Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மானம்‌ உள்ள வாழ்வு


Guru

Status: Offline
Posts: 7468
Date:
மானம்‌ உள்ள வாழ்வு
Permalink  
 


மானம்‌ உள்ள வாழ்வு

வள்ளுவர்‌ உயர்ந்த குடி. தாழ்ந்த குடி என்ற பிரிவை ஒப்புக்கொள்கிறார்‌. உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள்‌ தங்கள்‌ குடிப்பெருமைக்குக்‌ குறைவு வராமல்‌ ஓழுகவேண்டும்‌ என்று வலியுறுத்துகின்றார்‌. குடிப்பிறப்பினால்‌ உயர்வு உண்டு; அந்த உயர்வை எவ்வகையிலும்‌ காத்துக்கொள்ள வேண்டியதே குடி. ப்பிறந்தார்க்கு அவர்‌ கூறும்‌ அறிவுரைகள்‌ அனைவருக்கும்‌ பொருந்தும்‌. அவ்வறிவுரைகளைப்‌ பின்பற்றி வாழ்வோர்‌ சிறந்த மனிதர்களாக மதிக்கப்படுவார்கள்‌. அவர்களே பண்பாடுள்ள மக்கள்‌ என்று பாராட்டப்படுவார்கள்‌.

ஒழுக்கமே மானம்‌

மக்கள்‌ தாம்‌ பிறந்த குடும்பத்தின்‌ பெருமைக்கு இழுக்கு வராதபடி காத்துக்கொள்ள வேண்டும்‌, குடி.ப்பெருமை குன்றும்‌படி நடந்துகொள்ளக்கூடாது. உயிரினும்‌ சிறந்தது மானம்‌. மானத்திற்கு பங்கம்‌ உண்டாகும்‌படி நடந்து கொள்ளக்கூடாது. எவ்வளவு தான்‌ இன்பம்‌ வருவதாயினும்‌, நன்மை தருவதாயினும்‌, இலாபம்‌ கிடைப்பதாயினும்‌ மானத்தை விட்டுவடக்கூடாது. பெருமையுடன்‌ வாழ்தல்‌ வேண்டும்‌. பிறர்‌ இழிவாக ஏளனமமாகப்‌ பழித்துப்‌ பேசும்படி வாழ்வது வாழ்க்கையன்று. பல சிறந்த பண்புகளும்‌ நிறைந்திருக்க வேண்டும்‌; அப்பண்புகளைப்‌ பின்பற்றி நடக்க வேண்டும்‌.

பண்பற்ற மனிதன்‌ பலராலும்‌ பழிக்கப்படுவான்‌.

யாரிடத்தும்‌ நல்ல தன்மையுடன்‌ நடந்து கொள்க. இமை செய்வோர்க்கும்‌ நன்மை செய்ய வேண்டும்‌. பிறர்‌ செய்த தீமைகளை மறந்துவிட வேண்டும. இவைகளே பண்பின்‌ பயன்‌ ஆகும்‌. இத்தகைய பண்புகள்‌ மக்களுக்கு இன்றியமையாதவை.

குடிமை, மானம்‌, பெருமை, சான்றாண்மை, பண்புடைமை என்னும்‌ அதிகாரங்களிலே இவைகளைப்‌ பற்றி விரிவாகச்‌ சொல்லுகிறார்‌ வள்ளுவர்‌. 50 குறள்களிலே இந்த அறிவுரைகள்‌ கூறப்படுகின்றன. மற்றவர்கள்‌ மதிக்கும்படி, மானத்துடன்‌ மனிதத்‌

தன்மையுடன்‌ வாழ்வது எப்படி என்பதை இந்த 50 குறள்‌களையும்‌ படித்தவர்கள்‌ தெளிவாகத்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

மே. 

ஒழுக்கமும்‌, வாய்மையும்‌; நாணும்‌ இம்மூன்றும்‌

இழுக்கார்‌ குடிப்‌ பிறந்தார்‌.

உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள்‌ சிறந்த ஒழுக்கம்‌, உண்மை, நாணம்‌ இம்மூன்று பண்புகளையும்‌ கைவிடாமல்‌ வாழ்வார்கள்‌. (ஞு.952) ஒழுக்கங்‌ கெட்ட மக்களை ஒருவரும்‌ மதிக்கமாட்டார்கள்‌. வாய்மையற்றவர்களை - உண்மையில்லாதவர்களை ஒருவரும்‌ நம்பமாட்டார்கள்‌. இமை செய்வதற்கு நாணாதவர்கள்‌ பலருடைய நகைப்புக்கும்‌ பழிகளுக்கும்‌ அளாவார்கள்‌. தீமை செய்கின்றவர்‌ களை எல்லோரும்‌ வெறுப்பார்கள்‌. அவர்களுக்கு ஒவ்வொரு நாளும்‌ பகைவர்கள்‌ தோன்றிக்கொண்டே யிருப்பார்கள்‌. அவர்களால்‌ மன அமைதியுடன்‌ வாழ்க்கை நடத்த முடியாது. அகையால்‌ தான்‌ உயர்‌ குடியிலே பிறந்தவர்கள்‌ ஒழுக்கம்‌, வாய்மை, நாணம்‌ இம்‌ மூன்றையும்‌ கைவிட மாட்டார்கள்‌ என்று கூறினார்‌.

“நகை, ஈகை, இன்சொல்‌, இகழாமை நான்குஙட

வகை என்ப வாய்மைக்‌ குடிக்கு.

உண்மையான உயர்ந்த குடியிலே பிறந்தவர்களுக்கு, முக மலர்ச்சி, ஈகை இன்சொல்‌, பிறரைப்‌ பழித்துப்‌ பேசாமை ஆகிய நான்கும்‌ நல்ல பண்புகள்‌ என்பார்கள்‌.” (ஞ.353.)

யாரிடமும்‌ நகை முகங்‌ காட்டிப்‌ பேசுவதே நல்ல பண்பு, முகத்தைக்‌ கடுகடுவென்று வைத்துக்கொண்டு பேசுகின்றவர்கள்‌ மற்றவர்கள்‌ நட்பைப்‌ பெற முடியாது. இல்லாதார்க்கு ஈயும்‌ குணம்‌ வேண்டும. உள்ளதை ஒளிக்காமல்‌ உதவி செய்ய வேண்டும்‌. எவரிடமும்‌ இனிமையாகப்‌ பேசவேண்டும்‌; யாரிடமும்‌ எரிந்து விழக்‌ கூடாது. கடுஞ்‌ சொற்கள்‌ காரியத்தைக்‌ கெடுத்துவிடும்‌; இனிய சொற்களே நன்மையைத்‌ தரும்‌; ஈடுபட்ட செயல்களில்‌ வெற்றியை உண்டாக்கும்‌. எவரையும்‌ இகழக்‌ கூடாது; பழிக்கக்‌ கூடாது. பிறரைப்‌ பழிப்பவன்‌ தானும்‌ பழிக்கு அளாவான்‌. ஆகையால்‌ இந்த நான்கு குணங்களையும்‌ சிறந்த பண்புகள்‌ என்று குறித்தார்‌ வள்ளுவர்‌.

“குடிப்பிறந்‌ தார்கண்‌ விளங்கும்‌ குற்றம்‌, விசும்பின்‌

மதிக்கண்‌ மறுப்போல்‌ உயர்ந்து.

உயர்ந்த குடியிலே பிறந்தவர்களிடத்தில்‌ உண்டாகும்‌ குற்றத்தை மறைத்துவிட முடியாது. அது வானத்தில்‌ சந்திரனிடம்‌ காணப்படும்‌ களங்கம்போலப்‌ பலருங்‌ காணும்படி உயர்ந்து தோன்றும்‌.” (ஞு.577.)

குற்றம்‌ செய்வதையே வாழ்க்கையாகக்‌ கொண்டுள்ளவர்கள்‌ எது செய்தாலும்‌ அதைப்‌ பற்றி யாரும்‌ கவலைப்பட மாட்டார்கள்‌; வியப்படையவும்‌ மாட்டார்கள்‌. குற்றம்‌ புரிவதே அவர்கள்‌ தொழில்‌ என்று பொருட்படுத்தாமல்‌ விடுவார்கள்‌. ஆனால்‌ குற்றம்‌ செய்வதற்கு அஞ்சும்‌ உயர்‌ குடியிலே பிறந்தவர்கள்‌ குற்றம்‌ புரிந்தால்‌ அதைப்பற்றி அனைவரும்‌ உரையாடத்‌ தொடங்கி விடுவார்கள்‌. அகையால்‌ குடிப்‌பெருமையைப்‌ காப்பாற்றிக் கொள்ள விரும்புவோர்‌ குற்றங்‌களில்‌ மாட்டிக்‌ கொள்ளாமல்‌ மிகவும்‌ கருத்துடன்‌ நடந்து கொள்ள வேண்டும்‌. குடிப்‌ பிறந்தார்க்குக்‌ கூறும்‌ இவ்‌ அறவுரைகள்‌ அனைவர்க்கும்‌ பொருந்துவனவாம்‌.

மானத்துடன்‌ வாழும்‌ வழி

மானம்‌ உயிரினும்‌ சிறந்தது என்பது தமிழர்‌ துணிவு. மானம்‌ என்பது தனது நிலைமைக்குத்‌ தாழ்வு வராமல்‌ வாழ்வது. தாழ்வு வருமானால்‌ உயிரைத்‌ துறந்தாவது மானத்தைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள வேண்டும்‌. மானங்கெடாமல்‌ வாழ்வதற்கு வள்ளுவர்‌ காட்டும்‌ வழி, மிகச்சிறந்தது. குடிப்‌ பிறந்தார்‌, ஏழை, பணக்காரர்‌ அனைவரும்‌ மானத்துடன்‌ வாழ வழி சொல்லியிருக்கின்றார்‌ அவர்‌.

“பெருக்கத்து வேண்டும்‌ பணிதல்‌; சிறிய

சுறாக்கத்து வேண்டும்‌ உயர்வு.

செல்வம்‌ நிரம்பியிருக்கும்‌ போது தலைக்கனம்‌ கொள்ளக்‌ கூடாது; எல்லோரிடமும்‌ பணிவுடன்‌ நடந்துகொள்ள வேண்டும்‌; சிறிய வறுமை உண்டான போது பணிதல்‌ கூடாது; செல்வம்‌ உள்ளவர்கள்‌ போலத்‌ தலை குனியாமல்‌ நிமிர்ந்து நடக்க வேண்டும்‌” (ஞு.963).

செல்வச்‌ செருக்கால்‌ அடக்கமின்றி நடப்பவர்களுக்குப்‌ பெருமையில்லை. இலாபமும்‌ இல்லை. அவர்களுக்குப்‌ பகைவார்கள்‌ பெருகுவார்கள்‌. அப்பகைவா்கள்‌ அச்‌செல்வர்களின்‌ செருக்கை அடக்கவும்‌ அவமானப்‌ படுத்தவும்‌ காலம்‌ பார்த்துக்‌ கொண்டேயிருப்பார்கள்‌. செல்வர்களிடம்‌ சிறு தவறு நேர்ந்‌தாலும்‌ போதும்‌; அதை வைத்துக்கொண்டே அவர்கள்‌ மானத்தை வாங்கி விடுவார்கள்‌ ஆகையால்‌ செல்வம்‌ படைத்தவர்கள்‌ அனைவரிடமும்‌ பணிவுடன்‌ நடந்து கொள்ள வேண்டும்‌.

வறியவர்கள்‌ எள்ளி இகழ்ந்து பேசுதல்‌ இயல்பு. ஏழைப்‌ பேச்சு அம்பலம்‌ ஏறாது; ஏழை யென்றால்‌ மோழையும்‌ பாயும்‌. ஆகையால்‌ செல்வம்‌ அற்றவர்கள்‌ மானம்‌ கெடாமல்‌ வாழவேண்டுமானால்‌ செல்வம்‌ உள்ளவர்களைப்‌ போலவே நடந்துகொள்ள வேண்டும்‌. இவ்வுண்மையை உரைத்தது இக்குறள்‌.

“தலையின்‌ இழிந்த மயிர்‌ இணையர்‌ மாந்தர்‌

நிலையின்‌ இழிந்தக்‌ கடை.

மக்கள்‌ தமது உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டால்‌ அவர்கள்‌ தலையினின்றும்‌ கீழே விழுந்த மயிரைப்போல்‌ ஆவார்கள்‌.” (964)

தலையிலிருக்கும்‌ வரையிலுந்தான்‌ மயிருக்கு மதிப்பு. தலையிலிருந்து கீழே விழுந்துவிட்ட மயிருக்கு மதிப்பில்லை. அதைத்‌ தொட்டால்‌ தீட்டு; அது கால்‌ கைகளில்‌ பட்டால்‌ சுகக்கேடு; என்று வெறுப்பது இயல்பு. இதைப்‌ போலத்தான்‌ நல்ல நிலையிலிருந்து கெட்டுப்போனவர்களும்‌ மதிக்கப்படுவார்கள்‌. இவ்வுண்மையைக்‌ கூறியதே இந்தக்‌ குறள்‌ வெண்பா.

ஒருவர்க்குப்‌ பெருமையும்‌, சிறுமையும்‌, பிறப்பால்‌ உண்டாவதில்லை; அவர்‌ செய்யும்‌ தொழிலால்‌ வரும்‌ என்பதே வள்ளுவர்‌ கருத்து. சிறந்த தொழில்களைச்‌ செய்வோர்‌ உயர்குடியினர்‌ இழிந்த தொழில்களைச்‌ செய்வோர்‌ தாழ்ந்த குடியினர்‌.

“பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்‌ சிறப்பொவ்வா

செய்தொழில்‌ வேற்றுமை யான்‌.

எல்லா உயிர்க்கும்‌ பிறப்பு ஒரு தன்மையானதே; பிறப்பிலே வேற்றுமையில்லை. ஆனால்‌ அவைகள்‌ செய்யும்‌ தொழில்‌ வேறுபாடுகள்‌ காரணமாகப்‌ பெருமை மட்டும்‌ ஒத்திராது/வெவ்வேறாக இருக்கும்‌” (க.972)

இதன்‌ மூலம்‌ பெருமைபெற்று வாழ்வதற்கான வழியையும்‌ காட்டினார்‌. சிறந்த தொழில்களைச்‌ செய்து வாழ்வதற்கு பெருமையுடன்‌ வாழ்வதற்கு வழியாகும்‌. இதுவே வள்ளுவர்‌ கருத்து.

“பணியும்‌ஆம்‌ என்றும்‌ பெருமை; சிறுமை

அணியும்‌ஆம்‌ தன்னை வியந்து.

எக்காலத்திலும்‌ பணிந்து நடப்பதே பெருமையின்‌ பண்‌பாகும்‌. தன்னைத்தானே வியந்து பாராட்டிக்‌ கொள்ளுவதே சிறுமையின்‌ தன்மையாகும்‌” (கு.978)

பெருமையின்‌ தன்மை இன்னது; சிறுமையின்‌ தன்மை இன்னது; என்பதை இக்குறள்‌ விளக்கியுரைத்தது. அடக்கமும்‌ பொறுமையுமே பெருமையின்‌ பண்பு. அடங்காமையும்‌ செருக்குமே சிறுமையின்‌ பண்பு...

மனிதத்‌ தன்மை

நற்குணங்களைப்‌ பின்பற்றி நடக்கும்‌ தன்மைக்குச்‌ சான்றாண்மை என்றுபெயர்‌. சால்பு - நல்ல பண்புகள்‌ அண்மை - அவற்றை ஆள்வது பண்பாடுள்ள மக்களுக்குச்‌ சான்றாண்மைக்‌ குணம்‌ இன்றியமையாதது.

“ சால்பிற்குக்‌ கட்டளை யாதெனின்‌ தோல்வி

துலை அல்லார்‌ கண்ணும்‌ கொளல்‌.

உயர்ந்த குணங்களுக்கு உரைகல்‌ யாதென்றால்‌, தன்‌ தோல்வியை தனக்கு ஒப்பில்லாத தாழ்ந்தவரிடத்திலும்‌ ஒப்புக்‌ கொள்ளுவதாகும்‌””(கு.986)

இக்குறள்‌ உயர்ந்த பண்பாடுள்ள மக்களின்‌ ஒப்பற்ற பண்பு இதுவென்று உரைக்கிறது. யாரும்‌ தமது தோல்வியை ஒப்புக்‌ கொள்ளமாட்டார்கள்‌. ஒரு காரியத்திலே தாம்‌ தோற்று விட்டாலும்‌ ஏதேதோ சமாதானம்‌ சொல்லித்‌ தாம்‌ தோற்கவில்லையென்றே சாதிப்பார்கள்‌. இது எல்லா மக்களிடமும்‌ உள்ள இயற்கைக்‌ குணம்‌; இக்குணத்தை மாற்றிக்‌ கொண்டவர்‌களே சான்றோர்கள்‌. தம்மைவிடத்‌ தாழ்ந்தவர்களாயிருந்தாலும்‌ அவர்களிடமும்‌ தமது தோல்வியை ஓப்புக்கொள்ளுவதே உயர்ந்த பண்பு. இப்பண்பு வேண்டும்‌ என்று வலியுறுத்து கின்றது இக்குறள்‌,

“இன்னா செய்தார்க்கும்‌ இனியவே செய்யாச்கால்‌

என்ன பயத்ததோ சால்பு .

துன்பங்களைச்‌ செய்தவர்க்கும்‌, நல்ல உதவிகளைச்‌ செய்யா விட்டால்‌ சான்றோரின்‌ சார்பால்‌ பயன்‌ தான்‌ என்ன?”(க..987)

“இன்னா செய்தாரை ஒறுத்தல்‌ அவர்‌ நாண

நன்னயம்‌ செய்து விடல்‌.

என்று துறவிகளுக்குக்‌ கூறிய இப்பண்பைச்‌ சான்றாண்‌மையிலும்‌ மேற்காட்டிய குறளால்‌ வலியுறுத்தினார்‌ துன்பம்‌ புரிவோர்க்கும்‌ நன்மை புரிவதுதான்‌ உலகிலே குற்றங்கள்‌ வளராமல்‌ இருப்பதற்கு வழி என்பது வள்ளுவர்‌ கொள்ளை, ஆதலால்‌ அறிவும்‌ பண்பும்‌ நிறைந்த சான்றோர்கள்‌ இந்த அறத்தைக்‌ கையாள வேண்டும்‌ என்று வலியுறுத்தியிருக்கின்றார்‌.

மக்களுக்கு நல்லொழுக்கம்‌ வேண்டும்‌; அவர்கள்‌ உண்மை யைப்‌ பின்பற்றி வாழவேண்டும்‌; தீமைகள்‌ செய்வதற்கு நாண வேண்டும்‌. பிறர்‌ விரும்பும்படி யான பேச்சும்‌ நடத்தையும்‌ வேண்டும்‌. குடிப்பெருமைக்குக்‌ குறைவுண்டாகாத வழியிலே நடந்து கொள்ள வேண்டும்‌. மானத்தைப்‌ காப்பாற்றிக்‌ கொள்ள வேண்டும்‌. எல்லாரிடமும்‌ பணிவுடன்‌ நடந்து கொள்ளுவதே மானம்‌ கெடாமல்‌ வாழும்‌ வழி. நம்‌ நிலையைக்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌. சிறந்த தொழிலைச்‌ செய்து உயர்வாக வாழவேண்டும்‌. தமது தோல்வியை மனமார ஒப்புக்‌ கொள்ள வேண்டும்‌. இமை செய்தவர்களுக்கும்‌ நன்மை செய்யவேண்டும்‌. இவைகள்‌ எல்லாம்‌ சிறந்த பண்பாடுகளாகும்‌. இப்பண்பாடுகளை உடையவர்களே உயர்ந்த மனிதர்கள்‌.

“அரம்போலும்‌ கூர்மைய ரேனும்‌, மரம்போல்வார்‌

மக்கட்‌ பண்பு இல்லாதவர்‌.

அரம்‌ போலக்‌ கூர்மையான அறிவு படைத்தவராயினும்‌ மக்களுக்குரிய தன்மையற்றவராயிருந்தால்‌ அவர்களால்‌ யாருக்கும்‌ எப்பயனும்‌ இல்லை; மரத்தைப்‌ போன்றவர்களே அவர்கள்‌.” (ஞ.997)

இக்குறளிலே மனிதத்தன்மை யற்றவர்களை மரத்திற்கு ஒப்பிட்டார்‌ வள்ளுவர்‌. தம்‌ குடுமபத்தின்‌ பெருமையைக்‌ காத்துக்கொள்ள வேண்டும்‌; மானத்தைப்‌ போற்ற வேண்டும்‌; பெருமையுடன்‌ வாழ வேண்டும்‌; சிறந்த பண்புகளைக்‌ கைவிடாமல்‌ வாழவேண்டும்‌. இவ்வாறு வாழ்வதே மனிதத்தன்மை. மக்கள்‌ மதிப்புடன்‌ வாழும்‌ வழி; மானம்‌ உள்ள சிறந்த வாழ்வு.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard