தன்னருகில் இருப்பவர் ஒருவரிடம் சற்று குனிந்து, ”புரிந்துவிட்டது... ஐயன் கபாலீஸ்வரர் கோவிலை இங்கு எதிர்பார்த்து வந்திருக்கிறார். அவர் கண் திறந்து பார்க்கும்போது ஈஸ்வரனின் உருவம் தென்படவேண்டும் என்று நினைத்துத்தான் கண் மூடி வந்திருக்கிறார் போல’.
அவர் காலத்தில் ஆலயம் கட்டப்பட்டிருந்ததா என்ன..?
மண் தளியாகவோ மரத் தளியாகவோ இருந்திருக்கும்.
சரி சரி... சீக்கிரம் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் செல்வோம் என்றபடியே திரும்பிப் பார்க்கிறார்கள். அதற்குள் ஐயன் சர்ச்சுக்கு நுழைந்துவிட்டிருந்தார்.
புனித தோமையர் என்ற திரைப்படத்தின் கதை விவாதத்தில் இருந்த பாதிரியார்கள் வள்ளுவர், சர்ச் நோக்கி வருவதைப் பார்த்ததும் மிகுந்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்து ஓடி வருகிறார்கள். ஈ.வெ.ராவை வைத்து திருவள்ளுவரை எதிர்க்க வேண்டிய ஸ்ட்ராட்டஜி குறித்த தகவல்கள் அவர்களுக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. கிறிஸ்தவ போதனைகளை தோமையரிடம் கேட்டுத்தான் திருக்குறளே எழுதினேன் என்று வள்ளுவரைக் கொண்டே சொல்ல வைத்துவிடலாம் என்று உற்சாகத்தில் வருகிறார்கள்.
இருண்ட சர்ச்சில் இருந்து வெள்ளை உடையில் சில உருவங்கள் பாய்ந்து வருவதைப் பார்த்ததும் முதலில் பதறிப் போகிறார் வள்ளுவர்.
அருகில் வந்த பின்னர் அவை மனித உருவங்கள்தான் என்பது உறுதியானதும் சற்று நிதானமடைகிறார். இருந்தும் அந்த இடத்தில் அந்த கட்டடம் இருப்பது அவருக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. பாதிரியார்கள் அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். எதுவும் பேசாமல் பின் தொடர்கிறார்.
உள்ளே அந்த கட்டடத்தில் ஏதோ அறுவை சிகிச்சைக் கூடத்தின் மேஜைகள் போல் வரிசையாக அடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். மேல் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் செந்நிற மரக்கட்டைகள் பார்ப்பதற்கு ராட்சஸ அருவாள்கள் போலிருக்கின்றன. கீழே அமர்ந்து பிரார்த்தனை செய்பவர்களை பலியிடும் அருவாள்..!
கைவிடப்பட்டதுபோல் இருந்த மிக நீண்ட அரங்கின் இறுதியில் ஒரு உருவம் தொங்கவிடப்பட்டிருந்தது. தாமரைப் பூவை மிதித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்த அதன் காலடியில் இரண்டு மயில்கள் நீ என் தெய்வம் அல்ல என்று சொல்வதுபோல் தலையை வேறுபக்கமாக கோபத்தில் திருப்பிக் கொண்டு நின்றுகொண்டிருந்தன.
திருவள்ளுவர் மரச் சட்டத்தில் தொங்கும் அந்த் உருவத்தைப் பரிதாபத்துடன் பார்க்கிறார்.
இது யார் என்று அருகில் இருக்கும் பாதிரியாரைக் கேட்கிறார்.
இவர் எங்கள் தேவன்...
தேவனா?
இந்த சிலுவையில் அடிக்கப்பட்டு தன் உயிரை தியாகம் செய்தார், உலக மக்களின் பாவங்களுக்காக.
வள்ளுவர் புரியாமல் முழிக்கிறார்.
உலக மக்களின் பாவங்களுக்கு இவர் தியாகம் செய்தாரா..?
ஆமாம். இயேசுவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.
இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று அருகில் இருப்பவர்கள் முழங்குகிறார்கள்.
இங்கிருந்த எம்பெருமான் எங்கே...?
பாதிரிகள் ஒன்றும் தெரியாததுபோல் யாரைச் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
(வள்ளுவருடன் வந்த சனாதனிகளில் ஒருவர்)
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்.
எந்தக் கபாலியைச் சொல்கிறீர்கள்? நெருப்புடா... நெருங்குடா... கபாலியையா?
அருகில் இருந்த பாதிரிகள் சிரிக்கின்றனர்.
ஆமாம் நெருப்பால் முப்புரம் எரிக்கும் அவனே தான். யாரும் நெருங்க முடியாத உயரத்தில் ஜொலிப்பவன்.
அவர்தான் அங்க உங்க கோவில்ல இருக்காருல்ல.
இதுதான் அவரோட உண்மையான கோவில்.
இது தோமயர் அற்புதங்கள் செய்து காட்டிய இடம். அய்யனே... உங்களுக்குத் தெரிந்திருக்குமே புனித் தோமயர். உங்கள் ஆசானே அவர்தானே.
என் ஆசானா... யார் இந்தத் தூமையன்.
தூமையன் அல்ல அய்யனே... தோமயன்.... இல்லை தோமயர்.
ஆமாம் யார் அவர்?
உங்களுக்கு கர்த்தரின் மகிமைகளையும் இயேசுவின் போதனைகளையும் கற்றுக் கொடுத்து நீங்கள் திருக்குறளை இயற்ற வழிகாட்டியவர்.
யார் இந்தக் கர்த்தர்... யார் இந்த இயேசு?
நீண்ட காலம் ஆகிவிட்டதல்லவா மறந்திருப்பீர்கள். ஐந்தவித்தான்- ஐவகை உறுப்புகளையும் அவியாக பலியாகத் தந்த இறைவன் என்று நீங்கள் இயேசுவைத்தானே பாடியிருக்கிறீர்கள்.
(வள்ளுவர் தாங்க முடியாமல் உரக்க கூவுகிறார்) பரம்பொருளே...
இதோ பரலோகத்தில் இருக்கும் பிதாவை அழைக்கிறீர்கள் பாருங்கள். அவர்தான் அவரே தான்.
(அருகில் நிற்கும் சனாதனிகளைப் பார்த்து) என்ன இதெல்லாம்?
ஐயனே... நீங்கள் இந்த வந்தேறி கும்பலின் வழிகாட்டியாம். 2000 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் உலகம் முழுவதையும் ரட்சிக்க ஒருவர் அவதரித்தாராம். அவரை அவருடைய குலத்தினரே ஆணியில் அடித்துக் கொன்றுவிட்டார்கள்.
ஏன் கொன்றார்கள்?
அவர் நானே மெசையா என்றார்.
அப்படியென்றால்...
நானே இறைவனின் குமாரன். உலகில் வாழும் பாவிகள் அனைவரையும் ரட்சிக்க வந்தவன் என்று சொன்னார். மன்னருக்கும் பிற பிரபுக்களுக்கும் எதிராக மக்களைத் திரட்டினார். கொன்றுவிட்டார்கள்.
ஐய்யோ பாவம்...
இரக்கப்படுகிறீர்கள் அல்லவா... இந்த இரக்கம் தான் இவர்களுடைய மதத்தின் முதலீடு. நமக்காக இவர் கஷ்டப்பட்டார் என்று கேட்டதும் மனம் இளகிவிடுகிறது.
உலக மனிதர்களுக்காக இவர் கஷ்டப்பட்டது உண்மையென்றால் உலக மக்களின் கஷ்டங்கள் மறைந்துபோய்விட்டனவா?
இல்லை... அவை பாட்டுக்கு இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
அப்படியென்றால் இவர் என்னதான் செய்தார்?
அவருடைய பாவங்களுக்கு அவருக்கு தண்டனை தரப்பட்டது. அவர் கஷ்டப்பட்டார். உலக மனிதர்கள் அவர்கள் செய்யும் பாவங்களுக்கு அவர்களுக்கு தண்டனை தரப்படுகிறது. அவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமது பாவங்களுக்கு அவர் கஷ்டப்பட்டார் என்று நம்பிக் கொள்வது இந்த கஷ்டங்களையெல்லாம் தாங்கிக் கொள்ள பெலம் தருகிறது.
என்னை அடித்தால் எனக்கு வலிக்கும். நான் அழுவேன். இன்னொருவர் என் வலியைத் தாங்கிக் கொள்வார் என்று சொல்லிக் கொண்டாலும் எனக்கு வலிக்கத்தானே செய்யும்.
(பாதிரியார் குறுக்கே புகுந்து) உங்கள் மீது ஒரு அடி விழுகிறதென்றால் விழ இருந்த பத்து அடிகளை இயேசு தாங்கிக் கொண்டுவிட்டார் என்று நினைத்துக்கொள்ளவேண்டும். அப்போது இந்த ஒரு அடியின் வலி மிகவும் இதமாகத் தோன்றும்.
பத்து அடி விழுந்தால்...
நூறில் இருந்து காப்பாற்றப்பட்டதாக நினைத்துக்கொள்ளவேண்டும்.
பிரமாதம். எந்தப் பெரிய கஷ்டம் வந்தாலும் இதைவிடப் பெரிதாக வரவில்லையே என்று நினைத்து சந்தோஷப்படவேண்டும். அந்தப் பெரிய பெரிய கஷ்டத்தை இயேசு தன் தியாகத்தால் தாங்கிக் கொண்டு போக்கிவிட்டார் என்று நினைத்து மகிழ்ந்துகொள்ளவேண்டும். அப்படித்தானே.
அப்படியே மகிழ்ந்துகொண்டே இருந்துவிடக்கூடாது. ஞாபகமாக தசம பாகம் கொடுத்துவிடவேண்டும்.
அது என்ன பாகம்?
மத வரி.
மன்னர்கள் ஆட்சி நிர்வாகத்துக்கு வரி விதிப்பது உண்டு அல்லவா அதுபோல் மதத்துக்கு விதிக்கப்படும் வரி இது.
அப்படியென்றால் மன்னருக்குத் தரவேண்டாமா...?
இல்லையில்லை. அது வேறு. இராயனுக்குள்ளதை இராயனுக்குத் தந்துவிடவேண்டும். பாதிரிக்கு உரியதை பாதிரிக்குத் தந்துவிடவேண்டும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், பாதிரிக்குக் கூடுதலாகக் கொடுத்தால் ராயனுடைய அதிகாரிகள் வரிகேட்டு வந்து நிற்காமல் இருக்கவும் வழி செய்து தரப்படும்.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் சர்ச் வாசலில் சரசரவென வண்டிகள் வந்து நிற்கின்றன.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

ஃபாதர் வேகமாக உள்ளே நுழைகிறார். சந்தோம் சர்ச் பாதிரிகள் அவரை எதிர்கொண்டு வரவேற்கின்றனர். நடந்தபடியே அவர்கள் அவர் காதில் ஏதோ சொல்கிறார்கள். அவரும் வள்ளுவரை நோக்கி வந்தபடியே, பதிலுக்கு வேறு ஏதோ சொல்கிறார். சிறிய வாக்குவாதம்போல் நடக்கிறது. இறுதியில் ஃபாதர் சொன்னதையே செய்யவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.
இதனிடையில் ஃபுட்போர்டில் வந்தவர் வண்டி நின்ற பின்னரும் தலை சுத்தியபடி இருக்கவே அவரை மெள்ள அங்கிருந்து இறக்குகிறார்கள். கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு சர்ச்சுக்குள் செல்கிறார்கள். படிகளை ஏறியவர் இனி தானே நடந்துகொள்கிறேன் என்று சொல்கிறார். இடையில் இருப்பவர்கள் எல்லாம் ஆற்றின் இரு கரை போல் ஒதுங்கி நிற்க கைத்தடியை மெள்ள ஊன்றியபடி மறு கோடியில் இருக்கும் ஐயனை நோக்கி நடக்கிறார்.
ஐயன் இவர் யார் என்று கேட்கிறார்.
(அருகில் இருக்கும் விசுவாசி ஒருவர்) இவர்தான் பெரியார்... தமிழினத் தலைவர். தமிழர்கள் இன்று சுய மரியாதையுடன் வாழ இவரே காரணம். இவர் இன்றைய வள்ளுவர்... நீங்கள் அன்றைய பெரியார்.
(அருகில் இருக்கும் சனாதனி) இவர் நீங்கள் இலக்கிய நயத்துடன் எழுதியவற்றை தங்கத் தட்டில் வைத்திருக்கும் மலம் என்று சொல்லியிருக்கிறார்.
(வள்ளுவர் திடுக்கிட்டு) என்ன சொன்னீர்கள்..?
ம...ல...ம்.
நான் தமிழர்களுக்கு யார்..?
தெய்வப் புலவர்... சமத்துவம் சகோதரத்துவம் பற்றி போதித்த ஆதி கவி.
அப்படியானால் என் எழுத்தை மலம் என்று சொன்ன இவர் எப்படி உங்களுக்கு தலைவராக இருக்கமுடியும்? இது தமிழகம் தானே...
இல்லை... தமிழ் நாடு...
(வள்ளுவருக்கு மேலும் குழப்பம் ஏற்படுகிறது) அப்படியென்றால் என்ன அர்த்தம்?
தமிழகம் என்றால் வெறும் ஒரு ஊர் போல் இருக்கிறது. தமிழ் நாடு என்றால் தனி நாடு என்ற கர்வம் வருகிறது.
ஓ... சரி... அந்த தமிழ் நாட்டில் நானும் உங்களுக்கு மரியதைக்குரியவன்... என் எழுத்தை மலம் என்று சொன்னவனும் மதிப்புக்குரியவனா... நீங்கள் எதைச் சாப்பிடுகிறீர்கள்?
உணவைத்தான்.
நல்லது. ஆனால், உங்களுக்கு எதிரெதிரான இரண்டு எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும்? தமிழ் நாடு என்பது பைத்தியக்கார விடுதியா? தமிழ் நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் பைத்தியங்களா? நான் எழுதிய எதுவும் உங்களை நல் வழிப்படுத்தவில்லையா?
ஐயன் சோர்வுடனும் சோகத்துடனும் தலையில் கை வைத்தபடி உட்கார்கிறார்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(4)
நல்வழிப்படுத்தும்படியாக நீவிர் எதையுமே சொன்னதே இல்லையே அய்யனே...
(ஐயன் அதிர்ந்துபோய்) என்ன சொல்கிறீர் நாயக்கரே?
நீவிர் கடவுள் நம்பிக்கையை எதிர்த்தீரா?
இல்லை. எதற்கு அதை எதிர்க்கவேண்டும். அதுதானே மனிதர்களை நல்வழிப்படுத்துகிறது.
இல்லை. இந்த உலகில் அனைத்தையும் கட்டுப்படுத்துவது கடவுள் என்ற நம்பிக்கை தானே எளிய மக்களை ஒடுக்குமுறைக்கு அடிபணிய வைக்கிறது. இதனால்தான் நான் எளிய மக்களின் குரலாக கடவுளை நம்புபவன், பரப்புபவன் எல்லாம் காட்டுமிராண்டி, முட்டாள், அயோக்கியன் என்று சொல்லிப் புரியவைத்திருக்கிறேன்.
(சிலுவையில் தொங்கும் உருவத்தைக் காட்டியபடி) நீவிர் பழிக்கும் கடவுளில் இந்தக் கடவுளும் வருவாரா..? கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் என்கிறாரே... தோமையரும் (பாதிரிகளைப் பார்த்து) நீங்களும் எல்லாம் அயோக்கியர்கள்தானா..?
(பாதிரியார் பதறியபடியே) இவர் சொல்வது கடவுள். எங்களுடையவர் கர்த்தர்; தேவ குமாரன்.
எல்லா வெங்காயமும் ஒண்ணுதான். நான் எல்லாத்தையும் தான் திட்டினேன்.
(பாதிரியார் வண்டி ரூட் மாறுவது தெரிந்ததும் தடுமாறி சமாளிக்கிறார்) இவர் மிகச் சிறந்த பெண்ணியவாதி (என்று சேஃபாக எடுத்துக்கொடுக்கிறார்)
ஆமாம். நான் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்திருக்கிறேன். அய்யனே நீவிர் எங்கேனும் ஆணாதிக்கத்தை எதிர்த்திருக்கிறீரா?
அதை நான் ஆதரிக்கவும் இல்லையே. இல்லறத்தில் ஆணும் பெண்ணும் சம மரியாதையுடன் பரஸ்பரம் மதித்து வாழவேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.
குடும்பம், இல்லறம், தாய்மை என்பதெல்லாம் பெண்கள் மீதான அடக்குமுறைதான். பெண் வழிச் சேறேல் என்றும் வரைவின் மகளிர் என்றும் எழுதியவை எல்லாம் பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் எழுதியவைதானே. உமது லட்சியப் பெண் என்பவள் வர்ணாஸ்ரமம் சொல்லும் கணவன் கிழித்த கோட்டைத் தாண்டாத சீதாபிராட்டிதானே.
பின் யாரை லட்சியமாக வடிவமைத்திருக்கவேண்டும்?
சீதை, தன்னைக் காட்டில் அலையவைத்த ராமனை விட்டுவிட்டு கவர்ந்து சென்ற மன்னன் ராவணனை மணந்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்திருக்கவேண்டும். வாலியின் மனைவி தாரை சுக்ரீவனுடன் சந்தோஷமாக வாழவில்லையா. அந்த ஆழ்மன உணர்வுகள், இயல்பான உணர்வுகளைத்தான் பெண்களுக்கு இலக்காக வைத்திருக்கவேண்டும். பெண்ணுக்கு மட்டும் எதற்கு கற்பு?
பெண்ணுக்கு கற்பை விதித்தது மானுட தர்மம். அதை கற்பை ஆணுக்கும் விதிக்க வேண்டும் என்று சொல்வது பரம தர்மம். நீவிர் பெண்ணுக்கும் கற்பு வேண்டாம் என்பது மிருக தர்மம்.
இயற்கையில் மனிதனும் ஒரு விலங்குதான்.
மனித இனம் அப்படி இருந்த ஆரம்ப காலகட்டங்களில் சுய நலம் சார்ந்ததாகவே இருந்தது. இதனால் எளியவர்களுக்கு மிகுதியான துன்பங்கள் நேர்ந்தன. அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்தான் தர்ம விதிகள் தோன்றின.
உணர்வுகளை அடக்குவது தர்மம் அல்ல. இயல்பாக இருப்பதுதான் நியாயம்.
மன்னருக்கு ராஜ்ஜிய விஸ்தரிப்பு அல்ல; நல்லாட்சி வழங்குவதே இலக்கு; பெருஞ் செல்வம் குவிப்பது அல்ல; தான தர்ம சிந்தனையே வைஸ்ய லக்ஷணம். போட்டி பொறாமை அல்ல; கூட்டுறவான சேவையே சமூக இலக்கு. கட்டற்ற புலன் துய்ப்பு அல்ல; இல்லறமே இலக்கு என அனைத்துக்கும் கடிவாளமிட்டு ஒழுங்குபடுத்தியிருக்கின்றன நம் தர்ம சாஸ்திரங்கள்.
ஆனால், அந்த தர்ம சாஸ்திரமும் அது சொல்லும் அமைப்புமே ஆதிக்கமயமாகிவிட்டன.
ஆயிரமாண்டுகள் ஆன சமூக அமைப்பில் ஆதிக்க சக்திகள் தமக்கான புதிய அதிகார வழிகளைக் கண்டுபிடித்துக்கொள்வது இயல்புதான். அவற்றைக் கண்டுபிடித்துக் களையவேண்டும். அதை மட்டுப்படுத்தி மனித நிலைக்குக் கொண்டுவந்தாகவேண்டும்.
அது நடக்கவில்லையே.
ஏன் இல்லை. அவ்வபோது அவதரிக்கும் ஞானிகள் அதைத்தான் செய்து வந்திருக்கிறார்கள். அதைவிடுத்து தர்ம சிந்தனையே அனைத்து தீமைக்கும் காரணம் என்பது சரியல்ல.
நான் இந்த நூற்றாண்டின் ஞானி. இது கொண்டாட்ட காலம். இதில் இன்பமே பிரதானம்.
நீவிர் சொல்பவை பழையபடி காட்டுமிராண்டி வாழ்க்கைக்கே சமூகத்தைக் கொண்டு செல்லும். அது எளியவர்களை மேலும் ஒடுக்கி அடக்கவே வழி செய்யும்.
(சனாதனி குறுக்கிட்டு) ஆமாம்... ஆமாம். பெண் சுதந்தரம், குடும்பம் தாண்டிய உறவு என்று இவர்கள் பேசுவது எல்லாமே என்ஜாய்மெண்ட் வித் அவுட் ரெஸ்பான்சிபிளிட்டி என்ற நோக்கில்தான்.
இதையெல்லாம் விதி விலக்காக, பலம் வாய்ந்த இருவருக்கு இடையிலான விதியாக வைக்கலாமே தவிர பொது விதியாக அல்ல.
(சனாதனி) பிளேட்டோ அதைத்தானே முன்வைத்தார். குடும்பம் என்று ஒன்று வேண்டாம். பெண்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். பொது உடமை. பெற்றோர் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டாம். சமூகமே அனைத்து குழந்தைகளையும் விடுதி அமைத்துப் பார்த்துக்கொள்ளும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் அது நிலைபெறவில்லை.
எப்படி நிலைபெறும். வலியதே வாழும் என்பது கானக விதி. அனைவருடைய நலன்... சர்வே பவந்து சுகினக என்பது நம் தர்ம சாஸ்திரம் வகுத்த விதி. இன்னொன்று கேட்கிறேன்... புலனடக்கம் தவறென்கிறீரே இந்த பாதிரிகளும் கன்யாஸ்த்ரீகளும் திருமணம் இன்றி இப்படி இருக்கிறார்களே இதை என்ன சொல்கிறீர் நாயக்கரே?
(சனாதனி சற்று குனிந்து) ஐயனே அவர்கள் திருமணமின்றி இருக்கிறார்கள்... புலனடக்கத்துடன் அல்ல;
என்னது?
(சனாதனி) இது வேறு விஷயம் ஐயனே... ஆனால், இந்த திக கும்பல் அனைத்து விமர்சனங்களையும் இந்துக்கள் மீதுதான் வைப்பார்கள். கன்யாஸ்த்ரீயிடம் சென்று இயல்பான காமம் பற்றிப் பேசமட்டார்கள். குடும்பப் பெண்களிடம் சென்றுதான் தாலியை அறுத்துப் போடு என்பார்கள்.
சூத்ரதாரியின் கை அசைப்புக்கு ஏற்பத்தானே ஆடமுடியும் பொம்மைகளால், அப்படித்தானே நாயக்கரே.
இல்லையே நான் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் விமர்சிக்கத்தான் செய்திருக்கிறேன்.
எங்கே...
என் எழுத்துகளில். பிராமணர்களுக்கு பயந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதென்பது சாணியை மிதிக்கப் பயந்து மலத்தை மிதிப்பது போல் என்று சொல்லியிருக்கிறேன்.
உமக்கு மலம் என்றால் ரொம்பவே பிடிக்கும் போலிருக்கிறது.
(சனாதனி) இவருடைய சிஷ்யர்கள் கூட ஆவணி அவிட்ட நாட்களில் தமது உடன்பிறப்புகளுக்கு பூணூல் போட்டுக் கொண்டாடுவார்கள்.
இருக்கட்டும். அவற்றை உமக்குப் பின் திக, திராவிட இயக்க மேடையில் என்றேனும் யாரேனும் பேசியிருக்கிறார்களா? உமது காலத்திலும் யாரையேனும் பேச வைத்திருக்கிறீரா... இந்துவை மட்டும் திட்டுவதாக பழி வந்துவிடக்கூடாதென்று ஒப்புக்கு ஓரிரு இடங்களில் பேசியிருப்பீர் அவ்வளவுதானே.
(சனாதனி) இந்து மதம் தான் எங்களை ஒடுக்கியது; எனவே அதை மட்டும் விமர்சிக்கிறோம் என்று புதிய ஏற்பாட்டு வசனங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டாயிற்று அப்படித்தானே ஈ.வெ.ரா.
நான் பெண் விடுதலை பற்றிப் பேசியவற்றைவிட பிராமணர்களை எதிர்த்துப் பேசியதே அதிகம். நான் யார் என்று கேட்டால் பெண்ணியவாதி, நாத்திகன், பகுத்தறிவுவாதி என்பதையெல்லாம்விட பிராமண எதிரி என்பதே என் பிரதான அடையாளம்.
உம்மை ஒரு ஞானி என்றீர். ஞானிகளும் தத்துவவாதிகளும் யாரையும் எதிரியாகக் கட்டம் கட்டமாட்டார்கள். அவர்கள் நல்ல மதிப்பீடுகளை அவை புரட்சிகரமானவை என்றாலும் ஒரு கொள்கையாக, தத்துவமாக மட்டுமே முன்வைப்பார்கள். ஆதிக்கம் செலுத்துவது தவறு என்பார்கள். அனைவரையும் சமமாக, சகோதரனாக நடத்து என்பார்கள்.
நானுமே பிராமணர்களை அல்ல; பிராமணியத்தைத்தான் எதிர்த்தேன்.
அப்படியானால் நீர் சொல்லும் பிராமணியம் என்பதை விட்டுவிட்டு வந்தவர்களுக்கு உமது கட்சியிலோ அரசாங்கத்திலோ இடம் கொடுத்தீரா..? பாம்பை விடு; பார்ப்பானை அடி என்று சொன்னது ஏன்?
சொன்னேனே தவிர செய்யவில்லையே.
அது சரிதான் ஹிட்லர் போல் வெறுப்பை பிராமண ஜாதி மீது உமிழ்ந்தீர். ஆனால், கொன்றிருக்கவில்லை. சரி... எதனால் பிராமணரை எதிர்த்தீர்?
அவர்கள்தான் இந்து சமூகத்தின் அத்தனை அடக்குமுறைகளுக்கும் காரணம்.
அவர்களிடம் என்ன அதிகாரம் இருந்தது? அவர்கள் மன்னர்களாக இருந்தார்களா..?
இல்லை.
பெருஞ்செல்வம் அவர்களிடம் குவிந்திருந்ததா?
இல்லை.
தொழில் நுட்பங்கள், தொழில்கள் அவர்களிடம் இருந்தனவா?
இல்லை. ஆனால், கல்வி அவர்களிடம் இருந்தது.
எந்தக் கல்வி? சிற்பக் கல்வி யாரிடம் இருந்தது?
சிற்பிகளிடம்.
வணிகக் கல்வி..?
வணிகர்களிடம்.
ஆயுத உற்பத்தித் தொழில்நுட்பம்...?
இரும்பு ஆசாரிகளிடம்.
விவசாயக் கல்வி?
நில உடமையாளர்களிடம்.
படகு கட்டும் தொழில்.
அதில் ஈடுபட்ட குலத்திடம்.
ஆக ஒவ்வொரு தொழிலும் அதற்கான கல்வியும் அந்தந்தக் குலத்திடம் இருந்திருக்கிறது. உலகம் முழுவதும் அப்படித்தான் அப்போது இருந்திருக்கிறது. இதில் பிராமணர் என்ன செய்தார்... எதைக் கற்றுத் தரவில்லை?
பிராமணர் உருவாக்கிய ஜாதிதான் குலத்தொழிலை மற்றவருக்குக் கற்றுத் தரவிடாமல் தடுத்துவிட்டது.
ஒரு தொழில் குலம் தனது தொழில் கல்வியை மற்றவருக்குக் கற்றுத் தராமல் இருந்ததில் பிராமணரின் பங்கு என்ன? ஒரு தொழில் குலம் தன் வசம் இருந்த கல்வியை மற்றவருக்கு ஏன் கற்றுத் தரவில்லை. பிராமணரிடம் ஆட்சி அதிகாரமும் இருந்திருக்கவில்லை. பெருஞ் செல்வமும் இருந்திருக்கவில்லை. மன்னரையும் செல்வந்தரையும் மீறி அவர்கள் அந்த அதிகாரத்தை எப்படிச் செலுத்தினார்கள்?
அவர்களிடம் மத அதிகாரம் இருந்தது. மூட மத நம்பிக்கையில் மூழ்கியிருந்த மக்களும், மன்னர்களும் செல்வந்தர்களும் அவர்களுடைய அடிமைகளாகச் சொன்னதைச் செய்தார்கள். பிராமணர் ஒழுங்காக வழிகாட்டியிருந்தால் மன்னரும் வணிகரும் குலத்தொழிலை வேண்டாம் என்று செய்திருப்பார்கள்.
இதையெல்லாம் நீங்கள் எதில் இருந்து தெரிந்துகொண்டீர்கள்?
எதையெல்லாம்?
கடந்த கால மன்னர்களும் செல்வந்தர்களும் பிராமணருக்கு அடிமையாக இருந்தனர்; அவர்களுக்கு சுய புத்தி கிடையாது என்பதை எப்படித் தெரிந்துகொண்டீர்கள்?
கடந்த காலத்துக்குப் போவானேன். கண் முன்னாலேயே பார்த்தேனே?
என்ன பார்த்தீர்கள்?
அவர்களின் மக்கள்தொகை 3% தான். ஆனால், அரசு வேலைகளில் 70%க்கு மேல் அவர்கள் இருந்தனர்.
அவர்களை அந்தப் பதவிக்கு நியமித்தது யார்..?
அது வந்து...
சொல்லுங்கள்.
பிரிட்டிஷார்.
அதாவது அன்றைய பிரிட்டிஷ் மன்னர்கள்தான் பிராமணர்களை அதிக அரசுப் பணிகளில் நியமித்திருக்கிறார்கள். அந்த பிரிட்டிஷ் மன்னர்கள் சொன்னதை இவர்கள் செய்தார்களா... இந்த பிராமணர்கள் சொன்னதை அந்த பிரிட்டிஷ் மன்னர்கள் கேட்டார்களா..? இந்த பிரிட்டிஷாரும் பிராமணர்களின் அடிமைகளா?
மெளனமாக இருக்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(5)
பிராமணர்களின் மக்கள்தொகை 3% தான். ஆனால், அரசு வேலைகளில் 70%க்கு மேல் அவர்கள் இருந்தனர்.
அவர்களை அந்தப் பதவிக்கு நியமித்தது யார்..?
அது வந்து...
சொல்லுங்கள்.
பிரிட்டிஷார்.
அதாவது அன்றைய பிரிட்டிஷ் மன்னர்கள்தான் பிராமணர்களை அதிக அரசுப் பணிகளில் நியமித்திருக்கிறார்கள். அந்த பிரிட்டிஷ் மன்னர்கள் சொன்னதை இவர்கள் செய்தார்களா... இந்த பிராமணர்கள் சொன்னதை அந்த பிரிட்டிஷ் மன்னர்கள் கேட்டார்களா..? இந்த பிரிட்டிஷாரும் பிராமணர்களின் அடிமைகளா?
ராமசாமி நாயக்கர் மெளனமாக இருக்கிறார்.
(அருகிலிருக்கும் சனாதனி ஐயனின் காதில் சற்று குனிந்து) மெரிட் அடிப்படையில் பிராமணர்களுக்கு அரசு வேலைகளில் இடம் கொடுத்ததோடு உலகம் முழுவதிலும் பிரிட்டிஷார் தம்முடைய எஸ்டேட்களுக்கு பட்டியல் ஜாதியினரையே கூலித் தொழிலாளர்களாக அடிமைகளாகக் கொண்டு சென்றும் கொடுமைப்படுத்தினார்கள்.
அவர்கள்தான் அனைவருக்கும் கல்வி கொடுத்தார்கள் என்று சொன்னார்களே. பட்டியல் ஜாதியினருக்குக் கல்வி தரவில்லையா?
தந்தார்கள். சொற்பமாக, அதி சொற்பமாக. சுதந்தரத்துக்குப் பின் காமராஜர் காலத்தில், கடைநிலை ஜாதிகளில் இருந்து படிக்க வரவேண்டும் என்று மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார். அதன் பின்னரே இடை, கடைநிலை ஜாதிகளில் அதிகம் பேர் படிக்க ஆரம்பித்தனர்.
ஏன் அப்படி?
கிராமப்புறங்களில் பத்து வயதிலிருந்தே ஏதேனும் களை எடுப்பது, காய் பறிப்பது, ஆநிரை காப்பது என வேலையில் ஈடுபட்டு வருமானம் ஈட்டிவிட முடியும். பள்ளியில் சேர்ந்தால் பட்டப்படிப்பு வரை படித்து முடிக்க சுமார் 20 வயதுவரை ஆகும். அதன் பின்னரும் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.
இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு வேலை கிடைக்குமே.
கிடைக்கும். ஆனால் கடைநிலை ஜாதியினருக்கு 100 வேலை என்றால் அதற்கு பத்தாயிரம் பேர் படித்து முடித்திருப்பார்கள். எனவே என்ன நேர்மையாக இட ஒதுக்கீடு அமலானாலும் வேலை இல்லாதவர்கள் நிறைய பேர் எல்லா ஜாதியிலும் இருக்கத்தான் செய்வார்கள். இதை தொலை நோக்குப் பார்வையோடு யோசித்துத்தான் ராஜாஜி, அரசாங்க வேலை மட்டுமே போதாது என்று கைவினைத் தொழில் என்று கற்றுக்கொடுக்க முன்வந்தார்.
(ஈ.வெ.ரா. ஆர்வத்துடன் இடை மறித்து) எதைச் சொல்கிறீர்கள், குலக் கல்வித் திட்டத்தையா?
இப்படிச் சொல்லித்தான் நீங்கள் ஓரங்கட்டினீர்கள். ஆனால் முதல் கல்வி அமைச்சர் ஜாஹிர் ஹுசேன் தலைமையில் காந்தியவாதிகள் முன்வைத்த திட்டம் அது. ராஜாஜியின் திட்டத்தை ஆய்வு செய்த பருலேகர் கமிட்டி கூட ரஷ்யா, ஜெர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதுபோன்ற கைவினைக் கல்வித் திட்டம் தான்; இதைத் தொடரலாம் என்றே சொன்னது. இவ்வளவு ஏன், நான் இந்த திட்டத்தைக் கொண்டுவந்திருந்தால் ஈ.வெ.ரா. எதிர்த்திருக்க மாட்டார் என்று காமராஜரே சொல்லியிருக்கிறார். ஆனால், அதைத் தந்திரமாக பிராமண சதி என்று சொல்லி அனைவரும் ஓரங்கட்டிவிட்டீர்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் படித்து முடித்து வந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் நடுத்தெருவில் நின்றார்கள். குலத்தொழிலும் தெரியாது. கைவினைத் தொழிலும் தெரியாது. படித்து வாங்கிய பட்டத்துக்கு வேலையும் கிடைக்காது. இதற்கெல்லாம் நீங்கள் கவலையேபடவில்லை. நாங்கள் தான் அனைவரையும் படிக்க வைத்தோம் என்று ஸ்டிக்கர் ஒட்டுவதிலேயே அனைத்தையும் முடித்துவிட்டீர்கள். இப்போதும் இடை நிற்றல், குறை படிப்பு என்பது கடைநிலை ஜாதிகளில்தான் அதிகம்.
ஆயிரம் ஆண்டுகள் நீடித்த வழிமுறையில் இருந்து மாறும்போது கீழே இருப்பவர்கள் மேலே வர ஓரிரு தலைமுறை ஆகத்தான் செய்யும்.
மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். முன்பு ஏட்டுக் கல்வி இல்லாமல் குலத்தொழில் செய்தவர்கள் இன்று அரசுப் பள்ளி, கல்லூரிகளில் ஏட்டுக் கல்வியில் பட்டப்படிப்பு முடித்து படிப்புக்கு சம்பந்தமே இல்லாத, முறை சாரா வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். அரசுப் பள்ளியில் படித்தவர்களில் ஒரு சதவிகிதம் கூட மருத்துவம், பொறியியல், கணினி, கல்வித்துறை என நல்ல வேலை எதிலுமே போக முடிந்திருக்கவில்லை.70-80%க்கு மேல் இன்றும் கூலித்தொழில், மளிகைக்கடை, ஜவுளிக்கடை, ப்ளம்பர், ஸ்விகி டெலிவரி பாய் எனதான் போக முடிகிறது. இத்தனைக்கும் அரசின் வருவாயில் 70% அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்துக்கு மட்டுமே போகிறது. தன்னிடம் படித்த மாணவர்கள் பெரும்பாலானவர்கள் இப்படி கடைநிலைப் பணிகளில் உழல்வது அரசுப் பள்ளியின் ஒரு ஆசிறியனுக்காவது உரைத்திருக்கிறதா?
திராவிட ஆட்சியிலுமா இந்த நிலை..?
திராவிட ஆட்சியினால்தான் இந்த நிலை. அவர்கள்தான் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக தமது கட்சிக்காரர்களுக்கு ஆசிரியர் போஸ்டிங் போட்டுக் கொடுத்தனர். இந்த திராவிட ஆட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத நிலையை நன்கு புரிந்துகொள்ள ஆதி திராவிடர் விடுதிகளையும் இலங்கை அகதிகள் முகாம்களையும் சென்று பார்த்தால் போதும்.
பிராமணருக்கு ஆதரவாகவும் பட்டியலினத்தினரை அடிமைப்படுத்தியும் வந்த பிரிட்டிஷாரை நாயக்கரே நீவிர் எதிர்க்கவில்லையா?
(சனாதனி) எங்கே... அந்த பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு போகாதீர்கள் என்று கெஞ்சியிருக்கிறார்.
(ஐயன் குழம்பியபடியே) என்ன சொல்கிறீர்கள்?
ஆமாம். தேசத்தின் சுதந்தர நாளை துக்க நாளாகவே கொண்டாடினார்.
அடக் கடவுளே... அப்படியானால் பிராமணர்கள்தான் அரசுப் பணிகளில் தொடர வேண்டும் என்று உள்ளூர விரும்பினாரா? அது சரி, பிரிட்டிஷார் ஏன் பிராமணர்களுக்கு அதிக இடம் கொடுத்தார்கள்?
அவர்களும் அதை விரும்பியோ திட்டமிட்டோ செய்திருக்கவில்லை. அனைவருக்கும் தந்த ஏட்டுக் கல்வியில் முதலிடம் வருபவர்களுக்கு மெரிட் பார்த்து பதவிகள் வழங்கினார்கள். அது பெரிதும் பிராமணர்களுக்கே கிடைத்தது.
அதை யாரும் அப்போதே எதிர்க்கவில்லையா?
1857-ல் இருந்தே பிராமணர்கள் அரசுப் பணிகளில் அதிகம் இருப்பதைப் பார்த்து பிரிட்டிஷ் தரப்பிலிருந்தே சிலர் அனைத்து ஜாதி, மதத்தினருக்கு இடம் தரவேண்டும் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறார்கள். ஆட்சியில் இருந்தவர்களோ மெரிட் அடிப்படையிலான தேர்வில் எந்த சமரசமும் செய்யமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்.
அது நியாயம் தானே.
ஆமாம். அனைவருக்கும் கல்வி தருகிறோம். முதல் மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வேலை தருகிறோம். யாரையும் மடியில் தூக்கிவைத்துக் கொஞ்ச முடியாது. யாரையும் விலக்கியும் வைக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டனர். 1900களில் முஸ்லிம் லீகை உருவாக்கி இந்தியர்களை மத ரீதியில் பிளவுபடுத்தியவர்கள் ருசிகண்ட பூனையாக, இந்துக்களை ஜாதி ரீதியில் பிரிப்பதற்காக 1920களில்தான் நீதிக் கட்சி என்ற ஒன்றை உருவாக்கினர் பிரிட்டிஷர். இட ஒதுக்கீட்டைத் தவிர்த்து மெரிட்டை அடிப்படையாக வைக்கும் அனைத்திலும் பிராமணர்களே முன்னிலையில் இருக்கிறார்கள்; இருப்பார்கள். சுதந்தரம் கிடைக்கும்வரை அதுதான் நிலை.
அப்படியானால் பிரிட்டிஷாரின் ஆட்சி தொடர்ந்திருந்தால் பிராமணர்கள்தான் அதே 60-70% இடங்களில் இருந்திருப்பார்கள்; பட்டியல் ஜாதியினர் பெரும்பாலானவர்கள் தோட்டத் தொழிலாளர்களாகவே இருந்திருப்பார்கள் இல்லையா நாயக்கரே.
அப்படி இல்லை.
வரலாறும் ஆதாரங்களும் அதைத்தானே காட்டுகின்றன.
இன்று நிலைமை மாறிவிட்டது. அதற்கு நாங்கள்தான் காரணம்.
என்ன செய்தீர்கள்?
குரல் கொடுத்தோம்.
யாருக்கு?
பிராமணரல்லாதவர்களுக்கு. இட ஒதுக்கீடு கிடைக்க நாங்களே காரணம்.
ஓ... நீங்கள் மன்னராக இருந்து போட்ட சட்டமா அது?
இல்லை. மத்திய அரசின் அமைச்சரவை கொண்டுவந்தது.
அந்த அவையில் நீங்கள் அங்கம் வகித்தீர்களா..?
இல்லை.
அரசியல் சாசனம் எழுதிக் கொடுத்தீர்களா?
இல்லை.
சாசனம் எழுதிக் கொடுத்த குழுவில் இருந்தீர்களா?
இல்லை;
(சனாதனி இடைமறித்து) அந்தக் குழுவில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் பிராமணர்களே. அல்லாடி கிருஷ்ண ஸ்வாமி ஐயர், கோபால ஸ்வாமி ஐயங்கார், மாதவ ராவ், டி.டி.கிருஷ்ணமாச்சரி, கே.எம்.முன்ஷி. அப்போது பிரதமராக இருந்ததும் ஒரு பிராமணரே. கவர்னர் ஜெனரலாக (ஜனாதிபதியாக) இருந்ததும் ஒரு பிராமணரே. அரசியல் சாசனத்தின் முன் வரைவை உருவாக்கித் தந்தவரும் ஒரு பிராமணரே.
ஆக, ஒற்றை பிராமணர் வடிவமைத்துத் கொடுத்ததன் அடிப்படையில் பிராமணர்கள் அதிகம் இருந்த குழு உருவாக்கிய அரசியல் சாசனத்தை ஒரு பிராமண பிரதமர் அங்கீகரித்து அமல்படுத்தியதால் உருவான மாற்றங்களுக்கு நீங்கள் காரணம். அப்படித்தானே ராம்சாமி.
(ஸ்டிக்கர் ஸ்டிக்கர் என்ற முழக்கம் உரக்க ஒலிக்கிறது)
பிராமணர்கள் பதவிகளில் இருந்த போதிலும் அரசியல் சாசனம் ஃப்ரான்ஸிடமிருந்து சமத்துவம்,சகோதரத்துவம், சுதந்தரம் என்ற கோட்பாட்டையும், மத்திய மாநில அரசு பாணியிலான ஆட்சியை ஆச்திரேலியாவிடமிருந்தும், நெருக்கடி நிலை அதிகாரத்தை ஜெர்மனியிடமிருந்தும், பிரதமர், ஜனாதிபதி கட்டமைப்பை இங்கிலாந்திடமிருந்தும், அடிப்படை குடி உரிமைகள், கூட்டாட்சி அமைப்பு இவற்றையெல்லாம் அமெரிக்காவிடமிருந்தும் பெற்றுக்கொண்டே உருவாகியிருக்கிறது. அதோடு, அரசியல் சாசனக் குழுவின் தலைவர் எங்களவர்.
யார் அது?
டாக்டர் அம்பேத்கர். பிராமணரல்லாதவர்.
(ஸ்டிக்கர் ஸ்டிக்கர் முழக்கம் மீண்டும் ஒலிக்கிறது)
(சனாதனி) அம்பேத்கர் தன்னை எப்படி அழைத்துக் கொண்டார்?
பட்டியல் ஜாதியினரின் தலைவர் என்று.
ஐயன்: இதில் நீங்கள் செய்தது என்ன?
(சனாதனி) அம்பேத்கர் அவருடைய ஆட்களுக்காகப் பார்த்து அதிக இடங்கள் எடுத்துக்கொண்டுவிட்டார். நம்மைத்தான் அம்போ என்று விட்டுவிட்டார் என்று பட்டியலினத்தினருக்குத் தரப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு முதன் முதலில் எதிர்த்துக் குரல் கொடுத்தது இவர்தான்.
(இன்னொருவர்) அதுமட்டுமா, உலக கிறிஸ்தவ நாடுகளிடமிருந்து விஷயங்களை எடுத்துக் கொண்டு, அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் சாசனத்தைக் கொளுத்தவும் செய்தார்.
அது ஏன்?
அது ஜாதி புத்தியுடன் இருப்பதாகச் சொன்னார்.
இந்த இரண்டில் எது உண்மை? அது கிறிஸ்தவ நாடுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவானதா... ஜாதிப் புத்தி கொண்டதா?
உண்மை யாருக்குத் தேவை? வெறுப்பு, பகை இதுதான் முக்கியம். முழு நேர வேலையே பிராமணரைத் திட்டுவதும் பட்டியல் ஜாதியினரை ஓரங்கட்டுவதும்தான்.
ஆக பிராமணரல்லதார் இயக்கம் என்றால் பிராமணர் மற்றும் பட்டியலினத்தினர் அல்லாதவர்கள்தான் அப்படித்தானே.
அப்படி இருந்தால் கூடப் பரவாயில்லையே... திராவிட இயக்கம் என்றால் ஒரு குடும்பம்... அந்த குடும்பத்துக்கு முட்டுக் கொடுத்தபடி கட்சிப் பதவி வகிக்கும் ஒரு நூறு குடும்பங்கள்... இவ்வளவுதான் இந்த இயக்கம். அதோடு எல்லா ஜாதிகளிலும் கிறிஸ்தவம், இஸ்லாமுக்கு மாறியவர்களுக்கு மட்டுமே உதவும் இயக்கம். கேட்டால் எங்கள் இயக்கத்தில் 80% பேர் இந்துக்கள் என்பார்கள். ஆனால் பதவி, சலுகை, முன்னுரிமை எல்லாம் க்ரிப்டோக்களுக்கு மட்டுமே தரப்படும். தமிழகத்தில் ரட்சணிய சேனைக்கு பெயர் திராவிட இயக்கம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(6)
சர்ச்சுக்கு உள்ளே இவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்க, எதுவும் தெரியாமல், ஃபாதர் கதவைத் திறந்து வா என்று உத்தரவு தராததால் உருட்டி வைத்த சப்பாத்தி மாவுபோல் காருக்குள் உட்கார்ந்துகொண்டிருக்கிறது டோப்பா பொம்மை.
ஐயனுக்கும் ஐயாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மோதலாக எப்படி மூட்டிவிடலாம் என்ற கவனத்திலேயே ஃபாதரும் இருந்ததால் மறந்துவிட்டார். சட்டென்று நினைவு வரவே சுற்று முற்றும் பார்க்கிறார். பொம்மையைக் காணவில்லை.
(ஃபாதரின் உதவியாளர்) யாரைத் தேடுகிறீர்கள் ஃபாதர்...
ஒவன் எங்கடே..?
விட்டுட்டு வந்த இடத்துலயே கெடக்கும்.
(தலையில் அடித்துக்கொண்டே) கீ கொடுத்துக் கூட்டிட்டு வாடே.
உதவி பாஸ்டர் சென்று காரின் கறுப்புக் கண்ணாடியில் மென்மையாகத் தட்டிவிட்டு கதவைத் திறக்கிறார்.
பொம்மை தலையை மட்டும் திருப்பிப் பார்க்கிறது. முகத்தில் புன்னகைக்கான தசைகள் முன்பே தரப்பட்ட உத்தரவுகளுக்கேற்ப விரிந்து சுருங்குகின்றன.
ஃபாதர் கூப்பிடுகிறார்.
ஃபாதர் என்ற வார்த்தையைக் கேட்டதும் சட்டென்று துள்ளி எழுகிறது பொம்மை. வெளியில் இறங்கியதும் சற்று தள்ளியிருந்த கறுப்புப் பூனைப்படை வேகமாக துப்பாக்கியை தூக்கிக் கொண்டு நெருங்குகிறது.
பொம்மை பதறுகிறது. ஒவ்வொரு தடவையும் இவர்கள் இப்படி நெருங்குவதைப் பார்த்து பதறுவது பொம்மையின் வழக்கம்.
மெதுவா வாங்கப்பா... சுடற மாதிரியே பாய்ஞ்சு வர்றீங்களே...
இவர்கள் பாதுகாப்புக்கு வருபவர்கள்தானே ஏன் இந்த பயம்?
எனக்கென்னவோ அப்படித் தோணலை. இவங்க இப்படி வர்றதைப் பார்த்ததும் என்னை கைதுசெய்யவோ சுட்டுக் கொல்லவோ வர்ற மாதிரியே இருக்கு.
’ஃபாதர் சொல்றதைக் கேட்டு நடக்கறவரை எதுக்கு பயம். தில்லில ஒரு டர்பன் பொம்மை பத்து வருஷம் ராஜா மாதிரி வலம் வரலையா..?
நான் அவரைப் போல் இல்லை. அவர் ஒரு முறை கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நான் மக்கள் பிரதிநிதி.
ஆனால், அவர் பொருளாதார மேதை, டாக்டரேட் முடித்தவர். உலக வங்கியில் வேலை பார்க்கும் அளவுக்குப் படித்தவர்.
’யெஸ் மேடம்’ என்று சொல்ல அவ்வளவு படித்திருக்கவேண்டிய அவசியமே இல்லையே.
அது சரிதான். ’யெஸ் ஃபாதர்’ என்று சொல்லப் போதுமான அளவு படித்த்தோடு மக்களின் ஆதரவும் பெற்றிருப்பதால் நீங்கள்தான் மேல் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று சொல்லியபடி பாஸ்டர் அழைத்துச் செல்கிறார்.
இவர்கள் வந்ததும் ஐயனையும் ஐயாவையும் சுற்றி நிற்கும் கூட்டம் விலகி நிற்கிறது.
இருவரையும் ஒரே நேரத்தில் அருகருகே பார்த்ததும் என்ன செய்ய என்று தெரியாமல் டோப்பா பொம்மை முழிக்கவே ஃபாதர், கை கூப்பி, கும்பிடு என்பதுபோல் சைகை காட்டுகிறார்.
பொம்மை நல்ல பிள்ளையாக, ஃபாதரைப் பார்த்துக் கும்பிடுகிறது.
ஃபாதர் தலையில் அடித்துகொண்டு, என்னை அல்ல இவர்களை என்று கை காட்டுகிறார்.
பொம்மை மேலும் நல்ல பிள்ளையாக தலையில் அடித்துக்கொள்கிறது.
ஃபாதர் மனதுக்குள் கதறுகிறார்: உமக்காவது ஒரு மணி நேரம்... எனக்கு வாழ் நாள் பூரா இந்தக் குருசைச் சுமக்க வேண்டியிருக்கே... ஆண்டவரே கடையந்தரத்தில் இருந்து மன்றாடுகிறேன்... இதை விரைந்துவந்து ரட்சியுமய்யா...
எப்படியாவது தப்பித்தாகவேண்டுமென்று, முன்னால் வந்து ஸ்டாலினை இருவருக்கும் அறிமுகப்படுத்துகிறார்.
இவர் தான் ஸ்டாலின். தமிழகத்தின் முதல்வர்.
(ஐயன் குழம்பியபடியே) இது என்ன மொழிப் பெயர்? தமிழில் ஒற்று முதலில் வராதே...
அது வடமொழிப் பெயர் என்று பாஸ்டர் சமாளிக்கிறார்.
வட மொழியிலும் இப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதில்லையே. வேர்ச்சொல் என்ன?
(சனாதனி) வேரும் கிடையாது விழுதும் கிடையாது. இது ஒரு மிலேச்சச் சொல் ஐயனே.
நல்ல தமிழ்ப் பெயர் எதுவும் இவருடைய பெற்றோருக்கு கிடைக்கவில்லையா? இவருடைய தந்தையின் பெயர் என்ன?
தட்சிணா மூர்த்தி என்கிற கருணாநிதி.
அருமையான சம்ஸ்கிருதப் பெயர்கள். அவருடைய தந்தையின் பெயர்?
முத்துவேலர்.
அதி அற்புதமான தமிழ்ப் பெயர்... வேலன் வம்சமா..?
ஆமாம். சைவ மரபினர். இசை வேளாளர் குடும்பம்.
ஐயன் எழுந்து நின்று கும்பிடுகிறார்.
(சனாதனி பதறிப் போய்) ஐயனே.... ஓங்கோல் குடும்பம் இது...
அப்படியென்றால்...
வேற்று மொழி, வேற்று மாநிலத்து வித்து.
எந்த மாநிலம்... என்ன மொழி..?
ஆந்திரம்.
வேங்கடவன் பூமிதானே. அப்படியானால், இந்து தர்ம வித்து தானே.
பிரச்னையே அதுதான் ஐயனே. இதோ நிற்கிறாரே ஈ.வெ.ரா. இவரும் சம்பிரதாயமான நாயக்க வம்சம் தான். முத்து வேலர் குடும்பமும் ஆசாரமான இசைவேளாளர் குடும்பம் தான். ஆனால், இந்த இரண்டு குலத்தையும் இந்து தர்மத்தையும் கெடுக்க வந்த கோடரிகளாகிவிட்டன அடுத்து வந்த இந்த வாரிசுகள்
என்ன ஆனது?
இதோ நிற்கும் ஃபாதிரி கும்பலுடன் சேர்ந்துகொண்டு பகுத்தறிவு என்ற போர்வையில் இந்து மரபில் இருந்து தம்மைத் துண்டித்துக்கொண்டுவிட்டன.
பகுத்தறிவா... அறிவு என்றாலே பகுத்து ஆராயக்கூடியதுதானே. மடமைதான் பகுத்து ஆராயும் திறமையற்றது. அறிவுக்கு அந்த முன் ஒட்டு தேவையே இல்லையே. நல்ல நல்லவர் என்றா சொல்வோம். நல்லவர் என்றாலே போதுமே.
அது இல்லை ஐயனே. இந்து மத வெறுப்புக்கு இவர்கள் சூட்டியிருக்கும் பெயர் பகுத்தறிவு.
ஓ... அப்படியா நாயக்கரே...
எங்களை சூத்திரன் என்று பழித்த மதத்தை நாங்கள் எதற்கு மதிக்கவேண்டும்?
(சனாதனி) முதலில் நாயக்கர்கள் எல்லாம் க்ஷத்ரியர்கள்/வைஸ்யர்கள். உங்களை யாரும் சூத்திரர் என்று சொல்லவில்லை. அப்பறம் சூத்திரர்களை யாரும் இழிவாகச் சொல்லவும் இல்லை.
வேசியின் மகன்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
தாசியின் மகன்கள்...
இரண்டும் ஒன்றுதான்.
இல்லை. தாசிகள் இன்றைய நடிகைகளைப் போன்றவர்கள். சுதந்தரம், சமூக மரியாதை, கலை ஈடுபாடு கொண்டவர்கள். அதிலும் தேவ தாசிகள் தெய்வ பக்தி மிகுந்தவர்கள். ஒருவகையில் பெளத்த பிக்குணிகள் போன்றவர்கள்.
பிக்குணிகள் நடனமாடமாட்டார்கள்.
இந்து தர்மத்தில் நடனக் கலையும் இறைவனை நோக்கிய பயணத்துக்கு வழி வகுக்கக்கூடியதுதான்.
தேவ தாசிகளுக்கு சமூக மரியாதை தரப்பட்டது என்றால் எல்லா ஜாதியில் இருந்தும் தாசிகளை வரவைத்திருக்கலாமே.
வந்திருக்கிறார்கள். தெய்வ கைங்கரியத்தில் முழு மனதைச் செலுத்துபவர்கள் கோவில் சார்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் நவீன குருமார்களின் அமைப்புகளில் பல பெண்கள் சேர்ந்துகொண்டு தமது வாழ்க்கையை பக்தியிலும் சமூக சேவையிலும் அர்ப்பணிக்கிறார்கள்.
(ஃபாதர் ஆர்வத்துடன்) நித்யானந்தாவின் சிஷ்யைகள் போலவா..?
ஆமாம். இன்னும் சரியாகப் புரியவேண்டுமானால் உங்கள் கன்யாஸ்த்ரீகள் போல; தெய்வத்தையே தம் மணாளனாக வரித்துக்கொள்வார்கள். நாயக்கரே இது பற்றி என்ன நினைக்கிறீர்?
ஒரு பெண் எந்தக் கட்டுப்பாடும் இன்றி தானாக எடுக்கும் முடிவு எதுவானலும் சரிதான்.
அப்படி வாருங்கள் வழிக்கு.
ஆனால், தாசிகளின் நிலை அப்படி இல்லையே. குலத் தொழிலாகத் திணிக்கப்பட்டது. சூத்திரர்கள் எல்லாம் வேசி மகன்களென்றும் இழிவுபடுத்தப்பட்டனர்.
இல்லவே இல்லை. தவறான விளக்கம். செம்மரக் கடத்தலில் பிடிபட்டவர்கள் தமிழர்கள் என்று சொன்னால், தமிழர்கள் எல்லாம் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று அர்த்தமில்லை. தாசியின் பிள்ளைகள் சூத்திரர்கள் என்று சொன்னால் சூத்திரர்கள் எல்லாம் தாசியின் பிள்ளைகள் என்று அர்த்தமில்லை.
அப்படித்தான் நடத்தப்பட்டோம்.
என்ன நாயக்கரே... நீவிர் கோடீஸ்வரர் அல்லவா? முதலியார்கள், முக்குலத்தோர்கள், கவுண்டர்கள், வேளாளர்கள், மூப்பனார்கள், தேவேந்திர குலத்தார், பறையர்கள் எல்லாருமே நில உடமையும் செல்வச் செழிப்பும் கொண்டவர்கள் அல்லவா?
எங்களைக் கருவறைக்குள் விடமாட்டார்கள்.
யார்..?
பிராமணர்கள்.
வேறு ஜாதி அர்ச்சகர்கள் இருக்கும் கோவிலின் கருவறைக்குள் போயிருக்கிறீர்களா?
இல்லை...
ஆகமக் கோவில் கருவறைக்குள் சங்கராச்சாரியாரால், ஜீயரால் போகமுடியுமா?
முடியாது.
பிற ஜாதி அர்ச்சகர்கள் தமது கோவில் கருவறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லையென்றால் அனைவரையும் அவரும் மதிக்கவில்லை என்று அர்த்தமா? ஆகமக் கருவறைக்குள் நுழையவிடவில்லை என்பதால் ஆச்சார்யார்களையும் அர்ச்சகர்கள் மதிக்கவில்லை என்று அர்த்தமா? பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் பெருமானுக்குமே கருவறையில் நுழைய அதிகாரம் கிடையாது.
நாங்கள் பக்தர்களுக்காகக் கேட்கிறோம்.
அர்ச்சகர்களைத் தவிர பிறர் நுழையக் கூடாதென்பது அந்த தெய்வத்துக்கும் அதை எழுந்தருளச் செய்த அர்ச்சகர், மன்னர், செல்வந்தர், பக்தர் அனைவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம். இன்றைக்கு வந்து அதை மாற்றச் சொல்ல நீங்கள் யார்..? உங்கள் அறக்கட்டளைக்கென்று சில விதிகளை நீங்கள் வகுத்திருக்கிறீர்கள். அதை நாங்கள் மாற்றச் சொல்லமுடியுமா?
முடியாது. ஆனால், பார்ப்பானுக்கு மட்டும் அனுமதி; பக்தியுள்ள பிற எவருக்கும் இடம் இல்லை என்பது சமத்துவ மறுப்பு. அதைத்தான் எதிர்க்கிறோம்.
கட்சியின் தலைவராக ஒரே ஒருவர் இருக்கவேண்டும் என்பது நீங்கள் உருவாக்கிய விதி. பின்னால் வரும் தலைவர் ஒருவர் அனைத்து ஜாதிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை ஒற்றைத் தலைமைக்குப் பதிலாக அமைக்கத் தீர்ம்மானித்தால் கட்சியின் விதிகள் அனுமதிக்குமா? கட்சிக்கென்று ஒரு கொடி வைத்திருக்கிறீர்கள். கறுப்புக் கொடியில் அல்லது கறுப்பு சிவப்பு கொடியில் நீலத்தையும் சேர் என்று சொன்னால் சேர்ப்பீர்களா? நீலம் பட்டியல் இனத்தினரின் நிறம். நீலம் இல்லாததால் அங்கு சமத்துவம் இல்லாமல் இருக்கிறது.
அதை பட்டியலினத்தினர் கேட்டால் பார்க்கலாம்.
இங்கும் பக்தர்கள் கேட்டால் பார்க்கலாம் என்று விட்டுவிடவேண்டியதுதானே. சமத்துவத்தை ஆலயக் கருவறைக்குள் மட்டும் நிறுவி விடத்துடிப்பது ஏன்?
(தொடரும்)


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(7)
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் : கருவறைக்குள் நுழைவதை விடுங்கள். எங்களையெல்லாம் அக்ரஹாரத்துக்குள்ளேயே நுழையவிடமாட்டார்கள். அது பெரிய அராஜகம் இல்லையா ஐயனே?
(சனாதனி) கூடி வாழ்வது விலங்குகளின் அடிப்படை குணம். ஆடுகள், பசுக்கள், சிங்கங்கள், புலிகள், யானைகள் என எல்லாமே குழுவாகத்தான் வாழும்.
மனிதர்கள் விலங்குகளா என்ன..?
விலங்குகளிடம் கெட்ட குணங்களும் உண்டு. நல்ல குணங்களும் உண்டு. மனிதர்கள் விலங்குகளிடமிருந்து நல்லவற்றைக் கற்றுக் கொள்ளலாம். சரி, விலங்கைச் சொன்னால் பிடிக்கவில்லையா..? பறவைகளை எடுத்துக்கொள்ளுங்கள். புறாக்கள் பிடிக்கும் அல்லவா.... அவை கூட்டமாக ஒன்றாக, கூடித்தான் வாழும். மயில்கள் ஒரு தனிக் குழுவாகத்தான் வாழும்.
அப்படியென்றாலும் மனிதர்கள் ஒரு குழுவாகத்தானே வாழவேண்டும். அக்ரஹாரத்தில் மற்றவருக்கு இடமில்லை என்று சொன்னது ஏன்?
மனிதர்களுக்குத் தொழில் சார்ந்து ஓர் அடையாளம் உண்டு. அதுவே அவர்களுடைய முக்கிய அடையாளம். வக்கீல்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்துக்கொள்கிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்துக் கொள்கிறார்கள். அதில் போய் சமத்துவம் கொடு. என்னையும் சேர்த்துக்கொள் என்று ஒரு மருத்துவர் கேட்க முடியுமா? அப்படிக் கேட்டு, முடியாதென்று சொன்னால் அது சமத்துவ மறுப்பு ஆகுமா என்ன? அதுபோல் தான் அக்ரஹாரமும். அது பிராமணர்கள் சேர்ந்து வாழும் சேரி; வேள்வி செய்யும் பிராமணர்கள் ஒன்று சேர்ந்து வாழும் சேரி வேள்விச்சேரி... வேளச்சேரி. அக்ரஹாரம் ஒரு ப்ரைவேட் கேட்டட் கம்யூனிட்டி. பணி, தேவை சார்ந்து யாரெல்லாம் வந்து போகலாம், வரக்கூடாதென்று முடிவு செய்வது அவர்களின் உரிமை. பாதுகாப்பு தொடங்கி பல காரணங்கள் அதில் இருக்கும். அதை எப்படி ஒடுக்குமுறை என்று சொல்வீர்கள்? இன்றும் எந்த நாடும் விசா இல்லாமல் தமது நாட்டுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை.
அப்படியானால் அக்ரஹாரம் தனி நாடு... பிராமணரல்லாதவர் தனி நாடு அப்படித்தானே. அதைத்தான் நாங்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்கிறோம்.
பிராமணர் அல்ல என்று சொல்ல்லாம். இந்து அல்ல என்று எப்படிச் சொல்லமுடியும்? இந்து தர்மத்தில் ஒவ்வொரு ஜாதியும் குலமும் தனி நாடுபோல் சுதந்தரமாக இயங்க முடிந்ததைப் போய் பிரிந்து கிடந்ததாகவும் சமத்துவ மறுப்பாகவும் சொல்கிறீர்களே. உங்கள் உடம்பில் கைக்கு என்று தனி வேலைகள் இருக்கின்றன. முதுகுக்கு தனி வேலைகள் இருக்கின்றன. இரண்டும் வேறு வேறானவை. ஆனால், ஒரே உடம்பின் அங்கம் தானே. அதுபோல் தான் ஜாதிகள் வேறானவை. ஆனால் ஒரே தர்மத்தின் அங்கங்கள்.
இது சரியல்ல.
ஏன்... அப்படியே வேறு என்று சொல்வதானாலும் பிராமணரல்லாதார் என்று ஒரு பொதுப் பிரிவு இருந்ததா என்ன? வேளாளர்கள் தெருவுக்குள் நாடார் நுழைய முடியாது. செட்டியாரின் தெருவில் ஆசாரி நுழைய முடியாது. தேவரின் தெருவில் தேவேந்திர்ர் நுழைய முடியாது. பறையரின் தெருவில் வண்ணார் நுழைய முடியாது. இப்படித்தானே இருந்தது. ஐநூறு சொச்ச சமஸ்தானங்கள் தனித்தனியாக இருந்தாலும் பாரத தேசம் ஒன்றே. ஆயிரம் ஜாதிகள் தனித்தனியே இருந்தாலும் இந்து தர்மம் ஒன்றே. பல நாடுகள் இருந்தாலும் உலகம் ஒன்றே என்ற மகத்தான உண்மையை இந்த உலகில் சொல்லாமல் சொல்வது நம் தர்மமே. நம் தேசமே.
யாதும் ஊரே யாவரும் கேளிர்... சர்வே பவந்து சுகினக...சர்வே சந்து நிராமயா... சர்வே பத்ராணி பஷ்யந்து. மா கச்சித் துக்க பாக்பவேத்... ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.
(பாரத் மாதாகி ஜே.... ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தில் அதிருகிறது சர்ச்)
ஒவ்வொரு தொழில் சங்கமும் பிற தொழில் புரிபவரைச் சேர்த்துக்கொள்ளாததுபோல் ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டினரை அனுமதிக்காததுபோல் ஒவ்வொரு ஜாதியும் இருந்திருக்கின்றன. இதில் என்ன தவறு நாயக்கரே?
அதுவும் இதுவும் ஒன்றா? பிறப்பின் அடிப்படையில் யாரையும் அவர்கள் விலக்குவதில்லை.
வேறு நாட்டவர் என்று பிறப்பின் அடிப்படையில்தானே வகைப்படுத்துகிறார்கள்.
ஆனால், சிலரையாவது அனுமதிக்கிறார்களே.
அக்ரஹாரத்திலும் பணி சார்ந்தும் தேவை சார்ந்தும் அனுமதிக்கத்தான் செய்தார்கள்.
வந்து போனதும் தண்ணீர் ஊற்றிக் கழுவுவார்கள். கண் முன்னே கூடச் செய்வார்கள். எவ்வளவு பெரிய அராஜகம். அவமானம்.
பதிலுக்கு நீங்களும் கழுவி ஊற்ற வேண்டியதுதானே.
அது வந்து...
ஏன் உங்களுக்கு உங்கள் மேல் சுய மரியாதை இல்லையா..?
நாங்கள் கண்ணியமானவர்கள். அதனால்தான் அவர்களிடமிருந்து விலகிவிட்டிருக்கிறோம்.
(பாதிரியார்) ஆமாம். அதனால் தான் இந்துக்கள் மதம் மாறி எங்கள் பக்கம் வருகிறார்கள்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
நாங்கள் கழுவி ஊற்றமாட்டோம். கை கொடுத்து அரவணைப்போம்.
(சனாதனி) ஆனால், குல தெய்வத்தை கைவிட்டுவிடச் சொல்வார்கள்.
ஆமாம், கஷ்டத்தில் இருக்கும்போது காப்பாற்றாத தெய்வத்தைக் கைவிடுவதில் என்ன தவறு?
கிறிஸ்தவத்துக்கு வந்த பின் கஷ்டமே வராதா?
வரும்...
ஆனா வராது என்று சொல்லவேண்டும் அப்படித்தானே. கிறிஸ்தவத்தில் இருக்கும்போது கஷ்டம் வந்தால் கிறிஸ்துவையும் கைவிடச் சொல்ல வேண்டியதுதானே.
இல்லை... கிறிஸ்தவத்தில் எது கிடைக்காவிட்டாலும் சமத்துவம் கிடைக்கும்.
அப்படியென்றால்...
(சனாதனி) தசம பாகம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் சமத்துவமாக அனைவரிடமும் பிடுங்கப்படும்.
கிறிஸ்தவம் லெளகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொடுக்கும். மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்று பொய் சொல்லி இம்மையில் ஒடுங்கிக் கிடக்கச் சொல்லாது.
லெளகிகத் தேவைகளை நேர் வழியில் பூர்த்தி செய்ய உதவி செய்யாது. அதிகார துஷ்பிரயோகம், சலுகை, போட்டியாளரை அழிப்பது இவற்றின் முலமே செய்யும். இதுகூடப் பரவாயில்லை. ஆனால், குல தெய்வத்தைக் கொன்றுவிடும். கண் முன்னே கழுவி ஊற்றுவது ஓர் ஒடுக்குமுறைதான். ஆனால், குல தெய்வத்தை மனதில் இருந்து பறித்து எறிவது அதைவிடப் பெரிய அடக்குமுறை அல்லவா? ஆக, உங்கள் முன்னால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்றின் வழியாகப் போனால் குல தெய்வம் கூட வரும். ஆனால், சமமாக நடத்தமாட்டார்கள். இன்னொரு வழியில் போனால் குல தெய்வம் கூட வராது. ஆனால் சமமாக நடத்தப்படுவீர்கள்.
(ஐயன்) இரண்டுமே ஒருவருக்குக் கிடைக்காதா..?
இப்போது இந்து மதத்தில் நிறைய மாற்றம் வந்தாயிற்று ஐயனே. சமமாகவும் நடத்துகிறார்கள். குல தெய்வத்தைக் கைவிடு என்று சொல்வதும் இல்லை.
ஃபாதர் : எங்கே சமமாக நடத்துகிறார்கள்?
ஐயனே இன்றைய மனு ஸ்மிருதியை எழுதிய குழுவின் தலைவர் ஒரு பட்டியல் ஜாதிக்காரர். அதைப் பற்றிப் பேசமாட்டார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மனு ஸ்மிருதியைப் பற்றி, அதுவும் தப்பும் தவறுமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் சாசனம் ஏட்டளவில் இருக்கிறது. நடைமுறை வேறாகத்தான் இருக்கிறது.
எங்கே அப்படி இருக்கிறது?
ஜனாதிபதியானால் கூட கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்கிறார்கள்.
இவர்களுக்கு இதைத் தவிர வேறு சொல்ல எதுவுமே இல்லை. கோவிலுக்குள் விடவில்லை... குளத்துக்குள் விடவில்லை என்றே கீறல் விழுந்த கிராமபோன் ரெக்கார்டு போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐயன் : அப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மையா?
பொய் ஐயனே... ஜனாதிபதிக்கு வேறு வேலைகள் இருந்ததால் கோவிலின் மேலேறிச் செல்லாமல் கீழிருந்தே வணங்கிவிட்டுச் சென்றுவிட்டார். அவருடைய மகள் கோவிலுக்குள் சென்று வழிபடத்தான் செய்திருக்கிறார். எல்லா ஜாதியினரும் தமது குல தெய்வங்களோடு பிற ஜாதி தெய்வங்களையும் வணங்க இன்று எந்தத் தடையும் இல்லை ஐயனே. இன்றைய ஜனாதிபதி, தேர்தலில் வெற்றி பெற்றதும் முதலில் தமது சிவன் கோவிலுக்குச் சென்று உரிய பூஜைகள் அனைத்தையும் தாமே செய்தார். இதையும் தவறு என்றார்கள்.
அது ஏன்?
அவர் முதலில் சர்சுக்குப் போயிருக்கவேண்டுமாம். திராவிட முதல்வர்கள் அதைத்தான் செய்தார்கள். வருங்கால முதல்வர்கள் கூட அதைத்தான் செய்கிறார்கள்.
வருங்காலத்தில் யார் முதல்வராவார் என்பது இப்போதே எப்படித் தெரியும்?
காங்கிரஸிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் தெளிவாகச் சொல்லிவிடமுடியும்.
எப்படி?
அங்கே தலைவர்களின் வீட்டில் குழந்தைகள் பிறப்பதில்லை. முதல்வர்களும் பிரதமர்களும்தான் பிறக்கிறார்கள். கட்சிக்காரர்களின் குழந்தைகள் எல்லாம் முதலில் பேசும் வார்த்தையே 200 உரூவா என்பதுதான்.
நம் தேசத்தில் மக்களாட்சி வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேனே.
உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி குடியரசு என்றும் கேள்விப்பட்டிருப்பீர்களே.
ஆமாம்.
ஆனால், இந்த இரண்டு கட்சியில் மட்டும் வாரிசுகள் தான் ஆட்சிக்கு வருவார்கள். வர முடியும்.
ஏன் அப்படி..?
சிலர் பல்லக்கில் ஏறி அமர்ந்திருப்பதும் சிலர் அதைத் தூக்கிக் கொண்டே இருப்பதும் எதனால் ஐயனே..?
ஐயன் மவுனமாக இருக்கிறார்.
சமத்துவம் இல்லை, சுதந்தரம் இல்லை என்றெல்லாம் இவர்கள் சொல்லும் பொய்களுக்கெல்லாம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை ஐயனே. இந்து தர்மம் இப்போது சமத்துவமும் தருகிறது. குல தெய்வத்தையும் வழிபட அனுமதிக்கிறது. கிறிஸ்தவம் சமத்துவம் தருவதாகச் சொல்கிறது. அதிலும் பல புகர்கள் உண்டு. ஆனால், குல தெய்வத்தை முழுமையாக ஒதுக்கிவிடுகிறது. இதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை.
(பாதிரியார் குறுக்கிட்டு) இல்லையே... நாம் கிறிஸ்தவர் கட்சி சார்பில்.... (சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டு) நாம் தமிழர் கட்சி சார்பில்...
(சனாதனி) தைரியமாகச் சொல்லுங்கள். நீதிக் கட்சி எங்கள் கட்சிதான் என்பதைச் சொல்ல 100 ஆண்டுகள் தேவைப்பட்டது. இது ஃபாஸ்ட் ஃபுட் உலகம். இப்போது நீங்கள் அவ்வளவு நாள் காத்திருக்கத் தேவையில்லை. அது நாம் கிறிஸ்தவர் கட்சிதான். சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்.
நாம் தமிழர் கட்சி இப்போது தமிழ் மரபையும் பண்பாட்டையும் ஆதரிக்கவே செய்கிறது.
ஐயன் : அது என்ன கட்சி.
திராவிட இயக்கம் 2.0
அப்படியென்றால் என்ன அர்த்தம்?
இரண்டாவது சுனாமி அலை.
முதலாவதைவிட பயங்கரமாக இருக்குமே.
ஆமாம், (சிலுவையில் இருப்பவரைக் கைகாட்டி) இவர் கூட இருந்து செய்பவை எல்லாம் அதி பயங்கரமாகவே இருக்கும்.
ஃபாதர் : அதெல்லாம் இல்லை. இந்து மதம் சமத்துவமும் தந்து குல தெய்வத்தையும் தக்கவைப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா. நாம் தமிழர் கட்சியும் அதுபோல் சமத்துவத்தோடு முப்பாட்டன்கள் முருகன், மாயோன் என தமிழ் தெய்வங்களை ஏற்றுக்கொள்ளவே செய்கிறது.
(சனாதானி) அது என்ன முப்பாட்டன்? முருகனை முப்பாட்டன் என்று அழைத்தால் இயேசுவை பூமர் அங்கிள் என்றுதானே அழைக்கவேண்டும்? அவர் மட்டும் தேவ குமாரனா?


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(எட்டு)
நாயக்கர்: கருவறையில், அக்ரஹாரத்தில் நுழையவிடவில்லை என்பவைகூடப் பெரிய பிரச்னைகள் இல்லை. ஒருவித ஈகோ மோதல்தான். அங்கே நுழைவதால் எதையும் பெறப்போவதுமில்லை. நுழையாததால் எதுவும் கிடைக்காமல் போகவும் இல்லை. ஆனால், குலத்தொழிலைப் புகுத்தி எங்களை ஒடுக்கிவிட்டார்கள். அதைத்தான் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.
சனாதனி: ஐயனே... பிரச்னையே இதுதான். உலகம் பூராவும் குலத்தொழில் இருந்தபோது இங்கும் அப்படியே இருந்தது. அனைத்து ஜாதியினரும் உலகின் பிற பகுதிகளைவிட சிறப்பாகவே வாழ்ந்தனர். பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்றார்கள். 2000 ஆண்டுகளாக மற்றவர்களைப் படிக்கவே விடவில்லை என்கிறார்கள்.
வள்ளுவர் : நான் படித்திருக்கிறேனே. என்னைப்போல் ஏராளமானவர்கள் படித்திருக்கிறார்களே.
ஐயனே, இவர்களுக்கு வரலாறு, உண்மை இவையெல்லாம் தேவையே இல்லை. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா... தெரியுமல்லவா. மூர்க்கனிடம் அதிகாரமும் கிடைத்துவிட்டால், கள் அருந்திய மந்தியைத் தேள் கொட்டிய கதைதான். உங்களைத் தமிழர்களின் ஒரே விடிவெள்ளி என்பார்கள். உலகப் பொதுமறை என்பார்கள். ஆனால், உங்கள் ஜாதியினருக்கு கல்வி தரவே இல்லை என்றும் சொல்வார்கள்.
பகுத்தறிவு என்று ஏதோ சொன்னார்களே... இந்த வாக்கியங்களைப் பகுத்து ஆராயவே வேண்டாம்; காதில் கேட்டாலே பொய் என்பது புரிந்துவிடுமே.
அதற்குத்தான் புதிய ஏற்பாட்டில் புதிதாக யோசித்து சேர்த்திருக்கிறார்கள். உமக்குக் கல்வி கொடுத்தது தோமாயர். உங்கள் ஒருவருக்கு மட்டும் கல்வி கொடுத்துவிட்டு 16-ம் நூற்றாண்டுவரை தலையே காட்டாமல் ஓடிவிட்டார்கள்.
என்னவொரு அறிவீனம்?
இதென்ன பெரிய விஷயம். நீவிர் குறளை எழுதியதற்கும் ஈ.வெ.ராவே காரணம் என்று சொல்லவில்லையே என்று சந்தோஷப்படுங்கள்.
எதனால் இந்த இழி புத்தி?
அது கிறிஸ்தவத்தின் குறுக்குவழி. கிறிஸ்தவத்துக்கென்று எந்தவொரு உண்மையான தத்துவமும், விழாவும், மரபும், வரலாறும் கிடையாது. இருப்பதெல்லாம் வன்முறையும் புற கலாசார அழிப்பும் தான். அதை மறைக்க சென்ற இடங்களில் இருக்கும் விழாக்கள், கலாசாரங்கள், ஞானிகள், போதனைகள், புராணங்கள் அனைத்தையும் கைப்பற்றி தமதாக்கிக் கொள்வார்கள். உருவ வழிபாடு, கொடிமரம், கொடியேற்றம், காமாட்சி விளக்கு, காவி, பாத யாத்திரை, முடி காணிக்கை, ஆலயம் என்ற பெயர், தாய் தெய்வ வழிபாட்டு வேர்கள் கொண்ட நம் தேசத்தில் மேற்குலக கன்னி மரியாளை அன்னை மரியாள் என்று சொல்வது என அனைத்தையும் கபளீகரம் செய்துவிட்டார்கள்.
அப்படியாவது அந்த கலாசாரம் நீடித்தால் நல்லதுதானே.
இல்லையே ஐயனே... இவர்கள் புற அடையாளங்களை மட்டுமே திருடுவார்கள். ஆன்மாவை விட்டுவிடுவார்கள். இந்து தர்மத்தின் ஆதாரம் மையம் அழிந்த அமைப்பு; பன்முகத் தன்மை; பல தெய்வ வழிபாடு. ஒவ்வொரு ஜாதியும் அவரவர் குல தெய்வங்களுடன் நேற்றுவரை நிம்மதியாக வாழ்ந்து வந்தன. இவர்கள் அந்த குல தெய்வங்கள், அதன் வழிபாட்டு மரபுகள் அனைத்தையும் அழித்து இயேசு மட்டுமே தெய்வம்; கிறிஸ்மஸ் மட்டுமே விழா என்று ஒற்றைப்படியாக்கிவிடுவார்கள். இவர்களுடைய வழியில்தான் திராவிட இயக்கமும் செயல்படுகிறது. அனைத்தையும் திருடுவது. உண்மையில் அந்த இயக்கத்தில் திருடர்கள், முட்டாள்கள் இந்த இரண்டு பேருக்கு மட்டுமே இடம் உண்டு. கட்சியின் உண்மைப் பெயரே திருட்டு முட்டாள் கழகம் தான்.
என்னைப் புகழ்கிறார்களே?
இவர்கள் ஒருவரின் தலையைத் தடவினாலே மொட்டையடிக்கப் போகிறார்கள் என்றுதான் அர்த்தம். உம்மைப் புகழ்வதன் ஒரே காரணம், உம்மை வைத்து இந்து மதத்தைத் திட்டலாம். அதுதான் ஒரே நோக்கம். நீவிர் பிறப்பொக்கும் - பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா... குலத் தொழில் மரபு பிறப்பை வைத்து ஒருவருடைய வேலையையும் சமூக அந்தஸ்தையும் தீர்மானிக்கிறதல்லவா; அதனால் நீவிர் குலத்தொழிலுக்கு எதிரானவர் என்று களமாடுகிறார்கள்.
பிறப்பால் அனைவரும் சமம் என்பது உயிரியல் மருத்துவ உண்மை. எல்லாரும் தாயின் வயிற்றில் பத்து மாதவிடாய் காலம் வளர்கிறார்கள். அனைவருக்கும் இரண்டு கண்கள், இரண்டு கைகள் என எல்லாம் ஒன்றே. உள்ளே ஓடும் ரத்தம் ஒன்றே என்ற அர்த்தத்தில் சொன்னேன். அடுத்த வரியிலேயே செய்யும் வேலையால்தான் சமூக அந்தஸ்து தீர்மானமாகிறது. அது சரிதான் என்று சொல்லியிருக்கிறேனே.
அது யாருக்கு வேண்டும். உயர் குடியில் பிறந்தவர்கள் உயர்ந்த குணத்துடன் இருப்பார்கள் என்று கூடச் சொல்லியிருக்கிறீர்கள்.
விதி விலக்குகளும் உண்டு. ஆனால் பெற்றோரின் சிந்தனை, வாழும் சூழலின் தாக்கம் இவையெல்லாமே பெருமளவுக்கு ஒருவருடைய ஆளுமையைத் தீர்மானிக்கும் என்பதால் அப்படிச் சொன்னேன்.
ஆமாம். ஆனால், இவர்கள் அதைத் திரித்துக் கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த குணத்துடன் இருப்பவர்களே உயர் குடி என்று நீங்கள் சொன்னதாக பொழிப்புரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
குடிப் பெருமையில் நான் அப்படிச் சொல்லவில்லையே.
நாயக்கர் : அதனால் தான் நான் உம்மை ஆரிய வேதம் படைத்தவர் என்று இழிவுபடுத்தி விமர்சித்திருக்கிறேன்.
ஆரியர் என்றால் கண்ணியம் மிகுந்தவர், மரியாதைக்குரியவர் என்று தானே அர்த்தம். அது எப்படி விமர்சனமாகும்.
மூடர் கூட்டத்தில் பெரு மூடர் தானே பேரறிஞராக முடியும். உலக மரபில் இருந்து விலகி, இவர்கள் குலத் தொழிலைப் பழிக்க முக்கிய காரணம். ஐரோப்பியர்-பிரிட்டிஷார் வந்து குலத்தொழில் தவறு என்று சொன்னார்கள். இவர்களும் அதையே பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். பிரிட்டனில் இருந்த பிராமண, சத்ரிய, வைசிய, சூத்திர குலங்கள் எல்லாம் குலத்தொழில் காலத்தில் இருந்து நவீன காலத்துக்கு மாறியபோது அவர்களுடைய முன்னோர்கள் குலத்தொழிலில் ஈடுபட்டுவந்ததைப் பழிக்கவே இல்லை. அன்றைய சமூக அமைப்பு அது; இன்றைய சமூக அமைப்பு இது என்று இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
நாமும் அப்படி ஏற்றுக்கொண்டிருக்கலாமே.
அதைத்தான் செய்ய விடவில்லை. இதோ இந்த ஈ.வெ.ரா.வின் பெற்றோர் குலத்தொழிலில் ஈடுபட்டுத்தான் சமூகத்தில் உச்சத்தில் இருந்தார்கள். சத்ரியர்கள், வைஸ்யர்கள், நில உடமையாளர்கள், சிற்பிகள், தொழில் குலங்கள் எல்லாமே அப்படித்தான் இருந்தன. நவீனத்தின் குரலாக வந்த கிறிஸ்தவர்கள் குலத் தொழில் தவறு என்று சொன்னதும் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
அதில் தவறில்லையே.
நவீன காலத்துக்கு ஏற்ப தொழில்களில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அதை நமது மரபின் நீட்சியாக நமது தொழில்களின் இலக்குகளின் அடிப்படையில் முன்னெடுத்திருக்கவேண்டும். நமக்கு எல்லாமே முக்தியை நோக்கிய பயணம். சுற்றுலா என்றால் புனித யாத்திரை. கலை என்றால் கோவில் கலைகள்; வணிகம் என்றால் தான தர்மங்களுக்கானவை. கல்வியென்றால் ஆத்ம ஞானத் தேடல். மக்கள் அனைவருமே தம்மை ஒரு ரிஷியின் வழித்தோன்றலாகத்தான் சொல்லிக் கொள்வார்கள். இந்த தர்ம சிந்தனையை நீக்கிவிட்டு வியாபார புத்தி, சுய நலன், நுகர்வு வெறி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ, மேற்கத்திய அணுகுமுறையை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர்கள் யாரை முன்மாதிரியாகக் கொள்கிறார்கள்?
எவர் ஒரு தீவில் காலை வைத்துவிட்டு அந்தத் தீவு முழுவதும் தமக்கே சொந்தம் என்று சொல்கிறாரோ அங்கிருக்கும் பூர்வ குடிகளை அழித்தொழிக்கும் அவருடைய காலனிய ஏகாதிபத்திய ராஜ வெறிக்கு நியாயம் கற்பித்து எவர் போலி ஆன்மிகம் பேசுகிறாரோ எவர் உலகைச் சுரண்டி தன் நாட்டுக்குச் செல்வங்களைக் கொண்டுவந்து குவிக்கிறாரோ அவர்களே இவர்களின் பெருமைக்குரிய பிதாமகர்கள். நம்மவர்கள் இவர்கள் சொல்வதைக் கேட்டு குலத்தொழில் மரபை மாற்றிக் கொண்டதில் தவறில்லை. குல தர்மத்தை, குல தெய்வத்தை மாற்றவைத்துவிட்டார்கள்.
அவர்கள் மாறச் சொன்னால் நம்மவர் ஏன் மாறினார்கள்?
எளிய கேள்விதான் ஐயனே. இன்றும் மாறாமல் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் குல தெய்வத்தைக் கைவிட்டவர்களை அதிகாரம், செல்வ வளம், கல்வி, ஊடகம் என அனைத்திலும் நிரப்பிவிட்டு சூழலை நச்சுக்காற்றால் நிரப்பிவருகிறார்கள். இதோ இந்த தலைநகரைச் சுற்றி ஓடும் கூவத்தைப்போல் ஆக்கிவிட்டார்கள். நீவிர் முதலில் அதை வந்து பார்த்தாகவேண்டும். இங்கிருந்து புறப்படுங்கள் முதலில்.
கூவத்துக்கு என்ன குறை... நாங்கள் துள்ளிக் குதித்து திடும் எனப் பாய்ந்து ஆழத்து மண் அள்ளி வந்து ஆடிப்பாடிய ஆறு அல்லவா... பாய்ந்தோடிய பகுதிகளில் படித்துறை தோறும் புனித நீராடல்கள், அமாவாசைகளில் நீத்தார் கடன் செய்யும் போதெல்லாம் கரையெங்கும் வந்து குழுமும் காகங்கள். மழைக்கால வெள்ளங்கள் கொண்டுவந்து குவிக்கும் வண்டல் மண்ணால் வளம் பெறும் தேசம் அல்லவா இது. ஆடிப்பெருக்கு காலத்தில் மலராடையும் உதயாதி அஸ்தமனங்களில் செங்காவி வஸ்திரமும் பெளர்ணமிகளில் பொன், வெள்ளிக் கவசங்களும் தரிக்கும் நதியன்னை அல்லவா. அல்லிக்கேணி வாசிகளின் அருகமை கங்கையாக அல்லவா அது இருந்தது.
நல்லது ஐயனே... நீவிர் இங்கேயே இரும்.
ஏன்... இப்போது தானே கூவம் நதியைப் பார்க்கலாம் என்று ஆசையாகச் சொன்னீர்கள்.
நீங்கள் சொல்லும் அந்த நதி இப்போது இல்லை ஐயனே.
என்ன ஆயிற்று சரஸ்வதி நதிபோல் வற்றிவிட்டதா..? மண்ணுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறதா இப்போது?
அப்படி ஆகிவிட்டிருந்தால் கூடப் பரவாயில்லை என்றும் சொல்லுபடியாக ஆகிவிட்டது ஐயனே.
எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நான் அதைப் பார்த்தாகவேண்டும் என்று ஐயன் ஆர்வத்துடன் எழுந்திருக்கிறார். சனாதனி வழி நடத்திச் செல்ல அனைவரும் ஐயனைப் பின் தொடர்கிறார்கள்.
தென்படும் முதல் பாலத்தினருகே வண்டியை நிறுத்தி வள்ளுவரை அழைத்துச் செல்கிறார்கள்.
அவரால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. உத்திரியத்தால் நாசியை மூடிக்கொள்கிறார்.
இங்கு எதற்கு நிறுத்தியிருக்கிறீர்கள்? நதிக்கரைக்கு அல்லவா அழைத்துச் செல்லச் சொன்னேன். சாக்கடைக்கு அருகில் எதற்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்.
உடன் இருப்பவர்கள் என்ன சொல்ல என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
வாருங்கள்... என் மனதில் முடிவற்று ஓடிக் கொண்டிருக்கும் அந்த நதியை உடனே பார்க்கவேண்டும்.
ஐயனே...
என்ன?
அது உங்கள் மனதில் மட்டுமே இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன சொல்கிறீர்கள்... என் நதிக்கு என்ன ஆனது?
பதில் சொல்ல முடியாமல் திணறியபடியே சாக்கடைக் கூவத்தைக் கை காட்டுகிறார் சனாதனி.
கை காட்டிய திசையைப் பார்க்கிறார். முதலில் ஐயனுக்குப் புரியவில்லை. புரிந்ததும் உத்திரியத்தை விலக்குகிறார். மெள்ள நடந்து சென்று பாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு கீழே பார்க்கிறார். சாக்கடை நதியில் அவர் முகம் பிரதிபலிக்கிறது. வேறுபாடு பார்க்காமல் வீசும் தென்றல் காற்று நீரின் மேல் பரப்பில் மென்மையாக அலையெழுப்புகிறது. ஆனால், ஐயனின் பிம்பம் அவரின் ஆன்மாவைப் போல் நடுங்குகிறது. ஞானத்தின் அடையாளமான தாடி கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை விரைவாக உள்ளிழுத்து மறைத்துக்கொள்கிறது. கண் எட்டும் தூரம் வரை சாக்கடை நதி... கரையெங்கும் கழிவுகள்...
நதி பாயும் கரையோரம் உருவான பட்டினம் அல்லவா இது. அனைத்துத் தெருக்களையும் இணைத்துக் கொண்டு ஓடும் நதியல்லவா இது.
ஆமாம், இன்று ஊர் முழுவதையும் இணைத்துக் கொண்டு செல்வது சாக்கடைகளே. பாரம்பரியப் பட்டினம் இன்று நவீன வளர்ச்சியின் மா நகராகிவிட்டது. பழைய புண்ணிய நதியை மிகப் பெரிய சாக்கடையாக்கிவிட்டது.
ஊரின் நடுவே நதி பாய்வதென்பது எவ்வளவு பெரிய பாக்கியம். அதை இப்படி வீணடித்துவிட்டீர்களே.
வீணடித்தது நதியை மட்டுமல்ல ஐயனே...


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(9)
(ஐயன் வேதனையுடன்) இதுதானா என் அல்லிக்கேணி. இதுதானா என் மா மயிலை... எப்படி நடந்தது இந்த விபரீதம்..?
ஃபாதர்: இந்து மதம்தான் அனைத்துக்கும் காரணம். எதிலும் ஊக்கம் இல்லாமல் தனக்குள் ஒடுங்கிக் கொள்ளும் சமூகம். பிறப்பின் அடிப்படையில் மக்களை ஒடுக்குகிறது. இந்து மதத்தில் மனித நேயம் இல்லை. ஒற்றுமை கிடையாது. தனித் தனி குழுக்கள்தான். பிராமணர்கள் இந்து ஜாதிகளைப் பிரித்துவைத்து ஒன்றோடு ஒன்று மோத வைத்து தமது நலன்களை தந்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். உண்மையில் பிரிட்டிஷாரைவிடப் பிரித்து ஆள்வதில் கெட்டிக்காரர்கள் இவர்கள்தான். தமக்குள் மோதிக் கொண்டு கிடப்பதால்தான் தான் இந்து மதமும் இந்திய தேசமும் இந்தக் குட்டைபோல் தேங்கி நாறிக் கொண்டிருக்கிறன.
ஐயன்: அது உண்மைதானா?
சனாதனி : இல்லை ஐயனே... குழு மனப்பான்மை இல்லாத சமூகம் எது..? இதோ இந்த பாதிரியார் இருக்கிறாரே... இவர் வேறொரு சபையைச் சேர்ந்த பாதிரியாரை தமது சர்ச்சில் பூஜை செய்யவிடமாட்டார். அவர் அப்பம் கொடுத்தால் இவர் சாப்பிடமாட்டார். இவர் வைன் கொடுத்தால் அவர் வாங்கிக் கொள்ளமாட்டார்.
வைனா...
திராட்சை ரசம் ஐயனே...
அப்படியென்றால்..?
அது... ஒருவகைக் கள்.
கள்ளா..?
சர்ச்சில் தீர்த்தம் போல் கொஞ்சமாகத்தான் கொடுப்பார்கள். நிறைய வேண்டுமென்றால் காசு கொடுத்தால் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து தருவர்கள்.
தீர்த்தமாகக் கள்ளா..?
ஆமாம். பிரசாத அப்பத்தை வைன் தீர்த்தத்தில் முக்கிக் கொடுப்பார்கள்.
எதற்கு...?
அப்பம் என்பது இயேசுவின் சதை... வைன் என்பது அவருடைய ரத்தம்.
என்ன கருமம் இது..? இறைவனுடைய மாமிசத்தைப் புசிப்பார்களா..? ரத்தத்தைக் குடிப்பார்களா..?
ஆமாம். ஆனால், ஒரு சபையின் பாதிரியார் இன்னொரு சபையின் பாதிரிக்கு அப்பம் கொடுக்கமாட்டார். கொடுக்கவிடமாட்டார்.
ஃபாதர்: இல்லையே, எங்கள் சபையில் சேர்ந்துவிட்டால் கொடுப்போமே.
அந்த சபையிலும் அவர் இயேசுவின் மாமிசத்தைத்தானே கொடுக்கிறார்.
அது வேறு மாம்சம்... இது வேறு மாம்சம்...
விபூதி பிரசாதம் வேறு... துளசி பிரசாதம் வேறு என்பதுபோல் சொல்கிறார் பாருங்கள்; ஆனால், இந்துக்களில் மட்டும் தான் குழுமனப்பான்மை இருக்கிறது, அப்படித்தானே. நம் பாரத தேசத்தில் வட கிழக்குப் பகுதியில் மலையும் காடும் நிறைந்த பகுதிகள் உண்டு ஐயனே.
இமயத்தின் அடிவாரத்திலா..?
ஆமாம்... கங்கைச் சமவெளிகளுக்கு அப்பால். அங்கு நாகாலாந்து என்ற பழங்குடி தேசம் இருக்கிறது. அங்கு ஒரு பழங்குடி சமூகம் பத்து கி.மீட்டர் தொலைவில் இருக்கும் இன்னொரு பழங்குடி சமூகத்துடன் கொலை வெறியில் இருப்பார்கள். இவர்கள் படையெடுத்துச் சென்று அவர்கள் தலையை வெட்டுவார்கள். அவர்கள் படையெடுத்துவந்து இவர்கள் தலையை வெட்டுவார்கள்.
கேட்கவே உடம்பு நடுங்குகிறது. அவர்களை நல்வழிப்படுத்த எந்த மதமும் அங்கு இல்லையா?
இல்லை ஐயனே. அங்கு முதலில் சென்ற மதம் கிறிஸ்தவம். 200 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மாநிலமாகவும் அதை ஆக்கிவிட்டது. ஆனால், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அங்கு இந்த தலை வெட்டிப் பழங்குடிகள் தலையை வெட்டி தமது வீடுகளின் முகப்பில் அலங்காரமாகக் கட்டித்தொங்கவிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.
வெகு முன்பே கிறிஸ்தவம் அங்கு சென்றுவிட்டதாகச் சொன்னீர்கள்.
ஆமாம். மதம் மாறினால் போதும். மற்றபடி கொலை, பகையை எல்லாம் வழக்கம் போல் பின்பற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
ஏன் அப்படி...?
உலகம் பூராவும் அவர்கள் அதைத்தானே செய்துவருகிறார்கள். எதற்காகச் சொல்கிறேன் என்றால், அங்கே பிராமணர்கள் கிடையாது ஐயனே. குழு மனப்பான்மை, பழங்குடி சமூகத்தில் இருந்தே இருந்துவருகிறது. உண்மையில் பிராமண சமூகம் தான் ஜாதிகளை ஒன்று சேர்த்துவைத்திருக்கும் சக்தி. அரசு, வர்த்தகம், தொழில் என பல்வேறு சமூக சக்திகளையும் பல்வேறு பண்பாட்டு மரபுகளையும் ஒரே மாலையாகக் கோர்த்திருக்கும் நூல். புனிதமான நூல். நம் பாரத தேசத்தில் பிராமணர்கள் செல்வாக்கு இழக்கும் அல்லது செல்வாக்கு இல்லாத இடங்கள் மிலேச்ச மதங்களின் பிடிகளுக்குப் போய்விடும் என்பதற்கு எளிய உதாரணம் இந்த நாகாலாந்து மற்றும் பிற வட கிழக்கு மாநிலங்கள்.
ஃபாதர் : இமயத்தின் அடிவாரமென்றால் இயற்கை வழிபாடு கொண்ட இந்து மதத்தின் மிக அருகில் என்று தானே அர்த்தம். அந்தச் சண்டை அங்கும் இருக்கத்தானே செய்யும்.
அப்படியா... சற்று தொலைவில் இருக்கும் நாடுகள் பற்றிப் பேசுவோமா... மேரி டியூடர் யார் என்பது தெரியுமல்லவா...
ஃபாதர் மெள்ளப் பின்னால் போகிறார்.
முன்னால் வாருங்கள் ஐயா... ரத்த வெறி பிடித்த மேரி... கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? ப்ராட்டஸ்டன்ட்களை, குறிப்பாக ப்ராட்டஸ்டண்ட் பாதிரியார்களைத் தேடித் தேடி கொன்று குவித்த ரோமன் கத்தோலிக்க மேரியன்னை.
அது மத மோதல் அல்ல.... அவையெல்லாம்....
அப்பங்களுக்கான மோதலா..? ஆஃப்ரிக்காவில் கறுப்பர்களைக் கொன்று குவித்தது யார்..? அமெரிக்கப் பூர்வகுடிகளை அழித்தது யார்..? ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளை அழித்தது யார்? அதற்கெல்லாம் எது காரணம்? இவ்வளவு ஏன்... ஐரோப்பியாவில் இங்கிலாந்து கிறிஸ்தவர்கள் ஃபிரான்ஸ் கிறிஸ்தவர்களை வெட்டிக் கொல்வார்கள். தீவைத்து உயிருடன் கொல்வார்கள். போர்ச்சுகீசியர்கள் பிற அனைத்து கிறிஸ்தவரையும் கொல்வார்கள்.
அவையெல்லாம் தேசியவாதங்களின் மோதல் மற்றும் காலனிய விஸ்தரிப்பு மனநிலையால் ஏற்பட்டவை. ஆனால், கிறிஸ்தவ மதம் தூய்மையானது. கருணை மிகுந்தது.
மன்னரைகளை நல்வழிப்படுத்தாத மதம் என்ன மதம்? அழித்தொழித்த அவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள்தானே. கனிகளை வைத்தே மரங்களை எடைபோடவேண்டும். அமைதி மார்க்கம் என்று உங்கள் செல்லப்பிள்ளை ஜனாப் திருமாவளவன் சொல்வாரே. அங்கு ஷியா சன்னி பிரிவுகளுக்கு இடையே இன்றும் மோதல்கள் நடக்கின்றன. ஒரு பிரிவினரின் மசூதிக்குள் இன்னொரு பிரிவினர் குண்டு வைத்து தொழுகையில் இருப்பவர்களைக் கொல்கிறார்கள்.
பகவானே.... (ஐயன் துடிக்கிறார்)
உலகம் அப்படித்தான் இருக்கிறது ஐயனே... பழங்குடிகளாக இருந்தாலும் நவீன நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டவர்கள் என்றாலும் குழு மனப்பான்மை என்பது மிகக் கொடூரமாக வெளிப்படுகிறது. இந்த வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் இந்து மதத்தின் குழு மனப்பான்மையும் அதன் கெடுதல்களும் மிக மிகக் குறைவு. மையம் அழிந்த அமைப்பு என்பதால் உலகை ஆக்கிரமிக்க யாரும் இங்கிருந்து புறப்படவே இல்லை.
(ஃபாதர்) இங்கும் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள்.
ஐயனே நீங்கள்தான் இதற்கு பதில் சொல்லத் தகுந்தவர்.
சமணர்களை எனக்குத் தெரிந்து அப்படி யாரும் கொல்லவில்லையே.
(ஃபாதர்) அது பிற்காலத்தில் நடந்தது.
எந்த சமண நூலில் அது சொல்லப்பட்டிருக்கிறது?
எந்த சமண நூலிலும் இல்லை.
பாரத தேசத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மதக் கிளைகளில் சமணமும் ஒன்று. ஏராளமான காப்பியங்கள் எழுதியிருக்கிறார்கள். எண்ணற்ற ஆவணங்கள் இருக்கின்றன. எதிலுமே அவர்கள் அவர்களுக்கு நேர்ந்த இந்த கொடூரம் பற்றி எழுதவில்லையா என்ன?
நடந்தால்தானே எழுதுவார்கள். கிறிஸ்தவத்தைப் போல் பொய்யையும் போலித் தியாகங்களையும் சொல்லி மதம் வளர்க்கவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லையே... அந்தக் கொடுமை நடந்ததாகச் சொல்லப்பட்ட காலத்துக்கு பின்னும் இங்கு சமணம் செழிப்புடன்தான் இருந்தது.
ஈ.வெ.ரா : ஜாதிச் சண்டைகள் இன்றும் நடக்கத்தான் செய்கின்றன. குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலக்கிறார்கள்.
உங்கள் ஃபேவரைட் விஷயம் வந்துவிட்டதா..?
ஆமாம்.
சனாதனி : யார் கலந்தது? பிராமணர்கள்தானே.
ஈ.வெ.ரா : ஆமாம். பிராமணியத்தால் பீடிக்கப்பட்டவர்கள்தான்.
ஐயன் : அது என்ன பிராமணியம்?
சனாதனி : ஜாதியத்தின் தீமைகளுக்கு இவர்கள் கொடுத்திருக்கும் பெயர்.
ஏன் அப்படி..?
அந்தத் தீமைகளுக்கு செய்யும் ஜாதி சார்ந்து தேவரியம் என்றால் தோலை உரித்துவிடுவார்கள். வன்னியரியம் என்றால் வகுந்துவிடுவார்கள். அதுபோல் இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வெறி பற்றியும் வாயே திறக்கமாட்டார்கள். திறந்தால் குண்டு வைத்துவிடுவார்கள் என்ற பயம். அதனால் எது எங்கு நடந்தாலும் பிராமணியமே காரணம் என்பார்கள்.
பிராமணர்கள் ஒன்றும் செய்யமாட்டார்களா..?
அவர்கள் சூரியன் ஐயனே. நாய்களின் குரைப்பையெல்லாம் பொருட்படுத்தமாட்டார்கள்.
குடி நீரில் மலம் கலக்க எப்படி மனம் வந்தது? 100 ஆண்டுகால திராவிட இயக்கம் என்ன செய்தது?
அது கலந்தவர்கள் யாரென்பது வெளியில் வரவிடாமல் களமாடிவருகிறது. உண்மையில் இந்து சமூகம், திராவிட இயக்கத்தையும் மீறி முன்பைவிடத் தன்னை மேம்படுத்திக் கொண்டுவிட்டது ஐயனே. இன்று எங்குமே குலத்தொழிலை யாருமே திணிப்பதில்லை. நவீன வாழ்க்கைக்கு எளிதில் மாறிவிட்டார்கள். நம் தேசத்தில் பெரும்பாலான நலத்திட்டங்களும், சலுகைகளும் வசதி வாய்ப்புகளும் கடைநிலை ஜாதிகளுக்குத் தரப்படுகின்றன. மேல் ஜாதியினர் யாரும் அதை எங்குமே தடுப்பதில்லை.
ஆனால், வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் ஜாதி மோதல்கள் நடப்பதாகச் சொல்கிறாரே...
அவ்வப்போது வெடிக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவையெல்லாம் அனைத்து ஜாதிகளிலும் ஊடுருவியிருக்கும் க்ரிப்டோக்கள் தூண்டிவிடுபவை ஐயனே.
க்ரிப்டோ என்றால்..?
கிறிஸ்தவராக மதம் மாறியிருப்பார். ஆனால், இந்து என்றே வெளியில் நாடகமாடிக் கொண்டிருப்பார்.
ஏன் அப்படி? கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்வது அவ்வளவு அசிங்கமா?
இருக்கலாம்... அதோடு கிறிஸ்தவராக மாறி அந்த அதிகார மையங்கள் தரும் சலுகைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். இந்து என்று சான்றிதழில் காட்டிக் கொண்டு இந்திய அரசு தரும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வார்கள்.
எதனால் இந்தப் பித்தலாட்டம்?
இந்திய அரசியல் சாசனத்தில் சிறுபான்மைகளுக்கென்று ஏராளம் சலுகைகள் தரப்படுகின்றன. பெரும்பான்மையாகிவிட்டால் அவை கிடைக்காது.
அதுகூட காரணம் இல்லை ஐயனே. இரண்டு ஜாதியிலும் இருக்கும் க்ரிப்டோக்கள் வேண்டுமென்றே சண்டையை மூட்டி கலவரம் செய்துவிட்டு இந்து ஜாதிகள் மேல் பழியைப் போட்டுவிடுவார்கள். அது வெளியில் தெரியாமல் இருக்க இந்து வேஷம் போடுகிறார்கள்.
ஃபாதர் : அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
அப்படியா... ஒரு வரலாற்று நிகழ்வைப் பற்றிக் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள். இலங்கையில் என்ன நடந்தது?
சிங்களருக்கும் தமிழருக்கும் இடையில் மோதல்.
அதாவது...
பெளத்தர்களுக்கும் இந்துக்களுமான மோதல்.
சரி... தந்தை செல்வா என்று அழைக்கப்படுகிறாரே அவருடைய முழு பெயர் என்ன..?
(சிறிது தயங்கி) சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்.
புலிகளின் ஆலோசகரின் பெயர் என்ன..?
ஆண்டனி பாலசிங்கம்.
பிரபாகரனின் மகனின் பெயர் என்ன..?
சார்லஸ். அது உயிர்த் தியாகம் செய்த வீரப் புலியின் நினைவாக வைக்கப்பட்டது.
திலீபன் கூட உயிர்த்தியாகம் செய்தார். குட்டி மணியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. எத்தனையோ இந்து வீரர்கள் தியாகம் செய்தார்கள். அவர்கள் நினைவெல்லாம் வரவில்லை... சார்லஸ் பெயர் மட்டும் நினைவுக்கு வந்துவிட்டது அப்படித்தானே. சரி... ஜெயவர்த்தனேவின் முழுப் பெயர் என்ன?
ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே.
பிரேமதாஸாவின் குடும்பப் பெயர்.
ரிச்சர்ட்.
இப்போது சொல்லுங்கள் இலங்கையில் யாருக்கும் யாருக்கும் இடையில் சண்டை நடந்தது?
ஃபாதர் மெளனமாக இருக்கிறார்.
சொல்லட்டுமா... தமிழர்கள் பக்கம் இருந்த கிறிஸ்தவர்களாலும் சிங்களர்கள் பக்கம் இருந்த கிறிஸ்தவர்களாலும் தூண்டப்பட்ட சண்டையில் இந்துவாக இருந்த தமிழர்களும் பெளத்தர்களாக இருந்த சிங்களவர்களும் கொல்லப்பட்டார்கள். இதுதான் அங்கு நடந்தது. இப்போது சொல்லுங்கள் தமிழக வடமாவட்ட, தென்மாவட்டக் கலவரங்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?
ஃபாதர் தலை குனிந்து நிற்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(10)
ஃபாதர் : இந்து மதத்தில் ஜாதிக் கொடுமை இருக்கிறது என்று சொன்னால் அதைப் போக்க வழி சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு கிறிஸ்தவத்தில் இல்லையா... இஸ்லாமில் இல்லையா என்று ஏன் சொல்கிறீர்கள். அதோடு உலகின் பிற பகுதிகளில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் செய்தவற்றுக்கு இந்திய கிறிஸ்தவர்களும் இந்திய முஸ்லிம்களும் ஏன் பதில் சொல்லவேண்டும்?
ஐயன் : இவர்கள் கேட்பது சரிதானே.
சனாதனி : இல்லை ஐயனே. அவர்களுடைய மதத்தைத்தானே பின்பற்றுகிறார்கள்.
ஃபாதர்: அவர்கள் ஆதிக்க சக்தியாக இருந்த இடங்களில் அந்தத் தவறுகளைச் செய்திருக்கலாம். இங்கே ஆதிக்க சக்தியாக இருக்கும் இந்துக்களை எதிர்க்க விரும்புகிறார்கள். எனவே எதிரிக்கு எதிரி எங்களுக்கு நண்பர்.
சனாதனி : நாய்க்கு ஓநாய் பகைதான். ஆனால், நாயை விரட்ட ஆடுகள், ஓநாயை நண்பனாக்கிக் கொள்வது மூடத்தனம். அதோடு இவர்களுக்கு அங்கிருந்து பணம் வருகிறது. இவர்கள் தர்ம நியாயத்தையா பேசுகிறார்கள். மேற்கத்தியர் தரும் கூலிக்கு மாரடிக்கிறார்கள். இந்து மதத்தில் இருக்கும் குறைகளை மிகைப்படுத்திப் பேசுகிறார்கள். இந்து மதம் தன்னை இயல்பாக நவீன வாழ்க்கைக்கு மாற்றிக்கொண்டிருப்பதை ஏற்க மறுக்கிறார்கள். காசு வாங்கிக் கொண்டு சகோதரர்களையும் தாய் நாட்டையும் தாய் மொழியையும் அழிக்கிறார்கள். இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இன்னும் லட்சம் சர்ச்கள் கட்டி முடிக்கவேண்டும் என்பதுதான் இவர்களுடைய இப்போதைய இலக்கு.
ஃபாதர் : சர்ச்கள் பெருகினால் கல்வி பெருகுகிறது... மருத்துவ வசதி பெருகுகிறது என்று அர்த்தம். இந்துக் கோவில்களைப்போல் மூன்று வேளை மூக்குமுட்ட சாப்பிட முடிந்தவனுக்கு சோறு போட்டு வீணடிக்கமாட்டோம். கோவில் நகை, கோபுர கவசம் என்று தங்கமாகப் போட்டு முடக்கமாட்டோம்.
கடந்த காலத்தில் இந்து கோவில்களில் பிரசாதங்களும் அன்னதானங்களும் தரப்பட்டதென்பது அன்றைய உபரியை நல்லவழியில் நலிவடைந்தவர்களுக்கு பகிர்ந்துகொடுக்கச் செய்த ஏற்பாடு. நீ கொடுத்து நான் வாங்கினால் நீ மேல்; நான் கீழ் என்று வந்துவிடும். இறைவனுக்குக் கொடுத்து இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டால் அங்கு சமத்துவமும் சகோதரத்துவமும் நிலவும். அன்றைய சமூகத்துக்கு அதுவே அவசியமாக இருந்தது. ஈகை பற்றிப் பேசிய நீவிர் கூட பசிப் பிணியைப் போக்குவது பற்றித்தானே அதிகமும் பேசியிருக்கிறீர். மணி மேகலைக்குக் கிடைக்கப்பெற்றதும் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபிதானே... வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரும் பசிப்பிணியைப் போக்கத்தானே முதலிடம் தந்திருக்கிறார்.
ஃபாதர் : நவீன காலத்துக்கு ஏற்ப இந்துக்கள் மாறவில்ல்லை என்பதன் அறிகுறியே இதுதான். இன்று யாரும் பசியால் சாகவில்லை. கல்வியும் மருத்துவமும் தான் தேவை. அதை கிறிஸ்தவமே இதுவரை தந்துவருகிறது. சர்ச்களே தருகின்றன.
ஐயன் : உண்மையா..?
சனாதனி : இல்லை. ஐயனே அவையும் விவேகானந்தர் போன்றவர்களின் வருகைக்குப் பின் புதிய பாணியில் தேசம் முழுவதும் நடந்துவருகின்றன. இன்று இந்தியாவில் மிக அதிக சமூக சேவை செய்துவருவது இந்து இயக்கங்களே. எனினும் ஆலயங்களில் அன்னதானங்கள் மரபின் ஓர் அங்கமாக தொடர்ந்து நடந்துவருகின்றன. நமக்கு அரசியல் கணக்குகள் கிடையாது. ஒரு கோவிலில் நூறு பேருக்கு அன்னதானம் கொடுப்பதைவிட ஒரு குழந்தைக்கு கல்வி கொடுத்து இந்து மதத்தைத் திட்டும்படி வளர்க்கலாம் என்ற குறுக்கு புத்தி கிடையாது. பள்ளி நடத்தினாலும் மருத்துவமனை கட்டினாலும் அதை சேவையாக மட்டுமே செய்துவிட்டுப் போய்விடுவோம். இவர்களைப் போல் ஒரு ஊசி போட்டுவிட்டு உன் தெய்வத்தை விட்டுவிட்டு வா என்று மத அரசியல் செய்ய நமக்குத் தெரியாது. இன்று அன்னதானங்கள் முறைப்படுத்தப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கோவில்களில் மட்டுமா இந்த வீணடிப்பு நடக்கிறது. ஒரு திருமணத்துக்கு 100 பதார்த்தங்கள் பரிமாறி அப்படியே கொண்டுபோல் கொட்டுவதும் நடக்கத்தான் செய்கிறது. எல்லா மத திருமணங்களிலும் இந்த ஆடம்பரம் வந்துவிட்டது. இதைவிட ஆலய விஷயத்தில் நடக்கும் கொடுமை என்பது கிரிப்டோ அறநிலையத்துறையால் நடப்பதுதான். மதம் மாறியவர் எப்படி இந்து கோவிலில் வேலை செய்யலாம்?
ஃபாதர் : அதில் என்ன இருக்கிறது? கடவுள் நம்பிக்கை இருப்பவர் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்பதுதானே விதி.
அது நீங்கள் திருத்தி எழுதிய விதி. இந்து கடவுள் மீது பக்தி உள்ளவர்தான் இந்து கோவிலில் பணி புரியவேண்டும் என்பதுதான் ஒழுங்கான விதி.
தமிழர்கள் கட்டிய கோவில்தானே. ஒரு தமிழனுக்கு அதில் இடம் கிடையாதா என்ன? அவர் மதம் மட்டும் தானே மாறியிருக்கிறார்.
சரி... அந்த மதம் மாறிய கிறிஸ்தவர், அவருடைய தமிழ் பெற்றோர்களைப் போல் குல தெய்வத்தைக் கும்பிடுவாரா?
மாட்டார்.
திலகம் தரிப்பாரா..?
மாட்டார்.
அவருடைய முன்னோர்களைப் போல் வீட்டு வாசலில் கோலமிடுவாரா..?
மாட்டார்.
முளைப்பாரி எடுப்பாரா..?
மாட்டார்.
அம்மனுக்கு கூழ் வார்ப்பாரா..?
மாட்டார்.
அவருடைய இந்து நண்பர்கள் கூழ் கொடுத்தால் வாங்கிக் கொள்வாரா?
மாட்டார்.
நேர்ச்சை, பலி, அன்னதானம், பிரசாதம் கொடுப்பாரா?
மாட்டார்
ஒளவைப்பிராட்டி சொன்னதுபோல் வேழ முகத்தானை கும்பிடுவாரா..? பாலும் தெளி தேனும், பாகும் பருப்பும் கொடுப்பாரா? சங்கத்தமிழ் மூன்றும் கொடு என்று கேட்பாரா..?
மாட்டார். மாட்டார். மாட்டார்.
நாகஸ்வரம், மேளம் என மங்கல வாத்தியங்கள் முழங்க விழாக்கள் கொண்டாடுவாரா..?
மாட்டார்.
மஞ்சள் பூசி, மலர்ச்சரம் சூடி மகிழ்வாரா?
மாட்டார்.
காவி உடைக்கு மரியாதை கொடுப்பாரா..?
மாட்டார்.
கையெடுத்துக் கும்பிடுவாரா..?
மாட்டார்.
சக மனிதர்களின் பிற வழிபாட்டு மரபுகளை மதிப்பாரா..?
மாட்டார்.
செவ்வாய், வெள்ளி, சனி கிழமைகளில் விரதம் இருப்பாரா?
மாட்டார்.
அகல் விளக்கு ஏற்றி வழிபடுவாரா?
மாட்டார்.
கற்பூரம் ஏற்றுவாரா?
மாட்டார்.
குல தெய்வப்பெயரைக் குழந்தைக்கு சூட்டுவாரா?
மாட்டார்.
பிற உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவாரா..?
மாட்டார்.
செவ்வாய், வெள்ளி, சனி என வார நாட்கள், மாதத்தின் விசேஷ நாட்கள், வருடத்தில் விசேஷ மாதங்களில் அசைவம் தவிர்த்து பிற உயிர்களையும் வாழவிடும் மிதமான போக்கைக் கடைப்பிடிப்பாரா?
மாட்டார்.
அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாடு செய்வாரா... காகங்களுக்கு உணவு தருவாரா..?
மாட்டார்.
பசுவை வணங்குவாரா?
மாட்டார்.
தமிழ் மன்னர்கள் கட்டிய ஆலயங்களுக்குச் செல்வார்களா?
மாட்டார்.
சல்லிக்கட்டில் பங்கெடுப்பாரா?
மாட்டார்.
சூரிய பகவானுக்குப் படைத்து பொங்கல் கொண்டாடுவாரா.
தமிழில் பெயர் வைப்பாரா?
மாட்டார்.
ஆக தமிழர்களின் அடையாளங்கள், மரபுகள், விழாக்கள் எதையுமே பின்பற்றாதவர் எப்படித் தமிழராக இருப்பார்?
நீங்கள் சொன்னவை எல்லாமே இந்துக்களின் வழி முறைகள்... தமிழர்களின் வழிமுறை அல்ல.
தமிழ் மொழி தாய் என்றால் இந்து மதம் தந்தை. தமிழகத்தில் இருந்தவர்களுக்கு இரண்டுமேதான் அடையாளம். ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை. சரி... நீங்கள் பின்பற்றுபவற்றில் தமிழர்களின் முறைகள் என்னென்ன இருக்கின்றன. நீங்கள் ஏற்றும் மெழுகுவர்த்தி தமிழர் மரபா?
இல்லை.
நீங்கள் விழா நாட்களில் வெட்டும் கேக் தமிழர் மரபா?
இல்லை.
சர்ச்சில் பயன்படுத்தும் பியானோ தமிழர் மரபா?
இல்லை.
சர்ச்கள் என்ன பாணியில் கட்டுகிறீர்கள். தமிழ், திராவிட கட்டடக் கலையின்படியா அதைக் கட்டுகிறீர்கள்?
இல்லை.
மண்டியிட்டு வணங்குவது தமிழர் முறையா?
பிறந்த நாளில் மெழுகுவர்த்தி விளக்கை ஊதி அணைப்பது தமிழர் மரபா?
இல்லை.
உன் தெய்வம் பிசாசு... நீங்கள் வீரியன் பாம்புக் குட்டிகள் என்று என்றைக்கேனும் தமிழர்கள் பிறருடைய குல தெய்வங்களைப் பழித்துப் பேசியிருக்கிறார்களா?
இல்லை.
ஆக தமிழர்கள் பின்பற்றும் மரபை இந்து மரபு என்று புறந்தள்ளிவிடுவீர்கள்... நீங்கள் பின்பற்றுபவை எதுவுமே தமிழ் மரபாகவும் இருக்காது. ஆனால் நீங்கள் உங்களை நாம் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வீர்கள் அப்படித்தானே.
தோமாவின் சீடர் என்று ஐயனைச் சொல்கிறீர்களே... ஐயன் எழுதிய குறளை உங்கள் புனித நூலாக ஏற்றுக் கொள்வீர்களா..?
சிலுவையில் தொங்கும் நபரை விட்டுவிட்டு ஐயனை வழிபட ஆரம்பிப்பீர்களா..? அவர் தான் பிறப்பொக்கும் என்று உலகப் பொதுமறையைத் தந்திருக்கிறாரே என்று சொல்லியிருக்கிறாரே... பைபிளுக்கு பல்லக்கு தூக்கியதுபோதும்... பச்சைத் தமிழனாக ஐயனுக்கு அடிபணியுங்களேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். ஐயனோ இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய் என்று சொல்லியிருக்கிறார். இவரே இயேசுவை விடவும் மேலானவர். தமிழரும் கூட. என்ன தாய் மதம் திரும்புகிறீர்களா..? வள்ளுவம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
(தொடரும்)


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(11)
ஃபாதர் : உலகம் முழுவதும் குலத்தொழில் இருந்ததால் இங்கும் இருந்தது என்கிறீர்கள். ஆனால், அதை மாற்றவேண்டும் என்று நினைத்ததும் மாற்றிக் காட்டியதும் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் தானே. தொழில் புரட்சியைச் செய்து உலகையே புரட்டிப் போட்டது அவர்கள் தானே. இன்று எங்கள் சமூகம் தானே முன்னால் செல்கிறது.
சனாதனி : அவர்கள் தொழில் புரட்சியில் ஈடுபட்டது உண்மைதான். ஆனால், அதற்கான உபரியும் பிற தொழில் நுட்பங்களும் காலனிய நாடுகளில் இருந்து குறிப்பாக, இந்தியாவில் இருந்து களவாடப்பட்டன.
அதெல்லாம் பேச்சில்லை. இந்தியாவில் இருந்த உபரியை கோவில் நிலவறைகளில் தங்கக்கட்டிகளாக, நகைகளாக முடக்கினீர்கள். ஐரோப்பியர்கள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் செலவிட்டனர். ஆன்மிகம், பக்தி என்று சொல்லியபடி விஞ்ஞானத்தைப் புறக்கணித்தீர்கள்.
ஐரோப்பியர்கள் டெலஸ்கோப் கண்டுபிடிப்பதற்கு முன்பே வான சாஸ்திரங்களில் உயரம் தொட்டவர்கள் இந்துக்கள். துருப்பிடிக்காத இரும்பு எப்படித் தயாரிப்பதென்று இந்துக்களிடம் இருந்துதான் பிரிட்டிஷாரே கற்றுக் கொண்டனர். பிரிட்டிஷார் வந்தபோது உலகிலேயே அன்றைய கணக்கில் ஒரு ஏக்கர் நிலத்தில் அதிக விளைச்சலை உருவாக்கிக் கொண்டிருந்தது நாம் தான். நாம் கட்டாத அணைகளா... ஆலயங்களா... அரண்மனைகளா... அம்மை நோய்க்கு மருந்து, கண் புரை நோய்க்கு மருந்து பிளாஸ்டிக் சர்ஜரி என மருத்துவத்திலும் முன்னணியில் இருந்தது இந்துக்கள்தான்.
மருத்துவம் எல்லாம் எல்லா ஜாதிக்கும் கிடைக்கவில்லை.
யார் சொன்னது..?
ஆயுர்வேதம் என்பது பிராமணர்களின் மருத்துவம். மன்னர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் மட்டுமே கிடைத்தது.
மருத்துவர் என்ற பெயர் சிகை அலங்காரத் தொழில் ஈடுபட்டவர்களுக்கும் உண்டு தெரியுமா? கிராமப்புறங்களில் பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியர் என்று இருந்தவர்களெல்லாம் பிராமணர்களா என்ன..? எல்லா ஜாதியினரும் தான். ஆயுர் வேத ஆசான்கள் எல்லா ஜாதியினருக்கும் கற்றுத் தரத்தான் செய்திருக்கிறார்கள். எல்லாரிடமிருந்தும் கற்றுக்கொண்டுமிருக்கிறார்கள். அதோடு தமிழகத்தில் அதிகம் இருந்தது சித்த வைத்தியம். அதில் அனைத்து ஜாதியினரும் சிறந்து விளங்கினர்.
ஈ.வெ.ரா: அதுவும் குலத்தொழிலாகவே இருந்தது.
அதனால் என்ன... ஒருவர் குலத் தொழில் செய்கிறார் என்றால் அந்தக் குலத்துக்கு மட்டுமே தொழில் செய்கிறார் என்றா அர்த்தம். அந்தத் தொழிலை ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தான் செய்து வந்திருக்கிறார். உங்களுக்குப் புரியும்படிச் சொல்வதென்றால் கருணாநிதி குடும்பம் செய்வது குலத்தொழில்தான். ஆனால், அந்த அரசியல் தொழில் என்பது ஒட்டு மொத்த சமூகத்துக்குமானதாகத்தானே இருக்கிறது. குறைந்தபட்சம் உங்களைப் போன்றவர்களை உள்ளடக்கிய குடும்பம் முழுமைக்கும்தானே அவர்கள் சேவை செய்கிறார்கள்.
அதெல்லாம் இல்லை. இந்தியாவின் நீண்ட நெடிய வரலாற்றையும் அதைவிட நீண்ட புராணக் கட்டுக்கதைகளையும் எடுத்துக்கொண்டு பாருங்கள்... பட்டியல் ஜாதிகளுக்குக் கல்வி கிறிஸ்தவ கான்வெட்களில்தான் முதன் முதலாகத் தரப்பட்டது. இந்தியாவில் அறிவுபூர்வமாக சிந்திக்கத் தொடங்கியவர்கள், அரசு வேலைகளில் சேர்ந்தவர்கள் என நவீன உலகுக்குள் நுழைந்தவர்கள் அனைவருமே கிறிஸ்தவ பள்ளி மையங்களில்தான் படித்திருப்பார்கள், சுதந்தரத்துக்கு முன்பும் பின்பும்.
ஆமாம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்திலும் சுதந்தம் கிடைத்த பின்னரும் கல்வி முழுக்கவும் கிறிஸ்தவர்களின் பிடியிலும் அவர்களுடைய எடுபிடிகளான இடதுசாரிகளின் கையிலும்தான் இருந்தது. அவர்கள்தான் கல்விக்கு கட்டணம் விதித்தனர். தாய் மொழிக் கல்வியை அழித்தனர். சம்ஸ்கிருதம் பாரதத்தின் பாரதத்தின் ஞான, பக்தி, கலை இலக்கியங்களின் இணைப்பு மொழியாக இருந்தவரை தாய்மொழிக் கல்வி நீடித்தது. இரண்டு அரசுகளும் சிறுபான்மை என்ற பெயரில் அனைத்து சலுகைகளையும் கிறிஸ்தவ கல்வி மையங்களுக்கு மட்டுமே தந்தன. இந்துப் பெரும்பான்மையின் கால்கள் கட்டிப்போடப்பட்டன. 100 வருடங்கள் கழித்து நாங்கள்தான் கல்வி கொடுத்தோம் என்று நாடகம் போகிறீர்கள்.
ஐயன் : சிறுபான்மைக்கு மட்டும் ஏன் சலுகைகள் தரப்பட்டன?
சனாதனி : ஐயனே... முதலில் இவர்கள் சிறுபான்மையே அல்ல. உலகில் வல்லாதிக்க சக்திகள்; இந்தியாவில் எண்ணிக்கைத்தான் குறைவு. அரசியல், பொருளாதார செல்வாக்கும் மிக மிக அதிகம். இந்தியாவில் அரசுக்கு அடுத்ததாக மிக அதிக சொத்து வைத்திருப்பது சர்ச்கள்தான். பிரிட்டிஷ் காலத்தில் இந்து கோவில்களில் சொத்துகள், நிலங்கள் அனைத்தும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு 100 ஆண்டு குத்தகைக்கு கிட்டத்தட்ட இலவசமாகவே தரப்பட்டுவிட்டன. நல்லெண்ண நோக்கில் சிறுபான்மைகளுக்குத் தமது கலாசாரம், மரபுகளைப் பாதுகாத்துக்கொள்ள சலுகைகள் தரப்பட்டன. ஆனால், அதைக் கொண்டு பெரும்பான்மையின் மரபை அழிப்பதைப் பார்த்ததும் சுதாரித்திருக்கவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் உடலால் இந்தியர்... சிந்தனையால் பிரிட்டிஷ் அடிமைகள் என்ற திட்டத்தின்படி உருவானவர்களே இருந்ததால் இந்துக்களும் இந்து பாரம்பரியமும் ஓரங்கட்டபட்டுவிட்டன.
இந்து மரபில் அந்தணர்களைத்தான் இவர்கள் குறிவைத்ததாகச் சொன்னீர்கள். மன்னர்கள், செல்வந்தர்கள், வணிகர்கள் தொழில் குலங்கள் எல்லாம் என்ன செய்தன..?
மன்னராட்சி ஒழிக்கப்பட்டுவிட்டது. பாரம்பரிய வணிகங்கள், தொழில்கள் இவை நசிந்துவிட்டன. இதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால், குலத்தொழில் காலகட்டத்தில் பண்ணையார்களாகவும் பெரு வணிகர்களாகவும் மன்னராகவும் தொழில் நிபுணர்களாகவும் இருந்த குலமெல்லாம் எங்களையும் ஒடுக்கிவிட்டார்கள் என்று சாட்டையால் அடித்துக்கொண்டு கெஞ்சுகிறார்கள். நவீன காலத்து மன்னர்களான அரசியல்வாதிகள், நவீன காலத்து வணிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் எல்லாம் தமது முன்னோர்களைத்தாமே பழித்துவருகிறார்கள். இதைப் பார்க்கும்போது ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது. நவீன காலத்தில் பிராமணர்களையும் இந்து மரபையும் பழித்தால்தான் ஆதாயம் என்பதைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு இங்குமங்கும் வாலாட்டிக் கொண்டு குதிக்கிறார்கள். இதில் முதலிடத்தில் இருப்பது பிராமணர்களே என்பது அதைவிடப் பெரிய வேதனை.
ஃபாதர் : இந்த விஷயத்தில் இந்துக்கள் செய்பவைதான் மிகவும் மோசம். குறிப்பாக இந்துக்களின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள்தான் மோசம். அவர்கள் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அலோபதி மருத்துவரிடம் தான் சிகிச்சைக்குச் செல்வார்கள். இந்தியாவில் நடப்பது பிரிட்டிஷ் நிர்வாக முறைதான். நீதித்துறை பிரிட்டிஷ் பாணியில்தான் நடக்கிறது. பஸ், ரயில், விமானம் முதலானவை தொடங்கி மிக்ஸி, கிரைண்டர், ட்யூப் லைட் என அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்தும் கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தவை. அவையெல்லாம் வேண்டும்; ஆனால், இயேசு மட்டும் வேண்டாமா?
உலகம் முழுவதும் ஐரோப்பிய மன்னர்கள் செய்த அநியாயங்கள் பற்றிக் கேட்டபோது அவையெல்லாம் அரசியல் சக்திகளின் தவறுகள்; கிறிஸ்தவ மதத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றீர்கள். ஆனால், ஐரோப்பிய விஞ்ஞானிகளை மட்டும் கிறிஸ்தவர்கள் என்று சொல்கிறீர்கள். உண்மையில் ஐரோப்பிய மன்னர்களுக்குத்தான் கிறிஸ்தவ சபைகளின் ஆதரவு இருந்தது. போப் உலக வரைபடத்தில் கோடு கிழித்து இந்தப் பகுதிகள் எல்லாம் போர்ச்சுகீசியர்களுக்கு; இவையெல்லாம் ஸ்பானியர்களுக்கு என்றெல்லாம் உலகைப் பங்கிபோட்டுக் கொடுத்திருந்தார். உண்மையில் வாஸ்கோடகாமா தன் பயணத்தை மேற்கொண்டதற்கு முக்கிய காரணம் என்ன.. சொல்லுங்கள்.
பாதிரியார் : தெரியவில்லையே...
சனாதனி (ஈ.வெ.ராவைப் பார்த்து) : நீங்கள் சொல்லுங்கள்.
ஈ.வெ..ரா. அவருக்கே தெரியாதபோது எனக்கு எப்படி தெரியும்.
சனாதனி : அவருக்குத் தெரியும். சொல்லக் கூச்சப்படுகிறார். பைபிள் கடவுள் படைத்த கீழை நாடுகளில் இருக்கும் கிறிஸ்தவ மன்னர்களைக் கண்டுபிடித்து கூட்டாகக் கொள்ளையடிக்கலாம் என்ற உயரிய நோக்கில்தான் வாஸ்கோடகாமாவை அந்த மன்னர் அனுப்பினார். கேரளாவில் இறங்கிய வாஸ்கோடகாமா, கிழக்கு உலகை பைபிள் கடவுள் உருவாக்கவில்லை; அங்கு சர்ச்சோ பாதிரிகளோ இல்லை என்பதால் அது மேலான நிலையில் நன்றாகவே இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டார். ஆனால், அதைப் போய் தன் மன்னரிடம் சொன்னால் அடுத்த பயணத்துக்கு பணம் கிடைக்காது என்பதால் இங்கு அவர் பார்த்த நம்பூதிரிகளையும் இந்துக்களையும் அவர்களும் கிறிஸ்தவர்கள்தான்... ஆனால் என்ன விபூதி, திருமண், சந்தனம் என பூசியிருக்கிறார்கள். அது மட்டும் தன வித்தியாசம் என்று சொல்லித்தான் அடுத்த பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
ஐயன் : இதை வெளிப்படையாகச் சொல்ல கூச்சம் இருக்கத்தானே செய்யும்.
சனாதனி : உண்மைதான் ஐயனே. ஐரோப்பியர்கள் மேற்கொண்ட காலனிய ஆக்கிரமிப்புகள், பூர்வ கலாசார அழித்தொழிப்புகள் அனைத்தும் இயேசுவின் ஒளியை உலகுக்குக் கொண்டுசெல்வதாகச் சொல்லி நடந்தவைதான். இது ஒருபக்கமென்றால் உலகம் உருண்டை என்றும் உலகை பைபிள் கடவுள் படைக்கவில்லை என்றும் சொன்ன விஞ்ஞானிகளை விஷம் வைத்துக் கொன்றது கிறிஸ்தவம். ஐரோப்பிய அமெரிக்க விஞ்ஞானிகள் அனைவரும் கிறிஸ்தவராக இருந்திருக்காததால்தான் விஞ்ஞானப் பார்வையே பெற்றிருக்கிறார்கள். பாதிரிகள் அதிலும் போய் ஸ்டிக்கர் ஒட்டவேண்டாம். இவையெல்லாம் நவீன கால சாதனைகள் கிறிஸ்தவத்தை மீறித்தான் இவை நடந்திருக்கின்றன. இந்தியாவை மட்டுமே பிரிட்டிஷ் காலம் தொடங்கி இன்றுவரை கிறிஸ்தவம் கழுத்தை நெரித்து, ஆண்டுவருகிறது.
ஈ.வெ.ரா: கிறிஸ்தவர்கள் சொல் கேட்டுத்தான் ஆட்சியும் இயக்கமும் நடக்கிறது என்றால் பெருமைக்குரிய விஷயம் தான். இந்து மதத்தை விட அது எவ்வளவோ மேல்தான். பார்ப்பானுக்கு அடிமையாக இருப்பதைவிட பாதிரிக்கு அடிமையாக இருப்பது மேல்தான்.
எதனால் அப்படிச் சொல்கிறீர்கள் ஈ.வெ.ரா?
இந்த பிறவியில் ஒருவர் அனுபவிப்பவற்றுக்கு முற்பிறவியில் செய்தவை காரணம் என்று மூட நம்பிக்கை கொண்டதாக இந்து மதம் இருக்கிறது.
ஐயன் : நானும் அந்த நம்பிக்கை கொண்டவன் தான். முற்பகல், பிற்பகல், ஏழு பிறவி என்பதிலெல்லாம் நம்பிக்கை கொண்டவன்தான்.
அதனால்தான் உம்மையும் உம் குறளையும் எதிர்க்கிறேன். இந்து மதமும் நீவிரும் ‘ஊழிற் பெரியது யாவுள’ என்று சொல்லி மனித முயற்சியை முடக்கிப் போட்டதால்தான் இந்துக்களுக்கு அறிவு வளரவே இல்லை. இதை நம்பாமல் அறிவியல் பூர்வமாக சிந்தித்து செயல்பட்டதால்தான் கிறிஸ்தவ வெள்ளைக்காரர்கள் இந்த உலகையே வென்று காட்டியிருக்கிறார்கள். எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கிறார்கள்.
ஐயன் : ஊழ் தான் பெரியது... மனிதர்கள் எது செய்தும் பலனில்லை. எனவே சும்மா முடங்கிக் கிட என்று நான் சொல்லவே இல்லையே. நம்மவர்கள் அப்படி முடங்கியிருக்கவும் இல்லையே.
(சனாதனி) பிரிட்டிஷார் போய்விட்டால் நமக்கு குண்டூசி கூட செய்யத் தெரியாது என்று சொன்னார்கள். இன்று பிரிட்டிஷார் விண்கலம் செலுத்த நம் தயவை எதிர்பார்த்து நிற்கிறார்கள். சீனா ஒரு கிருமியை உலகம் முழுவதும் பரப்பினால் இந்தியாதான் உலகைக் காப்பாற்றவேண்டியிருக்கிறது. நம்மவர்கள் என்றுமே விதியைக் காரணம் காட்டி முடங்கியதே இல்லையே. மழை அளவாகப் பெய்தால் பயிர் செழிக்கும். அதிகம் பெய்தால் அழியும். இது இயற்கை விதி. ஆனால், அதற்காக நிலத்தைப் பண்படுத்தி, களை எடுத்து, உரமிட்டு, வேலியிட்டு மனிதன் முயற்சி செய்யத்தானே செய்கிறான். இத்தனை செய்தும் பலன் நம் கையில் இல்லை என்பது எதிர்பாராத இழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையைத் தரத்தானே தவிர எதுவுமே செய்யாமல் முடங்க அல்லவே.
ஈ.வெ.ரா: தொழில்களை யாரும் செய்யாமல் முடங்கவில்லை. ஆனால் அக்கம் பக்கத்தில் கஷ்டப்படுபவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லாமல் முன் ஜென்மத்தில் செய்த பாவத்துக்கான தண்டனை என்று சொல்வது எப்படி ஆன்மிகமாக இருக்கமுடியும்?
பாதிரியார் : இந்த இடத்தில்தான் எங்கள் இயேசுவின் போதனைகள் உலகுக்கு அவசியமாகின்றன. அவர் கஷ்டப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் கொடு என்று எங்களை முடுக்கிவிட்டிருக்கிறார். உலகம் முழுவதிலும் கடையாந்தரத்தில் இருப்பவர்களைக் கை தூக்கிவிடு என்று சொன்னார். அதைத்தான் நாங்கள் செய்துவருகிறோம். உலகுக்கும் இந்து மதத்துக்கும் அன்பைப் போதித்தது நாங்கள்தான்.
சனாதனி: கிறிஸ்தவம் அன்பைப் போதித்தது என்பது இந்த மனித குலத்தின் மாபெரும் கொடூர நகைச்சுவை. அவல நகைச்சுவை. சென்று ஆக்கிரமித்த கண்டங்களில் எல்லாம் கிறிஸ்தவர்களாக மாற மறுத்தவர்களைக் கொன்றழித்தது. மாறியவர்களை அவர்களுடைய கலாசாரத்தில் இருந்தும் அடையாளத்தில் இருந்தும் மரபிலிருந்தும் பிரித்து நடமாடும் பிணமாக்கியது. பூர்வகுடிகளில் ஒரு சிலரின் லெளகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு அத்தனை பேரின் ஆன்மிக, அடையாளங்களை, பாரம்பரியத்தை அழித்தது. வாரந்தோறும் பாவ மன்னிப்பு கேட்டுவிட்டு மேலும் மேலும் பாவங்களைச் செய்தது. ரட்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மேலும் மேலும் பாவங்கள் செய்துவருகிறது. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற திராவிட இயக்கத்தின் வேர் அதை இயக்கும் கிறிஸ்தவத்தின் இந்த அராஜக தந்திரத்தில்தான் இருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(12)
ஃபாதர் : உலக அளவில் கிறிஸ்தவம் செய்தவை எதுவாக இருந்தாலும் இந்தியாவில் அவை மீட்பு சக்திகளே. பிராமணரல்லாதவர்களுக்கு, குறிப்பாக பட்டியல் ஜாதியினருக்குக் கிடைத்திருக்கும் இன்றைய விடுதலைக்கு முழுவதும் அவர்கள் தான் காரணம். சனாதன சக்திகளுக்கு அது பிடிக்கவில்லை. அதனால்தான் சர்ச்களை முடக்கப் பார்க்கிறார்கள். அயல் நாட்டில் இருந்து வரும் நிதியைத் தடுத்துவிட்டார்கள். எங்களுடைய சேவைகள் எல்லாம் முடங்கிவிட்டன.
எங்கே தடுக்கப்பட்டிருக்கிறது? இந்திய வணிக நிறுவனங்களுக்கு வந்து குவியும் அந்நிய நிதி என்பது என்ன..? கிறிஸ்தவ தேசத்து பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் கிறிஸ்தவ நலனைத்தானே முன்வைக்கின்றன. சர்ச்சுக்குக்கும் போலி என்.ஜி.ஓக்களுக்கும் வரும் பணத்தைத் தடுக்கமுடியும். வணிக நிறுவனங்களுக்கு வருவதைத் தடுக்க முடியுமா? அடுத்த ஐம்பது வருடங்களில் என்ன பிரச்னை வருமென்று யோசித்து இன்றே அதற்கான திருட்டு வழிகளை உருவாக்கிக் கொண்டுவிடுவீர்களே.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்குத்தான் வரி கட்டுகிறார்கள்.
அரசுக்கு வரி கட்டாமல் கூட இருக்கமுடியும். ஆனால், சர்ச்சுக்குத் தராமல் இருந்துவிடமுடியுமா... விட்டுவிடுவீர்களா? அதோடு வளர்ச்சி என்ற பெயரிலும் வணிக நிறுவனங்கள் என்ற போர்வையிலும் கிறிஸ்தவ, மேற்கத்திய நலனைத்தான் எல்லா நிறுவனங்களும் முன்னெடுக்கின்றன.
எதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்..?
தாராளமயமாக்கலில் பலனடைந்த முக்கியமான ஒரு துறை காட்சி ஊடகம். முன்பெல்லாம் ஒரே ஒரு தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. இந்தியாவை நவின காலத்தில் இணைக்கும் நிறுவனமாக இருந்தது. கிரிக்கெட் போட்டி என்றால் தேசமே ஒருமித்துப் பார்த்து ரசித்தது. ஒட்டு மொத்த விளம்பர வருமானமும் அந்த இந்திய அரசு நிறுவனத்துக்கே கிடைத்தது. ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பான போது ஒட்டு மொத்த தேசம் டி.வி.முன் கட்டுண்டு கிடந்தது. தாராளமயமாக்கம் என்று திறந்துவிட்டார்கள். கண்டவனெல்லாம் சேனல் ஆரம்பித்தான். அதோடு எல்லாம் முடிந்தது.
எங்கே... இன்றும் எல்லா சேனல்களிலும் புராணங்கள் ஓடிக் கொண்டுதானே இருக்கின்றன.
காட்டப்படுகின்றன. அவையெல்லாம் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்க்கவைக்க ஒளிபரப்படுகின்றன. ஆனால், இந்த 20-30 ஆண்டுகளில் பெருகியிருக்கும் தனியார் காட்சி ஊடகமும் அச்சு ஊடகமும் முழுக்க முழுக்க இந்திய, இந்து விரோதிகளால் அல்லவா நிரம்பி வழிகிறது. ஒரு தொழில் துறை போலவா அது நடக்கிறது. கிறிஸ்தவத்தின் வணிக்க் கிளையாகத்தானே நடக்கின்றன.
எங்கே... மகர ஜோதி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, சிவராத்ரி, கோவில் கும்பாபிஷேகங்கள் என நேரடி ஒளிபரப்புகள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன. கோவில்களில் கூட்டம் முன்பை விட அதிகரித்துத்தானே வருகின்றன.
கோவிலில் கூடும் கூட்டம் என்பது இந்துக்களுக்குச் செய்யும் நன்மையைவிட அற நிலையத்துறைக்குச் செய்யும் நன்மையே அதிகம். அதாவது அற நிலையத்துறையில் இருக்கும் க்ரிப்டோக்களுக்கும் திராவிட நாத்திக கும்பலுக்கும் செய்யும் நன்மையே அதிகம். அவர்கள் இரண்டு பேருமே கிடைக்கும் லாபத்தில் சர்ச்சுக்குத்தான் தசம பாகம் கட்டப் போகிறார்கள்.
அதெல்லாம் இல்லை.
திருப்பதிக்கு தமிழகத்திலிருந்து 100 டிராவல் ஏஜென்ஸிகள் வண்டிகள் இயக்குகின்றன என்றால் அதில் 80% இந்து அல்லாதவர்கள் அல்லது திராவிட கும்பலாக இருக்கும். இந்து கொண்டுவந்து கொட்டும் பணம் எல்லாம் உங்களுக்குச் சுற்றி வளைத்துவந்துவிடும். நீங்கள் கூடுதலாக 100 சர்ச்கள் கட்டிமுடித்துவிடுவீர்கள்.
வணிக நிறுவனங்கள் எல்லாம் சர்ச்சின் கட்டுப்பாட்டில் ஒன்றும் இல்லை.
நேரடியாக இல்லைதான். ஆனால், மறைமுகமாக உங்கள் ஆதிக்கம் தானே நிலவுகிறது. தனியாஅர் மயம் என்ற போர்வையில் அரசு நிறுவனமான தூர்தர்ஷன் இன்று முடக்கப்பட்டுவிட்டது. பொருளாதார ரீதியாகவும் தேச உணர்வு ரீதியாகவும் தோற்றுவிட்டது. அடுத்ததாக விண்வெளி ஆராய்ச்சித்துறையிலும் தனியாரைக் கொண்டுவந்தாயிற்று. அரசின் ஒவ்வொரு கரங்களாக ஒடிக்கப்படுகின்றன. ஒரு பெரிய இந்திய, இந்து கார்ப்பரேட் நிறுவனத்தில் ஒரே ஒரு திருமண சம்பந்தம் போதுமே... அந்த சாம்ராஜ்ஜியத்தையே உங்கள் பக்கம் கொண்டுவந்துவிட.
இதெல்லாம் ஆதாரமற்ற, அதீதக் குற்றச்சாட்டுகள்.
திரைப்படத் துறையில் என்ன நடக்கிறது? கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பென்னி விக்ரம், ஜோசஃப் விஜய், சூர்யா, பிரகாஷ் ராஜ், அசின், த்ரிஷா, அமலாபால் என அத்தனை பேர் சம்பாதிக்கும் பணமும் எங்கு போகிறது? ரஜினியின் ஆடிட்டர் ஒரு கிறிஸ்தவர். அவருக்குத்தான் அத்தனை பினாமி நடவடிக்கைகளும் தெரியும். அனைத்தும் அவர் கட்டுப்பாட்டில்தான். ஒரு திரைப்படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டுகிறதென்றால் 100 புதிய சர்ச்சுகளுக்கான பணம் உள்ளே வருகிறது என்று அர்த்தம்.
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., காந்தாரா என சனாதன, இந்திய சூப்பர் ஹீரோக்கள் தானே வெற்றிபெறுகிறார்கள்.
இவையெல்லாம் விதி விலக்குகள். நிஜத்தில் கிறிஸ்தவ போலீஸ் லாக் அப்பில் ஒரு அப்பாவியை அடித்துக் கொன்றால், அவனைத் திரையில் இந்துவாகக் காட்டுகிறார்கள். நிஜத்தில் இந்து அதிகாரி வன விலங்கு பாதுகாப்புக்காகப் போராடினால் அவரை திரையில் கிறிஸ்வராகக் காட்டுகிறார்கள். இதுதான் அதிகமும் நடக்கிறது. ஜே.என்.யு.வில் நூறு துறைகள் இருக்கின்றன. ஆனால் பிரிவினைவாதத் துறை மட்டுமே முன்னணியில் இருக்கிறது.
இவையெல்லாம் தானாக நடக்கின்றன. இவற்றை நடத்த எங்களிடம் பொருளாதார பலமும் இல்லை. அரசியல் பலமும் இல்லை.
ஐயன் : கிறிஸ்தவர்களுடைய கட்சியின் பெயர் என்ன..?
(ஃபாதர் உற்சாகமாக) : எங்களுக்கு ஒரு கட்சியும் கிடையாது ஐயனே. எங்களைத்தான் இவர்கள் இப்படிக் கட்டம் கட்டித்தாக்குகிறார்கள்.
ஐயன் : இவர்களுக்கு ஒரு கட்சியும் இல்லை என்கிறார்களே.
சனாதனி : உண்மைதான் ஐயனே... ஆனால், இவர்கள் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் நடக்கவும் முடியாது. காவல் துறையினருக்கு சங்கம் கிடையாது. ஆனால், எந்தவொரு சங்கமும் காவல்துறையினரை மீறி எதுவும் செய்துவிடமுடியாது. அதுபோல்தான் இவர்களும்.
ஐயன் : காவல் துறை போல் இவர்களும் காவல் சக்தியாக இருக்கிறார்களா..?
(சனாதனி பதறியபடியே) : ஐயனே... உவமையை அப்படியே அர்த்தம் எடுத்துக்கொள்ளாதீர்கள். இவர்களிடம் கட்சி இல்லாமலே அதிகாரம் குவிந்து கிடக்கிறது என்பதைப் புரியவைக்கவே அப்படிச் சொன்னேன். உண்மையில் திருடர்களால் வெளிப்படையாக சங்கம் அமைக்க முடியாதல்லவா. அதுபோன்றவர்கள் இவர்கள். விஷயம் என்னவென்றால் இவர்கள் ஒரு கட்சியை ஆரம்பித்தால் மத மாற்றம்பற்றி அந்தக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதைச் சொல்லியாக வேண்டியிருக்கும். மத மாற்றத்தைத் தவறு என்று சொல்லி கட்சி நடத்த முடியாது. மத மாற்றம் சரி என்று சொல்லியும் கட்சி நடத்த முடியாது. அது திருட்டுத்தனமாக திருட்டுத்தனமாகச் செய்துவரும் வேலை கூட.
ஃபாதர்: சட்டம் மத மாற்றத்துக்கு அனுமதி தந்திருக்கிறது.
இல்லை... மத பிரசாரத்துக்குத்தான் தந்திருக்கிறது. மத மாற்றத்துக்கு அல்ல. ஒருவர் மதம் மாறினால் மாற்றியவரும் மாறியவரும் அரசிடம் அதைப் பதிவு செய்யவேண்டும் என்ற அடிப்படை விஷயத்தைக்கூட இந்துக்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு அத்தனை கட்சிகளும் வாய் மூடி கிடக்கின்றன.
ஃபாதர் : காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் என ஒவ்வொரு கட்சியும் தமக்கென தனி கொள்கைகள், தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் என இருக்கிறார்கள். அத்தனை பேருமே இந்துக்கள்.
காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விசிக, பாமக என்றைக்காவது ஏதாவது ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தையோ நபரையோ மத மாற்றத்தையோ எதிர்த்து ஒரே ஒரு வார்த்தை பேசியிருக்கிறார்களா? பேச விட்டுவிடுவீர்களா..?
பாதிரியார் மெளனமாக இருக்கிறார்.
திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் கிறிஸ்தவர், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் என எல்லாமே இவர்களுடைய அரசியல் கம்பெனிகள்தான் என்பதற்கான எளிய ஆதாரம் அதுதான் ஐயனே. இவர்களுக்குக் கட்சி கிடையாது. இவர்களை எதிர்க்கும் ஒரு கட்சியும் கிடையாது. அந்நிய நிதிகளுக்கான கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தமிழர் பாரம்பரியம், தமிழர் உணவு, தமிழர் மருத்துவம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என ஏகப்பட்ட புதிய என்.ஜி.ஓக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவை இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான தமிழர்களின் எழுச்சி.
ஆனால், இவர்கள் அத்தனைபேரும் இந்து விரோத நடவடிக்கைகளில் எப்படித் துல்லியமாக ஈடுபடுகிறார்கள்?
ஏனென்றால் இந்திய தேசியமும் இந்து மதமும் தான் இங்கு ஆதிக்க சக்திகள் இவர்கள் எல்லாம் ஆதிக்கத்தை எதிர்க்கும் போராளிகள்.
எத்தனையாவது அதிகாரத்தில் வரும் வசனம் இது?
சமூக, அரசியல் உண்மையைச் சொல்கிறேன். கிறிஸ்தவர்கள் தாம் உண்டு; தமது சேவைகள் உண்டுஎன்று இயங்கி வருகிறார்கள். தமது தேவைகளுக்கென்று அவர்கள் என்றேனும் குரல் கொடுத்திருக்கிறார்களா... தூத்துக்குடியில் மக்கள் நலனுக்காக ஒரு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். காய்க்காய் குருவிகளைச் சுடுவதுபோல் சுட்டுக்கொன்றுவிட்டார்கள் சனாதன சக்திகள்.
ஐயன் : தூத்துக்குடியில் எதற்காகப் போராட்டம் நடந்தது? எதற்காகச் சுட்டுக் கொன்றார்கள்?
ஃபாதர் : தூத்துக்குடியில் ஒரு தொழிற்சாலை இருந்தது ஐயனே. அதில் இருந்து வெளியான நச்சு காற்றில் கலந்து மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஆலையை மூடச் சொல்லி மக்கள் அமைதியாகப் போராடினார்கள். நாங்கள் பாதிரிகள் ஆதரவு கொடுத்தோம். நாங்கள் ஆதரவு கொடுத்த காரணத்தினாலே அந்த மக்களைக் கொன்றுவிட்டார்கள்.
ஐயன் : ஐய்யோ... அமைதியாகப் போராடியவர்களைக் கொன்றுவிட்டார்களா..?
ஃபாதர் : 99 நாட்கள் அமைதியாகப் போராடினார்கள்.
ஐயன் : அதன் பின்...
ஃபாதர் : போராட்டம் கைமீறிப் போய்விட்டது. சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். ஆனால், அரசு அப்பாவிகளைத்தான் கொன்றது.
சனாதனி : ஐயனே... அந்த தொழிற்சாலை பற்றிக் கொஞ்சம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்களேன்...
ஐயன் : ஏன்... அதுதான் சுற்றுச் சூழலுக்குக் கெடுதல் விளைவித்ததாகச் சொன்னார்களே.
சனாதனி : இல்லை ஐயனே... அந்தத் தொழிற்சாலை எத்தனை ஆண்டுகளாக நடந்துவந்தது..? சுற்றுச் சூழலுக்கு உண்மையில் என்ன கேடு விளைவித்தது என்றெல்லாம் கேளுங்கள்.
ஃபாதர் : அவை என்னவாக இருந்தாலும் அரசு தன் மக்களைக் கொன்றது தவறுதானே.
சனாதனி : ஒரு தவறைச் செய்தவர் மீது எவ்வளவு குற்றம் இருக்கிறதோ அதே அளவுக்கு அந்தத் தவறைச் செய்யத் தூண்டுபவர் மீதும் இருக்கிறது.
ஃபாதர் : அப்படி என்ன தூண்டிவிட்டார்கள்?
சனாதனி : அந்த தொழிற்சாலை எத்தனை வருடங்களாக நடந்து வந்தது..?
ஃபாதர் : அதுதான் கொலைக்குத் தூண்டியதா..?
சனாதனி : இது பதில் அல்ல.
ஐயன் : அந்த தொழிற்சாலை பல ஆண்டுகளாக நடந்து வந்ததா..?
சனாதனி : ஆமாம், ஐயனே. இதோ நிற்கிறாரே இவருடைய தந்தையின் ஆட்சியில்தான் அதற்கு அனுமதியே தரப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் அது நடந்து வந்தது.
ஐயன் : அப்போது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படவில்லையா..?
சனாதனி : சொல்லுங்கள்ஃபாதர்.
ஃபாதர் : அது அப்போதும் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படத்தான் செய்தது.
சனாதனி : அப்போதெல்லாம் ஏன் போராடவில்லை?
ஃபாதர் : போராட்டங்கள் நடக்கத்தான் செய்தன.
சனாதனி : கடைசியில் நடந்த போராட்டம் போல் நடந்ததா என்ன..? கைச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டபோது மட்டும் நடந்தன. அப்படித்தானே. சுற்று சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பட்டியலில் அந்த நிறுவனம் எத்தனாவது இடத்தில் இருந்தது?
ஃபாதர் : சிவப்புப் பட்டியலில் அந்த நிறுவனமும் இருந்ததுதானே.
சனாதனி : அது விஷயமில்லை. உங்களுக்கு சுற்று சூழல் மீது அக்கறை இருந்திருந்தால் அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த நிறுவனத்துக்கு எதிராகத்தானே போராடியிருக்கவேண்டும். 17 போராட்டங்கள் நடத்தி முடித்தபின் தானே இங்கு போராட வந்திருக்கவேண்டும்.
ஃபாதர் : சரி... முதலில் போராடியது தவறு என்றே வைத்துக்கொள்வோம். படுகொலைகளை நியாயப்படுத்திவிடமுடியுமா?
ஐயன் : ஒரு உயிர் எவ்வளவு மகத்தானது. அரசின் கைகளில் ரத்தக் கறை படியலாமா?
சனாதனி : இது கொஞ்சம் சிக்கலான விஷயம் ஐயனே. அதிமுக என்ற தமிழகக் கட்சியும் தமிழக காவல் துறையும் சேர்ந்து செய்த வன்முறை அது. 99 நாள் நடந்த போராட்டத்துக்கு இருந்திராத ஒரு நியாயத்தை 100 நாளில் உருவாக்கிக் கொடுத்துவிட்டார்கள்.
ஃபாதர் : அவர்களை இயக்கிய மத்திய அரசுதான் முக்கிய குற்றவாளி. இந்திய வல்லாதிக்கம் தான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றது.
சனாதனி : இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்றுகுவித்தது கிறிஸ்தவ சிங்கள அரசு. அதற்குத் துணையாக இருந்தது கிறிஸ்தவ காங்கிரஸும் கிறிஸ்தவ திராவிட அரசும் தான். இன்று நீங்கள் அவர்களுடன் கை கோர்த்துகொண்டு பாஜகவுக்கும் இந்து மத்த்துக்கும் இந்தியாவுக்கும் எதிராகப் போராடுகிறீர்கள். ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றவர்களுடன் சேர்ந்துகொண்டு 13 பேரைக் கொன்ற தமிழக காவல்துறையையும் முதலமைச்சரையும் விட்டுவிட்டு இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராகப் போராடுகிறீர்கள்.
ஃபாதர் : இலங்கை பக்கத்து நாடு. அங்கு நடந்தவற்றை காங்கிரஸாலும் திமுகவாலும் எப்படித் தடுத்திருக்க முடியும்?
சனாதனி : நினைத்தால் முடிந்திருக்கும். கிறிஸ்தவ வல்லதிக்க சக்திகளுக்கு நாடுகளும் அரசுகளும் பொருட்டே இல்லை. எந்த எல்லையும் உங்களைத் தடுக்காது. அதோடு தமிழக அரசு செய்த படுகொலைக்கு மத்திய அரசு எப்படிப் பொறுப்பேற்க முடியும்? கிறிஸ்தவர்கள் தவறு செய்தால் அது அவர்களுடைய தனிப்பட்ட தவறு. இந்துக்கள் தவறு செய்தால் மதமும் தேசமும் காரணம் அப்படித்தானே.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(13)
ஃபாதர் : தேசம் தனியார்மயமாகிவிட்டது. இந்துத்துவ ஆட்சிதான் நடக்கிறது. பல துறைகளை தனியார் மயமாக்குவது நீங்கள்தான். பழி மட்டும் எங்கள் மீதா?
சனாதனி : இதில்தான் உங்கள் தந்திரமும் வெற்றியும் இருக்கிறது. தனியார்மயமும் தாராளமயமும் மேலோட்டமாகப் பார்த்தால் தேச நலனுக்கும் இந்து நலனுக்கும் உகந்ததாகவே தோன்றும். ஆனால், நீண்ட கால நோக்கில் பின்னடைவையே கொண்டுவரும். கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் எளிய மனிதராக இருந்தாலும் கல்வியாளராக இருந்தாலும் வணிகராக இருந்தாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் எந்தத் துறை பிரபலமாக இருந்தாலும் அவர் அவருடைய மதத்தின் நலனை மட்டுமே முன்னெடுப்பார். முன்னெடுக்க முடியும். அந்த மதங்களின் அடிப்படைவாதிகளில் ஆதிக்கம் அப்படிப்பட்டது.
ஃபாதர் : கிறிஸ்தவம் மீதான விமர்சனம் மிக அதிகமாக வைக்கப்படுவது கிறிஸ்தவ தேசங்களில் தான்.
சனாதனி : உண்மைதான். ஆனால், அந்நிய நாட்டு நிறுவனம் ஒன்று தன் நாட்டில் கிறிஸ்தவ ஆதிக்க சக்திகளை எதிர்த்துச் செயல்பட்டாலும் இந்தியா போன்ற நாடுகளுக்கு வந்தால் கிறிஸ்தவ நலனுக்கு எதிராகச் செயல்பட்டுவிட முடியாது. இந்தியாவுக்கு பாதிரிகள் மட்டுமே வந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ தேசத்து நாத்திகர்கள் வரவே இல்லை. கம்யூனிஸ்ட்கள் ரஷ்யாவிலும் சீனாவிலும் கிறிஸ்தவர்களை எதிர்ப்பார்கள். ஆனால், இந்தியாவில் உங்கள் பே ரோலில் தான் அவர்கள் இருக்கிறார்கள். இந்து மட்டுமே நடுநிலை என்ற பெயரில் முற்போக்கு என்ற பெயரில் இந்து நலனை விட்டுக்கொடுத்துச் செயல்படுவார். செயல்பட வைக்கப்படுவார். இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகளுக்கும் இந்து அடிப்படைவாத சக்திகளுக்கும் இடையிலான வித்தியாசம் இதுவே.
ஃபாதர் : அதெல்லாம் இல்லை. இந்து கார்ப்பரேட்கள் இந்துக்களின் நலனைத்தான் முன்னெடுக்கிறார்கள். குஜராத்தியாகட்டும், மராட்டியராகட்டும் எந்த வணிக நிறுவனத்தலைவரும் விநாயகர் சதுர்த்திக்கும் தசராவுக்கும் தீபாவளிக்கும் தான் ஆதரவு தருகிறார்.
சனாதனி : தீபாவளிக்கு விளம்பர மாடல்களின் நெற்றியில் பொட்டு வைக்கச் சொல்லவே நாடு முழுவதும் போராட வேண்டியிருக்கிறது ஐயனே. தீபாவளி முடிந்த அடுத்த நாளே பொட்டை அழித்துவிடுவார்கள். வட இந்தியாவில் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படும் நிறுவனம் தமிழகத்தில் சேனல் ஆரம்பித்தால் முழுக்கவும் திராவிட கும்பலைத்தான் வேலையில் நியமித்தாக வேண்டியிருக்கும். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து இந்து, இந்திய விரோத விஷயங்களை முழங்குவர்கள். இதுதான் நடக்கிறது. நடக்க முடியும்.
ஃபாதர் : விஞ்ஞானப் பார்வை, தனியார் மயம், தாராள மயம் என மாறிவரும் புதிய உலகுக்கு ஏற்ற மதம் கிறிஸ்தவமே. காலத்துக்கு ஏற்பவும் தேசங்களுக்கு ஏற்பவும் பல்வேறு கலாசாரங்களுக்கு ஏற்பவும் தன்னை மாற்றிக்கொண்டு உலகம் முழுவதையும் அரவணைத்துக்கொண்டு செல்லும் குணம் கிறிஸ்தவத்துக்கு மட்டுமே இருக்கிறது. இந்து மதம் மற்றவற்றை விலக்கி வைத்து உள்ளுக்குள் ஒடுங்கிக் கொண்டே செல்லக்கூடியது. இந்து மதம்... அதற்குள் பல ஜாதிகள்... ஜாதிகளுக்குள் பல கிளைகள்... கிளைகளுக்குள் பல குலங்கள்... அதற்குள்ளும் இடம் சார்ந்து சில பிரிவுகள் என ஒடுங்கிக் கொண்டே செல்லும். அத்தனை பேரும் அவரவருக்கான தனித்தன்மை, அடையாளம், மரபு என்று சொல்லிப் பிரிந்துகொண்டே பிரித்துக் கொண்டே செல்வார்கள். கிறிஸ்தவம் உலகம் தழுவிய பார்வை கொண்டது. எனவே அதுவே உலகை வெல்லும்.
சனாதனி : கிறிஸ்தவத்தில் உலகளாவிய பார்வை என்பது உலகம் முழுவதும் இருப்பவற்றை அங்கீகரித்து அரவணைக்ககூடியது அல்ல. அனைத்தையும் ஆக்கிரமித்து அழித்து தன்னை மட்டுமே முன் வைக்கக்கூடியது. அது பூஞ்சக் காளான் போன்றது. எந்த உணவில் படருகிறதோ அதை அழித்துவிடும். எந்த மரத்தில் ஒட்டுகிறதோ அந்த மரத்தின் ஜீவனை உறிஞ்சும் ஒட்டுண்ணி போன்றது. எந்த உயிரின் உடம்பில் வளர்கிறதோ அந்த உடம்பின் பலம் முழுவதையும் உறிஞ்சிவிடும் புழுவைப் போன்றது. இந்து மதத்தின் உள் ஒடுங்கிய அணுகுமுறை என்பது அடுத்தவரை அழிக்காமல் அவரவர் இயல்புடன் வாழ வைக்கக்கூடியது. உலகின் பழங்குடி மரபுகளின் நேச சக்தி இந்து தர்மம். பன்மைத்துவத்தின் காவலன்.
அப்போது, ஐயனே... வாருங்கள். சென்னையில் நாம் போய்ப் பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன என்று தலைமைச் செயலர் முன்னால் வருகிறார்.
ஐயன் காரில் ஏறிக் கொள்கிறார். அருகில் ஈ.வெ.ராவையும் அமர்த்திக் கொள்கிறார்.
திராவிட அரசு கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான பேனர்கள் வழியில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஈ.வெ.ரா.வின் கண்கள் கலங்குகின்றன.
நான் தான் இவர்களையெல்லாம் அரசியலுக்கு அழைத்து வந்தேன். ஆனால், என்னைக் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டான்கள்.
ஃபாதர் : ஆட்சி அதிகாரம் இருந்தால் தானே ஐயா ஏதாவது செய்ய முடியும். ஆட்சியில் ஏறியவர்கள் உங்களுக்கென்று ஒரு இருக்கையைப் போட்டு நீங்கள் வந்து அமரும் வரை அது காலியாகவே இருக்கும் என்று சொல்லி ஆட்சி செய்தவர்கள் அல்லவா...
ஈ.வெ.ரா.: நான் சென்று அமரமாட்டேன் என்ற தைரியம் அவன்களுக்கு. நான் அதில் அமரப் போயிருந்தால் இவன்கள் நாற்காலியை இழுத்து என்னை கிழே விழவைத்திருப்பான்கள் என்ற பயம் எனக்கு. நான் நாத்திகம் போதித்தேன். இவன்கள் கோவில் கோவிலாக கும்பாபிஷேகம் நடத்துகிறான்கள்.
ஃபாதர் : ஐயனே... அதெல்லாம் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கற வேலைதான். ஆயிரம் ரூபா செலவு பண்ணிட்டு கோடிகளைக் கணக்கு எழுதி கொஞ்சத்தை கைச் செலவுக்கு எடுத்துக்கொண்டுவிட்டு மீதியை என் கிட்ட கொண்டுவந்து தந்துருவாங்க.
ஈ.வெ.ரா. : பெண்ணுரிமை பற்றிப் பேசினேன். ஜெயலலிதாவை இவன்கள் தெருவுக்குத் தெரு மேடை போட்டுத் திட்டினான்கள்.
ஃபாதர் : குச்சிக்காரிகள் என்று நாம் பேசாத பேச்சா... தாய் பன்றியைப் பின் தொடருமாம் சேய் பன்றிகள்.
ஈ.வெ.ரா. மௌனமாகிறார்.
கார்கள் ஜார்ஜ் கோட்டையை நெருங்குகிறது. தலைமைச் செயலர், அதன் அருமை பெருமைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார். ஐயனே... நாம் இப்போது தமிழகத்தை ஆளும் அரண்மனைக்குச் செல்லவிருக்கிறோம்.
ஐயன் : நல்லது.
தலைமைச் செயலர் : அது புனிதர் ஜார்ஜின் பெயரில் அழைக்கப்படுகிறது.
ஐயன் : யார் அவர்..?
தலைமைச் செயலர் (பெருமிதத்துடன்) : கிறிஸ்தவ உலகம் போற்றும் மாபெரும் புனிதர்.
ஐயன் : புனிதர் என்றால்...
தலைமைச் செயலர் : மாபெரும் தியாகங்கள், போதனைகள், பிரசாரங்கள், சேவைகள் செய்து கிறிஸ்தவத்தை உலகெங்கும் கொண்டு சென்று உலக மக்களை ரட்சித்த மகத்தானவர்களை புனிதர்கள் என்று போற்றுகிறார்கள்.
ஐயன் : இவர் என்ன சேவைகள் செய்தார்..?
தலைமைச் செயலர் : தன் உயிரையே பலியாகக் கொடுத்தார்.
ஐயன் : எப்படி?
தலைமைச் செயலர் : அவருடைய தாய் கிறிஸ்தவர். தந்தை கிரேக்கர். ரோமாபுரியில் இருந்த மன்னர்கள் கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தார்கள்.
ஐயன் : ஏன்..?
தலைமைச் செயலர் : பூர்வ குடி மரபில் இருந்து கிறிஸ்தவர்கள் பிரிந்து சென்றிருந்தார்கள். பாரம்பரிய ரோமாபுரி கடவுள்களையே கும்பிடவேண்டும்; இல்லையென்றால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். இயேசுவின் போதனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் வேறு எதன் பக்கமும் செல்லமாட்டோம் என்று சொன்னார்கள். ரோமானிய மன்னர் தயோக்லீஷியன் பூர்வ மதம் திரும்ப மறுத்தவர்களைக் கொன்று குவித்தார். அவர்களில் இந்த ஜார்ஜும் ஒருவர். ராணுவ வீரராக இருந்த இவர் துன்புறுத்தப்பட்டு தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய துயரங்களைப் பார்த்து மனம் மாறிய ரோமானிய கான்ஸ்டண்டைன் ராஜ பரம்பரையினால்தான் கிறிஸ்தவம் உலகம் முழுவதும் பரவியது. ஜார்ஜின் தியாகமே அந்த மன மாற்றத்துக்குக் காரணமாக அமைந்ததால் அவர் புனிதராகப் போற்றப்படுகிறார்.
சனாதனி : அது இவர்கள் சொல்லும் கட்டுக்கதை ஐயனே. தோமையர் என்பவர் இந்தியாவுக்கு வந்ததே இல்லை. ஆனால், அவரையும் இங்கு வைத்துக் கொன்றுவிட்டார்கள் என்று ஒரு கதையைக் கட்டிவிட்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு நம்பி சிலர் மனம் மாறுவார்கள் அல்லவா... அதுதான் இவர்களின் திட்டம். தந்திரம்.
ஐயன் : அது ஒருபக்கம் இருக்கட்டும். நம் மரபில் இதுபோல் மகத்தான செயல்கள் செய்தவர் யாரும் இல்லையா... ஆதி சங்கரர் தேசம் முழுவதும் கால் நடையாகச் சென்று அத்வைத ஞானத்தைப் பரப்பினாரே... ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யரும் ஸ்ரீ மத்வாச்சார்யரும் த்வைத, விசிஷ்டாத்வைதத்தைப் பரப்பினரே... அப்பர் பெருமானும் எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆட்பட்டாரே.
தலைமைச் செயலர் (சற்று ஏளனமாக) : இவர்களில் யார் பெயரைச் சூட்டினாலும் மற்றவர்கள் பிரச்னையைக் கிளப்புவார்கள்.
ஐயன் : ஒவ்வொரு வளாகத்துக்கு ஒவ்வொருவரின் பெயரைச் சூட்டலாமே. ஒரு புறாவுக்காகத் தன் சதையை அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி, முல்லைக்குத் தன் தேர் கொடுத்த பாரி, மயிலுக்குப் போர்வை தந்த பேகன், தன் தலையைக் கொய்யா வாளெடுத்துக் கொடுத்த குமணன் இவர்களில் யார் பெயரையேனும் சூட்டியிருக்கலாமே. மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பிய ராஜ ராஜன், ராஜேந்திர சோழன் மணி மண்டபம் என்று பெயர் சூட்டலாமே.
சனாதனி : இவ்வளவு ஏன் ஐயனே... உலகப் பொதுமறை தந்த உம் பெயரைக்கூடச் சூட்டலாமே. அதைவிடப் பொருத்தமான பெயர் என்னவாக இருக்கமுடியும். தண்டனையைப் பற்றி அதிகம் பேசாத ஒரே நீதி நூலை யாத்தவரல்லவா நீவிர். அரசனுக்கும், வணிகனுக்கும், தொழில் குலத்துக்கும் இல்லறத்துக்கும் துறவுக்கும் தர்ம சாஸ்திரங்களின் வழி நின்று வாழ ஆற்றுப்படுத்திய மகத்தான ஆச்சார்யர் அல்லவா நீவிர்.
ஐயன் : கல் தோன்றி மண் தோன்றா மூத்த குடிக்கு தன்னுடைய ஆட்சி மண்பத்துக்கு ஒரு தமிழ் முன்னோடியின் பெயர் சூட்ட முடியவில்லையா..? நம் மரபில் இருந்து ஒருவருடைய பெயரைச் சூட்டுங்கள். அதன் பின் இந்த மண்டபத்துக்கு வருகிறேன். முதலில் இங்கிருந்து புறப்படுங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(14)
தலைமைச் செயலர் : கோபம் வேண்டாம் ஐயனே. நாம் வேறொரு இடத்துக்குச் செல்வோம். உங்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கும்.
ஐயன் சற்று நிதானமாக அவரை உற்றுப் பார்க்கிறார்.
தலைமைச் செயலர் தொடர்ந்து சொல்கிறார்: நூலகம்... அதாவது, நவீன கால ஓலைச்சுவடிகள் நிறைந்திருக்கும் இடம்.
ஐயன் : வெண் தாமரையில் வீற்றிருப்பவளின் ஆலயமா.
தலைமைச் செயலர் : ஆமாம். (சற்று தயங்கியபடியே) ஆனால், முதலிலேயே ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன் ஐயனே... அதன் பெயர் கன்னிமரா
அப்படியென்றால்...
அது ஒரு அந்நிய நாட்டினரின் பெயர்.
அவர் நூல்களோடு நிறைய தொடர்புடையவரா..?
அது வந்து...
அவர் செய்த சாதனைகள் என்ன...? நம் சுவடிச் சாலைக்கு அவர் பெயர் சூட்டுமளவுக்கு அவர் செய்ததுதான் என்ன..?
அவர்தான் இந்த நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அவர் ஆட்சியாளராக இருந்தபோதுதான் இது ஆரம்பிக்கப்பட்டது எனவே அவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது ஐயனே.
சனாதனி : அவர் நம்மை அடக்கி ஆண்ட அந்நிய நாட்டினர் ஐயனே. அந்த அந்நிய சக்திகளின் அடிமையாக நீடிப்பவர்கள் அந்த எஜமானர் மீதான விசுவாசத்துடன் தானே இருக்க விரும்புவார்கள். அதோடு அவருக்கு வேறு சில பெருமைகளும் உண்டு ஐயனே.
ஐயன் : என்ன அவை...
சனாதனி : அதை தலைமைச் செயலரின் வாயால் கேட்டால்தான் நன்றாக இருக்கும். சொல்லுங்கள் செயலரே...
அவர் தயங்கியபடியே நிற்கிறார்.
சனாதனி : சொல்லுங்கள்.... இந்திய விளைபொருட்களைச் சுரண்ட ரயில் பாதை அமைத்தார்; பஞ்ச காலத்தில் மத மாற்றத்துக்கு உதவினார் என்பதையெல்லாம் தாண்டி முக்கியமான ஒரு சாதனை செய்தாரே. பிரிட்டிஷ் அரசு கூட அதைப் பாராட்டித்தானே அவரை பதவி விலகச் சொல்லியது. உண்மையில் அதுதானே இன்றும் நீங்கள் அந்தப் பெயரை மாற்றாமல் மகிழ்ந்து நிற்கக் காரணம்.
தலைமைச் செயலர் : அதெல்லாம் இல்லை ஐயனே...
சனாதனி : அப்படியானால் சொல்லுங்கள்.
தலைமைச் செயலர் : அவர் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டவர்.
சனாதனி : அது ஒரு பெரிய சாதனைதான். இன்னும் முக்கிய சாதனை இருக்கின்றனவே.
தலைமைச் செயலர் : அவருடைய மனைவி அவர் மீது வழக்குத்தொடுத்தார்.
சனாதனி : எதற்காக என்று சொல்லுங்கள்.
தலைமைச் செயலர் : அவர் பணிப் பெண்ணுடன் பழக்கத்தில் இருந்தார். மன்னர்கள், செல்வந்தர்களின் வாழ்க்கையில் அது எல்லாம் சகஜம் தானே.
சனாதனி : அதுகூடக் காரணமில்லை ஐயனே. தெளிவாகச் சொல்லுங்கள் செயலரே.
தலைமைச் செயலர் : ஒன்றுமில்லை ஐயனே... பாலியல் நோய்த் தொற்றுக்கு ஆளானார். தனக்கும் அந்த நோய் ஏற்பட அவரே காரணம் என்று மனைவி வழக்குத் தொடுத்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டு அபராதம், பதவி இழப்பு எல்லாம் நடந்தேறின.
சனாதனி : இந்த திருமணம் தாண்டிய உறவையும் நோய்ப் பரப்பலையும் பாராட்டித்தான் தமிழ் கூரும் நல்லுலகின் மாபெரும் வாசக சாலைக்கு அவர் பெயர் நீடித்து நிலைக்க வழிசெய்துவருகிறார்கள்.
தலைமைச் செயலர் : அப்படியெல்லாம் இல்லை ஐயனே. எந்தவொரு அமைப்பும், கட்டடமும் எந்த ஆட்சியாளரின் காலத்தில் கட்டப்படுகிறதோ அந்தப் பெயரில் அழைக்கப்படுவது வழக்கம் தானே. இங்கும் அப்படித்தான்.
ஐயன் : விடுதலை கிடைத்தபின் இந்த அம்சங்களையெல்லாம் அடிமைத்தனத்தை நினைவுபடுத்துபவை என்று பெயர் மாற்றுவதுதானே வழக்கம்.
சனாதனி : அதெல்லாம் சுய மரியாதையும் பகுத்தறிவும் உள்ளவர்கள் செய்யும் செயல் ஐயனே.
ஐயன் : எந்த அடிமைத்தனத்தையும் இவர்கள் அகற்றவே இல்லையா..?
சனாதனி : துக்க நாளைத் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், மத்திய அரசு மாநில சுய உரிமைகளைப் பறிக்கிறது என்று அமாவாசை பௌர்ணமி நாட்களில் ஓலமிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஐயன் : தமிழ்-இந்து மரபின் நினைவாக தமிழகத்தில் எதுவுமே இல்லையா...
தலைமைச் செயலர் : இருக்கிறது ஐயனே. தமிழக அரசின் முத்திரைச் சின்னமே ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ கோபுரம்தான் ஐயனே. இவ்வளவு ஏன்... தமிழகத்தின் மூளையாகத் திகழும் உண்மையான தலைமைச் செயலகத்தின் பெயரே அறிவாலயம்தான்.
சனாதனி : அந்த அறிவாலயம் உண்மையில் இவர்களுடைய அறிவுக்கு மிகவும் சிறந்த எடுத்துக்காட்டு ஐயனே.
ஐயனே : அறிவாலயம்... பெயரே அருமையாக இருக்கிறதே.
சனாதனி : கொஞ்சம் பொறுங்கள் ஐயனே. அவர்களுடைய அறிவு எதில் சிறந்து விளங்குகிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். அந்த இடம் பிரிட்டிஷ் அரசு பட்டியல் ஜாதியினருக்குக் கொடுத்தது.
தலைமைச் செயலர் : ஐயனே... பிரிட்டிஷார் அடக்கி ஆண்டதாகச் சொன்னார்களே... உண்மையில் அவர்கள்தான் சமத்துவத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் என்பதன் எளிய உதாரணம் தான் இந்த பஞ்சமி நில நல்கை.
சனாதனி : நம் மரபில் நம் முன்னோர்கள் ஆலயங்களுக்கு தானமாக நிலங்களைக் கொடுப்பார்கள். சொத்துகளைக் ஆலயங்கள் அவற்றை வணிகர்களுக்கு வட்டி இல்லா கடனாகவும் நிலமற்றவர்களுக்கு குத்தகைக்கும் கொடுக்குமே அதுபோன்ற ஒரு விஷயம் தான் ஐயனே. ஏதோ பிரிட்டிஷார்தான் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்.
தலைமைச் செயலர் : ஐயனே... இந்து மரபில் பட்டியல் ஜாதியினருக்கு யாரும் நிலமெல்லாம் கொடுத்ததில்லை. அவர்கள் ஜாதி இந்துக்களின் அடிமைகளாகவே இருந்தனர். பிரிட்டிஷார் ஜாதி இந்துக்களை அடிமைப்படுத்தினர். பட்டியல் ஜாதியினருக்கு விடுதலை கொடுத்தனர்.
சனாதனி : அதெல்லாம் இல்லை ஐயனே. இதே பட்டியல் ஜாதியினரைத்தான் தேயிலைத் தோட்டங்களுக்கு அடிமைகளாகக் கொண்டு சென்று கொன்றுகுவித்தனர். நடைபிணமாக்கினர்.
தலைமைச் செயலர் : பஞ்சமி நிலம் தான் பட்டியல் ஜாதியினருக்கு முதன் முதலாக கிடைத்த நிலம். கிறிஸ்தவர்கள்தான் முதன் முதலில் அதைக் கொடுத்திருக்கிறார்கள்.
சனாதனி : ஐயனே... பட்டியல் ஜாதியில் தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஜாதிகள் என்னென்ன என்று கேளுங்கள். உண்மை புரியவரும்.
ஐயன் : பஞ்சமி நிலம் என்பது நிலமற்ற ஜாதிகளுக்குத் தரப்பட்டதாகச் சொன்னாரே... அது உண்மைதானா?
சனாதனி : அந்தப் பட்டியலில் இருக்கும் தேவேந்திர குலத்தினர் நாங்கள் நில உடமையாளர்கள்... எங்களைப் போய் பட்டியல் ஜாதியில் சேர்த்துவிட்டார்கள். நாங்கள் இதில் இருந்து வெளியேற விரும்புகிறோம் என்று போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். உண்மையில் அவர்களைவிட அதிக அளவில் நில உடமையாளராக இருந்த ஜாதிகளும் பட்டியல் பிரிவில் இருக்கின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது அந்த பஞ்சமி நிலங்களின் நிலை என்ன என்று கேளுங்கள்.
ஐயன் : என்ன ஆகின அந்த நிலங்களுக்கு. அந்த நிலங்களைப் பெற்று அந்த ஜாதிகள் முன்னேறிவிட்டிருக்குமே.
சனாதனி : இதற்கு பதில் சொல்லத் தகுதியானவர் இந்த தலைமைச் செயலர்தான். சொல்லுங்கள்.
தலைமைச் செயலர் முகம் வெளிறுகிறது.
ஐயன் : சொல்லுங்கள் அந்த நிலங்களுக்கு என்ன ஆனது
தலைமைச் செயலர் மௌனமாக இருக்கிறார்.
சனாதனி : அறிவு ஐயனே... அறிவாலய அறிவு அதில் இருக்கிறது. யாரை நிலமற்று இருந்ததாக இவர்கள் இப்போது கதைகட்டுகிறார்களோ... யாருக்கு கிறிஸ்தவர்கள் வந்துதான் நிலம் கிடைத்தது என்று உருட்டுகிறார்களோ அந்த மக்களிடமிருந்த நிலங்களை, அரசியல் அதிகாரங்களை அவர்களிடமிருந்து கொள்ளையடிக்க உருவாக்கப்பட்டதுதான் நீதிக்கட்சி, திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எல்லாம்.
ஐயன் : பட்டியல் ஜாதியினருக்கென்று கட்சி எதுவும் இல்லையா? இந்த அநீதிகளைத் தட்டிக் கேட்க அவர்களுக்கு எந்த அமைப்பும் இல்லையா?
சனாதனி : இருக்கின்றன ஐயனே. ஆனால், கட்டை பிரம்மச்சாரியான அந்தக் கட்சியின் தலைவர் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சமி நில மீட்பு என்று திராவிட இயக்கங்களை எதிர்த்து போராட்டங்கள் அறிவிப்பார். தேவையானவை கிடைத்ததும் சனாதனத்தை வேரறுக்கக் கிளம்பிவிடுவார்.
ஐயன் : சனாதனம் என்ன செய்தது?
சனாதனி : அதுதானே பஞ்சமி நிலங்களை எல்லாம் அபகரித்த திராவிட இயக்கத்தினரை ஆட்டிப் படைக்கிறது. இதில் அவர்களுடைய அறிவு எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்... பஞ்சமி நிலம் கொடுத்ததற்கு பிரிட்டிஷாரை அதாவது, கிறிஸ்தவர்களைப் பாராட்டுவார்கள். அந்த நிலங்களை அபகரித்த திராவிட இயக்கத்துடன் கூட்டு சேர்ந்து சனாதன சக்திகளை தமிழகத்தில் கால் ஊன்றவிடாமல் போராடிக் கொண்டே இருப்பார்கள்.
ஐயன் : சனாத சக்திகள் வந்தால் என்ன செய்துவிடுவார்கள்.
சனாதனி : பட்டியல் ஜாதியிடமிருந்த நிலங்களையெல்லாம் எடுத்துக்கொண்டுபோய்விடுவார்கள்.
ஐயன் : அது இப்போது அவர்களிடம் இல்லையே.
சனாதனி : திராவிட இயக்கத்தினர் அதை பத்திரமாக சங்கிலி போட்டு இறுக்கி வைத்திருக்கிறார்கள். சனாதனிகள் அனுமார் போல் பெயர்த்து எடுத்து இமயமலைக்குக் கொண்டுசென்றுவிடுவார்கள். அப்படி நடக்காமல் இரவும் பகலுமாக திராவிட இயக்கம் அந்த நிலங்களைத் தமது பெயரில் பட்டாபோட்டுக் கொண்டு பத்திரமாகப் பாதுகாத்துவருகிறது. அறிவாலயத்தின் அறிவு என்பது இந்த க்ரிமினல் அறிவுதான் ஐயனே. கொள்ளையடித்தவரையே களவு கொடுத்தவர் தலையில் வைத்துக்கொண்டாடச் செய்துவிடுவார்கள்.
ஐயன்ன் : கிறிஸ்தவர்கள் தம் கொடுத்த நிலங்கள் இப்படிப் பறிக்கப்பட்டது குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையா?
சனாதனி : அவர்கள் எந்த நோக்கில் நிலங்களைக் கொடுத்தார்களோ அது மிகத் தெளிவாக பலமாக நடந்துவருகிறது. எனவே அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே இல்லை.
ஐயன் (சற்று குழம்பியபடியே) : பட்டியல் ஜாதிகள் இதில் ஏமாற்றப்பட்டதாகத்தானே சொல்கிறீர்கள்.
சனாதனி : கிறிஸ்தவர்களின் நோக்கம் பட்டியல் ஜாதிக்கு உதவுவது அல்லவே. இந்து மதத்தை எதிர்க்கும் கூலிப்படைக்கு ஆட்கள் சேர்ப்பத்தான் முதலும் முடிவுமான இலக்கு. இன்றைய பட்டியல் ஜாதி தலைவர்கள் அதை மிகத் தெளிவாகச் செய்துவருகிறார்கள்.
ஐயன் : ஓ..
சனாதனி : உலகம் முழுவதுமே கிறிஸ்தவத்தின் வழிமுறையே இதுதான் ஐயனே. கிறிஸ்தவ ஏகாதிபத்தியவாதிகள் பூர்வ குடிகளைக் கொல்வார்கள். அவர்களுடைய குழந்தைகளை அநாதையாக்குவார்கள். அன்பே வடிவான பாதிரியார்கள், அந்தக் குழந்தைகளுக்கு உணவும் கல்வியும் மருத்துவமும் கொடுப்பார்கள். அது என்னவென்றால் ஏகாதிபத்திய சக்திகளின் நவீன கல்வி, மருத்துவம், உணவு நிறுவனம் ஆகியவற்றுக்கான நுகர்வோர்களாக பூர்வகுடிகளை மாற்றுவதுதான் அந்த கருணையின் நோக்கம். ஆக, மேற்கத்திய அரசியல் சக்திகள் செய்த கொடுமைகளை மறைப்பதும் மேற்கத்திய வணிக சக்திகளுக்கு சந்தை உருவாக்கித் தருவதும்தான் மேற்கத்திய மதவாத சக்திகள் மற்றும் அறிவுஜீவிகளின் வேலை. இதில் கொடூரமான வேதனை என்னவென்றால் பூர்வ குடிகளின் அடுத்த தலைமுறையே தமக்குக் கல்விக் கண் திறந்த கிறிஸ்துவையும் நோய்களைக் குணப்படுத்தும் கர்த்தரையும் போற்றி மெழுகுவர்த்தி ஏந்திக்கொண்டு சர்ச்களில் ஆடிப்பாடத் தொடங்கிவிடும்.
ஐயன் : தமிழகத்திலும் அதுதான் நிலையா?
சனாதனி : ஆமாம். ஆனால் இங்கே கொஞ்சம் சுற்றி வளைத்துச் செய்யவேண்டிவந்துவிட்டது. திராவிடம் என்ற இடைநிலை அமைப்பு தேவைப்பட்டுவிட்டது. பட்டியல் ஜாதித் தலைவர்கள் இப்போதைக்கு திராவிடமே போற்றி... ஈவெ.ராவே சரணம் என்று ஆடிப்பாடி வருகிறார்கள். விரைவிலேயே இந்த இரண்டு வேஸ்ட் லக்கேஜையும் தூக்கித் தூற எறிந்துவிட்டு அல்லேலூயா கோஷம் போடும்படி ரியல் எஜமானர்கள் செய்துவிடுவார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

(15)
ஐயன் : இன்றைய தமிழகத்தில் நான் பார்ப்பதற்கு வேறு ஒரு இடம்கூட இல்லையா...
இருக்கின்றன ஐயனே. ஓர் உணவகம்.
உணவகமா?
ஆமாம். புதிதாகத் திறந்திருக்கிறார்கள். உங்கள் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். பத்து குறள்களை மனப்பாடமாகச் சொல்பவர்களுக்கு பரிசு.
அப்படியா... நல்ல முயற்சி. மனப்பாடம் செய்பவர்கள் கூடிய விரைவில் அதன்படி நடக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள் அல்லவா...
ஆமாம். ஆமாம். பரிசு என்ன என்று நீங்கள் கேட்கவில்லையே...
உணவுக்கூடம் தரும் பரிசு என்றால் அநேகமாக ஏதேனும் உணவாகத்தானே இருக்கும்.
அதே தான்... சிக்கன் பிரியாணி.
அப்படியென்றால்...
அது ஒருவகை மாமிச உணவு ஐயனே...
அய்யோ... மாமிசமா..?
புலால் உண்ணாமை அதிகாரத்தில் உள்ள குறள்களை மனப்பாடமாகச் சொன்னால் கூடுதலாக இரண்டு லெக் பீஸும் கிடைக்கும்.
பகவானே...
இதற்கே இப்படியென்றால் இதோ நம் அறிவாலய தலைமைச் செயலாளர் இருக்கிறாரே... உமது பிறந்த நாளில் மது அருந்தாமை குறள்களை மனப்பாடமாகச் சொன்னால் ஒரு க்வாட்டர் பரிசு என்ற அற்புதமான திட்டத்தை அறிவிக்கவிருக்கிறார்.
ஐயன் காதுகளைப் பொத்திக் கொள்கிறார்.
என் குழந்தைகள் இப்படியா வாழ்கிறார்கள். எனது கண்டடைதல்களைப் பரப்பவும் பின்பற்றச் செய்யவும் ஒரு சிஷ்ய பரம்பரையும் மடாலயமும் உருவாக்காமல் போய்விட்டேனே.
சனாதனி : ஆமாம். அதன் மூலம் பல குழப்பங்கள் வந்திருக்கவும் கூடும். என்றாலும் ஓரளவுக்கு நிலைமை மேலாக இருந்திருக்கும். சரி... ஐயனே... மனம் மிகவும் வாடியிருப்பீர்கள். கொஞ்சம் ஆறுதல் தர இந்த ஔவையின் தேசத்தில் ஓரிடம் இருக்கிறது. வாருங்கள் அங்கு போகலாம்.
ஐயன் மிகுந்த சோர்வுடன் சரி என்கிறார்.
வண்டிகள் அனைத்தும் சனாதனியைப் பின் தொடர்கின்றன.
ஐயன் வெளியே தெரியும் காட்சிகளைப் பார்த்தவண்ணம் வருகிறார். தெருவில் திரியும் பசுக்கள், பசுவை அடித்துவிரட்டும் வாகன ஓட்டிகள், ரோட்டோரக் குப்பை மேட்டில் விழுந்து கிடக்கும் தமிழன், மாநகரச் சாக்கடைக்குள் வெற்றுடம்புடன் இறங்கிச் சுத்தம் செய்யும் தமிழன், மித வெப்ப மண்டலத்தில் பனிப்பிரதேச மற்றும் பாலைப் பிரதேச உடை அணிந்து செல்லும் மக்கள், திலகங்கள் அற்ற நெற்றிகள், தோலுரித்துத் தொங்கவிடப்பட்ட கன்று காலிகள், அம்மன் கோவில்களுக்கருகில் பிரியாணி கடைகள், பொதி கழுதைகளைப் போல் புத்தக மூட்டையைச் சுமந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள், அபாயகரமாக ஃபுட்போர்டில் தொங்கிச் செல்லும் மாணவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கும் காவலர்கள், குண்டும் குழியுமான சாலைகள், குளிர் பதன கடைகளுக்குள் பளபளக்கும் பன்னாட்டு குளிர்பானங்கள், அவற்றின் விளம்பரத்தில் சிரிக்கும் பிரபலங்கள், புழுதி பறக்கும் சாலையோரம் தள்ளுவண்டியில் கூழ் பானைகள்...
ஐயன் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்கிறார். காரின் வேகம் குறைகிறது. இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதென்று சனதானி சொல்கிறார். முன்னால் தூரத்தில் கை காட்டுகிறார். அங்கு ஒரு தேர் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. ஐயனின் கண்கள் மெள்ள விரிகின்றன. நெருங்க நெருங்க அதன் பக்கவாட்டு துணிகள் மட்டும் மட்டும் காற்றில் அசைய தேர் கல் போல் உறைந்து நிற்பது தெரிந்தது. கார் வந்து நிற்கிறது. சற்று குழம்பியபடியே இறங்குகிறார்.
படிகளில் ஏறிச் செல்கிறார்கள். நுழைவாயில் வளைவில் முட்டைக் கண்களுடன் கோரமான ஓர் உருவம் வருபவர்களை அச்சுறுத்துவதுபோல் மிரட்டுகிறது. வளைவின் இருபக்க இறுதி முனைகளில் ஏதோ ஒரு பறவை உருவம் தொண்டைக்குள் இரும்புக் கம்பியைச் செலுத்தியதுபோல் அலறிக் கொண்டிருக்கிறது.
ஐயன் : என்ன இடம் இது?
சனாதனி : வாருங்கள் ஐயனே. உங்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே இடம் இதுவாகத்தான் இருக்கும்.
ஐயன் குழப்பத்துடனும் ஆர்வத்துடனும் உள்ளே நுழைகிறார். நீண்ட தோட்டம், அரங்கங்களைக் கடந்து தேரின் முன்னால் வந்து நிற்கிறார்.
அதன் பிரமாண்டம் அவரை ஒரு கணம் மலைக்க வைக்கிறது. கல் சக்கரங்கள், கல் யானைகள், கல் சிற்பங்கள் என ஒவ்வொன்றாகத் தொட்டுத் தடவியபடி சுற்றிவருகிறார். கருவறை போலிருக்கும் தேரின் உள் பகுதிக்குள் மெள்ள அடியெடுத்துவைக்கிறார். பின்னால் வந்தவர்கள் அனைவரும் வெளியிலேயே நின்றுவிட ஐயன் தன்னந்தனியாக அந்த பிரமாண்ட கருவறைக்குள் நடந்து செல்கிறார். விரித்து வைத்த ஏடுபோல் இருந்தவற்றை நெருங்கிச் சென்று பார்க்கிறார். இன்ப அதிர்ச்சியில் உறைகிறார். ஒவ்வொரு அதிகாரங்களாக ஒவ்வொரு குறளாக விரலாலும் கண்ணாலும் மனதாலும் வாசித்து வாசித்து மகிழ்கிறார். குழந்தை போல் ஒவ்வொரு அதிகாரமாக ஓடோடிச் சென்று வாசிக்கிறார்.
அரங்கம் முழுவதும் சுற்றியவர் அவருடைய சிலையின் முன் வந்து நிற்கிறார்.
(பின்னால் இருந்து சனாதனியின் குரல்) நீங்கள்தான் ஐயனே...
ஐயன் : நானா...
அவருடைய கோபக் குரல் கேட்டு அதிருகிறது குறள் அரங்கம்.
ஐயன் : நானா இது... ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்... நீரில்லா நெற்றி பாழ்... அதோடு என் குறள்கள் பொறிக்கப்பட்ட இந்த மண்டபத்தில் ஒரு தெய்வத்தின் திருமேனி கூடக் காணவில்லை. என் சிலை மட்டும் இருக்கிறது. ஒரு விளக்கு இல்லை... ஒரு மலர் இல்லை.
சனாதனி : இது கடவுள் நம்பிக்கை இல்லாத கூட்டத்தின் ஆணையினால் கட்டப்பட்ட கட்டடம் ஐயனே.
ஐயன் : கட்டிய சிற்பிக்குமா கடவுள் நம்பிக்கை இல்லை.
சனாதனி : அவருக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவை அவரால் மீற முடியாதே... அதோடு நீவிர் தெளிவாக விநாயகர் என்றோ ஈசன் என்றோ பெருமாள் என்றோ சக்தி என்றோ எதுவுமே சொல்லியிருக்கவில்லை. ஆதிபகவனைப் போற்றி, எண்குணத்தானே ஏத்தி, மலர் மிசை ஏகினானை மதித்து, வாலறிவனை வாழ்த்தி, தனக்குவமை இல்லாதானின் தாள் பணிந்து, அற வாழி அந்தணனை அடிபணிந்து இருவினையும் சேராத இறைவனை இதயத்தில் இருத்தி எழுதிவிட்டுச் சென்றுவிட்டீர். நீவிர் யார் என்பதும் உம் குல தெய்வம் யார் என்பதுமே எனக்குத் தெரியவில்லை.
ஐயன் : தேர் உச்சியில் ஒரு காவிக் கொடி பறக்கவிடக்கூடவா முடியவில்லை.
சனாதனி : அதுதான் சொன்னேனே ஐயனே... இது நம்மவரால் கட்டப்பட்ட மண்டபம் அல்ல. உம்மைக் கைப்பற்றி உம் ஆன்மாவை அழிக்கத் துடிப்பவர்களால் கட்டப்பட்ட வேஷ மண்டபம்.
ஐயன் : நம் தாய் தமிழ் பூமியில் இது எப்படி நடந்தது?
சனாதனி : அது நூற்றாண்டுக் கொடுங்கனவு ஐயனே.
ஐயன் : இடையில் நீங்கள் விழிக்கவே இல்லையா?
சனாதனி : இது கொஞ்சம் சிக்கலான விஷயம் ஐயனே. நம்மவர்களுக்கு அரசியல் ஞானம் குறைவு. இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் இருக்கும் எளிய மக்களுக்கும் அரசியல் கணக்கு அதிகம் கிடையாது. என்றாலும் அதன் அடிப்படைவாதத் தலைமைகளுக்கு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அந்தந்த மத மக்களின் மீது அவர்களுடைய ஆக்கிரமிப்பு மிக அதிகம்.
ஐயன் : அந்த மக்களும் நாலு எழுத்து படித்தவர்கள்தானே. பொருளாதார பலம் உடையவர்கள்தானே. சுதந்தர சிந்தனை கொண்டவர்கள்தானே.
சனாதனி : அவையெல்லாம் அந்த மத அமைப்புகளின் வலிமைக்கு முன்னால் ஒன்றுமே இல்லை ஐயனே. ஒரு கிறிஸ்தவ வணிகர் தேச நலன் சார்ந்தோ இந்து மத நல்லிணக்கம் சார்ந்தோ ஏதேனும் செய்தால் அடுத்த நிமிடமே அவரைக் கட்டம்கட்டிவிடுவார்கள். அவருக்கான தொழில் வாய்ப்புகளை முடக்கிவிடுவார்கள். அடிப்படவாதிகளுக்கு அடிபணியாமல் அங்கு எதையும் யாரும் செய்துவிடமுடியாது. தேர்தலில் இந்து விரோத சக்திகளுக்கு இந்த இரண்டு மதத்தினர் மட்டுமே வாக்களித்தால் போதும். இந்துக்களின் வாக்கு தேவையே இல்லை. எனவேதான் ஆட்சியில் இருக்கும் திராவிட இயக்கத்தினர் இந்து விரோதச் செயல்பாடுகளை தைரியமாக முன்னெடுக்கிறான்கள். கோவில்களை நாங்கள் தான் இடித்தோம். எப்படி வாக்கு வாங்கவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும் என்று திமிராகப் பேசுகிறான்கள்.
ஐயன் : இந்துக்களை ஒன்று சேர்க்க எதுவுமே இல்லையா?
சனாதனி : இந்துத்துவர்கள் அதற்குத்தான் முயற்சி செய்கிறார்கள் ஐயனே.
ஐயன் : அவர்கள் யார்?
சனாதனி : இந்து அரசியல் சக்திகளுக்கு அப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு மிதமான வழியில் தந்திரமாகவும் வெளிப்படையாக வன்முறையாகவும் தீங்குகள் இழைக்கப்படுகின்றன. இந்துத்துவ சக்திகள் முதலாவதை சமூக சேவைகள், சமூக சீர்திருத்தங்கள் மூலமும் இரண்டாவதை அதற்குரிய வகையிலும் எதிர்கொள்கிறார்கள். பிற மதங்களின் அடிப்படை சக்திகள் மிகத் தெளிவாக இந்துத்துவர்கள் செய்ய வேண்டியிருக்கும் தற்காப்பு வன்முறைகளை மட்டும் பெரிதுபடுத்துகிறார்கள். நடுநிலை, தாராளவாதம் பேசும் இந்துக்கள் உண்மை புரியாமல் காவலர்கள் மீதே கல்லெறிகிறார்கள்.
ஐயன் : இந்துத்துவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்களா..?
சனாதனி : பைங்கூழ் களைகட்டத்தானே வேண்டும் கொலையில் கொடியோரை ஒறுக்க. இது ஒரு பக்கமென்றால் அவர்கள் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் பிடிக்காமல் சம்பிரதாயவாதிகளும் எதிர்க்கிறார்கள். எதிர்த் தரப்பானது எளிய மக்கள், அறிவுஜீவிகள், வணிகர்கள், அரசியல் சக்திகள் அனைத்தையும் மிரட்டித் தன் வழிக்குக் கொண்டுவருவதோடு நில்லாமல் நம் தரப்புக்குள் ஊடுருவி நம்மவர்களிடையே உள் மோதலையும் பெருக்கி வருகிறார்கள். நாமும் பொது எதிரியை மறந்து நமக்குள் மோதிக்கொண்டுவருகிறோம்.
ஐயன் : அரம் பொருதும் பொன் போல்...
சனாதனி (வேகமாகக் குறுக்கிட்டு): நல் வாக்கு கூறுங்கள் ஐயனே.
ஐயன் (சோர்வுடன்) : பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்துபோய்விட்டேன் போலிருக்கிறது.
சனாதனி : நீவிர் சென்றாலும் நும் எழுத்துகள் இருக்கின்றனவே.
ஐயன் : என்ன பயன்... இந்தக் கல் தேர் போல் ஒரு அங்குலம் கூட ஓடாமல் உருளாமல் உறைந்து கிடக்கின்றன என் போதனைகள் ஒருவராலும் பயன்படுத்தப்படாமல்... ஒருவருக்கும் பயனின்றி.
சனாதனி : ஏதாவது செய்தாகவேண்டும் ஐயனே...
ஐயன் : வெளியில் இருந்து நம் தர்மத்தை அழிக்க தீய சக்திகள் வருவதாகச் சொன்னீர்கள். அந்த தீய சக்திகளை எதிர்க்கும் சக்திகள் அங்கு உருவாகியிருப்பதாகவும் சொன்னீர்கள். எதிரிக்கு எதிரி நமக்கு நண்பனாகியிருக்க வேண்டுமே.
சனாதனி : அந்த முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால் மிக மெலிதாக மிக மிக மெதுவாக நடக்கின்றன. உண்மை ஒரு அடி எடுத்துவைப்பதற்குள் பொய் உலகையே வலம் வந்துவிடுகிறது.
ஐயன் : நான் என்ன சொல்ல... தர்மத்தைக் காப்பாற்றுங்கள். அது உங்களைக் காக்கும் என்று சொல்லியபடியே ஐயன் மேல் விதானத்து பலகணி அருகே வந்து நிற்கிறார். கீழே தொலைவில் பாதிரியாரும், ஈ.வெ.ராவும், டோப்பாவும் நின்று தமக்குள் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐயன் : அவர்கள் இங்கு வரமாட்டார்களா..?
சனாதனி : மாட்டார்கள். ஒருவர் அவருடைய தெய்வம் இல்லாத இடத்துக்குள் நுழையமாட்டார். இன்னொருவர் எந்த நல்ல விஷயம் இருக்கும் இடத்துக்குள்ளும் நுழையமாட்டார். மூன்றாமவர் உத்தரவு கிடைத்தால் நுழைவார்.
ஐயன் : என் மண் இவர்கள் கையில் சிக்கிவிட்டதே, நீங்கள் எல்லாம் இருந்த பின்னும்.
சனாதனி தலை குனிந்து நிற்கிறார். ஐயன் மனம் கசந்து அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். பக்கவாட்டுத் தளத்தின் நின்று கீழே பார்க்கிறார். ஒரு சிறிய நீர்த் தேக்கம் மென்மையாக அலையடித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு தவளை கரையில் உட்கார்ந்து கத்திக் கொண்டிருக்கிறது. அதன் கத்தல் கேட்டு மெள்ள ஊர்ந்துவரும் தண்ணீர்ப் பாம்பு ஒன்று பாய்ந்து கவ்வுகிறது. தவளை கண்கள் பிதுங்க உடல் நடுங்கத் துடி துடிக்கிறது. திமிறுகிறது. பாம்பின் பிடி மெள்ள இறுகுகிறது. மெள்ள தவளையின் துடிப்பு அடங்குகிறது. பாம்பின் வாய் பிளந்து கொஞ்சம் கொஞ்சமாக முழுங்குகிறது. முழுவதும் முழுங்கியதும் மெள்ள ஊர முடியாமல் கரையோரம் படுத்துக் கிடக்கையில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த பருந்து கூர் நகங்களால் பாம்பை இறுகப் பற்றிக் கொண்டு மேலெழுகிறது. தவளை துடித்ததைப் போலவே பாம்பு இப்போது துடிக்கிறது. கூர் நகங்களின் பிடி இறுகுகிறது. கழுத்தும் உடம்பும் நெறுக்கப்பட்டு பாம்பின் துடிப்பு மெள்ள அடங்குகிறது.
அருகமை மரத்தில் சென்றமர்கிறது பருந்து. கூர்மையான அலகினால் பாம்பின் உடம்பைக் குத்திக் கிழிக்கிறது. அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த குண்டு துளைத்துக் கீழே விழுகிறது பருந்து. தவளையையும் பாம்பையும் போல் துடிக்கிறது பருந்து. குறவன் ஒருவன் ஒருதோளில் துவக்கும் மறு தோளில் முன்பே வேட்டையாடிய பறவைகளின் உடம்புகள் தொங்க மறைவில் இருந்து வெளியே வருகிறான். துடிக்கும் பருந்தை எடுத்து தோளில் இருக்கும் இரும்புக் கம்பியில் தொங்கவிடுகிறான். பருந்தின் துடிப்பு மெள்ள அடங்குகிறது. குறவன் கழுத்தில் மின்னுகிறது வெள்ளிக் குருசு. தவளைகளும் பாம்புகளும் பருந்துகளும் ஒன்று சேர்ந்தாலும் வீழ்த்த முடியாத நவீன வேட்டை மிருகம் மெள்ள நடந்து சென்று புதருக்குள் மறைந்துகொள்கிறது அடுத்த இரையை வீழ்த்த.
***************


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard